ஹெர்மஸ் என்னும் ஆயன் (Hermas, The Shepherd Part 3)

ஹெர்மஸ் என்னும் ஆயன் 

உவமைகள்

[Hermas, The Shepherd, in Tamil. Part 3: The Parables]


உவமை 1

இரண்டு நகரங்கள் பற்றிய உவமை

50 அவர் என்னிடம் இவ்வாறு கூறினார்; கடவுளின் ஊழியர்களாகிய நீங்கள் அந்நிய நாட்டில் வசிக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் ஊர் இந்த நகரத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது. அவர் மேலும் தொடர்ந்து கூறுகையில், நீங்கள் வசிக்கும் நகரம் உங்களது இல்லாது விட்டாலும், நீங்கள் ஏன் இங்கு நிலங்களை வாங்கி, விலையுயர்ந்த உற்பத்திகளையும், குடியிருப்புகளையும் பயனற்ற கட்டிடங்களையும் வாங்கிக் குவிக்கிறீர்கள்? இவ்வாறான ஆயத்தங்களை இந்த நகரத்திற்குச் செய்பவன் மீண்டும் தன் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாது போகும். ஓ! முட்டாளே, அறிவற்றவனே! இவை அனைத்தும் இன்னொருவருக்குச் சொந்தமானவை, மற்றவரின் அதிகாரத்திற்கு உட்பட்டவை என்பது உனக்குப் புரியவில்லையா? இந்நகர முதல்வர் உன்னைப்போன்றவர்களிடம் ‘எனது ஊரில் வாழ்வதற்கு நீங்கள் எல்லோரும் தகுதியற்றவர்கள், அதில் எனக்கு விருப்பமில்லை; எனது சட்டங்களுக்குக் கீழ்ப்படியாததால், இந்த நகரத்தை விட்டு நீங்கள் எல்லோரும் சென்று விடுங்கள் என்று கூறுவாரானால், உங்களால் என்ன செய்ய முடியும்? அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், உங்களுக்கு வயல்களும், வீடுகளும், கட்டிடங்களும் இன்னும் பல சொத்துக்கள் இருந்தபோதிலும், அவரால் துரத்தப்படும்போது, ​​நீங்கள் சேர்த்து வைத்த இத்தனை சொத்துக்களையும் மற்ற உடைமைகளையும் என்ன செய்வீர்கள்? அப்படியானால், என் சட்டங்களைக் கடைப்பிடியுங்கள், இல்லையேல் என் ஆட்சிக்கு உட்பட்ட இந்த நகரத்தில் இருந்து வெளியேறுங்கள் என்று இந்த நகரத்தின் முதல்வர் உங்களிடம் நியாயமாகச் சொல்கிறார். அப்படியானால், உங்கள் சொந்த ஊரில், உங்கள் நிலங்கள் மற்றும் உங்கள் உடமைகள் தொடர்பாக ஒரு சட்டம் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அப்படியான ஒரு சூழ்நிலையில் நீங்கள் உங்கள் சட்டத்தை முற்றிலும் துறந்து, நாங்கள் தற்போது வாழும் இந்த நகரத்தின் சட்டத்தின்படி நடக்க வேண்டும். உங்கள் சட்டத்தை மீறுவது உங்களுக்கு தீங்கு விளைவிக்காதபடி கவனமாயிருங்கள்; நீங்கள் உங்கள் சொந்த ஊருக்கு மீண்டும் திரும்ப விரும்பினால், அங்கு நீங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டீர்கள், ஏனென்றால் நீங்கள் வாழ்ந்த ஊரின் சட்டத்தை மீறினீர்கள். அதனால் நீங்கள் கண்டனத்துக்கு உள்ளாகக் கூடும். எனவே, கவனமாக இருங்கள்: ஒரு அந்நிய தேசத்தில் வசிப்பவராக இருக்கும் சூழ்நிலையில், உங்களுக்காகப் போதுமானதாக இருப்பதைத் தவிர வேறு எந்த முறையற்ற செய்கைகளிலும் ஈடுபட வேண்டாம்; இந்த நகரத்தின் முதல்வர், அவருடைய சட்டத்தை மீறியதற்காக உங்களை வெளியேற்றவும் அவருக்கு அதிகாரமுண்டு. ஆகவே நீங்கள் அவரது வெறுப்புக்கு ஆளாகாமல், அவருடைய நகரத்தை விட்டு வெளியேறி, உங்கள் சொந்த இடத்திற்குச் சென்று, மிகுந்த மகிழ்ச்சியுடன் அங்கு விதிக்கப்பட்ட சட்டத்திற்குக் கீழ்ப்படியவும் தயாராக இருங்கள். கர்த்தர் மீது பயபக்தி கொண்டவர்களே, அவரை உங்கள் இதயத்தில் கொண்டு வாழும் நீங்கள், தேவனுடைய கிரியைகளைச் செய்வதிலும், அவர் வாக்களித்த அவருடைய கட்டளைகளையும் வார்த்தைகளையும் நினைவுகூர்ந்து, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்தால் உங்கள் தேவைகளை அவர் நிறைவேற்றுவார் என்று விசுவாசத்துதுடன் வாழ்வதில் அக்கறை காட்டுங்கள். எனவே, சொத்து சுகங்களுக்குப் பதிலாக, உங்களால் முடிந்தளவு துன்பப்பட்ட ஆன்மாக்களை உங்கள் அருகில் அழைத்து, அவர்களுக்கு சேவையாற்றுங்கள். விதவைகள் மற்றும் அனாதைகள் மீது கருணை காட்டுங்கள். அவர்களைக் கண்டுகொள்ளாமல் விடாதீர்கள்; உங்கள் செல்வங்களையும், கர்த்தரிடமிருந்து நீங்கள் பெற்ற அனைத்து சொத்துக்களையும் அத்தகைய இல்லாதோர் சார்பாக செலவிடுங்கள். இந்த நோக்கத்திற்காக, எம் இறைவன் உங்களை செல்வந்தராகப் படைத்தார். எனவே நீங்கள் அவருக்கு இந்த சேவைகளைச் செய்ய வேண்டும். அதேநேரம் நீங்கள் வசிக்கும் உங்கள் சொந்த ஊரில் காணக்கூடிய நிலங்களையும் உடைமைகளையும் வீடுகளையும் வாங்குவது மிகவும் நல்லது. இது ஒரு உன்னதமான மற்றும் புனிதமான விரயம். பயத்துடனும், கவலையோடும் இதை செய்யவேண்டியதில்லை. ஏனென்றால் அதை மகிழ்ச்சியோடு செய்யலாம். அஞ்ஞானிகளைப் போல் ஆடம்பரமான செலவுகளை செய்ய வேண்டாம். அது தேவனுடைய ஊழியர்களாகிய உங்களுக்குத் தீங்கானது; ஆனால் உங்கள் சொந்த செலவை நீங்கள் வரையறுத்துக் கொள்ளுங்கள். அப்போது அதில் நீங்கள் மகிழ்ச்சியடையலாம்; மற்றவரின் பொருளைக் கவர்வதும், தொடுவதும், ஆசைப்படுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய செயலல்ல; ஆகையால் உங்கள் கடமையை மட்டுமே செய்யுங்கள், அப்போது நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்.

உவமை 2

இலுப்பை மற்றும் திராட்சைக் கொடி

51 நான் வயல்வெளியில் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு இலுப்பை மரத்தையும் திராட்சைக்கொடியையும் பார்த்து, அவற்றையும் அவற்றின் கனிகளையும் பற்றிய சிந்தனைகளை என் மனதிலேயே அசைபோட்டுக்கொண்டு நடந்து கொண்டிருந்தபோது, ​​மேய்ப்பன் எனக்கு முன் தோன்றி, இலுப்பை மரம் மற்றும் திராட்சை கொடிபோன்ற வற்றின் தன்மைகளைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்? என்று கேட்டார். அதற்கு நான் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்றும், அவை ஒன்றுக்கொன்று மிகவும் நன்றாக இருக்கின்றன என்று சொல்லலாமா என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனாலும் இவை பற்றி நீங்கள் சொல்லும் உதாரணத்தை நான் அறிய ஆவலாயிருக்கிறேன் என்று நான் கூறினேன். இந்த இரண்டு மரம் மற்றும் கொடி கடவுளின் ஊழியர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று அவர் தொடர்கிறார். இலுப்பை மற்றும் திராட்சைக் கொடியை நீ பார்த்ததுண்டா? என்று என்னிடம் கேட்டார். நான் பார்த்திருக்கிறேன் ஐயா, என்று பதிலளித்தேன். இந்த திராட்சைக் கொடி பழங்களைத் தருகிறது, ஆனால் இலுப்பை மரமோ ஒரு கனிதராத மரம். ஆனால் கொடியானது இலுப்பை மரத்தின் மீது படராமல், தரையில் நீளமாக நீண்டுகொண்டே போகுமானால், அந்தத் திராட்சைக்கொடி அதிக பலனைத் தராது; மற்றும் அது கொடுக்கும் பழங்களும் அழுகிவிடும், ஏனெனில் திராட்சைக்கொடி இலுப்பை மரம் மீது படராத காரணத்தால். எனவே, கொடியானது இலுப்பை மரத்தின் மீது படர விடப்படும் போது தான் பழங்களைத் தரக்கூடியதாக இருக்கிறது. ஆகவே இலுப்பை மரமும் அங்கே முக்கியத்துவம் பெறுகிறது. நீங்கள் பார்க்கிறீர்கள். அவர் தொடர்ந்து கூறும் போது, கொடியானது, இலுப்பை மரத்தின் மீது படரவிடப்படும் போது, ​​அதிக பலன் மற்றும் நல்ல விளைச்சலையும் தருகிறது; ஆனால் தரையில் விடப்பட்டால் அதன் கனி சிறியதாகவும் அழுகிய தோற்றமுடையதாகவும் இருக்கும். எனவே, இந்த ஒற்றுமை கடவுளின் ஊழியர்களுக்கும், ஏழைகள் மற்றும் செல்வந்தர்களுக்கும் உதாரணமாகக் கூறப்படுகிறது. அது எப்படி ஐயா, என்று நான் கேட்டேன்; எனக்கு இந்த விடயத்தை கொஞ்சம் தெளிவாக விளக்குங்கள், என்றேன். அப்படியா, நன்றாகக் கேள் அவர் கூறினார்: செல்வந்தரிடம் நிறைய செல்வம் உள்ளது, ஆனால் அவர் தனது செல்வத்தைப் பற்றி அதிக அக்கறை கொண்டிருப்பதால், இறைவன் தொடர்பான விஷயங்களில் மிகவும் மந்தமாக இருக்கிறார். மேலும் அவர் இறைவனிடம் மிகக் குறைவாக பாவமன்னிப்பு பெறுவதோடு, அவரது தியாகங்களும் மிகவும் சிறியதாகவே இருக்கின்றன. மேலும் அவர் செய்யும் தான தர்மங்களும் சிறியதாகவும் பலவீனமானதாகவும் காணப்படுகின்றன. மேலும் அவற்றுக்கு எவ்வித சக்தியும் இல்லை. அதேநேரம் செல்வந்தன் ஏழைகள் மீது இரங்கி, அவர்கள் மீது கருணை கொண்டு, அவர்களுக்கு புது வாழ்வளித்து அவர்களது தேவைகளுக்கு உதவும்போது, ​​அவன் செய்யும் அந்த நற்கிரியைகள் காரணமாக கடவுளிடம் வெகுமதியைப் பெற முடியும் என்று உறுதியாக இருக்கிறான். ஏனென்றால் ஏழையானவன் தனது செய்கைகள் மற்றும் மன்றாட்டுக்கள் போன்றவற்றால் செல்வந்தனாகத் திகழ்கிறான். கடவுளை நோக்கி அவன் ஒப்புக்கொடுக்கும் வேண்டுதல்கள் சக்தியுள்ளவை. அதன் பின்னர் செல்வந்தன் தயக்கமின்றி ஏழைகளுக்கு எல்லா விதத்திலும் உதவ முன்வருகிறான்; அவனுக்காக இரக்கம் கொண்டு, மன்றாடுகிறான். அதேநேரம் ஏழையானவன் செல்வந்தனிடம் பெற்றுக்கொண்ட உதவிகள் ஒத்தாசைகள் போன்றவற்றுக்காக கடவுளுக்கு நன்றி செலுத்துகிறான். அதன் காரணமாக செல்வந்தன் இன்னும் அக்கறையுடன் மற்றும் ஆர்வத்துடன் ஏழைகளுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுகிறான். ஆகவே ஏழை மனிதனின் தேவைகள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறான். ஏனென்றால், ஏழையின் மன்றாட்டு கடவுளுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கது மற்றும் செல்வாக்கு செலுத்துகிறது என்பதை செல்வந்தன் அறிவான். அதன்படி, இருவரும் தங்கள் கடமையைச் செய்கிறார்கள். ஏழை செல்வந்தனுக்காக மன்றாடுகிறான். அப்போது கடவுளின் ஆசீர்வாதம் செல்வந்தனுக்கு அதிகமாகக் கிடைக்கிறது. மேலும் அவனுக்கு உதவி செய்யும் செல்வந்தனுக்கு அதிக வெகுமதி கிடைக்க வேண்டும் என இறைவனை இறைஞ்சுகிறான். அதேபோல் செல்வந்தனும் அவ்வாறே இறைவனிடமிருந்து பெற்ற செல்வத்தை ஏழைக்கு தயக்கமின்றி வழங்குகிறான். இது ஒரு பெரிய மற்றும் அறிய கிரியை, அது கடவுளுக்கு முன்பாக ஏற்றுக்கொள்ளத்தக்கது, ஏனென்றால் அவர் தனது செல்வத்தின் தன்மையை அதனால் செய்யக்கூடிய நன்மையை புரிந்துகொண்டு, ஏழைகளுக்கு இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்ட வரங்களை அளித்து, அவருக்குத் தனது சேவையை சரியாகச் செய்தார். இருப்பினும், மனிதர்களிடையே, இலுப்பை மரம் பழங்களைத் தரவில்லை என்று தோன்றுகிறது. மேலும் வறட்சி வந்தால், தண்ணீரைத் தன்னகத்தே கொண்டிருக்கும் இலுப்பைமரப் பட்டைகள் கொடியை வளர்க்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது அல்லது புரிந்து கொள்ள முடியாதிருக்கிறார்கள். மற்றும் திராட்சைக் கொடியானது, குறையாத நீர் விநியோகத்தைக் கொண்டிருப்பதால், தனக்கும், இலுப்பை மரத்துக்காகவும் இரட்டிப்புப் பழங்களைத் தருகிறது. அவ்வாறே ஏழைகளும் செல்வந்தர்கள் சார்பாக இறைவனிடம் இறைஞ்சி அவர்களது செல்வத்தை பெருக்கிக் கொள்ள உதவுங்கள். அப்போதுதான் செல்வந்தர்கள் மீண்டும் ஏழைகளுக்கு அவர்களின் தேவைகளில் உதவுவார்கள், அதன்மூலம் அவர்களின் ஆன்மாவை திருப்திப்படுத்திக் கொள்கிறார்கள். எனவே, இருவரும் நேர்மையான சேவையின் பங்காளிகள் தான் என்று சொன்னால் மிகையாகாது. இவற்றைச் செய்கிறவன் கடவுளால் கைவிடப்படமாட்டான், உயிருள்ளவர்களின் புத்தகங்களில் பதிவு செய்யப்படுவான். செல்வந்தர்கள் பாக்கியவான்கள், ஏனென்றால் அவர்களது செல்வம் கர்த்தரிடம் இருந்து அருளப்பட்டது என்று புரிந்துகொள்கிறார்கள். ஏனெனில், அந்த எண்ணம் உள்ளவர்களால் மட்டுமே சில நன்மைகளைச் செய்ய முடியும்.

உவமை 3

குளிர்காலத்தில் மரங்களின் தோற்றம்

52 இலைகளே இல்லாத பல மரங்களை அவர் எனக்குக் காட்டினார். அவை வாடிப்போனது போல் தோற்றமளித்தன. ஏனென்றால் அவை யாவும் ஒரே மாதிரியாக இருந்தன. பின்னர் அவர் என்னிடம் இவ்வாறு கூறினார்: “இந்த மரங்களைப் பார்த்தாயா? ” “ஆம் ஐயா, என்னால் பார்க்கக்கூடியதாக இருக்கிறது” என்று கூறினேன். “அவை யாவும் ஒரே வகையானவை. எல்லாம் வாடிப்போய் இருக்கின்றன என்று கூறிய அவர்: “நீ பார்க்கும் இந்த மரங்கள் தான் இந்த உலகில் வாழும் மனிதர்கள்.” நான் அவரிடம் “அப்படியானால், அவை ஏன் வாடிப்போய் ஒரே மாதிரியாக இருக்கின்றன ஐயா?” என்று கேட்டேன். அவர் அதற்கு: “ஏனென்றால் இந்த உலகில் நீதிமான்களையும் பாவிகளையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது. ஏனென்றால் அவர்கள் அனைவரும் ஒரேவிதமான தோற்றத்தையே கொண்டிருக்கிறார்கள். நீதிமான்களுக்கு இந்த உலகம் குளிர்காலம். எனவே, வாட்டம் கொண்டிருக்கும் மரங்களைப்போல, அவர்களை வேறுபடுத்திப் பார்க்க முடியாது. ஏனென்றால் அவர்கள் பாவிகளுடன் கலந்தே வாழ்கிறார்கள். குளிர்காலத்தில் இலைகள் உதிர்ந்த மரங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கும். அவற்றுள் மரங்கள் காய்ந்த மரங்கள் எத்தனை, பசுமையான மரங்கள் எத்தனை என்பதை அறிந்துகொள்வது கடினம். அவ்வாறே தான் இவ்வுலகில் நீதிமான்களையும் பாவிகளையும் வேறுபடுத்திப் பார்க்க இயலாது. ஏனென்றால் எல்லோரும் ஒரே மாதிரியான உருவ ஒற்றுமையுடன் காணப்படுகின்றனர்.

4 உவமை

கோடை காலத்தில் மரங்களின் தோற்றம்

53 மீண்டும் அவர் எனக்கு அங்கிருந்த மற்றைய மரங்களைக் காட்டினார், அவற்றில் சில துளிர்விட்டவைகளாகக் காணப்பட்டன, சில வாடிய நிலையில் இருந்தன. அவற்றைப் பார்த்து அவர் என்னிடம், “இவற்றை உன்னால் பார்க்க முடிகிறதா? என்று கேட்டார். “ஆம், அவற்றை என்னால் பார்க்கக்கூடியதாக இருக்கிறது” என்று நான் சொன்னேன்: “அந்த மரங்கள் மத்தியில் சில துளிர்விடுகின்றன, அதேநேரம் ஏனையவை வாடிப்போய் உள்ளன. அவர் மேலும் என்னிடம் கூறுகையில்: “இந்த துளிர்விட்டு வளரும் மரங்களே நீதிமங்களுக்கு ஒப்பானவை. அவர்கள் எதிர்கால உலகில் வாழ்வார்கள். ஏனென்றால், முன்னால் வரும் காலம் நீதிமான்களுக்கு கோடைகாலமாகவும், பாவிகளுக்கு குளிர்காலமாகவும் இருக்கும். ஆகையால், கர்த்தருடைய கிருபை பிரகாசிக்கும்போது, ​​தேவனை விசுவாசித்து வாழ்பவர்கள் தனித்துவம் பெற்றவர்களாகக் காணப்படுவர். நிச்சயமாக, எல்லா மக்களும் தேவ கிருபை பெற்றவர்களாகக் காணப்படுவர். கோடை பருவத்தில் வித விதமான மரங்கள் வித விதமான கனிகளுடன் காட்சியளிக்கும். அந்த வகையில், அவை எந்த வகையான மரங்கள் என்றும், அவை தரும் கனிகள் யாவை என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம். அதேபோலத்தான், நீதிமான்களின் நன்னெறிகள் வெளிப்படும். அவர்கள் உலகில் மிகவும் சிறப்பாக வாழ்வதால் அனைவரும் அவர்களைப் பற்றி அறிவார்கள்.

அதேநேரம், நீ பார்த்த வாடிய மரங்களைப் போலவேதான், வெளியார்களும், பாவிகளும் இவ்வுலகில் காய்ந்த, கனிகொடா மரங்களாக அறியப்படுவார்கள். அவர்கள் விறகுகளைப் போல நெருப்பில் போடப்பட்டு எரிக்கப்படுவார்கள். ஆகவே இந்த சீவிய காலத்தில் அவர்களின் செயல்கள் தீயவை என்று வெளிப்படையாகக் காட்டப்படுகிறது. பாவிகள் பாவம் செய்ததாலும், அவர்கள் மனந்திரும்பாததாலும், அவர்கள் தீயினால் சுட்டெரிக்கப்படுவார்கள். மேலும் வெளியார்கள் தங்களை படைத்தவரை அறியாததால் தீயினால் எரிக்கப் படுவார்கள். ஆகையால், நீங்கள் பலன் தருகிறீர்கள். கோடை காலத்தில் உங்கள் கனிகள் எவையென்று உங்களுக்குத் தெரியும். ஆகவே, வியாபாரத்தில் ஈடுபடுவோர், மென்மேலும் பாவங்களைக் கட்டிக்கொள்ளும் சந்தர்ப்பங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்பதால், உங்கள் வணிக விடயங்களில் அதிகமாக ஈடுபடுவதைத் தவிர்க்கவும். ஏனெனில் அவ்வாறான தொழிலில் ஈடுபடுபவர்கள் பெரும் பாவம் செய்கிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த வியாபார விடயங்களில் அவர்களது கவனம் திசை திருப்பப்படுவதால், அவர்கள் எப்படியும் தங்கள் இறைவனுக்கு சேவை செய்ய மாட்டார்கள். அவர் மேலும் கூறுகையில்: “அப்படியென்றால் இப்படிப்பட்டவர்கள் எவ்வாறு இறைவனிடம் தங்களுக்கு வேண்டியதை கேட்டு பெறுவார்கள்? ஏனென்றால், அவருக்குச் சேவை செய்பவர்கள் கேட்பது அவரிடமிருந்து கிடைக்கும். ஆனால் அவருக்கு சேவை செய்யாதவர்களுக்கு அவரிடமிருந்து எதுவும் கிடைப்பதில்லை. ஆனால் மனிதர்கள் ஒரே ஒரு தொழிலில் மட்டும் ஈடுபட்டால், அவர்கள் கர்த்தருக்குச் சேவை செய்ய முடியும். ஏனென்றால், அவர்களுடைய மனம் சுத்தமாக இருக்கிறது. அவர்கள் இறைவனை விட்டு விலகவில்லை என்ற காரணத்தால், தூய்மையான மனதுடன் இறைவனுக்கு சேவை செய்கிறார்கள். ஆகையால், நீங்கள் இவற்றைச் செய்தால், எதிர்காலத்தில் நற்பலனைத் தருவீர்கள். மெய்யாகவே, இவற்றைச் செய்கிறவன் நல்ல பலனை அடைவான்.”

5 வது உவமை

உண்மையான உபவாசம்

54 நான் ஒரு குன்றின் மீது அமர்ந்து, ஆண்டவர் எனக்காகச் செய்த அனைத்திற்கும் நன்றி கூறி, உபவாசம் இருக்கையில், ஒரு மேய்ப்பன் என் அருகில் அமர்ந்திருப்பதைக் கண்டேன். அவன் என்னைப் பார்த்து: “ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்தாய்?” என்று கேட்டார். நான் அவருக்கு இவ்வாறு பதிலளித்தேன். “ஐயா எனக்கு ஒரு தங்குமிடம் இருப்பதால் தான்.” என்றேன். “தங்குமிடம் என்றால் என்ன?” அவர் என்னை கேட்டார். “ஐயா, நான் உண்ணாவிரதம் இருக்கிறேன்,” என்றேன். “எதற்காக உண்ணாவிரதம் இருக்கிறாய்?” அவர் என்னை கேட்டார். “பழக்கதோஷத்தினால் தான் நோன்பு நோற்கிறேன்” என்றேன்.“கடவுளை நோக்கி உபவாசம் இருப்பது எப்படி என்று உனக்குத் தெரியுமா? அவருக்காக நீ கடைபிடிக்கும் இந்த வீண் விரதத்துக்குப் பெயர் நோன்பு அல்ல” என்று அவர் என்னிடம் கூறினார். “ஏன் ஐயா அப்படி சொல்கிறீர்கள்? என்று நான் கேட்டேன். அதற்கு அவர், “இதை நான் உனக்கு விளக்குகிறேன்; உபவாசம் இருப்பதாக நினைப்பது மட்டும் உபவாசம் ஆகிவிடாது, அப்படியானால் அது விரதம் அல்ல. கடவுளுக்கு உண்மையாகவும், அவருக்குப் பிரியமான விதத்திலும் எப்படி நோன்பு நோற்க வேண்டும் என்பதை நான் உனக்கு கற்றுத்தருகிறேன்,” என்றார். “ஆமாம் ஐயா, கடவுள் எப்படிப்பட்ட விரதத்தை ஏற்றுக்கொள்கிறார் என்பதை நீங்கள் எனக்குத் தெளிவுபடுத்தினால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன். ஆகவே அதைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்” என்றேன். அவர் பின்வருமாறு கூறினார்: “நன்றாகக் கேள். இப்படிப்பட்ட பயனற்ற உபவாசத்தை கடவுள் விரும்பவில்லை. ஏனெனில் இவ்வாறு கடவுளுக்காக உபவாசம் இருப்பதன் மூலம் நீங்கள் நீதியின் பொருட்டு எதையும் சாதிக்க மாட்டீர்கள். ஆதலால் கடவுளிடம் பின்வருமாறு உபவாசம் இருங்கள்: உங்கள் வாழ்க்கையில் எந்தத் தீமையும் செய்யாதீர்கள். தூய்மையான இதயத்துடன் இறைவனுக்கு சேவை செய்யுங்கள். அவருடைய கட்டளைகளைக் கடைபிடியுங்கள். அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழுங்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் எந்த வகையான தீமையும் உங்கள் மனதில் நுழைய அனுமதிக்காதீர்கள். மேலும் கடவுளை முழுமனதுடன் விசுவாசியுங்கள். இவ்வாறு, நீங்கள் இவற்றைக் கடைபிடித்து, கடவுளுக்கு பயந்து, எல்லா தீய செயல்களில் இருந்தும் விலகி உங்கள் வாழ்வை அமைத்துக்கொண்டால், நீங்கள் இறைவனுக்குள் வாழ்வீர்கள். எனவே இவற்றைக் கடைபிடித்து, அதன் படி நடந்தால், கடவுளுக்குப் பிரியமான உபவாசத்தை நீங்கள் முன்னெடுத்துச் செல்வீர்கள்,” என்றார்.

