கிறிஸ்தவ விசுவாசம் குறித்த விளக்கவுரை (Ambrose, Exposition of the Christian Faith)

Ambrose of Milan, An Exposition of the Christian Faith, in Tamil. Book 3


புத்தகம் III

அத்தியாயம் 1

முதல் இரண்டு புத்தகங்களில் சுருக்கமாகக் கூறப்பட்ட தலைப்புகள் பிந்தைய மூன்று புத்தகங்களில் இன்னும் முழுமையாக விவாதிக்கப்படுவதை இது விளக்குவதோடு, பரிசுத்த வேதாகமம் கட்டுக்கதைகளைப் பயன்படுத்துவதை ஆதரிக்கிறது. இதில் பல கவிதை கட்டுக்கதைகள், குறிப்பாக சைரன்கள் (ஆரம்பகால கிறிஸ்தவத்தில், சைரன் என்பது உண்மைக்கு மாறான போதனைகள், பாவம், மற்றும் விசுவாசத்துரோகம் போன்ற ஏமாற்றும் சக்திகளைக் குறிப்பதாகப் பயன்படுத்தப்பட்டது), சிற்றின்ப உருவங்கள் போன்றவை அடங்குகின்றன. பவுலின் வார்த்தைகள் மற்றும் கிறிஸ்துவின் உதாரணம் போன்றவற்றை வழிகாட்டிகளாகக் கொண்டு கிறிஸ்தவர்கள் அவற்றிலிருந்து விலகியிருக்க வழிநடத்தப்பட்ட வேண்டும்

1. உங்களது மிகவும் மதிப்பிற்குரியவரும், மாட்சிமை பொருந்தியவருமான மன்னர் அவர்கள், விசுவாசம் தொடர்பான வழிகாட்டுதல் குறித்த ஒரு ஆய்வுக் கட்டுரையை உருவாக்க எனக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும் எனது நம்பிக்கையை வலுப்படுத்த நீர் என்னை உம் முன்னிலைக்கு வரும்படி அழைத்தீர். எனவே போருக்குத் தயாராகும் ஒருவரைப் போல உணர்ந்த என்னால் இரண்டு புத்தகங்களை மட்டுமே எழுத முடிந்தது. இந்த புத்தகங்கள் எங்கள் நம்பிக்கை, முன்னேற்றத்துக்கான வழிகள் மற்றும் அதற்கான பாதைகளை விளக்கிக் கூறுகின்றன.

2. இருப்பினும், சில தீய மனம் கொண்ட சக்திகள் இன்னும் சர்ச்சைகளைத் தூண்ட ஆர்வமாக இருப்பதாலும், மாட்சிமை பொருந்தியவரான உமது உண்மையான அக்கறை என்னை இன்னும் கடினமாக உழைக்கத் தூண்டுகோலாய் அமைந்தபடியாலும், நீர் ஏற்கனவே ஒரு சில பகுதிகளில் மதிப்பீடு செய்ததை மேலும் சோதிக்க விரும்புகிறீர் என்பதை உணர்ந்தபடியாலும், நான் முன்பு சுருக்கமாகக் குறிப்பிட்ட தலைப்புகளைக் கொஞ்சம் ஆழமாக ஆராய முடிவு செய்துள்ள அதேவேளை, நான் அந்தக் கருத்துக்களை இலகுவாகவோ அல்லது நம்பிக்கை இல்லாமலோ முன்வைக்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதேநேரம், நான் அவற்றை வலியுறுத்திய பிறகு, சந்தேகம் கொண்டு அவர்களின் வாதத்தைக் கைவிட்டேன் என்றும் நினைத்துவிடக் கூடாது.

3. மீண்டும் ஒருமுறை, ஹைட்ரா மற்றும் ஸ்கில்லாவைப் பற்றிப் பேசியதால் (Hydra and Scylla (I. vi. 46) தொடர்ந்து வெளிவரும்  அவநம்பிக்கை மற்றும் அச்சுறுத்தல்களுக்கு எதிராகவோ அல்லது அதன் ஆழமற்ற நீரில் ஏற்படும் துரதிர்ஷ்டவசமான கப்பல் விபத்துகள் போன்ற நிகழ்வுகளுக்கு எதிராகவோ எச்சரிக்கையின் அவசியத்தை விளக்குவதற்கு அவற்றை ஒப்பிட்டுப் பயன்படுத்தியதால், கவிஞர்களின் கதைகளிலிருந்து எடுக்கப்பட்ட இவை இதுபோன்ற ஒரு வாதத்திற்கு பொருத்தமற்றவை என்றும், என் நம்பிக்கையை விமர்சிக்க வாய்ப்பு இல்லாததால் என் வார்த்தைகளில் ஏதாவது ஒன்றைக் குறைகூறுவதில் குறியாய் இருக்கின்றன என்றும் யாராவது நம்பினால், சொற்றொடர்கள் மட்டுமல்ல, முழு கவிதை வரிகளும் பரிசுத்த வேதாகமத்தின் உரையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

4. உதாரணமாக, “நாம் தான் அவரது சந்ததிகள்” என்ற அப்போஸ்தலர் 17:28 வசனங்கள், தீர்க்கதரிசனத்தால் வழிநடத்தப்பட்ட பவுல் போதித்தவை. தீர்க்கதரிசன உரையின் பாதை இராட்சதர்கள் அல்லது டைட்டன்களின் பள்ளத்தாக்கையோ தவிர்த்துவிடக் கூடியதல்ல. மேலும் ஏசாயா சைரன்கள், (ஆரம்பகால கிறிஸ்தவத்தில், சைரன் என்பது உண்மைக்கு மாறான போதனைகள், பாவம், மற்றும் விசுவாசத்துரோகம் போன்ற ஏமாற்றும் சக்திகளைக் குறிப்பதாகப் பயன்படுத்தப்பட்டது) மற்றும் தீக்கோழிகளின் மகள்மாரையும் (தீக்கோழியின் குஞ்சுகள்” என்ற உருவகம், அக்காலத்தில் நிலவிய நம்பிக்கைகளின்படி, பாசமற்ற, இரக்கமற்ற, கொடுமையான செயல்களைச் செய்யும் தன்மையைக் குறிப்பதாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது) பற்றிக் குறிப்பிட்டார். எரேமியாவும் பாபிலோனைப் பற்றி ‘பாபிலோன் மீண்டும் ஜனங்களால் நிறையாது. காட்டு நாய்கள், தீக் கோழிகள் மற்றும் பிற காட்டு மிருகங்கள் அங்கு வாழும். ஆனால் ஒருக்காலம் மீண்டும் மனிதர்கள் அங்கே வாழமாட்டார்கள்’ என்று தீர்க்கதரிசனம் உரைத்தார், இந்த உலகத்தின் குழப்பத்தைக் குறிக்கும் பாபிலோனின் பொறிகள் பண்டைய காமக் கதைகளைப் போலவே இருப்பதை விளக்க, சைரன்களின் மகள்மார் அங்கு வாழ்வார்கள் என்று கூறினார். அவை கொடியவையாகவும், இளைஞர்களின் மனங்களைக் கவரக் கூடியவையாகவும் இருந்தன. கிரேக்கக் கவிஞரே அதை நமக்குச் சொல்கிறார், அவர் தனது சொந்த விவேகத்தின் காரணமாகவே தப்பினார். கிறிஸ்து வருவதற்கு முன்பு, ஏமாற்றும் நிகழ்வுகள் மற்றும் இன்பத்தின் வசீகரங்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வது, வலிமையானவர்களுக்குக் கூட மிகவும் கடினமாக இருந்தது என்று கூறப்பட்டுள்ளது.

5. ஆனால், உலக இன்பங்களையும், கட்டுப்பாடற்ற வாழ்க்கையையும் பின்பற்றுவது மக்களின் மனதைப் பாதிக்கும் என்றும், நிச்சயமாக பேரழிவிற்கு வழிவகுக்கும் என்றும் கவிஞர் நினைத்திருந்தால், இதைப் படிப்பவர்களுக்காகவே இது எழுதப்பட்டது நாம் என்ன நினைக்க வேண்டும்: பாவ இச்சைகளுக்காக உடலைப் பலிக்கடாவாக்கி விடவேண்டாம்? மீண்டும்: நான் என் சரீரத்தை ஒழுங்குபடுத்தி, அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன், அதனால் நான் மற்றவர்களுக்குப் பிரசங்கிக்கும் நான் தகுதியற்றவனாக இருக்கக்கூடாது என்று 1 கொரிந்தியர் 9:27 கூறுகிறது.

6. உண்மையிலேயே, கிறிஸ்து ஆடம்பரத்தால் அல்ல, உபவாசத்தின் மூலம் எமக்கு இரட்சிப்பைப் பெற்றுத்தந்தார். அவர் தமக்காக தயவைப் பெறுவதற்காக அல்ல, நமக்குக் கற்பிப்பதற்காக இதைச் செய்தார். அவரது உடல் பலவீனமாக இருந்ததால் பசியை உணரவில்லை; மாறாக, அவரது உடல் பசியை உணர வேண்டும் என்பதற்காக மனித உடலை ஏற்றுக்கொண்டார் என்பதைக் காட்டினார். இந்த வழியில் அவர் நம் உடலை மட்டுமல்ல, அதன் பலவீனங்களையும் எடுத்துக்கொண்டதாக  நமக்குக் கற்பிக்கிறார். வேதாகமம் கூறுவது போல் நிச்சயமாக அவர் நம் பலவீனங்களை எடுத்துக்கொண்டு நமது நோய்களுக்குப் பரிகாரமாய் வந்தார்.

அத்தியாயம் 2

இயேசு நமக்காக ஏற்றுக்கொண்ட அவரது உடலை உண்மையில் பாதித்த நிகழ்வுகளை தெய்வீகத்தின் ஒரு பகுதியாகக் கருதக்கூடாது, ஏனெனில் அவர் மிக உன்னதமான கடவுள். இதை மறுப்பது பிதா அவதாரம் எடுத்தார் என்று கூறுவதாகும். கடவுள் ஒருவரே என்றும், அவரைத் தவிர வேறு யாரும் இல்லை என்றும், அழியாமை கடவுளுக்கு மட்டுமே சொந்தமானது என்றும் நாம் படிக்கும்போது, ​​இந்த உண்மைகளை கிறிஸ்துவைப் பற்றிய உண்மையாகவும் நாம் புரிந்துகொள்ள வேண்டும் – பட்ரிபாசியனிசம் (Patripassianism) (பிதாவும் பாடுகளை அனுபவித்தார் என்ற அர்த்தத்தைக் கொடுக்கும்) எனப்படும் பாவங்கள் நிறைந்த கொள்கையைத் தவிர்ப்பதற்கு மட்டுமல்லாமல், தந்தை மற்றும் குமாரனின் கிரியைகள் யாவும் ஒன்றே என்றும் நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்

7. அப்படிச் சொல்லப் போனால், அவர் பசியை உணர்ந்தது உடல் பலவீனம் காரணமாக, அதாவது மனிதரான நம்முடைய பலவீனம் போன்ற ஒன்று. அவர் கண்ணீர் சிந்தி, சாகும் வரை மிகவும் துக்கத்தை அனுபவித்த போது, ​​அது நம் மனித இயல்பின் ஒரு பகுதி போன்றதாகவே இருந்தது. நம் இயல்பின் பண்புகளையும் அனுபவங்களையும் தெய்வீகத்திற்கு ஏன் காரணம் காட்ட வேண்டும்? நமக்குச் சொல்லப் படுவது போல், படைக்கப்பட்டவர் என்பது ஒரு உடலின் பண்பைக் குறிக்கிறது. உண்மையில், நாம் படிக்கிறோம்: நம் தாய் என்று போற்றும் சீயோன்: ‘அவர் ஒரு மனிதன்’ என்று கூறுவார், அவளில், அவர் மனிதரானார், உன்னதமானவரான தாமே அவளுக்கான அஸ்திவாரங்களை நிறுவினார். அவர் மனிதரானார், கடவுளானார் என்பதை தெளிவுபடுத்துவதற்காக அல்ல.

8. ஆனால் ஒரே நேரத்தில் உன்னதமானவராகவும் மனிதராகவும் இருப்பவர் யார்? அவர் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் மத்தியஸ்தராக இருப்பவர், நம்மை மீட்க தன்னையே கொடுத்த இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறு யாராக இருக்கமுடியும்? இதுகுறித்து 1 தீமோத்தேயு 2:5 “ஒரே ஒரு தேவனே இருக்கிறார். மனிதர்கள் தேவனை அடைவதற்கும் ஒரே ஒரு வழிதான் உள்ளது. அவ்வழி மனிதனாகப் பிறந்த கிறிஸ்துவாகிய இயேசுவின் மூலம் உருவாகிறது” என்று மேற்கோள் காட்டுகிறது. இந்தக் குறிப்பு உண்மையில் அவரது அவதாரத்தை சரியாகக் குறிக்கிறது. நமது மீட்பு அவருடைய இரத்தத்தால் பெறப்பட்டது, நமது மன்னிப்பு அவருடைய சக்தியால் பெறப்பட்டது, மேலும் நமது வாழ்க்கை அவருடைய கிருபையால் பாதுகாக்கப்படுகிறது. அவர் உன்னதமானவராகச் செயல்படுகிறார், ஒரு மனிதனைப் போல ஜெபிக்கிறார். ஒரு பங்கு படைப்பாளருக்கு சொந்தமானது, மற்றொன்று மீட்பருக்கு சொந்தமானது. கொடைகள் வேறுபட்டிருக்கலாம், ஆனால் கொடுப்பவர் ஒருவரே, ஏனென்றால் நம்மைப் படைத்தவர் தான் நம் மீட்பராகவும் இருக்க வேண்டும் என்பது பொருத்தமானது.

9. கிறிஸ்து மிக உயர்ந்தவர், உன்னதர் என்பதற்கான தெளிவான சான்றுகள் நம்மிடம் உள்ளன என்பதை யார் உண்மையில் மறுக்க முடியும்? யாராவது வேறுவிதமாகக் கூறினால், புனித அவதாரம் என்பது பிதாவாகிய கடவுளின் கிரியை அல்ல என்று கூறுவர். ஆனால் கிறிஸ்து உன்னதமானவர் என்று பாடுகளின் மறைபொருளைப் பற்றிக் கூறும் மற்றொரு வேதாகாமப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமின்றி காட்டப்படுகிறது: உன்னதமானவர் தம்முடைய குரலை அனுப்பினார், அதற்குக் கட்டுப்பட்டு, பூமி அசைந்தது என்று நற்செய்தியில் நீங்கள் படிக்கலாம்: அத்தோடு, “குழந்தாய், இப்போதும் நீ உன்னதமான தேவனின் ஒரு தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுவாய். கர்த்தருக்கு முன்பாக முன்னோடியாக நீ நடப்பாய். கர்த்தரின் வருகைக்காக மக்களைத் தயார் செய்வாய்” என்று லூக்கா 1:76 அறிவிக்கிறது. இப்போது இங்கே சந்தேகத்துக்கு இடமின்றி உயர்ந்தவர் யார் என்பதும் அவர் கடவுளின் குமாரன் என்பதும் உறுதியாகின்றது. எனவே மிக உயர்ந்த கடவுள், உன்னதர் கிறிஸ்து ஒருவரே.

10. மீண்டும், கடவுள் எல்லா இடங்களிலும் உள்ள ஒரே கடவுள் என்று விவரிக்கப்பட்டாலும், கடவுளின் குமாரன் இந்த ஐக்கியத்திலிருந்து வேறுபட்டிருக்கவில்லை. ஏனென்றால், எழுதப்பட்டபடி உன்னதமானவர் தனியாக இருக்கிறார்: “உமது பெயர் கர்த்தர் என்பதை அவர்கள் அறியட்டும்: நீர் ஒருவரே பூமியெங்கும் உயர்ந்தவர் என்பதையும் அறியட்டும்” என்கிறது.

11. ஆகையால், எதிரிகளால் எடுக்கப்பட்ட தீய முடிவு கடவுளைப் பற்றிப் பேசும் வேதத்தின் அடிப்படையில் அவமதிப்பு மற்றும் அவமானத்துடன் நிராகரிக்கப்படுகிறது: “அவர் ஒருவரே என்றும் வாழ்பவர், யாராலும் அருகில் நெருங்கி வரமுடியாத ஒளியில் அவர் வாழ்கிறார். எந்த மனிதனும் அவரை ஒரு போதும் பார்த்ததில்லை. யாராலும் அவரைப் பார்க்கமுடியாது. என்றென்றைக்கும் அவருக்குக் கனமும் வல்லமையும் உண்டாகுவதாக” என்கிறது 1 தீமோத்தேயு 6:16, ஆகவே, இந்த வார்த்தைகள் கடவுளைக் குறிக்கின்றன, இது பிதா மற்றும் குமாரன் இருவருக்கும் சமமாக இருக்கும் சொந்தமான ஒரு பெயர்.

12. அவர்கள் கடவுளின் பெயரைக் கண்டும் [பிதாவுடன் சேர்ந்து] குமாரனைப் பற்றிய எந்த எண்ணத்தையும் ஒப்புக்கொள்ள மறுக்கும்போதெல்லாம், அவர்கள் குமாரனின் தெய்வீக இறையாண்மையை நிராகரிப்பதால், அவர்கள் தேவ நிந்தனையில் ஈடுபடுபவர்களாகவே கருதப்படுவர். பிதா அவதாரம் எடுத்தார் என்று கற்பித்த சபெல்லியர்களைப் போலவே அவர்களும் அதே பாவமான, தவறான புரிதலைப் பகிர்ந்து கொள்வதாகவே தோன்றும். கொலோசெயர் 2:12 இல் கூறப்பட்டுள்ளபடி, அப்போஸ்தலரின் வார்த்தைகளை பிதாவுக்கு அவமரியாதை செய்யும் வகையில் விளக்குவதைத் தவிர்க்க முடியும் என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்: ‘அவரில் நீங்களும் உயிர்த்தெழுந்தீர்கள், அவரை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழச் செய்த பிதாவாகிய கடவுளின் செயல்களில் விசுவாசம் வைப்பதன் மூலம்’ என்பதிலிருந்து இது விளக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் நம்பிக்கைகளின் விளைவுகளைப் பற்றித் தொடர்ந்து வரும் எச்சரிக்கையையும் கவனிக்க வேண்டும் – ஏனென்றால் அடுத்து வருவது இதுதான்: “உங்களது பாவங்களாலும் பாவம் மிக்க சுயசுபாவத்தின் சக்தியிலிருந்தும் விடபட முடியாததாலும் ஆன்மீக நிலையில் இறந்துபோனபோதும், தேவன் உங்களைக் கிறிஸ்துவுடன் உயிருடன் இருக்கச் செய்தார். நமது பாவங்களையும் மன்னித்துவிட்டார். தேவனுடைய சட்டங்களை நாம் மீறிவிட்டதால் நாம் கடன்பட்டிருந்தோம். எந்தெந்த சட்டங்களை நாம் மீறினோம் என்பதை அக்கடன் பட்டியலிட்டது. ஆனால் தேவன் அந்தக் கடனை நமக்கு மன்னித்து, ஆணிகளால் சிலுவையில் அறையைப்பட்டு மறுத்ததன் மூலம் அப்புறப்படுத்திவிட்டார்” என்று கொலோசெயர் 2:13-14 கூறுகிறது.

13. ஆகையால், சரீரத்தை எழுப்பிய பிதா மட்டுமே கடவுள் என்றும், சரீரமாக எழுப்பப்பட்ட குமாரன் மட்டுமே இவற்றைச் செய்தார் என்றும் நாம் நினைக்கக்கூடாது. எழுப்பியவர் உயிரையும் கொடுத்தார்; உயிரைக் கொடுத்தவர் பாவங்களை மன்னிக்கிறார்; பாவங்களை மன்னித்தவர் பதிவையும் அழித்தார்; பதிவை அழித்தவர் அதை சிலுவையிலும் அறைந்தார்: சிலுவையில் அறைந்தவர் தன்னைத்தானே சரீர வடிவிலிருந்து  அகற்றிக்கொண்டார். ஆனால் சரீரத்தை அகற்றியது பிதா அல்ல. யோவான் 1:14 இல் கூறப்பட்டுள்ளபடி, “வார்த்தை ஒரு சரீரமாகி  நம்மிடையே வாசம் செய்தார். அவரது மகிமையை நாம் பார்த்தோம். அந்த மகிமை தந்தையின் ஒரே குமாரனுக்கு உரியது. அவ்வார்த்தை கிருபையும், உண்மையும் நிறைந்ததாயிற்று” என்கிறது. எனவே, ஆரியர்கள், பிதாவைக் குமாரனிடமிருந்து பிரிப்பதன் மூலம், பிதாவும் பாடுகளைச் சகித்தார் என்று கூறும் அபாயம் இங்கே காணப்படுகிறது.

14. குமாரனின் செயல்களைப் பற்றிய இந்த வார்த்தைகள் குமாரன் தாமே தம்முடைய சரீரத்தை மீண்டும் உயிர்த்தெழச்செய்தார் என்பதை நாம் தெளிவாகக் காணலாம். இதைப்பற்றியே தான் அவர், “இந்த தேவாலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாட்களுக்குள் நான் அதை மீண்டும் கட்டி எழுப்புவேன்” என்று கூறியதாக யோவான் 2:19 அறிவிக்கிறது. மீண்டும், யோவான் 5:21 இல், “பிதாவானவர் இறந்தவர்களை உயிரோடு எழுப்புகிறார். இதைப்போலவே அவரது குமாரனும் தமது விருப்பத்தின்படி இறந்துபோனவர்களை உயிரோடு எழச் செய்வார்” என்கிறார். “உங்கள் பாவங்கள் உங்களுக்கு மன்னிக்கப்பட்டன” என்று கூறி, அவர் பாவங்களை மன்னித்துள்ளார் லூக்கா 5:20 இல் மேலும் சாட்சியமளிக்கிறார். அவர் சிலுவையில் அறையப்பட்டு சரீரத்தால் துன்பப்பட்டதால், அவர் நமது பாவங்களின் எழுதப்பட்ட பதிவைத் தம்முடைய சிலுவையின் மீது வைத்து ஆணிகளால் அறைந்து அவற்றை அழித்துவிட்டார். வேறு யாரும் சரீரத்தைக் கைவிடவில்லை; கடவுளின் குமாரன் மட்டுமே மனித சரீர வடிவத்தை எடுத்து அதைக் காப்பாற்றவும் செய்தார். எனவே, நமது உயிர்த்தெழுதலை நிறைவேற்றுபவர் கடவுள் ஒருவரே என்று தெளிவாகக் காட்டியுள்ளார்.

அத்தியாயம் 3

பிதாவும் குமாரனும் பிரிக்கப்படக்கூடாது என்பது அப்போஸ்தலரின் வார்த்தைகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. குமாரன் ஆசீர்வதிக்கப் பட்டவராகவும், ஒரே வல்லமையுள்ளவராகவும், இயற்கையால் அழியாதவராகவும் இருக்க வேண்டும் என்பது பொருத்தமானது, அதாவது, கிருபையால் அல்ல, தேவதூதர்கள் கூட அழியாதவர்களாக இருக்கிறார்கள். ஆகவே, அவர் அணுக முடியாத ஒளியில் வாழ வேண்டும். பிதாவும் குமாரனும் ஒரே மாதிரியானவர்கள் என்பது நிரூபணமான போது, சமமாக தனியாக இருப்பதாகக் கூறப்படுவது எப்படி சாத்தியமாகும்?

15. எனவே, கடவுள் என்ற நாமத்தை நீங்கள் காணும்போதும் படிக்கும்போதும், ​​பிதாவை குமாரனிடமிருந்து பிரிக்காதீர்கள், ஏனென்றால் இருவரின் தெய்வீகமும் ஒன்றுதான். எனவே, 1 தீமோத்தேயு 6:15 இல் ‘தேவன் ஆசீர்வதிக்கப்பட்டவராகவும், ஏக சக்கரவர்த்தியாகவும் இருக்கிறார். அவரே அரசர்களுக்கெல்லாம் அரசராகவும், கர்த்தர்களுக்கெல்லாம் கர்த்தராகவும் விளங்குகிறார்’ என்ற வார்த்தைகளை நீங்கள் படிக்கும்போது, அவை ஒரே வல்லமையுள்ள கடவுளைக் குறிக்கின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். அத்தோடு, பின்வருவதையும் உங்கள் நினைவில் பதிவிட்டுக் கொள்ளுங்கள்: 1 தீமோத்தேயு 6:13 இல் கூறப்பட்டுள்ளபடி, ‘எல்லாவற்றையும் உயிர்ப்பிக்கும் தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் முன்பாக நான் ஒரு ஆணையை இடுகிறேன். கிறிஸ்து உண்மையில் உயிரைக் கொண்டுவருகிறார், எனவே கடவுளின் பெயர் பிதா மற்றும் குமாரன் இருவருக்கும் சரியாகப் பொருந்துகிறது’ என்று உரைப்பதைக் காணக்கூடியதாயிருக்கிறது.

