Justin Martyr, Dialogue with Trypho in Tamil 91-120
அத்தியாயம் 91
யோசேப்பு ஆசீர்வதிக்கப்பட்டதைப் போலவே கடவுள் சிலுவையின் புனிதத்தன்மையை மோசேயின் மூலம் மற்றொரு வழியில் காட்டுகிறார். “கர்த்தர் யோசேப்பின் நாட்டை ஆசீர்வதிக்கட்டும். கர்த்தாவே, வானத்தின் மேலிருந்து மழையையும் பூமிக்குக் கீழிருந்து நீரூற்றுகளையும் அனுப்பும். அவர்களுக்குச் சூரியன் நல்ல கனியைக் கொடுக்கட்டும். ஒவ்வொரு மாதமும் அதன் நல்ல கனியைக் கொடுக்கட்டும். குன்றுகளும், பழைமையான மலைகளும் அவற்றின் சிறந்த கனியைத் தயார் செய்யட்டும். பூமி தனது சிறந்த பொருட்களை யோசேப்பிற்குத் தரட்டும். யோசேப்பு தனது சகோதரர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டான். எனவே, எரியும் முட்செடிகளில் இருந்து தரிசனம் கொடுத்த கர்த்தர் தன்னிடமுள்ள சிறந்தவற்றை யோசேப்பிற்குக் கொடுக்கட்டும். யோசேப்பு பலமுள்ள காளையைப் போன்றிருக்கிறான். அவனது இரு மகன்களும் காண்டாமிருகத்தின் கொம்புகளைப் போன்றுள்ளனர். அவர்கள் மற்ற ஜனங்களை வென்று பூமியின் கடைசிவரை கொண்டுசெல்வர்.” சொல்லப்போனால், காண்டாமிருகத்தின் கொம்புகள் சிலுவையையோ அல்லது வேறு எந்தப் பொருளையோ அல்லது உருவத்தையோ பிரதிநிதித்துவப் படுத்துகின்றன என்பதை யாராலும் உறுதிப்படுத்தவோ அல்லது நிரூபிக்கவோ முடியாது. சிலுவையின் ஒரு பகுதி நேராக நிற்கிறது, அதன் மேல் பகுதி ஒரு கொம்பைப் போல உயர்ந்து நிற்கிறது. அதன் குறுக்காக இடப்பட்டுள்ள கட்டையின் முனைகள் அந்த கொம்புடன் இணைந்த, இருவேறு பக்கமாக நீண்டிருக்கும் பக்கவாட்டு கொம்புகளை ஒத்திருக்கும். மேலும் சிலுவையில் அறையப் பட்டவர்களின் உடல்களைத் தாங்கி நிற்கும் சிலுவையின் நடுவில் பொருத்தப்பட்டிருக்கும் பகுதியும் ஒரு கொம்பைப் போலவே காட்சியளிக்கிறது. மேலும் அது வடிவத்தில் மற்ற கொம்புகளுடன் இணையும் பட்சத்தில், அது தனி ஒரு கொம்பு போலவே காட்சியளிக்கிறது. மேலும், ” அவைகளைக்கொண்டு அவர் தேசங்களை பூமியின் கடைசி வரை கொண்டுசெல்வார்,” என்ற வார்த்தைகள், இப்போது எல்லா தேசங்களிலும் என்ன நடக்கிறது என்பதை தெளிவாக விவரிக்கிறது. எல்லா தேசங்களிலிருந்தும் சிலர், இந்த புனிதத்துவத்தின் சக்தியால், தள்ளப்பட்டு, அதாவது தங்கள் இதயங்களில் குத்தப்பட்டு, போலியான சிலைகள் மற்றும் சாத்தான்களை வழிபடுவதை விட்டுவிட்டு, மீண்டும் கடவுளுக்கு சேவை செய்யத் தொடங்கினர். ஆனால் சிலுவையின் அதே அடையாளம் அவிசுவாசிகளுக்கு அவர்களின் அழிவுக்கும் கண்டனத்திற்கும் காரணமாகக் காட்டப்படுகிறது. மக்கள் எகிப்திலிருந்து வெளியேறிய போது, இஸ்ரவேல் மோயீசனின் நீட்டிய கரங்களின் அடையாளத்தால் அமலேக்கை வெற்றி கொண்டது. இது நூனின் மகனுக்கு இயேசு [ஜோசுவா] என்ற பெயரைச் சூட்டியதன் மூலம் தான் நடைபெற்றது. அதுபோலவே, இஸ்ரவேலைத் தீண்டிய சர்ப்பங்களின் கொடிய தன்மையை முறியடிக்க அமைக்கப்பட்ட உருவமும் அடையாளமும், சிலுவையில் அறையப்பட்டவரின் மரணத்தின் மூலம், பாம்புக்கும் மரணம் வரும் என்பதை இந்த அடையாளம் காட்டுவதாக நம்புபவர்களின் கூற்றுக்கு இணங்கவே இங்கு அடைலாயம் காட்டப்பட்டது. ஆனால் பாம்பினால் தீண்டப்பட்டவர்களுக்கும் சிலுவையில் அறையப்படுவதற்குத் தம்முடைய குமாரனை உலகிற்கு அனுப்பியவரிடமிருந்து பாதுகாப்பைத் தேடியவர்களுக்கும் இரட்சிப்பு அருளப்பட்டது. மோயீசனின் மூலம் தீர்க்கதரிசன ஆவியானவர், சர்ப்பத்தை நம்பும்படி நமக்குக் கற்பிக்கவில்லை. ஏனென்றால் அது ஆரம்பத்திலிருந்தே கடவுளால் சபிக்கப்பட்டது என்பதை இது காட்டுகிறது; மற்றும் ஏசாயாவில், சர்ப்பம் என்பது எதிரியாகக் கருதப்பட்டு, கிறிஸ்து என்ற வலிமைமிக்க வாளால் துவம்சம் செய்யப்படும் என்று நமக்குச் சொல்லப்பட்டுள்ளது.
அத்தியாயம் 92
“எனவே, தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளையும் செயல்களையும் புரிந்து கொள்ள ஒருவருக்கு கடவுளின் மகத்தான அருள் இல்லை என்றால், அந்த நபருக்கு அந்த வார்த்தைகள் மற்றும் செயல்களைப் பற்றி விளக்கமளிப்பது மிகவும் பயனற்றதாக இருக்கும். அதுமட்டுமல்ல, அந்த வார்த்தைகளும் செயல்களும், அவற்றைப் புரிந்துகொள்ள முடியாதவர்களால் சொல்லப்பட்டால், அது பெரும்பாலானவர்களுக்கு கேவலமாகத் தோன்றாதா? ஈனோக்கும், நோவாவும் அவருடைய மகன்களும், விருத்தசேதனம் செய்யப்படாத, ஓய்வுநாளை அனுசரிக்காத அதே மாதிரியான சூழ்நிலையில் இருந்ததால், கடவுள் மற்ற தலைவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட சட்டத்தை வழங்கியதன் மூலம் கடவுளைப் பிரியப்படுத்தியது ஏன் என்று யாராவது உங்களிடம் கேட்டால், ஆபிரகாம் மற்றும் மோசேயின் காலங்களுக்கு இடையில் வாழ்ந்தவர்கள் விருத்தசேதனத்தால் நீதிமான்களாக்கப்படுவதற்கும், மோசேக்குப் பின் வாழ்ந்தவர்கள் விருத்தசேதனம் மற்றும் பிற நியமங்கள், ஓய்வுநாள் பலிகள் மற்றும் பிரசாதங்கள் போன்றவற்றால் நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பல தலைமுறைகள் கடந்துவிட்டன என்பதை நீங்கள் சுட்டிக்காட்டா விட்டாலும், நான் ஏற்கனவே கூறியது போல், உங்கள் தேசம் எருசலேமிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு தகுதியானது என்பதையும், அதற்குள் யாரும் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதையும் முன்கூட்டியே அறிந்த கடவுள் அறிந்திருந்தார். சரீர விருத்தசேதனம் என்பதைத் தவிர, நீங்கள் வேறு எந்த வகையிலும் உங்களை வேறுபடுத்திக் காட்ட முடியாது என்பதை நான் முன்பு கூறியிருந்தேன். ஆபிரகாம், விருத்தசேதனத்தின் காரணமாக அல்ல, அவருடைய விசுவாசத்தின் காரணமாக நீதிமானாகக் கருதப்பட்டார். ஏனெனில், விருத்தசேதனத்திற்கு முன் அவரைப் பற்றி இவ்வாறு கூறப்பட்டது: “ஆபிரகாம் கடவுளை நம்பினார், அதன் காரணமாக அவர்மேல் நீதியின் ஆதிக்கம் நிலைநிறுத்தப்பட்டது.” நாமும், கிறிஸ்துவின் வாயிலாக கடவுள்மீது வைத்திருக்கும் விசுவாசத்தின் காரணமாக, சரீர விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக இருந்தாலும், மனத்தூய்மை என்ற விருத்தசேதனம் பெற்றிருக்கிறோம். அதாவது இதயபூர்வமான விருத்தசேதனம். இதன் மூலம் நாம் நீதியாகவும் கடவுளுக்குப் பிரியமாகவும் இருக்க வேண்டும் என்று நம்புகிறோம். ஏற்கனவே தீர்க்கதரிகளின் வார்த்தைகள் வழியாக நாம் இந்த சாட்சியை அவரிடமிருந்து பெற்றுள்ளோம். ஆனால் யூதர்களாகிய நீங்கள் ஓய்வு நாட்களைக் கடைப்பிடிக்கவும், காணிக்கை செலுத்தவும் கட்டளையிடப்பட்டீர்கள். மேலும் நீங்கள் சிலைகளை வணங்காமல், கடவுளை மறந்துவிடாதபடி, அவரை வழிபடக்கூடிய ஒரு இடத்தை அமைக்க கடவுளால் உங்களுக்கு அனுமதி கிடைத்தது. அப்படிப்பார்த்தால், நீங்கள் எப்பொழுதும் இப்படித்தான் இருந்திருப்பீர்கள் போல் தெரிகிறது. (இப்போது முக்கியமாக, இந்தக் காரணத்திற்காகவே, ஓய்வுநாட்கள் மற்றும் காணிக்கைகள் பற்றி கடவுள் தனது கட்டளைகளை வெளியிட்டார் என்பதனை நான் ஏற்கனவே எனது முந்தைய உரையாடல்களில் நிரூபித்தேன். எனினும் இன்று புதிதாக வருபவர்களுக்காக நான் எனது பெரும்பாலான சான்றுகளை மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.) [அதாவது, உருவ வழிபாட்டிலிருந்து உங்களைக் காப்பாற்றுவதற்கு] இதுவே காரணம் அல்ல என்றால், கடவுள் முன்னறிவிப்பு செய்யாதவராகவும் எல்லா மனிதர்களுக்கும் ஒரே விதமான, நியாயமான கட்டளைகளை ஏற்படுத்தவும், அவற்றைக் கடைப்பிடிக்கவும் கற்றுக்கொடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்படலாம் (நிச்சயமாக மோயீசனின் காலத்திற்கு முன்பு பல தலைமுறையாக மனிதர்கள் வாழ்ந்திருந்தனர்), மேலும் வேதாகமமே பொய்யெனத் தீர்ப்புக்குள்ளாகும். ஆகவே வேதாகமம் என்ன கூறுகிறதென்று பார்த்தால்; “கடவுள் உண்மையும் நீதியுமானவர், அவருடைய வழிகளெல்லாம் நியாயத்தீர்ப்புகள் தவிர வேறில்லை, அத்தோடு அவரிடத்தில் அநீதி என்ற பேச்சுக்கே இடமில்லை.” ஆனால், பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளில் இருந்து நான் ஏற்கனவே காட்டியுள்ளபடி, வேதாகமம் தெளிவாக உண்மையாக இருப்பதால், நீங்கள் இப்போது இருப்பதைப் போல எப்போதும் முட்டாள் தனமாகவும் அகந்தையுடனும் இருக்க வேண்டும் என்று கடவுள் விரும்பவில்லை. ஆனால் நீங்கள் கடவுளைப் பிரியப்படுத்திய கிறிஸ்துவுடன் இரட்சிக்கப்படுவீர்கள், ஏனென்றால் தேவனால் அவர் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.’
அத்தியாயம் 93
“ஏனெனில் (கடவுள்) மனிதகுலத்தின் ஒவ்வொரு இனத்திற்கும் எப்பொழுதும், உலகளவில் நீதியையும், அதே போல அனைத்து நியாயத்தையும் முன்வைக்கிறார்; விபச்சாரம், வேசித்தனம், கொலை போன்றவை பாவம் என்பதை ஒவ்வொரு இனமும் அறிந்திருக்கிறது. இவர்கள் எல்லாம் இப்படிப்பட்ட செயல்களைச் செய்தாலும், அப்படிச் செய்யும் போது அசுத்த ஆவிகளால் பாதிக்கப்பட்டவர்கள், கல்வியில், தீய பழக்கவழக்கங்களில் மற்றும் பாவமான செயற்பாடுகளால் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் இயற்கையான சிந்தையை இழந்தவர்கள் அல்லது அவற்றை வெளிப்படுத்தாது அடக்கி வைத்திருப்பவர்களைத் தவிர, ஏனையோர் அநியாயம் செய்கிறோம் என்ற அறிவிலிருந்து தப்புவதில்லை. ஏனென்றால், அத்தகைய நபர்கள் தாங்கள் மற்றவர்களுக்குள் திணிக்கும் அதே விடயங்களுக்கு அடிபணிய விரும்புவதில்லை என்பதையும், அவர்கள் செய்யும் செயல்களுக்காக ஒருவரையொருவர் மனசாட்சிக்கு விரோதமாக நிந்திக்க விரும்புவதையும் நாம் காணலாம். ஆகவே, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்து எல்லா நீதியையும் தெய்வீகத் தன்மையையும் இரண்டு கட்டளைகளில் தொகுத்தபோது நன்றாகப் பேசினார் என்று நான் நம்புகிறேன். அவையாவன: ‘உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இதயத்தோடும், உன் முழு ஆன்மாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக’; ஏனென்றால், கடவுளை முழு இதயத்தோடும் முழு பலத்தோடும் நேசிப்பவர், கடவுள் பயத்தினாலான சிந்தையால் வேறு எந்த கடவுளுக்கும் தலைவணங்க மாட்டார். கடவுள் அதை விரும்புவதால், ஒரே தேவனாலும் கடவுளாலும் நேசிக்கப்படும் அந்த தூதருக்கு அவர் தலைவணங்குகிறார். மேலும் தன்னைப் போலவே அயலாரை நேசிப்பவர் தனக்குத் தேவையான நல்லவற்றையே அயலவருக்கும் விரும்புவார், எந்த மனிதனும் தனக்காகத் தீயவற்றை விரும்ப மாட்டான். அதன்படி, தன் அயலாரை நேசிப்பவன் தன்னைப் போலவே தன் அயலாரும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவரில் அன்பகூர்ந்து ஜெபிக்கிறான். அதேபோல் அயலாருடன் அன்பான மற்றும் நியாயமான ஒரு மனிதனாக இருப்பதைத் தவிர அவனுக்கு மேலானது வேறு எதுவுமில்லை. ஆகையால், எல்லா நீதியும் இரண்டு கிளைகளாகப் பிரிக்கப்பட்டிருப்பதால், அதாவது கடவுள் மற்றும் மனிதர்களைப் பற்றி வேதாகமம் சொல்வதற்கமைய, எவரேனும் கடவுளை முழு இதயத்தோடும் முழு பலத்தோடும் நேசிக்கிறார், மேலும் தனது அயலாரை தன்னைப் போலவே நேசிக்கிறார் என்றால், உண்மையிலேயே அவர் நேர்மையான மனிதராக இருப்பார். ஆனால் நீங்கள் கடவுளிடமோ, தீர்க்கதரிசிகளிடமோ, உங்களிடமோ ஒருபோதும் நட்பையோ அன்பையோ காட்டவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், நீங்கள் எப்பொழுதும் விக்கிரகாராதனையாளர்களாகவும் நீதிமான்களைக் கொலை செய்பவர்களாகவும் காணப்பட்டிருக்கிறீர்கள். பின்பு நீங்கள் கிறிஸ்துவின் மீதும் கை வைத்தீர்கள்; நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த மனிதனைக் கிறிஸ்து என்று சாட்சியமளிக்கிறவர்களைக் கொன்று, இன்றுவரை உங்கள் அக்கிரமத்தில் நீடிக்கிறீர்கள். இல்லை! இதை விட, அவர் கடவுளின் எதிரியாக சிலுவையில் அறையப்பட்டு சபிக்கப்பட்டார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், இது உங்கள் மிகுந்த பகுத்தறிவற்ற மனதின் விளைவாகும். மோயீசனின் அடையாளங்களின்படி இந்த மனிதன் கிறிஸ்து என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள முடியும், என்றாலும் நீங்கள் விளங்கிக் கொள்ளாமால் இருக்கிறீர்கள். ஆனால், மேலதிகமாக, எம்மிடம் எந்த வாதங்களும் இருக்க முடியாது என்று கற்பனை செய்து, உங்கள் மனதில் வரும் எந்த கேள்வியையும் நீங்கள் முன்வைக்கிறீர்கள், அதே நேரத்தில் நீங்கள் உறுதியாக நிலைத்துநிற்கும் சில கிறிஸ்தவர்களை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்களை நியாயப்படுத்தத் தவறிவிடுகிறீர்கள்.