திராட்சைத் தோட்டத்தின் உவமை

55 “உபவாசத்தைப் பற்றி நான் இப்போது சொல்லப்போகும் உவமையை நன்றாகக் கேள். ஒரு மனிதனுக்கு நிறைய வயல் நிலங்களும் பல வேலையாட்களும் இருந்தனர். அம்மனிதன் அந்த வயலின் ஒரு பகுதியில் ஒரு திராட்சைத் தோட்டமாக மாற்றினார். அவர் வேறொரு ஊருக்கான நீண்ட பயணத்திற்கு ஆயத்தமான போது, ​​அவர் தனது அன்பான மற்றும் உண்மையுள்ள வேலையாட்களில் ஒருவனைத் தேர்ந்தெடுத்து, அவனிடம் இவ்வாறு கூறினார்: ‘நான் செய்கை பண்ணியுள்ள இந்தத் திராட்சைத் தோட்டத்தை நன்றாகக் கவனித்து, நான் திரும்பி வரும்வரை அதைச் சுற்றி வேலியால் அடைத்துவிடு. அதைத்தவிர அந்த திராட்சைத் தோட்டத்திற்கு வேறு எதுவும் செய்ய வேண்டாம். என்னுடைய இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நீ நடக்கும் பட்சத்தில், உன்னுடைய அடிமைத்தனத்தில் இருந்து உன்னை விடுவிப்பேன்,’ என்று கூறிவிட்டு, அந்த வேலையாளின் எஜமான் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அவர் போனபின், அந்த வேலைக்காரன் திராட்சைத் தோட்டத்திற்கு வேலி அமைத்தான். வேலி அமைத்து முடித்த பிறகு, திராட்சைத் தோட்டம் முழுவதும் களைகள் வளர்ந்து இருப்பதைக் கண்டான். அதைப்பார்த்த அவன் தனக்குள் பின்வருமாறு சொல்லிக்கொண்டான்: ‘எனது எஜமானரின் இந்த உத்தரவை நிறைவேற்றி விட்டேன். இப்போது நான் இந்த திராட்சைத் தோட்டத்தை பராமரிக்கப் போகிறேன். உண்மையில், இந்தத் திராட்சைத் தோட்டம் மேலும் கன்றுகள் நடப்பட்ட பிறகு இன்னும் நன்றாக இருக்கும். அப்போது இங்கு களைகள் இருக்காது. நிறைய கனிகள் இருக்கும். ஏனென்றால், களைகளால் அவை அழிக்கப்படாது” என்று கூறி, திராட்சைத் தோட்டத்தை நன்றாக செய்கை பண்ணி பராமரித்தான். மேலும் அங்கே இருந்த களைகளையெல்லாம் பிடுங்கி எறிந்தவுடன் திராட்சைத் தோட்டம் மிகவும் கவர்ச்சியாகவும், பசுமையாகவும் இருந்தது, அது நன்றாக செழித்து வளர்ந்தது. ஏனென்றால், அவற்றை அழிப்பதற்கு களைகள் எதுவும் அங்கே இல்லை. சிறிது காலம் சென்று, வேலையாளின் எஜமானர் வயலுக்கு திரும்பி வந்தார். அவர் வந்து திராட்சைத் தோட்டத்திற்குள் சென்று, அங்கு என்ன நடந்துள்ளது என்று பார்த்தபோது, திராட்சைத் தோட்டத்தை சுற்றிலும் வேலி போடப்பட்டிருப்பதையும், நன்றாகப் பயிரிடப்பட்டதையும், களைகள் எல்லாம் பிடுங்கப்பட்டு, திராட்சைத் தோட்டம் மிக செழிப்பாக வளர்ந்திருப்பதையும் கண்டு, அவர் தன் வேலைக்காரனின் திறமையைக் மிகவும் சந்தோஷப்பட்டார். அவர் இதுபற்றி தம்முடைய வாரிசான தனது மகனிடம் கூறினார். அவர் தனது ஆலோசகர்கள் மற்றும் தனது நண்பர்களிடமும் இதுபற்றி ஆர்வத்துடன் பேசினார். இப்படிச் சொல்லிவிட்டு, தன் வேலைக் காரனுக்கு தான் பிறப்பித்த கட்டளை பற்றியும் வேலைக்காரன் அதை அருமையாக நிறைவேற்றியதையும், அதன் பலனாகத் தான் கண்ட விளைச்சலையும் அவர்களுக்கு விளக்கினார். அவர்களும் வேலைக்காரனைப் பற்றி அவனுடைய எஜமான் சொன்ன சாட்சியைக் கேட்டு அவனை வெகுவாக வாழ்த்தினார்கள். அப்பொழுது எஜமான் அவர்களிடம் இவ்வாறு கூறினார்: ‘என் கட்டளைக்கு கீழ்ப்படிந்தால் இந்த வேலைக்காரனை அவனது அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை செய்வதாக உறுதியளித்தேன். அவன் என் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தான். மேலும், நான் சொன்னதைத் தாண்டி என் கட்டளையின் படி திராட்சைத் தோட்டத்தில் ஒரு நல்ல பயனுள்ள வேலையையும் செய்தான். எனவே, அவன் செய்த இந்த நற்செயலின் விளைவாக, அவனை என் மகனுடன் கூட்டு வாரிசாக ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால், அவனுக்கு ஒரு நல்ல யோசனை தோன்றியபோது, ​​அவன் அதை நிராகரித்து அதை நடைமுறைப் படுத்தாமல் விடவில்லை,’ என்று கூறினார். எஜமானரின் புதல்வனும், தனது தந்தையின் ஊழியனான அந்த வேலையாளுடன் கூட்டு வாரிசாக மாறுவது குறித்த தனது தந்தையின் முடிவை மனதார ஏற்றுக்கொண்டான். சில நாட்களுக்குப் பிறகு அந்த எஜமான் ஒரு பெரிய விருந்து ஏற்பாடு செய்து, விருந்தில் அவனுக்குப் போதுமான உணவை பரிமாறி அனுப்பினான். ஆனால் வேலையாளோ தனது எஜமான் அனுப்பிய உணவைப் பெற்றுக்கொண்டதும், அவன் தனக்குத் தேவையான உணவை மட்டுமே எடுத்துக்கொண்டு, மிகுதியை தனது சக வேலையாட்களுடன் பகிர்ந்து கொண்டான். அவனுடைய சகபாடிகள் உணவைப் பெற்றுக்கொண்டதும், அவர்கள் மிகவும் சந்தோஷப்பட்டு, அவனுக்காக செபிக்க ஆரம்பித்தார்கள். அங்கு அவன் தனது இறைவனிடமிருந்து மேலும் மேலும் அருளைப் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். ஏனென்றால் அவன் அவர்களை நன்றாக நடத்தினான். அவனுடைய எஜமான் நடந்ததையெல்லாம் கேள்விப்பட்டபோது, ​​அவன் தன் செயல்களால் மேலும் மகிழ்ச்சி அடைந்தான். அவனுடைய நண்பர்களையும் மகனையும் மீண்டும் அழைத்து, அவனுடைய விசுவாசத்துக்குரிய வேலையாள் தனக்குக் கொடுக்கப்பட்ட உணவை என்ன செய்தான், எவ்வாறு பகிர்ந்து கொண்டான் போன்ற விபரங்கள் யாவற்றையும் அவர்களிடம் சொன்னார். அதனால், அவன் அந்த எஜமானாருடைய சொந்த மகனுடன் சேர்த்து கூட்டு வாரிசாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு சகல தகுதிகளையும் கொண்டிருக்கிறான் என்பதை உறுதிப்படுத்தி, எஜமானரின் இந்த முடிவை ஏற்றுக்கொண்டு அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

உபவாசம் பற்றிய மேலதிக விபரங்கள்

56 நான், “ஐயா, இந்த உவமைகளை நீங்கள் எனக்கு விளக்கினால் அன்றி, நான் அவற்றை ஒருபோதும் புரிந்துகொள்ளவோ ​​விளங்கிக்கொள்ளவோ ​​முடியாதிருக்கிறேன்” என்றேன். அவரோ, “எல்லாவற்றையும் நான் உனக்கு விளக்குவேன், நான் எதைப் பற்றி சொன்னாலும் அதன் அர்த்தத்தை உனக்கு விளக்குவேன்” என்றார். “கர்த்தருடைய கட்டளைகளைக் கீழ்ப்படியுங்கள். அப்போது நீங்கள் அவருக்குப் பிரியமானவர்களாக ஆவீர்கள். மேலும், அவருடைய கட்டளைகளைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையில் நீங்கள் ஒருவராக இருப்பீர்கள். ஆனால், கடவுளின் கட்டளைக்கு அப்பாற்பட்ட நன்மைகளை நீங்கள் செய்வீர்களானால், நீங்கள் அதைவிட பெரிய மகிமையைப் பெறுவீர்கள். மேலும், நீங்கள் கடவுளின் முன்னிலையில் கௌரவத்துக்கு உரித்தானவர்களாக இருப்பீர்கள். நீங்கள் எண்ணிப்பார்க்க முடியாத அளவு மகிமை உங்களுக்குக் கிட்டும். எனவே, கடவுளின் கட்டளைகளைக் கடைபிடிக்கும் போது, ​​​​நீங்கள் இந்த அனைத்துவிதமான நன்மைகளையும் உங்களோடு இணைத்துக் கொள்கிறீர்கள். என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால், நீங்கள்என்றும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள், என்று கூறப்பட்டிருப்பதை அவர் நினைவுகூர்ந்தார். மீண்டும் நான் அவரிடம் பின்வருமாறு சொன்னேன்: “ஐயா, நீங்கள் எனக்கு என்ன கட்டளையிடுகிறீர்களோ, அதற்கு நான் கீழ்ப்படிவேன், என்றேன். அதற்கு அவர், “நற்கிரியைகள் மீது உனக்கு மிகுந்த பற்றுதல் இருப்பதால், நான் உன்னுடன் இருக்கிறேன். உண்மையில், இந்த வகையான வைராக்கியம் கொண்ட அனைவருடனும் நான் இருக்கிறேன், ”என்று அவர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: “நீங்கள் கர்த்தருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்தால், இந்த விரதம் மிகவும் நல்லது. எனவே, நீங்கள் செய்யப்போகும் உபவாசத்தை பின்வருமாறு செய்ய வேண்டும். முதலில், எல்லா விதமான தீய வார்த்தைகள், தீய ஆசைகள் போன்றவற்றிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ளவும். மேலும் இவ்வுலகில் உள்ள அனைத்து பயனற்ற பொருட்கள் மீதுள்ள பற்றுதலை நீக்கி, உங்கள் மனதைத் தூய்மையாக வைத்திருங்கள். இவற்றை கடைபிடித்தால் உங்களின் விரதம் பரிபூரணமாக அமையும். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்: எழுதப்பட்டதை நீங்கள் நிறைவேற்றிய பிறகு, உங்கள் உபவாச நாளில் நீங்கள் அப்பத்தையும் தண்ணீரையும் தவிர வேறு எதையும் உண்ணக்கூடாது. நீங்கள் உபவாசம் இருக்க உத்தேசித்துள்ள நாளில் நீங்கள் எவ்வளவு உணவு உட்கொள்வீர்கள் என்று ஒரு அளவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வாறு ஒரு அளவை ஏற்படுத்திக் கொண்ட பின்னர், ஒரு விதவை அல்லது அனாதை (தாய்/தந்தையில்லாத) அல்லது தேவை உள்ள ஒருவருக்கு அந்த உணவின் பங்கைக் கொடுங்கள். இந்த வழியில் நீங்கள் கட்டளைக்கு கீழ்ப்படிந்து, தாழ்ச்சி உடையவராக மாறுவீர்கள். உங்கள் பணிவான குணத்தின் விளைவாக, உங்களிடமிருந்து உணவையோ அல்லது வேறு எந்தப் பொருளையோ பெற்றுக் கொள்பவரின் மனம் திருப்தியடைந்து உங்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யும். உங்கள் விரதத்தை இவ்வாறு நிறைவேற்றும் பட்சத்தில், நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே உங்கள் காணிக்கை தேவனின் பார்வையில் ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் இந்த உபவாசம் உண்மையாக ஏற்றுக்கொள்ளப்படும். இவ்வாறு செய்யும் சேவை மிகவும் நேர்த்தியாகவும், மகிழ்ச்சியாகவும் இறைவனுக்கு ஏற்புடையதாகவும் இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள பிள்ளைகள் மற்றும் அனைவருடனும் சேர்ந்து இப்படியான நற்கிரியைகளை மேற்கொள்ள வேண்டும். இவற்றைப் பின்பற்றினால், நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். உண்மையில், அவற்றைக் கேட்டு, கீழ்ப்படிகிற அனைவரும் ஆசீர்வதிக்கப்படுவார்கள். அவர்கள் கர்த்தரிடம் எதைக் கேட்டாலும் அதை பெற்றுக்கொள்வார்கள்,” என்று விளக்கமளித்தார்.

திராட்சைத் தோட்டத்தின் உவமை குறித்த மேலதிக விளக்கம்

57 வயலைப் பற்றிய உவமையையும், எஜமான், திராட்சைத் தோட்டம், வேலைக்காரன், திராட்சைத் தோட்டத்திலிருந்து பிடுங்கிய களைகள், தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்ட வேலிகள், எஜமானுடைய மகன் மற்றும் தனது நண்பர்களுக்கு விளக்கிச் சொன்ன விதம், ஆகியவற்றின் உவமையை மீண்டும் தெளிவாக விளக்கும்படி நான் அவரிடம் மிகவும் விநயமாகக் கேட்டுக்கொண்டேன். ஏனென்றால் இவை அனைத்தும் உவமைகள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆகவே அவர் எனக்கு பதிலாக பின்வருமாறு கூறினார்: “கேள்வி கேட்பதில் நீ மிகவும் பிடிவாதமாக இருக்கிறாய். நீ அப்படிப்பட்ட பிடிவாதக்காரனாய் இருக்கக்கூடாது. மேலும் எந்தக் கேள்வியும் நீ கேட்கக் கூடாது. உனக்கு ஏதாவது விளக்கம் தேவைப்பட்டால், அது உனக்கு விளக்கப் படும், என்றார். அதற்கு நான் அவரிடம்: “ஐயா, நீங்கள் எனக்கு காட்டியதையும், சொல்லியதையும், நான் பார்த்ததையும், அவை என்ன என்பதை நீங்கள் எனக்கு விளக்காத வரை, அவற்றை என்னால் புரிந்து கொள்ள முடியாது. அதுபோல சில விடயங்களை எனக்கு உவமையாகச் சொல்லி அதுகுறித்து விளக்காமல் இருந்தால், நான் உங்களிடம் செவிமடுத்ததெல்லாம் வீணாகப் போய்விட்டது போலாகும்,” என்றேன். அப்போது அவர் மீண்டும் எனக்கு இவ்வாறாகப் பதிலளித்தார்: “கடவுளின் ஊழியர்களாகவும், அவரைத் தங்கள் இதயங்களில் தங்கள் சொந்த இறைவனாகக் கொண்டவர்களும், அவரிடமிருந்து புரிதலைத் தேடுகிறார்கள், அவரிடமிருந்து அதைப் பெற்றுக்கொள்ளவும் செய்கிறார்கள். இவற்றின் ஊடாகத்தான் அவர்கள் எல்லா விடயங்களையும் உவமைகளால் விளக்கியுள்ளார்கள். மேலும், கர்த்தர் உவமைகளின் வாயிலாக என்ன பேசினார் என்பதை அவர்கள் அறிந்து கொள்கிறார்கள். ஆனால், பலவீனமாகவும், அசட்டையுடனும் செபிப்பவர்கள் இறைவனிடம் கேட்கத் தயங்குகிறார்கள். கர்த்தர் மிகுந்த இரக்கமுள்ளவர், தம்மிடம் கேட்பவர்களுக்கு இல்லையெனாமல் அருளுவார். ஆனால், பரிசுத்த தேவ தூதனால் பலப்படுத்தப் பட்டவர்களே, அவரிடம் பரிந்து பேசும் சக்தியைப் பெற்றவர்களே, இவற்றைப் பற்றிய புரிதலை இறைவனிடம் கேட்டபோதும், நீங்கள் ஏன் அவரிடமிருந்து அதைப் பெறவில்லை? என்ற கேள்வியை அவர் என்முன் வைத்தார். அவர் சொன்னதைக் கேட்டு நான் அவரிடம் மீண்டும் எனது கருத்தை முன்வைத்தேன்: “ஐயா, நீங்கள் என்னுடன் இருப்பதால், நான் அதை உங்களிடம் தான் கேட்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் எல்லாவற்றையும் என்னிடம் காண்பித்துத்தான் என்னுடன் பேசுகிறீர்கள். அதேநேரம், நீங்கள் இங்கே இல்லாமல் நான் அவைகளை பார்த்திருந்தால் அல்லது அவைகளை பற்றிக் கேள்விப் பட்டிருந்தால், நான் அதைப் பற்றி இறைவனிடம் மட்டுமே தான் கேட்டிருப்பேன். அப்போது அது எனக்கு விளக்கப்படும்,” என்றும் கூறினேன்.

58 “அப்படியானால், உவமைகளின் விளக்கத்தைப் பற்றி என்னிடம் கேட்பதில் நீ தந்திரமாகவும் பிடிவாதமாகவும் இருக்கின்றாய் என்று நான் உனக்கு ஏற்கனவே சொன்னேன். ஆனால், உன்னைப்போல் விடயங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பதால், வயலின் உவமையையும் அதனுடன் தொடர்புடைய அனைத்து விடயங்களையும் நான் உனக்கு சொல்ல விரும்புகிறேன். அப்போது நீ அனைத்தையும் அறிந்துகொள்ளலாம்,” என்றார். “இப்போது நன்றாகக் கேட்டு, அவற்றைப் புரிந்து கொள்வாயாக என்ற பீடிகையுடன் அவர் சொல்ல ஆரம்பித்தார். வயல் என்பது இந்த உலகத்தைக் குறிக்கிறது. அனைத்தையும் படைத்து, அவற்றைச் சீர்படுத்தி, அதிகாரம் அளிப்பவர் தான் இறைவன். மேலும் சுதனாகிய கர்த்தரும் பரிசுத்த ஆவியானவரும் அதுபோன்ற வல்லமையுடையவர்களே. அவர்களின் அடிமை தான் கடவுளின் குமாரன். திராட்சைக் கொடிகள் தான் அவரால் நடப்பட்ட இந்த மனிதர்கள். வேலிகள் தான் அவருடைய மக்களை ஒன்றாக காத்து வைத்திருக்கும் பரிசுத்த தூதர்கள். மேலும், பூமியில் இருந்து பிடுங்கி எறியப்பட்ட களைகள் தான் கடவுளின் அடியார்களுக்கு எதிராக தவறு செய்யும் மனிதர்கள். எஜமான் என்பவன் தான் இறைவன் தன் அடியாருக்கு அனுப்பிய உணவு, அவர் தனது மகன் மூலம் மனிதர்களுக்கு வழங்கிய கட்டளைகள், நண்பர்கள் மற்றும் ஆலோசகர்கள், போன்றர்கள் தான் முதலில் உருவாக்கப்பட்ட புனித தூதுவர்கள். “எஜமான் மீண்டும் வரும் வரை காத்திருந்த காலம் தான் கர்த்தரின் வருகைக்கும் தற்போதைய காலத்துக்கும் இடையில் உள்ள எஞ்சியிருக்கும் காலம்” என்று அவர் விளக்கமளித்தார். அதற்கு நான் அவரிடம் இவ்வாறு சொன்னேன்: “ஐயா, அவை அனைத்தும் மிகச் சிறந்தவை, மற்றும் மிக உயர்ந்த விடயங்கள். அத்தோடு இவை அனைத்தும் மிகவும் பெருமைக்குரியவை. நான் அவர்களைப் புரிந்து கொள்வதில் என்ன பயன்? வேறு யாராலும், அதாவது மிகுந்த அறிவுக்கூர்மையுடைய புத்திசாலிகளால் கூட அவைகளை புரிந்து கொள்ள முடியாதிருக்கிறது. மேலும் ஐயா, நான் உங்களிடம் இன்னும் என்ன விரங்களைக் கேட்டறிய வேண்டும் என்பதை எனக்கு விளக்கவும்,” என்று நான் அவரிடம் பணிவுடன் கேட்டுக்கொண்டேன். அதற்கு அவர் பதிலாக: “உனக்கு ஏதாவது தேவைப்பட்டால் கேள்,” என்றார். அதற்கு நான், “அந்த உவமையில் கடவுளின் மகன் ஏன் அடிமையாக காட்டப்படுகிறார் ஐயா?” என்று வினவினேன்.

59 “அப்படியானால், நான் சொல்வதை கவனமாகக் கேள், தேவனுடைய குமாரன் அடிமையாகக் காட்டப்படவில்லை. ஆனால் அவர் பெரும் வல்லமையோடும் கம்பீரத்தோடும் வந்திருக்கிறார்,” என்றார். “அது எப்படி ஐயா? எனக்கு புரியவில்லை,” என்று மீண்டும் கேட்டேன். அவர் இவ்வாறு கூறினார். “கடவுள் திராட்சைத் தோட்டத்தில் கொடிகளை நட்டார். அதாவது மக்களைப் படைத்தார். அவர் அவர்களை சிருஷ்டித்து தம் ஏக சுதனிடம் ஒப்படைத்தார். மேலும் அவர்களைப் பாதுகாக்க கர்த்தராகிய குமாரன் அவர்கள் மீது தேவதூதர்களை அனுப்பினார். அவ்வாறே, சுதனாகிய கர்த்தர் பெரும் முயற்சி செய்து, பாடுகள் மற்றும் துன்பத்தின் மூலம் தம் மக்களுடைய பாவங்களிலில் இருந்து அவர்களை மீட்டு தூய்மைப் படுத்தினார். ஏனென்றால், முயற்சியும் கஷ்டமும் இல்லாமல் எவராலும் திராட்சைத் தோட்டத்தை பராமரிக்க முடியாது. ஆகையால், அவர் தாமே தமது மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து சுத்திகரித்தபின், அவர் பிதாவிடமிருந்து பெற்ற நீதியை அவர்களுக்கு அளித்து, வாழ்க்கையின் வழிகளை அவர்களுக்குக் காட்டினார்,” என்று விளக்கமளித்தார். அவர் மேலும் கூறுகையில், “அவர் தம்முடைய பிதாவிடமிருந்து சகல வல்லமைகளையும் பெற்றுக்கொண்டு, மனிதர்களையும் மற்றைய அனைத்தையும் ஆட்சி செய்பவர் தான் கர்த்தர் என்பதை நீங்கள் காண்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், ஏன், அடிமையின் சுதந்தரத்தைப் பொறுத்தவரை, சுதனாகிய கர்த்தரையும் மகிமையான தூதர்களையும் தனது பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டார்?” என்ற கேள்வி உன் மனதில் எழக்கூடும். அதற்கான விளக்கம் என்னவென்றால், ஆதியில் இருந்தே பரிசுத்த ஆவியானவர் வழியாக எல்லா படைப்புகளும் உருவாக்கப்பட்டன, கடவுள் தாம் விரும்பியபடி தனது சாயலாய், சரீர வடிவில் அவர் படைத்த மக்களை வாழ வைத்தார். ஆகையால், பரிசுத்த ஆவியானவர் குடியிருக்கும் இந்த உடல், ஆவியானவரை எந்த விதத்திலும் மாசுபடுத்தாமல், பரிசுத்தத்திலும் தூய்மையிலும் வாழ்ந்து, தூய ஆவிக்கு நன்றாக சேவை செய்ய வேண்டும். ஆகையால், அந்த வாழ்க்கையைப் பயபக்தியோடும், தூய்மையோடும் நேர்மையோடும் வாழ்ந்து, தூய ஆவியின் வழிகாட்டுதலில் பயணித்து, எல்லா படைப்புகளோடும் உண்மையான உறவை ஏற்படுத்திக் கொண்டு, ஆவியின் வாயிலாகக் கிடைத்த சக்தியுடனும் தைரியத்துடனும் நடந்து, பரிசுத்த ஆவியுடன் அவரது பாரிய வல்லமையை பகிர்ந்துகொள்ள கர்த்தர் தன்னையே அர்ப்பணித்தார். ஏனென்றால், சரீரத்தின் நடத்தை கர்த்தருக்குப் பிரியமாக இருந்தது. அதாவது, பரிசுத்த ஆவியானவர் சரீரத்தில் குடியிருக்கும் வரை பூலோக வாழ்வில் அந்த சரீரம் மாசடைய வில்லை. ஆகையால், அவர் சுதனாகிய கர்த்தரையும் மகிமையான தூதர்களையும் பாதுகாவலர்களாக ஏற்றுக்கொண்டார். இந்த உடல் மூலமாகவும் பரிசுத்த ஆவியானவருக்கு நேர்மையுடனும், வஞ்சகமின்றி சேவை செய்யவும், தான் குடியிருக்க ஒரு நிர்மலமான ஸ்தானத்தைப் பெறவும், அதன் மூலம் செய்த சேவைக்கான வெகுமதியை இழக்காமல் இருக்கவும் தான் இவ்வாறான பாதுகாவல் அளிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், பரிசுத்த ஆவியானவர் வாசமாயிருக்கிற சகல உடல்களும் கறையற்றதாகவும், பழுதற்றதாகவும் இருக்குமென நிரூபிக்கப்பட்டால், அவை இறை வெகுமதியைப் பெறும். ஆகவே, இப்போது இந்த உவமையின் பொருள் பற்றி நீ விளங்கிக்கொண்டிருப்பாய் என்று எண்ணுகிறேன்,” என்று சொல்லி முடித்தார்.