16. வேதாகமம் கூறுவது போல் வார்த்தை கடவுளில் உள்ளது: நான் அவருடைய வார்த்தையான கடவுளைப் புகழ்வேன். கடவுளுக்கு நித்திய சக்தி இருக்கிறது, இயேசுவுக்கும் கூட அந்த சக்தி இருக்கிறது. கடவுளைப் பற்றிப் பேசும்போது, ​​அப்போஸ்தலன் கடவுள் ஒருவரே என்பதைக் காட்டுகிறார், மேலும் கிறிஸ்துவின் பெயரின் மூலம் அவர் அவதாரத்தின் மறைபொருளை வெளிப்படுத்துகிறார்.

17. அத்தோடு, கிறிஸ்துவின் அவதாரத்தைப் பற்றி அவர் விவாதித்ததை விளக்க, அவர் மேலும் இவ்வாறு கூறினார்: போஞ்சியு பிலாத்துவின் முன் இயேசு ஒரு நல்ல அறிக்கையுடன் சாட்சியமளித்தார். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும் வரை கட்டளையைத் தூய்மையாகக் கடைப்பிடிக்க நான் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். அவர் சரியான நேரத்தில் ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் ஒரே வல்லமையுள்ள, அரசர்களின் அரசராகவும், கர்த்தருக்கெல்லாம் கர்த்தராகவும் தன்னை வெளிப்படுத்துவார். 1 தீமோத்தேயு 6:13-16 இல் கூறப்பட்டுள்ளபடி, அவர் மட்டுமே அழியாமைக்கு ஒரே சாட்சியாகவும் அணுக முடியாத ஒளியில் வாழ்பவராகவும் இருக்கிறார். அவரை யாரும் பார்த்ததில்லை அல்லது பார்க்கவும் முடியாது. எனவே, அந்த வார்த்தைகள் கடவுளைப் பற்றி எழுதப்பட்டுள்ளன, அந்த பெயரின் மகிமையும் சத்தியமும் [பிதா மற்றும்] குமாரனால் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

18. குமாரனைப் பற்றிய இவை அனைத்தும் உண்மையாக இருப்பதால், இங்கே அவரைப் பற்றி நாம் ஏன் சிந்திக்கக்கூடாது? அப்படி இல்லையென்றால், அவருடைய தெய்வீகத்தை மறுத்து, கடவுளைப் பற்றிச் சொல்லப்பட வேண்டியதை மறுத்துவிட்டாலும், அவருடைய ஆசீர்வாதத்தை மறுக்க முடியாது, ஏனென்றால் அவரே ஆசீர்வதிப்பவர்; பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள். ஆசீர்வதிக்கப்பட்ட கடவுளின் சிறந்த நற்செய்தியைப் பற்றி 1 தீமோத்தேயு 1:11 இல் ‘தேவன் என்னிடம் ஒப்படைத்த நற்செய்தியின் ஒரு பகுதியே என் போதனையாகும். பெருமை மிகு அந்நற்செய்தி மகிமையின் தேவனிடமிருந்து வருகிறது’ என்று கூறுவது போல், அவர் நமக்கு நல்ல போதனையைக் கொடுத்ததால் அவர் ஒரு பாக்கியவான் என்று அழைக்கப்பட வேண்டும். அவருடைய வல்லமையை நாம் என்றும் மறுக்க முடியாது, ஏனென்றால் பிதாவானவர் கூறுகிறார்; ‘நான் வல்லமையுள்ள ஒருவருக்கு உதவி செய்தேன். கடவுளின் ஞானத்தைப் பற்றி எழுதப்பட்டபடி, அவரே மற்றவர்களையும் அழியாதவராக ஆக்கும்போது, ​​அவரை அழியாதவராக ஒப்புக்கொள்ள மறுப்பவர்கள் யார்? இதுகுறித்து ஞானம் 8:13 இல், ‘ஞானத்தினால் நான் இறவாமை எய்துவேன்; எனக்குப்பின் வருபவர்களுக்கு என்றும் நீங்கா நினைவை விட்டுச்செல்வேன்’ என்று எழுதப்பட்டிருக்கிறது.

19. ஆனால் அவருடைய இயல்பின் அழியாமை வேறு, நம்முடையது வேறு. ஆகவே, அழியக்கூடியவற்றை தெய்வீக விடயங்களுடன் ஒப்பிடக்கூடாது. தெய்வீகம் என்பது மரணத்தால்  தொட முடியாத ஒரே ஒரு பொருளாக உள்ளது. அதனால்தான் அப்போஸ்தலர், [மனித] ஆன்மாவும் தேவதூதர்களும் அழியாதவர்கள் என்பதை அறிந்திருந்தாலும், கடவுள் மட்டுமே நித்தியத்துக்கும் அழியாதவர் என்று கூறினார். உண்மையில், ஆன்மா கூட இறக்க முடியும்: பாவம் செய்யும் ஆன்மா இறந்துவிடும் என்று எசேக்கியேல் 18:20,கூறுகிறது. ஒரு தேவதூதர் என்பவர் முற்றிலும் அழியாதவர் அல்ல; அவரது அழியாத தன்மை படைப்பாளரின் விருப்பத்தைச் சார்ந்துள்ளது.

20. இதை நிராகரிக்க அவசரம் கொள்ள வேண்டாம், ஏனென்றால் தேவ தூதர்களான கேப்ரியல் ரபேல் அல்லது யூரியல் போன்றோர் இறக்கவில்லை. அவர்கள் கூட தங்கள் இயல்பில் பாவத்திற்கான ஆற்றலைக் கொண்டுள்ளவர்களாகக் காணப்பட்டனர். இருப்பினும் அவர்கள் ஒழுக்கத்தின் மூலம் மட்டுமே முன்னேற்றத்தை அடைய முடியாது. ஒவ்வொரு பகுத்தறிவுள்ள உயிரினமும் வெளிப்புற அழுத்தங்களுக்கு உட்பட்டதும் மற்றும் தீர்ப்புக்கு உட்பட்டதுமாக இருக்கிறது. நாம் எதிர்கொள்ளும் விளைவுகள், தீர்ப்பு, ஊழல் அல்லது பரிபூரணத்தை நோக்கிய முன்னேற்றம் ஆகியன நம் மீது செலுத்தும் தாக்கங்களைப் பொறுத்தது. பிரசங்கி இதுபற்றிக் கூறுகையில், “கடவுள் தனது எல்லாக் கிரியைகளையும் நியாயத்தீர்ப்பின் வரம்புகளுக்குள்  கொண்டுவருவார். எனவே ஒவ்வொரு உயிரினமும், அது [தற்போது] இறக்கவில்லை அல்லது பாவம் செய்யவில்லை என்றாலும், அதற்குள் ஊழல் மற்றும் மரணத்திற்கான சாத்தியக்கூறு உள்ளது. மேலும் அது எந்த வகையிலும் பாவத்திற்கு அடிபணியவில்லை என்றால், அது அதன் சொந்த தகுதியின் மூலம் இந்த அழியாமை என்ற கொடையைப் பெறுவதில்லை, மாறாக ஒழுக்கம் அல்லது கருணை மூலம் தான் பெறுகிறது. எனவே, ஒரு கொடையாக அருளப்படும் அழியாமை என்பது ஒரு புறம் இருக்க, அதே சமயம் மாற்றத்திற்கான சாத்தியம் இல்லாத அழியாமை என்பது முற்றிலும் வேறுபட்ட ஒரு விடயமாகப் பார்க்கப்படுகிறது.

21. கிறிஸ்து அனைவருக்காகவும் சரீர மரணத்தை அனுபவித்ததால், அவரின் தெய்வீக இயல்பின் அழியாமையை நாம் நிராகரித்து விடமுடியுமா? அப்படியானால், தேவதூதரான கபிரியேல் கிறிஸ்துவை விட உயர்ந்தவர் என்றாகிவிடுமா? ஏனென்றால் கபிரியேல் ஒருபோதும் மரணத்தை எதிர்கொள்ளவில்லை, அதே நேரத்தில் கிறிஸ்து தனது ஆவியை மனமுவந்து கையளித்தார் அல்லவா? ‘ஒரு ஊழியன் தன் எஜமானை விட உயர்ந்தவன் அல்ல’ என்று மத்தேயு 10:24) கூறுகிறது. எனவே நாம் சரீரத்தின் பலவீனத்தையும் தெய்வீகத்தின் நித்தியத்தையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். கிறிஸ்துவின் மரணம் சரீரத்திலேயே தொடங்கியது, அதேநேரம், அழியாமை என்பது கிறிஸ்துவின் தெய்வீக இயல்புக்கு மட்டுமே சொந்தமானது. சரீரம் பொதுவாக சிதைவுக்கு விதிக்கப்பட்டிருந்தாலும் தெய்வீகம் எப்படி இறந்திருக்க முடியும்?

22. குமாரன் பிதாவின் முன்னிலையில் இருக்கும்போது, பிதாவும் குமாரனும் ஒளியாக இருக்கும் பட்சத்தில், அவர் எப்படி அணுக முடியாத ஒளியில் வாசம் செய்ய முடியும்? பிதாவும், குமாரனும் ஒளியாக இருக்கிறார்கள், ஏனென்றால் கடவுள் ஒளியாக இருக்கிறார். இதை ‘தேவன் ஒளியானவர். தேவனில் இருள் இல்லை’ என்று 1 யோவான் 1:5 கூறுகிறது. அப்படியில்லையென்றால், தெய்வீக ஒளியைத் தவிர, வேறு ஏதாவது ஒளியை, அதாவது அணுக முடியாத ஒளி என்று நாம் கருதினால், இந்த ஒளி பிதாவை விட மகத்தானது, அதனால் அவர் அந்த ஒளியில் இருக்க மாட்டார். வேதாகமம் சொல்வது போல், கர்த்தர் பிதாவோடும்  பிதாவிலும் இருக்கிறார். எனவே, மக்கள் கடவுளைப் பற்றி படிக்கும்போது குமாரனைப் புறக்கணிக்கக்கூடாது, யோவான் 16:32 சொல்வது போல், குமாரனைப் பற்றி படிக்கும்போது பிதாவைப் புறக்கணிக்கக்கூடாது.

23. பூமியில், குமாரனுக்கு பிதா இல்லாமல் இல்லை, “நானும் பிதாவும் ஒருவர்தான்” என்று (யோவான் 10:30 இல் கர்த்தரான இயேசு கூறியிருப்பதைப் பார்க்கும்போது, பிதா பரலோகத்தில் குமாரன் இல்லாமல் இருக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? குமாரன் சரீர வடிவில் இருக்கிறார் (நான் “அவர் ‘சரீர வடிவில்’ இருக்கிறார்” அல்லது “அவர் பூமியில் இருக்கிறார்” என்று குறிப்பிடும்போது, ​​நான் சுவிசேஷத்தில் சொல்லப்பட்ட காலங்களைக் குறிப்பிடுகிறேன், ஏனென்றால் நாம் இனி ‘சரீர வடிவம்’ என்பதற்குப் பிறகு” கிறிஸ்துவை அறிய மாட்டோம்). இதை மேலும் விளக்கமாக 2 கொரிந்தியர் 5:16 ‘இந்த நேரத்திலிருந்து, நாங்கள் ஒருவரையும் மற்ற உலக மக்களைப் போன்று சரீர வடிவத்தில் அறியமாட்டோம். முன்பு நாங்களும் மற்றவர்களைப் போன்றே கிறிஸ்துவை சரீர வடிவத்தில் தான் அறிந்திருந்தோம். இனிமேல் அவ்வாறு அறிவோம் என்று எண்ணவில்லை’ என்று கூறுகிறது. அவர் சரீர வடிவில் இருக்கிறார் என்றும், அவர் தனியாக இல்லை என்றும்  எழுதப்பட்டுள்ளதை, ‘தீர்ப்பளிக்கும் காலத்தில் நான் தனி ஆளாக இல்லை. என்னை அனுப்பிய என் பிதா என்னோடு இருக்கிறார்’ என்று கர்த்தர் அருளியதாக, யோவான் 8:16 இல் மேற்கோள் காட்டுகிறார். இப்படி இருக்கும்போது, பிதா ஒளியில் தனியாக வாழ்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

24. இது வெறும் யூகம் என்று நினைக்காதீர்கள். வேதாகமம் (யோவான் 1:18) ‘யாரும் கடவுளைக் கண்டதில்லை. பிதாவின் மார்பில் இருக்கும் ஒரேபேறான குமாரன் மட்டுமே அவரை வெளிப்படுத்தியுள்ளார்’ என்று கூறுகிறது. குமாரன் பிதாவின் மார்பில் இருக்கும்போது பிதா எப்படி தனியாக இருக்க முடியும்? குமாரன் தான் காணாதவரை எப்படி வெளிப்படுத்த முடியும்? அப்படியானால் பிதா தனியாக இல்லை.

25. பிதாவுக்கும் குமாரனுக்கு இடையேயான தனிமை என்றால் என்ன என்பதை இப்போது கவனியுங்கள். பிதா தனியாக இருக்கிறார், ஏனென்றால் வேறு பிதா இல்லை; குமாரன் தனியாக இருக்கிறார், ஏனென்றால் வேறு குமாரன் எவரும் இல்லை; கடவுள் தனியாக இருக்கிறார், அப்படியானால், திரித்துவத்தின் தெய்வீக இயல்பு என்பது ஒன்றே.

அத்தியாயம் 4

கிறிஸ்து தனது சரீரத்தின் அடிப்படையில் மட்டுமே படைக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. மனிதகுலத்தின் இரட்சிப்புக்காக அவர் உயிர்த்தெழுதலுக்கு உதவி தேவையில்லை என்பது போல, அவருக்கு எந்த உதவியும் தேவையாக இருக்கவில்லை. இதற்கு நேர்மாறாக, இறந்தவர்களை எழுப்பிய மற்றவர்கள் ஜெபத்தை நம்பியிருக்க வேண்டியிருந்தது. கிறிஸ்து ஜெபித்தபோது கூட, அவர் ஒரு மனிதனாகவே அந்த ஜெபங்களை ஒப்புக்கொடுத்தார்; ஆகையினால் அவர் இன்னும் தெய்வீகமாகக் கருதப்படுகிறார். ஏனென்றால் அவர் காரியங்கள் நடக்கும்படி கட்டளையிட்டார். இது சம்பந்தமாக, ஆரியர்களின் வாதங்களை விட பிசாசின் சாட்சியம் அதிக உண்மையைக் கொண்டுள்ளது. வல்லமையுள்ளவர்என்ற பட்டம் மனுஷகுமாரனுக்கு ஏன் கொடுக்கப்படுகிறது என்பதை விளக்குவதன் மூலம் இந்த விவாதம் நிறைவுக்கு வருகிறது.

26. குமாரன் இல்லாமல் பிதா தானே கடவுளாக இல்லை, அதேபோல், பிதா இல்லாமல் குமாரன் தானே கடவுளாக இல்லை என்பதும் இப்போது தெளிவாகிறது. காரணம், பிதாவாகிய கடவுளால் அவர் எவ்வாறு உருவாக்கப்பட்டார் என்பதன் அடிப்படையில் அல்ல, அவரது சரீர வடிவத்தைப்  பொறுத்தவரை கடவுளின் ஏக குமாரனாக அவதரித்தார்  என்பதை நாம் படிக்கிறோம்.

27. உண்மையில், அவர் எந்த அர்த்தத்தில் படைக்கப்பட்டார் என்பதை அவர் பரிசுத்த முற்பிதாவின் வாயால் அறிவித்தார்: என் ஆத்துமா நிரம்பி வழியும் அளவுக்கு துக்கத்தால் நிறைந்துள்ளது, என் வாழ்க்கை நரகத்திற்கு அருகில் வந்துவிட்டது. குழிக்குள் இறங்குபவர்களுடன் நான் எண்ணப்பட்டேன்; இறந்தவர்களில் ஒரு மனிதனைப் போல ஆக்கப்பட்டேன். இங்கே நாம் காண்பது என்னவென்றால்: நான் கடவுளைப் போல அல்ல, ஒரு மனிதனாகப் படைக்கப்பட்டேன் என்றும்; என் ஆன்மா துக்கத்தால் நிரம்பி வழிகிறது என்பதைக் குறிப்பதுமாக இருக்கிறது. என் ஆன்மா என்று கூறப்படுவதை மாத்திரமே கவனியுங்கள், என் கடவுள் என்பதை அல்ல. நரகத்திற்குச் செல்லும் அளவுக்கு அவர் படைக்கப்பட்டார் என்றும், அதில் அவர் மற்றவர்களுடன் கணக்கிடப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. ஏனென்றால் மற்றவர்களுடன் அதை வகைப்படுத்துவதற்குக் காரணமான எந்த சாயலையும் கடவுள் ஒப்புக்கொள்கிறார். ஆனால், மரணத்திற்குக் கொடுக்கப்பட்ட சரீரத்திலும் கூட கிறிஸ்துவில் தெய்வீகத்தின் மகத்துவம் எவ்வாறு பிரகாசிக்கிறது என்பதைப் பாருங்கள். அவர் ஒரு மனிதனாகவும் சரீர வடிவம் கொண்டவராகவும் படைக்கப்பட்ட போதிலும், சுதந்திரமாகவும், எந்த வித உதவிகளும் இல்லாமலும் அவர் மரித்தோரிடமிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலை பெற்றார்.

28. ஆனால், ‘வல்லமையுள்ள ஒருவரின் உதவியில் நான் தங்கியுள்ளேன்’ என்று சொல்லப்பட்டிருக்கும் போது, ​​குமாரன் இங்கே எப்படி உதவி இல்லாமல் இருந்தார் என்று சொல்ல முடியும்? இங்கேயும் இரண்டு இயல்புகளை வேறுபடுத்திப்பாருங்கள். சரீரத்திற்கு உதவி தேவை, தெய்வீகத்துக்கு எந்த உதவியும் தேவை இல்லை. மரணத்தின் கைவிலங்குகள் அவரைப் பிடிக்க முடியாது என்பதால் அவர் சுதந்திரமானவராக இருந்தார். அவர் இருளின் சக்திகளால் பிடிக்கப்படவில்லை; அவர்தான் அவற்றின் மீது அதிகாரம் செலுத்தினார். அவருக்கு உதவிகள் தேவையற்றவை, ஏனென்றால் அவரே கர்த்தர், எந்த தூதர் அல்லது தூதர் பதவிகள் மூலமும் அவர் நியமிக்கப்படவில்லை தனது சொந்த வல்லமையால் தனது மக்களை இரட்சித்தார். பிறரை உயிர்ப்பிக்கும் அவருக்கு, தனது சொந்த சரீரத்தை உயிர்த்தெழச் செய்ய உதவி தேவைப்படுமா என்ன?

29. மனிதர்களும் மக்களை மரித்தோரிலிருந்து எழுப்பியிருந்தாலும், அவர்கள் இதை தங்கள் சொந்த சக்தியால் செய்யவில்லை, மாறாக கிறிஸ்துவின் பெயரால் செய்தார்கள். கேட்பது என்பது வேறு, கட்டளையிடுவது என்பது வேறு; பெறுவது கொடுப்பதை விட வேறுபட்டதாக இருக்கிறது.

30. எலியா கட்டளையிடுவதன் மூலம் அல்ல, ஜெபிப்பதன் மூலம் இறந்தவர்களை எழுப்பினார். 2 இராஜாக்கள் 4:34 இல் சொல்லப்பட்டதற்கு இணங்க, எலிஷா இறந்த மனிதன் மீது அவர் படுத்து அதன்மூலம் மனிதரை மீண்டும் உயிர்ப்பித்தார். எலிஷாவின் சடலத்தைத் தொடுதலில் மூலமும்  இறந்தவர்கள் உயிர் பெற்றனர். இயேசுவின் வருகையைக் காட்டுவதற்காக, அவர் நம்மைப் போலவே சரீர வடிவில் உருவாக்கப்பட்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்ட பிறகும் இறந்தவர்களை உயிர்ப்பிக்கக்கூடியவராய் இருந்தார்.

31. பேதுரு, மீண்டும் ஒருமுறை, ஐயேனியாவை குணப்படுத்தியபோது, ​​பின்வருமாறு கூறினார்: ‘நாசரேத் இயேசுவின் நாமத்தினாலே, எழுந்து நட. அவருடைய சொந்த நாமத்தினாலே அல்ல, கிறிஸ்துவின் நாமத்தினாலே’ என்று. இருப்பினும், ‘எழுந்திரு’ என்பது ஒரு கட்டளை; அது ஒருவரின் அதிகாரத்தில் பொதிந்திருக்கும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. மாற்கு 16:17-18 ஐப் பார்க்கவும். இது அதிகாரத்தின் ஆணவத்தில் கூறப்பட்ட கூற்று அல்ல, ஏனெனில், கட்டளையின் வலிமை அதில் அடங்கியுள்ள பெயரின் செல்வாக்கில் தங்கி உள்ளது, கட்டளை பிறப்பிப்பவரின் சொந்த பலத்தில் அல்ல. எனவே, ஆரியர்கள் என்ன சொல்கிறார்கள்? பேதுரு கிறிஸ்துவின் நாமத்தில் கட்டளையிடுகிறார் – அது அதன் ஒரு பக்கம்: அதன் மறுபக்கம், கடவுளின் குமாரன் கட்டளையிடவில்லை, வெறுமனே ஒரு வேண்டுகோளாக இதை விடுத்தார் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

32. யோவான் 11:41-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அவர் ஒரு ஜெபம் செய்வதைப் பற்றி அவர்கள் ஆட்சேபித்தனர் என்று நாம் வாசிக்கிறோம். ஆனால் வேறுபாட்டைக் கவனியுங்கள். அவர் மனுஷகுமாரனாக ஜெபிக்கிறார், அதே நேரத்தில் அவர் தேவனுடைய குமாரனாக கட்டளையிடுகிறார். பிசாசுக்குக் கொடுத்த அங்கீகாரத்தை நீங்கள் தேவனுடைய குமாரனுக்குக் கொடுக்க மாட்டீர்களா? நீங்கள் உண்மையில் சாத்தானை விட மோசமானவர்கள் என்று உங்களைக் குற்றம் சாட்டிக்கொள்ளப் போகிறீர்களா? லூக்கா 4:3-ல் குறிப்பிடுள்ளபடி, சாத்தான் கர்த்தரை நோக்கி, ‘நீர் தேவனுடைய குமாரனாக இருந்தால்,  இந்தக் கல்லை அப்பமாக மாற்றச் சொல்லும்’ என்று. அங்கே சாத்தான் கட்டளையிடுகிறான் ஆனால் நீங்கள் மன்றாடுகிறான்  என்று சொல்கிறீர்கள். தேவனுடைய குமாரனின் ஒரு வார்த்தையால், ஒரு அடிப்படைப் பொருளின் சாராம்சம் சிக்கலான ஒன்றாக மாறக்கூடும் என்று சாத்தான் அறிந்திருக்கிறான். தேவனுடைய குமாரன் ஒரு வேண்டுகோள் விடுக்காவிட்டால், அவருடைய சித்தம் கூட நிறைவேறாது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். மீண்டும் ஒருமுறை, தேவனுடைய குமாரன் தனது வல்லமைக்காக மதிக்கப்பட வேண்டும் என்று சாத்தான் நம்புகிறான், அதே நேரத்தில் அவர் தனது பலவீனத்திற்காக மதிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆரியர்களின் வாதங்களை விட பிசாசின் சோதனைகளைத் தாங்குவது எளிது போலிருக்கிறது.