அத்தியாயம் 94
‘மேலே வானத்திலோ கீழே பூமியிலோ உள்ள யாதொரு உருவத்தையும் விக்கிரகமாக உண்டாக்காதபடி மோயீசனின் மூலமாகக் கட்டளையிட்ட தேவன் அல்லவா, சர்ப்பத்தால் கடிக்கப்பட்டவர்கள் பிழைக்கும்படிக்கு அடையாளமாக அதை அமைத்தார்? எனக்கு சொல்லுங்கள். எனினும் அவர் அக்கிரமத்திலிருந்து விடுவிக்கிறவர். ஏனென்றால், நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல், ஆதாமின் மீறுதலுக்கு காரணமான சர்ப்பத்தின் வல்லமையை தகர்ப்பார் என்ற மறைபொருளை அவர் அறிவித்தார், இந்த அடையாளத்தின் மூலம் [முன்னறிவித்தலின்படி], அதாவது, சிலுவையில் அறையப்படவிருந்த அவரை நம்புபவர்கள், தீய செயல்கள், விக்கிரக ஆராதனை மற்றும் பிற அநீதிகளான சர்ப்பத்தின் பற்களிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.”
இதைப் பற்றி இரண்டாவது நாளில் வந்த மற்றொருவர், “நீங்கள் உண்மையாகவே பேசினீர்கள்: எம்மால் காரணத்தை சொல்ல முடியாது. இது தொடர்பாக அடிக்கடி நான் போதகர்களிடம் விசாரித்திருக்கிறேன், அவர்களில் எவரும் எனக்கு காரணம் சொல்லவில்லை: எனவே, நீங்கள் பேசுவதைத் தொடருங்கள்; ஏனென்றால், தீர்க்கதரிசிகளின் கோட்பாடுகள் பொய்யாக அவதூறாகப் பேசப்படும் மறைபொருளை நீங்கள் வெளிப்படுத்தும் போது அதற்கு நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.”
அதற்கு நான், “கடவுள் ஒரு அடையாளத்தைச் செய்யும்படி வெண்கல சர்ப்பத்திற்கு கட்டளையிட்டது போல, அவர் குற்றமற்றவராக இருந்தார்; ஆயினும்கூட, சிலுவையில் அறையப்பட்டவர்களுக்கு எதிராக நியாயப்பிரமானத்தில் ஒரு சாபம் இருந்தாலும், சாபத்திற்கு தகுதியான செயல்களைச் செய்த அனைவருக்கும் இரட்சிப்பளிக்கும் கடவுளின் கிறிஸ்துவில் சாபம் இல்லை” என்று பதிலளித்தேன்.
அத்தியாயம் 95
“எல்லா மனுகுலத்தினரும் சாபத்திற்கு ஆளாவார்கள். ஏனென்றால், ‘நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன்’ என்று மோயீசனின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறதே.” ‘மேலும், யாரும் அனைத்தையும் துல்லியமாகச் செய்யவில்லை, இதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள்; ஆனால் ஒப்பீட்டளவில் சிலர் அதிகமாகவும் சிலர் அவர்களை விட குறைவாகவும் கட்டளைகளை கடைபிடித்துள்ளனர்.’ ஆனால் இந்தச் சட்டத்தின் கீழ் இருப்பவர்கள் எல்லாத் தேவைகளையும் கடைபிடிக்காததால் சாபத்திற்கு ஆளாகிறார்கள் என்று தோன்றினால், விக்கிரகாராதனை செய்யும் அனைத்து நாடுகளுகம் எவ்வளவு அதிகமாக சாபத்திற்குள்ளாகி இருக்கும், வாலிபர்களை மயக்கி ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் யார்? அப்படியானால், அனைவரின் பிதரவானவர் தம்முடைய கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பின்னர் மீண்டும் உயிர்த்தெழுவார் என்று தெரிந்தும் எல்லா மனுகுலத்தினரினதும் அனைத்து சாபங்களையும் தம்மீது வரவழைக்க வேண்டும் என்று விரும்பினால், நீங்கள் ஏன் அவரைப் பற்றி வாதிடுகிறீர்கள்? அவர் சபிக்கப்பட்டவர் போல, பிதாவின் சித்தத்தின்படி இவைகளை அனுபவிக்கக் கீழ்ப்படிந்தார், ஆனால் நீங்கள் உங்களுக்காக புலம்ப வேண்டாமா? ஏனென்றால், மனுகுலத்தினருக்காக அவருடைய பிதா அவருக்கு இப்படிப்பட்ட துன்பத்தை உண்டாக்கினாலும், நீங்கள் தேவனுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படியவில்லை. ஏனெனில் நீங்கள் தீர்க்கதரிசிகளைக் கொன்ற போது இறையச்சமுடையவர்களாக இருக்கவில்லை. அவருடைய தழும்புகளால் மனுகுலம் குணமடைவதற்காக, அவருடைய பிதா அவர் துன்பப்பட வேண்டும் என்று விரும்பினாரேயன்றி, நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை: என்று உங்களில் யாரும் சொல்ல வேண்டாம். நிச்சயமாக, நீங்கள் உங்கள் பாவங்களுக்காக மனம்வருந்தி, அவர் கிறிஸ்து என்பதை உணர்ந்து, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்தால், நீங்கள் இதை உறுதியாகக் கூறலாம்; ஏனென்றால், நான் முன்பு கூறியது போல, பாவ மன்னிப்பு உங்களுடைது. ஆனால் நீங்கள் அவரையும், அவரை நம்புகிறவர்களையும் சபித்து, உங்களுக்கு அதிகாரம் இருக்கும் போது, அவர்களைக் கொன்றுபோட்டால், நீங்கள் அவர் மீது கை வைத்ததால், அறியாமை உள்ளவர்கள், மற்றும் கடின இதயம் கொண்டோர் போன்ற அநியாயக்காரர்களும், பாவிகளும் உங்களிடம் எப்படி கோரிக்கைவிடுப்பார்கள்?
அத்தியாயம் 96
‘மரத்தில் தொங்கும் அனைவரும் சபிக்கப்பட்டவர்கள்’ என்பது ‘சட்டத்தின் அறிக்கை’, சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவால் நம் நம்பிக்கை உறுதிப்படுகிறது, அவர் தேவனால் சபிக்கப்பட்டதால் அல்ல, உங்கள் அனைவருக்கும் இது நடக்கும் என்று கடவுள் முன்னறிவித்தமையாலேயே அனைவருக்கும் முன் இருந்தவரான நித்திய ஆசாரி, ராஜா மற்றும் கடவுளாகிய சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் மீது எமது நம்பிக்கை உள்ளது. மேலும் இது நிறைவேறியதை நீங்கள் தெளிவாகக் காண்கிறீர்கள். ஏனென்றால், அவரால் அழைக்கப்பட்ட கிறிஸ்தவர்களை உங்கள் ஜெப ஆலயங்களில் சபிக்கிறீர்கள்; மேலும் பிற நாடுகள் சாபத்தை நடைமுறையில் திறம்பட செயல்படுத்துகின்றன, கபடற்றவர்களாக தங்களை கிறிஸ்தவர்கள் என்று ஒப்புக்கொள்பவர்களை மரணத்திற்கு உட்படுத்துகின்றன; நீங்கள் எங்கள் சகோதரர்கள் என்று அனைவருக்கும் நாம் கூறுவதற்கு மாறாக கடவுளின் சத்தியத்தை உணர்ந்துகொள்ள வேண்டும். அவர்களோ அல்லது நீங்களோ எம்மால் வற்புறுத்தப்படவில்லை, ஆனால் கிறிஸ்துவின் நாமத்தை மறுதலிக்கத் தீவிரமாக முயற்சிக்கிறோம், மாறாக, கிறிஸ்துவின் மூலம் கடவுள் வாக்களித்த அனைத்து நன்மைகளையும் அவர் நமக்கு வெகுமதியாக அளிப்பார் என்ற முழு உறுதியுடன், மரணத்திற்கு அடிபணிந்தோம். இவை அனைத்திற்கும் மேலாக நாம் உங்களுக்காக ஜெபிக்கிறோம், கிறிஸ்து உங்கள் மீது இரக்கம் காட்டுவார். ஏனென்றால், சத்துருக்களுக்காகவும் ஜெபிக்கக் கற்றுக்கொடுத்தார், ‘உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.’ சர்வவல்லமையுள்ள தேவன் இரக்கமும், மன உருக்கமும் உள்ளவராக இருப்பதைக் காண்கிறோம், ஏனெனில், ‘தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.’ அவர் நமக்குக் கற்பித்த அனைத்தின்படியும் அவர் நியாயந்தீர்ப்பார்.
அத்தியாயம் 97
“ஏனென்றால், மோயீசன் தீர்க்கதரிசியின் கைகள் ஒரே நிலையில் இல்லாதிருந்தமையால், ஊரும் ஆரோனும் அவன் கைகளைத் தாங்கினார்கள்; அப்போது சூரியன் அஸ்தமிக்கும்வரைக்கும் அவன் கைகள் ஒரே நிலையாயிருந்தது. ஏனென்றால், ஆண்டவர் ஏறக்குறைய மாலை வரை மரத்தின் மேல் இருந்தார், அவர்கள் அவரை மாலையில் அடக்கம் செய்தார்கள்; பின்னர் மூன்றாம் நாள் மீண்டும் உயிர்த்தெழுந்தார். இதை தாவீது இவ்வாறு கூறுகின்றார்; ‘நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்கு செவி கொடுத்தார். நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்.’ மேலும் ஏசாயாவும் அவரைப் பற்றி அவர் எப்படி மரிக்கப் போகிறார் என்பதை இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘நலமல்லாத வழியிலே தங்கள் நினைவுகளின்படி நடக்கிற முரட்டாட்டமான ஜனத்தண்டைக்கு நாள் முழுதும் என் கைகளை நீட்டினேன்.’ அவர் மீண்டும் உயிர்த்தெழுவார் என்றும் ஏசாயா கூறினார்: ‘துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக் குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.’ மீண்டும், வேறு விதமாக கூறுவதானால், 22வது சங்கீதத்தில் தாவீது துன்பத்தையும் சிலுவையையும் இவ்வாறு மறைமுகமான உவமையில் குறிப்பிடுகிறார்: ‘என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள். என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போடுகிறார்கள்.’ ஏனென்றால், அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தபோது, ஆணிகளால் அடித்து, அவருடைய கைகளையும் கால்களையும் துளைத்தார்கள்; அவரைச் சிலுவையில் அறைந்தவர்கள் அவருடைய வஸ்திரங்களைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள், ஒவ்வொருவரும் தாம் விரும்பியவற்றை பெறுவதற்கு சீட்டுப்போட்டு, சீட்டின் தீர்மானத்தின்படி பெற்றுக் கொண்டார்கள். நீங்கள் பராமரிக்கும் இந்த சங்கீதம் கிறிஸ்துவைக் குறிக்கவில்லை; ஏனென்றால், நீங்கள் எல்லா வகையிலும் பார்வையற்றவர்களாக இருப்பதால், உங்கள் தேசத்தின் ராஜா அல்லது கிறிஸ்து என்று அழைக்கப்பட்ட எவருக்கும் உயிருடன் இருக்கும்போது அவர்களது கைகளோ கால்களோ குத்தப்பட வில்லை அல்லது இந்த மர்மமான முறையில் இறந்ததில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை, சிலுவையால் – இந்த இயேசு தனியாக காப்பாற்றப்படவில்லை.
அத்தியாயம் 98
“நான் முழு சங்கீதத்தையும் மீண்டும் சொல்கிறேன், தந்தையின் மீதான அவருடைய மரியாதையையும், அவர் எப்படி எல்லாவற்றையும் அவருக்குக் குறிப்பிடுகிறார், இந்த மரணத்திலிருந்து அவரைக் காப்பாற்ற ஜெபிக்கிறார் என்பதையும் நீங்கள் செவிமடுப்பீர்கள். அதே நேரத்தில் அவருக்கு எதிராக யார் எழும்புவார்கள் என்பதை சங்கீதம் வெளிப்படுத்துகிறது, அவர் உண்மையில் துன்பப்படக்கூடிய மனிதராக மாறிவிட்டார் என்பதைக் காட்டுகிறது. அது பின்வருமாறு: ‘என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்? என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், உத்தரவுகொடீர்; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதலில்லை. இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர். எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர். உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்; உம்மை நம்பி வெட்கப்பட்டுப் போகாதிருந்தார்கள். நானோ ஒரு புழு, மனுஷனல்ல; மனுஷரால் நிந்திக்கப்பட்டும், ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன். என்னைப் பார்க்கிறவர்கள் எல்லாரும் என்னைப் பரிகாசம்பண்ணி, உதட்டைப் பிதுக்கி, தலையை ஆட்டி: கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்; இவன்மேல் பிரியமாக இருக்கிறாரே, இப்பொழுது இவனை மீட்டுவிடட்டும் என்கிறார்கள். நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்; என் தாயின் முலைப்பாலை நான் உண்கையில் என்னை உம்முடையபேரில் நம்பிக்கையாயிருக்கப்பண்ணினீர். கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன்; நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் நீர் என் தேவனாயிருக்கிறீர். என்னை விட்டுத் தூரமாகாதேயும்; ஆபத்து கிட்டியிருக்கிறது, சகாயரும் இல்லை. அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பாசான் தேசத்துப் பலத்த எருதுகள் என்னை சூழ்ந்துகொண்டன. பீறி கர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல், என்மேல் தங்கள் வாயைத் திறக்கிறார்கள். தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் இறுக்கிக்கொண்டன, என் இதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று. என் சக்தி ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூளிலே போடுகிறீர். நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை சூழ்ந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் காயப்படும்வரை குத்தினார்கள். என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போடுகிறார்கள். ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; வலிமைமிக்கவரே, எனக்குச் சகாயம்பண்ணத் தயவாயிரும். என் ஆத்துமாவைப் பட்டயத்திற்கும், நான் காத்துக்கொள்ள விழைவதை நாய்களின் பிடியிலிருந்து தப்புவியும். என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் செவிகொடுத்தருளினீர். உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன். கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததியாரே, நீங்கள் எல்லாரும் அவரைக் கனம்பண்ணுங்கள்; இஸ்ரவேலின் வம்சத்தாரே, நீங்கள் எல்லாரும் அவர்பேரில் பயபக்தியாயிருங்கள்.”
அத்தியாயம் 99
நான் இந்த வார்த்தைகளைச் சொன்னதும், நான் தொடர்ந்தேன்: “இப்போது நான் மீண்டும் விளக்கும் வார்த்தைகள் மூலம் முழு சங்கீதமும் கிறிஸ்துவைக் குறிக்கிறது என்பதை உங்களுக்கு விளக்குகிறேன். முதலாவதாக என்ன சொல்லப்படுகின்றது – ‘என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?’ கிறிஸ்துவின் காலத்தில் சொல்ல வேண்டியதை ஆரம்பத்திலிருந்தே அறிவித்தார். அவர் சிலுவையில் அறையப்பட்டபோது கூறினார்: ‘என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?’ மற்றும் பின்வருபவை: ‘எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்? என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், உத்தரவுகொடீர்; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதலில்லை.’ இவைகளும், அவர் செய்ய வேண்டிய காரியங்களும் பேசப்பட்டன. ஏனென்றால், அவர் சிலுவையில் அறையப்பட வேண்டிய நாளில், எருசலேம் தேவாலயத்திற்கு எதிரே அமைந்துள்ள ஒலிவ மலைக்கு தம்முடைய மூன்று சீஷர்களை அழைத்துச் சென்று; ‘என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்’ என்று இந்த வார்த்தைகளில் ஜெபித்தார்: மீண்டும், அவர்: ‘ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது’ என்று ஜெபித்தார்; இதன் மூலம் அவர் உண்மையிலேயே துன்புறும் மனிதராக மாறிவிட்டார் என்பதை காட்டுகிறது. ஆனால், அவர் துன்பப்பட வேண்டும் என்று அப்போது அவருக்குத் தெரியாது என்று யாரும் சொல்லக்கூடாது என்பதற்காகவே: ‘மேலும் அது என்னில் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக அல்ல’ என்று இதை அவர் உடனடியாகச் சங்கீதத்தில் சேர்க்கிறார்.’ ஆதாமிடம் அவன் எங்கே என்று கேட்டபோது, அல்லது ஆபேல் எங்கே என்று காயீனிடம் கேட்டபோது, கடவுள் அதை அறியாமலில்லை; ஆனால் அவர் எப்படிப்பட்ட மனிதர் என்பதை ஒவ்வொருவரையும் நம்ப வைப்பதற்காகவும், [வேதத்தின்] பதிவின் மூலம் நாம் அனைவரையும் பற்றிய அறிவைப் பெறுவதற்காகவும் [அது செய்யப்பட்டது]: அவ்வாறே கிறிஸ்து, அறியாமை தம் பக்கம் இல்லை என்றும், அவர் கிறிஸ்துவல்ல என்று நினைத்தவர்கள் பக்கம் இருப்பதாகவும், ஆனால் அவரைக் கொன்றுவிடுவார்கள் என்றும், அவர் ஒரு சாதாரண மனிதனைப் போல பாதாளத்தில் இருப்பார் என்றும் அறிவித்தார்.”