60 “ஐயா, இந்த விளக்கத்தைக் கேட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றேன். அப்போது அவர் மகிழ்வுற்றவராக, “இப்போது இதையும் கேள், உன்னுடைய இந்த சரீரத்தை தூய்மையாகவும் களங்கமில்லாமலும் வைத்துக்கொள். அப்போது உன் மனதின் உள்ளே இருக்கும் தூய ஆவியானவர் அதற்கு சாட்சியாக இருப்பார். ஆகவே உங்களது சரீரமும் நேர்வழி செல்வதால் நல்ல அங்கீகாரத்தைப் பெறும். உங்களுடைய இந்த சரீரம் ஒருநாள் மரணத்தின் மூலம் அழிந்து விடத்தானே போகிறது என்ற எண்ணம் உங்கள் இதயத்தில் நுழையாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி நினைப்பீர்களானால், நீங்கள் அதை ஏதாவது தீய வழியில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்குவீர்கள். அப்படி செய்வதால் நீங்கள் உங்கள் சரீரத்தைக் கெடுத்துக் கொள்கிறீர்கள் என்றால், நீங்கள் அதில் குடியிருக்கும் பரிசுத்த ஆவியைத் துச்சமாக எண்ணுகிறீர்கள். நீங்கள் உங்கள் சரீரத்துக்கு கேடு விளைவித்தால், உங்கள் வாழ்வு நிலைத்திருக்காது. அப்போது நான் அவரை நோக்கி: “ஆனால் ஐயா, இந்த வார்த்தைகளைக் கேட்பதற்கு முன்பு ஒருவித அறியாமையால் எவரேனும் பீடிக்கப்பட்டிருந்தால், அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டிருந்தால், அதன்மூலம் தன்னுடைய சரீரத்தை ஒருவர் கெடுத்துக்கொண்டிருந்தால், அவர் எப்படி இரட்சிக்கப்படுவார்?” என்று கேட்டேன். அதற்கு அவர்: “அறியாமையினால் செய்த தவறைக் குணப்படுத்தும் ஆற்றல் கடவுளுக்கு மட்டுமே உண்டு. ஏனென்றால் சகலவற்றையும் ஆட்சி செய்யும் வல்லமை இருப்பது அவர் ஒருவருக்கு மட்டுமே,” என்று பதிலளித்தார். ஆகவே உங்களை நீங்களே நன்றாக அறிந்து, பாதுகாத்துக் கொள்ளுங்கள். மேலும், இரக்கமுள்ள இறைவன், நீங்கள் அறியாமல் செய்த செயல்களின் நிமித்தம் உங்களை மன்னிப்பார். இனிமேல் நீங்கள் உங்கள் உடலையோ உள்ளத்தையோ மாசுபடுத்தாமல் இருந்தால் அதுதான் நீங்கள் செய்யவேண்டிய பிரதானமான கடமையாகும். ஏனென்றால் அவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டவை. ஆதலால் அவற்றில் ஒன்றைக் கெடுக்காமல் மற்றையதைக் கெடுக்க முடியாது. எனவே, இரண்டையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். அப்படியானால் நீங்கள் கடவுளுக்கு உகந்தவர்களாக வாழ்வீர்கள்.”

6 உவமை

இரண்டு விதமான மேய்ப்பர்கள் பற்றிய உவமை: ஆடம்பரம் மற்றும் மகிழ்ச்சியினால் ஏற்படக்கூடிய விளைவுகள்

61 நான் என் வீட்டில் அமர்ந்து, நான் கண்ட அனைத்திற்காகவும் கர்த்தரை மகிமைப்படுத்திக் கொண்டிருந்தபோது, ​​அந்தக் கட்டளைகள் அழகாகவும், சக்திவாய்ந்ததாகவும், மகிழ்ச்சி தருவதாகவும், மகிமை அளிப்பதாகவும், ஒருவருடைய ஆன்மாவைக் காப்பாற்றக்கூடிய வலிமை கொண்டதாக இருப்பதால், நான் எனக்குள் இவ்வாறு சொல்லிக் கொண்டேன்: “நான் இந்தக் கட்டளைகளின்படி நடந்தால், நான் ஆசீர்வதிக்கப்படுவேன். உண்மையில், இந்த கட்டளைகளைப் பின்பற்றுபவர் அதிர்ஷ்டசாலி. இவைகளை எனக்குள் சொல்லிக் கொண்டிருக்கையில், திடீரென்று அவர் என் அருகில் அமர்ந்து இப்படிச் சொல்வதைக் கேட்டேன். “நான் உனக்குக் கொடுத்த கட்டளைகளைக் குறித்து நீ ஏன் இரட்டை எண்ணம் கொண்டவனாக இருக்கிறாய்? அவை அழகானவை, அவற்றையிட்டு ஒருபோதும் இரட்டை எண்ணம் கொண்டவராக இருக்காதே. அதேவேளை, கர்த்தருடைய விசுவாசத்தை அணிந்துகொண்டு அவரது கட்டளைகளின்படி நடக்கவும். ஏனென்றால் நான் அவைகளில் உன்னைப் பலப்படுத்துவேன். மனந்திரும்பும் நோக்கம் கொண்டவர்களுக்கு இந்தக் கட்டளைகள் நன்மை பயக்கும். அப்படியும் அவர்கள் அந்தக் கட்டளைகளைப் பின்பற்றவில்லை என்றால், அவர்களின் மனந்திரும்புதல் வீணாகிவிடும். ஆகையால், மனந்திரும்புகிறவர்களே, உங்களை துவம்சம் செய்யக்கூடிய இந்த உலகத்தின் தீய கிரியைகளைத் தவிருங்கள். நீதியின் அனைத்து குணங்களையும் ஏற்று அதன்படி ஒழுகும் நோக்கம் கொண்டவராக இருந்தால், நீங்கள் இந்த கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவீர்கள். மேலும் பாவத்துடன் சம்பந்தப்பட்ட எதனோடும் நீங்கள் உங்களை இணைத்துக் கொள்ள மாட்டீர்கள். எனவே, மேலும் மேலும் பாவங்களை கூட்டிக் கொள்ளாமல் இருப்பதன் காரணமாக, நீங்கள் ஏற்கனவே செய்த பாவங்கள் பல அற்றுப் போகும். ஆகையால், என் கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள். அப்போது நீங்கள் கடவுளுக்கு உகந்தவர்களாக வாழ்வீர்கள். இவைகளெல்லாம் நான் தான் உனக்குச் சொல்லி இருக்கிறேன்” என்றார். இவற்றை அவர் என்னிடம் கூறிய பிறகு, அவர் மீண்டும் என்னிடம்: “ஊருக்குப் போவோம். அங்கே உனக்கு ஆடுகள் மேய்ப்பவர்களைக் காட்டுவேன்” என்றார். “போகலாம் ஐயா” என்றேன். எனவே நாங்கள் ஒரு சமவெளியை அடைந்தோம். அப்போது அவர் மஞ்சள் நிற ஆடை அணிந்த ஒரு இளம் மேய்ப்பனைக் காட்டினார். அவன் ஏராளமான ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். மேலும், இந்த செம்மறி ஆடுகள் நன்கு உணவளிக்கப்பட்டு மிகவும் செழுமையாகத் தோற்றம் அளித்தன. மேலும் அவை மிகவும் மகிழ்ச்சியாக அங்கும் இங்கும் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தன. அவ்வாறே, மேய்ப்பனும் தன் ஆடுகளுடன் மகிழ்ச்சியாகக் காணப்பட்டான். ஆடுகளுக்கு மத்தியில் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்த அந்த மேய்ப்பனின் தோற்றம் கூட மிகவும் மகிழ்ச்சியைத் தரக்கூடியதாக இருந்தது.

62 அவர் என்னிடம்; “இந்த மேய்ப்பனைப் பார்த்திருக்கிறாயா?” என்று வினவினார். “நான் அவரைப் பார்த்திருக்கிறேன் ஐயா” என்று பதிலளித்தேன். அப்போது அவர், “இவன் ஆடம்பர மற்றும் ஏமாற்றத்தின் தூதன். அவன் கடவுளின் ஊழியர்களின் மனங்களை வெறுமை எனும் மாயைகளால் நிரப்புகிறான். சத்தியத்தின் வழியிலிருந்து அவர்களைத் திசைதிருப்பி, அவர்கள் மனதில் தீய ஆசைகளை உருவாக்கி அவர்களை ஏமாற்றுகிறான். அப்போதுதான் அவர்கள் உயிருள்ள கடவுளின் கட்டளைகளை மறந்து, வீண் ஆடம்பரங்களால் திருப்தி கொள்வர். மேலும் அவர்கள் இந்த கேட்ட தூதனால் அழிவை சந்திக்கின்றனர். அத்தோடு சிலர் மரணித்தும் விட்டனர். ஏனையோர் ஊழலுக்குள் சிக்கி ஆபத்தில் வீழ்ந்து விட்டனர்,” என்றார். அதற்கு நான் அவரிடம்: “ஐயா, ‘மரணம்’ மற்றும் ‘ஊழல்’ என்றால் என்ன என்று எனக்குப் புரியவில்லை.” என்று சொன்னேன். “அப்படியா கேள் என்று தொடர்ந்த அவர், “ஆடுகள் மிகவும் மகிழ்ச்சியுடன் அங்கும் இங்கும் துள்ளிக் குதித்ததை நீ பார்த்தாய் அல்லவா? அவை, கடவுளை விட்டு முற்றிலும் விலகி, இந்த உலகத்தின் இச்சைகளுக்கு தங்களை ஒப்படைத்த மனிதர்களுக்கு உதாரணமாகக் காட்டப்பட்டவை” என்று கூறினார். “எனவே, அவர்கள் ஜீவனுள்ள வாழ்வைப் பற்றி வருந்துவது இல்லை. ஏனென்றால், இறைவனின் திருநாமத்தை அவமதித்தவர்கள் அவர்கள். அத்தகையவர்களுக்கு மரணம் நிச்சயம் உண்டு. ஆனால், அங்கும் இங்கும் துள்ளிக் குதிக்காமல் சாந்தமாய் இருந்த நீ பார்த்த ஆடுகள், அதாவது ஒரே இடத்தில் அமர்ந்து அமைதியாக உண்ணும் ஆடுகள் தான், ஆடம்பர மற்றும் வெறும் மாயைகள் நிறைந்த வாழ்க்கைக்குத் தங்களைக் அர்ப்பணித்தவர்கள். அதேநேரம் இறைவனுக்கு எதிராக எந்த விதமான நிந்தனையான பேச்சுகளையும் பேசாதவர்களும் உண்டு. எனவே, அவர்கள் சத்தியத்தைப் பற்றி அறியாமல் நொந்துபோனவர்கள். ஆனாலும் மனந்திரும்பக்கூடியவர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் புத்துயிர் பெறுவார்கள். எனவே, ஊழலுக்குள் ஈர்க்கப் பட்டாலும், புத்துயிர் பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் மரணம் என்பது நித்திய அழிவைக் கொண்டு வருவது மட்டுமே,” என்று விளக்கமளித்தார். மீண்டும், நாங்கள் சிறிது தூரம் நடந்து சென்றோம். அப்போது காட்டில் வசிக்கும் ஒரு பழங்குடி இனத்தவர் போலத் தோற்றமளிக்கும் மேய்ப்பனைக் காட்டினார். அவர் வெள்ளாட்டுத் தோலாலான அங்கி ஒன்றை அணிந்திருந்தார், அவர் தோளில் ஒரு வகை வித்தியாசமான பையை வைத்திருந்தார். அவர் நீண்ட சடைமுடியோடும் கையில் ஒரு ஈட்டியுடனும் காணப்பட்டார். அவர் மிகவும் ஒரு அருவருப்பான தோற்றத்தைக் கொண்டிருந்தார், அவருடைய தோற்றத்தைக் கண்டு நான் சற்றே பயந்திருந்தேன். அப்போது அந்த பழங்குடி மேய்ப்பன் இங்கு ஏற்கனவே கூறப்பட்ட இளம் மேய்ப்பனிடம் இருந்து நல்ல ஊட்டமுள்ள, வளமான ஆனால் அங்கும் இங்கும் துள்ளித்திரியாத ஆடுகளை வாங்கி, அவற்றை எடுத்துச் சென்று முட்களும் புதர்களும் கொண்ட செங்குத்தான இடத்தில் வைக்கிறார். அவ்வாறு வைத்த போது, அந்த ஆடுகள் முட்கள் மற்றும் புதர்களில் சிக்கிக்கொண்டு தங்களை விடுவிக்க முடியாது அங்கலாய்த்தன. இவ்வாறு, முட்களிலும் புதர்களிலும் சிக்கிக்கொண்டு இருந்த நிலையில் அவைகளால் புல்லை மேய முயன்றும் முடியாதிருந்தது. பிறகு அந்த பழங்குடி மேய்ப்பன் அந்த ஆடுகளை அடித்துத் துன்புறுத்தினான். அதனால் அவை பரிதாபமான நிலைக்கு ஆளாகிவிடுகின்றன. அப்படியான நிலையிலும் கூட அந்த மனிதன், ஏற்கனவே துன்பத்தில் இருக்கும் ஆடுகளை அங்கும் இங்கும் அலைக்கழிக்கிறான். அவைகளுக்கு ஓய்வு கொடுக்கப்படவே இல்லை. ஆகவே அந்த ஆடுகள் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது,” என்று கூறினார்.

63 அந்த ஆடுகள் அடித்து துன்புறுத்தப்படுவதைக் கண்டபோது, ​​அவைகளுக்காக நான் மிகவும் வருந்தினேன். ஏனென்றால், அவை மிகவும் கொடுமையாக நடத்தப்பட்டன. அவைகளுக்கு ஓய்வு என்பதே இல்லை. என்னுடன் இருந்த மேய்ப்பனிடம் நான், “ஐயா, இந்த ஆடுகளை இப்படி நடத்தும் கொடூரமான, தீய, இரக்கமற்ற மேய்ப்பனான இவன் யார்?” என்றேன். அவர் என்னை நோக்கி, “இவன் தண்டனையின் தூதுவன். ஆனால் நீதியின் தூதர்களில் ஒருவன். தண்டிப்பது அவனது தலையாய கடமை. கடவுளை விட்டு விலகி, இவ்வுலகின் இச்சைகளையும் இன்பங்களையும் பின்பற்றியவர்களை அவர் அழைத்துச் சென்று தண்டிப்பதைத் தான் இங்கு உதாரணமாகக் காட்டப்பட்டுள்ளது. ஏனென்றால் அவர்கள் பல்வேறுபட்ட கடுமையான தண்டனைகளைப் பெறத் தகுதியானவர்கள்,” என்று விளக்கினார்.

நான் மீண்டும் அவரை நோக்கி, “இந்த விதவிதமான தண்டனைகள் ஏன் மற்றும் என்ன என்பதை அறிய விரும்புகிறேன், ஐயா,” என்றேன். அவர் அதற்கு: “கேள்,” என்று தொடர்ந்தார். “பலவிதமான நிந்தனைகள் மற்றும் தண்டனைகள் என்பன அவர்கள் வாழ்வில் அவர்கள் அனுபவிக்கும் பல்வேறு வகையான துன்பங்களுக்கு எடுத்துக்காட்டாய் சொல்லப்படுகின்றன. சிலர் எடுத்துக் கொள்வதால் தண்டிக்கப் படுகிறார்கள், மற்றவர்கள் பறிமுதல் செய்வதன் மூலம் தண்டிக்கப் படுகிறார்கள். அவ்வாறே, பிறர் பலவிதமான நோய் நொடிகளாலும், துன்பங்களாலும், வேறு சிலர் பலதரப்பட்ட இடையூறுகளாலும், மற்றும் சிலர் மதிப்பற்றவர்களால் அவமதிக்கப்பட்டு, நிந்திக்கப்பட்டு, பலவிதமான வேதனைகளை அனுபவிக்கின்றனர். அநேகமானோர், தங்கள் சொந்த நோக்கங்களுக்காகவும் அவற்றை நிறைவேற்றும் முகமாகவும் அலைந்து, திரிந்து பல வழிகளிலும் போராடுகிறார்கள். பலர் தங்கள் நோக்கங்களை அடைவதில் பெரும் முயற்சி செய்து அல்லாடுகிறார்கள். அப்படியும் எதுவும் அவர்களுக்கு வெற்றியைத் தருவதில்லை ஆனால் அவர்கள் தீய செயல்களில் ஈடுபட்டார்கள் என்பதை அவர்களது மனம் ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக அவர்கள் இறைவனை குற்றம் கூறுகிறார்கள். ஆகையால், அவர்கள் எல்லா விதமான வலிகளாலும் துன்பப்படுகையில், அவர்கள் நல்ல ஆலோசனை பெறும்பொருட்டு என்னிடம் ஒப்படைக்கப்படுவார்கள். அதன்பின் அவர்கள் இறைவனின் மீதுள்ள விசுவாசத்தில் வலுப்பெற்று வாழ்நாள் முழுவதும் தூய உள்ளத்துடன் இறைவனை மகிமைப் படுத்துவார்கள். ஆதலால், அவர்கள் வருந்தும்போது, ​​அவர்கள் மேற் கொண்ட அக்கிரமங்கள் மற்றும் அநியாய செயல்கள் அவர்களுடைய மனங்களில் நிழலாடும். அப்பொழுது அவர்கள் தேவனை மகிமைப் படுத்துவார்கள், ஏனென்றால் அவர் நீதியுள்ளவர், நியாயத்திற்கு அதிபதி. ஏனென்றால், அவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுகள், தீய செயல்களுக்காக மனவருத்தம் அடைந்தார்கள். அன்றிலிருந்து அவர்கள் தூய்மையான மனதுடன் இறைவனைப் போற்றுவார்கள். மேலும், அவர்கள் இறைவனிடம் கேட்கும் அனைத்தையும் பெற்று, அவர்கள் செய்யும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறுவார்கள். இறுதியில் அவர்கள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டதால் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார்கள். அவர்கள் இனி எந்தத் தீமையாலும் பாதிக்கப்படுவதில்லை,” என்று கூறினார்.

64 நான் அவரிடம் இவ்வாறு சொன்னேன். “ஐயா, எனக்கு வேறு ஏதாவது பற்றி விளக்குவதாக இருந்தால், அதையும் இப்போது விளக்குங்கள்,” என்று. “நீ தெரிந்து கொள்ள வேண்டியது என்ன என்று சொல்?” என்று கேட்டார். அதற்கு நான், “ஆடம்பரமாகவும் வீணாகவும் செலவழிக்கும் அதே காலப்பகுதியை போன்றே, அவர்கள் வலிகளாலும் வேதனைகளாலும் அவதிப்பட நேரிடுமா ஐயா?” என்று கேட்டேன். ” ஆம், அதே துன்பத்தை அவர்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும்,” என்றார். “அப்படியானால் அவர்கள் அனுபவிக்கும் துன்பம் மிகக் குறைவு தான். கடவுளை மறந்து ஆடம்பரமாகவும் வீண் செருக்குடனும் வாழ்பவர்களுக்கு இன்னும் ஏழு மடங்கு துன்பம் வரவேண்டும், ” என்று நான் அவரிடம் சொன்னேன். அதற்கு அவர் என்னை நோக்கி, “நீ அறிவில்லாதவன், உனக்கு துன்பம் என்றால் என்ன என்று புரியாது,” என்று கடிந்து கொண்டார். “அது உண்மைதான் ஐயா,” என்றேன், “எனக்கு புரிந்திருந்தால், நான் உங்களிடம் விளக்கம் கேட்டிருக்க மாட்டேன்,” என்றேன். அதற்கு அவர், “நான் கூறப்போகும் இரண்டு காரணிகள் மற்றும் அவற்றுக்குள்ள சக்தியைப் பற்றி சொல்கிறேன் கேள்,” என்று தொடர்ந்தார். ஆடம்பரம் மற்றும் மகிழ்ச்சி போன்றவை ஒரு மணிநேரம் நிலைத்திருக்கும். ஆனால் ஒரு மணிநேர துன்பம் என்பது முப்பது நாட்களுக்கு நீடிக்கக்கூடியது. எனவே, ஒருவன் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து, ஒரு நாளைக்கு மட்டும் தானே என்று நினைத்து தன்னையே ஏமாற்றிக்கொண்டு, துன்பத்துக்குள் விழுவானானால், அந்தத் துன்பத்தைக் கொண்டுவந்த அந்த ஒரு நாள் ஒரு வருடத்திற்குச் சமமாகும். ஆதலால், ஒருவன் பல நாட்கள் ஆடம்பரமாக வாழ்வானானால், அதே பல வருடங்கள் அவன் வலியால் அவதிப்பட நேரிடும். எனவே, ஆடம்பரம் மற்றும் மாயை போன்ற வற்றுக்கான நேரம் மிகவும் குறுகியதாக இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். ஆனால் தண்டனை மற்றும் துன்பத்தின் காலம் நீண்டது, ”என்று அவர் அழகாக விளக்கினார்.

65 நான் அவரை நோக்கி, “ஐயா, என்னிடம் இன்னும் தெளிவாகப் பேசுங்கள், ஏனென்றால் ஏமாற்றம் மற்றும் ஆடம்பரம் குறித்து எனக்கு எதுவும் புரியவில்லை,” என்றேன். அவர் எனக்குப் பதிலளிக்கையில் இவ்வாறு கூறினார்: “உனது அறியாமை தொடர்கிறது. நீ உனது மனதை தூய்மைப்படுத்தி கடவுளுக்கு சேவை செய்ய வேண்டுமென்பதில்லை. கவனமாக இரு. காலம் கடந்த பின்பும் முட்டாள்தனமாக இராமல் கவனமாக இரு. ஆகவே நன்றாகக் கேள், அப்போது தான் நீ விரும்பியபடி விடயங்களை விளங்கிக்கொள்ள முடியும்,” என்று மீண்டும் கடிந்துகொண்டார். ஒரு நாள் சுகத்துக்காக ஆடம்பரமாகவும் தன்னையே ஏமாற்றிக்கொண்டும் வாழ்ந்து, தான் விரும்பியதைச் செய்பவர்கள், தாங்கள் என்ன செய்கிறோம் என்று அறியாமல், பெரும் அறியாமையை தங்களுக்குள் பதித்துக் கொள்கிறார்கள். அதனால் முந்தைய நாளில் செய்ததை மறுநாள் மறந்து விடுகிறார்கள். ஏனென்றால் ஆடம்பரமும் ஏமாற்றமும் நினைவில் இருப்பதில்லை. அதற்கு காரணம் அவர்களது மனதில் குடிகொண்டிருக்கும் அறியாமையே. அத்தோடு தண்டனையும் வேதனையும் ஒரு நாளில் தனக்கு வந்துவிட்ட பிறகு, அவர்கள் ஒரு வருடம் துன்பம் மற்றும் வேதனையால் அவதிப்படுகின்றனர். ஏனெனில் தண்டனை மற்றும் வலியால் அவதிப்படுவது நீண்ட காலத்துக்கு நினைவில் நிற்கக்கூடியது. ஆகவே ஒரு வருட காலம் தண்டனை மற்றும் வேதனையால் துன்பப்பட்ட அவர்கள், அதன் பின்னர் ஆடம்பரத்தையும் வஞ்சகத்தையும் தந்த அந்தக் கசப்பான வாழ்வை நன்றாக நினைவில் கொள்கிறார்கள். மேலும் அவர்கள் செய்த தீய செயல்களால் தான் இந்த துன்பங்கள் ஏற்பட்டன. எனவே, ஆடம்பரமாகவும், மாயையிலும் வாழ்பவர்கள் அனைவரும் இவ்வாறு மனவேதனைக்குள் வீழ்கிறார்கள். ஏனென்றால், அவர்களுக்கு வாழ்வு இருந்தபோதிலும், அவர்கள் தங்களை மரணத்தின் விளிம்பிலேயே வைத்திருந்தனர். அப்போது நான் அவரை நோக்கி, “ஐயா, ஆடம்பரம் ஏன் அழிவைத்த தரவல்லது?” என்று கேட்டேன். அதற்கு அவர், “மக்கள் செய்யும், ரசிக்கும் அனைத்தும் அவர்களுக்கு ஆடம்பரமாகத் தென்படும். கோபத்துக்கு இடம் கொடுக்கும் மனிதர்கள், தங்கள் உணர்ச்சிகளுக்கு சுதந்திரம் கொடுப்பதன் மூலம் தங்களைத் தாங்களே கெடுத்துக் கொள்கிறார்கள். மேலும், விபச்சாரிகள், குடிகாரர்கள், கொலைகாரர்கள், பொய் சொல்பவர்கள், பேராசை பிடித்தவர்கள், கொள்ளைக்காரர்கள், இப்படிப்பட்ட செயல்களைச் செய்பவர்கள் அனைவரும், தங்கள் சொந்த செயல்களால், தங்கள் சொந்த இச்சைகளை சுதந்திரமாக இயங்க அனுமதிக்கிறார்கள். இவற்றின் மூலம் அவர்கள் தங்கள் தீய சுதந்திரத்துக்கு இடம்கொடுத்துவிடுகிறார்கள். இந்த ஆடம்பரங்கள் அனைத்தும் கடவுளுடைய ஊழியர்களுக்கு அழிவுகளைத் தேடிக் கொடுக்கக்கூடியவை. இவர்கள் இப்படியான அற்ப இச்சைகள் காரணமாக தண்டனைக்கும் வேதனைக்கும் ஆளாகி துன்பப் படுகிறார்கள். அதேவேளை சில ஆடம்பரங்கள் மக்களைக் காப்பாற்றும் தகுதியுடையவை. ஏனென்றால் பலர் அவ்வாறான ஆடம்பரங்கள் ஊடாக நல்ல காரியங்களைச் செய்து மகிழ்கிறார்கள். அவர்கள் அடையும் திருப்தியால் சிலநேரம் அவர்கள் தங்களையும் அறியாது மெய்மறந்து போகிறார்கள். எனவே, இந்த ஆடம்பரமானது கடவுளின் ஊழியர்களுக்கு நன்மை பயக்கும் மற்றும் அத்தகைய மனிதரின் வாழ்வை சீர் செய்கிறது. ஆனால் மேலே கூறப்பட்ட அழிவுகரமான ஆடம்பரங்கள் அவர்களுக்கு வேதனையையும் தண்டனையையும் தான் தருகின்றன. அவர்கள் அதில் நிலைத்திருந்து, மனந்திரும்பவில்லை என்றால், அவர்கள் தாங்களே தங்கள் மீது மரணத்தை வரவழைத்துக் கொள்பவர்களாக இருக்கிறார்கள்,” என்று சிறப்பாக விளக்கமளித்தார்.