33. “இந்த உலகத்தில் எந்த ஆட்சியாளனும் இந்த ஞானத்தைப் புரிந்துகொண்டிருக்கவில்லை. அவர்கள் அதனைப் புரிந்து கொண்டிருந்தால் மகிமையின் கர்த்தரை சிலுவையில் கொன்றிருக்கமாட்டார்கள்” என்ற 1 கொரிந்தியர் 2:8 இற்கு அமைவாக, மனுஷகுமாரன் ஒரு இடத்தில் வல்லமையுள்ளவர் என்றும், மகிமையின் கர்த்தர் மற்றொரு இடத்தில் சிலுவையில் அறையப்பட்டதாகவும் நாம் படிக்கும்போது நாம் கவலைப்பட வேண்டியதில்லை. பரலோகத்தின் வல்லமையை ஆளுவதை விட அபாரமான சக்தி வேறு என்ன இருக்கிறது? இருப்பினும், இந்த வல்லமை சிங்காசனங்கள், துரைத்தனங்கள் மற்றும் தேவதூதர்களை ஆளுபவரின் கைகளில் உள்ளது; ஏனென்றால், அவர் காட்டு மிருகங்கள் மத்தியில் இருந்தபோதிலும், தேவதூதர்கள் அவருக்கு சேவை செய்தனர். எனவே அவதாரத்திற்குரியதற்கும் இறையாண்மைக்கு உரியதற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை நீங்கள் காணலாம். அவருடைய சரீரத்தைப் பொறுத்தவரை, அவர் காட்டு மிருகங்களின் தாக்குதலைத் தாங்குகிறார்; அவருடைய தெய்வீகத் தன்மையைப் பொறுத்தவரை, அவர் தேவதூதர்களால் வணங்கித் துதிக்கப்படுகிறார்.

34. இவ்வாறு அவர் ஒரு மனிதரானார் என்பதையும், அவர் மனிதனாக மாறுவதை அவரது மனிதகுலத்தின் அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் நாம் கற்றுக்கொண்டோம். அத்தோடு, வேதாகமத்தின் மற்றொரு பகுதியில் ரோமர் 1:3 இப்படிக் கூறுகிறது: ‘ஒரு மனிதனைப் போன்று அவர் தாவீதின் வம்சத்தில் இருந்து பிறந்தார்’ என்று. இதன் பொருள், அவரது தன் சரீர  வடிவத்தின் அடிப்படையில், அவர் தாவீதின் வம்சத்தில் இருந்து வந்தார், அதேநேரம் அவர் கடவுளாகவும் இருந்தார், உலகம் படைக்கப்படுவதற்கு முன்பே கடவுளிடமிருந்து பிறந்தார்.

அத்தியாயம் 5

வேதாகமத்தின் பகுதிகள், “உருவாக்கப்பட்ட” என்ற வார்த்தை எப்போதும் “படைக்கப்பட்ட” என்று அர்த்தமல்ல என்பதைக் காட்டுகின்றன. எனவே, யூதர்களைப் போலவே, பரிசுத்த வேதாகமத்தின் வார்த்தைகளை வஞ்சக வாதங்களுக்கு அடிப்படையாக மாற்றக்கூடாது என்று முடிவு செய்யப்படுகிறது. இருப்பினும், அவர்கள் மதவெறியர்களைப் போல மோசமானவர்கள் அல்ல என்ற அடிப்படையில், ஏற்கனவே முன்வைக்கப்பட்ட கொள்கை புதிதாக உறுதிப்படுத்தப்படுகிறது

35. அதே நேரத்தில், மாறுதல் என்பது எப்போதும் படைப்பைக் குறிப்பதில்லை; இதுகுறித்து நாம் மேலும் படிக்கும் போது: ஆண்டவரே, நீர் எங்கள் அடைக்கலமாகிவிட்டீர், நீர் என் இரட்சிப்பாகிவிட்டீர். தெளிவாக, இங்கே ஒரு படைப்பின் உண்மை அல்லது நோக்கம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை, ஆனால் கடவுள் என் அடைக்கலமாகி என் இரட்சிப்புக்குத் திரும்பியதாக விவரிக்கப்படுகிறார், அப்போஸ்தலன் கூறியதாக 1 கொரிந்தியர் 1:30 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ‘உங்களைக் கிறிஸ்து இயேசுவின் ஒரு பாகமாகும்படி செய்தவர் தேவனே, தேவனிடம் இருந்து கிறிஸ்து நமக்கு ஞானமாக இருக்கிறார்’ என்பதற்கிணங்க, கடவுளிடமிருந்து ஞானம், நீதி, பரிசுத்தப்படுத்துதல் மற்றும் மீட்பு; அதாவது கிறிஸ்து பிதாவால் நமக்காகப் படைக்கப்பட்டார், உண்டாக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. மேலும், கிறிஸ்து நமக்கென்றே ஞானமாக மாற்றப்பட்டார் என்று கூறும் எழுத்தாளர் பின்னர் என்ன அர்த்தத்தில் அது பற்றிக் கூறினார் என்பதையும் இங்கே  தெளிவுபடுத்துகிறார்: நாம் கடவுளின் ஞானத்தை புனிதமான கோட்பாடாகப் பிரசங்கிக்கிறோம். இதிலே ஞானமும் உள்ளடக்கப் பட்டிருக்கிறது. எமது மகிமைக்கான உலகத்தின்  இருப்பு என்பது முன்பே கடவுளால் இது தீர்மானிக்கப்பட்டது. இதுகுறித்து இந்த உலகத்தின் ஆட்சியாளர்கள் எவரும் புரிந்து கொள்ளவில்லை, ஒருவேளை அவர்கள் அறிந்திருந்தால், மகிமையின் இறைவனை ஒருபோதும் சிலுவையில் அறைந்திருக்க மாட்டார்கள். பாடுகளின் மறைபொருளானது வெளிப்படும்போது, நிச்சயமாக ​​தலைமுறையின் நித்திய செயல்முறை பற்றி  எந்தப் பேச்சும் அங்கு காணப்படவில்லை.

36. அப்படியானால் கர்த்தருடைய சிலுவையே என் ஞானம், கர்த்தருடைய மரணமே என் மீட்பு. 1 பேதுரு 1:19 இல் பேதுரு கூறுவது போல், ‘குற்றம் குறையில்லாத செம்மறிப் பிருவையான இயேசு கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற இரத்தத்தினால் நாம் மீட்கப்பட்டோம்.’ ஒரு மனிதனாக, அவருடைய திரு இரத்தத்தின் மூலம் கர்த்தர் நம்மை மீட்டார். மேலும் மாற்கு 2:8-12 இல் ‘மனித குமாரனுக்குப் பூமியிலே பாவங்களை மன்னிக்கிற அதிகாரம் உண்டு’ என்று கூறப்பட்டுள்ளது.

37. எனவே, வார்த்தைப் பொறிகளில் சிக்கிக் கொள்ளாமல், அவற்றில் உள்ள சிக்கல்களைத் தேடுவோம்; விசுவாசிகள் அல்லாதவர்கள் அதன் அர்த்தத்தைத் திரித்துக் கூறி எழுதப்பட்ட வார்த்தையை நாம் ஆழமான அர்த்தத்துடன் எடுத்துக்கொள்ளாமல், இந்தக் கடிதத்தின் பின்னால் காணப்படும் முக்கியத்துவத்தில் கவனம் செலுத்த வேண்டும். மறைக்கப்பட்ட அர்த்தங்களைப் புறக்கணித்து, நேரடி வார்த்தைகளை மட்டுமே கவனித்ததன் மூலம் யூதர்கள் அழிவை எதிர்கொண்டனர், ஏனென்றால் ‘எழுத்துப் பூர்வமான சட்டம் மரணத்தைக் கொண்டு வருகிறது. ஆனால் ஆவியோ வாழ்வைத் தருகிறது’ என்று  2 கொரிந்தியர் 3:6 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

38. இருப்பினும், இந்த இரண்டு கொடிய பாவங்களில், மனிதனுக்கு மட்டுமே உரியதை தெய்வீகத்திற்குக் கூறுவது, எழுத்து பூர்வ சட்டத்துக்கு மட்டுமே உரியதை ஆவிக்குக் கூறுவதை விட அருவருப்பானது. கடவுளுக்குள் எடுத்துக்கொள்ளப்பட்ட மனிதத்தன்மையை நம்ப யூதர்கள் பயந்தார்கள் எனவே மீட்பின் கிருபையை இழந்துவிட்டார்கள். ஏனெனில் அவர்கள் இரட்சிப்பு சார்ந்திருப்பதை நிராகரித்தார்கள்; இதற்கு மாறாக, ஆரியர்கள், தெய்வீகத்தின் மகத்துவத்தை மனித பலவீனமாகக் குறைத்து மதிப்பிடுகிறார்கள். யூதர்கள் கர்த்தருடைய சரீரத்தை சிலுவையில் அறைந்ததில் தவறாகச் செயல்பட்டாலும், கிறிஸ்துவின் தெய்வீகம் சிலுவையில் அறையப்பட்டது என்று நம்புவது இன்னும் மோசமானது என்று நான் நினைக்கிறேன். அப்படிப்பட்டவர்களை வெறுப்பது சரியென்றே எனக்குப் படுகிறது. எனவே, யூதர்களுடன் அடிக்கடி தொடர்பு கொண்ட ஒருவராக இருந்த தீத்து, தனது 3:10 வாசகங்களில், “ஒரு முறை கண்டித்து, எச்சரிக்கை செய்த பிறகு, அதற்கு செவிகொடாத மதவெறியரைத் தவிர்க்கவும்” என்று கூறுகிறார்.

39. கிறிஸ்து நமது ஞானமாக மாற்றப்பட்டார் என்ற கருத்தை தவறாகப் புரிந்துகொள்ளும்போது, ​​குறிப்பாக எல்லா காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்ட அவரது புரிந்துகொள்ளமுடியாத தலைமுறையைப் பொறுத்தவரை, தந்தையை அவமதிக்காமல் இருப்பதில் இந்த நபர்கள் கவனமாக இருக்க வேண்டும். குமாரனை அவமதிப்பது அடிப்படையில் பிதாவை அவமதிப்பது என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். மேலும் பிதாவைத் தூஷிப்பதன் மூலம் அவர்கள் தங்கள் தேவ நிந்தனையை மேலும் அதிகரிக்கிறார்கள். ஏனென்றால், அவரைப் பற்றி இவ்வாறு கூறப்படுகிறது: “உலகில் உள்ள அத்தனை மக்களும் பொய்யராகிப் போனாலும் தேவன் தொடர்ந்து உண்மையுள்ளவராகவே இருப்பார்’ என்று  ரோமர் 3:4 கூறுகிறது. அவர்கள் குமாரனைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று உண்மையிலேயே எண்ணினார்களானால், அவர்கள் அவருடைய தலைமுறையை மறுக்கவில்லை, ஆனால் இந்த வசனத்தை நம்புவதன் மூலம், அவர்கள் மறுக்க முயற்சிப்பதை உண்மையில் ஒப்புக்கொள்கிறார்கள், அதாவது கிறிஸ்து தான் கடவுள், அவர் உண்மையிலேயே கடவுள்.

40. கடவுள் இயற்கையால் அல்ல, கிருபையால் படைக்கப்பட்டவர் என்று நாம் படிக்கும் ஒவ்வொரு பகுதியையும் மறுபரிசீலனை செய்ய நீண்ட நேரம் எடுக்கும். யாத்திராகமம் 15:2 இல், மோயீசன் ‘என்னைக் காப்பாற்ற நீர் என் உதவியாளராகவும் பாதுகாவலராகவும் இருக்கிறீர்’ என்று கூறுகிறார். தாவீது கூறுவதையும் பார்க்கலாம்; ‘நீர் என்னைக் காப்பாற்ற எனக்கு இரட்சிப்பின் கடவுளாகவும் அடைக்கல வீடாகவும் இருக்கிறீர்’ என்று. மேலும் ஏசாயா 25:4 இல் கூறுவதையும் நோக்குவோம்: ‘அவர் தாழ்ந்த பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு நகரத்திற்கும் உதவியாளராகி விட்டார்’ என்று. உண்மையில் பரிசுத்தவான்கள் கடவுளிடம்: நீர் படைக்கப்பட்டீர், மாறாக, உமது கிருபையினால், நீர் எங்கள் பாதுகாவலராகவும் உதவியாளராகவும் மாறிவிட்டீர் என்று சொல்வதில்லை.

அத்தியாயம் 6

புனித யோவானின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆட்சேபனையைச் சமாளிக்க, ஆரியரின் விளக்கம் மணீக்கியர்களை ஆதரிக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் புனித அம்புரோஸ் தொடங்குகிறார். பின்னர், அதே பகுதியில் உள்ள வார்த்தைகளை பிரிப்பதற்கு பல்வேறு வழிகளை விளக்கிய பிறகு, பிதாவுக்கு அவமரியாதை ஏற்படுத்தாமல் ஆரியர்கள் பரிந்துரைக்கும் விதத்தில் அதைப் புரிந்து கொள்ள முடியாது என்பதை அவர் தெளிவாகக் காட்டுகிறார், மேலும் அதன் உண்மையான அர்த்தத்தை அவர் விரிவாகக் கூறுகிறார்.

41. ஆகையால், அரியர்கள் தங்கள் பொறுப்பற்ற முறையில் சொல்வது போல், கடவுளின் வார்த்தை உருவாக்கப்பட்டது என்பதைக் காட்டும் வாதத்தைக் கண்டு நாம் பயப்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை, ஏனென்றால், “அவரில் வாழ்க்கை உண்டாக்கப்பட்டது” என்று எழுதப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

42. முதலில், “உருவாக்கப்பட்டவர்” என்ற சொற்றொடரை கடவுளைச் சுட்டிக்காட்டப் பயன்படுத்தினால், மணீக்கியர்கள் தாங்கள் எழுப்பிய பிரச்சினைகளில் தாங்களே சிக்கிக் கொள்ளப்போகிறார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த மக்கள், “அவரில் படைக்கப் பட்டது தான் வாழ்க்கை என்று வாதிட்டால், அவரில் படைக்கப்படாத ஒன்று இருக்க வேண்டும் அல்லவா? அது ஏன் மரணமாக இருக்கக்கூடாது? இது இரண்டு கொள்கைகளையும்  தவறாக அறிமுகப்படுத்த அவர்கள் முயன்றிருக்கக்கூடும். இருப்பினும், திருச்சபை இந்த போதனையை நிராகரித்துவிட்டது.

43. மீண்டும், சுவிசேஷகர் உண்மையில் இதைச் சொன்னார் என்பதை ஆரியர்களால் எவ்வாறு நிரூபிக்க முடியும்? விசுவாசிகள் மத்தியில் வாழும் கற்றவர்கள் பெரும்பாலானோர் இந்தப் பகுதியை பின்வருமாறு வாசிக்கிறார்கள்: சகலமும் அவரால் தான் உண்டாயிற்று, அவரில்லாமல் இருப்பில் காணப்படுவது எதுவும் இல்லை என்று. அதேநேரம், மற்றவர்களோ, ‘எல்லாம் அவரால் உண்டாயின, அவரில்லாமல் எதுவும் படைக்கப்படவில்லை, என்கிறார்கள். பின்னர் அவர்கள் “அவரில்” என்றால் என்ன என்று கேட்கிறார்கள். படைக்கப்பட்ட அனைத்தும் அவரில் இருக்கிறது என்று அவர்கள் நினைக்கிறார்கள். அப்படியென்றால், “அவரில்” என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தம் என்ன? அப்போஸ்தலன், இதை அப்போஸ்தலர் பணிகள் 17:28 இல் இப்படி விளக்குகிறார், “நாம் அவரோடு வாழ்கிறோம், அவரோடு நடக்கிறோம், அவரோடு இருக்கிறோம்” என்று.

44. இருப்பினும், அவர்கள் விரும்பியபடி பத்தியைப் படிக்கட்டும், கடவுளின் மகத்துவத்தை வார்த்தையாகக் குறைத்து மதிப்பிட முடியாது, அவரை ஒரு நபராக, ஒரு பொருளாக, பிதாவாகிய கடவுளை அவமதிக்காமல் உருவாக்கப்பட்ட வார்த்தைகள் என்று குறிப்பிடுவதன் மூலம், அவரைப் பற்றி யோவான் 3:21 இல் “சத்தியத்தின் வழியைப் பின்தொடர்ந்து செல்கிறவர்கள் ஒளியிடம் வந்தடைகிறார்கள். பிறகு, அந்த ஒளி அவர்கள் செய்த செயல்கள் தேவன் மூலமாகச் செய்த நற்செயல்கள் எனக் காட்டும்” என்று கூறப்பட்டுள்ளது. மனிதனால் செய்யப்படும் கிரியைகள் யாவும் கடவுளால் தான் செய்யப்படுகின்றன என்பதை இங்கே நாம் படித்து அறிந்துகொள்கிறோம். ஆனால் இன்னும் தெய்வீகம் தான் அவற்றின் மூலமாக இருக்கிறது என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியாதிருக்கிறது. அப்போஸ்தலன் சொல்வது போல், அவர் மூலமாகவே எல்லாமே நடந்தேறின, அவரால் தான் சகலமும் படைக்கப்பட்டன, அவர் தான் எல்லாருக்கும் முன் தோன்றியவர், எல்லாம் அவரிடம் தான் உள்ளன என்பதால் அவர் மூலம் செய்யப்பட்ட செயல்கள் யாவற்றையும் நாம் அங்கீகரிக்க வேண்டும், அல்லது, இங்கே மேற்கோள் காட்டப்பட்டுள்ள உரையின் சாட்சி நமக்குக் கற்பிப்பது போல, கடவுளால் உருவாக்கப்பட்ட நித்திய ஜீவனுக்கு நம்மை இட்டுச்செல்லக்கூடிய நற்பண்புகளான கற்பு, பக்தி, இறைமை, நம்பிக்கை மற்றும் கடவுளின் விருப்பத்தை பிரதிபலிக்கும் ஒழுக்கவிதிகளை நாம் கடைபிடிக்க வேண்டும்.

45. வேதாகமத்தில் நாம் காண்கின்றபடி, செயல்கள் பிதாவாகிய தேவனுடைய சித்தத்தையும் வல்லமையையும் பிரதிபலிப்பவை, அவை கிறிஸ்துவின் சித்தத்தையும் பிரதிபலிக்கின்றன. இதுகுறித்து எபேசியர் 2:10 இல் “நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே தேவன் நம்மைப் படைத்தார். நாம் நற்செயல்கள் செய்யும்படி கிறிஸ்துவுக்குள் நம்மைப் புதிய மக்களாக்கினார். தேவன் ஏற்கெனவே நமக்காக அந்நற்செயல்கள் பற்றித் திட்டமிட்டிருக்கிறார். நமது வாழ்வு அந்நற்செயல்களோடு இணைய வேண்டும் என்பதே தேவனின் திட்டமாகும்” என்று விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆகவே நற்கிரியைகள் யாவும் கிறிஸ்துவால் படைக்கப்பட்டவை. சங்கீதத்தில்: உம்முடைய வல்லமையால் சமாதானம் நிலைநாட்டப்படட்டும் என்றும், நீர் அவைகளையெல்லாம் ஞானத்தில் உண்டாக்கினீர் என்றும் கூறப்பட்டுள்ளது. அது மேலும் சொல்வதைக் கவனியுங்கள் – ஞானத்தைக் கொண்டு நீர் உண்டாக்கினீர், நீர் ஞானத்தையும் உண்டாக்கினீர்; ஏனென்றால், எல்லாம் ஞானத்தினால் படைக்கப்பட்டிருப்பதாலும், கிறிஸ்து கடவுளின் ஞானத்தை கொண்டிருப்பதாலும், இந்த ஞானம் என்பது வெறும் தற்செயலான நிகழ்வு அல்ல, அடிப்படையான மற்றும் நித்தியமான ஒரு பொருளாகிறது. இருப்பினும், ஞானம் படைக்கப்பட்டிருந்தால், அது மற்ற எல்லாவற்றையும் விடக் குறைவான நிலையிலேயே இருந்திருக்கும், காரணம், அது தானாகவே ஞானமாக மாற முடியாது. எனவே, படைப்பு என்பது ஒரு பொருளின் உண்மையான சாரத்தைப் பார்க்கிலும், தற்செயலான ஒன்றோடு இணைக்கப்பட்டிருக்குமானால், அது ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

அத்தியாயம் 7

கர்த்தர் என்னைப் படைத்தார்என்ற சொலமனின் வார்த்தைகள், என்பது, குமாரன் சொல்வது போல், பிதாவாகிய கடவுளின் படைப்பை மீட்பதற்காக கிறிஸ்து மனிதரானார் என்பதைக் காட்டுகிறது. அவரே ஆரம்பம்என்பதை அவரது நல்லொழுக்கத்தில் இருந்து காணக்கூடிய சான்றுகளிலிருந்து புரிந்து கொள்ளலாம். மேலும் இறைவன் எவ்வாறு அனைத்து நல்லொழுக்கங்களின் வழிகளையும் திறந்தார் என்பதையும் அவற்றின் உண்மையான தொடக்கமாக இருந்தார் என்பதையும் இது காட்டுகிறது

46. நீதிமொழிகள் 8:22 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அவதாரத்தின் தீர்க்கதரிசனம், “கர்த்தர் தம்முடைய கிரியைகளுக்காக என்னைத் தம்முடைய வழிகளின் தொடக்கமாகப் படைத்தார்” என்று கூறுகிறது என்பதை நாம் உணருகிறோம். பிதாவின் கிரியைகளை மீட்பதற்காக கர்த்தராகிய இயேசு கன்னிமரியாளின் கருவில் உதயமானார் என்பதை இது குறிக்கிறது. உண்மையில், இது அவதாரத்தின் மறைபொருளைக் குறிக்கிறதா என்பது குறித்து நாம் சந்தேகம் கொள்ள முடியாது. ஏனெனில் அழிவின் அடிமைத்தனத்திலிருந்து படைப்பைக் காப்பாற்ற கர்த்தர் நம்மைப்போன்று சரீர வடிவத்தை எடுத்துக்கொண்டதால், அவர் தம்முடைய சரீரத்தால் அனுபவித்த பாடுகள் மூலம்  மரணத்தின் மீது வல்லமை கொண்டிருந்த சக்தியைத் தோற்கடிக்க அவரால் முடிந்தது. கிறிஸ்துவின் மனித உடலானது படைக்கப்பட்டதன் காரணமாகவே அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் அவருடைய தெய்வீக இயல்பு அவற்றிற்கு முன்பிலிருந்தே இருந்தது; அவர் எல்லாவற்றிற்கும் முன்பே தோன்றியவர், கொலோசெயர் 1:16 சொல்வது போல் ‘பரலோகத்திலும் பூலோகத்திலும் உள்ள அனைத்துப் பொருட்களும் இயேசுவின் வல்லமையால் படைக்கப்பட்டவையாக இருக்கின்றன.’

47. அப்படியானால், அவருடைய தெய்வீகம் படைப்பின் காரணமாக அல்ல, மாறாக படைப்பு தான் தெய்வீகத்தன்மையில் தங்கி உள்ளது; அனைத்தும் கடவுளின் குமாரனால்தான் சாத்தியமாகிறது என்று சொல்வதன் மூலம் அப்போஸ்தலன் எபிரெயர் 2:10, இல், ‘தேவனே அனைத்தையும் படைத்தவர். அனைத்தும் அவரது மகிமைக்காகவே உள்ளன. தன் மகிமையைப் பகிர்ந்துகொள்ள ஏராளமான மக்களை அவர் விரும்பினார்’ என்று சான்றளிப்பதன் ஊடாக, இரட்சிப்பின் தலைவராக, துன்பத்தின் மூலம் பரிபூரணப்படுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது. தம்முடைய தெய்வீகத்தினால் எல்லாவற்றையும் படைத்த கடவுளின் குமாரன், பின்னர் சரீர வடிவத்தை எடுத்து, தம் மக்களின் இரட்சிப்புக்காக மரணத்தை அனுபவித்தார் என்பதை அவர் தெளிவாகக் கூறியிருக்கிறார் அல்லவா?