அத்தியாயம் 100
“தொடர்ந்து என்ன நடக்கிறது – ‘இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர்’ – சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்து மீண்டும் உயிர்த்தெழுப்பப்பட்டுள்ளதால், புகழுக்கும் வியப்பிற்கும் தகுதியான ஒன்றைச் செய்யப் போவதாக அறிவித்தார்; இதை அவர் தந்தையிடமிருந்து பெற்றுள்ளார். ஏனென்றால், கிறிஸ்து யாக்கோபையும் இஸ்ரவேலையும் அழைத்திருக்கிறார் என்பதை நான் ஏற்கனவே காண்பித்திருக்கிறேன். யோசேப்பு மற்றும் யூதாவின் ஆசீர்வாதத்தில் மட்டுமே அவருக்கு மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது என்பதை நான் நிரூபித்துள்ளேன், ஆனால் ‘சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப் பட்டிருக்கிறது;’ மேலும், ‘பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்;’ என்று நற்செய்தியிலும் அவர் கூறியதாக எழுதப்பட்டுள்ளது. அதன்படி, பரிசுத்த வேதாகமத்தில் நாம் கண்ட அனைத்தையும் அவர் கிருபையால் நமக்கு வெளிப்படுத்தினார். அவ்வாறே, முற்பிதாக்களின் குமாரனாவதற்கு, அவர் அவர்களின் வம்சத்தின் கன்னிகையினால் மாம்சமாகினார், மேலும் வசீகரமற்ற, கண்ணியமற்ற, துன்பகரமான மனிதனாவதற்கு தம்மை அர்ப்பணித்தார். எனவே, அவர் தனது எதிர்கால துன்பங்களைப் பற்றி பிரசங்கிக்கும்போது அவருடைய வார்த்தைகளில்: ‘மேலும் மனுஷகுமாரன் பல பாடுகள்படவும், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்திருக்கவும் வேண்டும்’ என்று கூறினார். பின்னர் அவர் தனது பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது போல, தாவீது மற்றும் யாக்கோபு, ஈசாக்கு மற்றும் ஆபிரகாம் ஆகியோரின் வம்சத்தின் கன்னிகையின் மூலம் பிறந்தமையாலும், அல்லது ஆதாம் தனக்கும், மரியாளின் வம்சாவளியின் முன் தோன்றியவர்களுக்கும் தந்தையாக இருந்தமையாலும்; தான் மனுஷகுமாரன் என்றும் கூறினார். ஏனென்றால், பெண்களின் தந்தையர் அவர்களின் குமாரத்திகள் பெற்றெடுக்கும் குழந்தைகளின் தந்தையர் என்பதை நாம் அறிவோம். ஏனெனில் [கிறிஸ்து] ஆரம்பத்தில் சீமோன் பேதுரு என்று அறியப்பட்ட தம்முடைய சீஷர்களில் ஒருவரை அழைத்தார்; ஏனென்றால் அவரது தந்தையின் வெளிப்பாட்டினால், அவர் அவரை கடவுளின் குமாரனாகிய கிறிஸ்து என்று அங்கீகரித்தார்; மேலும் அவருடைய அப்போஸ்தலர்களின் நினைவாற்றல் குறிப்புகளில் அவர் கடவுளின் குமாரன் என்று பதிவு செய்யப்பட்டிருப்பதை நாம் அவதானிப்பதாலும், மற்றும் நாம் அவரை குமாரன் என்று அழைப்பதாலும், அவர் தனது தந்தையின் வல்லமையாலும் சித்தத்தாலும் அனைத்து உயிரினங்களுக்கும் முன் சென்றார் என்பதை நாம் புரிந்து கொண்டோம் [ஏனெனில் அவர் தீர்க்கதரிசிகளின் எழுத்துக்களில் ஏதோ ஒரு வகையில் ஞானம், மற்றும் நாள், மற்றும் கிழக்கு, மற்றும் உடைவாள், மற்றும் கல், மற்றும் தடி, மற்றும் யாக்கோபு, மற்றும் இஸ்ரவேல் என்று கூறப்பட்டுள்ளார்]; மேலும் கீழ்ப்படியாமை சர்ப்பத்திலிருந்து உருவானதைப் போலவே அதனை அழிப்பதற்காக அவர் கன்னிகையின் மூலம் மனிதரானார். கன்னியாகவும் மாசற்றவளாகவும் இருந்த ஏவாள், சர்ப்பத்தின் வார்த்தையைக் கருத்தரித்து, கீழ்ப்படியாமையையும் மரணத்தையும் பெற்றெடுத்தாள். ஆனால் கன்னி மரியாள் ‘பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்;’ என்ற காபிரியேல் தூதனின் நற்செய்தி அவளுக்கு அறிவிக்கப்பட்டபோது நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் பெற்றாள்: எனவே மேலும் அவளிடத்தில் ‘பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும் என்றபோது;’ அவள், ‘உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது’ என்று பதிலளித்தாள். மேலும் பல வேதங்களில் கூறப்பட்டுள்ளபடி அவளால் அவர் பிறந்தார், மேலும் கடவுள் சர்ப்பத்தையும் அதன் தூதர்களையும் மற்றும் அதைப் போன்ற மனிதர்களையும் அழிக்கிறார்; ஆனால், தங்கள் அக்கிரமத்தை நினைத்து மனந்திரும்பி அவரை நம்புகிறவர்களுக்கு மரணத்திலிருந்து இரட்சிப்பு கிரியை செய்கிறது.
அத்தியாயம் 101
பின்னர் தொடர்ந்தும் சங்கீதத்தில் கூறப்படுவது இதுதான். அங்கு அவர் ‘எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர். உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்; உம்மை நம்பி வெட்கப்பட்டுப்போகாதிருந்தார்கள். நானோ ஒரு புழு, மனுஷனல்ல; மனுஷரால் நிந்திக்கப்பட்டும், ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன்’ என்று கூறுகிறார்; கடவுளை நம்பி அவரால் இரட்சிக்கப்பட்டவர்கள், அவர் மனிதனாக பிறப்பதற்காக தெரிந்துகொண்ட கன்னிகையின் தந்தையான அவர்கள் தமது தந்தையர் என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார் என்பதை இது காட்டுகிறது; மேலும் அவர் கடவுளால் மட்டுமே இரட்சிக்கப்படுவார் என்று முன்னறிவித்தார், ஆனால் தனது சித்தத்தினாலோ, வல்லமையினாலோ எதையும் சாதிப்பதாகப் பெருமைக்கொள்ளவில்லை. ஏனெனில், அவர் பூமியில் இருந்தபோது, அவ்விதமாகவே நடந்து கொண்டார், மேலும் அவரை ‘நல்ல போதகரே:’ என்று அழைத்தவருக்கு ‘நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே’ என்று பதிலளித்தார். ‘ஆனால் அவர் சொல்லும்போது, நானோ ஒரு புழு, மனுஷனல்ல; மனுஷரால் நிந்திக்கப்பட்டும், ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன்,’ என்று தனது சூழ்நிலையையும், மற்றும் தமக்கு நடக்கப் போகும் விடயங்களையும் முன்னறிவித்தார். ஏனென்றால், அவரை நம்புகிற நாம் எங்கும் நிந்திக்கப்படுகிறோம். ‘ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன்;’ ஏனெனில், உங்கள் தேசத்தால் நிராகரிக்கப்பட்டு அவமதிக்கப்பட்டவர், நீங்கள் அவருக்கு எதிராக திட்டமிட்ட அவமானங்களை அவர் அனுபவித்தார். மேலும் பின்வருவது போன்று தனக்கு நடக்கும் என்று அவர் முன்னறிவித்தார்: ‘என்னைப் பார்க்கிறவர்களெல்லாரும் என்னைப் பரிகாசம் பண்ணி, உதட்டைப் பிதுக்கி, தலையை ஆட்டி: கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்; இவன்மேல் பிரியமாயிருக்கிறாரே, இப்பொழுது இவனை மீட்டு விடட்டும் என்கிறார்கள்.’ அவர் முன்னறிவித்ததுபோலவே சிலுவையில் அறையப்பட்ட அவரைப் பார்த்தவர்கள் ஒவ்வொருவரும் தமது தலையை ஆட்டி உதட்டைப் பிதுக்கி, தமது மூக்கை ஒருவருக்கொருவர் உராய்ந்து அவர்கள் அவருடைய அப்போஸ்தலர்களின் நினைவாற்றல் குறிப்புகளில் எழுதப்பட்ட வார்த்தைகளை ஏளனமாகப் பேசினார்கள்: ‘தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள்.’
அத்தியாயம் 102
‘மேலும் பின்வருவது – ‘நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்; என் தாயின் முலைப்பாலை நான் உண்கையில் என்னை உம்முடையபேரில் நம்பிக்கையாயிருக்கப்பண்ணினீர். கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உம்மால் ஏற்றுக்கொள்ளப் பட்டுவிட்டேன்; நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் நீர் என் தேவனாயிருக்கிறீர். என்னை விட்டுத் தூரமாகாதேயும்; ஆபத்து கிட்டியிருக்கிறது, சகாயரும் இல்லை. அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பாசான் தேசத்துப் பலத்த எருதுகள் என்னை சூழ்ந்து கொண்டன. பீறி கர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல், என்மேல் தங்கள் வாயைத் திறக்கிறார்கள். தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று. என் சக்தியெல்லாம் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூளிலே போடுகிறீர்’ – – ‘என் தாயின் முலைப்பாலை நான் உண்கையில் . . . நம்பிக்கையாயிருக்கப்பண்ணினீர்’ என்ற கூற்று [இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது]; என்ன நடக்கும் என்று முன்னறிவித்தது. அவர் பெத்லகேமில் பிறந்தவுடனே, நான் முன்பு கூறியது போல், ஏரோது என்ற அரசன், அவரைப் பற்றி அரேபிய சாஸ்திரிகள் மூலம் அறிந்து, அவரைக் கொல்ல சதி செய்தார், கடவுளின் கட்டளைப்படி யோசேப்பு மரியாளுடன் அவரை அழைத்துக்கொண்டு எகிப்துக்குப் புறப்பட்டார். ஏனெனில், தம்மால் பிறந்தவர் கொல்லப்பட வேண்டும் என்று தந்தை விதித்திருந்தார், ஆனால் அவர் முழு மனிதனாக வருவதற்கு முன்னரே அல்ல, மேலும் அவரிடமிருந்து வந்த வார்த்தையை அறிவித்தார். உங்களில் எவரேனும் எம்மிடம் கடவுள் ஏரோதைக் கொன்றிருக்க முடியாதா? என்று சொன்னால், நான் எதிர்பார்ப்புடன் பதிலைத் தருகிறேன்: ‘உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்’ என்று சொல்வதை விட, கடவுள் ஆதியிலேயே சர்ப்பம் இல்லாதபடிக்கு விலக்களித்திருக்க முடியாதா? அவர் ஒரே நேரத்தில் ஏராளமான மனிதர்களைப் சிருஷ்டித்திருக்க முடியாதா? ஆனால் அது நல்லது என்று அவர் அறிந்திருந்ததால், அவர் நீதியைச் செய்ய சுதந்திரமான தேவதூதர்களையும் மனிதர்களையும் சிருஷ்டித்தார், மேலும் சுதந்திரமாக செயல்படுவது நல்லது என்று அவர்கள் அறிந்த காலங்களை நியமித்தார்; அது நல்லது என்று அவர் அறிந்ததால், அவர் பொதுவான மற்றும் குறிப்பிட்ட தீர்ப்புகளை வழங்கினார். இருப்பினும், ஒவ்வொருவரின் விருப்ப சுதந்திரமும் பாதுகாக்கப்படுகிறது. எனவே கோபுரத்தின் அழிவு மற்றும் மொழிகளின் பிரிவு மற்றும் மாற்றம் ஆகியவற்றின் போது வேதாகமம் பின்வருமாறு கூறுகின்றது: ‘அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள்.’ மேலும், ‘என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூளிலே போடுகிறீர்’ என்ற கூற்று, தந்தையின் விருப்பப்படி அவர் என்ன செய்வார் என்பது பற்றிய முன்னறிவிப்பாகவும் இருந்தது. எப்பொழுதும் பரிசேயர்களையும் வேதபாரகர்களையும், சுருக்கமாகச் சொன்னால், அவரைக் கேள்வி கேட்ட உங்கள் தேசத்தின் அனைத்து போதகர்களையும், அவரின் பலம்மிக்க வார்த்தையின் வல்லமையால் குழப்பிக்கொண்டிருந்த அவர், பிலாத்துவின் முன்னிலையில் யாருக்கும் பதிலளிக்காது இருப்பதை தெரிவுசெய்த போது, ஒரு வளமான மற்றும் வலுவான நீரூற்றின் நீர் நிறுத்திவிடப்பட்டதை போல் இருந்தது. அவருடைய அப்போஸ்தலர்களின் நினைவாற்றல் குறிப்புகளில் வெளிப்படுத்தப்பட்டபடி, ஏசாயா ‘சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்;’ என்று குறிப்பிடுகிறார், அதனால் அது பதிவுசெய்யப்பட்டு பலனளிக்கும். மீண்டும் அவர் கூறியதாவது, ‘தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்;’ ‘நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்; மேலும் பிற மனிதர்களைப் போல் பிறப்பினாலோ செல்வத்தினாலோ வலிமையினாலோ ஞானத்தினாலோ இரட்சிப்பு கிடைக்கும் என்று நினைக்காதீர்கள். உங்கள் செயல்கள் இவைதான்: நீங்கள் ஒரு கன்றுக்குட்டியை உருவாக்கியபோது, நீங்கள் எப்போதும் நன்றியற்றவர்களாகவும், நீதியுள்ள கொலைகாரர்களாகவும், உங்கள் சந்ததியினரைப் பற்றி பெருமையாகவும் இருந்தீர்கள். ஏனென்றால், தேவனுடைய குமாரன் இரட்சிக்கப்பட முடியும் என்று தெளிவாக அறிவிக்கப்பட்டால், [அல்லது] அவர் ஒரு குமாரனாக இருப்பதினால் அல்ல, அல்லது அவர் வலிமையானவர் அல்லது ஞானமுள்ளவர் என்பதற்காக அல்ல, ஆனால் கடவுள் இல்லாமல் அவர் பாவமற்றவராக இருந்தாலும், அவர் இரட்சிக்கப்பட முடியாது, ஏசாயா தனது மொழியில் அவர் வார்த்தைகளால் கூட எந்தப் பாவமும் செய்யவில்லை என்பதை அறிவிக்கிறார் [அவர் வாயால் அக்கிரமமோ வஞ்சகமோ செய்யவில்லை], இந்த நம்பிக்கை இல்லாமல் இரட்சிப்பை எதிர்பார்க்கும் நீங்களும் மற்றவர்களும் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளவில்லை என்று எப்படி நினைக்க முடியும்?