உவமை 7

இன்னல்கள் மற்றும் மனந்திரும்புதல்

66 சில நாட்களுக்குப் பிறகு, மேய்ப்பர்களைப் பார்த்த அதே சமவெளியில் நான் அவரைப் பார்த்தேன். அப்போது அவர் என்னிடம்,l “எதற்காக காத்திருக்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு நான், “தண்டனை கொடுக்கும் மேய்ப்பனை என் வீட்டை விட்டு வெளியேறும்படி நீங்கள் கட்டளையிடும் வரை நான் இங்கே காத்திருக்கிறேன், ஏனென்றால் அவர் என்னை மிகவும் துன்புறுத்துகிறார்” என்றேன். அதற்கு அவர், “நீ கஷ்டப்படுவது அவசியம். ஏனென்றால், மகிமையுள்ள தேவதூதர் நீ இவற்றை அனுபவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார். ஏனென்றால் அவர் உன் போன்றவர்களை சோதிக்க விரும்புகிறார்,“ என்றார். அது ஏன் ஐயா? இந்த தேவதையிடம் என்னை ஒப்படைக்க நான் என்ன பாவம் செய்தேன்?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர் இவ்வாறு கூறினார். “நன்றாகக் கேள், உனது பாவங்கள் மிகப் பெரியவை, ஆனாலும் அவை இந்த தேவதையிடம் உன்னை ஒப்படைக்கும் அளவுக்கு பெரியவை அல்ல. ஆனால் உன் போன்ற மக்கள் பெரும் பாவங்களையும் தவறுகளையும் செய்தார்கள். மேலும், மகிமைமிகு தேவதூதன் அவர்களின் செயல்களால் மிகவும் கோபம் கொண்டுள்ளார். இதனாலே, நீ சிறிது காலம் துன்பத்தை அனுபவிக்க வேண்டும், என்று ஆணையிட்டார். அப்படிச் செய்வதன் மூலம், அவர்களும் மனந்திரும்பி, இவ்வுலகத்தின் சொத்துகளுக்காக தங்கள் ஆசைகள் அனைத்தையும் விட்டொழித்து தங்களை பாவமற்றவர்களாக ஆக்கிக்கொள்வர். அவர்கள் மனந்திரும்பி, சுத்திகரிக்கப்பட்ட பிறகு, தண்டனையின் தூதர் அவர்களை விட்டுப் பிரிந்து செல்வார்.” அப்போது நான் அவரிடம்: “ஐயா, அவர்கள் மகிமையான தேவதையை கோபப்படுத்துவது போன்ற தவறான செயல்களைச் செய்தார்கள், ஆனால் நான் என்ன செய்தேன்?” என்று கேட்டேன். “குடும்பத் தலைவனாகிய உன்னால் உனது ஏனைய குடும்ப அங்கத்தவர்களை பராமரிக்க வேண்டுமாயின், துன்பம் இல்லாமல் அப்பொறுப்புகளை நடத்திச் செல்ல முடியாது. நீ துன்பத்தை அனுபவித்தால், அவர்களும் நிச்சயமாகத் துன்பத்தை அனுபவிப்பார்கள். அதேவேளை, நீ செழிப்பாக இருந்தால், உனது ஏனைய குடும்ப அங்கத்தவர்கள் துன்பப்பட மாட்டார்கள்,” என்றார். அப்போது நான், “ஆனால் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள், ஐயா, அவர்கள் முழு மனதுடன் வருந்தினார்கள். அது எனக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் முழு மனதுடன் வருந்தினார்கள் என்பதை நான் அறிவேன். எனவே மனம் வருந்துபவர்களின் பாவங்கள் விரைவில் மன்னிக்கப்படும் என்று நினைக்கிறீர்களா?” என்று கேட்டேன். நிச்சயமாக இல்லை! ஆனால் மனந்திரும்புபவர்கள் தங்கள் சொந்த ஆத்மாவுக்கு தான் அனுபவிக்கும் வலியை உணர்த்த வேண்டும். மேலும் அவர்கள் செய்யும் எல்லாக் காரியங்களிலும் மிகவும் பணிவையும் தாழ்மையையும் கடைபிடிக்க வேண்டும். மேலும் பலவிதமான துன்பங்களையும் தாங்கி கொள்ள வேண்டும். அவர்கள் தங்களுக்கு வரும் துன்பங்களைச் சகித்துக் கொண்டால், நிச்சயமாக எல்லாவற்றையும் படைத்து, அவர்களுக்கு எல்லா சக்தியையும் கொடுத்த எம் தேவனாகிய ஆண்டவர் இரக்கத்துடன் அவர்களைக் குணப்படுத்துவார்,” என்று அவர் விளக்கம் கூறினார். “நிதர்சனம் என்பது இதுதான். மனந்திரும்புதலுக்கு உள்ளானோரின் மனம் எல்லாத் தீமைகளிலிருந்தும் விடுபடுவதை அவர் விரும்புகிறார். ஆனால், நீயும் உன் குடும்பத்தாரும் இப்போது கஷ்டப்படுவது பிற்காலத்தில் நன்மைகளைக் கொண்டுவரும். ஆனால் நான் ஏன் உன்னிடம் பல விஷயங்களைப் பற்றிச் சொல்கிறேன் என்று நினைக்கக் கூடும். உன்னை என்னிடம் ஒப்படைத்த இறைவனின் தூதன் கட்டளையிட்டது போல், நீ துன்பப்பட வேண்டியது அவசியம். இதற்காக இறைவனுக்கு நீ நன்றி செலுத்த வேண்டும். ஏனென்றால், உன் போன்றவர்கள் துன்பங்கள் மற்றும் வேதனைகளை அனுபவிக்க தகுதியானவர்கள் என்று அவர் ஏற்கனவே கருதி இருந்தார். நீ அவற்றை முன்னரே அறிந்து தைரியமாக அவைகளைத் தாங்கிக் கொள்ள முடியும் என்றும், நான் உங்களுடன் இருக்கிறேன். நீங்கள் அனுபவிக்கும் துன்பங்களை மேலும் இலகுவாகவும், தண்டனையை மெலிதாக்கவும் தண்டனையின் தூதுவரைக் கேட்டுக் கொள்கிறேன். ஆகவே நீங்கள் மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே துன்பப்படுவீர்கள். அதன்பின் நீங்கள் மீண்டும் உங்கள் பழைய நிலைமைக்கு வந்து விடுவார்கள். ஆகவே பணிவும், தாழ்மையும் கொள்வது அவசியம். உங்கள் பிள்ளைகளோடும் உங்கள் குடும்பத்தாரோடும் சேர்ந்து தூய்மையான மனதோடு கர்த்தருக்குச் சேவை செய்யுங்கள். நான் உங்களுக்குக் கொடுக்கும் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்து கொள்ளுங்கள். அப்போது உங்கள் மனந்திரும்புதல் வலுவாகவும் தூய்மையாகவும் இருக்கும். நீங்களும் உன் குடும்பத்தாரும் இந்தக் கட்டளைகளைக் கடைபிடியுங்கள். அப்போது நீங்கள் துன்பத்தை விட்டு விலகிவிடுவீர்கள். என் கட்டளைகளைப் பின்பற்றுபவர்கள் அனைவரிடமிருந்தும் துன்பங்கள் நீங்கும்,” என்று அவர் கூறினார்.

8 வது உவமை

வில்லோ மரத்தின் உவமை

67 அவர் எனக்கு ஒரு பெரிய வில்லோ மரத்தைக் காட்டினார். அதன் நிழல் சமவெளிகளிலும் மலைகளிலும் பரந்து காணப்பட்டது. அவ்வாறே, இறைவனின் பெயரால் அழைக்கப்பட்ட அனைவரும் அந்த வில்லோ மரத்தின் நிழலுக்குள் வந்தனர். வில்லோமரத்தின் அருகே தேவனின் தூதர் நின்று கொண்டிருந்தார். அவர் மிகவும் கம்பீரமாகவும் உயரமாகவும் இருந்தார். அவரிடம் கத்தரிக்கோல் ஒன்று இருந்தது. அவர் வில்லோமரத்தின் கிளைகளை வெட்டி, அவற்றை மர நிழலில் காத்திருந்த மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தார். பதினெட்டு அங்குல நீளமுள்ள சிறிய தடிகளைக் கொடுத்திருந்தார். அவர்கள் அனைவருக்கும் தங்கள் பங்குகள் கொடுக்கப்பட்ட பிறகு, தேவதூதர் கத்தரிக்கோலை கீழே வைத்தார். ஆயினும் மரம் முன்பு பார்த்தது போல் ஆரோக்கியமாகவே இருந்தது. அப்போது நான் ஆச்சரியத்தோடு எனக்குள் இவ்வாறு சொல்லிக் கொண்டேன். “இத்தனை கிளைகளை வெட்டிய பிறகும், இந்த கிராமம் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறது?” என்று. அப்போது மேய்ப்பன் என்னை நோக்கி, “இவ்வளவு கிளைகளை வெட்டிய பிறகு, இந்த மரம் ஏன் இவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறது என்று யோசிக்காதே. மேலும் என்னவெல்லாம் நடக்க இருக்கிறது என்று தெரிந்துகொள்ளும் வரை காத்திரு. அப்போது அதன் பொருள் என்னவென்று உனக்கு விளக்கப்படும்,” என்று கூறினார். தேவதூதரால் மரங்களில் இருந்து வெட்டப்பட்ட தடிகளை பெற்றுக் கொண்டவர்களிடம் மீண்டும் அவை சேகரிக்கப்பட்டன. மேலும் அவர்கள் கொடுக்கப்பட்ட வரிசையில் அழைக்கப்பட்டனர். அப்போது ஒவ்வொருவரும் தங்கள் கைகளில் வைத்திருந்த தடிகளைத் திருப்பிக் கொடுத்தனர். அதன் பின், கர்த்தருடைய தூதர் அவர்களை அழைத்து விசாரித்தார். சிலரிடமிருந்து அவர் திரும்பப் பெற்ற தடிகள் உலர்ந்து காணப்பட்டன, சிலவற்றை சிறு புழுக்கள் மற்றும் உயிரினங்கள் அரித்துண்டு தின்றுவிட்டன. அப்படிப்பட்ட தடிகளைத் திருப்பிக் கொடுத்தவர்களை எழுந்து நிற்கும்படி இறைவனின் தூதர் கட்டளை இட்டார். வேறு சிலர், புழுக்கள் அரித்திராத, உலர்ந்த தடிகளைக் கொடுத்தார்கள். தேவனின் தூதர் இவர்களையும் எழுந்து நிற்கும்படி கட்டளையிட்டார். ஏனையோர் பாதி காய்ந்த தடிகளைத் திருப்பிக் கொடுத்தார்கள். அவர்களையும் எழுந்து நிற்கும்படி கட்டளை இடப் பட்டது. அவர்களுள் சிலர் பாதி காய்ந்த மற்றும் உடைந்த தடிகளைத் திருப்பிக் கொடுத்தனர். அவர்களையும் எழுந்து நிற்கும்படி கூறினார். மற்றவர்கள் உடைந்த தடிகளை பச்சை நிறத்திற்குத் மாற்றினர். அவர்களும் எழுந்து நின்றனர். அதுபோல் மற்றவர்கள் பாதி காய்ந்து, பாதி பச்சையாக இருந்த தடிகளைத் திருப்பிக் கொடுத்தனர். அவர்களும் எழுந்து நின்றனர். மற்றும் சிலர் தங்களிடம் இருந்த தடிகளை மூன்றில் இரண்டு பங்கு பச்சையாகவும் மூன்றில் ஒரு பங்கு உலர்ந்ததாகவும் திருப்பிக் கொடுத்தார்கள். அவர்களும் எழுந்து நின்றனர். 14 மேலும் சிலர் பச்சை நிறத்தில் இருந்த தங்கள் தடிகளைத் திருப்பிக் கொடுத்தனர். ஆனால் அவற்றில் சில நுனியில் மட்டும் காய்ந்ததாக இருந்தன. ஆனால் அந்தத் தடிகள் சில இடங்களில் வெடிப்புகள் காணப்பட்டன. அவர்களும் எழுந்து நிற்கும்படி பணிக்கப் பட்டனர். மற்றவர்கள் தங்கள் பச்சைத் தடிகளை அவ்விதமே கொண்டு வந்தார்கள். அவர்கள் தேவதூதனிடம் அவற்றைப் பெற்றுக்கொண்டதை போலவே பசுமையாக வைத்திருந்தார்கள். இந்த நிலையில் அவர்கள் தடிகளை திருப்பி கொடுத்தனர். அதைக்கண்ட வானதூதர் அவர்களை இட்டு மிக மகிழ்ச்சி அடைந்தார். அவர்கள் கட்டளை இடப்படாமலேயே தாமாக எழுந்து நின்றனர். வேறு சிலர் பச்சையான தண்டுகளுடன் இருந்த தங்கள் தடிகளைத் திருப்பிக் கொடுத்தார்கள். இவர்களும் எழுந்து நின்றனர். தேவதூதரும் அவர்களையிட்டு பெருமகிழ்வு கொண்டார். மீதமாக இருந்தோர் தங்கள் தடிகளைத் திருப்பி கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். அவை பச்சையாகவும் இலைகளால் மூடப்பட்டதாகவும் இருந்தன. அவைகளில் முளைவிட்டிருந்த தடிகள் சிலவற்றில் சில கனிகளும் காய்த்து இருப்பது தெரிந்தது. இந்நிலையில் தடிகளை வைத்திருந்தவர்கள் தங்களுக்குள் மிகவும் மகிழ்ச்சி கொண்டனர். தேவதூதனும் அவர்கள் மகிழ்வதை பார்த்து மகிழ்ச்சியடைந்தார். மேய்ப்பன் இவை அனைத்தையும் கண்ணுற்று மிகவும் மகிழ்ச்சியடைந்தவராகக் காணப்பட்டார்.

68 அப்போது கர்த்தருடைய தூதன் அந்த கிரீடங்களைக் கொண்டு வரும்படி கட்டளையிட்டார். உடனே கிரீடங்கள் அங்கு கொண்டு வரப்பட்டன. கிரீடங்கள் பனை ஓலைகளால் செய்யப்பட்டதாகத் தோன்றியது. பின்னர் அவர் கொடுக்கப்பட்ட கிளைகளில் துளிர்விட்ட கிளைகளை ஒப்படைத்தவர்களுக்கு கிரீடங்களை சூட்டினார். அவற்றில் சில கனிகளும் இருந்தன. பின்னர் அவர்கள் கோபுரத்தை நோக்கி அனுப்பப்பட்டனர். மேலும், தங்கள் கிளைகளை பச்சையாகவும், காய்க்கும் தறுவாயில் இருந்தும், அவைகளில் கனிகள் இன்றி இருந்தோரையும் கோபுரத்திற்கு அனுப்பினார். அவர்களுக்கு முத்திரையையும் கொடுத்தார். அதனால், அந்தக் கோபுரத்திற்குச் சென்ற அனைவருமே ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்திருந்தனர். அவர்கள் பனி போன்ற வெண்மையான ஆடைகளை அணிந்து காட்சி தந்தனர். மேலும், பச்சை நிறத்துடன் தடிகளைத் திருப்பிக் கொடுத்தவர்களுக்கு வெள்ளை ஆடைகளையும் முத்திரைகளையும் கொடுத்து, அவர்களுடைய தடிகளை அவர்களுக்குக் கொடுத்தது போல அவர்களையும் அனுப்பி வைத்தார். தேவதூதன் இவற்றைச் செய்தபின், மேய்ப்பனை நோக்கி: “நான் இப்பொழுது போகிறேன். இங்கு இருப்பவர்களில் வாழத் தகுதியானவர்கள் என்று நீங்கள் கருதும் பட்சத்தில், அவர்களை மதிலுக்கு அப்பால் அனுப்பி வைக்க வேண்டும். அவர்களிடம் நாம் கொடுத்துள்ள தடிகளை மிகவும் கவனமாக சரிபார்க்கவும். கொடுக்கப்பட்ட வரிசைக்கிரமத்தின் படி அவர்களை அனுப்பவும். ஆனால் அவற்றைச் சரிபார்க்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களின் பிடியில் இருந்து யாரும் தப்பி விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி யாராவது தப்பியோடினால், நான் அவர்களை பலிபீடத்தில் வைத்து பரிசோதிப்பேன், என்று தேவதூதன் மேய்ப்பனிடம் சொல்லிவிட்டு, அவர் புறப்பட்டுச் சென்றார். தேவதூதன் விடைபெற்ற பின், மேய்ப்பன் என்னிடம் பின்வருமாறு சொன்னார்: “நாம் சென்று எல்லா தடிகளையும் எடுத்து வந்து நடுவோம். அவற்றில் ஏதாவது முளைக்கிறதா என்று பார்ப்போம். அதற்கு நான், “ஐயா, இந்த வாடியவை எப்படி மீண்டும் முளைக்கும்?” என்று கேட்டேன். அவர் எனக்குப் பிரதியுத்தரமாக: “இது ஒரு வில்லோ இன மரம். இந்த வகை மரம் மிகவும் கடினமானது. எனவே, அந்த வெட்டப்பட்ட கிளைகள் மற்றும் தடிகள் சிறிது ஈரத்தை உறிஞ்ச விட்டால், அவற்றில் பல மீண்டும் உயிர் பெறும். ஆதலால் அவைகள் மீது சிறிது நீரை ஊற்றுவோம். அவைகளில் ஏதேனும் முளைக்குமானால், அவைகளுடனேயே நானும் மகிழ்ச்சியடைவேன். அதேநேரம் அதிலிருந்து எதுவும் உயிர்பெற வில்லையென்றால், அவைகளை புறக்கணித்ததற்காக நான் குற்றவாளியாக இருக்கவும் மாட்டேன்,” என்றார். அவர்கள் நின்ற வரிசைக்கிரமத்தின்படி அவர்களைக் கூப்பிடும்படி மேய்ப்பன் என்னிடம் கூறினார். அப்போது அந்த மக்கள் யாவரும் வரிசையாக அங்கு வந்தனர். அங்கிருந்த மேய்ப்பனிடம் தங்கள் தடிகளைத் திருப்பிக் கொடுக்கத் தொடங்கினர். மேய்ப்பன் தடிகளை எடுத்து வரிசையாக நடத்த தொடங்கினார். அவர் அவற்றை நட்ட பிறகு, நிறைய தண்ணீர் ஊற்றினார். தண்ணீர் அதிகமாக ஊற்றியதன் காரணமாக தடிகள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தன. அந்த அளவுக்கு அவர் அவற்றுக்குத் தண்ணீர் பாய்ச்சினார். அந்த தடிகளுக்கு தண்ணீர் ஊற்றிய பிறகு, அவர் என்னிடம், “இப்போது நாம் போவோம். சில நாட்களுக்குப் பிறகு நாங்கள் திரும்பி வந்து அனைத்து வரிசையாக நடப்பட்ட தடிகளையும் சரிபார்ப்போம். இந்த மரத்தை நாட்டவர் அதை வாழவைக்க இந்த தடிகள் யாவும் தேவை என்பதை உணர்ந்திருந்தார். ஆகவே, நன்றாகத் தண்ணீர் பாய்ச்சப்பட்ட இந்த தடிகளில் பல உயிர்வாழும் என்று நான் நம்புகிறேன்,” என்று மேய்ப்பன் கூறினார்.

வில்லோ மரத்தின் உவமை பற்றிய மேலதிக விளக்கம்

69 நான் அவரை நோக்கி, “இந்த மரம் ஏன் இத்தனை முக்கியத்துவம் பெறுகிறது என்று கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா. ஏனென்றால் நான் அதையிட்டு மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன். ஏனெனில் பல கிளைகள் வெட்டப்பட்டாலும், மரம் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கிறது. அதிலிருந்து எதுவும் வெட்டப்படாதது போலவே காட்சியளிக்கிறது. அதுதான் ஏன் குழப்பத்துக்கு காரணம்,” என்றேன். அவர் இவ்வாறு விளக்கமளித்தார். “கேள், இந்த பெரிய மரம், அனைத்து பீடபூமிகள், மலைகள் மற்றும் அதன் சுற்று வட்டாரம் அனைத்தையும் மூடிமறைக்கும் தன்மையுள்ள இந்த மரம், கடவுளின் சட்டத்தை பிரதிபலிக்கிறது. இது உலகில் உள்ள அனைவருக்கும் பொதுவானது. இந்த சட்டம் கடவுளின் குமாரன். அவர் பூமியின் அனைத்து எல்லைகள் வரை அறிவிக்கப்பட்டார். இம்மரத்தின் நிழலில் இருப்பவர்கள் உபதேசங்களைக் கேட்டு அவரை விசுவாசித்தவர்கள். மேலும் பெரிய மற்றும் புகழ்பெற்ற தூதரான மைக்கேல் அவர்கள் தான் இந்த மனிதர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார். அவர் அவர்களை வழிநடத்துகிறார். ஏனென்றால், விசுவாசிகளின் மனங்களில் சட்டத்தை அமுல் படுத்துபவர் அவரே. எனவே, யாருக்குக் கொடுத்தார் என்பதை பரிசோதிக்கிறார். அவர்கள் அதைக் கடைபிடிக்கிறார்களா என்பதை அறியவே இது செய்யப்படுகிறது. இப்போது ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட தடிகளைக் கவனியுங்கள். அவைகள் தான் சட்டம். பல தடிகள் பயனற்றுப் போனதைக் காணும்போது, ​​யார் யார் அவற்றைக் கொண்டிருந்தார்களோ அவர்கள் சட்டத்தைக் கடைப்பிடிக்கவில்லை என்பது புலனாகிறது. மேலும் ஒவ்வொருவரின் இருப்பிடத்தையும் அதன் மூலம் அறியக்கிடைக்கிறது,” என்று சொன்னார். அதற்கு நான் மீண்டும் அவரிடம், “ஐயா, அவர் ஏன் சிலரை கோபுரத்திற்கு அனுப்பினார், சிலரை உங்களிடம் விட்டுவிட்டார்?” அவர் பதிலாக, “அவரிடமிருந்து பெற்ற சட்டத்தை மீறிய அனைவரும் மனந்திரும்புவதற்காக, ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும் முகமாக, அவர் அனைவரையும் எனது பொறுப்பின் கீழ் விட்டுச் சென்றார். ஆனால், இப்போதும் சட்டத்தைக் கடைப்பிடிப்பது பற்றி திருப்தியடைந்து, அதன் படி நடப்பவர்களை அவர் தொடர்ந்து தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்கிறார்,” என்றார். பின்னர் நான் கேட்டேன்: “அப்படியானால், முடிசூட்டப்பட்டு கோபுரத்திற்கு அனுப்பப்பட்டவர் யார்?” என்று. அவர் எனக்கு பதிலளித்து இவ்வாறு கூறினார்: “அவ்வாறு முடிசூட்டப்பட்டு கோபுரத்திற்கு அனுப்பப்பட்டவர்கள் சாத்தானுடன் சமரிட்டு அவனை வென்றவர்கள். அவர்கள் சட்டத்தைப் பாதுகாக்க தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். அவர்கள் மீண்டும் கையளித்த தடிகள் பசுமையாகவும் இலைகளுடனும் காணப்பட்டாலும், கனிகள் கொண்டிராதமைக்கு உதாரணம் தான், சட்டத்தினிமித்தம் துன்பத்துக்கு உள்ளானோர். ஆனால் அவர்கள் கஷ்டப்படவில்லை. அதேநேரம் அவர்கள் தங்கள் சட்டத்தை கைவிடவும் இல்லை. தங்கள் தடிகளை பசுமையாகத் திருப்பிக் கொடுத்தவர்கள், அதாவது அவர்கள் அவற்றை எப்படிப் பெற்றார்களோ, அதே நிலையில் அவற்றை மீண்டும் திருப்பிக் கொடுத்தவர்கள், தங்கள் இதயத்தைத் தூய்மையாக வைத்து, கர்த்தருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து, கண்ணியமாகவும் நீதியாகவும் வாழ்ந்தவர்கள். மேலும், மற்றவர்களைப் பொறுத்தவரை, நான் நட்டு வைத்த, மற்றும் தண்ணீர் பாய்ச்சியது யார் யாரைக் குறிக்கிறது என்பதை நான் சோதித்த பிறகு நீங்கள் அதுபற்றி அறிந்து கொள்ள முடியும்.