48. தன்னால் என்னென்ன கிரியைகளை செய்ய முடியும் என்பதைக் காட்ட, கர்த்தர் ஒரு கன்னியின் வயிற்றிலிருந்து பிறந்தார். பார்வையற்றவனைக் குணப்படுத்துகையில், அவர், “என்னை அனுப்பியவரின் சித்தத்தை நான் நிறைவேற்ற வேண்டும்” என்று கூறினார். அவதாரத்தைப் பற்றி நாம் நம்புவதற்கு உதவும் வகையில் அதே வேதாகமத்தின் ஊடாக கர்த்தர் இவ்வாறு பேசினார் என்று யோவான் 9:5 கூறுகிறது: “நான் உலகத்தில் இருக்கும்வரை உலகத்துக்கு நானே ஒளியாக இருக்கிறேன்” என்று. இதன் பொருள், ஒரு மனிதனாக அவர் சிறிது காலம் உலகத்தில் வாழ்ந்தார், ஆனால் கடவுளாக அவர் சதாகாலத்துக்கும் வாழ்கிறார். மற்றொரு இடத்தில், அவர் “நான் உங்களுக்குக் கூறிய அனைத்தையும் அவர்களும் பின்பற்றும்படி போதனை செய்யுங்கள். நான் எப்பொழுதும் உங்களுடனேயே இருப்பேன் என்பதில் உறுதியாயிருங்கள். உலகின் முடிவுவரையிலும் நான் உங்களுடன் தொடர்ந்து இருப்பேன்” என்கிறது மத்தேயு 28:20.

49. தொடக்கத்தைப் பற்றியும் எந்த சந்தேகமும் இல்லை, ஏனென்றால் அவருடைய பூமிக்குரிய வாழ்க்கையின் போது, “நீர் யார்?” என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, “நான் உங்களுக்குச் சொல்வது போல், ஆரம்பம்” என்று பதிலளித்தார். இது நித்திய தெய்வீகத்தின் இயல்பை மட்டுமல்ல, நல்லொழுக்கத்தில் காணக்கூடிய சான்றுகளையும் குறிக்கிறது, ஏனெனில் இதில் அவர் தன்னை நித்தியமான கடவுள் என்று நிரூபித்துள்ளார்: அவர் எல்லாவற்றின் தொடக்கமாகவும், நல்லொழுக்கத்தின் மூலகர்த்தாவாகவும், திருச்சபையின் அதிபராகவும் இருக்கிறார், வேதாகமம் கூறுவதுபோல, “கிறிஸ்துதான் சரீரத்தின் தலையாக இருக்கிறார் – சரீரம் என்பது திருச்சபையாகும்”  என்று கொலோசெயர் 1:18 ம், “அவர் தான் தொடக்கம், மரித்தோரிலிருந்து முதன்முதலாக அவதரித்தவர்” என்று எபேசியர் 4:15-16 ம் கூறுகிறது.

50. ‘அவருடைய வழிகளின் தொடக்கம்’ என்ற சொற்றொடர் அவர் ஒரு உடலை எடுத்துக்கொள்வதன் மறைபொருளைக் குறிக்கும் அவதாரத்தைப் பற்றிய ஒரு தீர்க்கதரிசனம். கிறிஸ்துவின் அவதாரத்தின் முழு நோக்கமும் நாம் பரலோகத்தை அடைவதற்கான பாதையைத் தெளிவுபடுத்துவதாகும். அவர் இதுகுறித்து எவ்வாறு குறிப்பிடுகிறார் என்பதைக் கவனியுங்கள்: யோவான் 20:17 இல், “நான் என் பிதாவிடமும் உங்களின் பிதாவிடமும் செல்கிறேன். நான் என் தேவனிடமும் உங்களின் தேவனிடமும் திரும்பிப் போகிறேன்” என்ற கர்த்தரின் கூற்று மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அவதாரத்திற்குப் பிறகு சர்வவல்லமையுள்ள பிதா குமாரனுக்காகத் தம்முடைய வழிகளை அமைத்தார் என்பதைத்  தெரியப்படுத்த, தேவதூதர் அழுக்கு ஆடைகளை அணிந்த யோசுவாவிடம், ‘சர்வவல்லமையுள்ள கர்த்தர் கூறிய, “நான் சொல்கிற வழியில் வாழுங்கள்; நான் சொன்னவற்றைச் செய்யுங்கள்” என்று வார்த்தைகள் சகரியா 3:7 இல் குறிப்பிடப் பட்டுள்ளது. எனவே, அந்த அசுத்தமான உடை மனித சரீரத்துக்கு ஏற்புடையதல்ல என்பது பற்றி இங்கே   கூறப்படவில்லை என்றால் இங்கே வேறு என்ன அர்த்தம் இருக்கக்கூடும்?

51. கர்த்தருடைய பாதைகள் என்பது ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்வதற்கான தெளிவான வழிகள், அவை கிறிஸ்துவால் வழிநடத்தப்படுகின்றன. அதனால் தான் கர்த்தரான இயேசு, “நானே வழி, நானே சத்தியம், நானே வாழ்வு. என் மூலமாகத்தான் என் பிதாவிடம் போக முடியும்” என்று அருளியதாக யோவான் 14:6 கூறுகிறது. வழி என்பது கடவுளின் வல்லமையின் செயல், ஏனென்றால் கிறிஸ்துவே நமது வழி, மேலும் அவர் விசுவாசிகளுக்கு மோட்சத்தைத் திறக்கும் ஒரு நல்ல பாதையாக இருக்கிறார். கர்த்தருடைய வழிகள் நேரானவை. வேதாகமம் சொல்வதுபோல், “ஆண்டவரே, உமது வழிகளை எனக்குத் தெரியப் படுத்தும்.” கற்பு என்பது ஒரு வழி, விசுவாசம் என்பது ஒரு வழி, மதுவில் இருந்து விலக்குப் பெறுதல் என்பது மற்றும் ஒரு வழி. அதேபோல், நல்லொழுக்கத்திற்கு ஒரு வழியும் துன்மார்க்கத்திற்கு மற்றுமொரு ஒரு வழியும் இருக்கிறது; ஏனெனில், ‘என்னில் ஏதேனும் கூடாத வழிகள் இருக்கின்றனவா என்று பாருங்கள்” என்று எழுதப்பட்டிருப்பதை இங்கே மேற்கோள் காட்டுவது சிறந்ததாக இருக்கும்.

52. கிறிஸ்துவே நமது நல்லொழுக்கங்களின் ஆணிவேராக இருக்கிறார். அவர் தூய்மையின் ஊற்று – இளம் பெண்கள் ஆண்களின் அரவணைப்பைத் தேடுவதைவிட, கணவர்மாருக்குத் தங்களை அர்பணிப்பதைவிட, பரிசுத்த ஆவியானவரின் ஊழியத்துக்காக அவர்களின் உடல்கள் மற்றும் மனங்களால் தூய்மையைக் கடைபிடித்து வாழக் கற்றுக்கொடுக்கிறார். அவர் சிக்கனத்தின் தொடக்கமாக இருக்கிறார், ஏனென்றால் அவர் செல்வந்தராக இருந்தபோதிலும் எளிமையானவராகவே வாழ்ந்தார் என்று 1 கொரிந்தியர் 8:9 கூறுகிறது. அவர் பொறுமையின் சிகரமாக இருக்கிறார், ஏனென்றால் அவமதிக்கப்பட்டபோது ​​அவர் திரும்பி அவமதிக்கவில்லை; அவர் மீது சாட்டை அடிகள் விழுந்தபோது, ​​அவர் திருப்பி அடிக்கவில்லை. அவர் ஒரு ஊழியனின் வடிவத்தை எடுத்ததன் காரணமாக, பணிவின் இருப்பிடமாக  இருக்கிறார். இருப்பினும் அவர் பிதாவாகிய தேவனுக்கு சமமானவராக இருந்தார். அவரிடமிருந்து வரும் ஒவ்வொரு நல்லொழுக்கமும் அதன் சொந்த இயல்புகளைப் பிரதிபலிப்பதாக இருந்தது.

53. எனவே, இந்த நற்பண்புகளைக் கற்றுக்கொள்ள நமக்கு உதவ, ஒரு பரிசுத்த குமாரன் நமக்குக் கொடுக்கப்பட்டார். அவருடைய வல்லமை அவருடைய தோளில் தாங்கிய சிலுவையுடன் தொடங்கியது. சிலுவை என்பது வலுவான தைரியத்தின் தொடக்கமாகும். மேலும் அது பரிசுத்த வேதசாட்சிகள் மற்றும் புனிதப் போரின் துன்பங்களைத் தாங்குவதற்கான வழியைத் திறந்துவிட்டது.

அத்தியாயம் 8

முன்னர் மேற்கோள் காட்டப்பட்ட ஏசாயா வசனத்தில் இயேசு கடவுளாகவும் மனிதனாகவும் இருப்பதைப் பற்றிய தீர்க்கதரிசனம் விளக்கப்பட்டுள்ளது, மேலும் அது பல்வேறு மதங்களுக்கு எதிரான கொள்கைகளை எவ்வாறு மறுக்கிறது என்பதைக் காட்டுகிறது.

54. ஏசாயா ஆரம்பத்திலிருந்தே இதைக் கண்டு, “ஒரு குழந்தை பிறந்தது, நமக்கு ஒரு மகன் கொடுக்கப்பட்டுள்ளார்” என்று கூறினார். ஞானிகளும் அவ்வாறே தொழுவத்தில் இருந்த குழந்தையைக் கண்டதும், “ஒரு குழந்தை பிறந்தது” என்று சொல்லி, அவரை வணங்கினர். அத்தோடு  தொழுவத்தை நோக்கி நிலைகொண்டிருந்த வால்வெள்ளியைக் கண்டதும், நமக்கு ஒரு மகன் கொடுக்கப்பட்டுள்ளார்” என்று சொன்னார்கள். ஒரு வெகுமதி பூமியிலிருந்தும் மற்றொன்று மோட்சத்திலிருந்தும் வருகிறது, ஆனால் அவை இரண்டும் ஒருவருக்குச் சொந்தமானவை. அதாவது, கடவுள் மற்றும் மனிதன் இரண்டையும் போல, தெய்வீகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல், மனித இயல்பின் முழுமையை எந்த வகையிலும் சிதைக்காமல் அவை அமைந்திருந்தன. அங்கு வந்த ஞானிகள் ஒருவரை வணங்கினர், அதே ஒருவருக்குத்தான் அவர்கள் தங்கள் கொண்டுவந்த சன்மானங்களை வழங்கினர். ஏனெனில், தொழுவத்தில் காணப்பட்ட பாலகன் தான் மோட்சத்தின் இறைவன் என்பதைக் காட்டுவதற்காகவே இவை நடந்தேறின.

55. இரண்டு வினைச்சொற்களும் அவற்றின் முக்கியத்துவத்தில் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதைக் கவனியுங்கள்: ஒரு குழந்தை பிறக்கிறது, ஒரு மகன் கொடுக்கப்படுகிறார். அவர் பிதாவிடமிருந்து பிறந்தாலும், அவர் வழக்கமான பிறப்பின்மூலம் பிறக்கவில்லை, மாறாக நமக்குக் கொடுக்கப்படுகிறார். ஏனென்றால் குமாரன் நமக்காக அல்ல, நாம் தான் குமாரனுக்காக இருக்கிறோம். உண்மையில், அவர் நமக்காகப் பிறக்கவில்லை, நமக்கு முன்பே பிறந்து, எல்லாவற்றையும் படைத்தவராகவும், படைக்கப்பட்டவராகவும் இருக்கிறார்: இப்போதும் முதல் முறையாக அவர் உயிர்ப்பிக்கப்படவில்லை, சதாகாலும் வாழ்ந்தவர்,சதாகாலத்துக்கும் வாழ்பவர். யோவான் 1:1 இல் கூறப்பட்டுள்ளபடி, “உலகம் ஆரம்பிக்கும் முன்பே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனோடு இருந்தது. அந்த வார்த்தை தேவனாக இருந்தது” என்கிறது. ஆகவே, முன்பு இல்லாதது இப்போது நமக்காகப் பிறந்தது. தேவதூதர் மேய்ப்பர்களிடம் பேசியபோது, ​​’அவர் பிறந்தார்’ என்று அறிவித்ததாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது: லூக்கா 2:11 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ‘தாவீதின் நகரில் இன்று உங்கள் இரட்சகர் பிறந்துள்ளார். அவரே கிறிஸ்துவாகிய கர்த்தர்’ என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகையால், முன்பு இல்லாத ஒன்று நமக்காகப் பிறந்தது – குறிப்பாக, கன்னியின் கருவிலிருந்து உதித்த குழந்தை, மரியாளின் கருவிலிருந்து பிறந்த வந்த ஒரு சரீர வடிவம் – ஏனென்றால் இது மனிதன் படைக்கப்பட்ட பிறகு உருவாக்கப்பட்டது, அதேசமயம் [கடவுள்] நமக்கு முன்பிலிருந்தே இருந்தவராக இருக்கிறார்.

56. சில கையெழுத்துப் பிரதிகள் இவ்வாறு கூறுகின்றன: நமக்கு ஒரு குழந்தை பிறந்தது, நமக்கென ஒரு மகன் கொடுக்கப்படுகிறார். இதன் பொருள், கடவுளின் குமாரனாகிய அவர், மரியாளின் கருவிலிருந்து நமக்காகப் பிறந்த குழந்தையாக நமக்குக் கொடுக்கப்படுகிறார். அவர் கொடுக்கப்பட்டதை விளக்கும் தீர்க்கதரிசியின் வார்த்தைகளைக் கேளுங்கள்: “உங்கள் இரட்சிப்பை எங்களுக்குத் தாரும்” என்று. ஆனால் நமக்குக் கொடுக்கப்பட்டது அதைவிட மேலானது. அது பரலோகத்திலிருந்து கொடுக்கப்பட்டது. நாம் ஆவியைப் பற்றியும் படிக்கும்போது, ‘தேவன் நமது இதயங்கள் நிறைய தன் அன்பைப் பொழிந்திருக்கிறார். பரிசுத்த ஆவியானவரின் மூலமாகத் தன் அன்பைக் கொடுத்தார். தேவனிடமிருந்து வந்த பெரிய வரமே பரிசுத்த ஆவியானவர்’ என்று ரோமர் 5:5 கூறுவது கவனிக்கத்தக்கது. ஆகவே பரிசுத்த ஆவியானவரால் அருளப்பட்ட கடவுளின் அன்பு நம் இதயங்களில் பொழியப்படுகிறது.

57. இந்தப் பகுதி பல மதவெறிகளின் மனங்களில் எரிந்துகொண்டு இருக்கக்கூடிய நெருப்பை எவ்வாறு அனைக்கிறது என்பதைக் கவனியுங்கள். குழந்தை நமக்காகப் பிறந்தது, யூதர்களுக்காக அல்ல, மணீக்கியர்களுக்கும் அல்ல, மார்சியோனியர்களுக்குவும் அல்ல. மாறாக, தீர்க்கதரிசி நம்மைப்போன்ற விசுவாசிகளிடம் தான் பேசுகிறார், நம்பிக்கையற்றவர்களிடம் அல்ல. அவர் அனைவருக்காகவும் கருணை காட்டும் நோக்கத்தோடு பிறந்தார், ஆனால் மதவெறியர்களின் துரோக சிந்தையோ அந்தப் பிறப்பு அனைவருக்கும் பயனளிக்கவில்லை என்கிறது. நல்லவர்களைப்போல் கெட்டவர்களுக்காகவும் சூரியன் உதிக்கிறது, ஆனால் சூரிய உதயத்தைப்  பார்க்க முடியாதவர்கள் எப்போதும் அதைக் காண்பதில்லை.

58. குழந்தை பிறந்தாலும், அது அனைவருக்கும் அல்ல, விசுவாசிகளுக்கு மட்டுமே: அதேபோல், குமாரன் விசுவாசிகளுக்குக் கொடுக்கப்படுகிறார், விசுவாசிகள் அல்லாதவர்களுக்கு அல்ல. கடவுளின் குமாரன் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளார், ஆனால் பிறந்து நம்மிடையே இருக்கத் தொடங்கினார் என்று கூறும் ஃபோட்டினியர்களுக்கு அல்ல. மகன் கொடுக்கப்பட்டதை மறுத்து, பிதாவும் குமாரனும் ஒன்றுதான் என்று கூறும் சபெல்லியன்களுக்கு அல்ல. அவர் நமக்குக் கொடுக்கப்பட்டவர், மகன் இரட்சிப்புக்காகக் கொடுக்கப்படவில்லை, மாறாக அடிமைத்தனம் மற்றும் தாழ்ந்தவர்களுக்காகவே அனுப்பப்பட்டார் என்று கூறும் ஆரியர்களுக்கு அல்ல. அவர் தங்களுக்கு ஆலோசகர் இல்லை என்றும் அவருக்கு எதிர்காலத்தைப் பற்றி எதுவும் தெரியாது என்றும் கூறுவதோடு, அவருடைய நித்தியத்தையும் மறுதலிக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் என்ன சொன்னாலும், கடவுளின் வார்த்தை அனைத்துக்கும் மேலான ஒன்றை ஆணித்தரமாகக் கூறுகிறது. யோவான் 1:1-2-ல் கூறப்பட்டுள்ளபடி, “உலகம் தோன்றும் முன்பே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனோடு இருந்தது. அந்த வார்த்தை தேவனாகவே இருந்தது. அவர் (வார்த்தை) தொடக்கக் காலத்திலேயே தேவனோடு இருந்தார்” என்று. இப்போது, ​​நாம் விவாதிக்கும் பகுதிக்குத் திரும்புவோம். ‘ஆதியில் அவர் பூமியைப் படைப்பதற்கு முன், சமுத்திரங்களைப் படைப்பதற்கு முன், அவர் நீரூற்றுகளை உண்டாக்குவதற்கு முன், எல்லா மலைகளும் உண்டாக்கப்படுவதற்கு முன் அவர் என்னைப் பெற்றெடுத்தார்’ என்று வேதாகமம் கூறுகிறது.

அத்தியாயம் 9

சொலமனின் நீதிமொழிகளிலிருந்து முந்தைய மேற்கோள் இன்னும் அதிக விரிவாக்கத்தை வழங்குகிறது

59. சில சமயங்களில் “கர்த்தர் என்னைப் படைத்தார்” என்பது கிறிஸ்துவின் அவதாரத்தைக் குறிக்கிறது என்று நான் எப்படிச் சொல்ல முடியும் என்று நீங்கள் யோசிக்கலாம். ஏனெனில் அவர் அவதாரம் எடுப்பதற்கு முன்பே பிரபஞ்சம் படைக்கப்பட்டது. ஆனால் வேதாகமம் பெரும்பாலும் எதிர்கால நிகழ்வுகளைப் பற்றியும் அவை ஏற்கனவே நடந்திருப்பது போல் பேசுகிறது என்பதையும்  நினைவில் கொள்ளுங்கள். மேலும் அது கிறிஸ்துவின் இரண்டு இயல்புகளான – தெய்வீகம் மற்றும் மனித இயல்பு – அவரில் ஒன்றிணைவதை சுட்டிக்காட்டுகிறது. இதனால் யாரும் அவருடைய தெய்வீகத்தையோ அல்லது அவரது மனித இயல்பையோ மறுக்க மாட்டார்கள்.

60. உதாரணமாக, ஏசாயாவில் நீங்கள் படிக்கலாம்: அதாவது, “ஒரு குழந்தை நமக்காகப் பிறந்தது, ஒரு மகன் நமக்காகக் கொடுக்கப்பட்டார்” என்று கூறுகிறது. மேலும் இங்கே [நீதிமொழிகளில்] தீர்க்கதரிசி முதலில் சரீரத்தின் படைப்பையும் பின்னர் தெய்வீகத்தின் அறிவிப்பையும் காட்டுகிறார். எனவே கிறிஸ்து இரண்டு பேர் அல்ல, ஒருவர் தான் என்பதை நீங்கள் காண்கிறீர்கள். அவர் யுகங்களுக்கெல்லாம் முன்பு பிதாவினின்று பிறந்தவர். பிற்காலத்தில், ஒரு முக்கிய நோக்கத்திற்காக ஒரு கன்னியிடமிருந்து பிறந்தவர். எனவே எல்லா யுகங்களுக்கும் முன்பு பிறந்த நான், ஒரு சிறப்பு நோக்கத்திற்காக ஒரு மரணத்திற்குரிய பெண்ணிலிருந்து பிறந்தவன், என்பதே இதன் பொருள்.

61. மீண்டும், “கர்த்தர் என்னைப் படைத்தார்” என்ற அறிவிப்புக்கு சற்று முன்பு, “நித்தியத்திலிருந்து வந்தவற்றை நான் கூறுவேன்,” என்று அவர் கூறுகிறார். “ஆதியில், அவர் பூமியை உண்டாக்குவதற்கு முன்பு, மலைகள், சமுத்திரங்கள் போன்ற எல்லாவற்றையும் உண்டாக்குவதற்கு முன்” என்று அவர் கூறத் தொடங்கினார். இங்கே “முன்” என்ற வார்த்தை முடிவில்லாத காலத்தைக் குறிக்கிறது மற்றும் கடவுளின் நித்தியத்தைக் காட்டுகிறது. எனவே, ‘ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன்’ என்ற கர்த்தர் இயேசுவின் வார்த்தைகளை யோவான் 8:58 இல் கூறுகிறது. எனவே, இந்த வார்த்தை ‘ஆதாமுக்கு பிறகு’ என்று அர்த்தம் கொள்ளவோ அல்லது ‘விடிகாலை நட்சத்திரத்திற்கு முன்பு’ என்பது ‘தேவதூதர்களுக்குப் பின்பு’ என்று அர்த்தம் கொள்ளவோ வேண்டியதில்லை. ‘முன்பு’ என்று கூறும்போது, ​​அவர் எவருடனும் இருப்பைப் பகிர்ந்து கொள்வதில்லை, சகலதும் அவரில் உள்ளன என்று அவர் அர்த்தப்படுத்துகிறார். பரிசுத்த வேதாகமம் கடவுளின் நித்தியத்தை இவ்வழியில் தான் காட்டுகிறது. மற்றொரு பகுதி இப்படிக் கூறுகிறது: ‘மலைகள் உருவாவதற்கு முன்பு, பூமியும் உலகமும் உருவாக்கப் படுவதற்கு முன்பு, நீர்  நித்தியத்திற்கும் நித்தியமாக இருக்கிறீர்’ என்று.

62. எல்லாப் படைப்புகளும் படைக்கப்பட முன், குமாரன் பிறந்தார். அவர் எல்லாவற்றிலும் நிறைந்து இருக்கிறார், எல்லோரது நன்மைக்காகவும் இருக்கிறார். தேவனுடைய குமாரன் ஒரு பெண்ணினிடத்தில் பிறந்தார். அவரும் விதிமுறைகளின்படியே வாழ்ந்தார் என்று கலாத்தியர் 4:4 ம் அதேபோல், நியாயப்பிரமாணத்திற்கு மேலாக அதாவது, எஜமானனாக இருக்கிறார் என்று மாற்கு 2:28 ம் கூறப்பட்டுள்ளது.

அத்தியாயம் 10

ஸ்நாபக யோவான் (யோவான் 1:30) சொன்னது பற்றிய குறிப்புகள் ஆரம்பத்திலிருந்தே கடவுளின் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளதைக் காணலாம். ஆனால், மேலே விளக்கப்பட்டுள்ளபடி, அவை அவதாரத்தைக் குறிப்பதாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். கிறிஸ்துவின் முன்னுரிமையின் முக்கியத்துவம் குறியீட்டு ரீதியாக விளக்கப்பட்டு ரூத்தின் கதைக்கு இணையாக உள்ளது

63. சிலர் “எனக்குப் பிறகு ஒரு மனிதர் வருவார். அவர் என்னிலும் மேலானவர். ஏனென்றால் அவர் எனக்கு முன்னமே வாழ்ந்து கொண்டிருக்கிறவர். அவர் எப்போதும் வாழ்கிறவர்” என்று  எழுதப்பட்டிருப்பதாக யோவான் 1:30 ஐ மேற்கோள் காட்டி கூறுகிறார்கள். இதன்மூலம், எனக்கு முன் இருந்தவர் “உருவாக்கப்பட்டவர்” என்று அவர்கள் வாதிடுகிறார்கள். “எனக்குப் பிறகு ஒரு மனிதன் வருகிறார்” என்ற வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொள்வோம். வந்தவர் ஒரு மனிதன், இவர் படைக்கப்பட்ட மனிதன். ஆனால் “மனிதன்” என்ற வார்த்தை பாலினக் குறித்து நிற்கிறது என்று பொருள், இது மனித இயல்பிற்குச் சொந்தமானது, தெய்வீகத்திற்கு அல்ல.