அத்தியாயம் 103
“பின்னர் சங்கீதத்தில் என்ன கூறப்பட்டுள்ளது – ‘அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பாசான் தேசத்துப் பலத்த எருதுகள் என்னை சூழ்ந்துகொண்டது. பீறி கர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல், என்மேல் தங்கள் வாயைத் திறக்கிறார்கள். தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் இறுக்கிக்கொண்டன,’ – இது அவருக்கு நடந்த நிகழ்வுகளின் முன்னறிவிப்பாகவும் இருந்தது. ஏனென்றால், உங்கள் தேசத்தில் பரிசேயர்களாலும், வேதபாரகராலும், போதகர்களாலும் அனுப்பப்பட்ட சிலர், அன்றிரவு ஒலிவ மலையிலிருந்து அவரிடம் வந்தபோது, யாரை வேதாகமத்தில் முட்டுக்கட்டை என்று அழைத்தார்களோ அவர்களும் மற்றும் முன்கூட்டியே அழிக்கும் கன்றுகளும் அவரைச் சூழ்ந்தன. மேலும் வெளிப்பாடுமூலம், ‘அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கிறது;’ அவர்கள் உங்கள் போதகர்களுக்கு முன்னால் கொண்டு வரப்பட்டபோது, ஏற்கனவே அவர் கன்றுக்குட்டிகளைப் போல நடந்து கொண்டவர்களைப் பற்றி கூறியிருந்தார். வேதாகமம் அவர்களைக் காளைகள் என்று விவரித்தது. ஏனென்றால், காளைகள்தான் கன்றுக்குட்டிகள் உயிர்வாழ்வதற்கான காரணகர்த்தா என்பதை நாம் அறிவோம். ஆகையால், காளைகள் கன்றுகளை ஈன்றது போலவே, உங்கள் பிள்ளைகளை ஒலிவ மலைக்கு அழைத்துச் சென்று அவர்களை அவரிடம் கொண்டு வருவதற்கு உங்கள் போதகர்களே காரணம். மேலும், ‘சகாயரும் இல்லை,’ என்ற வெளிப்பாடும் என்ன நடந்தது என்பதைக் குறிக்கிறது. ஏனென்றால், ஒரு அப்பாவியாக அவருக்கு உதவ ஒரு மனிதரேனும் இல்லை. மேலும், ‘பீறி கர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல், என்மேல் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்,’ என்ற வார்த்தை, அப்போது யூதர்களின் ராஜாவாக இருந்தவரைக் குறிக்கிறது, ஏரோது என்று அழைக்கப்பட்டவன், கிறிஸ்து பிறந்த போது, பெத்லகேமில் பிறந்த அனைத்து குழந்தைகளையும் ஒரே நேரத்தில் கொன்றான், ஏனென்றால், அரேபியாவில் இருந்து வந்த சாஸ்திரிகள் யாரைப் பற்றி பேசுகிறார்களோ அவர் அவர்களில் நிச்சயமாக இருப்பார் என்று அவன் கற்பனை செய்தான்; யோசேப்பும் மரியாளும் குழந்தையை எடுத்துக்கொண்டு எகிப்துக்குச் செல்லவும், அவர்கள் தமது சொந்த நாட்டிற்குத் திரும்புவதற்கான ஒரு வெளிப்பாடு வரும் வரை அங்கேயே இருக்கவும் அவர் எவ்வாறு கட்டளையிட்டார் என்பதை அவன் அறியாதவனாக இருந்தான். பெத்லகேமில் குழந்தைகளைக் கொன்ற ஏரோது இறக்கும் வரை அவர்கள் அங்கேயே இருந்தார்கள், அவருக்குப் பிறகு அர்கெலாஸ் பதவிக்கு வந்தான். மேலும், கிறிஸ்து தம் தந்தையால் அவருக்குக் கொடுக்கப்பட்ட சிலுவையின் காலகட்டத்திற்கு வருவதற்கு முன்பே அவன் மரித்தான். ஏரோது அர்கெலாவுக்குப் பின்னர் ராஜாவாகி, அவரிடம் ஒப்படைக்கப்பட்ட அதிகாரத்தைப் பெற்றபோது, பிலாத்து இயேசுவைக் கட்டி அன்பளிப்பாக அவனிடம் அனுப்பினான்; இது நடக்கும் என்று கடவுள் முன்னறிவித்து, இவ்வாறு கூறினார்: ‘ராஜாவுக்கு அன்பளிப்பாக, அவர்கள் அவரை அசீரியரிடம் கொண்டு வந்தனர்.’ அல்லது சிங்கம் தனக்கு எதிராக கர்ஜிக்கும் பிசாசைக் குறிக்கிறது: மோயீசன் யாரை சர்ப்பம் என்று அழைக்கிறார், ஆனால் யோபு மற்றும் சகரியாவில் அவர் பிசாசு என்று அழைக்கப்படுகிறான், மேலும் இயேசு சாத்தான் என்று அழைக்கிறார், அவன் செய்த செயல்களால் அவனுக்கு ஒரு கூட்டுப் பெயர் கிடைத்தது என்பது காண்பிக்கப்படுகிறது. யூத மற்றும் சிரிய மொழியில் ‘சதா’ (‘Sata’) என்றால் விசுவாச துரோகி என்று பொருள்; மற்றும் ‘நாஸ்’ (‘Nas’) என்பது அவர் சர்ப்பம் என்று வர்ணிக்கப்படும் வார்த்தையாகும், அதாவது, எபிரேய வார்த்தையின் விளக்கத்தின்படி, இந்த இரண்டிலிருந்தும் ஒரே வார்த்தையான சதாநாஸ் (Satanas) தோன்றுகிறது. இயேசு யோர்தான் நதியிலிருந்து வெளியேறிய நேரம், ‘நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஏற்றுக்கொண்டேன் என்ற குரல் அவரிடம் பேசியது,’ இது பிசாசு அவரிடம் வந்து அவர் சோதிக்கப்பட்டபோது அப்போஸ்தலர்ளின் நினைவாற்றல் குறிப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது, அவரை நோக்கி, ‘என்னை பணிந்துகொள்ளும்;’ என்று சொல்லும் அளவுக்கு அவரைச் சோதித்தான்; அதற்கு கிறிஸ்து, என்னைவிட்டு நீங்கிப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக’ என்றார். ஆதாமை ஏமாற்றியது போல், கிறிஸ்துவுக்கு எதிராகவும் ஏதாவது தீமை செய்ய வேண்டும் என்று அவன் நினைத்தான். மேலும், அறிக்கையில், ‘தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் இறுக்கிக்கொண்டன, என் இதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று,’ என்று ஒரு கணிப்பு இருந்தது, இது அன்று இரவு அவரைப் பிடிக்க மக்கள் ஒலிவ மலைக்கு வந்தபோது அவருக்கு என்ன நடந்தது என்பதற்கான ஒரு தீர்க்கதரிசனம். ஏனென்றால், அவருடைய அப்போஸ்தலர்களாலும் அவர்களைப் பின்பற்றியவர்களாலும் எழுதப்பட்டதாக நான் சொல்லும் நினைவாற்றல் குறிப்புகளில், அவர் ஜெபித்தபோது அவருடைய வியர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது, ‘பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்;’ அவருடைய எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, அவரின் இதயம் மெழுகுபோலாகி, அவரது குடல்களின் நடுவே உருகிற்று; தம்முடைய குமாரன் நமக்காக இப்படிப்பட்ட துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்று பிதா உண்மையிலேயே விரும்பினார் என்பதையும், கடவுளுடைய குமாரனாகிய அவர், அவருக்கு என்ன நடக்கிறது என்பதை தான் அறியாமலேயே தன்மீது சுமத்தப்பட்டதாக அவர் கூறவில்லை என்பதையும் நாம் புரிந்துகொள்வோம். மேலும், ‘என் சக்தியெல்லாம் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூளிலே போடுகிறீர்,’ என்ற வெளிப்பாடு, நான் முன்பு குறிப்பிட்டது போல், உங்கள் போதகர்கள் அனைவரையும் ஞானமற்றவர்கள் என்று குற்றம் சாட்டியவர் எந்தப் பதிலும் அளிக்காத போது ஏற்பட்ட அமைதி அதுவாகும்.”
அத்தியாயம் 104
“மற்றும் அறிக்கையில் ‘நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை சூழ்ந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் காயப்படும்வரை குத்தினார்கள். என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப் போடுகிறார்கள்,’ நான் ஏற்கனவே சொன்னது போல, துன்மார்க்கரின் ஜெப ஆலயம் அவருக்கு மரண தண்டனை விதிக்கிறது. அவர் நாய்கள் மற்றும் கொலைக்காரர்கள் என்று அழைக்கப்படுகிறார், மேலும் அவரை வேட்டையாடியவர்கள் இருவரும் ஒன்றிணைந்து அவரைக் கண்டிக்க பாடுபட்டதாகக் கூறப்படுகிறது என்பது ஒரு கணிப்பு. இது அவருடைய அப்போஸ்தலர்களின் நினைவாற்றல் குறிப்புகளில் நடந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் சிலுவையில் அறையப்பட்ட பின்னர், அவரை சிலுவையில் அறைந்தவர்கள் அவருடைய வஸ்திரங்களைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள் என்பதை நான் காண்பித்தேன்.”
அத்தியாயம் 105
“மேலும் தொடர்ந்தும் சங்கீதத்தில், ‘ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ண சித்தமாயிரும். என் ஆத்துமாவைப் பட்டயத்திற்கும், நான் போற்றுவதை நாய்களின் பிடியிலிருந்து காத்தருளும். என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் செவிகொடுத்தருளினீர்.’ அவருக்கு ஏற்பட வேண்டிய நிகழ்வுகளின் தகவலும் தீர்க்கதரிசனமுமாக இருந்தது. ஏனென்றால், அவர் அனைத்துக்கும் தந்தையின் ஒரே பேறானவர் என்பதை நான் ஏற்கனவே நிரூபித்துள்ளேன், அவரால் வார்த்தையினாலும் ஆற்றலிலும் விநோதமான முறையில் பிறந்தார், அதன் பின்னர் கன்னிகையின் மூலம் மனிதனாக உருவாக்கப்பட்டார், என்பதை நினைவாற்றல் குறிப்புகளிலிருந்து நாம் கற்றுக்கொண்டோம். மேலும், அவர் சிலுவையில் அறையப்பட்டு மரிப்பார் என்று முன்னறிவிக்கப் பட்டிருக்கிறது. இப் பகுதியில், ‘என் ஆத்துமாவைப் பட்டயத்திற்கும், நான் போற்றுவதை நாய்களின் பிடியிலிருந்து காத்தருளும். என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் செவிகொடுத்தருளினீர்,’ என்பது அவர் சிலுவையில் அறையப்பட வேண்டிய துன்பத்தைக் குறிக்கிறது. மற்றும் அவருடைய ஆன்மா பட்டயத்திற்கு காப்பாற்றப்பட வேண்டும் என்பதுவே அவரது மன்றாட்டாகும், மேலும் சிங்கத்தின் வாய்க்கும், நாயின் துஷ்டதனத்திற்கும், அவரது ஆன்மாவை யாரும் கைப்பற்றக் கூடாது என்பது அவரது மன்றாட்டாகும்; எனவே, நாம் வாழ்க்கையின் இறுதிக்கு வரும்போது, ஒவ்வொரு வெட்கக்கேடான தீய தூதரையும் நம் ஆன்மாவிலிருந்து விலக்கக்கூடிய அந்த வேண்டுகோளை நாமும் கடவுளிடம் வைக்கலாம். மேலும், இதேபோன்ற நீதிமான்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் அனைத்து ஆன்மாக்களும் அத்தகைய சக்திகளின் ஆதிக்கத்தின் கீழ் விழுந்தன என்பதாக காணப்படுகின்றது, இது உண்மையிலேயே அந்த அஞ்சனம் பார்ப்பவளின் விடயத்தில் உள்ள உண்மைகளிலிருந்து ஊகிக்கப்படுகிறது. ஆதலால் தேவன், யாருடைய நிமித்தம் இவைகள் செய்யப்பட்டன என்று தோன்றுகிறதோ, எப்பொழுதும் தீவிரமாகப் பிரயாசப்படவும், மரணத்தில் இருக்கும் நம்முடைய ஆத்துமாக்கள் அப்படிப்பட்ட ஒரு வல்லமையால் ஆட்கொள்ளப் படாமல் இருக்கவும் ஜெபிக்க தம்முடைய குமாரன் மூலமாக நமக்குக் கற்பித்தார். பரிசேயர்களின் வாழ்க்கை முறையை மேற்கொள்ளுமாறு அவர் தம் சீஷர்களுக்கு அறிவுரை கூறினார், ஏனென்றால், அவ்வாறு செய்யாவிடின் அவர்கள் இரட்சிக்கப் படுவதில்லை என்பது உறுதி என்று எச்சரித்தார்; மேலும் இந்த வார்த்தைகள் நினைவாற்றல் குறிப்புகளில்: ‘வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்,’ என்று பதிவு செய்யப்பட்டுள்ளன.”
அத்தியாயம் 106
“சங்கீதத்தின் எஞ்சிய பகுதி, தம்முடைய தந்தை தாம் கேட்டதையெல்லாம் கொடுப்பார் என்றும், அவரை மரித்தோரிலிருந்து எழுப்புவார் என்றும் அவர் அறிந்திருந்தார் என்பதை வெளிப்படுத்துகிறது; சிலுவையில் அறையப்பட்ட அவருடைய மறைபொருள் மூலம், விசுவாசிகளான எல்லா இனத்தவர் மீதும் அவர் இரக்கம் கொண்டிருந்ததால், கடவுளுக்குப் பயப்படுகிற அனைவரையும் தம்மைத் துதிக்கும்படி அவர் வலியுறுத்தினார்; மேலும் அவருடைய சகோதரர்களான அப்போஸ்தலர்களின் நடுவில் அவர் நின்றார் என்றும் [அவர் சிலுவையில் அறையப்பட்டபோது அவரை விட்டு ஓடிப்போனதற்காக மனம் வருந்தியவர்கள், அவர் மரித்தோரிலிருந்து எழுந்த பின்னர், மேலும் அவர்கள் அவராலேயே வற்புறுத்தப்பட்ட பின்னர், தனது பேரார்வத்திற்கு முன் இவைகளை அனுபவிக்க வேண்டும் என்று அவர்களிடம் கூறினார், மேலும் ஏற்கனவே அவை தீர்க்கதரிசிகளால் முன்னறிவிக்கப்பட்டன.], மேலும் அவர் அவர்களுடன் வாழ்ந்த போது அவர்கள் கடவுளைப் புகழ்ந்து பாடினார்கள் என்றும் அப்போஸ்தலர்களின் நினைவாற்றல் குறிப்புகளிலிருந்து தெளிவாகிறது. அந்த வார்த்தைகள் பின்வருமாறு: ‘உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன். கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததியாரே, நீங்கள் எல்லாரும் அவரைக் கனம்பண்ணுங்கள்;
இஸ்ரவேலின் வம்சத்தாரே, நீங்கள் எல்லாரும் அவர்பேரில் பயபக்தியாயிருங்கள்.’ அப்போஸ்தலர்களில் ஒருவரின் பெயரை பேதுரு என்று மாற்றினார் என்று சொல்லப்பட்டால்; இது செய்யப்பட்டது என்று அவரது நினைவாற்றல் குறிப்புகளில் எழுதப்பட்டுள்ளது, அவர் செபதேயுவின் மகன்களான, மற்ற இரண்டு சகோதரர்களின் பெயர்களை, இடியின் மகன்கள் என்று பொருள்படும் பொவனெர்கேஸ் என்று மாற்றினார்; யாக்கோபு இஸ்ரவேல் என்றும், ஹோசியா இயேசு [யோசுவா] என்றும், எகிப்திலிருந்து வந்தவர்களில் உயிர் பிழைத்தவர்கள் முற்பிதாக்களுக்கு வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்பதற்கான அறிவிப்பும் இதுவாகும். மேலும் அவர் ஆபிரகாமின் சந்ததியிலிருந்து நட்சத்திரமாக எழ வேண்டும் என்பதற்காக, ‘ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்;’ என்று மோயீசன் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளார், மற்றொரு வேதப்பகுதியில், ‘இதோ, ஒரு புருஷன், அவருடைய நாமம் கிளை என்னப்படும்’ என்று கூறியுள்ளது. அதன்படி, அவர் பிறந்த நேரத்தில் ஒரு நட்சத்திரம் பரலோகத்திலிருந்து உதித்தபோது, அவரது அப்போஸ்தலர்களின் நினைவாற்றல் குறிப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, அரேபியாவில் இருந்து சாஸ்திரிகள், இந்த அடையாளத்தை உணர்ந்து, வந்து அவரை வணங்கினர்.”
அத்தியாயம் 107
உங்கள் தேசத்தில் சிலர் அவரிடம், ‘என்ன அடையாளத்தை எங்களுக்குக் காண்பிக்கிறீர்;’ என்பதை, அவர் சிலுவையில் அறையப்பட்டு மூன்றாவது நாளில் மீண்டும் உயிர்த்தெழுந்த போது நினைவுகூர்ந்தார்கள் என்று குறிப்புகளில் எழுதப் பட்டுள்ளது, மேலும் அவர் அவர்களுக்கு பிரதியுத்தரமாக: ‘இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கத்தரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை’ என்றார். இதை அவர் மறைமுகமாகப் பேசிருந்தாலும், அவர் சிலுவையில் அறையப்பட்ட பின்னர் மூன்றாம் நாளில் மீண்டும் உயிர்த்தெழும்ப வேண்டும் என்பதை பார்வையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் அவர் உங்கள் தலைமுறை நினிவே நகரத்தை விட மிகவும் பொல்லாததும் விபச்சாரம் நிறைந்ததும் என்று காண்பித்தார்; அதன் பின்னர், பெரிய மீனின் வயிற்றிலிருந்து மூன்றாம் நாளில் தூக்கி எறியப்பட்ட பின்னர், மூன்று [மற்றைய பதிப்புகளில், நாற்பது] நாட்களுக்குப் பின்னர் அவை அனைத்தும் அழிந்துவிடும் என்று யோனா அவர்களுக்குப் பிரசங்கித்தபோது, கடவுள் இரக்கமுள்ளவர் என்பதாலும் மற்றும் துன்மார்க்கத்திலிருந்து திரும்பும் அனைவருக்கும் இரக்கமுள்ள தேவன் என்ற நம்பிக்கையில்; மனிதர்கள் மற்றும் மிருகங்கள், இரட்டுடுத்தி, புலம்பி, உண்மையாய் மனந்திரும்பி, பொல்லாத வழிகளிலிருந்து விலகும்படி, அனைத்து உயிரினங்களுக்கும் உபவாசத்தை அறிவித்தார்கள்; எனவே நினிவேயின் ராஜாவும், தன் சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தான் உடுத்தியிருந்த உடுப்பைக் கழற்றிப்போட்டு, இரட்டை உடுத்திக்கொண்டு, சாம்பலிலே உட்கார்ந்து, உபவாசம் இருந்து, தன் நகரம் அழிவுக்குள்ளாகாதபடி ஜெபித்ததோடு தன் பிரபுக்களுக்கும் கட்டளையிட்டான். ஆனால் அவர் அறிவித்தபடி [நாற்பதாம்] மூன்றாம் நாளில், நகரம் அழிக்கப்படவில்லை என்று யோனா வருத்தப்பட்டபோது, யோனாவுடைய தலையின்மேல் நிழலுண்டாயிருக்கவும், அவனை அவனுடைய மனமடிவுக்கு நீங்கலாக்கவும் தேவனாகிய கர்த்தர் ஒரு ஆமணக்குச் செடியை முளைக்கக் கட்டளையிட்டு, அதை அவன்மேல் ஓங்கி வளரப்பண்ணினார்; அந்த ஆமணக்கின்மேல் யோனா மிகவும் சந்தோஷப்பட்டான் [யோனா ஆமணக்கு செடியை நடவுமில்லை அதற்கு நீர்பாய்ச்சவுமில்லை, ஆனால் அது தானாகவே வளர்ந்து அவனுக்கு நிழல் கொடுத்தது], மேலும் மறுநாளில் அது காய்ந்துபோனதின் நிமித்தம் அவன் துக்கப்பட்டான், நினிவே நகரை அழிக்காததற்காக அதிருப்தியடைந்தமைக்காக அவர் [கடவுள்] அவனைக் கடிந்துகொண்டார், மேலும் ‘நீ பிரயாசப்படாததும், நீ வளர்க்காததும், ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரு இராத்திரியிலே அழிந்துபோனதுமான ஆமணக்குக்காகப் பரிதபிக்கிறாயே. வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ?’ என்று கூறினார்.”