70 சில நாட்கள் கழித்து நாம் அந்த இடத்தை அடைந்தோம். அங்கே மேய்ப்பன் ஒரு மகத்தான தேவ தூதரின் அருகில் அமர்ந்து இருந்தார். நான் அவருக்கருகில் நின்றிருந்தேன். அவர் என்னை நோக்கி, “உன் இடுப்பில் ஒரு துவாயைக் கட்டிக்கொண்டு எனக்கு உதவி செய்,” என்று வேண்டினார். நான் உடனே சாக்கு துணியால் செய்யப்பட்ட சுத்தமான துவாய் ஒன்றை என் இடுப்பில் கட்டிக்கொண்டு அவருக்கு உதவ நான் தயாராக இருப்பதைக் கண்டதும் அவர் என்னிடம் கூறினார்: “பங்கு போட்டவர்களை இங்கே அழைத்து வா” என்று. தங்களுக்கு கொடுக்கப் பட்ட தடிகளைத் திருப்பிக் கொடுத்த வரிசைக் கிராமமாக அவர்களை அழைக்கவும். நான் சமவெளிக்கு சென்று அனைவரையும் வரும்படி அழைத்தேன். அவர்கள் அனைவரும் வரிசையாக நின்றனர். அவர் அவர்களிடம், “நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் தடியை என்னிடம் கொண்டு வாருங்கள்,” என்று கட்டளை பிறப்பித்தார். முதலில் அவரிடம் திரும்பக் கொண்டுவரப்பட்டது வாடிப்போன உருக்குலைந்த தடிதான். அந்தத் தடிகள் காய்ந்து அழிந்ததைக் கண்டதும், அவற்றை ஒப்படைத்தவர்களை எழுந்து நிற்கும்படி கட்டளை இட்டார். அதன்பின் தடிகள் காய்ந்து போன போதிலும் அழியாமல் இருந்தவர்கள் தங்கள் தடிகளைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். பின்னர், சிலர் தங்கள் தடிகளை பச்சை நிறத்துடனேயே திருப்பிக் கொடுத்தனர். மேலும், புழுக்களால் அரித்துண்ணப்பட்ட காய்ந்து, சிதைந்துபோன தடிகளை எடுத்து வந்தவர்கள் அவற்றைத் திருப்பிக் கொடுத்தனர். பின்னர் பச்சை நிறத்தில் தடிகளை ஒப்படைத்தவர்களை எழுந்து நிற்கும்படி கட்டளையிட்டார். ஆனால் சிதைந்துபோன தடிகளை ஒப்படைத்தோர் முதல் குழுவுடன் எழுந்து நிற்கும்படி கட்டளையிட்டார். பாதி காய்ந்து உடைந்த தடிகளை அவர்கள் திருப்பிக் கொடுத்தனர். மேலும் சிலர், பச்சை நிறத்தில் வெடிப்புக்களுடன் காணப்பட்ட தடிகளை ஒப்படைத்தனர். பெரும்பாலான மக்கள் தங்கள் வசம் வைத்திருந்த பச்சை மற்றும் சேதமடையாத தடிகளை அவரிடம் கையளித்தனர். மற்றவர்கள் பச்சை மற்றும் இலைகளுடன் கூடிய தடிகளை ஒப்படைத்தனர். மற்றும் சிலர், பச்சையாகவும், துளிர்த்தும், காய்க்கும் நிலையில் இருந்த தடிகளைத் திருப்பிக் கொடுத்தனர். அந்தத் தடிகள் முடிசூட்டப்பட்டு கோபுரத்திற்கு அனுப்பப்பட்டவர்களின் தடிகளைப் போல இருந்தன. ஆனால் மற்றவர்கள் காய்ந்து கருகிய தடிகளையும், மற்றும் சிலர் காய்ந்த ஆனால் புழுக்கள் மற்றும் உயிரினங்கள் அரித்துண்டிராத தடைகளையும், மேலும் சிலர் முந்தையதைப் போலவே பாதி காய்ந்து சிதைந்துபோன தடிகளையும் திருப்பிக் கொடுத்தனர். அவர்கள் ஒவ்வொருவரையும் எழுந்து நிற்கும்படி கட்டளையிட்டார். மற்றவர்கள் தனித்தனியாக தங்கள் சொந்தக் குழுவுடன் நிற்கும் படி பணிக்கப்பட்டனர்.

71 பின்னர் அவர்கள் தங்களிடமிருந்த பச்சையான ஆனால் உடைந்த தடிகளை மேய்ப்பனிடம் கையளித்தார்கள். இருப்பினும், இவை அனைத்தும் ஆரம்பத்தில் பச்சை நிறத்தில் அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டன, அவர்கள் அனைவரும் ஒரே குழுக்களாக நின்றனர். அதைக் கண்டு மேய்ப்பன் மகிழ்ந்தார். ஏனென்றால், அவர்கள் அனைவரும் மாற்றம் பெற்று, ஊழல்களிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தனர். பாதி பச்சையும் பாதி காய்ந்த தடிகளோடு வந்தவர்கள் மீண்டும் அவற்றை ஒப்படைத்தனர். சிலரது தடிகள் முழுக்க முழுக்க பச்சையாக இருப்பது தெரிந்தது. சிலரது தடிகள் பாதி காய்ந்திருந்தன. சிலருடையவை காய்ந்தும் பூச்சிகளால் அரிக்கப்பட்டவையாக இருந்தன. சில தடிகள் பச்சை நிறத்தில் இலைகளுடன் இருந்தன. இவற்றைக் கொண்டிருந்த அனைவரும் அவரவரது சொந்த குழுக்களுக்குள் திருப்பி அனுப்பப் பட்டனர். அப்போது மூன்றில் இரண்டு பங்கு பச்சையாகவும் மூன்றில் ஒரு பங்கு உலர்ந்ததாகவும் காணப்பட்ட தடிகளை வைத்திருந்தோர், அவற்றை மீண்டும் கையளித்தனர். பச்சையாக மாறிய தடிகளை பலர் ஒப்படைத்தனர். ஆனால் பலர் பாதி காய்ந்த தடிகளையே ஒப்படைத்தனர். மற்றவர்கள் உலர்ந்த மற்றும் பூச்சிகளால் அரித்துண்ணப்பட்ட தடிகளை அவரிடம் கொடுத்தனர். இவற்றைக் கையளித்த யாவரும் தங்கள் சொந்த அணியில் நின்றனர். அதன் பிறகு, மூன்றில் இரண்டு பங்கு உலர்ந்ததும் மூன்றில் ஒரு பங்கு பச்சையுமான தடிகளை வைத்திருந்த மற்றவர்கள் அவற்றை மீண்டும் கொடுத்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் பாதி காய்ந்த தடிகளையே திருப்பிக் கையளித்திருந்தனர். மற்றவர்கள் உலர்ந்த மற்றும் அரித்துண்ணப்பட்டவற்றை ஒப்படைத்தனர். மற்றவர்கள் பாதி காய்ந்த மற்றும் சிதைந்த தடிகளைத் திருப்பிக் கொடுத்தனர். மேலும் சிலர் காய்ந்து, அரித்துண்ணப்பட்டவற்றையும், பாதி காய்ந்து சிதைந்தவற்றை மற்றையோரும் ஒப்படைத்திருந்தனர். அதேநேரம் சிலர் அவற்றை பச்சை நிறத்தில் ஒப்படைத்தனர். தங்கள் தடிகளை பச்சையாக வைத்திருந்தவர்கள் – ஆனால் அவற்றில் ஒரு சிறிய பகுதி மட்டுமே உலர்ந்து, உடைந்து காணப்பட்டவற்றைத் திருப்பிக் கொடுத்தனர். அவர்களில் சிலர் பச்சை நிறம் கொண்ட தடிகளை ஒப்படைத்தனர். மற்றவர்கள் பச்சை நிறத்திலான இலைகளுடன் கூடிய தடிகளை ஒப்படைத்தனர். அவர்களும் தங்கள் குழுக்களுக்குத் திரும்பிச் சென்றனர். அதன் பிறகு, தங்கள் வசமிருந்த தடிகளில், ஒரு சிறிய பகுதியை பச்சையாகவும், மற்றொரு பகுதி உலர்ந்ததாகவும் வைத்திருந்தவர்கள் அவற்றை மீளவும் கையளித்தனர். இந்தத் தடிகளில் பெரும்பாலானவை பச்சை நிறத்தில் இருந்தன, மேலும் அவற்றில் இலைகள் துளிர் விட்டிருப்பதையும் காணக்கூடியதாக இருந்தது. மேலும் அவற்றில் சில கனிகளைக் கொண்டிருப்பதையும் காணக்கூடியதாக இருந்தது. இவை தவிர்ந்த மற்றைய அனைத்தும் முற்றிலும் பச்சை நிறத்தில் பசுமையாக இருந்தன. இந்த அறிகுறிகளைக் கண்டு மேய்ப்பன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். ஏனெனில் அந்தத் தடிகள் கொடுக்கப்பட்ட நிலையிலேயே பசுமையான நிலையில் காணப்பட்டன. அவற்றைக் கொண்டிருந்த யாவரும் தங்கள் சொந்த அணிகளுக்குத் திரும்பிச் சென்றனர்.

72 மேய்ப்பன் அவர்கள் அனைவரையும் சோதித்தபின், என்னிடம், “இந்த மரம் மிகவும் கடினமான மரம் என்று நான் சொன்னேன் அல்லவா? எத்தனை பேர் மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பார்த்தாயா? என்று கேட்டார். “பார்த்தேன் ஐயா,” என்றேன். அவர் மீண்டும், “எப்படி இருந்தபோதிலும், கர்த்தருடைய அபரிமிதமான இரக்கம் மிகவும் மதத்தானது. மற்றும் மகிமை வாய்ந்தது என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும். மனந்திரும்பத் தகுதியானவர்களுக்கு அவர் தனது வல்லமையைக் கொடுத்திருக்கிறார்,” என்றார். அப்போது நான், “அப்படியானால் அவர்கள் அனைவரும் ஏன் வருந்துவதில்லை, ஐயா?” என்று கேட்டேன். அதற்கு அவர், “தங்கள் மனங்களை சுத்தமாக வைத்திருப்போருக்கும், முழு மனதோடு தம்மை வழிபடுவோருக்கும் கர்த்தர் மனந்திரும்புதல் என்ற கொடையைக் கொடுத்தார். அதேநேரம் வஞ்சகத்திலும் அக்கிரமத்திலும் வாழும் எவரையும் அவர் காணும் பட்சத்தில், அவர்களுக்கு மனந்திரும்புதல் என்ற பாக்கியத்தை அவர் அருளவில்லை. ஏனென்றால், அவர்கள் மீண்டும் அவருடைய பெயரைக் களங்கப்படுத்தக் கூடுமென்பதால், அவ்வாறான ஒரு மனந்திரும்புதல் அவர்களுக்கு கிடைக்கப்பெறுவதில்லை,” என்று விளக்கமளித்தார். நான் அவரிடம் இவ்வாறு சொன்னேன். “ஐயா, தடிகளைத் திருப்பிக் கொடுத்தவர்கள், அதாவது அவர்கள் ஒவ்வொருவரும் எப்படிப் பட்டவர்கள், எங்கு வாழ்கிறார்கள் என்பதை எனக்கு விளக்க முடியுமா. ஏனென்றால், உங்களிடமிருந்து ஒரு உறுதியைப் பெற்று, அதை மதியாது, அவற்றைக் கடைபிடிக்காதவர்கள் இதை நன்றாகக் கேட்பார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு, அவற்றில் இருந்து விடுபட்டு, மனந்திரும்பி, உங்களிடமிருந்து ஒரு உறுதியைப் பெற்று, அவர்கள் கர்த்தரை மகிமைப்படுத்தும்படியும், அவர்கள் மீது இரக்கம் காட்டும்படியும், அவர்களுடைய ஆன்மாக்களை புதுப்பித்துக்கொள்ளும்படியும் அவர்களை அனுப்பினீர்கள், அல்லவா?” என்றேன். அதற்கு அவர், “கேள், தங்கள் வைத்திருந்த வாடிப்போன, புழுக்களால் அரித்துண்ணப்பட்ட தடிகள் கூறும் உதாரணம் என்னவென்றால், அப்படியானவர்கள் விசுவாசத் துரோகிகள் மற்றும் சபைக்கு துரோகம் இழைப்பவர்கள். தங்கள் பாவங்களால் இறைவனை அவமதித்துள்ளனர். மேலும், அவர்கள் தேவ அழைப்பை அருளிய இறைவனின் பெயரைக் குறித்து வெட்கப்படுகிறார்கள். எனவே, இந்த மக்கள் கடவுளால் முற்றிலும் நிர்மூலம் செய்யப்படுவார்கள். அவர்களில் ஒருவர் கூட மனந்திரும்பவில்லை என்பதை நீங்கள் கண்டீர்கள் அல்லவா? அவர்கள் உங்களிடம் நான் பேசிய வார்த்தைகளைக் கேட்டார்கள், நான் உங்களுக்குக் கட்டளை இட்டதையும் கேட்டார்கள், ஆனால் அவர்கள் மனந்திரும்பவில்லை. இப்படிப்பட்டவர்களிடமிருந்து வாழ்வு விடைபெற்றுப் போய் விட்டது. ஆனால் காய்ந்த, அதேவேளை புழுக்கள் அரித்திராத தடிகளைத் திருப்பிக் கொடுத்தவர்கள், கடைசியாகக் கூறப்பட்டவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். ஏனென்றால், அவர்கள் வஞ்சகர்கள், விசித்திரமான கோட்பாடுகளைக் கொண்டு வந்தவர்கள். அவ்வாறான செய்கைகள் மூலம் கடவுளின் ஊழியர்களை தவறாக வழிநடத்துகிறார்கள். குறிப்பாக பாவம் செய்தவர்களை, அவர்கள் மனந்திரும்ப விடவில்லை, மாறாக அவர்களின் முட்டாள்தனமான கோட்பாடுகளால் மனந்திரும்ப வேண்டிய அவசியமில்லை என்று அவர்களை சமாதானப் படுத்துகிறார்கள். அப்படியும், இவர்களுக்கு மனந்திரும்புதலில் நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் என் கட்டளைகளை அவர்களுக்குச் சொன்ன நாள் முதற்கொண்டு, அவர்களில் அநேகர் உண்மையிலேயே மனந்திரும்பியதைக் கண்டீர்கள். மேலும் மனம் வருந்தக்கூடிய பலரும் அவர்களிடையே இருந்தபோதிலும், பாவங்களையிட்டு மனம் வருந்தாதவர்கள் தங்கள் வாழ்வை இழந்தனர். மனந்திரும்பியோர் மறுபுறம் நல்லவர்களாகிவிட்டனர். மேலும், அவர்களின் இல்லங்கள் மதிலுக்குள் இருந்ததை அவர்கள் அறிந்துகொண்டனர். அவர்களோடு இருந்த ஏனையோர் கோபுரத்துக்குள் சென்றனர். ஆகையால், பாவத்திலிருந்து மனந்திரும்புதல் ஜீவனைக் கொண்டுவருகிறது என்பதை நீங்கள் காண்கிறீர்கள். ஆனால் மனந்திரும்பத் தவறினால் அழிவு வரும் என்பதையும் நீங்கள் காண்கிறீர்கள்,” என்று அவர் மிகவும் அழகாகவும், விபரமாகவும் கூறினார்.

73 “பாதி காய்ந்து வெடிப்புகளுடன் கூடிய தடிகளுடன் திரும்பியவர்களைப் பற்றியும் கேள். பாதி காய்ந்த தடிகளை உடையவர்கள் இரட்டை எண்ணம் கொண்டவர்கள். எனவே அவர்கள் வாழ்வை இழந்தவர்கள், ஆனால் இறந்தவர்கள் அல்ல. ஆனால் பாதி காய்ந்து பாதி உடைந்து போயுள்ள தடிகளை உடையவர்கள் இருமனம் கொண்டவர்கள், தூஷணர்கள். அவர்கள் ஒருபோதும் தங்களுக்குள் சமாதானமாக இருக்க விரும்புவதில்லை. அதன் காரணமாக அவர்கள் எப்பொழுதும் பிரிவினைக்கு துணைபோகிறவர்களாக இருக்கிறார்கள். அப்படி இருந்தும் இப்படிப்பட்டவர்கள் மனமாற்றத்தை அடைய முயற்சி செய்யலாம். அவர்களில் சிலர் ஏற்கனவே மனந்திரும்பி இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். அத்தோடு அவர்கள் எப்படியும் மனந்திரும்பி விடுவார்கள் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது,” என்றார். “எனவே மனந்திரும்புபவர்கள் அவர்களுக்காக கோபுரத்திற்குள் தங்கள் வீடுகளைக் கொண்டிருப்பார்கள். எனினும், அவர்கள் மத்தியில் மிகவும் மெதுவாக மனந்திரும்புபவர்கள் மதிலுக்கு அப்பால் வாழ்வார்கள். இருப்பினும், அவர்களில் மனந்திரும்பாதவர்கள், மனந்திரும்பக்கூடாது என்ற மமதையுடன் இருப்பவர்கள் நிச்சயமாக வாழ்வை இழந்து அழிந்துபோய் விடுவார்கள். அதேவேளை பச்சையாக, ஆனால் உடைந்த நிலையில் தங்கள் தடிகளை ஒப்படைத்தவர்கள் எப்போதும் நேர்மையான குணம் கொண்டவர்களாகவும், நல்லவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மற்றையோர் மீது ஒருவித பொறாமை உணர்வைக் கொண்டிருந்தனர். தான் முதன்மை ஸ்தானத்தை அடைய வேண்டும் என்றோ அல்லது, வெகுமதிகள், பதவி உயர்வு தனக்கு கிடைக்காமல் மற்றையோருக்குக் கிடைக்கிறதே என்பது போன்ற காரணங்களால் பொறாமைக்குணம் எழுவதை காணலாம். ஆனால், முன்னுரிமை பெறும் பொருட்டு ஒருவ மீது ஒருவர் பொறாமை கொண்டால், அவர்கள் அனைவரும் அறிவிலிகளாகவே இருக்கிறார்கள். இவர்களும் முற்றிலும் நல்லவர்களாக மாறவேண்டுமானால், தங்கள் பொறாமைக் குணங்களை சரிசெய்து கொண்டு, என் கட்டளைகளைக் கேட்டுத் தங்களைச் சுத்திகரித்துக் கொண்டு, முழுவதுமாக மனந்திரும்ப வேண்டும். அப்போது அவர்களுக்கான வாசஸ்தலம் கோபுரத்தில் இருக்கும். ஆனால் அவர்களில் யாராவது மீண்டும் பிளவுகளை ஏற்படுத்தினால், அவர்கள் கோபுரத்திலிருந்து வெளியே தூக்கி எறியப்படுவார்கள். அதனால் அவர்களது உயிரையும் இழக்க வேண்டியிருக்கும். கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற யாவருக்கும் ஜீவன் உண்டு. ஆனால் கட்டளைகள் எந்த வகையான முன்னுரிமையையோ அல்லது எந்த வகையான வேறுபாட்டையோ பற்றிக் குறிப்பிடவில்லை. ஆனால் இது ஒரு மனிதன் தான் கடைபிடிக்கும் பொறுமை, சகிப்புத் தன்மை மற்றும் அடிபணிதல் போன்றவற்றிலேயே தங்கியுள்ளது. எனவே, தேவனுக்கு உகந்த விதத்தில் வாழும் வாழ்வு அத்தகையவர்களிடம் உள்ளது. மீண்டும் சொல்வதானால், பிரிவினைகளை உருவாக்கி, அக்கிரம மற்றும் அநியாய வாழ்க்கை வாழ்வோருக்கு மரணம் மூலம் வரும் அழிவு நிச்சயம் உண்டு,” என்று திறமையாக எடுத்துரைத்தார்.

74 “பாதி பச்சையும், பாதி வாடியும் காணப்பட்ட தடிகளைத் திரும்ப ஒப்படைத்தவர்கள், வியாபார நோக்கமுள்ளவர்கள். கல்விமான்கள் மற்றும் மகான்களுடன் பழகாதவர்கள். இதனால்தான் அவர்களில் பாதி பேர் உயிருடன் இருக்கிறார்கள், பாதி பேர் இறந்துவிட்டனர். எனினும், அநேகர் என் கட்டளைகளைக் கேட்டு மனந்திரும்பினார்கள். இவ்வாறு மனந்திரும்பியவர்கள் கோபுரத்திற்குள் அடைக்கலம் பெற்றனர். ஆனால் அருகில் இருந்தவர்கள் முற்றிலும் விலகி வீழ்ச்சியை சந்தித்தனர். இதன் காரணமாக, மனந்திரும்பாத இவர்கள் தங்கள் சொந்தத் தொழிலில் மும்முரமாக ஈடுபட்டு, இறைவனை நிந்தித்து அவரை நிராகரித்ததால் அவ்வாறு வீழ்ச்சியை எதிர்கொண்டனர். எனவே, அவர்கள் செய்த தீய செயல்களால் தங்கள் வாழ்க்கையை இழந்தனர். அதேநேரம் அவர்களில் பலர் இருமனம் கொண்டவர்கள். இவர்களும் மனந்திரும்ப வாய்ப்பு உள்ளது. அவர்கள் விரைவில் மனந்திரும்புதலுக்கு உள்ளானால், கோபுரத்திற்குள் தங்கள் வாசஸ்தலத்தை அனுபவிப்பார்கள். அதேநேரம் அவர்கள் மிகவும் அசட்டையாக மனந்திரும்புதலுக்கு உள்ளானால், அவர்கள் மதிலுக்கு அப்பால் மட்டுமே வாழும் நிலையை அடைவர். அப்படியும் அவர்கள் மனந்திரும்பவில்லை என்றால், அவர்களும் தங்கள் வாழ்வை இழந்தவர்கள் என்றே கணிக்கப்படுவர். அதுபோல, மூன்றில் இரண்டு பங்கு தடிகளை பச்சையாகவும், மூன்றில் ஒரு பங்கை உலர்ந்ததாகவும் திருப்பித் தந்தவர்கள் கர்த்தரை திரும்பத் திரும்ப நிராகரித்தவர்கள். பலர் மனந்திரும்பி, கோபுரத்தின் உள்ளே அடைக்கலம் பெறப் போனார்கள். ஆனால் அவர்கள் கடவுளிடமிருந்து முற்றிலும் விலகி, கடைசியில் வாழ்க்கையையே இழந்து தவிக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டனர். மேலும், அவர்களில் சிலர் இரட்டை மனதுடன் பிரிவினைகளை உருவாக்கினர். எனவே, இந்த மக்களை பொறுத்த வரையில், அவர்கள் விரைவாக மனந்திரும்பி, சுயநலம் மிக்க செயல்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளாமல் இருப்பார்களானால், மனந்திரும்புதல் அவர்களுக்கு கடினமானதாக இராது. ஆனால் அவர்கள் தங்கள் செயல்களில் விடாப்பிடியாக இருப்பார்களேயானால், அவர்களே அவர்களது அழிவுக்கு வழிகோலுகிறார்கள்.

75 “தங்களிடமிருந்த தடிகளில் மூன்றில் இரண்டு பங்கு உலர்ந்ததாகவும், மூன்றில் ஒரு பங்கு பச்சையாகவும் திருப்பிக் கொடுத்தவர்கள் உண்மையுள்ளவர்கள். ஆனால் அவர்கள் செல்வந்தர்களாக மாறிய பின்னர் சமூகத்தின் மத்தியில் நற்பெயரை சம்பாதித்துக்கொண்டனர். அவர்கள் மிகுந்த பெருமையுடன் தங்களைக் காட்டிக்கொண்டு, பிடிவாதம் மிகுதியால் உண்மையைக் கைவிட்டனர். எனவே அவர்கள் மேன்மக்களுடன் சகவாசம் கொள்ளவில்லை. தங்களது திருப்தியை பற்றி மட்டுமே கரிசனையுடன் இருந்தனர். சமூக அந்தஸ்தை மட்டுமே நோக்காகக் கொண்டு வாழ்ந்தனர். அவர்களுக்கு வாழ்க்கை அவ்வாறான வழியில் சென்றாலும், தேவனை விட்டு விலகாமல், விசுவாசத்துடன் வாழ்வைத் தொடர்ந்தார்கள். ஆயினும் அவர்கள் இறை விசுவாசத்தை பறைசாற்றக்கூடிய செயல்களைச் செய்யவில்லை. அப்படியும் அவர்களில் பலர் மனந்திரும்பினார்கள். அதனால் அவர்களது வாசஸ்தலம் கோபுரத்திற்குள் இருந்தது. ஆனால் மற்றவர்கள், முழுக்க முழுக்க சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு அடிபணிந்து வாழ்ந்து, சமுதாயத்தில் உள்ளோரது பயனற்ற கருத்துக்களால் மதியிழந்து, கடவுளை விட்டு விலகி வீழ்ந்தனர். ஏனென்றால் அவர்கள் சமூகத்தின் தேவைகளுக்கேற்ப வாழ்ந்த காரணத்தால், சாமானியர்களுடன் ஒருவராகவே கருதப்பட்டனர். அங்கே அவர்களில் எஞ்சியவர்கள் சிலர் இருமனம் கொண்டவர்களாக இருந்தனர். அவர்கள் தங்கள் செய்த செயல்களால் இரட்சிப்பின் மீது நம்பிக்கை அற்றவர்களாகக் காணப்பட்டனர். மேலும் சிலர், இரட்டை எண்ணம் கொண்டவர்களாகவும், தங்களுக்குள்ளே பிரிவினைகளை ஏற்படுத்திக் கொண்டவர்களாவும் காணப்பட்டனர். இந்த மக்கள், தங்கள் செயல்களால் கூட இரட்டை எண்ணம் கொண்டவர்களாகவே காணப்பட்டனர். ஆயினும், அவர்களுக்கு இன்னும் மனந்திரும்பக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. ஆனால் அவர்களின் வாசஸ்தலம் கோபுரத்திற்குள் இருக்கவேண்டும் என்று எண்ணினால், அவர்களது மனந்திரும்புதல் விரைவாக இருக்க வேண்டும். ஆனால் மனந்திரும்பாதவர்களுக்கும், தங்கள் சொந்த இச்சைகளில் தொடர்ந்தும் மூழ்கியிருப்பவர்களுக்கும் அழிவு நெருங்கிவிட்டது என்று கூறலாம்.