64. மனிதனாக அவர் [கிறிஸ்து இயேசு] பிறப்பதற்கு முன்பே ஏதோ ஒரு வகையில் அவரது பிரசன்னம் பூமியில் இருந்தது என்று நான் வாதிடலாம், ஏனென்றால் அவரது சரீர வடிவமானது முன்பே அறியப்பட்டது. மேலும் அவரது வல்லமை நித்தியத்திலிருந்தே காணப்படுகிறது. ஏனெனில் உலகம் தோன்றுவதற்கு முன்பே திருச்சபை மற்றும் புனிதர்கள் முன்னறிவிக்கப்பட்டனர். ஆனால் நான் அந்த வாதத்தை ஒருபக்கம் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, பிரச்சினை தெய்வீகத்தைப் பற்றியது அல்ல, அவதாரத்தின் தன்மை பற்றியது என்று கூறுகிறேன். யோவான் சொன்னது போல் இவரைப் பற்றி நான் சொல்கிறேன், எனக்குப் பிறகு ஒரு மனிதன் வருவார், அவர் எனக்கு முன் படைக்கப்பட்டவர் என்று.

65. நான் முன்னர் குறிப்பிட்டது போல, வேதாகமம் கிறிஸ்துவின் இரட்டை இயல்பை வெளிப்படுத்துவதோடு, அது கடவுள் மற்றும் மனிதன் இருவரின் சகவாழ்வைப் புரிந்துகொள்ள உதவுகிறது. பரிசுத்த வேதாகமம் சில சமயங்களில் கிறிஸ்துவின் தெய்வீகத்துடன் தொடங்கி பின்னர் அவரது அவதாரத்தின் காணக்கூடிய அடையாளங்களுக்குச் செல்வது பொதுவானது என்பதால் இது சரீரத்துடன் தொடங்குகிறது. மற்றைய நேரங்களில், அது அவரது எளிமையுடன்  தொடங்கி தெய்வீகத்தின் மகிமைக்கு உயர்கிறது. இதை நாம் பெரும்பாலும் தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள் மற்றும் புனித பவுலிலும் காண்கிறோம். எனவே, இந்த விஷயத்தில், எழுத்தாளர் நம் ஆண்டவரின் அவதாரத்துடன் தொடங்கி பின்னர் அவரது தெய்வீகத்தைப் பற்றி தொடர்ந்து கூறுவதோடு, மனித மற்றும் தெய்வீக அம்சங்களைக் கலக்காமல் தெளிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளார். இருப்பினும், ஆரியர்கள், யூத திராட்சை இரச தயாரிப்பாளர்களைப் போல, மதுவை தண்ணீரோடு கலந்து அதன் தன்மையை நீர்த்துப்போகச் செய்வதன் மூலம் தெய்வீக தலைமுறைக்கும் மனித இயல்புக்கும் இடையிலான திரைகளை மங்கலாகச் செய்கிறார்கள். கடவுளின் மாட்சிமையைப் பிரதிபலிப்பதற்கு, அவரது தாழ்மையான சரீரத்தைப் பற்றி மட்டுமே குறிப்பிட வேண்டும்.

66. இந்த வார்த்தைகளில் ‘எனக்குப் பின் வரும் ஒரு மனிதன் இருக்கிறார்’ என்ற கூற்று தொடர்பாக மக்கள் எழுப்பக்கூடிய எந்த ஒரு ஆட்சேபனைக்கும் நான் பயப்படப்போவதில்லை. ஆனால் அதற்கு முன்பு என்ன வருகிறது என்பதைப் பற்றிப் பார்ப்போம். யோவான் 1:14 இல், வார்த்தை மாம்சமாக மாறியது என்று கூறப்பட்டுள்ளது. ‘வார்த்தை மாமிசமானது’ என்று சொன்ன பிறகு, சுவிசேஷகர் அங்கு மனிதனைப் பற்றி எந்தக் குறிப்பையும் இணைக்கவில்லை. “மனிதன்” என்பதை “மாமிசம்” என்ற பொருளிலும், “மாமிசம்” என்பதை “மனிதன்” என்ற பொருளிலும் நாம் புரிந்துகொள்கிறோம். வார்த்தை மாம்சமானது என்று கூறிய பிறகு, “மனிதன்” என்பதை மீண்டும் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் அவர் ஏற்கனவே “மாமிசம்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தி அதைக் குறிப்பிட்டிருந்தார்.

67. பின்னர் யோவான், உலகத்தின் பாவங்களைப் போக்கும் செம்மறியை கிறிஸ்துவின் அவதாரத்தைப் பற்றிப் போதிக்க ஒரு உதாரணமாகப் பயன்படுத்துகிறார். அவர், ‘இவர் தான் ‘எனக்குப் பிறகு ஒரு மனிதன் வருகிறார், அவர் எனக்கு முன் படைக்கப்பட்டார்’ என்று நான் முன்பு சொல்லிய அவர். அதாவது அவர் கடவுளாக அல்ல, ஒரு மனிதனாக படைக்கப்பட்டார் என்று. ஆனால் அவர்தான் யுகங்களுக்கெல்லாம் முன்பிருந்தே சரீர வடிவமானார் என்பதைக் காட்டவும், கடவுளின் இரண்டு மகன்மார் இருப்பதாக நாம் நினைப்பதைத் தடுக்கவும் உதவுமென்று அவர் மேலும் கூறுகிறார்: ஏனென்றால் அவர் எனக்கு முன்பிருந்தே இருந்தார். “உருவாக்கப்பட்டார்” என்ற வார்த்தைகள் தெய்வீக பிறப்பைக் குறிக்கின்றன என்றால், எழுத்தாளர் ஏன் இதைச் சேர்க்க வேண்டும்? அல்லது தன்னைத்தானே மீண்டும் சொல்ல வேண்டும்? இருப்பினும், முதலில் அவதாரத்தைப் பற்றி மட்டும் பேசிய பிறகு – ‘எனக்குப் பிறகு ஒரு மனிதன் வருகிறார், அவர் எனக்கு முன் படைக்கப்பட்டார்’ – என்று அவர் மேலும் ஆணித்தரமாகக் கூறுகிறார்: அவர் எனக்கு முன்பிருந்தே இருந்தார், என்று கூறியதன் காரணம், இது (கிறிஸ்துவின்) தெய்வீகத்தின் நித்தியத்தைக் கற்பிக்கத் தேவைப்பட்டது என்பதால். அதனால்தான் புனித யோவான் கிறிஸ்துவுக்கு கொடுக்க வேண்டிய முன்னுரிமையை ஒப்புக்கொண்டார்: அவருடைய சொந்தப் பிதாவின் நித்திய வல்லமையின் பிரதிவடிவமாக இருக்கும் அவரை, அதே காரணத்திற்காக உயர்ந்தவராகக் காட்டப்படுகிறார்.

68. ஆயினும் ஆன்மீக புரிதலின் ஆழமான ஆய்வு, அரியர்களுக்கு அழுத்தம் கொடுத்து, அவர்கள் விடயங்களைத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள் என்பதைக் காட்ட இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது. அவர்கள் இந்தப் பத்தியில் உள்ள வார்த்தையை கிறிஸ்துவின் மனித இயல்பைக் குறிக்க வில்லை, மாறாக அவரது தெய்வீகத்தைக் குறிப்பதாகவே அமைகிறது. ‘எனக்குப் பின் வருபவர் எனக்கு முன்பிருந்தே இருப்பவர்’ என்று ஸ்நாபக யோவான் கூறியபோது, ​​அவர்கள் உண்மையில் அதை எவ்வளவு தூரம் நம்பினர்? இதன் பொருள், அவர் பூமிக்குரிய வாழ்க்கையில் எனக்குப் பின் வந்தாலும், அவர் உண்மையில் என் தகுதிக்கும் கிருபைக்கும் மேலானவர் என்றும், கடவுளாக வணங்கப்படுவதற்குத் தகுதியானவர் என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. ‘எனக்குப் பின் வரும்’ என்ற சொற்றொடர் காலத்தின் ஒரு தருணத்தைக் குறிக்கிறது, ஆனால் ‘எனக்கு முன்பிருந்தே இருப்பவர்’ என்ற பதம் கிறிஸ்துவின் நித்திய இயல்பைக் குறிக்கிறது; மேலும் எனக்கு முன் உண்டாக்கப்பட்டது என்பது அவரது மேன்மையை எடுத்துக் காட்டுகிறது, ஏனெனில் அவதாரத்தின்மறைபொருளானது எந்த மனிதத் தகுதியையும் மிஞ்சவல்லது.

69. ஸ்நாபக யோவான் மீண்டும் அவர்கள் பகிர்ந்து கொண்ட கருத்துக்களைப் பற்றி எளிய வார்த்தைகளில், “எனக்குப் பிறகு ஒரு மனிதன் வருகிறான், அவனுடைய பாதணியின் கச்சைகளைக் கூட அவிழ்க்க நான் தகுதியற்றவன்” என்று கூறியதன் மூலம், அவர் குறைந்தபட்சம் கிறிஸ்துவின் மகத்துவம் மிக்க கண்ணியத்தைக் காட்டுகிறார். இருப்பினும் அவரது தெய்வீக பிறப்பின் நித்திய இயல்பைக் காட்டவில்லை. இந்த வார்த்தைகள் முற்றிலும் அவதாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளன, அந்த அளவுக்கு வேதாகமம் முந்தைய ஒரு புத்தகத்தில், புனிதமான பாதணியைக் குறித்து  விளக்க மனித உதாரணத்தை வழங்கியுள்ளது. சட்டத்தின்படி, ஒரு மனிதன் இறக்கும் பட்சத்தில், வம்ச விருத்தியை முன்கொண்டு செல்லும் வகையில், அந்த விதவையை அடுத்த ஆண் உறவினர் தான் பராமரிக்க வேண்டும் என்கிறது. ரூத், வெளிநாட்டில் பிறந்தவளாக இருந்தாலும், ஒரு யூத மனிதனை மணந்திருந்தாள். அப்போது குடும்ப வம்சாவளியை மீட்டெடுக்கக்கூடிய ஒரு நெருங்கிய உறவினர் அவளது குடும்பத்தில் இருந்தார். ரூத் தன்னையும் அவளுடைய மாமியாரையும் காப்பாற்ற கதிர்களைப் பொறுக்கிச் சேகரித்துக் கொண்டிருந்த போது, போவஸ் அவளைக் கண்டதும் அவளை நேசிக்கத் தொடங்கினான். ஆனால் அவள் முதலில் சட்டத்தின்படி, மனைவியாக இருக்க வேண்டியவரின் காலணியை (காலில் இருந்து) அவிழ்த்துவிட்டாள். அதுவரை அவளை அம்மனிதர் மனைவியாக ஏற்றுக்கொள்ளவில்லை.

70. கதை நேரடியானது, ஆனால் அதன் மறைக்கப்பட்ட அர்த்தங்கள் ஆழமானவை, ஏனெனில் நடந்தது மிகவும் ஆழமான ஒன்றின் அடையாளம் மட்டுமே. நேரடி வார்த்தைகளுடன் பொருந்துமாறு விளக்கத்தை விரிவாகக் கொண்டுசென்றால், அவை பொதுவான சரீரம் தொடர்பான உறவுகளைக் குறிக்கின்றன என்று நினைத்து நாம் அவமானத்தையும் திகைப்பையும் மட்டுமே உணரலாம்; இருப்பினும், அது உண்மையில் யூத கோத்திரத்தில் இருந்து வந்த ஒருவரை – அதாவது கிறிஸ்து சரீரமாய் அவதரித்ததை – முன்னறிவித்தது. அவர் தெய்வீக போதனையின் மூலம் தனது மரித்த உறவுகளுக்கு மக்களுக்கு மீண்டும் வாழ்வைக் கொண்டுவருவார். இவை வாயிலாக, சட்டத்தின் கொள்கைகள், அவர்களின் ஆன்மீக சாராம்சத்தில், திருச்சபையின் ஒன்றியத்தைக் குறிக்கும் திருமணத்தைக் குறிக்கும் காலணிகளை அவருக்கு வழங்கின.

71. மோயீசன் மணவாளன் அல்லர், ஏனென்றால் அவருக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை – “உன் காலிலிருந்து உன் காலணியைக் கழற்றுவாயாக” என்று யாத்திராகமம் 3:5 மேற்கோள் காட்டுகிறது – இந்தக் கட்டளை அவர் தன் ஆண்டவருக்குக் கொடுக்க வேண்டிய உயரிய இடத்தைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகக் கூறப்பட்டது. நூனின் மகனான யோசுவாவும் மணவாளன் அல்லர். ஆனால் யோசுவா 5:16 சொல்லப்பட்டவாறு அவர் தனது பாதரட்சையை கழற்ற அறிவுறுத்தப் பட்டிருந்தாலும்  அதனால் மக்கள் அவரை திருச்சபையின் மணவாட்டி என்று நினைக்க மாட்டார்கள். ஏனென்றால் மணவாளன் கிறிஸ்து மட்டுமே. யோவான் 3:29 இல், அப்போஸ்தலன் “மணவாட்டியை உடையவரே மணவாளன்” என்றார். எனவே மற்றவர்கள் தங்கள் பாதரட்சைகளை கழற்றுகிறார்கள், ஆனால் மணவாளனின் பாதரட்சையைக் கழற்றுவதில்லை என்று ஸ்நாபக யோவான் “அவருடைய பாதரட்சையின் கச்சைகளை அவிழ்க்கக்கூட நான் பாத்திரவான் அல்லன்” (யோவான் 1:27) என்று கூறியிருப்பது இங்கே கவனிக்கத்தக்கது.

72. கிறிஸ்து மட்டுமே மணவாளன், திருச்சபை அவருடைய மணவாட்டி. அந்தத் திருச்சபையானது  சகல தேசங்களிலிருந்தும் வந்து அவருடன் திருமணத்தில் இணைகிறது. ஒரு காலத்தில் ஏழையாகவும் பசியாகவும் இருந்த அவள் இப்போது கிறிஸ்துவின் அறுவடை தந்த பசுமையால் வளமாகவும் நலமாகவும் இருக்கிறாள்; தன் மகனின் மரணத்தால் சோர்வடைந்து துக்கப்படுபவர்களுக்கு உணவளிக்க, அவள் தன் இதயம் என்னும் களஞ்சியத்தில் வளமான பயிர்களையும், வார்த்தையின் போதனைகளையும் சேமித்து வைக்கிறாள். துக்கப்படுகிற மக்களின் தாயாக இருந்தாலும் கூட, அவள் புதிதாகப் பின்தொடர்பவர்களைத் தேடும்போது விதவைகள், ஏழைகள் என்று எவரையும் விட்டுவைக்காது அனைவருக்கும் ஊட்டமளிப்பவளாக இருக்கிறாள்.

73. அப்படியானால், கிறிஸ்து மட்டுமே மணவாளன். ஜெப ஆலயம் தானாகவே தன்னை மூடிக்கொள்ளாமல் இருந்திருந்தால், தம் அறுவடையின் கதிர்களைக் கூட அதற்குள் கொண்டு வருவதில் அவர் எவ்வித வெறுப்பும் கொள்ளாதிருந்திருப்பார். ஆகவே அவள் தனியாக அரிக்கட்டுகளைச் சேகரித்தாள். அவளுடைய மக்கள் இறந்துவிட்ட போதும், மகனை இழந்த ஒரு தாயைப் போல அவள் உயிர்வாழ்வதற்காக, திருச்சபையின் உதவியுடன் தன்னைத் தக்கவைத்துக் கொள்ள அரிக்கட்டுகளைச் சேகரிக்கத் தொடங்கினாள் – அந்த அரிக்கட்டுகளை மகிழ்ச்சியுடன் வருபவர்கள் சுமப்பார்கள்.  வேதாகம வசனங்கள் சொல்வது போல் “நிச்சயமாக அவர்கள் மகிழ்ச்சியுடன் வருவார்கள், தங்கள் கதிர்களை அவர்களுடன் கொண்டு வருவார்கள்” என்று.

74. உண்மையிலேயே, கிறிஸ்துவைத் தவிர வேறு யாருக்குத் திருச்சபையை தனது மணவாட்டி என்று கூறத் துணிச்சல் வரும்? அவர் தவிர எவரால் திருச்சபையைத் தன் மணவாட்டி என்றும், உன்னதப்பாட்டு  4:8 இல் கூறப்பட்டுள்ளது போல, லிபேனசில் இருந்து அழைத்து, “என் மணமகளே, லிபேனசிலிருந்து இங்கே வா” என்று கூறியும், “என் மணமகளே, இங்கே வா” என்று கூற முடியும்?  அல்லது “அவரது வாய் இனிமையுள்ள அனைத்திலும் இனிமையானது, ஆகவே அவர் முற்றிலும் விரும்பத்தக்கவர்” என்று திருச்சபையே சொல்லும்போது, அது வேறு யாரைக் குறிப்பிட்டிருக்க முடியும்? (உன்னதப்பாட்டு 5:16). அவருடைய கால்களின் காலணிகளைப் பற்றிப் பேசி இந்த உரையாடலைத் தொடங்கியதிலிருந்து – அந்த வார்த்தைகள் கடவுளின் அவதார வார்த்தையைத் தவிர வேறு யாரைக் குறிக்க முடியும்? அவரது கால்கள் அழகுள்ள தூண்களைப் போலவும், வெண்கலத்தின் மீது பொன்னைப் போலவும் இருக்கின்றன” என்றும் உன்னதப்பாட்டு  5:15 கூறுகிறது. ஏனென்றால், கிறிஸ்து மட்டுமே ஆன்மாக்களுக்குள் வாசம் செய்து, தனது புனிதர்களின் மனதில் அவரைத் தொடரும் பாதையை செப்பனிடுகிறார். அங்கு, தங்கத்தால் ஆன அடித்தளங்கள் போல, விலைமதிப்பற்ற கற்களைக் கொண்டு பதிக்கப்பட்ட அடித்தளங்களைப் போல, பரலோக வார்த்தையானது அவரது அடையாளங்களை, நீடித்த தடயங்களாக விட்டுச் சென்றுள்ளது.

75. மனிதனையும் அவதாரத்தின் மறைபொருளைச் சுட்டிக்காட்டும் விதத்தையும் நாம் தெளிவாகக் காண்கிறோம்.

அத்தியாயம் 11

புனித அம்ப்ரோஸ் முக்கிய கேள்விக்குத் திரும்பி, கிறிஸ்து படைக்கப்பட்டார் (அல்லது ஆனார்) என்று நாம் கூறும்போது, ​​அது அவரது அவதாரத்தை அல்லது சில வரம்புகளைக் குறிக்கிறது என்பதைக் காட்டுகிறது. அவர் பல வேதாகமத்தின் பகுதிகளை, குறிப்பாக பவுலின் விளக்கத்தை விளக்குவதோடு கிறிஸ்துவின் நித்திய ஆசாரியத்துவம் மெல்கிசேதேக்கால் முன்னறிவிக்கப்பட்டது  என்பதைக் காட்டுகிறார். கிறிஸ்துவுக்கு பிதாவின் சாயல் மட்டுமல்ல, பிதாவுடன் ஒற்றுமையும் உள்ளது

76. இவ்வாறு, கிறிஸ்து படைக்கப்பட்டார் அல்லது ஏதோ ஒரு பொருளாக மாறிவிட்டார் என்று கூறப்படும்போது, ​​அந்த வார்த்தைகள் தெய்வீகத்தின் தன்மையைக் குறிக்கவில்லை. அவை  முக்கியமாக ஒரு அவதாரத்தையோ அல்லது சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட அந்தஸ்தையோ குறிக்கின்றன. நீங்கள் அதை அவருடைய தெய்வீகத்தைக் குறிப்பதாகப் புரிந்து கொண்டால், கடவுள் அவமதிப்புக்கும் ஏளனத்துக்கும் ஆளாக்கப்படுவார். ஏனென்றால் அது இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: நீங்கள் உங்கள் கிறிஸ்துவை நிராகரித்து, அவரை ஒன்றுமில்லாமல் செய்தீர்கள்; நீங்கள் அவரை விரட்டினீர்கள். அவர் அவருடைய அயலவர்களால் கேலிக்குரியவராக ஆக்கப்பட்டார். அயலவர் என்று நான் அவருடைய வீட்டில் உள்ளவர்களையோ அல்லது அவரைப் பற்றிக்கொண்டவர்களையோ குறிக்கவில்லை. 1 கொரிந்தியர் 6:17 கூறுவது போல், “தேவனோடு தன்னை இணைக்கிற மனிதன் ஆவியில் அவரோடு ஒன்றுபடுகிறான்’ என்கிறது. மேலும், “கிறிஸ்து சிலுவையின் அறையப்பட்டு கொல்லப்பட்டார். இது யூதர்களின் நம்பிக்கைக்கு ஒரு பெரிய தடையாகும். யூதர்களைத் தவிர பிறருக்கு இது மடமையாகத் தோன்றும்” என்கிறது 1 கொரிந்தியர் 1:23. ஆனால் ஞானிகளுக்கு, அதே சிலுவையால் அவர் விண்ணை விட உயர்ந்தவராகவும், தேவதூதர்களை விட உயர்ந்தவராகவும் இருக்கிறார். மேலும் அவர் முதல் உடன்படிக்கையின் மத்தியஸ்தராக இருந்தது போலவே, சிறந்த உடன்படிக்கையின் மத்தியஸ்தராகவும் ஆக்கப்பட்டுள்ளார்.

77. இப்போது நான் அந்த சொற்றொடரை எப்படி மீண்டும் சொல்கிறேன் என்பதையும் நான் அதைத் தவிர்க்க முயற்சிப்பதில்லை என்பதையும், ஆனாலும் அவர் எந்த அர்த்தத்தில் படைக்கப்பட்டுள்ளார் என்பதையிட்டு நான் கூறுவதையும் கவனியுங்கள்.

78. முதலாவதாக, அவர் சுத்திகரிக்கப்பட்ட பிறகு, எபிரெயர் 1:3-4 கூறுவது போல், தேவதூதர்களை விட மிகச் சிறந்தவராக பரலோகத்தில் கடவுளின் வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார். சுத்திகரிப்பு இருக்கும் இடத்தில், ஒரு பாதிக்கப்பட்டவர் இருக்கிறார்; ஒரு பாதிக்கப்பட்டவர் இருக்கும் இடத்தில், ஒரு உடல் இருக்கிறது; ஒரு உடல் இருக்கும் இடத்தில், ஒரு ஒப்புக்கொடுத்தல் இருக்கிறது; ஒப்புக்கொடுத்தல் இருக்கும் இடத்தில் துன்பத்துடன் கூடிய பலியும் இருக்கிறது.

79. அடுத்து, அவர் ஒரு உயர்ந்த உடன்படிக்கையின் மத்தியஸ்தராக பணியாற்றுகிறார். இருப்பினும், ஒரு சாசனம் நடைமுறைக்கு வர, சாசனம் எழுதுபவர் சிறிது நேரம் கழித்து குறிப்பிடப்பட்டபடி முதலில் இறக்க வேண்டும். ஆனால் நினைவில் கொள்ளுங்கள், இந்த மரணம் அவரது நித்திய தெய்வீகத்தின் முடிவு அல்ல; இது அவரது பலவீனமான மனித உடலின் மறைவு மட்டுமே.

80. மேலும், அவர் வானங்களுக்கு மேலே உயர்ந்த உன்னதர் என்பதை நாம் அறிகிறோம். ‘அவர் பரிசுத்தமானவர், மாசற்றவர், பாவிகளிடமிருந்து வேறுபட்டவர், பரலோகத்தில் மேலான நிலைக்கு உயர்த்தப்பட்டார்’ என்று (எபிரேயர் 7:26-27) கூறுகிறது. முதலில் தங்கள் சொந்த பாவங்களுக்காகவும் பின்னர் மக்களுக்காகவும் பலிகளைச் செலுத்த வேண்டிய ஆசாரியர்களைப் போலல்லாமல், அவர் ஒரு முறை எல்லாவற்றுக்கும் தன்னையே பலியாகக் கொடுத்ததன் மூலம் இதைச் சாதித்தார். ஏதோ ஒரு வகையில் தாழ்ந்தவர்களாக இருந்தாலொழிய யாரும் உயர்ந்தவர்கள் என்று கூறப்படுவதில்லை; ஆனால், கிறிஸ்து, பிதாவின் வலது பக்கத்தில் வீற்றிருப்பதன் மூலம், தேவதூதர்களை விடத் தாழ்ந்தவராகி, பாடுகளைத் தாங்கத் தம்மையே ஒப்புக்கொடுத்தார் என்ற அர்த்தத்தில் உன்னதராக உயர்ந்து நிற்கின்றார்.