அத்தியாயம் 108
“யோனாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை உங்கள் தேசத்து மனிதர்கள் அனைவரும் அறிந்திருந்தாலும், யோனாவின் அடையாளத்தைக் கொடுப்பேன் என்று கிறிஸ்து உங்களிடையே சொன்னாலும், அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த பின்னராவது உங்கள் பொல்லாத செயல்களிலிருந்து மனந்திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தினார், மேலும் உங்கள் தேசமும் நகரமும் கைப்பற்றப்பட்டு அழிவுக்குட்படுத்தப்படாதபடி, நினிவேவாசிகளைப் போலவே கடவுளுக்கு முன்பாக புலம்ப வேண்டும்; ஆயினும் அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதை அறிந்த பின்னரும் நீங்கள் மனந்திரும்பவில்லை, நான் முன்பு சொன்னது போல, நாம் சிலுவையில் அறைந்த கலிலேயனாகிய இயேசு ஒரு வஞ்சகன், தெய்வீகமற்ற மற்றும் நியாயப்பிரமானத்திற்கு எதிராக துரோகம் செய்வதற்காக தோன்றியவன் என்றும், மேலும் அவரது சீஷர்கள் அவரை சிலுவையில் இருந்து இறக்கி வைக்கப்பட்ட கல்லறையிலிருந்து இரவில் திருடி, இப்போது அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து பரலோகத்திற்கு சென்றுவிட்டார் என்று கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றும், அறிவிப்பதற்காக உலகெங்கிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்டவர்களை அனுப்பியுள்ளீர்கள். மேலும், அவரைக் கிறிஸ்து என்றும், கடவுளின் மைந்தன் என்றும் ஒப்புக்கொள்பவர்களைக் கண்டிப்பதற்காக நீங்கள் குறிப்பிடும் அந்த தெய்வீகமற்ற, நியாயப்பிரமாணத்திற்குட்படாத மற்றும் புனிதமற்ற கோட்பாடுகளை அவர் கற்பித்ததாக நீங்கள் குற்றம் சாட்டுகிறீர்கள், இது தவிர, உங்கள் நகரம் கைப்பற்றப்பட்டாலும், உங்கள் தேசம் அழிக்கப்பட்டாலும், நீங்கள் மனந்திரும்பவில்லை, ஆனால் அவர் மீதும் அவரை நம்புபவர்கள் மீதும் குற்றஞ்சாட்டத் துணிகிறீர்கள். ஆனால் நாம் உங்களையோ அல்லது உங்கள் மூலம் எங்களுக்கு எதிராக இத்தகைய தப்பான எண்ணங்களை உருவாக்கியவர்களையோ வெறுக்கவில்லை; ஆனால் இப்போதும் நீங்கள் அனைவரும் மனந்திரும்பி, இரக்கமும் நீடிய பொறுமையுமுள்ள எம் அனைவரினதும் தந்தையான கடவுளிடமிருந்து இரக்கத்தைப் பெற வேண்டும் என்று நாம் மன்றாடுகிறோம்.”
அத்தியாயம் 109
“ஆனால், எருசலேமில் இருந்து அவருடைய அப்போஸ்தலர்கள் பிரசங்கித்த கோட்பாட்டைக் கேட்டு, அவர்கள் மூலம் கற்றுக்கொண்ட கோட்பாட்டைக் கேட்டபோது, புறஜாதியார் தாங்கள் செய்த தீமைக்காக மனந்திரும்புவார்கள் என்று, பன்னிரண்டு தீர்க்கதரிசிகளில் [சிறு தீர்க்கதரிசிகளில்] ஒருவரான மீகாவின் தீர்க்கதரிசனத்திலிருந்து ஒரு சிறிய கூற்றை நான் உங்களுக்குக் மேற்கோளிட்டு காட்ட விரும்புகிறேன். இது பின்வருமாறு: ‘ஆனாலும், கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா ஜாதிகளும் அதினிடத்திற்கு ஓடிவருவார்கள். திரளான ஜாதிகள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும். அவர் திரளான ஜனங்களுக்குள் நியாயந்தீர்த்து, தூரத்திலுள்ள பலத்த ஜாதிகளைக் கடிந்துகொள்ளுவார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் மாற்றுவார்கள்; ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை. அவனவன் தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று. சகல ஜனங்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்; நாங்களும் எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம். கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அந்நாளிலே நான் முடவனைக் குணமடையச் செய்து, சோர்ந்துபோனோரையும் கூட்டிக்கொண்டு, முடவனை ஆரோக்கியமானவனாகவும், பக்கவாதக்காரனை பலமுள்ளவனாகவும் ஆக்குவேன்; அவர்கள்பேரில் கர்த்தர் சீயோன் பர்வதத்திலே என்றென்றைக்கும் அரசராயிருப்பார்.’
அத்தியாயம் 110
மேலும் நான் இந்த வார்த்தைகளை முடித்ததும், நான் தொடர்ந்தேன்: “உங்கள் போதகர்கள் இந்தப் பந்தியின் முழு வார்த்தைகளும் கிறிஸ்துவைக் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதை இப்போது நான் அறிவேன்; மேலும் அவர் இன்னும் வரவில்லை என்று அவர்கள் கூறுவதையும் நான் அறிவேன்; அல்லது அவர் வந்ததாகச் சொன்னால் அவர் யாரென்று தெரியாது என்று உறுதியாக அறிவிக்கிறார்கள்; ஆனால் அவர் வெளிப்படுத்தப்பட்டு மகிமைப்படுத்தப்படும்போது, அவர் யார் என்று அறியப்படுவார். அப்போது, தீர்க்கதரிசன வார்த்தைகள் இன்னும் பலன் கொடுக்காதது போல, இந்தப் பந்தியில் சொல்லப்பட்ட சம்பவங்கள் நடக்கும் என்கிறார்கள். ஓ’ நியாயமற்ற மனிதர்களே! கிறிஸ்துவின் இரண்டு வருகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று இந்த அனைத்துப் பகுதிகளாலும் நிரூபிக்கப்பட்டதை புரிந்து கொள்ளவில்லை: ஆனால் மற்றையது, அவர் மகிமையுடன் பரலோகத்திலிருந்து வருவார், (6) உன்னதமானவருக்கு எதிராக விசித்திரமான விடயங்களைப் பேசும் மனிதன், கற்றறிந்த கிறிஸ்தவர்களாகிய நமக்கு எதிராக பூமியில் நியாயப்பிரமாணத்திற்கு எதிரான செயல்களைச் செய்யத் துணிவான், நியாயப்பிரமாணத்திலிருந்து கடவுளின் உண்மையான வழிபாடும், இயேசுவின் அப்போஸ்தலர்கள் மூலம் எருசலேமிலிருந்து புறப்பட்ட வார்த்தையும், யாக்கோபின் கடவுளிடமும் இஸ்ரவேலின் கடவுளிடமும் பாதுகாப்பிற்காக ஓடிப்போனது: யுத்தத்தினாலும், பரஸ்பர படுகொலைகளினாலும், ஒவ்வொரு அக்கிரமத்தினாலும் நிரம்பியிருந்த நாம், ஒவ்வொருவரும் பூமி முழுவதிலும் நமது போர்க்கருவிகளை உங்கள் மண்வெட்டிகளைப் பட்டயங்களாகவும், உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகவும் மாற்றுங்கள், நாம் பக்தியையும், நீதியையும் வளர்த்துக் கொள்கிறோம், சிலுவையில் அறையப்பட்டவர் மூலம் பிதாவிடமிருந்து நாம் பெற்றுள்ள பரோபகாரம், விசுவாசம் மற்றும் நம்பிக்கையால் ஒவ்வொரு மனிதனும் தன் திராட்சைக் கொடியின் கீழ் அமர்ந்திருக்கிறான், அதாவது, ஒவ்வொரு மனிதனும் திருமணமான தன் சொந்த மனைவியை உடையவனாயிருக்கிறான். ஏனெனில், ‘உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப் போல் இருப்பாள்’ என்று தீர்க்கதரிசன வார்த்தை கூறுவதை நீங்கள் அறிவீர்கள். உலகம் முழுவதும் இயேசுவை நம்பியிருக்கும் நம்மை யாராலும் பயமுறுத்தவோ அல்லது அடக்கிவைக்கவோ முடியாது என்பது இப்போது தெளிவாகிறது. ஏனென்றால், நாம் தலை துண்டிக்கப்பட்டாலும், சிலுவையில் அறையப்பட்டாலும், காட்டுமிருகங்களிடம் தள்ளப்பட்டாலும், மற்றும் சங்கிலியால், தீயினால் சித்திரவதை செய்யப்பட்டாலும், நாம் வாக்குமூலத்தைக் கைவிட மாட்டோம் என்பது தெளிவாகிறது. ஆனால் இதுபோன்ற விடயங்கள் எவ்வளவு அதிகமாக நடக்கிறதோ, அவ்வளவு அதிகமாக மற்றவர்களும் திரளான மக்களும் உண்மையுள்ளவர்களாக இருப்பதோடு, இயேசுவின் நாமத்தில் கடவுளை வழிபடுகிறவர்களாகின்றனர். அதாவது, கொடியின் கனிதரும் கிளைகளை ஒருவர் வெட்டுவது போல, அது மீண்டும் வளர்ந்து, மற்ற கிளைகள் செழித்து, காய்க்கும்; அப்படியிருக்கும்போது நமக்கும் அதேதான் நடக்கும். ஏனென்றால், கடவுளாலும் இரட்சகராகிய கிறிஸ்துவாலும் நடப்பட்ட திராட்சைக் கொடி அவருடைய மக்கள். ஆனால் எஞ்சிய தீர்க்கதரிசனம் அவரது இரண்டாவது வருகையில் நிறைவேறும். ‘அவர் பாதிக்கப்பட்டவர் [மற்றும் துரத்தப்பட்ட]’ என்ற வார்த்தையின் வெளிப்பாடு, அதாவது, உலகத்திலிருந்து, [குறிப்பாக], நீங்களும் மற்ற எல்லா மனிதர்களும் உங்கள் அதிகாரத்தில் இருப்பதால், ஒவ்வொரு கிறிஸ்தவரும் தனது சொந்த உடைமைகளிலிருந்து மட்டுமல்ல, முழு உலகத்திலிருந்தும் விரட்டப்பட்டிருக்கிறார்கள்; எனவே நீங்கள் எந்தவொரு கிறிஸ்தவரையும் வாழ அனுமதிக்கவில்லை. ஆனால் உங்கள் சொந்த தேசத்துக்கும் அதே நிலைமை வந்துவிட்டது என்கிறீர்கள். இப்போது, போரில் தோல்வியடைந்த பிறகு நீங்கள் நாடுகடத்தப்பட்டிருந்தால், எல்லா வேதங்களும் சாட்சியமளிப்பது போல், நீங்கள் உண்மையில் அத்தகைய சிகிச்சையை அனுபவித்துள்ளீர்கள்; ஆனால் நாம் கடவுளின் உண்மையை அறிந்த பின்னர், அத்தகைய [தீய செயல்களில்] எதுவும் செய்யாவிட்டால், நாம் மிகவும் நீதியுள்ள, ஒரே மாசற்ற மற்றும் பாவமற்ற கிறிஸ்துவுடன் பூமியிலிருந்து எடுத்துக்கொள்ளப் படுவோம் என்று கடவுள் சாட்சி பகர்கின்றார். ‘நீதிமான் மடிந்துபோகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை; புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை’ என்று ஏசாயா புலம்புகிறார்.”
அத்தியாயம் 111
‘உபவாசத்தின் போது பலியிட நிர்ணயிக்கப்பட்ட ஆடுகளின் சின்னத்தின் ஒத்ததாக இந்த கிறிஸ்துவின் இரண்டு வருகைகள் இருக்கும் என்று மோயீசனின் காலத்தில் ஒருதலைப்பட்சமாகக் கணிக்கப்பட்டது என்பதை நான் முன்பே சுட்டிக்காட்டினேன். மோயீசன் மற்றும் ஜோஸ்யூவின் செயல்கள் மூலம் இது அடையாளபூர்வமாக அறிவிக்கப்பட்டு முன்னறிவிக்கப்பட்டது: மோயீசன் மாலை வரை மலையின் மீது கைகளை நீட்டி ஆதரவு தரும் சைகையுடன் அமர்ந்திருந்தார் (இது சிலுவையை ஞாபமூட்டுவதாக இருந்ததே தவிர வேறொன்றுமில்லை); [Osee] என்பதிலிருந்து இயேசு [Josue] என்று பெயர் மாற்றப்பட்ட ஜோசு, இஸ்ரவேலர்கள் வெற்றி பெற்ற போரில் தளபதியாக இருந்தார். இந்த செயல்கள் புனிதர்களாலும் கடவுளின் தீர்க்கதரிசிகளாலும் செய்யப்பட்டன என்பதை ஒருவர் இலகுவாக புரிந்து கொள்ள முடியும், ஏனென்றால் சிலுவையின் இயல்பு மற்றும் அதன் வகை இந்த இரண்டு புனித இரகசியங்களையும் ஒருவரால் கொண்டிருக்க முடியாது. ஏனென்றால், இது அன்றும், இன்றும் இனி எப்போதும் அவருக்கு மட்டுமே பலமாக இருந்தது, இருக்கிறது, இருக்கும். அந்த சக்திக்கு முன் எல்லா சக்திகளும் அஞ்சுகின்றன, ஏனென்றால் மிகவும் வேதனையுடன் முன் கொண்டு செல்லப்படும் அவை அவரால் வெற்றிகொள்ளப்படும் என்பதால் மட்டுமே. ஆகவே, நம்முடைய துன்பமும் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவும் நியாயப்பிரமாணத்தால் சபிக்கப்படவில்லை, ஆனால் அவருடைய விசுவாசத்தை விட்டு விலகாதவர்களை அவர் ஒருவரே என்றும் இரட்சிப்பார் என்பதை வெளிப்படுத்தினார். மேலும் பஸ்காவின் இரத்தம், ஒவ்வொரு மனிதனின் கதவு நிலைகளிலும், தூண்களிலும் தெளிக்கப்பட்டு, எகிப்தில் முதற்பேறானவர்கள் அழிக்கப்பட்டபோது அங்கே இரட்சிக்கப்பட்டவர்களை விடுவித்தது. ‘அவர் கொல்லப் படுவதற்குக் கொண்டு செல்லப்பட்டார்’ என்று ஏசாயா சொன்னது போல், பஸ்கா கிறிஸ்துவே, பின்னர் பலியிடக் கொண்டு செல்லப் படும் செம்மறியாய் இறுதியில் பலியிடப்பட்டார். மேலும், பஸ்கா நாளிலே நீங்கள் அவரைப் பிடித்தீர்கள் என்றும், பஸ்கா பண்டிகையின்போது அவரைச் சிலுவையில் அறைந்தீர்கள் என்றும் எழுதியிருக்கிறது. பஸ்காவின் இரத்தம் எகிப்தில் இருந்தவர்களை இரட்சித்தது போல, கிறிஸ்துவின் மாசில்லா திரு இரத்தம் விசுவாசிக்கிறவர்களை மரணத்திலிருந்து விடுவிக்கும். இந்த அடையாளம் கதவுகளுக்கு மேலே இல்லாவிட்டால் கடவுள் ஏமாற்றப்பட்டிருப்பாரா? நான் அப்படிச் சொல்லவில்லை; ஆனால் கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் மனித இனத்திற்கு எதிர்கால இரட்சணியம் உண்டு என்று அவர் முன்பே அறிவித்தார் என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன். நேவின் (நூன்) மகன் யோசுவாவுடைய உளவுக்காரர்கள் எரிகோவுக்கு எடுத்துச் சென்ற கருஞ்சிவப்பு நூலின் அடையாளத்தை எதிரிகளிடமிருந்து தப்பிக்க ராகாப் என்ற விபச்சாரியிடம் அதை ஜன்னலில் கட்டச் சொல்லும்படி சொன்னது, கிறிஸ்துவின் இரத்தத்தின் அடையாளத்தை வெளிப்படுத்தியது. இதன் மூலம் ஒரு காலத்தில் விபச்சாரிகளாகவும் எல்லா தேசங்களிலிருந்தும் அயோக்கியர்களாகவும் இருந்தவர்கள் இரட்சிக்கப்பட்டனர். பாவ மன்னிப்பைப் பெற்றனர், மேலும் எதிர்காலத்தில் பாவத்தில் இருந்து விடுபட்டு வாழ்வதற்கு கற்றுக்கொண்டனர்.