76 “தங்கள் தடிகளை பச்சை நிறமாகவும், உடைந்த மற்றும் உடைந்த நிலையில் திருப்பித் தந்தவர்கள், கடவுளின் பார்வையில் எப்போதும் நல்லவர்களாகவும், உண்மையுள்ளவர்களாகவும், மகிமையுள்ள மனிதர்களாகவும் இருப்பவர்களாகக் கணிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் கொஞ்சமாக பாவம் செய்தவர்களாகவும் இருந்தனர். அற்ப ஆசைகளாலும், சின்னச் சின்ன விஷயங்கள் காரணமாகவும் ஒருவர் மீது ஒருவர் மனஸ்தாபம் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களில் பலர் நான் கூறிய வார்த்தைகளைக் கேட்டதும், ஏககாலத்தில் மனந்திரும்பினார்கள். அவர்களது இல்லம் கோபுரத்தில் அமைந்து இருந்தது. ஆனால் சிலர் இரட்டை நாமம் கொண்டவர்களாக இருந்தனர். அதேபோல இரட்டை எண்ணம் கொண்ட மற்றவர்களை எதிர்கொள்ளும் போது இருபாலார் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தினர். இவர்கள் போன்றவர்களும் மனந்திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்குக் காரணம் அவர்கள் எப்பொழுதும் நல்லவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அவர்களில் ஓரிருவர் அரிதாவே வாழ்வை இழந்தவர்களாக உள்ளனர். தங்களுக்கு கொடுக்கப்பட்ட தடிகளை உணர்ச்சி செய்து, அதில் ஒரு பகுதியை வெட்டி, நிறம் மாறாது மீண்டும் ஒப்படைத்தவர்கள் விசுவாசம் கொண்டவர்கள். அவர்கள் அநீதி வழியில் வாழ்ந்தார்கள். ஆனாலும் கடவுளை விட்டு விலகவில்லை. அவர்கள் மகிழ்ச்சியுடன் அவருடைய பெயரை மகிமைப் படுத்திக்கொண்டு இருந்தனர். கடவுளுடைய ஊழியர்களும் தங்கள் இல்லங்களுக்குள் மகிழ்ச்சியுடன் வரவேற்கப் பட்டனர். ஆதலால், இந்த மனந்திரும்புதல் பற்றிக் கேள்விப்பட்ட அவர்கள் எந்தத் தயக்கமுமின்றி மனம்வருந்துதலுக்கு உட்பட்டனர். மேலும் அவர்கள் எல்லா நற்பண்புகளையும் நீதியையும் அனுசரித்து வாழ்ந்தார்கள். அவர்களில் சிலர் துன்பப்பட்டார்கள். தாங்கள் செயல்களை அறிந்து, அவர்கள் தங்கள் துன்பங்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்கள். எனவே, அவர்களின் இருப்பிடம் நிச்சயமாக கோபுரத்துக்குள்ளே தான் இருக்க வேண்டும்,” என்று விளக்கினார்.

77 இவ்வாறு அவர் எல்லா விடயங்களையும் பற்றி விளக்கிய பிறகு, என்னிடம் இவ்வாறு கூறினார்: “போ, மனிதர்கள் மனந்திரும்பி கடவுளுக்காக வாழவேண்டும் என்று மானிடர் மத்தியில் சென்று அவர்களுக்கு உரத்த குரலில் சொல்லுங்கள். ஏனென்றால், கர்த்தர் தம்முடைய இரக்கத்தினால் அனைவரையும் மனந்திரும்ப உழைக்கும்படி என்னை அனுப்பினார். இருப்பினும், சிலர் தங்கள் செய்த சில கூடாத செயல்களால் இரட்சிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்களாகக் காணப்படுகின்றனர். ஆனால், தேவனாகிய இறைவன் மிகுந்த பொறுமையுள்ளவராக இருப்பதால், தம்முடைய குமாரன் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இரட்சிக்கப்பட வேண்டுமென்று கர்த்தர் சித்தம் கொண்டார். அதற்கு நான் அவரிடம், “ஐயா, அவற்றைக் கேட்பவர்கள் அனைவரும் மனந்திரும்புவார்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால், அவர்கள் அனைவரும் தாங்கள் செய்ததை உணர்ந்து கடவுளுக்குப் பயந்து வாழ்வார்களானால், அவர்கள் மனந்திரும்பி வாழ்வர், ” என்று சொன்னேன். அவர் பதிலாக, “அதாவது, இந்த ஆணைகளைப் பற்றி அவர்கள் இரட்டை எண்ணம் கொள்ளாமல், முழு இதயத்தோடு மனந்திரும்பி, இங்கே விவரிக்கப்பட்டுள்ள எல்லா தீய செயல்களிலிருந்தும் விடுபட்டு, தங்களைத் தூய்மையாக வைத்து, தங்கள் பாவக்கணக்கில் புதிதாக எதையும் சேர்க்காதவர்களும், அவர்கள் முன்னாளில் செய்த பாவங்களில் இருந்து இறைவனால் காப்பாற்றப் படுவார்கள். அதனால் அவர்கள் கடவுளின் கிருபையைப் பெற்று வாழ்வார்கள். ஆனால், தங்கள் பாவங்களை மேலும் மேலும் கூட்டிக் கொண்டே செல்பவர்கள் மற்றும் இவ்வுலக இச்சைகளுக்கு அடிமையாகி வாழ்பவர்கள், தங்களுக்குத் தாங்களே மரணத்தைத் தருவித்துக் கொள்கிறார்கள். அதனால் தான் நான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்கிறேன், என் கட்டளைகளின்படி உங்கள் வாழ்வை அமைத்துக்கொள்ளுங்கள். அப்போது நீங்கள் கடவுளுக்கு உகந்தவர்களாக வாழ்வீர்கள். உண்மையில், இந்தக் கட்டளைகளின் பிரகாரம் வாழ்ந்து, நேர்மையாக செயல்படும் எவரும் கடவுளுக்குள் வாழ்வார்கள்,” என்று விளக்கினார். இவைகளையெல்லாம் காட்டி, விளக்கமாக எடுத்து சொன்னபின் அவர் என்னிடம் இறுதியாக அவர், “இதன் தொடர்ச்சியை இன்னும் சில நாட்களில் உன்னோடு பகிர்ந்து கொள்கிறேன்,” என்றார்.

உவமை 9

பன்னிரண்டு மலைகள்

78 மேய்ப்பனின் கட்டளைகளையும் உவமைகளையும் நான் எழுதி முடித்த பிறகு, மனந்திரும்புதலின் தூதன் என்னிடம் வந்து, “உன்னுடன் திருச்சபை குறித்து பேசிய பரிசுத்த ஆவியானவர் உனக்குக் காட்டியதை நான் விளக்க விரும்புகிறேன். அது வேறு யாரைப்பற்றியும் அல்ல, அவர் தான் கடவுளின் ஏக சுதனாகிய கர்த்தர். நீங்கள் உடலளவில் மிகவும் பலவீனமாக இருந்ததால், தேவதூதன் மூலம் உங்களுக்கு விளக்கப்படவில்லை. இருப்பினும், நீங்கள் ஆவியின் கிருபையால் பலமடைந்து, உங்கள் சக்தி அதிகரித்தபோது, ​​தேவதூதனை நீங்கள் பார்க்க முடிந்தது, இதனால் திருச்சபையானது உங்களுக்குக் கட்டப்பட்டிருந்த கோபுரத்தை நிர்மாணித்தது. உன்னதமான மற்றும் புனிதமான வழியில், ஒரு கன்னி உங்களுக்குக் காட்டியதைப் போல எல்லாவற்றையும் பார்த்தீர்கள்; அதேநேரம் இப்போது நீங்கள் அவற்றை அதே சக்தியினூடாகப் பார்க்கிறீர்கள். இருப்பினும், நீங்கள் என்னிடமிருந்து எல்லாவற்றையும் இன்னும் துல்லியமாக கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால், முன்பு போல் எவ்வித அச்சமும் இன்றி எல்லாவற்றையும் நீங்கள் துணிவுடன் அணுக வேண்டும் என்பதற்காக மகிமையுள்ள தேவதையால் நான் அனுப்பப் பட்டேன், என்று கூறி, அவர் என்னை ஒரு கிராம சூழ்நிலையைப் பின்னணியாகக் கொண்ட ஒரு குன்றின் முகட்டுக்கு அழைத்துச் சென்றார். அவர் என்னை அந்தக் குன்றின் உச்சியில் நிறுத்தி, கீழே தெரிந்த ஒரு பெரிய சமவெளி, மற்றும் அவற்றைச் சுற்றி பல்வேறு வடிவங்களில் அமைந்திருந்த குன்றுகளை எனக்குக் காட்டினார். ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாய் இருந்தது. முதலாவது குன்று காரீயத்தைப் போல கருமையாகவும், இரண்டாவது குன்று புல் இல்லாமல் வெறுமையாகவும், மூன்றாவது முட்செடிகள் மற்றும் முட்புதர்களுடனும், நான்காவது பாதி வாடி இருந்தபோதிலும், மேல் பகுதிகள் பச்சையாக இருந்தன. ஆனாலும் வேர்களைச் சுற்றியுள்ள பகுதிகள் காய்ந்து போயிருந்தன. ஐந்தாவது குன்றானது காய்ந்தும் , பச்சை புற்றரைகள் வெடிப்புற்றும், ஆறாவது குன்று மிகவும் சிறிய விரிசல்களால் நிறைந்தும் இருந்தபோதிலும், சில இடங்களில் பெரிய விரிசல்கள் காணப்பட்டன. ஆகவே அவை அவ்வளவு வலுவாக இல்லை, ஏழாவது குன்று பசுமையான மேய்ச்சல் நிலங்கள் கொண்டதாக இருந்தது. அதன் சுகந்தம் மலை முழுவதும் பரவியிருந்தது. எல்லா வகையான மிருகங்கள் மற்றும் பறவைகள் அந்த மலையில் மேய்ந்து கொண்டிருந்தன. அந்த மலையின் புல் மிகவும் செழிப்பாக இருந்த காரணத்தால், கால்நடைகளும் பறவைகளும் கூட அவற்றை உட்கொண்டு வந்தன. எட்டாவது குன்று நீரூற்றுகளால் நிறைந்திருந்தது, கர்த்தருடைய உயிரினங்கள் அனைத்தும் அந்த மலையில் வாசம் செய்தன. நீரூற்றுகள் தந்த சுத்தமான நீரை அந்த விலங்குகளும் அருந்தின. ஆனால் ஒன்பதாவது குன்றில் தண்ணீர் இல்லை, முற்றிலும் பாலைவனமாக இருந்தது, கொடிய பாம்புகள் மக்களைத் தீண்டி அழித்தன. மற்றும் பத்தாவது குன்றுக்கு மிகப் பெரிய மரங்கள், நிழலைத் தந்தன. அந்த மரங்களின் நிழலில் செம்மறி ஆடுகள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. அடுத்ததாக, பதினொன்றாவது குன்று, இது மிகவும் அடர்ந்த காடுகளையும், மரங்கள் காய்த்து, பலவிதமான பழங்களால் அழகாகவும் செழிப்புடனும் காணப்பட்டன. அவற்றைக் கண்டவர்கள் அந்த மரங்களில் காய்த்திருந்த பழங்களை உண்ண எத்தனித்தனர். பன்னிரண்டாவது குன்று முற்றிலும் வெண்மையாக இருந்தது, அதன் வடிவம் மனதுக்கு இதமாக இருந்தது, அதனால் அந்தக் குன்று மிகவும் அழகாக இருந்தது.

79 மேலும் சமவெளியின் நடுவில், உயர்ந்து கம்பீரமாய் நிற்கும் ஒரு பெரிய வெள்ளைப் பாறையை எனக்குக் காட்டினார். மேலும் அந்த பாறை அங்கே காணப்பட்ட குன்றுகளை விட உயரமானதாகவும், செவ்வக வடிவமாகவும், உலகம் முழுவதையும் ஆக்கிரமிக்கும் வலிமையை கொண்டதாகவும், மிகப் பழமை வாய்ந்ததாகவும் இருந்தது. அதன் உள் நுழைவாயில் சமீபத்தில் வெட்டப்பட்டு இருந்தது போல் எனக்குத் தோன்றியது. அந்த வாயில் சூரியக் கதிர்களின் பிரகாசத்தைப் பிரதிபலித்ததன் காரணமாக மிகவும் அழகாகப் பிரகாசித்தது. வாயிலைச் சுற்றிலும் பன்னிரண்டு கன்னிகைகள் நின்று கொண்டிருந்தார்கள். மூலைகளில் நின்ற நால்வரும் மற்றவர்களை விட எனக்கு தனிச்சிறப்பு மிக்கவர்களாகத் தோன்றினர் – இருப்பினும் அவர்கள் அனைவரும் தனித்துவம் வாய்ந்தவர்களாக – அவர்கள் வாயிலின் நான்கு பகுதிகளிலும் நின்று கொண்டிருந்தனர்; ஒவ்வொரு பகுதியின் இடையிலும் இரண்டு கன்னிகள் வீதம் காணப்பட்டனர். மேலும் அவர்கள் கைத்தறி ஆடைகளை அணிந்து, அழகான கச்சைகளை உடுத்து, தங்கள் வலது தோள்பட்டைகள் வெளியே தெரியும் வண்ணம், ஏதோ சுமைகளை சுமந்திருப்பது போல் காணப்பட்டனர். இவ்வாறு அவர்கள் தயாராக நின்றனர்; ஏனென்றால், அவர்கள் மிகுந்த உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் இருந்தனர். நான் இந்தக் காட்சியைப் பார்த்தபின் வியப்பில் ஆழ்ந்தேன், ஏனென்றால் நான் பெரிய மற்றும் அற்புதமான காட்சிகளைக் கண்டபடியால். கன்னிகளையிட்டு நான் மீண்டும் குழப்பமடைந்தேன், ஏனென்றால், அவர்கள் மிகவும் மென்மையானவர்களாக இருந்தாலும், அவர்கள் முழு வானத்தையும் சுமந்து செல்லத் தயாரானது போல் தைரியமாக நின்று கொண்டிருந்தார்கள். மேய்ப்பன் என்னிடம், “நீ ஏன் உனக்குள் தர்க்கம் செய்து, உன் மனதைக் குழப்பிக் கொண்டு, உன்னையே துன்பத்துக்கு உட்படுத்துகிறாய்? உன்னால் புரிந்து கொள்ள முடியாத காரியங்களை நீ ஞானமுள்ளவன் போல் புரிந்து கொள்ள முயலாதே. ஆகவே நீ கர்த்தரிடம் கேள். அவரிடமிருந்து புரிதலைப் பெறலாம், அவற்றை அறிந்து கொள்ளலாம், உனக்குப் பின்னால் இருப்பதை உன்னால் பார்க்க முடியாது, ஆனால் உனக்கு முன்பு இருப்பதைப் பார்க்க முடியும். அப்படியானால், உன்னால் பார்க்க முடியாது இருப்பவற்றை ஒருபுறம் விட்டுவிட்டு, உன்னால் முடிந்ததை மாத்திரம் செய். அவற்றைப் பார்க்க வேண்டும் என்று அனாவசியமாக உன்னை வருத்திக் கொள்ள வேண்டாம். நீங்கள் எதைப் பார்க்கிறீர்களோ, அதை உங்களுக்கு அதிபதியாக்கிக் கொள்ளுங்கள். ஏனைய விடயங்களில் உங்கள் முயற்சியை வீணாக்காதீர்கள்; நான் உனக்குக் காண்பிக்கும் அனைத்தையும் பற்றி நான் விளக்குகிறேன், எனவே எஞ்சியிருப்பவற்றை மட்டும் நீ பார்க்க வேண்டும்,” என்று கூறினார்.

80 நான் ஆறு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் மிகவும் உயரமாகவும் கம்பீரமாகவும் இருந்தார்கள், அவர்களின் தோற்றம் ஒருவருக்கொருவர் ஒத்திருந்தது. ஏராளமான மக்களை அழைத்தனர். மேலும் அங்கு வந்தவர்கள் உயரமான, அழகான மற்றும் சக்திவாய்ந்த மனிதர்கள். அப்போது முன் வந்த ஆறு பேரும் பாறையின் மேல் ஒரு கோபுரத்தைக் கட்டும்படி அந்த ஆட்களுக்குக் கட்டளையிட்டனர். அப்போது கோபுரம் கட்ட வந்தவர்களிடம் இருந்து பெரும் சத்தம் கேட்டது. அதற்குக் காரணம், அவர்கள் வாயிலைச் சுற்றி அங்கும் இங்கும் ஓடினார்கள். மேலும், வாசலில் நின்றிருந்த கன்னிப்பெண்கள் கோபுரத்தைக் கட்ட விரைந்து வருமாறு அவர்களிடம் கூறினர். அவ்வாறே, கன்னிப் பெண்களும் அந்த மனிதர்களிடமிருந்து எதையாவது பெறப் போவது போல் அவர்களை நோக்கி கைகளை நீட்டினர். ஆறு பேரும் கற்களை ஏதோ ஆழமான இடத்திலிருந்து கொண்டு வரும்படி கட்டளையிட்டனர். பின்னர் அவை கோபுரத்தின் முறையான நிர்மாண கட்டமைப்புக்குள் வைக்கப்பட்டன. பளபளப்பான மற்றும் வெட்டப்படாத பத்து சதுர கற்கள் கொண்டுவரப்பட்டன. அப்பொழுது அந்த ஆறு பேரும், கோபுரத்தின் நிர்மாணப்பணிகளுக்குக் கொண்டு செல்ல வேண்டிய கற்களை எல்லாம் ஒன்று திரட்டி, வாசல் வழியாக மற்றவர்கள் மூலமாக அனுப்பி, கோபுர நிர்மாணப் பணியாளர்களின் கைகளில் ஒப்படைக்கும்படி கன்னிப்பெண்களுக்குக் கட்டளையிட்டனர். அப்பொழுது அந்தக் கன்னிகைகள் மிகவும் ஆழமான ஒரு இடத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பத்துக் கற்களை எடுத்து ஒன்றன் மேல் ஒன்றாக வைத்தபின்பு, ஒவ்வொருவரும் அந்தக் கற்களை ஒவ்வொன்றாகத் தூக்கிச் சென்றனர்.

81 வாயிலைச் சுற்றி நின்ற அதே வரிசையில், அவர்களில் வலிமையான தோற்றமுடையவராகத் தோன்றிய ஒருவர், கற்களை எடுத்து கோபுர விளிம்பிற்கு கொண்டு சென்றார். பின்னர் மற்றவர்கள் கற்களைத் தூக்கிக்கொண்டு அவர் சென்ற வழியாகச் சென்றனர். கட்டளையிட்டபடியே அவர்கள் வாயில் வழியாக கல்லை எடுத்துச் சென்றனர். பின்னர் அவை கோபுரக் கட்டுமானப் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர்கள் அவற்றைப் பெற்று கோபுரத்தைக் கட்டினார்கள். பெரிய பாறையின் மீதும் அதன் வாயிலின் மீதும் கோபுரம் கட்டப்பட்டது. எனவே, பத்து கற்களும் ஒன்றுக்கொன்று நன்றாகப் பொருந்தின. மேலும் அவர்கள் பாறை முழுவதையும் நிரப்பினர். அந்தக் கற்களில் இருந்து கோபுரம் கட்டுவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. பாறையும் வாயிலும் முழு கோபுரத்தையும் தாங்கின. இந்தப் பத்துக் கற்களுக்குப் பிறகு மேலும் இருபத்தைந்து கற்கள் ஆழத்திலிருந்து மேலே கொண்டுவரப்பட்டன. கற்கள் கோபுரத்தின் நிர்மாணக் கட்டமைப்புக்குள் சரியாக பொருந்தின. ஏற்கனவே கற்களை எடுத்துச் சென்றது போல் கன்னிப்பெண்கள் இம்முறையும் அவற்றைக் கொண்டு சென்றனர். அவர்களுக்குப் பிறகு மேலும் முப்பத்தைந்து கற்கள் தேவையாய் இருந்தன. அவைகளும் கோபுரத்திற்கு நன்றாகப் பொருந்தின. இதற்குப் பிறகு மேலும் நாற்பது கற்கள் கொண்டுவரப்பட்டன. அந்தக் கற்களும் கோபுரத்தின் நிர்மாணத்திற்குள் சேர்க்கப்பட்டன. இவ்வழியாக, கோபுரத்தின் அடித்தளத்தில் நான்கு மாடிகள் அமைக்கப்பட்டன. அதன் பிறகு கற்கள் ஆழமான இடத்திலிருந்து மேலே கொண்டுவருவது நிறுத்தப்பட்டன. கட்டடம் கட்டும் பணியாளர்களும் சிறிது காலம் நிர்மாணப்பணிகளை நிறுத்தினர். அதன் பிறகு, அந்த ஆறு பேரும் மற்ற மக்களை அழைத்து, கோபுரத்தை மீண்டும் கட்டுவதற்காக மலைகளிலிருந்து கற்களைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டனர். இவ்விதமாக எல்லா மலைகளிலிருந்தும் பல வண்ணக் கற்கள் கொண்டுவரப்பட்டன. பணியாளர்களால் அவை தோண்டி எடுக்கப்பட்டு உரிய முறையில் வெட்டப்பட்டு கன்னிப் பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கன்னிப் பெண்களும் அவர்களிடமிருந்து அவற்றை எடுத்துக்கொண்டு, கதவு வழியாகச் சென்று, கோபுரத்தைக் கட்டும் நிர்மாணப் பணியாளர்களிடம் ஒப்படைத்தனர். அந்த வகையில் வெவ்வேறு வடிவமான கற்கள் கட்டிடத்துடன் இணைக்கப்பட்டபோது, ​​அவை தத்தம் நிறங்களை இழந்து வெள்ளை நிறமாக மாறின. ஆனால் மற்றைய மனிதர்கள் கட்டிடத்திற்கு கொண்டு வந்த சில கற்கள் பிரகாசமாக மாறவில்லை. கட்டிடத்துடன் இணைக்கப்பட்ட பிறகும் அவை ஒரே நிறத்தில் தான் இருந்தன. ஏனென்றால், அவை கன்னிகைகளால் ஒப்படைக்கப்பட வில்லை என்பதால், அல்லது அவை வாசல் வழியாகக் கொண்டு வரப்படவில்லை என்பதால். எனவே, இந்த கற்கள் கோபுர கட்டுமானத்திற்கு பயன்படுத்த ஏற்றதாக இருக்கவில்லை. கோபுர நிர்மாணத்துக்குப் பொருந்தாத கற்கள் அங்கே இருப்பதைக் கண்ட ஆறு பேரும், அவற்றை அங்கிருந்து அகற்றி, உரிய இடத்திற்கு, அதாவது அவை கொண்டுவரப்பட்ட இடத்துக்குகே கொண்டு செல்லுமாறு கட்டளையிட்டனர். கற்களைக் கொண்டு வந்தவர்களிடம் அவர்கள் இவ்வாறு சொன்னார்கள்: “இந்த கட்டிடத்திற்குள் எந்த விதமான கல்லையும் கொண்டு வரக்கூடாது. நீங்கள் அவற்றை கோபுரத்திற்கு அருகில் மட்டுமே வைக்க வேண்டும். பின்னர் கன்னிப்பெண்கள் அவர்களை எடுத்து கதவு வழியாக கடந்து கட்டிட நிர்மாணத்துக்கு கொடுக்க முடியும். ஏனென்றால், அந்தக் கற்கள் கன்னிப் பெண்களின் கைகளால் எடுத்துவரப்பட்டு வாயில் வழியாக கொண்டு செல்லப்படா விட்டால், அவை தம் நிறத்தை மாற்ற முடியாது. எனவே, வீணாக கஷ்டப்பட வேண்டாம்,” என உத்தரவிட்டனர்.

82 இவ்வாறாகக் கோபுரத்தின் கட்டுமானம் அன்றே நிறைவு பெற்றது. ஆனால், கோபுரம் முழுமையாக கட்டப்படவில்லை. மேலும் கட்டப் பட்டிருக்க வேண்டும். இதனால் கட்டுமான பணி சிறிது காலம் தாமதமானது. மேலும், ஆறு பேரும் கட்டிடம் கட்டும் பணியாளர்கள் அனைவரையும் சிறிது நேரம் நிறுத்திவிட்டு ஓய்வெடுக்க உத்தரவிட்டனர். ஆனால் அவர்கள் கோபுரத்தை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டாம் என்று கன்னிப்பெண்களுக்கு உத்தரவிட்டனர். அவர்கள் கோபுரத்தின் காவலர்கள் என்று எனக்குத் தோன்றியது. அவர்கள் அனைவரும் பணியை முடித்துவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வேளை, நான் மேய்ப்பனிடம் பேசினேன். “ஐயா, இந்தக் கோபுரத்தின் கட்டுமானப் பணிகள் ஏன் இன்னும் நிறைவடைய வில்லை?” அதற்கு அவர், “கோபுரத்தின் உரிமையாளர் வந்து கட்டிடத்தை ஆய்வு செய்யும்வரை அதை முடிக்க முடியாது. பிறகு அதில் ஏதேனும் ஒரு கல் உடைந்து போயிருந்தால், அதற்குப் பதிலாக வேறு கற்களை இடுவார். ஏனென்றால், கோபுரம் அவருடைய விருப்பத்தின்படியே தான் கட்டப்பட்டிருக்கிறது,” என்றார். அதற்கு நான், “ஐயா, இந்தக் கோபுரத்தைக் கட்டுவதன் காரணம் என்ன என்பதை அறிய விரும்புகிறேன். மேலும் பாறை, வாயில், மலைகள் மற்றும் கன்னிகள் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ஆனால் அதே போல, கட்டிடத்தில் வைக்கப்பட்ட வெட்டப்படாத கற்களைப் பற்றியும் அறிய விரும்புகிறேன்,” என்றேன். ஏன் முதலில் கொண்டுவரப்பட்ட பத்து கற்கள் அஸ்திவாரத்தில் பொருத்தப்பட்டன, பின்னர் இருபத்தைந்து கற்கள், அதன்பின்பு முப்பத்தைந்து மற்றும் நாற்பது கற்கள் கட்டம் கட்டமாக கொண்டுவந்து கட்டிடத்தில் பொருத்தப் பட்டன. அதேநேரம் சில கற்கள் மீண்டும் அகற்றப்பட்டன. அவற்றிலிருந்து சிலவற்றை அவர்கள் எடுப்பதும், மீண்டும் அதே இடத்தில் வைப்பதும், அவர்கள் ஏன் அதை செய்தார்கள் என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இவற்றையெல்லாம் எனக்கு விளக்குங்கள் ஐயா, என் மனம் இவற்றையெல்லாம் அறிந்ததும் தான் அமைதி பெறும்,” என்றேன். அவர் கூறினார்: “உனது ஆவல் வெறும் ஆவலாக இருப்பதைவிட, அது ஆர்வமாக இருக்கும் காரணத்தால், நீ அனைத்தையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறாய். ஏனென்றால் இன்னும் சில நாட்களில் நாங்கள் இப்போது இருக்கும் இடத்துக்கு மீண்டும் வந்து விடுவோம். அப்போது இந்த கோபுரத்திற்கு நடக்கவிருக்கும் மற்றைய எல்லா விஷயங்களையும் நீ அறிந்து கொள்வாய்,” என்றார். அவர் கூறியதுபோலவே, சில நாட்களுக்குப் பிறகு நாங்கள் அமர்ந்திருந்த அதே இடத்திற்கு மீண்டும் திரும்பினோம். “கோபுரத்திற்குச் செல்வோம். ஏனென்றால், கோபுரத்தின் உரிமையாளர் அதை ஆய்வு செய்ய வருகிறார், என்று அவர் கூறியதும், நாம் இருவரும் கோபுரத்திற்குள் சென்றோம். கன்னிப்பெண்களைத் தவிர வேறு யாரும் அங்கே இருக்கவில்லை. கோபுரத்தின் உரிமையாளர் வந்தாரா என்று மேய்ப்பன் அவர்களிடம் கேட்டார். அவர் இப்போது கோபுரத்தை ஆய்வு செய்ய வர இருப்பதாக எம்மிடம் சொல்லப்பட்டது.