81. இறுதியாக, அப்போஸ்தலன் பிலிப்பியருக்கு, இயேசு கடவுளின் வடிவத்தில் இருந்தபோதிலும், ஒரு ஊழியரின் வடிவத்தை எடுத்து ஒரு மனிதனாகத் தோன்றினார் என்று கூறுகிறார். அவர் மரணம் வரை, சிலுவையில் மரணிக்கும்வரை கூட கீழ்ப்படிந்ததன் மூலம் தன்னைத் தாழ்த்திக்கொண்ட ஒருவராக இருந்தார் என்று பிலிப்பியர் 2:7-8 கூறுகிறது. மனிதனின் சாயலில் அவரை உருவாக்கியது தெய்வீக இறையாண்மையைப் பற்றியது அல்ல, மாறாக அவர் மனிதர்களுக்குரிய கீழ்ப்படிதலைக் காட்டவும் கடவுளுக்குச் சொந்தமான இராச்சியத்தைப் பெறவும் மரணம் வரை கீழ்ப்படிந்தவராக இருந்தார்.

82. அவர் படைக்கப்பட்டிருப்பது அவரது அவதாரத்தைக் குறிக்கிறது அல்லது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைக் குறிக்கிறது என்பதைக் காட்ட எத்தனை பகுதிகளை நாம் மேற்கோள் காட்ட வேண்டியிருக்கிறது? படைக்கப்பட்ட அனைத்தும் படைக்கப்பட்டவை. அவரது கட்டளையின் காரணமாக அவை இருப்பு நிலைக்கு வந்தன; அவர் வார்த்தையை அருளினார், அவை படைக்கப்பட்டன. அதேபோலத்தான் கர்த்தர் என்னையும் படைத்தார். இந்த வார்த்தைகள் அவரது மனித இயல்பைக் குறிக்கின்றன. அத்தோடு, எங்கள் முதல் புத்தகத்தில் ‘படைக்கப்பட்ட’ என்ற வார்த்தை அவதாரத்தைக் குறிக்கிறது என்பதையும் காட்டி இருந்தோம்.

83. மீண்டும், அப்போஸ்தலன் மேற்கோள் காட்டுவதுபோல, படைக்கப்பட்ட ஒரு உயிரினத்திற்கு எந்த வழிபாடும் செய்யக்கூடாது என்று அறிவிப்பதன் மூலம், குமாரன் கடவுளால் படைக்கப்படவில்லை, ஆனால் அவரால் பிறப்பிக்கப்பட்டவர் என்பதைக் காட்டியுள்ளார், என்று ரோமர் 1:25 கூறுகிறது. அதே நேரத்தில், சொலமனின் புத்தகத்தில் “கர்த்தர் என்னைப் படைத்தார்” என்ற கூற்றின் வாயிலாக அவர் எதனை அர்த்தப்படுத்துகிறார் என்பதை விளக்குமுகமாக, மற்ற இடங்களில் கிறிஸ்துவில் ஏதோ ஒன்று படைக்கப்பட்டது என்பதைக் காட்டுகிறார்.

84. இப்போது ஒரு முழுப் பகுதியையும் வரிசையாக மீள்பரிசீலனை செய்வோம். “இரத்தத்தாலும் சதையாலும் ஆன உடலைக்கொண்ட மக்களே அவர்கள். ஆகவே இயேசுவும், அவர்களைப் போன்றே மாறி அவர்களைப் போன்றே அனுபவத்தையும் பெற்றார். மரண அதிகாரத்தைத் தன்னோடு வைத்திருக்கிற பிசாசை தனது மரணத்தின் மூலம் அழிக்கும்பொருட்டு இயேசு இப்படிச் செய்தார்” என்று எபிரெயர் 2:14 கூறுகிறது. அப்படியானால், நாம் அவருடைய சொந்த சரீரத்திலும் இரத்தத்திலும் பங்குபெற வேண்டும் என்று விரும்புபவர் வேறு எவராக இருக்கமுடியும்? நிச்சயமாக அது தேவனுடைய குமாரன் ஒருவராக மட்டுமே இருக்க முடியும். சரீரத்தின் மூலமாகவோ அல்லது சரீர மரணத்தினாலேயன்றி வேறு எந்த வழிமுறையினால் அவர் மரணத்தின் சங்கிலிகளைத் தகர்த்தார்? கிறிஸ்துவின் மரணம் மரணத்தின் மூலத்தையே தோற்கடித்தது என்று 1 கொரிந்தியர் 15:54-55 கூறுகிறது. எனவே, இந்த உரை அவதாரத்தைப் பற்றிப் பேசுகிறது.

85. அடுத்து என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்: அவர் உடனடியாக தேவதூதர்களின் இயல்பை அணியாது, ஆபிரகாமின் சந்ததியினரின் இயல்பையே அணிந்தார். இந்த வழியில், அவர் எல்லா வகையிலும் தனது சகோதரர்களைப் போலவே தன்னை ஆக்கிக்கொண்டமைக்கு காரணம், அவர் இரக்கமுள்ள, உண்மையுள்ள இளவரசராக, கடவுளுக்கு ஒரு நல்ல ஊழியனாக, மக்களின் பாவங்களுக்கு பரிகாரம் செய்ய முடியும் என்பதோடு, அவர் தாமே பாடுகளை அனுபவித்ததால் சோதனைக்கு உட்பட்டவர்களுக்கும் உதவ முடியும் என்பதால் இந்த இயல்பையே அணிந்தார். ஆகையால், அன்பான சகோதரர்களே, விண்ணக அழைப்பில் பங்குபெறும் நீங்கள், நமது விசுவாசத்தின் காவலரும் பிரதான ஆசாரியருமான இயேசுவைக் கருத்தில் கொண்டு, மோயீசன்  இருந்ததைப் போலவே தம்முடைய படைப்பாளருக்கு அவர் உண்மை உள்ளவராக இருப்பதைப் பற்றி சிந்தியுங்கள். எனவே, இவை அப்போஸ்தலரின் வார்த்தைகள் என்பதை நினைவில் கொள்ளவும்.

86. எழுத்தாளர் அவரைப் படைக்கப்பட்டவர் என்று அழைப்பதன் அர்த்தத்தை நீங்கள் இப்போது உணர்ந்திருப்பீர்கள். அவர் ஆபிரகாமின் சந்ததியை ஏற்றுக்கொண்ட வரை, அவர் ஒரு உண்மையான உடலை எடுத்தார் என்பதைக் காட்டுகிறது. தம்முடைய சரீரத்தின் மூலமாக இல்லாவிட்டால், மக்களை எப்படி அவர்களது பாவங்களை விட்டுவிடச் செய்திருக்க முடியும்? அவர் தம்முடைய சரீரத்தினால் அன்றி வேறு எந்த விதத்தில் பாடுகளை அனுபவித்திருக்க முடியும்? நாம் முன்பு சொன்னது போல், கிறிஸ்து சரீரத்தினாலேயே பாடுபட்டார். அப்படியானால், குருத்துவ கோத்திரத்தில்  அவர் ஏற்றுக்கொண்டதைத் தவிர, வேறு எது அவரை குருத்துவத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது?

87. ஒரு ஆசாரியனுக்கு ஏதாவது ஒன்றைச் செலுத்துவதும், நியாயப்பிரமாணத்தின்படி இரத்தத்தின் மூலம் பரிசுத்த ஸ்தலங்களுக்குள் நுழைவதும் கடமையாகும். எனவே, கடவுள் காளைகள் மற்றும் வெள்ளாடுகளின் இரத்தத்தை நிராகரித்ததைக் கருத்தில் கொண்டு, இந்தப் பிரதான ஆசாரியர் நம்முடைய பாவங்களுக்கு நித்திய பரிகாரமாக இருக்க தம்முடைய சொந்த இரத்தத்தின் மூலம் பரலோகத்திலுள்ள மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கக் கடமைப்பட்டிருந்தார். ஆசாரியனும் பலியும் ஒன்றுதான்; ஆசாரியத்துவமும் பலியும் மனித இயல்பினால் மேற்கொள்ளப் படுகின்றன, ஏனென்றால் அவர் ஒரு ஆட்டுக்குட்டியைப் போல கொலைக்களத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதேநேரம், அவர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி ஒரு ஆசாரியர்.

88. எனவே, தெய்வீகத்திற்கு உரிமை கோருவது மனித வர்க்கம் தான் என்று யாரும் கூறக்கூடாது. சில யூத விமர்சகர்கள் கூறுவது போல், ஆபிரகாம் பலிகளைச் செலுத்திய மெல்கிசேதேக் கூட ஒரு தேவதூதர் அல்ல, ஆனால் ஒரு புனிதமான மனிதரும் கடவுளின் ஆசாரியருமானவர். அவர் நம் ஆண்டவரை முன்மாதிரியாகக் கொண்டு, தந்தை அல்லது தாய் இல்லாமல் அவரது வம்சாவளியின் வரலாறு இல்லாமல், தொடக்கமும் முடிவும் இல்லாமல், நித்திய கடவுளின் குமாரன் இந்த உலகத்திற்கு வருவதை முன்கூட்டியே காட்டுவதற்காக போற்றப்படுகிறார். அவர் சரீர அவதாரமெடுத்து, எந்த தந்தையும், தாயும் இல்லாமல் கடவுளாகப் பிறந்தார். மேலும் சந்ததி குறித்த வரலாறு இல்லாமல் இருந்தார். இதுகுறித்து, ‘அவருடைய சந்ததியை யார் அறிவிப்பார்கள்?’ என்று  ஏசாயா 53:8 கூறுகிறது.

89. எனவே, கடவுளின் ஆசாரியராக நாம் காணும் இந்த மெல்கிசேதேக்கை கிறிஸ்துவின் மாதிரியாகவும் கொண்டுள்ளோம். ஒன்றை உதாரணமாகவும் மற்றொன்றை அசலாகவும்  நாங்கள் கருதுகிறோம். ஒரு வகை என்பது அடிப்படையில் சத்தியத்தின் நிழலாகும், அதை ஒரு நகரத்தின் பெயரில் அரசாட்சியை ஒன்றை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். அதே நேரத்தில் மற்றொன்றின் அரசாட்சி முழு உலகத்தின் நல்லிணக்கத்திலும் தெளிவாகத் தெரிகிறது. இது குறித்து  2 கொரிந்தியர் 5:19 இல், ‘தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்தார். அவருக்கும் உலகத்துக்கும் இடையில் சமாதானத்தை உருவாக்கினார்’ என்று எழுதப்பட்டிருப்பதைப் பார்த்தோமானால், இதன் பொருள் [கிறிஸ்துவில்] நித்திய தெய்வீக இயல்பு இருந்தது. தந்தை குமாரனில் இருப்பதுபோல, குமாரன் தந்தையில் இருப்பது போல, இயற்கையிலும் செயலிலும் அவர்களின் ஐக்கியம் தெளிவாக மறுக்கப்படவில்லை என்பதை இது எடுத்துக்கூறுகிறது.

90. ஆனாலும், நம் எதிரிகள் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் இதை எப்படி அவர்களால் மறுக்க முடியும்? ஏனென்றால், “நான் உங்களுக்குச் சொன்னவை எல்லாம் என்னிடமிருந்து வந்தவை அல்ல. பிதா என்னில் வாழ்கிறார். அவர் அவருடைய கிரியைகளை என் மூலமாகச் செய்கிறார்” என்று வேதாகமம் யோவான் 14:10 ஐ மேற்கோள் காட்டுவதன் மூலம் கூறுகிறது. இதற்காக பிதா குமாரனுடன் சேர்ந்து தான் கிரியைகளைச் செய்கிறார் என்று அர்த்தமல்ல, ஏனன்றால் அவர்களின் கிரியைகள் இரண்டும் ஒரே மாதிரியானவை, இரண்டு வெவ்வேறு கிரியைகள் அல்ல. “நான் செய்கிற காரியங்களை அவர் செய்கிறார்” என்று கூறும்போது, ​​பிதாவின் கிரியைகளும் குமாரனின் கிரியைகளும் ஒன்றே என்பதை அப்போஸ்தலன் தெளிவாகக் காட்டுகிறார்.

91. மறுபுறம், ஒற்றுமையை அல்ல, செயல்களில் உள்ள ஒற்றுமையைக் காண விரும்பிய அவர் இவ்வாறு கூறுகிறார்: “என்னில் நம்பிக்கை வைக்கிற எவனும் நான் செய்த அத்தகைய அற்புதங்களைச் செய்வான். என்னைவிட மேலான காரியங்களைக்கூட செய்வான்” என்று யோவான் 14:12 கர்த்தரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டும்போது கூறுகிறது. இந்த வார்த்தையைச் சேர்ப்பதன் மூலம், தந்தையையும் குமாரனையும் ஒன்றாக்காமல் அவர்கள் ஐக்கியமாய் இருக்க முடியும் என்பதைக் காட்டுகிறார். எனவே, ஆரியர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அந்த கிரியை பிதாவுக்கும் குமாரனுக்கும் சொந்தமானது.

அத்தியாயம் 12

பிதா மற்றும் குமாரனின் இராச்சியம் என்பது ஒன்றே, அது பிரிக்கப்படாதது; ஒவ்வொருவரின் தெய்வீக இயல்பிலும் இதுவே உண்மை

92. மத்தேயு 12:25-ல், “தனக்கு விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்த இராச்சியமும் சீக்கிரமாய்க் கவிழ்க்கப்படும்” என்று கர்த்தர் சொல்லியிருக்கையில், பிதா குமாரனுடைய இராச்சியம் பிரிக்கப்படலாம் என்று அவர்கள் எப்படி நினைக்கக்கூடும்? என்று நான் இப்போது கேட்கிறேன்.

93. உண்மையில், பிதாவையும் குமாரனையும் பிரிக்கும் ஆரியர்களின் தவறான போதனையை நிறுத்த, பிதாவும் குமாரனும் ஒன்று தான் என்று புனித பேதுரு போதித்தார். எனவே, என் சகோதரர்களே, உங்கள் அழைப்பு மற்றும் தெரிவை உறுதிப்படுத்திக் கொள்ள கடினமாக உழைக்கவும், ஏனெனில் அவ்வாறு செய்வது உங்களை வழிதவறாமல் இருக்கப் பாதுகாக்கும். இந்த வழியில், 1 பேதுரு 2:10-11 கூறுவது போல், கடவுளின் நித்திய இராச்சியத்தில், நம் ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவுக்குள் மிகுதியான கிருபையுடன் பிரவேசிப்பீர்கள்.

94. கிறிஸ்துவின் ஆட்சி குறித்து மட்டுமே விவாதிக்கப்படுகிறது என்று மக்கள் நினைத்தால், பிதாவுக்கும் குமாரனுக்கும் தனித்தனி அதிகாரங்கள் இருப்பதைக் குறிக்கும் வகையில் பத்தியில் உள்ளவற்றை விளக்கினால் – அது குமாரனின் ஆட்சி என்பது இன்னும் தெளிவாகிறது, ஏனென்றால அது நித்தியமானது. அப்படியானால், நாம் தோல்வியடையக்கூடிய இரண்டு தனித்தனி இராச்சியங்களைப் பற்றி மட்டும் பேசவில்லை. மேலும், எந்த இராச்சியத்தையும் கடவுளின் இராச்சியத்துடன் ஒப்பிட முடியாது என்பதையும் அது குமாரனின் இராச்சியம் என்பதையும் அவர்கள் மறுக்க முடியாது. அத்தோடு, அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து பிதாவும் குமாரனும் ஒரே இராச்சியத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்; அல்லது பிதா ஒரு மட்டுப்படுத்தப்பட்ட இராச்சியத்தை ஆளுகிறார் என்று அவர்கள் கூற வேண்டும் – இவ்வாறு கூறினால் அது ஒரு தெய்வ நிந்தனையாக இருக்கும். அதேநேரம், தெய்வீகத்தில் தாழ்ந்தவர் என்று அவர்கள் தவறாகச் சொல்லப்படும் ஒருவர், உண்மையில் சமமான இராச்சிய அதிகாரத்தையே கொண்டுள்ளவர் என்பதை அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். இதுவும் ஒருவித சீரற்ற தன்மையையே காட்டுகிறது.

95. ஆனால் இந்தப் போதனை அதன் சொந்த அடிப்படைகளுடன் பொருந்தாது, அவற்றுடன் ஒத்துப்போவதில்லை, அவற்றைப் பின்பற்றுவதில்லை. பின்னர், நாம் ஒப்புக்கொண்டு நிரூபிப்பது போல, இராச்சியம் ஒன்றே என்று அவர்கள் ஒப்புக்கொள்ளட்டும். அது நம்முடைய சொந்த ஆதாரங்களிலிருந்து அல்ல, மாறாக பரலோகத்திலிருந்து வரும் ஒரு சாட்சியத்திலிருந்து ஒப்புக்கொள்ளட்டும்.

96. முதலாவதாக, பரலோக இராச்சியம் என்பது குமாரனுடைய இராச்சியம் தான் என்பதை வேதாகமத்தின் பகுதிகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். ‘மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்கிறேன், இங்குள்ள சிலர் தாங்கள் இறப்பதற்கு முன்பு மனித குமாரன் தன் இராச்சியத்தின் ஆட்சியுடன் வருவதைக் காண்பார்கள்’ என்று மத்தேயு 16:28 ம் அதிகாரத்தில் உரைப்பதைக் காணலாம். எனவே இராச்சியம் தேவனுடைய குமாரனுடையது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

97. ஆகவே, குமாரனுடைய இராச்சியமும் பிதாவின் இராச்சியமும் ஒன்றே என்பதை இப்போது அறிந்து கொள்ளுங்கள்: “நான் உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்கிறேன். இங்கே நிற்கின்ற மக்களில் சிலர், அவர்கள் மரணத்துக்கு முன் தேவனுடைய இராஜ்யம் வருவதைப் பார்ப்பார்கள். தேவனுடைய இராஜ்யம் வல்லமையோடு வரும்” என்று மாற்கு 9:1 இதுகுறித்து சாட்சியமளிக்கிறது. ஆகவே, ஒரே ஒரு இராச்சியம் மட்டுமே உள்ளது, வெகுமதி, வாரிசுரிமை மற்றும் தகுதி போன்ற அனைத்தும் ஒன்றே, அதேபோல், வெகுமதி குறித்து வாக்குறுதியளிப்பவரும் ஒருவரேதான்.

98. மத்தேயு 13:43 இல் ‘நல்ல மனிதர்கள் சூரியனைப்போல பிரகாசிப்பார்கள், ஏனெனில் அவர்கள் பிதாவின் அரசாட்சியில் இருப்பார்கள். என் வார்த்தைகளைக் கேட்பவர்களே, இதை கவனித்துக்கொள்ளுங்கள்’ என்று குமாரனே கூறியதாகக் காட்டப்படத்திலிருந்து, ஒரே இராச்சியம்  எப்படி இருக்க முடியும்? பிதாவின் மகிமையால் அவருக்குச் சொந்தமானது குமாரனுக்கும் சொந்தமானது, ஏனென்றால் அவர்கள் ஒரே மகிமையைப் பகிர்ந்து கொள்கிறார்கள்  என்று யோவான் 17:5 எடுத்துரைக்கிறது. எனவே, இராச்சியம் என்பது பிதா மற்றும் குமாரன் இருவருக்கும் பொதுவான  இராச்சியமே என்று வேதாகமம் கூறுகிறது.

99. தேவனுடைய இராச்சியம் பற்றி எங்கு குறிப்பிட்டிருந்தாலும், அங்கே பிதா மற்றும் குமாரன் இருவரின் அதிகாரமும் நிலைநிறுத்தப்படுகிறது என்பதை உணர வேண்டியது அவசியம். ஏனென்றால், பிதாவின் இராச்சியமும் குமாரனின் இராச்சியமும் கடவுள் என்ற ஒற்றைப் பெயரால் சூழப்பட்டுள்ளன. லூக்கா 13:28-ல் கூறப்பட்டுள்ளபடி, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு மற்றும் அனைத்து தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய இராச்சியத்தில் நீங்கள் காண நேரிடும் போது, தீர்க்கதரிசிகள் குமாரனின் இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருப்பதில்லை என்று நாம் உண்மையில் சொல்ல முடியுமா? எல்லாவற்றிற்கும் மேலாக, லூக்கா 23:42-43-ல், “இயேசுவே, நீர் உமது இராச்சியத்தை அடையும்போது அடியேனையும் நினைவுகூர்ந்தருளும்” என்று இறக்கும் தருவாயிலிருந்த நல்ல கள்வனை நோக்கி, இயேசு, “கவனி, நான் சொல்வது உண்மை. இன்று நீ என்னோடு சேர்ந்து பரலோகத்திலிருப்பாய்” என்று பதிலளித்திருந்தார் என்று மேற்கோள் காட்டுகிறது. ஆகவே, தேவனுடைய இராச்சியத்தில் இருப்பது என்பதன் அர்த்தம் என்ன? நாம் நித்திய மரணத்திலிருந்து தப்பித்துவிட்டோம் என்பதே அது. அவ்வாறு நித்திய மரணத்திலிருந்து தப்பித்தவர்கள் மனுஷகுமாரன் அவருடைய இராச்சியத்துக்குள் பிரவேசிப்பதைக் காண்பார்கள்.

100. மத்தேயு 16:19 இல், ‘பரலோக இராச்சியத்தின் திறவு கோல்களை உனக்குத் தருவேன்’ என்று கடவுள் கூறும்போது, ​​கொடுப்பதற்கு அவரிடம் இருக்கும் சக்தி எப்படி இல்லாமல் போகும்? இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். ஊழியன் திறக்கிறான், கர்த்தர் கொடுக்கிறார்; ஒன்று கடவுளிடமிருந்து வருகிறது, மற்றொன்று கிறிஸ்துவின் மூலம் வருகிறது; ஊழியன் திறவுகோல்களைப் பெறுகிறான், அதன்மூலம் கர்த்தர் அதிகாரங்களை நியமிக்கிறார். முதலாவது கொடுப்பவரின் உரிமை, இரண்டாவது ஒரு உக்கிராணக்காரனின் கடமை.

101. பிதாவுக்கும் குமாரனுக்கும் இருக்கிற இராச்சியம் அல்லது ஆட்சி ஒன்றுதான் என்பதற்கு இங்கே மற்றொரு ஆதாரம் கொடுக்கப் பட்டுள்ளது. இது தீமோத்தேயுவுக்கு எழுதிய நிருபத்தில் எழுதப்பட்டுள்ளது: ‘நம்முடைய இரட்சகராக இருக்கிற தேவனும், நம்முடைய நம்பிக்கையாக இருக்கிற இயேசு கிறிஸ்துவும் ஆணை இட்டபடியே இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாய் இருக்கின்ற பவுல்’, என்று 1 தீமோத்தேயு 1:1.இல் கூறப்பட்டுள்ளது. எனவே பிதா மற்றும் குமாரனின் இராச்சியம் என்பது தெளிவாக ஒன்றுதான். பவுல் கூறியது போல: “பாலியல் பாவங்கள் செய்பவனும், தீயசெயல் புரிபவனும், தனக்கு மேலும், மேலும் வேண்டும் என ஆசைப்படும் சுயநலக்காரனுமான விக்கிரக வணக்கம் செய்பவனும் தேவனுடையதும், கிறிஸ்துவுடையதுமாகிய இராச்சியத்தில் இடம் பெறுவதில்லை என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டும்” என்று எபேசியர் 5:5 வழியாகக் கூறப்பட்டுள்ளது. எனவே ஒரே இராச்சியம், ஒரே தெய்வீகம் என்பதே நிதர்சனம்.

102. தெய்வீகத்தின் ஒத்த தன்மை என்பது நியாயப்பிரமாணத்தால் காட்டப்படுகிறது, இது ஒரே கடவுள் இருக்கிறார் என்று உபாகமம் 6:4-ஐயும், கிறிஸ்துவைப் பற்றியும் அவரில் தெய்வீகத்தின் முழுமை சரீர வடிவில் வாசம் செய்கிறது என்றும் அப்போஸ்தலரால் காட்டப்படுகிறது. தெய்வீகத்தின் முழு நிறைவும் கிறிஸ்துவில் சரீர வடிவில் இருப்பதால், பிதாவும் குமாரனும் ஒரே தெய்வீகத்தன்மை கொண்டவர்கள் என்று ஒப்புக்கொள்ள வேண்டும். குமாரன் சரீர ரீதியாக தெய்வீகத்தன்மையின் முழுமையைக் கொண்டிருக்கும்போது, ​​குமாரனின் தெய்வீகத் தன்மையை பிதாவின் தெய்வீகத்தன்மையிலிருந்து யாராவது பிரிக்க முயற்சித்தால், பரிபூரணத்தின் முழுமைக்கு அப்பால் வேறு எதுவும் இருக்க முடியாது. எனவே தெய்வீகத்தன்மை ஒன்றுதான்.