அத்தியாயம் 112
‘ஆனால், வார்த்தைகளில் விளக்கப்பட்ட உணர்வைப் ஆராயாமல், நீங்கள் அவற்றை எவ்வித அடிப்படையும் இல்லாமல் விளக்கி, அனைத்து பலவீனங்களையும் கடவுளிடம் சுமத்தி, வெறுப்பூட்டும் விதத்தில் இந்தப் பகுதிகளை விளக்குகிறீர்கள். உங்கள் கூற்றுப்படி, மோயீசன் கூட நியாயப்பிரமாணத்தை மீறுபவராகத் தீர்ப்பளிக்கப்படுவார், ஏனென்றால் அவர், வானத்திலோ பூமியிலோ அல்லது கடலிலோ உள்ள எந்தப் பொருட்களின் பிம்பத்தையும் உருவாக்கக்கூடாது என்று கட்டளையிட்ட பிறகு) தனிப்பட்ட முறையில் ஒரு வெறுக்கத்தக்க பித்தளை பாம்பை உருவாக்கி அதை ஒரு அடையாளமாக ஒரு கொடியின் மீது வைத்து, பாம்புகளால் தீண்டப்பட்டவர்களை அதைப் பார்க்கும்படி கட்டளையிட்டார். அதை பார்த்தவர்கள் இதனால் குணமடைந்தனர். அப்படியானால், அந்த நேரத்தில் பாம்பு மக்களைக் காப்பாற்றியது என்று நினைக்க முடியுமா? நான் சுட்டிக்காட்டியபடி, கடவுள் ஆரம்பத்தில் சபித்த பாம்பு, ஏசாயா சாட்சியமளிப்பது போல் பெரிய வாளால் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டது? ஆகவே, இவற்றைச் சின்னங்களாகக் கருதுவதற்குப் பதிலாக, உங்கள் ஆசிரியர்கள் தரும் முட்டாள்தனமான விளக்கங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியுமா? மேலும் இந்த அடையாளத்தில் சிலுவையில் அறையப் பட்ட இயேசுவின் உருவத்தைப் பற்றிய குறிப்பை நாம் பார்க்க வேண்டாமா? மோயீசனும் தன் கைகளை அகல விரித்ததும், இயேசு என்று பெயர்கொண்டவர் உங்கள் மக்களுக்கு வெற்றியை அளித்தார். மனிதனின் கீழ்ப்படியாமை என்ற பாவத்திற்குக் காரணமான ஒரு சர்ப்பத்தின் மீது நம்பிக்கை வைக்க மக்களைத் தூண்டிய போதும், அவர் கடவுளைக் கைவிடாத படியால், சட்டத்தை இயற்றியவரின் செயல்களைப் பற்றி நாம் இனி சந்தேகப்படமாட்டோம். உண்மையில், இவை அனைத்தும் ஆசீர்வதிக்கப்பட்ட தீர்க்கதரிசிகளால் மிகவும் பிரதிபலிப்புடனும் உள்ளார்ந்த அர்த்தத்துடனும் கூறப்பட்டும் நிறைவேற்றப்பட்டுள்ள இருந்தது. பொதுவாக தீர்க்கதரிசிகளின் எந்த வார்த்தையையும் செயலையும் யாராலும் சரியாகக் கண்டிக்க முடியாது. ஆனால், உங்கள் ஆசிரியர்கள், உங்களிடம் எத்தை பேர் இருந்தாலும், அவர்கள் ஒரு குறிப்பிட்ட பத்தியில் ஏன் ஆண் ஒட்டகங்கள் பற்றிக் குறிப்பிடப்பட வில்லை, அல்லது பெண் ஒட்டகங்கள் என்று அழைக்கப்படுபவை யாவை? அல்லது மாவு ஏன் இவ்வளவு மென்மைவாய்ந்ததாக இருக்கவேண்டும்? காணிக்கைகளில் எவ்வளவு எண்ணெய் அளவுகள் பயன்படுத்தப்படுகின்றன என்பது போன்றவற்றை மட்டுமே உங்களுக்கு மிகவும் எளிதாக விளக்குகிறார்கள். ஆனால் விசாரிக்கப்பட வேண்டிய, தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களைக் குறிப்பிடவோ விளக்கவோ அவர்கள் ஒருபோதும் துணிவதில்லை. அப்படியானால் நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் இந்த வார்த்தைகளைக் கேட்க அவர்கள் தகுதியற்றவர்களா? கிறிஸ்து அவர்களுக்கு எதிராகப் பேசினார்: “நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகள், அவை வெளிப்புறமாக அழகாகத் தோன்றினாலும், உள்ளே இறந்தவர்களின் எலும்புகள் நிறைந்துள்ளன; உழைப்பில் தசமபாகம் கொடுக்கிறீர்கள்; நீங்கள் ஒட்டகத்தை விழுங்குகிறீர்கள், குருடர்களுக்கு வழிகாட்டிகளாக இருக்கிறீர்கள்”? எனவே, ரப்பி என்று அழைக்கப்பட தகுதிபெற்ற, பெருமைமிக்க ஆசிரியர்களின் கோட்பாடுகளை நீங்கள் வெறுக்காத வரையில், தீர்க்கதரிசிகளுக்கு நேர்ந்த அதே நிந்தை அவமானங்களை உங்கள் மக்கள் மூலம் நீங்கள் அனுபவிக்கிறீர்கள். எனவே தீர்க்கதரிசன வார்த்தைகளில் இருந்து நீங்கள் எந்தப் பலனையும் பெற முடியாது என்பதால், நீங்கள் அறிந்து கொண்டவற்றை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள்.
அத்தியாயம் 113
“நான் என்ன சொல்கிறேன் என்றால், இயேசு (யோசுவா), நான் இப்போது அடிக்கடி குறிப்பிட்டுள்ளபடி, அதாவது கானான் தேசத்தை உளவு பார்க்க அனுப்பப்பட்டபோது ஓஷியா என்று அழைக்கப் பட்டவர், மோசஸ் இயேசு (யோசுவா) என்ற பெயரால் பெயரிடப்பட்டார். அவர் ஏன் இதைச் செய்தார் என்பதை பற்றிக் நீங்கள் கேட்கவும் இல்லை, அதேநேரம் அதில் எந்த நஷ்டமும் இல்லை. ஆகவே அதுபற்றி அதிகம் விசாரிக்கவும் இல்லை. எனவே, கிறிஸ்து உங்கள் கவனத்தில் இருந்து விடுபட்டார். நீங்கள் அதைப்பற்றி படித்தாலும் உங்களுக்கு புரியவில்லை. இப்போதும், இயேசுதான் நம்முடைய கிறிஸ்து என்று நீங்கள் கேள்விப் பட்டாலும், நீங்கள் அதை உண்மையென்று ஏற்றுக்கொள்வதில்லை. இந்த பெயர் அவருக்கு சூட்டப்பட்டது வேண்டுமென்றே அல்லது தற்செயலாக அல்ல. ஆனால் ஆபிரகாமின் முதல் பெயருடன் ஒரு‘a’ மேலதிகமாக ஏன் சேர்க்கப்பட்டது என்றும், சாராவின் பெயரில் ஒரு ‘r’ ஏன் மேலதிகமாக சேர்க்கப்பட்டது என்பது குறித்தும் நீங்கள் இறையியலை மேற்கோள் காட்டி தேவையற்ற விவாதம் செய்கிறீர்கள்; நீங்கள் இதே போன்ற அதிக வார்த்தை ஜாலங்களைக் கொண்டு சர்ச்சைகளை ஏற்படுத்துகிறீர்கள். அப்படியானால், நேவியின் (நூனே) மகன் ஓஷியாவுக்கு அவனது தந்தை வைத்த பெயர் இயேசு (ஜோசுவா) என்று மாற்றப்பட்டதற்கான காரணத்தை நீங்கள் ஏன் விசாரிக்கவில்லை? ஆனால் அவரது பெயர் மாற்றம் செய்யப்பட்டது மட்டுமல்லாமல், அவர் மோயீசனின் வாரிசாக நியமிக்கப்பட்டார். எகிப்திலிருந்து வெளியேறிய அவரது சமகாலத்தவர்களில் ஒருவராக இருந்ததால், அவர் எஞ்சியிருந்த மக்களை புனித பூமிக்கு அழைத்துச் சென்றார்; மோயீசன் அல்ல, அவர் மக்களைப் புனித தேசத்திற்கு அழைத்துச் சென்று, தன்னுடன் நுழைந்தவர்களுக்கு அந்த நிலத்தைப் பகிர்ந்தளித்தது போல, இயேசு கிறிஸ்துவும் சிதறிப்போன மக்களை ஒருமுகப்படுத்தி ஒவ்வொருவருக்கும் நல்ல நிலத்தைப் பங்கிடுவார். அதே முறையில் இல்லா விட்டாலும் அவர் அதி நிறைவேற்றினார். முன்னையவர் அவர்களுக்கு ஒரு தற்காலிகச் சுதந்தரத்தைக் கொடுத்தார். ஏனெனில் அவர் கடவுளோ அல்லது கடவுளின் மகனோ அல்ல. ஆனால் பிந்தையவர், தனது பரிசுத்த உயிர்த்தெழுதலுக்குப் பிறகு நமக்கு நித்திய வெகுமதியைக் கொடுத்தார். முன்னையவர், அவர் இயேசு (யோசுவா) என்று பெயரிடப்பட்ட பிறகு, மற்றும் வலிமை பெற்ற பிறகு நமக்கு சுதந்தரத்தைக் கொடுத்தார். அவருடைய சக்தி, சூரியனை அசையச் செய்தது. ஏனென்றால், மோயீசன், ஆபிரகாம் மற்றும் மற்ற எல்லா முற்பிதாக்களுக்கும் விதிவிலக்கு இல்லாமல், பிதாவின் சித்தத்திற்கு அமைய ஊழியம் செய்து அவர்களுடன் தோன்றி உரையாடியவர் இயேசு தான் என்பதை நான் நிரூபித்தேன்; அவர், கன்னி மரியாளினால் மனிதனாக அவதரித்தவர் என்றும் என்றென்றும் வாழ்கிறார் என்றும் நான் ஆணித்தரமாகக் கூறுவேன். ஆனால், பிந்தையவரான அவர், அவருக்குப் பிறகு, அவர் மூலமாக, இறை தந்தையானவர் வானத்தையும் பூமியையும் புதுப்பிப்பார்; இவரே எருசலேமின் மீது நித்திய ஒளியைப் பிரகாசிப்பார்; இவரே மெல்கிசேதேக்கின் கட்டளைப்படி சாலேமின் அரசராகவும் உன்னதமானவரின் நித்திய ஆசிரியராகவும் இருக்கிறார். ஜோஸ்யூ கல் மற்றும் கத்திகள் மூலம் மக்களை இரண்டாவது முறையாக விருத்தசேதனம் செய்ததாகப் பேசப்பட்டவர் (இது இயேசு கிறிஸ்து தானே கல் மற்றும் பிற பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளிலிருந்து நம்மை வேறுபடுத்திய அந்த விருத்தசேதனத்தின் அறிகுறியாகும்) விருத்தசேதனமில்லாமல் (அதாவது, மனிதப் பிழை காரணமாக) எல்லா இடங்களிலிருந்தும் வந்தவர்களை ஒருமுகப் படுத்தும்படியாக கல் கத்திகளால் விருத்தசேதனம் செய்யப்பட்டனர், அதாவது நம் கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகள் போலவே இதுவும் நிறைவேற்றப் பட்டது. ஏனென்றால், கிறிஸ்து தீர்க்கதரிசிகளால் ஒரு கல்லும் பாறையுமாக இருப்பவர் என்று உவமைகள் மூலம் அறிவிக்கப் பட்டார் என்பதை நான் சுட்டிக்காட்டினேன். அதன்படி, கல்லால் செய்யப்பட்ட கத்திகள் அவருடைய வார்த்தைகளைக் குறிக்கும், இதன் மூலம் தவறாக இருந்த பலர் விருத்தசேதனம் செய்யாமல் மனத்தால் மட்டும் விருத்தசேதனம் செய்யப்பட்டனர், அதைக் கொண்டு கடவுள் இயேசுவின் மூலம் இதய விருத்தசேதனம் செய்யக் கட்டளையிட்டார். ஆபிரகாமிடமிருந்து விருத்தசேதனம் செய்யப்பட்டது, இயேசு (யோசுவா) அந்தப் புனித தேசத்துக்குள் நுழைபவர்களை கல்லால் செய்யப்பட்ட கத்திகளால் இரண்டாவது முறையாக விருத்தசேதனம் செய்வார் என்று கூறினார்.
அத்தியாயம் 114
‘பரிசுத்த ஆவியானவர் சில சமயங்களில் எதிர்காலத்தில் வெளிப்படையாகச் செய்ய வேண்டிய ஒன்றை எமக்கு உணர்த்துகிறார். மற்ற சமயங்களில் எதிர்காலத்தைப் பற்றிய விஷயங்கள் உண்மையில் நடப்பது போலவோ அல்லது ஏற்கனவே நடந்துவிட்டதாகவோ எமக்கு அவரது வார்த்தைகள் மூலமாக உணர்த்துகிறார். இப்படிப் பேசும் முறையை நன்கு அறிந்து கொள்ளாத பட்சத்தில், வாசகர்கள் தீர்க்கதரிசனத்தின் முழுப் பொருளையும் புரிந்து கொள்ள மாட்டார்கள். இந்த விஷயத்தை விளக்குவதற்கு, நான் சில தீர்க்கதரிசன வார்த்தைகளை மேற்கோள் காட்டுகிறேன். பரிசுத்த ஆவியானவர் ஏசாயாவின் மூலம், “அவர் பாதிக்கப்பட்டார், தண்டிக்கப்பட்டார். ஆனால் அவர் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கொல்லப்படுவதற்காக கொண்டு போகப்படும் ஆட்டுக்குட்டியைப் போன்று, அவர் எதுவும் சொல்லவில்லை! தனது மயிரைக் கத்தரிக்கும்போது சத்தமிடாமல் இருக்கும் ஆட்டைப்போல் அவர் அமைதியாக இருந்தார்! அவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தன் வாயைத் திறக்கவில்லை” என்று கூறும்போது, திட்டமிட்டபடி அவை ஏற்கனவே நிகழ்ந்தது போல் பேசுகிறார். மேலும், “எனக்கு எதிராகத் திரும்பிய ஜனங்களை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக நின்றேன். என்னிடம் வருகின்ற ஜனங்களுக்காக நான் காத்திருந்தேன். ஆனால் அவர்கள் தொடர்ந்து நன்மையற்ற வழியில் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்களின் இதயங்கள் விரும்பிய எல்லாவற்றையும் செய்தனர்” என்று அவர் கூறும்போதும், “நாங்கள் சொல்வதை யார் உண்மையில் நம்பினார்கள்? கர்த்தருடைய தண்டனையை உண்மையில் யார் ஏற்றுக் கொண்டார்கள்?” போன்ற வார்த்தைகளினூடாக, நிகழ்வுகளை ஏற்கனவே நடந்ததைப் போல அவர் கூறுகிறார். உவமையில் அவர் கிறிஸ்துவை ஒரு பாறை என்று அடிக்கடி அழைப்பதையும், யாக்கோபு மற்றும் இஸ்ரவேல் என்ற பெயர்களை உரை நடையில் பயன்படுத்தப் பட்டுள்ளதையும் நான் மேலே காட்டியுள்ளேன். மேலும் அவர், “கர்த்தாவே, உமது கரங்களின் மகிமையால் நீர் சிருஷ்டித்த வானத்தையும் நான் கண்டேன். நீர் படைத்த நிலவையும், நட்சத்திரங்களையும் நான் கண்டு ஆச்சரியமடைந்தேன்.” என்று கூறும்போது, அவருடைய வார்த்தையின் பரிமாணத்தை நான் புரிந்து கொள்ளாவிட்டால், நான் அவரது வார்த்தைகளையும் புரிந்துகொள்ளாத தவறிவிடுகிறேன் என்று தான் அர்த்தம். அப்படியானால், பரலோகத்தின் தந்தை, அவதரிக்காத கடவுளுக்கு கைகள், கால்கள் மற்றும் விரல்கள் மற்றும் இவை அனைத்தும் ஒருங்கே அமைந்த ஒரு உயிரினம் போன்ற ஆன்மா இருப்பதாக கற்பனை செய்யும் உங்கள் ஆசிரியர்களைப் போலவே நானும் இருந்திருப்பேன். இந்த நம்பிக்கையின் விளைவாகவே, அவர்கள் தந்தை தாமே ஆபிரகாமுக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானார் என்று கூறுகிறார்கள். மேலும், கல் மற்றும் கத்தியால் ஆனவற்றைக் கொண்டு இரண்டாவது விருத்தசேதனத்தைப் பெற்ற நாங்கள் உண்மையில் மகிழ்ச்சியடைகிறோம், உங்கள் முதல் விருத்த சேதனம் உங்கள் இதயத்தின் கடினத்தன்மைக்கு ஏற்ப உலோகக் கருவிகளால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எங்கள் விருத்த சேதனமோ, அதாவது இரண்டாவது விருத்தசேதனம், நீங்கள் உருவ வழிபாட்டிலிருந்தும் மற்ற எல்லா பாவங்களிலிருந்தும் எமக்கு விலக்களித்து, எம்மைக் கூர்மையான கற்களால் விருத்தசேதனம் செய்து; அதாவது, மூலைக்கல் என்று அறியப்பட்ட, மனித கைகளால் செதுக்கப்படாத கல் என்று கருதப்பட்ட அவருடைய அப்போஸ்தலர்கள் சொன்ன வார்த்தைகளால் மேற்கொள்ளப்பட்டது. உண்மையில், நம் இதயங்கள் பாவத்திலிருந்து விருத்தசேதனம் செய்யப்பட்டுள்ளன, அந்த உன்னதமான பாறையின் திருநாமத்திற்காக நாம் மரிக்கும்போது கூட நாம் பெருமை கொள்வோம். அது அவர் மூலம் பிரபஞ்ச தந்தையை நேசிப்பவர்களின் இதயங்களுக்கும் அதை ஏற்றுக்கொள்ள இசைபவர்களுக்கும் வாழ்வுதரும் நீராய் இருக்கிறார். ஆனால் கிறிஸ்து என்ன செய்வார் என்று முன்னறிவிக்கப்பட்ட விஷயங்களை நீங்கள் அறியாததால், நீங்கள் என் வார்த்தைகளின் அர்த்தத்தை புரிந்து கொள்ளத் தவறிவிட்டீர்கள். அல்லது நாங்கள் வேதாகமத்தை மேற்கோள் காட்டி குறிப்பிடும்போதும் கூட நீங்கள் எங்களை நம்பவில்லை. ஏனெனில், எரேமியாஸ் இவ்வாறு உரக்கக்கூறுகிறார்: “எனது ஜனங்கள் இரு தீய செயல்களைச் செய்திருக்கின்றனர்; அவர்கள் என்னிடமிருந்து விலகினார்கள், (நான் உயிருள்ள தண்ணீரின் ஊற்றாக இருக்கிறேன்). அப்படியிருந்தும், அவர்கள் தாங்களாகவே தங்களுக்கு தண்ணீர்க் கிணறுகளைத் தோண்டினார்கள். (அவர்கள் அந்நிய கடவுளர்களிடம் சென்று வழிபட்டனர்). ஆகவே அவர்களுடைய தண்ணீர்த் தொட்டிகள் உடைந்தன, அத்தொட்டிகளில் தண்ணீர் தங்குவதில்லை.” அத்தோடு மேலும் எரேமியா கூறுகையில், “இஸ்ரவேல் விசுவாசம் இல்லாமல் போனது. நான் ஏன் அவளை அனுப்பினேன், என்று இஸ்ரவேல் அறிந்தது. யூதா சோரமாகிய பாவத்தைச் செய்ததால், நான் அவளை நிராகரித்து விட்டேன் என்று இஸ்ரவேல் அறிந்துகொண்டது” என்றும் கூறப்பட்டுள்ளது.