83 இதோ, சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு பெரிய மனிதர்கள் கொண்ட குழுவினர் வருவதைக் கண்டேன். அவர்களில் ஒருவர் கோபுரத்தின் தூணை விட உயரமானவராக இருந்தார். கட்டிடத்தைக் கண்காணித்த ஆறு பேரும் அவருடன் வலதுபுறமும் இடதுபுறமும் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். மேலும் அவருடன் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த அனைவரும் இருந்தனர். மேலும் அவரைச் சுற்றி இன்னும் பல புகழ்பெற்ற மனிதர்கள் இருந்தனர். மேலும், கோபுரத்தைக் காத்துக்கொண்டிருந்த கன்னிப்பெண்கள் அவரை நோக்கி ஓடிச்சென்று அவரை முத்தி செய்தனர். பின்னர் அவர்கள் அவரைப் பின்தொடர்ந்து கோபுரத்தைச் சுற்றி நடக்கத் தொடங்கினர். அந்த மனிதர் கட்டிடத்தை மிகக் கவனமாகக் கண்காணித்தார். அப்படிச் செய்யும்போது, ​​அந்தக் கற்களை நன்றாக அவதானித்தார் அவர் கையில் ஒரு தடியும் இருந்தது. அந்தத் தடியைக் கொண்டு கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கற்களைத் தட்டியவாறு அவர் நடந்துகொண்டிருந்தார். அவ்வாறு அவர் கற்களைத் தட்டியபோது, ​​அவற்றில் சில கருமை நிறமாக மாறின. சில உறுதியாக இருந்தன. சில உடைந்தன. சில மிகவும் குறுகியதாக இருந்தன. சில வெள்ளை அல்லது கறுப்பு நிறத்தில் இருக்கவில்லை. மேலும், சில கற்கள் வித்தியாசமாகவும், அங்குள்ள மற்ற கற்களுடன் பொருந்தாமலும் காணப்பட்டன. அவர்களில் சில மோசமான அமைப்பைக் கொண்டவையாக இருந்தன. கட்டுமானத்தில் காணப்பட்ட கற்களின் பல்வேறு அமைப்புக்கள் மற்றும் அவற்றின் தன்மைகள் தான் இவை. எனவே, கோபுரத்திலிருந்து அனைத்து கற்களையும் அகற்றி, கோபுரத்தின் அருகே வைக்கும்படியும், மற்ற கற்களைக் கொண்டுவந்து, அகற்றப்பட்ட கற்களுக்குப் பதிலாகப் பொருத்தும்படியும் கட்டளையிட்டார். எந்த மலையிலிருந்து கற்களைக் கொண்டுவந்து அங்கே பொருத்த வேண்டும் என்று கட்டுபவர்கள் அவரிடம் கேட்டார்கள். ஆனால் அவரோ, மலைகளில் இருந்து கற்களைக் கொண்டு வரும்படி கூறாமல் அருகில் உள்ள சமவெளியில் இருந்து கற்களைக் கொண்டு வரும்படி கட்டளையிட்டார். சமவெளி தோண்டப்பட்டது, மிகவும் விலையுயர்ந்த சதுரவடிவான கற்கள் அங்கு காணப்பட்டன. அவற்றில் சில கற்கள் வட்ட வடிவில் இருந்தன. சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட கற்கள் அனைத்தும் அங்கே கொண்டு வரப்பட்டு, கன்னிப்பெண்களிடம் கையளிக்கப்பட்டு, அவற்றை அந்தக் கன்னிப்பெண்கள் கதவு வழியாக கோபுரத்தினுள் எடுத்துச் சென்றனர். கற்கள் அகற்றப்பட்ட வெற்றிடங்களில் சதுர வடிவ கற்கள் தயார் செய்யப்பட்டு பொருத்தப்பட்டன. ஆனால் வட்டவடிவமானவை கட்டிடத்தின் நிர்மாணத்துக்கு உபயேகிக்கப்படவில்லை. ஏனென்றால், அவை சதுர வடிவமாக மாற்ற மிகவும் கடினமாக இருந்தது, அத்தோடு மற்றும் நீண்ட நேரம் எடுத்தது. அவை இவ்வாறு வடிவமைக்கப்பட்டு கட்டிடத்துடன் இணைக்கப்பட்ட கோபுரத்தின் அருகே வைக்கப்பட்டன. ஏனெனில் அவை மிகவும் மதிப்பு மிக்கவையாக இடுந்த காரணத்தால்.

84 இறுதியில், முழுக் கோபுரத்தின் உரிமையாளரான அந்த மதிப்பு மிக்க மனிதர் அவரது கண்காணிப்பை நிறைவு செய்த பின், மேய்ப்பனிடம் வந்து அவருடன் கலந்துரையாடி, கட்டிடத்திலிருந்து அகற்றப்பட்ட கற்கள் அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்து, கோபுரத்தின் அருகே வைத்து, அவரிடம் பின்வருமாறு கூறினார், “இந்த கற்களை மிகவும் கவனமாக சுத்தம் செய்யுங்கள். கோபுரத்தை நிர்மாணிப்பதற்கு மிகவும் பொருத்தமான மற்றைய கற்களோடு பொருந்தும் விதத்தில் அவற்றை தயார் செய்யுங்கள். ஆனால் பொருந்தாதவை இருக்குமானால், அவற்றை கோபுரத்திலிருந்து வெகு தொலைவில் கொண்டு சென்று எறிந்து விடுங்கள். இவ்வாறு மேய்ப்பனுக்குக் கட்டளையிட்டபின், தன்னுடன் வந்திருந்த அனைவருடனும் அவர் கோபுரத்தை விட்டு வெளியேறினார். கன்னியர்கள் கோபுரத்தைச் சுற்றி நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் மேய்ப்பனிடம், “இந்த கற்கள் நிராகரிக்கப் பட்ட பிறகு கோபுரத்தில் எவ்வாறு மீண்டும் இணைக்கப்படும்?” என்று கேட்டேன். அவர் எனக்குப் பின்வருமாறு பதிலளித்தார், “உன்னால் இந்தக் கற்களை நன்றாகக் பார்க்க முடிகிறதா?” என்று கேட்க, நான் அவற்றைப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது, ஐயா, ஆனால், பெரும்பாலும் இந்தக் கற்கள் எப்படி மீண்டும் மற்றைய கற்களுடன் நன்றாக பொருந்துக் கூடியதாய் இருக்கிறது. அது எப்படி சாத்தியமாகும் ஐயா? அவைகளை உருவமைத்து தயார் செய்த பிறகும் இடைவெளியை அவைகளால் எப்படி நிரப்ப முடியும்? என்று நான் கேட்டேன். அவர் அதற்கு பதிலாக, “சிறிய கற்கள் கட்டிடத்தின் நடுவில் வைக்கப்படும், ஆனால் பெரியவை வெளியே பொருத்தப்படும், அவை சிறிய கற்களுக்குத் துணைபுரியும்,” என்று விளக்கமளித்த பிறகு, “தற்போதைக்கு நாம் இங்கிருந்து போவோம், இன்னும் இரண்டு நாட்களில் மீண்டும் வந்து கற்களை சுத்தம் செய்து கட்டிடத்தில் பொருத்துவோம். ஏனென்றால் கோபுரத்தின் உரிமையாளர் எதிர்பாராதவிதமாக வந்து, கோபுரத்தைச் சுற்றியுள்ள பொருட்கள் அசுத்தமாக இருப்பதைப் பார்த்து, கோபுரத்தின் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்தையும் சுத்தம் செய்யாமல் இருப்பது கண்டு, அவரது கோபத்துக்கு ஆளாகாமல் இருக்கவும், கோபுரத்தைக் கட்டுவதற்கு இந்தக் கற்களை உபயோகிக்காமல் கவனக்குறைவாக இருப்பதாகவும் தோன்றும். இவை நடைபெற்ற பின், இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் நாம் கோபுர நிர்மாண ஸ்தலத்துக்கு வந்தோம், அவர் என்னை அழைத்து, “எல்லா கற்களையும் ஆராய்ந்து, அவற்றில் எது கட்டிடத்திற்கு பொருந்தும், அவற்றில் எவை கோபுரத்தின் நிர்மாணத்துக்கு உகந்ததாக இருக்கும் என்பதைப் பார்ப்போம்” என்றார். நான் அவரிடம், “அப்படியானால், அவற்றை நாம் போய்ப் பார்க்கலாம் ஐயா,” என்றேன்.

கற்களை ஆய்வு செய்தல்

85 எனவே நாம் முதலில், கருமை நிறம் கொண்ட கற்களில் தொடங்கி எமது ஆய்வை முன்கொண்டு சென்றோம். அவை கட்டிடத்திலிருந்து அகற்றப்பட்ட அதே நிலையில் காணப்பட்டன, மேலும் மேய்ப்பன் அவற்றை கோபுரத்திலிருந்து அகற்றி வெளியே கொண்டு செல்ல உத்தரவிட்டார். பின்னர் அவர் கரடுமுரடான கற்களை ஆராய்ந்தார். அவற்றில் பலவற்றை எடுத்து உருவமைத்து, அவற்றை எடுத்து கட்டிடத்தில் பொருந்துமாறு கன்னிப்பெண்களுக்கு கட்டளையிட்டார். கன்னிப்பெண்கள் அவற்றை எடுத்து கோபுரத்தின் கட்டிடத்தின் நடுப்பகுதியில் பொருத்தினார்கள். ஆனால் எஞ்சிய கற்களை கருங்கற்களுடன் பொருந்துமாறு உத்தரவிட்டார். காரணம், அவைகளும் கருப்பாகத் தோன்றியதால். பின்னர் அவர் விரிசல் உள்ள கற்களைப் பரிசோதித்து, பலவற்றைத் துண்டு துண்டாக உருவமைத்து, கன்னிப் பெண்களை கட்டிடத்திற்குள் கொண்டு செல்லும்படி கட்டளையிட்டார். அவை வலுவாகக் காணப்பட்டதால் அவை வெளியில் பொறுத்தப் பட்டன. ஆனால், அதிக அளவில் விரிசல் ஏற்பட்டுள்ள, மீதமுள்ள கற்களை வெட்டி சரி செய்ய முடியாத காரணத்தால், கோபுர கட்டுமானப் பணிக்கு எடுத்துச் செல்லாமல் நிராகரிக்கப்பட்டது. பின்னர் அவர் சிறிய கற்களைப் பரிசோதித்தார். அவை மத்தியில் நிறைய கருங்கற்கள் இருந்தன. மேலும் அவற்றில் சில பெரிய விரிசல்களைக் கொண்டிருந்தன. ஆதலால், அவற்றை அப்புறப்படுத்தப்பட்டவற்றுடன் வைக்க உத்தரவிட்டார். அப்படியும் எஞ்சியவற்றை சுத்தம் செய்து வெட்டி தயார் செய்தார். பின்னர் அவற்றை கட்டிடத்தில் வைக்க உத்தரவிட்டார். உடனேயே, கன்னிப்பெண்கள் அவற்றை எடுத்துக் கொண்டு, அவை மிகவும் பலவீனமாக இருந்ததால், கோபுரத்தின் அமைப்பின் நடுவில் பொருத்தினார்கள். பிறகு பாதி வெள்ளை நிறமாகவும், பாதி கறுப்பு நிறமாகவும் இருந்தவற்றைச் சோதித்தார். பெரும்பாலான கற்கள் இப்போது கறுப்பு நிறமாகத் தோன்றின. இவற்றையும் நிராகரிக்கப்பட்ட கற்களையும் சேர்த்து உபயோகத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆகவே அவை அனைத்தும் கன்னிகளால் கொண்டு செல்லப்பட்டன, ஏனென்றால் அவை வெண்மை நிறமாக இருந்தன. மேலும் கன்னிகள் தாமாகவே அவற்றை கட்டிடத்தில் பொருத்தினர். அவை வெளிப்புறமாக வைக்கப்பட்டன. ஏனென்றால் நல்லவை மற்றும் உகந்தவையாக அவை இருந்த காரணத்தால், அவை உபயோகத்துக்கு தெரிவுசெய்யப் பட்டன. மற்றும் நடுவில் உள்ள கற்களுக்கு அந்த சிறிய கற்கள் சக்தியைக் கொடுக்கக் கூடியதாகவும், உருவத்தில் மிகவும் சிறியதாக இல்லாமலும் சற்று பெரியதாக இருந்த காரணத்தால், அவர் அவ்வாறு அவற்றை இடையில் செருகும்படி கூறியிருந்தார். பின்னர் அவர் கடினமான, சீரற்ற உருவமுடைய கற்களை ஆய்வு செய்தார். அவற்றில் சில மிகவும் கடினமானதாக இருந்ததாலும், வெட்டி மீளமைக்க முடியாததாலும் தூக்கி எறியப்பட்டன. அவற்றில் எஞ்சியிருந்த கற்கள் பலவீனமானவையாக இருந்தன, எனவே கன்னிப்பெண்கள் அவற்றை உருவமைத்து கோபுரத்தின் கட்டமைப்பின் மையத்தில் பாவினர். பின்னர் அவர் கறைகள் உள்ள கற்களை ஆய்வு செய்தார். ஒரு சில கறுப்பு நிறமாக மாறி இருந்த காரணத்தால், மீதமுள்ளவர்களுடன் நிராகரிக்கப்பட்டன. அவற்றிடையே எஞ்சியிருந்த கற்கள் பிரகாசமாகவும் உறுதியாகவும் இருந்தன. உடனே கன்னிப்பெண்கள் அவற்றை கட்டிடத்தில் பொருத்தினர். அவர்களின் வலிமையின் காரணமாக, அவை வெளித் தோற்றத்தில் பொருத்தப்பட்டன.

86 கடைசியில் அவர் வட்டமான வெள்ளை நிறக் கற்களைப் பரிசோதிக்க வந்தார். அவற்றைப் பார்த்ததும் அவர் இவ்வாறு தனது அபிப்பிராயத்தைத் தெரிவித்தார்: “இந்த கற்களை என்ன செய்வது?” என்று அவர் கூறியபோது, “அது எனக்கு எப்படி தெரியும் ஐயா?” என்றேன். “அப்படியென்றால் உனக்கு இங்கு எதுவும் தெரியவில்லை, அப்படித்தானே?” என்றார். அதற்கு நான், “ஐயா, எனக்கு இந்த சாமர்த்தியம் இல்லை, நான் கல் வெட்டும் கலைஞன் இல்லை, என்னால் புரிந்து கொள்ள முடியாது” என்றேன். “அவை மிகவும் உருண்டை வடிவமாக இருப்பதை நீ பார்க்கவில்லையா? நான் அவற்றை சதுரமாக்க விரும்பினால், நான் அவற்றை மிக நீண்ட நேரம் வெட்டி சரிசெய்ய வேண்டும், இல்லையா? அதேநேரம், அவசியம் ஏற்படுமிடத்து, அவற்றில் சிலவற்றை நாம் கட்டடத்தில் வைக்கவும் வேண்டும்,” என்றார். “ஏன் ஐயா, அவற்றை அங்கே வைப்பதற்கு உங்களை நீங்களே சிரமத்துக்கு உள்ளாக்கிக் கொள்கிறீர்கள்? கட்டிடத்திற்குத் தேவையானவற்றைத் தேர்ந்தெடுத்து அதனுடன் ஏன் இணைக்கக்கூடாது?” என்று நான் எனது அபிப்பிராயத்தை வெளியிட்டேன். உடனே அவர், பெரிய மற்றும் பிரகாசமான கற்களைத் தேர்ந்தெடுத்தார். பின்னர் அவற்றை வெட்டி சரிசெய்யப்பட்டன. உடனேயே கன்னிகள் அவற்றை எடுத்து கட்டிடத்தின் வெளிப்புறத்தில் பொருத்தினார்கள். ஆனால் மீதமுள்ள கற்கள் சேகரிக்கப்பட்டு, அவை கொண்டு வரப்பட்ட அதே சமவெளியில் மீண்டும் போடப்பட்டன. எனினும், அவை நிராகரிக்கப்படவில்லை. “கோபுரத்தின் ஒரு பகுதி இன்னும் கட்டப்பட உள்ளது. ஆகவே இந்த கல்லை கட்டிடத்தில் பொருத்த கோபுரத்தின் உரிமையாளர் மிகவும் ஆர்வமாக உள்ளார். ஏனென்றால் அந்தக் கற்கள் மிகவும் பிரகாசமாக இருக்கிறபடியால்,” என்று அவர் கூறினார். அப்போது, கருமை நிற அங்கிகளை அணிந்த, அழகிய தோற்றமுடைய பன்னிரண்டு பெண்கள் அழைக்கப்பட்டனர். அவர்களது அங்கிகள் கச்சைகள் போலக் காணப்பட்டன. அவர்களது தோள்பட்டைகள் வெறுமையாக, வெளியில் தெரியும்படி இருந்தன. தலைமுடியை வாராமல் தளர்வாக விட்டிருந்தார்கள். இந்தப் பெண்கள் எனக்குப் பயங்கரமாகத் தெரிந்தார்கள். மேய்ப்பன் கட்டிடத்திலிருந்து வீசி எறியப்பட்ட கற்களை எடுத்து, அவை கொண்டு வரப்பட்ட அதே மலைக்கு மீண்டும் கொண்டு செல்லும்படி அவர்களை நோக்கிக் கட்டளையிட்டார். அவர்கள் மகிழ்ச்சியுடன் அனைத்து கற்களையும் அகற்றி, அவற்றைக் கொண்டு வந்த அதே இடத்தில் மீண்டும் கொண்டு போய் வைத்தார்கள். எல்லா கற்களும் அகற்றப்பட்ட பிறகு, கோபுரத்தின் சுற்று வட்டாரத்தில் ஒரு கல் கூட எஞ்சியிருக்கவில்லை. மேய்ப்பன் என்னைக் கூப்பிட்டு: “வா, கோபுரத்தைச் சுற்றிப் பார்ப்போம், அதில் ஏதேனும் பிழைகள், தவறுகள் இருக்கிறதா என்று பார்ப்போம்,” என்று சொன்னார். அதனால் அவருடன் நான் கோபுரத்தைச் சுற்றி வந்தேன். மேய்ப்பன் கோபுரத்தின் அழகிய அமைப்பைக் கண்டபோது, ​​அவரது மனம் மிகுந்த மகிழ்ச்சியடைந்தது. கோபுரம் மிகவும் சிறப்பாக கட்டப்பட்டிருந்ததால், அதைப் பார்த்ததும் அதன் கட்டுமானத்தை நான் மிகவும் ரசித்தேன். ஒரே கல்லில் செதுக்கப்பட்டது போல், அந்தக் கோபுரம் மிகவும் இரம்மியமாகவும், கலையம்சத்துடனும் காட்சியளித்தது. என் மனதுக்கும் எல்லாமே ஒரே கல்லால் செதுக்கப்பட்டது போலத்தான் தெரிந்தது.

ஹெர்மஸ் மற்றும் கன்னிகள்

87 நான் அவருடன் பயணித்தபோது, ​​மிக அழகான காட்சியைக் கண்டு மகிழ்ந்தேன். மேய்ப்பன் என்னிடம் இப்படி சொன்னார்: “போய், கட்டிடத்திலிருந்து அகற்றப்பட்ட கற்களில் உள்ள பொருத்தமான வற்றை அடையாளம் கண்டு, கட்டிடத்தின் மீது அவற்றைப் பொருத்துவதற்கு, கொஞ்சம் சீமெந்து சாந்து மற்றும் உடைந்த செங்கற் துண்டுகளை எடுத்துக்கொண்டு வா. ஏனென்றால், கோபுரத்தை சுற்றிலும் அதன் அமைப்பு சீராக இருக்க வேண்டும்” என்றார். அவர் கட்டளையிட்டபடியே நான் அவற்றை சேகரித்து அவரிடம் கொண்டு வந்தேன். “இந்தப் பணியை நிறைவுசெய்வதற்கு நீ எனக்கு உதவும் பட்சத்தில், நிர்மாணப்பணி விரைவில் முடிவடையும்,” என்று அவர் என்னிடம் கூறினார். எனவே, கட்டிடத்துடன் இணைக்கப்பட்ட கற்கள் மத்தியில் உள்ள இடைவெளிகளை நிரப்பி, கோபுரத்தைச் சுற்றியுள்ள பகுதியை துடைத்து சுத்தம் செய்ய உத்தரவிட்டார். கன்னிப்பெண்கள் விளக்குமாற்றின் உதவியுடன் கோபுரத்தில் இருந்த குப்பைகளையெல்லாம் கூட்டிப்பெருக்கி, துடைத்து அகற்றினர். பிறகு சிறிது தண்ணீர் தெளித்து சுத்தம் செய்த பின், கோபுரத்தின் அமைப்பு கண்கவர் தோற்றத்துடன் மனதை ஈர்க்கக்கூடியதாக இருந்தது. மேய்ப்பன் என்னிடம் வந்து: “இப்போது எல்லாம் சுத்தம் செய்யப்பட்டு விட்டது. உரிமையாளர் கோபுரத்தைப் பார்க்க வந்தால், நம்மீது குற்றம் கூற எதுவும் இருக்காது என்று எண்ணுகிறேன்,” என்று கூறினார். இவற்றைச் சொல்லிவிட்டு அவர் அந்த இடத்தைவிட்டுக் கிளம்ப தயாரானார். ஆனால் நான் அவருடைய தோளில் தொங்கிக் கொண்டிருந்த பையைப் பிடித்துக்கொண்டு, இறைவனின் பெயரால் அவர் எனக்கு இறுதியாகக் காட்டியதை விளக்கும்படி கெஞ்ச ஆரம்பித்தேன். அதற்கு அவர், “எனக்கு வேலை அதிகம், இருப்பினும், எல்லாவற்றையும் உனக்கு விளக்குகிறேன். ஆகவே நான் வரும் வரை இங்கேயே காத்திரு” என்றார். நான் அவரிடம் “ஐயா, நான் இங்கே தனியாக இருக்கும்போது என்ன செய்வது?” என்றேன். அதற்கு அவர், “நீ தனியாக இல்லை. ஏனென்றால், இந்தக் கன்னியர்கள் உன்னோடு துணையாக இருப்பார்கள்” என்றார். “அப்படியானால், என்னை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு செல்லுங்கள்,” என்றேன். மேய்ப்பன் அவர்களை அழைத்து அவர்களிடம், “நான் திரும்பி வரும் வரை இந்த மனிதனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்,” என்று கூறி, அவர்களிடம் என்னை ஒப்படைத்துவிட்டு சென்றார். நான் கன்னிப் பெண்களுடன் தனியாக இருந்தேன். அவர்கள் என்னை மிகவும் இனிமையாகவும் அன்பாகவும் நடத்தினார்கள். குறிப்பாக ஆஜானுபாகுவான தோற்றத்தில் காணப்பட்ட அவர்கள் நால்வரும் மிகவும் நல்லவர்களாகத் தோன்றினர்.