அத்தியாயம் 13

குமாரனின் மகிமை அவருக்குச் சொந்தமானது, அது பிதாவின் மகிமைக்குச் சமமானது; தேவதூதர்கள் அதில் பங்கேற்கவில்லை, அதைப் பார்ப்பவர்களாக மட்டுமே இருக்கிறார்கள்

103. பிதாவும் குமாரனும் ஒரே சாயலையும் ஒரே மாதிரியையும் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதை நாம் ஏற்கனவே காட்டியிருப்பதால், அவர்கள் ஒரே மகிமையைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதையும் காட்ட வேண்டியுள்ளது. ஆதாரத்திற்காக நாம் வெகுதூரம் சென்று தேட வேண்டியதில்லை, ஏனென்றால் குமாரனே தம்முடைய மகிமையைப் பற்றி இவ்வாறு பேசுகிறார்: “மனித குமாரன் மீண்டும் வருவார். அவர் மாட்சிமையுடன் தேவதூதர்கள் சூழ வருவார். ராஜாவாகிய அவர் தன் மாட்சிமை மிக்க அரியணையில் வீற்றிருப்பார்” என்று மத்தேயு 25:31 சான்றளிக்கிறது. அப்படியானால், இதோ குமாரனின் மகிமை தெளிவாக உள்ளது! அவருடைய படைக்கப்படாத மகத்துவத்தை மறுக்க முடியாததால், அவருக்கு வேறு எதிலும் குறையில்லை. அப்படியானால், மகத்துவம் குமாரனுக்குகே சொந்தமானது.

104. பிதாவின் மகிமையும் குமாரனின் மகிமையும் ஒன்று என்பதை நம் விரோதிகள் எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி ஒப்புக்கொள்ளட்டும். கர்த்தர் தாமே இவ்வாறு (லூக்கா 9:26) சொல்கிறார்: “ஒருவன் என்னைக் குறித்தோ, அல்லது என் போதனையைக் குறித்தோ வெட்கப்பட்டால், நான் எனது மகிமையோடும், பிதாவின் மகிமையோடும், தேவ தூதர்களின் மகிமையோடும் வருகைதரும்போது அவனைக் குறித்து வெட்கப்படுவேன்” என்று. இந்த வார்த்தைகளும் தேவதூதர்களின் மகிமையும் எதைக் காட்டுகின்றன? கடவுளின் ஊழியர்கள் தங்கள் கர்த்தரை வணங்கும்போது கௌரவத்தைப் பெறுகிறார்கள் என்பதே இதன் பொருள்.

105. ஆகையால், குமாரன் தம்முடைய மகிமையைத் தம்முடைய பிதாவுக்கும் தமக்கும் சேர்த்தே செலுத்தினார். உண்மையில், தேவதூதர்கள் பிதாவுக்கும் குமாரனுக்கும் அந்த மகிமையில் சமமாகப் பங்குகொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல, அவர்கள் தேவனுடைய மிஞ்சிய மகிமையைக் காண வேண்டும் என்பதற்காகவே. குமாரனைப் பற்றி வேதம் கூறுவது போல, தேவதூதர்களுக்குத் தங்கள் சொந்த மகத்துவம் இல்லை: அவர் தம்முடைய மாட்சிமையின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் போது, ​​பிதா மற்றும் குமாரனின் மகிமையைக் காண அவர்கள் அவருடைய முன்னிலையில் பிரசன்னமாயிருக்கிறார்கள். அவர்கள் பிதா மற்றும் குமாரனின் பார்வையில் அவர்கள் தகுதியானவர்கள் அல்லது உரித்துடையவர்கள் என்ற காரணத்தால் தான்.

106. மேலும், கடவுள் கொடுத்த வார்த்தைகள் அவற்றின் சொந்த அர்த்தத்தை தெளிவாக வெளிப்படுத்துகின்றன, எனவே பிதாவின் மகிமையும் குமாரனின் மகிமையும் தேவதூதர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படவில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். அவர்கள் இதைத்தான் கூறுகிறார்கள்; குமாரன் தம்முடைய மாட்சிமையில், தேவதூதர்கள் புடைசூழ வருவார். அதன்மூலம் தம்முடைய பிதாவின் மகிமையும் மாட்சிமையும் அவருடைய சொந்த மகிமையும் மாட்சிமையும் ஒன்றே என்பதைக் காட்டுவார். இதுகுறித்து, நம் ஆண்டவர் மற்றொரு புத்தகத்தில் இவ்வாறு கூறுகிறார்: தேவகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமையில், பரிசுத்த தேவதூதர்களுடன் வரும்போது பிரமிப்பை ஏற்படுத்துவார் (மாற்கு 8:38). தேவதூதர்கள் கீழ்ப்படிதலுடன் வருகிறார்கள், அவர் மகிமையுடன் வருகிறார்: அவர்கள் அவரைப் பாதுகாக்கிறார்கள். அவர் தனது சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார்: அவர்கள் நிற்கிறார்கள், ஆனால் அவர் அமர்ந்திருக்கிறார் – மனித வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளின் விதிமுறைகளை சுலபமான வழியில் எடுத்துரைக்க வேண்டும் என்றால், அவர் நீதிபதியாகவும், தேவதூதர்கள் நீதிமன்றத்தின் அதிகாரிகள் போலவும் இருப்பார்கள். அவர் முதலில் தனது தந்தையின் தெய்வீக மாட்சிமையை முன்னிறுத்தவில்லை என்பதை இங்கே கவனிக்க வேண்டும். அதேபோல, பின்னர் அவருடைய சொந்த மாட்சிமையையும் தேவதூதர்களையும் முன்னிறுத்தவில்லை, ஏனென்றால் இந்தக் கிரமமானது உயர்ந்ததிலிருந்து கீழ் நோக்கி வரும் இறங்கு வரிசையைக் காட்டக்கூடாது என்பதற்காகவே இதைச் செய்தார். அவர் முதலில் தனது சொந்த மாட்சிமையை முன்னிறுத்தி, பின்னர் தனது தந்தையின் மற்றும் தேவதூதர்களின் மாட்சிமையைப் பற்றிப் பேசினார் (ஏனென்றால் தந்தை அவர்களை விடக் குறைவானவராகத் தோன்ற முடியாது என்பதால்). இதனால் அவர் தனது சொந்த மாட்சிமையைக் கொண்டு தேவதூதர்களிடமிருந்து தந்தைக்கு ஏறுவரிசைக் கிரமத்தை உருவாக்கவோ, அல்லது அந்த மாட்சிமையைக் குறைக்கும் வகையில் தந்தையிடமிருந்து தேவதூதர்களுக்கு ஒரு இறங்கு வரிசையை உருவாக்கவோ விரும்பவில்லை. தந்தை மற்றும் குமாரன் என்ற ஒரே கடவுளை ஏற்றுக்கொள்ளும் நாம், ஆரியர்கள் செய்வது போன்ற வேறுபாட்டு வரிசையை ஏற்றுக்கொள்வதில்லை.

(Sub chapter 107 – not included in the master script)

அத்தியாயம் 14

குமாரன் பிதாவோடு ஒரே ஒருளாக இருக்கிறார்

108. மாட்சிமை தங்கிய அரசரே, கடவுளின் இயல்பைக் குறித்த கேள்வியைப் பொறுத்தளவில் குமாரனுக்கு பிதாவைப் போன்ற இயல்பு இருக்கிறது என்பதை நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை, ஏனென்றால் மகன் தந்தையின் இயல்பின் சாராம்சம் என்று நாம் படித்திருக்கிறோம். ஆகவே கடவுளின் இயல்பில், குமாரன் பிதாவிடமிருந்து வேறுபடக்கூடிய எந்தக் காரணமும் இல்லை என்பதை இது காட்டுகிறது.

109. இந்த ஒற்றுமையின் காரணமாக, கிறிஸ்து, “பிதாவினுடையவை யாவும் என்னுடையவை” என்று கூறினார் (யோவான் 16:15). கடவுள் உண்மையான பொருளானவர் என்பதை நாம் மறுக்க முடியாது, ஏனென்றால் அவர் உண்மையில் ஆதாரமற்றவர் அல்ல, மற்றவர்களுக்கு அவர்களின் இருப்பின் அடித்தளத்தை வழங்கியவர். கடவுளின் ஆதாரம் உயிரினங்களிலிருந்து வேறுபட்டது என்றாலும், மற்றவர்களுக்கு ஆதாரத்தை அளிப்பவர் அவரே. கடவுளின் குமாரன் தானாகவே எல்லாவற்றிலும்  நிலைத்திருக்கிறார், ஆகவே அவருக்கு உண்மையான ஆதாரம் இல்லாமல் இருக்க முடியாது.

110. எனவே, சங்கீதக்காரன் கூறுகிறார்: நீர் மறைவாக உண்டாக்கின என் எலும்புகள் உம்மிடமிருந்து மறைக்கப்படவில்லை; நீர் என்னை மறைவாக உண்டாக்கினீர், என் உடல் பூமியில் இருந்தே உருவானது. ஏனெனில், அவருடைய வல்லமையும் தெய்வீகமும், உலகம் தோன்றுவதற்கு முன்பு தோன்றியவை, அவற்றின் மகத்துவம் [அப்போது] கண்ணுக்குத் தெரியாததாக இருந்தபோதிலும், மறைக்கப்பட முடியாதது. எனவே, இங்கே, நாம் ஒரு உன்னதப் பொருளைப் பற்றிக் குறிப்பிடுகிறோம்.

111. அவரது பொருள் வடிவம் பற்றி குறிப்பிடுவது அவரது அவதாரத்திலிருந்து வருகிறது என்று சிலர் எதிர்க்கலாம். “பொருள்” என்ற சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், நீங்கள் நினைப்பது போல் மரபுரிமையாகப் பெற்ற ஒன்றைக் குறிக்கவில்லை என்றும் நான் காட்டியுள்ளேன். இப்போது ​​நீங்கள் விரும்பினால் மறைபொருள் தீர்க்கதரிசனத்தின்படி, கிறிஸ்துவின் சாராம்சம் பாதாள உலகில் இருந்தது என்று வைத்துக்கொள்வோம், ஏனென்றால் 1 பேதுரு 3:19 சொல்வது போல், இறந்தவர்களின் ஆன்மாக்களை விடுவிக்கவும், மரணத்தின் பிணைப்புகளைத் தகர்க்கவும் பாவங்களை மன்னிக்கவும் அவர் அங்கு தனது சக்தியைப் பயன்படுத்தினார்.

112. உண்மையில், கடவுள் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருப்பதால், அவருடைய தெய்வீக சாராம்சம் எல்லா இடங்களிலும் உள்ளது என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்து உங்களை எதுவும் தடுத்துவிட முடியாது. அவரிடம் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது: நான் சொர்க்கத்திற்குச் சென்றாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் நரகத்திற்குச் சென்றாலும், நீர் அங்கே இருக்கிறீர் என்று.

113. மேலும், சங்கீதக்காரன் பின்வரும் வார்த்தைகளில் தெளிவாகக் குறிப்பிடுகிறார்: “உமது கண்கள் என் இருப்பைக் கண்டன, அது படைப்பின் விளைவாக அல்ல” என்று அவர் கூறும்போது அங்கே குறிப்பிடப்பட்ட தெய்வீக சாரத்தை நாம் அங்கீகரிக்க வேண்டும் என்று அவர் தெளிவாகக் குறிப்பிடுகிறார். ஏனென்றால் குமாரன் கடவுளால் படைக்கப்பட்டவரல்ல, கடவுளின் படைப்புகளில் ஒருவராகவும் இல்லை, மாறாக நித்திய வல்லமையுள்ள பிறப்பிக்கப்பட்ட வார்த்தையாக இருக்கிறார். அவர் அவரை ἀχατέργαστον என்று குறிப்பிட்டார், அதாவது வார்த்தை படைக்கப்படவோ அல்லது உண்டாக்கப்படவோ இல்லை, ஆனால் எந்தப் படைக்கப்பட்ட அமைப்பின் ஈடுபாடும் இல்லாமல் தந்தையிடமிருந்து பிறந்தவர். இருப்பினும், இதற்கு அப்பால் ஏராளமான சான்றுகள் எங்களிடம் உள்ளன. கடவுளின் குமாரன் கிரியையின் மூலம் படைக்கப்பட்ட ஒருவர் அல்ல, மாறாக அவரது படைக்கப்படாத தெய்வீகத்தை உறுதிப்படுத்தும் வரை, இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பொருள் என்பது சரீரத்தாலான ஆதாரம் என்று வைத்துக் கொள்வோம்.

114. கிறிஸ்துவின் மறைபொருளான மனித வடிவம் படைக்கப்படவில்லை என்று சிலர் கூறுகிறார்கள், ஏனென்றால் நம் ஆண்டவர் ஒரு ஆணின் துணையின்றி, ஆணின் பங்களிப்பின்றி ஒரு கன்னித்தாயின் கருவிலிருந்து பிறந்தார். இந்தப் பகுதியைப் பயன்படுத்தி, மரியாள் பெற்றெடுத்தது ஒரு படைப்பின் கிரியை காரணமாக உருவாக்கப்பட வில்லை என்று பலர் கூறலாம். ஆனாலும், அரியஸின் சீடரான நீங்கள், கடவுளின் வார்த்தை அந்த வழியில் தான் உருவாக்கப்பட்ட ஒன்று என்று எப்படி நினைக்கலாம்?

115. ஆனால் இதுதான் நாம் பொருள் பற்றிப் படிக்கும் ஒரே இடமா? மற்றொரு பத்தியிலும் சொல்லப்பட்டதல்லவா? நகரங்களின் வாயில்கள் உடைக்கப்படுகின்றன, மலைகள் சரிந்து விட்டன, அவருடைய பொருள் வெளிப்படுகிறது? இந்த வார்த்தைக்கு இங்கே ‘உருவாக்கப்பட்ட ஒன்று’ என்று அர்த்தம் கொள்ளலாமா? சிலர் பொருள் என்பது பணம் என்று கூறுகிறார்கள். அந்த அர்த்தத்தை நீங்கள் எடுத்துக் கொண்டால், பெரும் செல்வத்தை ஈட்டிவைத்திருந்த ஒருவரின் செல்வங்கள் யாவும் வெளியே தெரியும்படிக்கு மலைகள் அங்கே சரிந்து விழுந்தன.

116. இந்த வசனங்களில் மலைகள் என்றால் என்ன என்பதை சற்று தெளிவாகப் பார்ப்போம்.  “உங்களுக்கு ஒரு கடுகளவேனும் நம்பிக்கை இருக்குமானால், இம்மலையை நோக்கி, ‘இங்கிருந்து அங்கே நகர்ந்து செல்’ எனக் கூறினால், இம்மலை நகரும்” என்கிறது மத்தேயு 17:20: மலைகள் என்றால், 2 கொரிந்தியர் 10:5 விளக்குவது போல, அவை தங்களை உயர்த்திக் கொள்ளும் பெரிய விஷயங்களைக் குறிக்கின்றன.

117. மேலும், கிரேக்க மொழியில், இதன் மொழிபெயர்ப்பு என்ன கூறுகிறது என்றும் பார்ப்போம்: அரண்மனைகள் விழுந்துவிட்டன என்றால், எந்த அரண்மனைகள்? சாத்தானின் அரண்மனை மட்டுமே. அதைப் பற்றி கர்த்தர் இப்படிக்  கேட்டார்: அவனுடைய இராச்சியம் எப்படி நிலைத்திருக்கும்? என்று. எனவே நாம் பிசாசின் அரண்மனைகளாக இருக்கும் விஷயங்களைப் பற்றிப் பேசுகிறோம், அவை மிக உயரமான மலைகளாகக் காணப்படுகின்றன. அந்த அரண்மனைகள் விசுவாசிகளின் இதயங்களிலிருந்து சரிந்து விழும்போது, ​​கடவுளின் குமாரனாகிய கிறிஸ்து பிதாவின் நித்திய பொருளிலிருந்து வந்தவர் என்பது உண்மை வெளிப்படுகிறது. மீண்டும், ‘நான் நான்கு இரதங்கள் இரண்டு வெண்கல மலைகளுக்கிடையில் செல்வதைக் கண்டேன்’ என்று சகரியா 6:1 கூறுகிறது.

118. தேவனுடைய அறிவுக்கு எதிராகத் தன்னை உயர்த்திக் கொள்ளும் பெருமையை நாம் காண்கிறோம், ஆனால் ‘தேவனுடைய குமாரன், பலமான குரலில், “அசுத்த ஆவியே, அமைதியாக இரு; இவனை விட்டு வெளியே வா” என்று கட்டளையிட்டபோது, ​​அது கர்த்தருடைய வார்த்தையால் அடங்கிப்போய் விடுகிறது. மாற்கு 1:25 இல், “இதோ, கேடுகள் நிறைந்த மலையே! நான் உன்னிடம் வந்தேன்” என்று தீர்க்கதரிசி உன்னைப் பற்றியும் பேசினார்.

119. அந்த மலைகள் சரிந்துவிட்டன, அது கிறிஸ்துவில் கடவுளின் தெய்வீக இயல்பு உள்ளது என்பதைக் காட்டுகிறது, அவரைக் கண்டவர்கள் சாட்சியமளித்தபடி, “மெய்யாகவே நீர் கடவுளின் குமாரன்” (லூக்கா 4:41) என்பது உறுதியாகின்றது. மனித சக்தியால் அல்ல, கடவுளின் வல்லமையால் தான் அவர் பிசாசுகளை நோக்கிக் கட்டளையிட்டார். எரேமியா மேலும் கூறுகையில், மலைகளுக்காக  துக்கம் அனுஷ்டிக்கவும் மற்றும் பாலைவனப் பாதைகளில் பயணிக்கும்போது உங்கள் மார்பில் அடித்துக்கொள்ளவும். ஏனென்றால் அவை தோல்வியடைந்து விட்டன; மனிதர்கள் இல்லாததால், அவர்களால் அங்கே உண்மையான வார்த்தையைக் கேட்க முடியவில்லை. வானில் பறக்கும் பறவைகள் முதல் சுமை சுமக்கும் மிருகங்கள் வரை, அஞ்சியபடியே இருந்தன, ஆகையால் அவைகளின் சத்தங்களைக் கேட்க முடியவில்லை, ஏனெனில் அவை தோல்வியடைந்துவிட்டன.

120. இன்னொரு இடத்தில், கர்த்தர் சரீரத்தின் பலவீனத்தையும், நம் மனதின் உணர்வுகளையும் தன்னுடன் எடுத்துக்கொண்டு, மனித வாழ்க்கையின் பலவீனங்களைக் காட்ட தம்முடைய தீர்க்கதரிசி மூலம் பேசினார் என்பதையும் நாம் அறிவோம், அதில், “ஓ ஆண்டவரே, என் பொருள் என்ன என்பதை நினைவில் கொள்ளும், ஏனென்றால் அது கடவுளின் குமாரன் மனித பலவீனத்தின் இயல்பில் பேசியவை” என்று கூறப்பட்டுள்ளது.

121. அவரைப் பற்றி, மேற்கோள் காட்டப்பட்ட பகுதியில், மனித அவதாரத்தில் மறைந்திருக்கும் புனித மர்மத்தைக் கண்டறியும் பொருட்டு, வேதாகமம் கூறுவதை பார்ப்போம்; ஆண்டவரே, நீர் அவரை நிராகரித்து ஒன்றுமற்றவராக ஆக்கினீர்; நீர் உமது கிறிஸ்துவை உதறித் தள்ளிவிட்டீர், உமது ஊழியனுடனான உடன்படிக்கையை ஏற்க மறுத்துவிடீர், பூமியில் அவருடைய பரிசுத்தத்தை நிராகரித்துவிட்டீர். அது உண்மையில் அவருடைய சரீரத்தைப் பற்றியது என்றால், வேதாகமம்  அவரை ‘ஊழியன்’ என்று அழைப்பதன் காரணம் என்ன? ஏனென்றால் அவர் கடவுளுடன் சமமாக இருக்கவில்லை, ஆனால் தன்னை வெறுமையாக்கி, ஒரு ஊழியனின் வடிவத்தை எடுத்து, சாதாரண மனிதனைப் போலத் தோற்றமளித்தார். எனவே, அவர் நம்மைப்போன்று மனித இயல்பை எடுத்தபோது, ​​அவர் ஒரு ஊழியராக இருந்தார், எனினும், அவரது சொந்த வல்லமையால் அவர் ஆண்டவராக இருக்கிறார்.

122. மேலும், நீங்கள் கர்த்தருடைய சத்தியத்தில் நிலைத்திராவிட்டால், அதுபற்றிப் படிப்பதால் என்ன பயன்? மீண்டும் அவர் கூறும்போது: ‘அவர்கள் என் சத்தியத்தில் நிலைத்து, என் வார்த்தைகளைக் கேட்டு, என் மக்களுக்குக் கற்பித்திருந்தால், நான் அவர்களை அவர்களுடைய அறிவீனத்திலிருந்தும் பாவங்களிலிருந்தும் விலக்கியிருப்பேன்’ என்று கூறப்பட்டுள்ளது.

அத்தியாயம் 15

ஆரியர்கள் குமாரன், பிதாவாகிய கடவுளிடமிருந்து வேறுபட்ட பொருளிலிருந்து வந்தவர் என்று கூறுகிறார்கள்; இது கடவுளுக்கு ஒரு பொருள் இருப்பதை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. நிக்கோமீடியாவைச் சேர்ந்த யூசிபியஸ் காட்டியபடி, கிறிஸ்து கடவுளின் உண்மையான மகன் என்று அவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பதால் அவர்கள் அந்த வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறார்கள்

123. கடவுளுக்கு ஆதாரம் உண்டு என்பதை ஆரியர்கள் எவ்வாறு மறுக்க முடியும்? குமாரன் ἑτεροούσιος, அதாவது, வேறொரு பொருளைச் சேர்ந்தவர் என்று கூறுவதன் மூலம், கடவுளுக்கு ஆதாரமுண்டு என்பதை அவர்களே ஒப்புக்கொள்ளும்பட்சத்தில், ​​வேதாகமத்தில் பல இடங்களில் காணப்படும் ‘பொருளானவர்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் எப்படிக் கூற முடியும்?

124. அப்படியானால், அவர்கள் ‘பொருளானவர்’ என்ற அந்த வார்த்தையை அல்ல, அதன் வலிமை மற்றும் விளைவுகளைத் தான் புறக்கணிக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் கடவுளின் குமாரனை உண்மையானவர் [கடவுள்] என்று ஒப்புக்கொள்வதில்லை. தெய்வீகத் தலைமுறையின் செயல்முறை மனித புரிதலுக்கு அப்பாற்பட்டது என்றாலும், அத்தகைய வார்த்தையைப் பயன்படுத்தி, குறிப்பாக ἑτεροούσιος க்கு மாறாக, “பொருள்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலம் விசுவாசத்தை தெளிவாகக் காட்ட முடியும் என்று பிதாக்கள் நம்பினர். தீர்க்கதரிசியின் அதிகாரத்தைப் பின்பற்றி, “தீர்க்கதரிசிகளில் எவரும் பரலோகச் சபையில் நின்றிருக்கமாட்டார்கள். அவர்களில் எவரும் கர்த்தருடைய செய்தியைப் பார்த்திருக்கவோ கேட்டிருக்கவோமாட்டார்கள்” என்கிறார் எரேமியா 23:18.இல். எனவே ஆரியர்கள் ‘பொருள்’ என்ற வார்த்தை தங்கள் தேவ நிந்தனைக் கருத்துக்களுடன் ஒத்துப்போகும்போது அதை ஏற்றுக்கொண்டாலும், விசுவாசிகளின் நேர்மையான வழிபாட்டை வெளிப்படுத்த அந்த வார்த்தை பயன்படுத்தப்படும்போது அதை நிராகரித்து எதிர்த்து வாதிடுகிறார்கள்.