அத்தியாயம் 115
“ஆனால் சகரியா கிறிஸ்துவின் மறைபொருளை உவமையாகக் காட்டும்போது, அதை தெளிவற்ற முறையில் அறிவிக்கும்போது நீங்கள் நம்ப வேண்டும். அவருடைய வார்த்தைகள் பின்வருமாறு: ‘சீயோன் குமாரத்தியே, உரத்தக்குரலில் பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அந்நாளிலே அநேகம் ஜாதிகள் கர்த்தரோடு இணைந்து அவர் வசமானவர்கள்; நான் உன் நடுவில் வாசமாயிருப்பேன்; அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை உன்னிடத்தில் அனுப்பினாரென்று அறிவாய். கர்த்தர் பரிசுத்த தேசத்திலே யூதாவாகிய தமது பங்கைச் சுதந்தரித்து, திரும்பவும் எருசலேமைத் தெரிந்துகொள்வார். மாம்சமான சகலமான பேர்களே, கர்த்தருக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; அவர் தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து எழுந்தருளினார் என்று சொல் என்றார். அவர் பிரதான ஆசாரியனாகிய [இயேசு] யோசுவாவை எனக்குக் காண்பித்தார்; அவன் கர்த்தருடைய தூதனுக்கு முன்பாக நின்றான்; சாத்தான் அவனுக்கு விரோதஞ்செய்ய அவன் வலதுபக்கத்திலே நின்றான். அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக சாத்தானே, எருசலேமைத் தெரிந்துகொண்ட கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக, இவன் அக்கினியினின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா?’
டிரைபோ (Trypho) எனக்கு பதில் சொல்லவும், முரண்படவும் நினைத்தபோது, ‘முதலில் நான் சொல்வதைக் கேள்: ஏனென்றால், உங்கள் தேசம் கைதிகளாக இருந்த பாபிலோன் தேசத்தில் யோசுவா [இயேசு] என்ற பெயருடைய ஒரு ஆசாரியர் இல்லை என்று நீங்கள் நினைக்கும் விளக்கத்தை நான் கொடுக்க மாட்டேன். ஆனால் நான் செய்தாலும், தீர்க்கதரிசி அவருடைய வெளிப்பாட்டில் அவரைப் பார்க்கவில்லை என்ற போதிலும், பிசாசையோ இறைவனின் தூதனையோ தன் கண்களால் பார்க்காதது போல், மற்றும் அவரது விழித்திருக்கும் நிலையில், மயக்கத்தில், அவருக்கு வெளிப்படுத்தும் நேரத்தில், உங்கள் தேசத்தில் யோசுவா [இயேசு] என்ற ஒரு ஆசாரியர் இருந்தர் என்பதையும் நான் சுட்டிக்காட்டியதாக கூறினேன். ஆனால் நான் இப்போது சொல்கிறேன், இயேசு [யோசுவா] என்ற பெயருடைய நேவின் [நூன்] மகன் [வேதம்] கூறுவது போல், நம்முடைய கர்த்தரால் முன்னறிவிக்கப்பட்ட வலிமையான செயல்களையும் வீரச்செயல்களையும் செய்தார். ஆகையால், ஆசாரியனாகிய இயேசுவின் [யோசுவா] காலத்தில் பாபிலோனில் உங்கள் மக்களிடையே வெளிப்படுத்தப்பட்ட வெளிப்பாடு, நம்முடைய ஆசாரியராகிய தேவனாலும், அனைவருக்கும் தந்தையாகிய தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவாலும் நிறைவேற்றப்பட வேண்டிய காரியங்களின் அறிவிப்பாகும் என்பதை இப்போது காட்டுகிறேன்.
“உண்மையில், நான் ஆச்சரியப்பட்டேன்,” நான் தொடர்ந்தேன், “சற்று முன் நான் பேசும் போது நீங்கள் ஏன் மௌனம் காத்தீர்கள், எகிப்திலிருந்து புனித பூமிக்குள் நுழைய வந்த சமகாலத்தவர்களில் இளையவர்கள் என்று விபரிக்கப்படுகின்ற நேவின் [நூன்] மகனின் தலைமுறயினரின் ஆண்கள் மட்டும்தான் என்று நான் சொன்னபோது ஏன் குறுக்கிடவில்லை? ஒருவர் பத்தாயிரம் வார்த்தைகளை நன்றாகப் பேசினாலும், ஒரு சிறிய வார்த்தை உங்களுக்குப் பிடிக்காததாக இருந்தால், போதுமான புரிதல் அல்லது துல்லியம் இல்லாததால், பல நல்ல வார்த்தைகளைக் புறக்கணித்து, சிறிய வார்த்தையைப் பற்றிக் கொண்டு, தீங்கிழைக்கும் மற்றும் குற்றவாளியாக அதை அமைப்பதில் வைராக்கியம் கொண்டிருக்கிறீர்கள்; நீங்கள் அதே நியாயத்தீர்ப்புடன் கடவுளால் நியாயந்தீர்க்கப்படும்போது, உங்கள் பெரிய துணிச்சலானது, தீய செயல்கள் அல்லது உண்மையைப் பொய்யாக்குவதன் மூலம் நீங்கள் பெறும் மோசமான விளக்கங்கள் பற்றிய கனமான கணக்கு உங்களுக்கு இருக்கலாம். ஏனென்றால், நீங்கள் எந்தத் தீர்ப்பைக் கொண்டு தீர்ப்பளிக்கிறீர்களோ, அதன்படி நீங்கள் நியாயந்தீர்க்கப்படுவது நியாயமானது.
அத்தியாயம் 116
“ஆனால், பரிசுத்த இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாட்டின் விளக்கத்தை உங்களுக்கு வழங்க, நான் மீண்டும் எனது உரையை எடுத்து, அந்த வெளிப்பாடு கூட கிறிஸ்துவின் பிரதான ஆசாரியனை நம்பும் நமக்காக, அதாவது, இந்த சிலுவையில் அறையப்பட்டவரில் செய்யப்பட்டது என்று அறிவிக்கிறேன்; நாம் வேசித்தனத்திலும், எல்லாவிதமான அசுத்தமான உரையாடல்களிலும் வாழ்ந்தாலும், நம்முடைய இயேசுவின் கிருபையினால், அவருடைய பிதாவின் சித்தத்தின்படி, நம்மில் சுமத்தப்பட்ட எல்லா அசுத்தமான அபாண்டங்களும் நம்மிடமிருந்து அகற்றப்பட்டது. பிசாசு நம்மை எதிர்க்க எப்பொழுதும் தயாராக இருந்தாலும், எல்லாரையும் தனக்குள் கவர்ந்திழுக்க ஆர்வமாக இருந்தாலும், கடவுளின் தூதன், அதாவது, இயேசு கிறிஸ்து மூலம் நமக்கு அனுப்பப்பட்ட கடவுளின் வல்லமை, அவரைக் கண்டித்து, அவர் நம்மை விட்டு வெளியேற்றுகிறார். அக்கினியிலிருந்து நாம் காப்பாற்றப்பட்டு நம்முடைய முன்னைய பாவங்களிலிருந்து சுத்திகரிக்கப்பட்டு, பிசாசும் அவனைப் பின்பற்றுபவர்களும் நம்மைச் சோதிக்கும் துன்புறுத்தல் மற்றும் உமிழும் சோதனையிலிருந்து நாம் காப்பாற்றப்பட்டோம்; அதிலிருந்து தேவனுடைய குமாரனாகிய இயேசு மீண்டும் நம்மை விடுவிப்பதாகவும், அவருடைய கட்டளைகளைக் கடைபிடித்தால் ஆயத்த ஆடைகளை நமக்குத் தருவதாகவும் வாக்குக் கொடுத்திருக்கிறார்; மேலும் நித்திய ராஜ்ஜியத்தை [நமக்காக] கொடுக்க உறுதிபூண்டுள்ளார். ஏனென்றால், தீர்க்கதரிசியால் ஆசாரியர் என்று அழைக்கப்பட்ட இயேசு [யோசுவா] அசுத்தமான ஆடைகளை அணிந்திருந்தார், ஏனென்றால் அவர் ஒரு மனைவியாக ஒரு விபச்சாரியை இணைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது, மேலும் அவர் மன்னிக்கப்பட்டதால் நெருப்பிலிருந்து பறிக்கப்பட்ட முத்திரை என்று அழைக்கப்படுகிறார்; இருப்பினும், எல்லாவற்றையும் ஒரே மனிதனாகச் சிருஷ்டித்த கடவுளை நம்பிய இயேசுவின் பெயரால், அவருடைய முதற்பேறான குமாரனின் பெயரால், நம்முடைய அழுக்கு ஆடைகளை, அதாவது நம்முடைய பாவங்களை அகற்றிவிட்டோம்; மேலும், அவருடைய அழைப்பின் வார்த்தையால் கடுமையாகத் தூண்டப்பட்டு, நாம் கடவுளின் உண்மையான பிரதான ஆசாரிய இனமாக இருக்கிறோம், புறஜாதியார் மத்தியில் எல்லா இடங்களிலும் பலிகள் அவருக்குப் பிரியமாகவும் தூய்மையாகவும் வழங்கப்படுகின்றன என்று கடவுளே சாட்சியமளிக்கிறார். இப்போது கடவுள் தம்முடைய ஆசாரியர்கள் மூலமாகத் தவிர, யாரிடமிருந்தும் பலிகளைப் பெறுவதில்லை.”
அத்தியாயம் 117
“இதன்படி, இந்த நாமத்தின் மூலம் நாம் செலுத்தும் மற்றும் இயேசு கிறிஸ்து நமக்குக் கட்டளையிட்ட அனைத்து பலிகளையும் கடவுள் எதிர்பார்க்கிறார், அதாவது, உலகெங்கிலும் எல்லா இடங்களிலுமுள்ள கிறிஸ்தவர்களால் அப்பம் மற்றும் இரசத்தினால் வழங்கப்படும் நற்கருணையில், அவை அவருக்குப் பிரியமானவை என்று சாட்சியமளிக்கின்றன. ஆனால், நீங்களும் உங்கள் ஆசாரியர்களும் அளித்தவற்றை அவர் முற்றிலும் நிராகரித்து, ‘சூரியன் உதிக்கிற திசைதொடங்கி, அது அஸ்தமிக்கிற திசைவரைக்கும், என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும் [என்று அவர் கூறுகிறார்]; ஆனால் நீங்கள் அதைத் மாசுபடுத்துகிறீர்கள். ஆனால் இப்போதும், நீங்கள் சச்சரவுகளை விரும்பும்போது, எருசலேமில் வாழ்ந்த இஸ்ரவேலர்கள் என்று அழைக்கப்பட்டவர்களின் பலிகளை கடவுள் ஏற்கவில்லை என்றும்; ஆனால் பின்னர் அவர் அந்த தேசத்தின் சிதறிய மக்களின் மன்றாடல்களில் மகிழ்ச்சி அடைவதாகவும், அவர்களின் மன்றாடல்கள் தியாகங்கள் என்று அழைக்கப்படுவதாகவும் கூறுகிறார் என்றும் அறிவிக்கிறீர்கள். இப்போது, தகுதியுடையவர்களால் செய்யப்படும் மன்றாடல்களும் நன்றியுணர்வும் மட்டுமே கடவுளுக்கு பரிபூரணமான மற்றும் மகிழ்ச்சியான பலிகள் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஏனென்றால், அத்தகையவர்களுக்காக மட்டுமே கிறிஸ்தவர்கள் தங்கள் கனமாக மற்றும் திரவ உணவு மூலம் நினைவூட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், இதன் மூலம் கடவுளுடைய மைந்தன் அனுபவித்த துன்பம் நினைவுக்கூறப்படுகிறது, உங்கள் தேசத்தின் பிரதான ஆசாரியர்களும் உங்கள் போதகர்களும் அத்தகையவருடைய பெயரை பூமியெங்கும் தீட்டுப்படுத்தி, தூஷிக்கச் செய்தார்கள். ஆனால் இயேசுவின் நாமத்தினால் கிறிஸ்தவர்களாக மாறிய அனைவருக்கும், நீங்கள் அணியும் இந்த அசுத்தமான ஆடைகளை, கடவுள் நம்மை விட்டு அகற்றுவார், அவர் எல்லா மனிதர்களையும் மரித்தோரிலிருந்து எழுப்பி, சிலரை அழியாத நித்திய வாழ்வுக்குட்படுத்தினார், மேலும் நித்திய மற்றும் அழியாத நிலையில் துக்கங்களிலிருந்து விடுபடுவர்; ஆனால் மற்றவர்கள் நித்திய அக்கினிக்கு உட்படுத்தப்படுவார்கள். ஆனால் நீங்களும் உங்கள் போதகர்களும் நீங்கள் விளக்கும்போது உங்களை ஏமாற்றிக் கொள்கிறீர்கள், பின்னர் சிதறிய உங்கள் தேசத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றி வேதம் என்ன சொல்கிறது, ஒவ்வொரு இடத்திலும் செய்யப்படும் அவர்களின் விண்ணப்பங்களும் பலிகளும் தூய்மையானதாகவும், மகிழ்ச்சியானதாகவும் இருக்க வேண்டும், நீ பொய் பேசுகிறாய் என்பதை அறிய உங்களை ஏமாற்ற எல்லா வகையிலும் முயற்சி முயல்கிறீர்கள்: ஏனென்றால், முதலாவதாக, உங்கள் தேசம் இப்போது கூட சூரிய உதயத்திலிருந்து அது மறையும் வரை நீடிக்கவில்லை, ஆனால் உங்கள் இனத்தில் யாரும் வசிக்காத நாடுகளும் உள்ளன. ஏனென்றால், நாகரீகமற்றவர்களாக இருந்தாலும், கிரேக்கர்களாக இருந்தாலும், கூடாரங்களில் வசிப்பவர்கள் எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும், நாடோடிகளோ, அல்லது அலைந்து திரிபவர்களோ, அல்லது மேய்ப்பர்களோ மனிதர்களில் இனம் என்று ஒன்றில்லை, அவர்களில் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் பெயரால் ஜெபங்களும் நன்றி செலுத்துவதும் இல்லை. மேலும், மல்கியா இதை எழுதியபோது, வேதம் காட்டுவது போல், உங்கள் சிதறல் இப்போது இருக்கும், ஆனால் பூமி முழுவதும் இன்னும் நடைபெறவில்லை.”
அத்தியாயம் 118
“எனவே, நீங்கள் சண்டையின் பிரியத்தைத் தவிர்த்து, மகா நியாயத்தீர்ப்பு நாள் வருவதற்கு முன்னர் மனந்திரும்ப வேண்டும், வேதத்தில் கூறப்பட்டுள்ளதை நான் சுட்டிக்காட்டியபடி இந்த கிறிஸ்துவைத் குத்தி கொலைசெய்த உங்கள் பழங்குடியினர் அனைவரும் புலம்புவார்கள். மேலும், ‘மெல்கிசேதேக்கினுடைய முறைமையின்படி’ கர்த்தர் உறுதிப்படுத்தியதையும், என்ற இந்த தீர்க்கதரிசனத்தின் அர்த்தம் என்ன என்பதை நான் விளக்கினேன், மேலும் ‘அவருடைய அடக்கம் மத்தியிலிருந்து அகற்றப்பட்டது,’ என்று ஏசாயா தீர்க்கதரிசனத்தில் கூறியதை நான் ஏற்கனவே கூறியுள்ளேன், இது கிறிஸ்துவின் எதிர்கால அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதலைக் குறிக்கிறது; இந்த கிறிஸ்து உயிருள்ளவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் நீதிபதி என்று நான் அடிக்கடி குறிப்பிட்டிருக்கிறேன். நாத்தானும் அவ்வாறே, அவரைப் பற்றி தாவீதிடம் பேசி, இவ்வாறு தொடர்ந்தார்: ‘நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்; அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனுஷருடைய இயல்புகளினூடாகவும் மனுபுத்திரருடைய தண்டனைகளைக் கொண்டும் தண்டிப்பேன். உனக்கு முன்பாக நான் விலக்கிவிட்ட சவுலிடத்திலிருந்து என் கிருபையை விலக்கினதுபோல அவனைவிட்டு விலக்கமாட்டேன்.’ மேலும் எசேக்கியேல், ‘அவனைத் தவிர வேறொரு குமாரரும் இல்லத்தில் இருக்கக் கூடாது’ என்கிறார். ஏனென்றால், அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசாரியரும் நித்திய ராஜாவும், கடவுளின் குமாரனாகிய கிறிஸ்து; ஏசாயாவோ அல்லது மற்ற தீர்க்கதரிசிகளோ அவருடைய இரண்டாம் வருகையின்போது பலிபீடத்தின் மீது இரத்தம் அல்லது பானங்களை வழங்குவதைப் பற்றி பேசுகிறார்கள் என்று நினைக்காதீர்கள், ஆனால் இது உண்மையான மற்றும் ஆன்மீக துதி மற்றும் நன்றிசெலுத்தலாகும். அப்படிப்பட்ட உபதேசங்களை நமக்குக் கற்பித்தவர்களால் வழிதவறி, அவரை நாம் வீணாக நம்பவில்லை: ஆனால் இது கடவுளின் அற்புதமான முன்னறிவித்தலின் மூலம், அதாவது, புதிய மற்றும் நித்திய உடன்படிக்கையின் அழைப்பின் மூலம், அதாவது கிறிஸ்துவின் அழைப்பு மூலம், நாங்கள் உங்களை விட ஞானிகளாகவும் தெய்வீகமாகவும் கருதப்படுகிறோம், ஆனாலும் கடவுளை நேசிப்பவர்களாகவும், புரிந்துகொள்ளும் மனிதர்களாகவும் இருங்கள், ஆனால் அவ்வாறு இல்லை. இதைக் கண்டு வியந்துபாராட்டிய ஏசாயா கூறியதாவது: ‘அப்படியே, அவர் அநேகம் ஜாதிகள்மேல் தெளிப்பார்; அவர்நிமித்தம் ராஜாக்கள் தங்கள் வாயை மூடுவார்கள்; ஏனெனில், தங்களுக்குத் தெரிவிக்கப்படாதிருந்ததை அவர்கள் காண்பார்கள்; கேள்விப்படாதிருந்ததை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.’
“மேலும் டிரைபோ, திரும்பத் திரும்ப இதைச் சொல்கிறேன்,’ நான் தொடர்ந்தேன், ‘இன்று உங்களோடு வந்தவர்களுக்காக, இன்னும் சுருக்கமாகவும், அடக்கமாகவும், அனுமதிக்கக் கூடிய வரையில் இதைச் செய்ய முயற்சிக்கிறேன்.”
பின்னர் அவர் பதிலளித்தார், “நீங்கள் நன்றாக செய்கிறீர்கள்; நீங்கள் அதையே கணிசமான அளவில் திரும்பத் திரும்பச் சொன்னாலும், நானும் என் தோழர்களும் மகிழ்ச்சியுடன் கேட்போம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.”
அத்தியாயம் 119
பின்னர் மீண்டும் நான் கூறினேன், “ஐயா, மோயீசனின் வார்த்தைகள் யாருடைய விருப்பத்திற்கு ஏற்றது என்பதை நாம் அறிந்துகொள்ளும் கிருபையைப் பெறாவிட்டால், வேதத்திலுள்ள இந்த விடயங்களை நாம் எப்போதாவது புரிந்துகொண்டிருக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? கர்த்தருடைய ஜனங்கள் மற்ற தெய்வங்களை வழிபட்டனர், கர்த்தரை எரிச்சல் அடையும்படி செய்தனர். கர்த்தர் விக்கிரகங்களை வெறுக்கிறார். ஆனால் அவரது ஜனங்கள் வெறுக்கத்தக்க விக்கிரகங்களை தொழுதுகொண்டு தேவனுக்குக் கோபமூட்டினார்கள்.
அவர்கள் உண்மையில் தெய்வங்கள் அல்லாத பிசாசுகளுக்குப் பலியிட்டனர். அவைகள் இதுவரை அவர்கள் அறிந்திராத புதிய பொய்த் தெய்வங்கள் ஆகும். அவைகள் உங்களது முற்பிதாக்கள் அறிந்திராத தெய்வங்கள் ஆகும். நீ உன்னை உண்டாக்கிய பாறையை (தேவன்) விட்டு விலகினாய். உனக்கு வாழ்வு தந்த உன் தேவனை நீ மறந்தாய். கர்த்தர் தனைப் பார்த்து கலக்கமடைந்தார், அவரது ஜனங்களை நிராகரித்தார். ஏனென்றால், அவரது குமாரரும், குமாரத்திகளும் அவருக்குக் கோபமூட்டினர்! அதனால் கர்த்தர் கூறினார், ‘நான் அவர்களிடமிருந்து திரும்புவேன். அப்போது அவர்களுக்கு என்ன ஏற்படும் என்பதை அவர்கள் பார்க்கட்டும்! அவர்கள் மிகவும் கலகக்கார ஜனங்களாய் இருக்கின்றனர். அவர்கள் தம் பாடங்களைப் படிக்காத பிள்ளைகளைப் போன்று இருக்கின்றார்கள். அவர்கள் பிசாசுகளை தொழுதுகொண்டு என்னைப் பொறாமைபடும்படிச் செய்தனர். இவ்விக்கிரகங்கள் உண்மையான தேவன் அல்ல. அவர்கள் பயனற்ற விக்கிரகங்கள் மூலம், என்னைக் கோபமடையச் செய்தனர். எனவே, நான் இஸ்ரவேலுக்குப் பொறாமையை உண்டாக்குவேன். ஒரு தேசமாக மதிக்கப்படாத மூட ஜனங்களின் மூலம் நானும் அவர்களுக்குக் கோபத்தை உண்டாக்குவேன். எனது கோபம் எரியும் நெருப்பைப் போன்றது. அது நரகத்தின் ஆழம்வரை செல்கிறது.” மேலும் அந்த நீதிமான் கொல்லப்பட்ட பிறகு, நாங்கள் மற்றொரு ஜனமாக செழித்து, புதிய மற்றும் செழிப்பான சோளமாக வளர்ந்தோம்; தீர்க்கதரிசிகள் கூறியது போல், அந்த நேரத்தில், பல நாடுகளிலிருந்து ஜனங்கள் என்னிடம் வருவார்கள். அவர்கள் எனது ஜனங்களாவார்கள். நான் உங்கள் நகரில் வாழ்வேன்”
பிறகு, சர்வ வல்லமையுள்ள கர்த்தர் என்னை அனுப்பினார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.’ எனவே, நாம் இழிவுபடுத்தப்பட வேண்டிய ஜனங்கள் அல்ல, நாகரீகமற்ற இனமும் அல்ல, காரியன் மற்றும் ஃபிரிஜியன் நாடுகளும் அல்ல; ஆனால் கடவுள் நம்மைத் தேர்ந்தெடுத்தார், மேலும் தம்மிடம் கேட்காதவர்களுக்கும் அவர் தம்மை வெளிப்படுத்தினார். அவர் ‘இதோ, என் பெயரைச் சொல்லிக் கூப்பிடாத ஜாதிக்கு’ ‘நான் யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்’ என்கிறார். ஏனென்றால், ஆபிரகாமைப் பல ஜாதிகளுக்குத் தகப்பனாக்குவேன் என்று பூர்வகால தேவன் அவருக்கு வாக்குக் கொடுத்த தேசம் இதுதான்; இருப்பினும், அரேபியர்கள், அல்லது எகிப்தியர்கள், அல்லது இடுமாயர்கள் என்று அர்த்தம் அல்ல, ஏனெனில் இஸ்மவேல் ஒரு வலிமைமிக்க ஜாதியின் தந்தை ஆனார், மேலும் இப்போது ஏசாவுக்கும் அம்மோனியர்களின் திரளான கூட்டம் உள்ளது. மேலும், நோவா, ஆபிரகாமின், உண்மையிலேயே எல்லா மனிதர்களுக்கும்; மற்றும் அனைத்து முன்னோடிகளுக்கும் தந்தை. அப்படியானால், கிறிஸ்து ஆபிரகாமுக்கு வழங்கிய பெரிய அளவிலான கிருபை என்ன? இது, அதாவது, அவர் குடியிருந்த தேசத்தை விட்டு வெளியேறச் சொன்னது போன்ற அழைப்பின் மூலம் அவர் தனது குரலால் அவரை அழைத்தார். மேலும் அவர் அந்தக் குரலால் நம் அனைவரையும் அழைத்தார், மேலும் பூமியின் மற்ற குடிமக்களின் நாகரீகங்களுக்குப் பிறகு நாம் நம் நாட்களைக் கழித்த வாழ்க்கை முறையை ஏற்கனவே விட்டுவிட்டோம்; மற்றும் ஆபிரகாமுடன் சேர்ந்து நாம் புனித பூமியைச் சுதந்தரிப்போம், முடிவில்லா நித்தியத்திற்கான சுதந்தரத்தைப் பெறுவோம், அதே விசுவாசத்தின் மூலம் ஆபிரகாமின் பிள்ளைகளாக இருப்போம். அவர் தேவனுடைய சத்தத்தை விசுவாசித்து, அது அவருக்கு நீதியாகக் கருதப்பட்டது போல, நாமும் கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களால் சொல்லப்பட்ட தேவனுடைய சத்தத்தை விசுவாசித்து, தீர்க்கதரிசிகளால் நமக்கு அறிவிக்கப்பட்டபடியால், உலகத்தின் மரண பரியந்தம் எல்லாவற்றையும் துறந்தோம். அதன்படி, அவர் அவருக்கு ஒத்த நம்பிக்கை கொண்ட, கடவுள் பயமுள்ள, நீதியுள்ள, மற்றும் தந்தையை மகிழ்விக்கும் ஒரு தேசத்தை வாக்களிக்கிறார்; ஆனால் அது ‘நம்பிக்கையற்ற’ நீங்கள் அல்ல.
அத்தியாயம் 120
“அவர் ஈசாக்கிற்கும் யாக்கோபிற்கும் அளித்த அந்த வாக்குறுதியை எப்படி நிறைவேற்றுகிறார் என்பதைக் கவனியுங்கள். ஈசாக்கிற்கு அவர் சொன்ன வார்த்தைகள்: “உன் சந்ததியில் எல்லா தேசங்களும் ஆசீர்வதிக்கப்படும்.” மேலும் யாக்கோபை நோக்கி: “உன்னாலும் உன் சந்ததியினாலும் பூமியிலுள்ள எல்லா கோத்திரங்களும் ஆசீர்வதிக்கப்படும்.” ஆனால் அவர் இந்த ஆசீர்வாதத்தை பற்றி ஏசாவிற்கோ அல்லது ரூபனுக்கோ அல்லது வேறு யாரிடமோ கூறவில்லை. நமது மீட்பின் தெய்வீகத் திட்டத்தின்படி கன்னி மரியாள் மூலம் கிறிஸ்து அவதரிப்பார் என்று ஏற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே அந்த ஆசீர்வாதம் வெளிப்படுத்தப்படுகிறது. யூதாவின் ஆசீர்வாதத்தைப் பற்றி நீங்கள் சிந்தித்துப் பார்த்தால், நான் என்ன சொல்கிறேன் என்பதை நீங்கள் காண்பீர்கள். ஏனென்றால், அந்த வித்து யாக்கோபுக்குப் பிறகு பிரிக்கப்பட்டு, யூதா, பெரேஸ், ஜெஸ்ஸி மற்றும் தாவீது வழியாக வருகிறது. இப்போது, யூதர்களாகிய நீங்கள் நிச்சயமாக ஆபிரகாமின் பிள்ளைகளாக இருப்பீர்கள், அதே சமயம் கிறிஸ்துவின் பங்கில் பங்காளிகளாக இருப்பீர்கள் என்பதற்கு இது சிலருக்கு அடையாளமாக இருந்தது. ஆபிரகாமின் எஞ்சிய சந்ததியினர், அவர்கள் பெரியதாகவும், விசாலமாகவும், மலடாகவும் இருந்தும், கனி கொடுக்காமல், கடல்நீரை மட்டும் நம்பி வாழும் கடற்கரை மணலைப் போலிருக்கும். உங்கள் மக்களில் பெரும் பகுதியினர் இதில் குற்றவாளிகளாக இருப்பார்கள். ஏனென்றால், நீங்கள் அனைவரும் கடவுளுடைய வார்த்தையை நிராகரிக்கும்போது கசப்பான மற்றும் தேவபக்தியற்ற கோட்பாடுகளை ஏற்றுக்கொள்கிறீர்கள். யூதாவைப் பற்றிய இந்தப் பத்தியில், அவர் கூறுகிறார்: “சீலோ வரும்வரை யூதாவை விட்டு கிரீடமும், ஆட்சியாளரின் கோலும் விலகாது, மனிதகுலத்தின் கீழ்ப்படிதல் அவருக்கு இருக்கும்.” ஆகவே இவ்வாறான நிகழ்வுகளை எதிர்பார்த்தவர் யூதா அல்ல, கிறிஸ்துவே என்பது இதிலிருந்து தெளிவாகிறது. ஏனென்றால், புறஜாதிகளாகிய நாம் அனைவரும் யூதாஸைத் தேடவில்லை, உங்கள் முன்னோர்களை எகிப்திலிருந்து மீட்டெடுத்த இயேசுவைத் தேடுகிறோம். கிறிஸ்துவின் வருகையைப் பற்றிய தீர்க்கதரிசனம் இவ்வாறு கூறுகிறது: “இவ்வாறான வல்லமையைக் கொண்டிருப்பவர் வரும்வரை, அவர் புறஜாதிகளுக்கு நம்பிக்கையாக இருப்பார்.” எனவே, இயேசு வந்தார், அதை நான் மிகவும் நுட்பமாக நிரூபித்தேன். அவர் மேகங்களின் நடுவே தோன்றி வந்தருளுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் அவருடைய பெயரைக் களங்கப்படுத்தினீர்கள், மேலும் உலகம் முழுவதும் அவருடைய பெயரைக் களங்கப்படுத்த முயற்சிக்கிறீர்கள்.
நான் மேலும் அவனை நோக்கி: “ஐயன்மீர், “அவருக்காக வைக்கப்பட்டது வரும் வரை” என்று எழுதப்பட வேண்டும் என்று நீங்கள் சொல்லும் பகுதியைப் பற்றி நான் உங்களுடன் வாதிடலாம். நீங்கள் செய்வது போல் எழுபது பேர் அதை “மாட்சிமையுடையவர் வரும் வரை” என்று மொழிபெயர்க்க வில்லை. ஆனால் அதில் மீதமுள்ளவை (“அவர் புறஜாதிகளின் நம்பிக்கையாக இருப்பார்”) என்ற கோணத்தில் கிறிஸ்துவை தெளிவாகக் குறிப்பிடுவதால், நீங்கள் உண்மையாக ஏற்றுக்கொள்ளாத வேதவசனங்கள், (அதாவது, நான் மேற்கோள் காட்டிய எரேமியா, எஸ்ரா மற்றும் தாவீது ஆகியோரது] வார்த்தைகளைப் பொறுத்தவரை, நான் கிறிஸ்துவை அடிப்படையாகக் கொண்ட எனது வாதங்களைத் தவிர்ப்பது போல், அந்தப் பத்தியின் சரியான வார்த்தைகளைப் பற்றி நான் உங்களுடன் வாதிட விரும்பவில்லை. ஆனால் நீங்கள் இதுவரை உண்மை என்று அங்கீகரித்த பத்திகளைப் பற்றி மட்டுமே நான் வாதிக்கிறேன். அதை உங்கள் ஆசிரியர்கள் போன்றோரும் புரிந்துகொள்கிறார்கள். யூதர்களாகிய உங்களால் மரக்கட்டையை பாதியாக வெட்டப்பட்டது போன்ற ஏசாயாவின் மரணத்தை விவரிக்கும் வார்த்தைகளைப் போலவே, அவர்கள் நிச்சயமாக உரையிலிருந்து நீக்கியிருப்பார்கள், அது கிறிஸ்து என்ன செய்யப் போகிறார் என்பதன் அடையாளமாகும். ஆனால் மற்றவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் கீழ்ப்படியாத மற்றும் மனந்திரும்பாத அனைத்து தேசங்களோடும் அழியாத நரக நெருப்பில் தள்ளப் படுவார் என்று அவர் கூறினார். உண்மையில், அவர் இவ்வாறு கூறினார்: “மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன், கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் பலர் வந்து, பரலோக இராச்சியத்தில் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் அமர்ந்திருப்பார்கள். ஆனால் இராச்சியத்தின் பிள்ளைகள் வெளியிட்டில், இருளிலே தள்ளப்படுவார்கள்.” இவற்றைப் பேசுவதில் எனக்கு ஒரே ஒரு நோக்கம் இருக்கிறது. அதாவது உண்மையைச் சொல்வது. அப்படிச் செய்யும்போது, நீங்கள் என்னை நார் நாராய்க் கிழித்துவிடுவீர்கள் என்ற பயம் எனக்கு கொஞ்சமும் இல்லை. ஏனென்றால், என் மக்களில் (சமாரியர்களுக்கு) நான் பயப்படுவதில்லை. நான் சீசருக்கு கடிதம் எழுதி, அவர்கள் தங்கள் தேசத்தைச் சேர்ந்த சைமன் மாகஸை நம்புவது தவறு என்றும், அவரை ஒவ்வொரு அரச, அதிகாரம் மற்றும் அப்படியான அதிகாரத்துக்கும் மேலாக ஏற்றுக்கொள்ளப் படுவது தவறு என்றும் உறுதிப்படுத்தினேன்.