125. குமாரனை ὁ μοούσιος என்று குறிப்பிட அவர்கள் தயங்குவதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்? அதாவது பிதாவின் ஒரே பொருளான அவரை கடவுளின் உண்மையான குமாரன் என்று ஒப்புக்கொள்ள அவர்கள் தயங்குகிறார்கள் என்றால் அதற்கு வேறென்ன காரணங்கள் இருக்கமுடியும்? நிக்கோமீடியாவில் உள்ள யூசிபியஸின் கடிதத்தில் இது தெளிவாகத் தெரிகிறது. குமாரன் உண்மையான கடவுள் என்றும், படைக்கப்படவில்லை என்றும் நாம் கூறினாலும், அவர் பிதாவுடன் ஒரே பொருள் (ὁμοούσιος) என்று ஒப்புக்கொள்ளும் பாதையில் இருக்கிறோம் என்று அவர் எழுதுகிறார். இந்த கடிதம் நைசியாவில் (Nicaea) கூடியிருந்த ஆலோசனைக் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, பிதாக்கள் இந்த வார்த்தையை தங்கள் விசுவாச அறிக்கையில் சேர்த்தனர், ஏனெனில் அது அவர்களின் எதிரிகளை அச்சுறுத்துவதாகக் கருதப்பட்டது. 1 சாமுவேல் 17:51 கூறுவது போல, தங்கள் எதிரிகள் கையில் எடுத்த அதே ஆயுதத்தைக் கொண்டு, அந்த எதிரிகளின் சொந்த தேவ நிந்தனை மற்றும் மதங்களுக்கு எதிரான கொள்கையைத் தோற்கடிக்கப்பதை அவர்கள் நோக்கமாகக் கொண்டிருந்தனர்.

126. அவர்களின் வாதம் அர்த்தமற்றது, அந்த வார்தையைத் தவிர்ப்பதற்கான காரணம் சபேலியர்கள் தான் என்று கூறுகிறது; இது அவர்களின் புரிதலின்மையைக் காட்டுகிறது, ஏனெனில் ஒரு பொருள் தன்னைப்போல் மட்டுமல்ல, மற்றொருவரோடும் ஒரே பொருளைக் கொண்டதாக (ὁ μοούσιον) இருக்கிறது. எனவே, குமாரனைப் பிதாவுடன் (ஒரே பொருளானவர்) என்று குறிப்பிடுவது சரியானது, ஏனெனில் இந்த சொல் நபர்களின் வேறுபாட்டையும் இயற்கையின் ஒற்றுமையையும் பிரதிபலிக்கிறது.

127. உண்மையில் οὐσία என்ற சொல் வேதாமத்தில் காணப்படவில்லை என்று அவர்களால் சொல்ல முடியுமா? குறிப்பாக கர்த்தர் அப்பத்தைப் பற்றிப் பேசும்போது, ​​அது ἐπιούσιος, மோசே ὑμεῖς ἔσεσθέ μοι λαὸς περιούσιος எழுதினார்? யாத்திராகமம் 19:6 οὐσία என்றால் என்ன, என்றென்றும் நிலைத்திருக்கும் οὖσα ἀεί என்பதிலிருந்து இல்லையென்றால், அந்தப் பெயர் எங்கிருந்து வருகிறது? ஏனெனில், நித்தியமாக இருப்பவர் கடவுள் ஒருவரே; எனவே, நித்தியமாக இருக்கும் தெய்வீகப் பொருள் οὐσία என்று குறிப்பிடப்படுகிறது. அப்பம் ἐπιούσιος என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் அது வார்த்தையின் ஆதாரத்திலிருந்து அதன் நீடித்த சக்தியைப் பெற்று, மனதையும் ஆன்மாவையும் போஷிக்கிறது. வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது போல்: “அப்பம் ஒரு மனிதனின் இதயத்தை பலப்படுத்துகிறது.”

128. எனவே, நம் முன்னோர்களின் கட்டளைகளைக் கடைப்பிடிப்போம்; நமக்குக் கொடுக்கப்பட்ட சின்னங்களை கவனக்குறைவான மற்றும் ஆபத்தான துணிச்சலான தெய்வபக்தியற்ற செயல்கள் மூலமாக அல்லாமல், தைரியமாகவும் துணிச்சலுடனும் அவமதிக்காமல் பார்த்துக்கொள்வோம். நாம் கேள்விப்பட்டிருக்கும் முத்திரையிடப்பட்ட தீர்க்கதரிசன புத்தகம், மூப்பர்களாலோ, அதிகாரத்தில் இருப்பவர்களாலோ, தேவதூதர்களாலோ, பிரதான தேவதூதர்களாலோ ஒருபோதும் திறக்கப்படப் போவதில்லை; அதைத் திறக்கும் சிறப்பு உரிமை கிறிஸ்துவுக்கு மட்டுமே உண்டு என்று வெளிப்படுத்துதல் 5:5 சாட்சியமளிக்கிறது. இது கூறுவது என்னவென்றால், வாக்குமூலம் அளிப்பவர்களால் முத்திரையிடப்பட்டு, பலரால் நீண்ட காலமாக மதிக்கப்பட்ட ஆசாரியத்துவப் புத்தகத்தை மூட எவர் துணிவார்? முத்திரையை அவிழ்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தவர்கள், அவர்கள் எதிர்கொண்ட ஏமாற்றத்தின் காரணமாக, அதை மீண்டும் முத்திரையிட்டு மூடியுள்ளனர்; அதே நேரத்தில் அதைத் தொடத் துணியாதவர்கள் கூட வேதசாட்சிகளாகவும், பாவமன்னிப்பு வழங்குபவர்களாகவும் எழுந்து நிற்கிறார்கள். ஆகவே, நாம் கொண்டாடும் வெற்றியின் மூலம் நிலைத்திருக்கும் விசுவாசத்தை நாம் எவ்வாறு நிராகரிக்க முடியும்?

அத்தியாயம் 16

புனித அம்ப்ரோஸ் மரபுவழியினரைப் பாதுகாக்க, ஆரியர்களின் தந்திரங்களுக்கு எதிராக  அவர்களின் சில ஏமாற்று அறிக்கைகளை வெளிப்படுத்துகிறார். மேலும் பல்வேறு வாதங்கள் மூலம், அவர்கள் குமாரனைக் கடவுள் என்று அழைத்தபோதிலும், அவர் பிதாவுடன் ஒரே பொருளாக இருப்பதை ஒப்புக் கொள்ளாவிட்டால் அதில் எவ்வித பலனுமில்லை என்றும் காட்டுகிறார்

129. எவரும் பயப்படவோ நடுங்கவோ வேண்டாம்; அச்சுறுத்துபவர் விசுவாசிகளுக்கு நன்மையைத் தருகிறார். வஞ்சகர்களின் இனிமையான வார்த்தைகள் விஷம் நிறைந்தவை, எனவே அவர்கள் உண்மையை மறுப்பது போல் நடிக்கும்போது நாம் அவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். பண்டைய காலங்களில், அவர்களை  நம்பிய மக்கள் மிக எளிதாக ஏமாற்றப்பட்டு, எல்லாம் நல்லெண்ணத்தில் இருப்பதாக நினைத்து துரோகத்தின் வலையில் சிக்கினர்.

130. கிறிஸ்து மற்ற சிருஷ்டிகளைப் போல ஒரு சிருஷ்டி என்று கூறுபவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்று கூறுகிறார்கள். சாதாரண மக்கள் இதைக் கேட்டு நம்புகிறார்கள், ஏனென்றால், வேதாகமம் சொல்வது போல் ‘முட்டாள் தான் கேட்கிற அனைத்தையும் நம்புகிறான். ஆனால் அறிவுள்ளவனோ எல்லாவற்றைப்பற்றியும் ஆழமாகச் சிந்திக்கிறான்’ என்கிறது நீதிமொழிகள் 14:15 . இவ்வாறு அதன் ஆரம்ப சத்தத்தால் ஈர்க்கப்பட்டு, நம்பிக்கை என்ற வஞ்சனைக்குள் இழுக்கப்பட்ட பறவைகளைப் போல, அவர்கள் தங்களுக்கு வைக்கப்பட்ட பொறியைக் காணவில்லை. விசுவாசத்தைத் தேடுகிறோம் என்ற முனைப்பில், அவர்கள் இறுதியில் துன்மார்க்கம் எனும் வஞ்சகத் தூண்டிலில் சிக்கிக் கொண்டனர். அதனால்தான் ‘பாம்புகளைப்போல சாதுரியமாகவும், ஆனால் புறாவைப்போல கபடற்றவர்களாகவும் இருங்கள்’ என்று கர்த்தர் நமக்கு அறிவுறுத்துகிறார் (மத்தேயு 10:16). தீங்கற்ற தன்மைக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க ஞானம் முதன்மையானதாக இருக்கிறது.

131. சுவிசேஷம் பாம்புகள் என்று அழைக்கும் மக்களைப் பற்றிப் பேசும்போது, புதிய வழிகளை எடுக்க பழைய பழக்கங்களை விட்டுவிடுபவர்களை உதாரணமாகக் காட்டுகிறது. ‘முன்பு நீங்கள் செய்து வந்த பாவச் செயல்களோடு உங்கள் கடந்தகால பாவ வாழ்க்கையை விட்டுவிட்டு, நீங்கள் புதிய வாழ்க்கையை வாழ இருக்கிறீர்கள். உங்கள் புதிய வாழ்க்கையில் நீங்களும் தொடர்ச்சியாக புதியவர் ஆகிறீர்கள்’ என்று கொலோசெயர் 3:9-10 கூறுகிறது. அப்படியானால், சுவிசேஷம் பாம்புகள் என்று அழைக்கும் நபர்களின் வாழ்க்கை வழிகள் பற்றிக் கற்றுக்கொள்வோம். நாமும் பாம்புகளைப் போல, நம் வாழ்க்கையைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், வஞ்சகத்திலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும் சாதுர்யமாகவும் வாழப் பழகிக் கொள்வோம். அப்போது தான் நாம் நம் உயிரைப் பாதுகாத்து மோசடிகளில் இருந்து எச்சரிக்கையாக இருக்க முடியும்.

132. “கிறிஸ்து ஒரு படைக்கப்பட்ட உயிரினம் என்று சொல்பவன் சபிக்கப்பட்டவன்” என்று சொன்னால் போதுமானதாக இருந்திருக்கும். ஆனால் ஆரியர்களே, உங்கள் ஒப்புகையில் உள்ள நன்மையுடன்  விஷத்தைக் கலந்து அதன் முழு அர்த்தத்தையும் ஏன் கெடுக்கிறீர்கள்? ஏனென்றால், படைக்கப்பட்ட உயிரினங்களின் மற்றைய முறைகளைப் போலவே, கிறிஸ்து படைக்கப்பட்ட உயிரினம் என்பதை நீங்கள் மறுக்கவில்லை, ஆனால் அவர் [அனைத்தையும்] போலவே படைக்கப்பட்ட உயிரினம் என்பதை மறுக்கிறீர்கள் – ஏனென்றால் நீங்கள் அவரைப் படைக்கப்பட்டவர் என்று அழைக்கிறீர்கள். இருந்தபோதும், நீங்கள் அவருக்கு ஏனைய படைப்புகளை விட கண்ணியத்தை அளிக்கிறீர்கள். மேலும், இந்த தெய்வீகமற்ற கோட்பாட்டின் முதல் ஆசிரியரான ஆரியஸ் என்பவர் கடவுளின் குமாரன் ஒரு முழுமையான படைக்கப்பட்ட உயிரினம் என்றும், மற்றைய படைக்கப்பட்ட உயிரினங்களைப் போல அல்ல என்றும் கூறினார். அப்படியானால், உங்கள் தந்தை மூலம் உங்களுக்கு கொடுக்கப்பட்ட மொழியை நீங்கள் எவ்வாறு ஏற்றுக்கொண்டீர்கள் என்பதைப் பாருங்கள். கிறிஸ்து படைக்கப்பட்டவர் என்பதை மறுப்பது போதும்; “படைக்கப்பட்ட மற்ற உயிரினங்களைப் போல அல்ல” என்று ஏன் சேர்க்க வேண்டும்? நோயால் ஏற்பட்ட தொற்று பரவாமல் இருக்க பாதிக்கப்பட்ட பகுதியை அகற்றிவிடுங்கள் – ஏனென்றால் அது விஷமாகவும் கொடிய பிரச்சினையாகவும் மாறிவிடக்கூடும்.

133. மீண்டும், நீங்கள் சில நேரங்களில் கிறிஸ்து கடவுள் என்று கூறுகிறீர்கள். அப்படி இல்லை – அவர் தந்தையின் முழு தெய்வீக இயல்பையும் கொண்டிருப்பதாக நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் என்ற அர்த்தத்தில் அவரை உண்மையான கடவுள் என்று நீங்கள் அழைக்கவேண்டும். பரலோகத்திலோ மண்ணுலகிலோ ஒரே மாதிரியான தெய்வங்கள் உள்ளன. ஆகையால், கடவுள் என்ற வார்த்தையை வெறும் ஒரு வார்த்தையாக மட்டும் பயன்படுத்தக்கூடாது, மாறாக குமாரனுக்கு பிதாவைப் போலவே அதே தெய்வீகம் இருக்கிறது என்பதைக் குறிப்பிட வேண்டும். ஏனெனில் வேதாகமத்தில் (யோவான் 5:26) “பிதாவிடமிருந்தே (தேவனிடமிருந்தே) ஜீவன் வருகின்றது. ஆகையால் அவர் தன் குமாரனுக்கும் ஜீவனையளிக்கும் அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார்” என்று கூறப்பட்டுள்ளது. அதாவது,  அவர் அதை தனது குமாரனைப் பெற்றெடுத்ததன் மூலம் அவருக்கு ஜீவனை அளிக்கும் அதிகாரத்தைக் கொடுத்தார் – ஒரு ஏழைமீது இரங்கி அருளும் கிருபையால் அல்ல.

134. அவர் மனுஷகுமாரன் என்பதால் நியாயத்தீர்ப்பைச் செய்யும் அதிகாரம் அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்கிறது யோவான் 5:27.  இந்த இணைப்பைக் கவனியுங்கள், அதன்மூலம், பொய்யான ஒன்றைப் பிரசங்கிப்பதில் நீங்கள் தவறான எண்ணத்தை உடையவர்களாக இருக்க  மாட்டீர்கள். அவர் மனுஷகுமாரன் என்று அழைக்கப்படுவதை நீங்கள் காண்கிறீர்கள்;  அப்படியானால் அவர் [கொடுக்கப்பட்ட அதிகாரத்தை] ஏற்றுக்கொள்கிறார் என்பதை நீங்கள் மறுக்கிறீர்களா? நீங்கள் கடவுளை மறுப்பதால், பிதாவுக்குச் சொந்தமான அனைத்தும் குமாரனுக்குக் கொடுக்கப்படவில்லை என்று கூறுகிறீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர், ‘பிதாவினிடத்தில் உள்ள அனைத்தும் என்னுடையது’ என்று யோவான் 16:15 மூலமாகச் சொல்லியுள்ளார். அப்படியானால், எல்லா தெய்வீக குணங்களும் பண்புகளும் பிதாவினிடத்தில் இருப்பது போலவே குமாரனிலும் உள்ளன என்பதை ஏன் ஒப்புக்கொள்ளக்கூடாது? ஆகவே, ‘பிதாவிடம் உள்ள அனைத்தும் என்னுடையது’ என்று அவர் கூறி இருக்கும் பட்சத்தில், ​​அவரிடம் இல்லாதது ஏதேனும் இருக்கமுடியுமா?

135. கிறிஸ்து மரித்தோரை உயிர் எழுப்பினார் என்பதையும், தண்ணீரின் மேல் நடந்து சென்றார் என்பதையும், மக்களைக் குணப்படுத்தினார் என்பதை பற்றியும் நீங்கள் ஏன் இவ்வளவு பிடிவாதமாகவும் நேர்மையாகவும் பேசுவதுபோல் பேசுகிறீர்கள்? உண்மையில், இந்த வல்லமையை அவர் தம்மைப் போலவே தம் ஊழியர்களுக்கும் வெளிப்படுத்தும்படி கொடுத்துள்ளார். கடவுள் அவர்களுக்கு இவ்வளவு பெரிய வல்லமையைக் கொடுத்திருப்பதையும், அவற்றை மக்களில் பார்க்கும்போதும் நான் இன்னும் ஆச்சரியப்படுகிறேன். கிறிஸ்துவைப் பற்றி சில அழகான விஷயங்களை நான் கேள்விப்படுவேன். அவர் தனித்துவமானவர், படைக்கப்பட்ட மனிதர்களுடன் அவரை ஒப்பிட முடியாது. இப்போது அவர் பிறந்தவர், அவர் கடவுளின் ஏக குமாரனானவர், உண்மையிலேயே அவர் கடவுளுக்கெல்லாம் கடவுள், அவர் தந்தையின் வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார்.

136. பிதாவும் குமாரனும் அருகருகே அமர்ந்திருப்பதைப் பற்றி நான் எங்கு படித்தாலும், குமாரன் எப்போதும் வலது பக்கத்தில் இருப்பதைக் கவனிக்கிறேன். இது குமாரன் தந்தையை விட உயர்ந்தவர் என்பதனாலா? இல்லை – அது காரணமல்ல. கடவுளின் அன்பு யாரைக் கனப்படுத்துகிறதோ, அவர் மக்களின் தேவபக்தியின்மையால் அவமதிக்கப்படுகிறார். குமாரனைப் பற்றிய சந்தேகங்கள் தவிர்க்க முடியாமல் எழும் என்பதைத் தந்தை புரிந்துகொண்டார். எனவே நாம் குமாரனை அவமதிக்காதவாறு, நமக்குப் பின்பற்றுவதற்கு ஒரு பயபக்தியின் முன்மாதிரியைக் கொடுத்தார்.

அத்தியாயம் 17

ஸ்டீவனின் கர்த்தர் நிற்பது குறித்த தரிசனத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆட்சேபனை நிராகரிக்கப்படுகிறது, மேலும் அதே துறவி கடவுளின் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்த பிரார்த்தனைகள் குமாரன் பிதாவுக்குச் சமமானவர் என்பதைக் காட்டுகின்றன.

137. ஒரே ஒரு இடத்தில்தான், கர்த்தராகிய இயேசு தேவனுடைய வலது பாரிசத்தில் நிற்பதை ஸ்டீவன் கண்டதாகக் கூறுகிறார். அப்போஸ்தலர் பணிகள் 7:55 இதற்கு சான்றளிக்கிறது. இந்த வார்த்தைகளின் அர்த்தத்தை இப்போது கற்றுக்கொள்ளுங்கள், அப்போதுதான் நீங்கள் ஒரு கேள்வியை எழுப்ப முடியும். அதாவது குமாரனை கடவுளின் வலது பக்கத்தில் அமர்ந்திருப்பதாகவும், அவர் நிற்கும் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதாகவும் நாம் ஏன் எல்லா இடங்களிலும் வாசிக்கிறோம்? அவர் உயிருள்ளவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் நீதிபதியாக அமர்ந்திருக்கிறார்; அவர் தம்முடைய மக்களின் வழக்கறிஞராக நிற்கிறார். ஒரு நல்ல தியாகியின் பலியை தம்முடைய பிதாவுக்குச் செலுத்தும் போது, ​​அவர் ஒரு ஆசாரியராக நின்றார். அத்தகைய வலிமையான போட்டியில் ஒரு துணிச்சலான மல்யுத்த வீரருக்கு விருதை வழங்க நடுவராக நின்றார்.

138. ஸ்டீவன் ஆவியைப் பெற்றதைப் போலவே, நீங்கள் அந்த விஷயங்களைப் புரிந்துகொள்ள கடவுளின் ஆவியையும் பெறுங்கள்; அப்போது தியாகியான ஸ்டீவன் சொன்னது போல் நீங்கள் சொல்லலாம்: “இதோ, வானங்கள் திறந்திருப்பதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலது பாரிசத்தில் நிற்பதையும் நான் காண்கிறேன்” என்று. ஒருவர் வானங்களைத் திறந்திருக்கும்போது, ​​இயேசுவை தேவனுடைய வலது பாரிசத்தில் இருப்பதைக் காண்கிறார்கள்; அதேநேரம் சிலரின் அகக் கண்கள் மூடப்பட்டிருந்ததால், அவர்கள் அங்கே இயேசுவைக் காணவில்லை. இயேசு தேவனுடைய வலது பாரிசத்தில் இருப்பதாக ஒப்புக்கொள்வோம், அதனால் வானங்கள் நமக்கும் திறக்கப்படலாம். வேறுவிதமாக அவரை ஒப்புக்கொள்பவர்கள் மோட்சத்தின் வாயில்களைத் தாங்களாகவே  மூடிக்கொள்கிறார்கள்.

139. குமாரன் நிற்கிறார் என்று யாராவது வாதிட்டால், பிதா அமர்ந்திருந்தார் என்பதை இந்தப் பத்தியிலிருந்து காட்ட வேண்டும். மனுஷகுமாரன் நிற்கிறார் என்று ஸ்டீவன் சொன்னாலும், பிதா அமர்ந்திருந்தார் என்று அவர் இங்கு சொல்லவில்லை.

140. ‘நிற்கிறார்’ என்ற இந்த சொல் தன்னை அவமதிக்கவில்லை, மாறாக இறையாண்மையைக் காட்டியது என்பதை தெளிவுபடுத்த, ஸ்டீவன் குமாரனிடம் ஜெபித்து, “கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியைப் பெற்றுக்கொள்ளும்” என்று கூறி, பிதாவிடம் இறைஞ்சினார் என்று அப்போஸ்தலர் பணிகள் 7:58 கூறுகிறது. மேலும், பிதா மற்றும் குமாரனின் இறையாண்மை ஒன்றுதான் என்பதைக் காட்ட அவர் மீண்டும் ஜெபித்தார், “ஆண்டவரே, இந்தப் பாவத்தை அவர்கள் மீது சுமத்தாதேயும்” என்று கூறியதாக அப்போஸ்தலர் பணிகள் 7:51 மற்றுமோர் இடத்தில் கூறுகிறது. கர்த்தர் தம்முடைய பாடுகள் குறித்து பிதாவிடம் பேசும் வார்த்தைகள் இவை. மேலும் அவை தேவனுடைய குமாரனுக்காக ஒரு வேதசாட்சியாக மரிக்கும் போது ஸ்டீவன் செய்த ஜெபமாகும். பிதாவிடமும் குமாரனிடமும் ஒரே கிருபை கேட்கப்படும்போது, ஒவ்வொருவருக்கும் ஒரே வல்லமை உறுதிப்படுத்தப்படுகிறது.

141. இல்லையெனில், ஸ்டீவன் பிதாவிடம் ஜெபித்ததாக நம் எதிராளிகள் நினைத்தால், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்களிடமே விட்டுவிடுவோம். அவர்களின் வாதங்களால் எம்மை அசைக்கமுடியாது; இருப்பினும், எழுத்து மற்றும் வரிசை அனைத்தும் முக்கியமானவையாகக் கருதுபவர்கள், முதல் மனு குமாரனுக்கு அனுப்பப்படுகிறது என்பதைக் கவனியுங்கள். இப்போது, ​​இந்தப் பகுதியைப் பற்றிய அவர்களின் புரிதலில் கூட, பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையிலான ஒற்றுமையை நாம் நிரூபிக்கிறோம்; குமாரனையும் பிதாவையும் நோக்கி ஜெபிக்கப்படும்போது, ​​ஜெபத்தில் உள்ள சமத்துவம் அவர்கள் ஒன்றாகச் செயல்படுவதைக் காட்டுகிறது. ஆனால் குமாரனை “கர்த்தர்” என்ற பெயரால் அழைப்பதை அனுமதிக்காவிட்டால், அவர் “கர்த்தர்” என்பதை அவர்கள் மறுக்கவே முயல்கிறார்கள் என்பதைக் காண்கிறோம்.

142. இவ்வளவு பெரிய ஒரு வேதசாட்சியானவர், ஒரு கிரீடத்தைப் பெற்றபடியால் வாதிடுவதை நிறுத்திவிட்டு இன்றைய விவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவோம். ஒரு பெரிய போராட்டத்திற்குப் பிறகு கிடைக்கும் பொருத்தமான புகழ்ச்சியைப் போல, புனித வேதசாட்சியைப் புகழ்வோம் – வேதசாட்சியான அவர், எதிரியின் தாக்குதல்களால் இரத்தம் சிந்தினார், இருப்பினும் கர்த்தராகிய கிறிஸ்துவால் அருளப்பட்ட கிரீடத்தால் வெகுமதியைப் பெற்றார்.


முதல் புத்தகம் (Book 1)
புத்தகம் II (Book 2)
புத்தகம் III (Book 3)
புத்தகம் IV (Book 4)
புத்தகம் V (Book 5)