88 கன்னிப்பெண்கள் என்னிடம், “இன்று மேய்ப்பன் இங்கு வரமாட்டார்” என்றார்கள். “அப்படியானால், நான் என்ன செய்ய வேண்டும்?” என்றேன். அதற்கு அவர்கள், “அவர் வரும் வரை காத்திருங்கள்; அவர் வந்தால் தான் உங்களோடு உரையாடுவார், அவர் வரவில்லை என்றால் அவர் வரும் வரை எங்களோடு இங்கேயே தங்கி இருங்கள்” என்று பதிலளித்தனர். நான் அவர்களிடம், “தாமதமானாலும் அவருக்காக நான் காத்திருப்பேன்; அப்படியும் அவர் வரவில்லை என்றால், நான் வீட்டிற்கு சென்று விடியற்காலையில் மீண்டும் திரும்பி வந்துவிடுவேன்” என்றேன். அதற்கு அவர்கள், ” நீ எங்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளாய், ஆகவே நீ எங்களை விட்டுப் போக முடியாது” என்று என்னிடம் சொன்னார்கள். “அப்படியானால், நான் எங்கே இருக்க வேண்டும்?” என்று நான் கேட்டேன். “நீ எங்களுடன் உறங்கலாம், ஒரு கணவனாக அல்ல, ஒரு சகோதரனாக எங்களோடு நீ தாராளமாக உறங்கலாம். எதிகாலத்திலும் உன்னை நாங்கள் ஒரு சகோதரனாகவே ஏற்றுக் கொள்வோம். உன்னுடனேயே இருப்போம். ஏனென்றால் நாங்கள் உன்னை மிகவும் நேசிக்கிறோம்!” என்றனர். ஆனால் நான் அவர்களுடன் தங்கி இருக்க வெட்கப்பட்டேன். அவர்களில் முதன்மையானவள் என்று தோன்றிய ஒரு கன்னிகை என்னை முத்தமிட ஆரம்பித்தாள். அவள் என்னை முத்தமிடுவதைப் பார்த்து மற்றவர்களும் என்னை முத்தமிட ஆரம்பித்தனர். அவர்களோடு இராப்பொழுதைக் கழிப்பதற்கு எனக்கு சற்றே கூச்சமாக இருந்தது. அவர்கள் கோபுரத்தைச் சுற்றி அழைத்துச் சென்று என்னுடன் விளையாடினர். நானும் ஒரு சிறுவயது இளைஞனைப் போல அவர்கள் மத்தியில் சென்று அவர்களுடன் விளையாட ஆரம்பித்தேன்: அவர்களில் சிலர் ஒரு பாடல் பாடினார்கள், மற்றவர்கள் நடனமாடினார்கள். நான் மௌனம் காத்து, அவர்களுடன் கோபுரத்தைச் சுற்றி நடந்து, அவர்களுடன் மகிழ்ச்சியுடன் இருந்தேன். நேரம் பிந்திய போது, நான் வீட்டிற்குள் செல்ல விரும்பினேன். ஆயினும் அவர்கள் என்னை போக அனுமதிக்கவில்லை, என்னைத் தடுத்து நிறுத்தினர். அதனால் நான் அன்றைய நாள் இரவை அவர்களுடன் கழித்தேன். கோபுரத்தின் அருகே கன்னிப்பெண்கள் தங்கள் துணிகளை தரையில் விரித்து, என்னை அவர்கள் நடுவில் படுக்க வைத்தார்கள்; அவர்கள் செபிப்பதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. நானும் இடைவிடாமல் செபித்தேன். அவர்களுக்கு சரிசமமாகவே செபித்துக்கொண்டிருந்தேன். நான் இவ்வாறு செபித்ததால் கன்னிப்பெண்கள் மகிழ்ந்தனர். மறுநாள் இரண்டு மணி வரை நான் கன்னிப் பெண்களுடன் அங்கேயே இருந்தேன். அப்போது மேய்ப்பன் திரும்பி வந்து, கன்னிப் பெண்களிடம், “நீங்கள் அவனுக்கு ஏதாவது அவமானம் ஏற்படும் விதத்தில் நடந்து கொண்டீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “அவனிடமே கேளுங்கள்,” என்று சொன்னார்கள். நான் அவரிடம், “ஐயா, நான் அவர்களுடன் இருந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்” என்றேன். “ஏன், எதனால்?” என்று அவர் கேட்டார், “நீ உணவு அருந்தினாயா? என்று கேட்டார். “ஐயா, நான் இரவு முழுவதும் கர்த்தருடைய வார்த்தைகளில் மூழ்கி, அவரது வார்த்தைகளையே உணவாகக் கொண்டேன்,” என்று பதிலளித்தேன். “அவர்கள் உன்னை நன்றாக ஏற்றுக்கொண்டு உபசரித்தார்களா?” என்று விசாரித்தார். “ஆம், ஐயா,” என்று நான் பதிலளித்தேன். “இப்போது, நீ முதலில் என்ன கேட்க விரும்புகிறாய்?” என்று அவர் கேட்க, நான் “வரிசையாக, கிரமமாகக் கேட்க விரும்புகிறேன் ஐயா,” என்று சொன்னேன். நீங்கள் ஆரம்பத்தில் இருந்தே எனக்கு எல்லாவற்றையும் தெளிவுபடுத்தினீர்கள். ஆகவே மீண்டும் நான் உங்களிடம் கேட்கிறேன், ஐயா, நான் கேட்கும் கேள்விகளுக்கு எனக்கு விளக்கம் தருவீர்கள் என்று தாழ்மையுடன் நம்புகிறேன்,” என்றேன். “உன் விருப்பம் போல் செய்கிறேன், நான் உனக்கு விளக்குகிறேன், உன்னிடம் எதையும் மறைக்க மாட்டேன்” என்று பதிலளித்தார்.

கோபுரம் மற்றும் கன்னிப்பெண்கள் பற்றிய விளக்கம்

89 “முதலில், ஐயா, இதை எனக்கு விளக்குங்கள்: பாறை மற்றும் கோபுர வாயிலின் அர்த்தம் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர், “இந்தப் பாறை, அதன் வாசல் தான் தேவனுடைய குமாரன்” என்று பதிலளித்தார். “எப்படி ஐயா அது?” நான் கேட்டேன்; “பாறை பழையது, வாயில் புதியது,” என்று பதிலளித்தார். “மூடனே, நன்றாகக் கேள். கடவுளின் குமாரன் அனைத்து உயிரினங்களையும் விட உயந்தவர், அதனால் அவர் தனது சிருஷ்டித்தலின் போது தந்தையுடன் சக ஆலோசகராக செயலாற்றினார். அதனால்தான் அவர் மூத்தவராக இருக்கிறார்,” என்றார். “அப்போது, வாயில் எப்படி புதியதாய் இருக்கிறது ஐயா,” என்று கேட்டேன். அதற்கு அவர், “கர்த்தர் கடைசி நாட்களில் தான் வெளிப்பட்டார்: இதனாலேயே வாசல் புதியது என்று கூறப்படுகிறது. இதன் அர்த்தம் என்னவென்றால், இரட்சிக்கப்படுபவர்கள் தான் கடவுளுடைய இராச்சியத்திற்குள் பிரவேசிக்க முடியும்,” என்று அவர் பதிலளித்தார். “ஆகவே, வாசல் வழியாக உள்ளே வந்த கற்கள் கோபுரத்தைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டத்தையும், அவ்வாறு உள்ளே கொண்டுவரப்படாதவை மீண்டும் அவை இருந்த இடத்திற்குத் தூக்கி எறியப்பட்டத்தையும் நீ கண்டாய் தானே?” என்று கேட்டார். “கண்டேன், ஐயா,” என்று நான் பதிலளித்தேன். “அப்படியே, எவனும் தேவனுடைய பரிசுத்த நாமத்தைப் பெறாவிட்டால் தேவனுடைய இராச்சியத்துக்குள் பிரவேசிக்க மாட்டான். நீ ஒரு நகரத்திற்குள் பிரவேசிக்க விரும்பினால், அந்த நகரம் ஒரு மதில் சுவரால் சூழப்பட்டிருந்தால், அந்த நகரம் ஒரு வாசலை மட்டுமே கொண்டிருந்தால், அந்த நகரத்துக்குள் நுழையும் வழியைத் தவிர, வேறு வழியே நீ நுழைய முடியுமா?” என்று வினவினார். “ஏன் ஐயா, அது எப்படி சாத்தியமாகும்?” என நான் கேட்டேன். “அப்படியானால், அந்த ஒரு வாயில் தவிர வேறு வாயில் ஊடாக நகரத்திற்குள் நுழைய முடியாது போலத்தான் அவருடைய அன்பான சுதனின் திருநாமத்தை ஏற்றுக்கொண்டாலே தவிர, மனிதர்களும் கடவுளுடைய இராச்சியத்திற்குள் நுழைய முடியாது,” என்று அவர் உறுதிப்படக் கூறினார். கோபுரத்தை எத்தை பேர் சேர்ந்து நிர்மாணித்தார்கள் என்று நீ பாரத்தை தானே?” என்று கேட்டார். “ஆம் ஐயா, அவர்களைப் பார்த்தேன்,” என்றேன். “அவர்கள் அனைவரும் மகிமையுள்ள தேவதூதர்கள், அவர்களால் இறைவன் சூழப்பட்டிருக்கிறார், வாசல் தான் கடவுளின் சுதன், அவர் தான் இறைவனை அடையக்கூடிய ஒரே நுழைவாயில். வேறு வழியாக எவராலும் யாரும் செல்ல முடியாது. அவருடைய குமாரன் என்ற வழியைத் தவிர, தேவ இராச்சியத்துக்குள் நுழையும் வழி வேறு கிடையாது,” என்று கூறி, மீண்டும் அவர் தொடர்ந்தார், “ஆறு மனிதர்களும், அவர்களுக்கு நடுவில் உயரமான மற்றும் புகழ்பெற்ற மனிதர் ஒருவர் கோபுரத்தைச் சுற்றி நடந்து, கட்டிடத்திலிருந்து கற்களை நிராகரித்ததைப் பார்த்தாயா?” என்று கேட்டார். “நான் பார்த்தேன் ஐயா,” என்று பதிலளித்தேன். “அந்த மகிமையான மனிதர் தான் தேவனுடைய குமாரன். அவரது வலது புறத்திலும் இடதுபுறத்திலும் இருப்பவர்கள் ஆறு பேரும் புகழ்பெற்ற தேவதூதர்கள். இந்த மகிமையான தேவதூதர்கள் நிராகரிக்கப்பட்ட எவரையும் கடவுளின் இராச்சியத்துக்குள் நுழைய விடமாட்டார்கள். அவருடைய திருநாமத்தை ஏற்றுக்கொள்ளாத எவனும் தேவனுடைய இராச்சியத்தில் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டான்” என்று அவர் தொடர்ந்து கூறினார்.

90 “அப்போது அந்தக் கோபுரம்…அதன் அர்த்தம் என்ன?” என்று நான் கேட்டேன், “இந்த கோபுரம் தான் திருச்சபை” என்று அவர் பதிலளித்தார். “இந்த கன்னிகள், அவர்கள் யார்?” “அவர்கள் பரிசுத்த ஆவிகள், கடவுளுடைய இராச்சியத்துக்குள் எவருக்கேனும் செல்ல வேண்டுமானால், அவர்கள் தான் அதற்கான ஆடைகளை அணிவிப்பார்கள். அவர்களது அனுசரணை இல்லாவிட்டால், கடவுளுடைய இராச்சியத்தில் மனிதர்களைக் காண முடியாது: ஏனென்றால் நீங்கள் பெயரைப் பெற்றிருந்தும், அவர்களிடமிருந்து ஆடைகளைப் பெறாவிட்டால், அவர்களால் உங்களுக்கு எந்தப் பயனும் இல்லை. இந்த கன்னிகைகள் தேவ சுதனுடைய வல்லமையின் பிம்பங்கள். நீங்கள் அவருடைய நாமத்தைக் கொண்டிருந்தபோதிலும், அவருடைய வல்லமை உங்களிடத்தே இல்லையென்றால், அவருடைய நாமத்தை நீங்கள் வைத்திருப்பதும் வீணே. அந்த கற்கள், “அவர் தொடர்ந்தார், “நீ பார்த்த அந்தக் கற்கள் நிராகரிக்கப்பட்டவை, ஆயினும் அவை அவருடைய பெயரைக் கொண்டிருந்தன, ஆனால் கன்னிகள் தந்த ஆடைகளை அவை அணிந்திருக்கவில்லை,” என்று கூறினார். “அவர்களுடைய உடைகள் என்ன முக்கியத்துவம் பெறுகின்றன ஐயா?” என்று நான் கேட்டேன். “அவர்களுடைய பெயர்கள் தான் அவர்களுடைய ஆடைகள். தேவ சுதனாகிய கர்த்தருடைய நாமத்தைத் தாங்கியிருக்கிற ஒவ்வொருவரும் இவர்களின் பெயர்களையும் தாங்கியிருக்க வேண்டும்; சுதனாகிய கர்த்தர் தான் இந்தக் கன்னிப் பெண்களின் பெயர்களைச் கொண்டிருக்கிறார்,” என்றார். அங்கு காணப்பட்ட பலதரப்பட்ட கற்கள் தொடர்பாக அவர் பேசியபோது, “இந்தக் கன்னிகைகள் [கைகள் வழியாகக் கோபுரத்தின் கட்டிடத்திற்குள் கொண்டுவரப்பட்ட கற்களைத் தான் நான் குறிப்பிடுகிறேன்]. நீ பார்த்தது போல், மீதமுள்ளவை வலிமை என்ற ஆடைகளை அணிந்திருக்கிறன. அதனால்தான் கோபுரம் பாறையுடன் சேர்ந்து ஒரே கல்லில் செதுக்கப் பட்டிருப்பதைப் போல இருப்பதை நீ காண்கிறாய். அவருடைய சுதனான கர்த்தரை விசுவாசித்து, இந்த ஆடைகள் என்ற வலிமையை அணிந்தவர்கள், ஒரே ஆன்மாவாகவும், ஒரே சரீரமாகவும் இருப்பார்கள். அவர்களுடைய ஆடைகளின் நிறம் ஒரேமாதிரியாக இருக்கும். அப்படிப்பட்டவர்களின் மனைகள், கன்னிப் பெண்களின் பெயர்களைத் தாங்கி, கோபுரத்தில் இருக்கும்,” என்று விளக்கமளித்தார். ஐயா, நிராகரிக்கப்பட்ட அந்தக் கற்கள் என்ன காரணத்திற்காக நிராகரிக்கப் பட்டன? ஏனென்றால், அவர்கள் வாசலைக் கடந்து, கன்னிப்பெண்களின் கைகளால் கோபுரத்தின் கட்டிடத்தில் வைக்கப்பட்டன. அப்படியிருந்தும் ஏன்?”என்று நான் விசாரித்தேன். “நீ எல்லாவற்றிலும் ஆர்வம் காட்டுவதால், நிராகரிக்கப்பட்ட கற்களைப் பற்றி சொல்கிறேன். கவனமாகக் கேள்,” என்று தொடர்ந்தார். இவை அனைத்தும் கடவுளின் பெயரைப் பெற்றவை, மேலும் அவை இந்த கன்னிகளின் வலிமையைப் பெற்றவை” என்று அவர் பதிலளித்தார். இந்த வலிமையைப் பெற்றுக்கொண்டு, அவர்கள் பலமடைந்து, தேவனுடைய சேவகர்களோடு இருந்தார்கள்; அவர்களுடையது ஒரே ஆவியும், ஒரே உடலும், ஒரே ஆடையுமாக இருந்தது; அவர்கள் ஒரே மனதை உடையவர்களாகவும், நீதி வழி வாழ்பவர்களாகவும் இருந்தார்கள். எனினும், காலப்போக்கில், அவர்கள் கறுப்பு ஆடை அணிந்து, தோள் பட்டைகள் வெளியே தெரியும் வண்ணம் ஆடை அணிந்து, தலைமுடியைக் கலைத்து, அழகிய தோற்றமுடையவர்களாகக் காணப்பட்ட பெண்களால் ஈர்க்கப்பட்டனர். அவர்களைக் கண்டதும், கன்னிப் பெண்கள் அவர்கள் போலாக வேண்டுமென்று எண்ணி, கடவுளின் வீட்டிலிருந்து வெளியேறி, இந்த பெண்களிடம் தஞ்சமடைந்தனர். அதேநேரம், அந்தப் பெண்களின் அழகைக் கண்டு மயங்கி, ஏமாறாதவர்கள் கடவுளின் வீட்டில் நிரந்தரமாய்த் தங்கினர்.” என்று விளக்கமளித்து, “இப்போது நிராகரிக்கப்பட்ட கற்கள் பற்றிய விளக்கம் உனக்கு கிடைத்திருக்கும் என்று எண்ணுகிறேன்,” என்று சொன்னார்.

91 “அப்படியானால் ஐயா, இந்த மனிதர்கள், இந்த பெண்களைப் பார்த்து மனந்திரும்பி, தங்கள் இச்சைகள் யாவற்றையும் விட்டுவிட்டு, மீண்டும் கன்னியர்களிடம் வந்து, தங்கள் செயல்களில் தங்கள் வலிமையைக் கொண்டிருப்பார்களானால், அவர்கள் தேவ இராச்சியத்துக்குள் உள்ளே நுழைய முடியாதா? என்று நான் கேட்டேன். அதற்கு அவர், “அவர்கள் இந்தப் பெண்களின் மீதான மோகத்தை விட்டுவிட்டு, கன்னிப் பெண்களின் சக்தி என்ற ஆடையை மீண்டும் அணிந்துகொண்டு, மனந்திரும்பி அவர்களது பாதையில் நடந்தால், மோட்ச இராச்சியம் அவர்களுக்கு சாதகமாக அமையலாம். இந்த வழியில் பார்த்தால், அவர்கள் மனந்திரும்பினால் மட்டுமே, அவர்கள் கோபுரத்தின் கட்டிடத்திற்குள் செல்லலாம் என்பதற்காக, கட்டிடத்தில் ஒரு வாயில் இருந்தது. அதேநேரம் அவர்கள் மனந்திரும்பவில்லை என்றால், அவர்களுக்குப் பதிலாக மற்றவர்கள் வந்துவிடுவார்கள். இறுதியில் இவர்கள் தூக்கி எறியப் படுவார்கள். இவை அனைத்திற்கும் நான் கர்த்தருக்கு நன்றி செலுத்தினேன், ஏனென்றால் அவருடைய நாமத்தைத் ஆராதிக்கும் அனைவர் மீதும் அவர் இரக்கம் வைத்திருந்தார். அவருக்கு எதிராகப் பாவம் செய்த எம்மிடம் மனந்திரும்புதலின் தூதரை அனுப்பி, நம் ஆன்மாவைப் புதுப்பித்து, நாம் ஏற்கனவே தொலைந்துபோய், வாழ்வின் மீது நம்பிக்கையில்லாமல் இருந்தபோது, அவர் நம்மை புதிய வாழ்க்கைக்குத் திரும்பச் செய்தார்,” என்றார். “இப்போது, நான் தொடர்ந்தேன்,”ஐயா, கோபுரம் ஏன் தரையில் கட்டப்படவில்லை, ஆனால் பாறையிலும் வாயிலிலும் ஏன் கட்டப்பட்டது என்பதை சற்று விளங்கப்படுத்துவீர்களா”? என்று வேண்டினேன். “நீ எந்தவித அறிவும் புரிதலும் இல்லாமல் இருக்கிறாயே?” என்று கடிந்து கொண்டார். நான் பிடிவாதமாக, “தெரிந்துகொள்ள வேண்டும், ஐயா, எல்லாவற்றையும் உங்களிடம் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டும், ஏனென்றால் என்னால் அவற்றைப் புரிந்து கொள்ள முடியவில்லை; ஏனென்றால், இவை அனைத்தும் கனம் பொருந்தியவை, மகிமை வாய்ந்தவை, மனிதனால் புரிந்து கொள்வது கடினம்,” என்றேன். “அப்படியானால், கேள்,” என்று அவர் கூறினார்: “தேவனுடைய குமாரனின் திருநாமம் மகத்தானது. அதை மனிதனால் கொண்டிருக்க முடியாது, மேலும் உலகம் முழுவதிலும் வியாபித்திருக்கிறது. அப்படியானால், முழு படைப்பும் கடவுளின் சுதனால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றால், அவரால் அழைக்கப்பட்டு, தேவ சுதனின் திருநாமத்தைத் தாங்கி, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவர் எப்படிப்பட்ட நபர்களை தெரிந்து கொள்கிறார் என்று பார்க்கிறீர்களா? அவருடைய திருநாமத்தை முழு இதயத்தோடு       ஏற்றுக்கொண்டவர்களுக்கு, அவர் தாமே அவர்களுக்கு அஸ்திவாரமாகி, அவர்கள் அவருடைய திருநாமத்தை ஏற்றுக்கொள்ள வெட்கப்படாத காரணத்தால், மகிழ்ச்சியுடன் அவர்களை ஏற்றுக்கொள்கிறார்,” என்று விளக்கினார் மேய்ப்பன்.

92 “இந்தக் கன்னிப் பெண்களின் பெயர்களையும், கறுப்புநிற உடை அணிந்த பெண்களின் பெயர்களையும் எனக்கு விளக்குங்கள் ஐயா” என்றேன். “சொல்கிறேன் கேள்” என்று சொல்லத் தொடங்கிய அவர், பின்வருமாறு விளக்கினார். “மூலைகளில் நின்றுகொண்டிருந்த வலிமை மிகு கன்னிகளின் பெயர்கள் வருமாறு; முதலாவது கன்னியானவளின் பெயர் நம்பிக்கை, இரண்டாவதாக நின்றிருந்தவள் பெயர் தன்னடக்கம், மூன்றாவதாக நின்றவள் சக்தி, நான்காவதாக நின்றுகொண்டிருந்த கன்னியின் பெயர் பொறுமை. இவர்களின் நடுவில் நிற்கும் மற்றவர்கள் பின்வரும் பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டனர். எளிமை, அப்பாவித்தனம், தூய்மை, மகிழ்ச்சி, உண்மை, புரிதல், நல்லிணக்கம் மற்றும் அன்பு. இவர்களின் பெயர்களையும் தேவ சுதனின் பெயரையும் தாங்கியவர் தான் கடவுளின் இராச்சியத்தில் நுழைய முடியும்,” என்று கூறி, “மேலும் சொல்கிறேன் கேள்,” என்று அவர் தொடர்ந்தார், “கறுப்பு ஆடைகளை அணிந்திருந்த பெண்களின் பெயர்களைக் கேள். இந்த நால்வரில், மற்றவர்களை விட வலிமையான முதலாமவர் பெயர் தான் அவிசுவாசம். இரண்டாவது பெண்ணின் பெயர் அடங்காமை, மூன்றாவதாக காணப்பட்டவள் கீழ்ப்படியாமை, நான்காவது பெண் வஞ்சகம். மேலும் அவர்களைப் பின்தொடர்பவர்களும் உள்ளனர். அவர்கள் துக்கம், கயமை, ஆசை, கோபம், பொய், முட்டாள்தனம், புறம் பேசுதல் மற்றும் வெறுப்பு என்று பெயர்களைக் கொண்டு அழைக்கப் படுகிறார்கள். இப்படியான பெயர்களைக் கொண்ட கடவுளின் ஊழியர் உண்மையில் கடவுளின் இராச்சியத்தைக் காண்பார், ஆனால் அதில் நுழைய மாட்டார்.” “மற்றும் கற்கள், ஐயா,” என்று நான் தயங்கியபடி கேட்டேன். “அதாவது, ஆழத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு கட்டிடத்தில் பொருத்தப்பட்ட : கற்கள் பற்றி அறியவே நான் ஆவலாயிருக்கிறேன்?” என்று கூறினேன். அவர் இவ்வாறு கூறினார், “அடித்தளத்தில் இடைப்பட்ட பத்து கற்கள், அதாவது, முதல் பத்து கற்கள் குறிப்பது தலைமுறையை. இருபத்தைந்தாவது கல் நீதிமான்களைக் கொண்ட இரண்டாவது தலைமுறை. முப்பத்தைந்தாவது கல் கடவுளின் தீர்க்கதரிசிகள் மற்றும் அவருடைய ஊழியர்கள், மற்றும் நாற்பதாவது கல் தேவகுமாரனுடைய வார்த்தைகளை பிரசங்கிக்கும் அப்போஸ்தலர்களும் போதகர்களும்,” இவை தான் கற்கள் கூறும் உதாரணங்கள். “அப்படியானால், ஏன் ஐயா, அந்தக் கன்னிப் பெண்கள் இந்தக் கற்களை வாயில் வழியாகக் கொண்டுபோய் கோபுரத்தைக் கட்டுவதற்காகக் கொடுத்தார்கள்?” என்று கேட்டேன். அவர், “ஏனென்றால், இந்த ஆவிகளை முதலில் சுமந்தவர்கள் இவர்கள்தான், அவர்கள் ஒருவரையொருவர் விட்டு விலகவில்லை, மனிதர்களிடமிருந்து ஆவிகளோ அல்லது ஆவிகளிடமிருந்து மனிதர்களோ முழுமையாக விலகிவிடவில்லை. ஆனால் அவர்கள் மரிக்கும் வரை ஆவிகள் அவர்களுடன் இருந்தன. அவர்களிடம் இந்த ஆவிகள் இருந்தாலும், இல்லாவிடினும், இந்தக் கோபுரத்தைக் கட்டுவதற்கு அவைகளால் எந்தப் பயனும் விளைந்திருக்காது,” என்று கூறினார்.

93 “ஐயா, இன்னும் ஒரு விஷயத்தை தெரிந்துகொள்ள விரும்புகிறேன்,” என்றேன். “இன்னும் உனக்கு என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?” அவர் கேட்டார். “ஏன், ஐயா, அந்தக் கற்கள் வலிமையைக் கொண்டிருந்த போதிலும், அவை ஏன் ஆழத்திலிருந்து தோண்டியெடுத்து மேலே கொண்டு வந்து கட்டிடத்தில் பொருத்தப்படுகின்றன?” என நான் கேட்டேன். 2 “அது அவசியமாக இருந்தது. ஏனென்றால், அவை உயிர்வாழ்வதற்கு நிலத்தடி நீர் அவசியமாக இருந்தது. இது எடுத்துக்கூறுவது என்னவென்றால், மானிடரானோர் தங்கள் பழைய வாழ்க்கையின் இயல்பை விட்டொழித்து மீளவில்லை என்றால், அவர்கள் கடவுளின் இராச்சியத்தில் நுழைய முடியாது. ஆகையால் மரணித்தவர்களும் தேவனுடைய குமாரனுடைய முத்திரையைப் பெற்று தேவனுடைய இராச்சியத்திற்குள் பிரவேசித்தார்கள். ஏனென்றால், மனிதர்கள் கடவுளுடைய குமாரன் என்ற பெயரை பெறுவதற்கு முன்பே, அவர்கள் இறந்துவிட்டார்கள். ஆனால் ஏற்கனவே திருமுழுக்கு என்ற முத்திரை இடப்பட்டமையால், அவர்கள் தங்கள் கடந்தகால கசப்பான நிகழ்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு மனந்திரும்பியதால், நித்திய வாழ்வைப் பெறுகிறார்கள். ஆகையால் முத்திரை என்பது தண்ணீர்; அதனால் அவர்கள் இறந்தவர்கள் போல் தண்ணீருக்குள் சென்று உயிருள்ளவர்களாய் மீண்டு வருகிறார்கள். எனவே இந்த முத்திரை பற்றி அவர்களுக்கு அறியக்கிடைத்தது. எனவே அவர்கள் கடவுளுடைய இராச்சியத்தில் நுழைவதற்கு அதைப் பயன்படுத்தினர், ”என்று அவர் கூறினார். “அப்படியானால், அந்த நாற்பத்தேழு கற்களும் ஏற்கனவே முத்திரையைப் பெற்றிருக்கும் என்றால் ஏன் ஐயா, ஆழத்திலிருந்து மேலே வந்தன?” நான் கேட்டேன். “தேவனுடைய குமாரனுடைய நாமத்தைப் பிரசங்கித்த இந்த அப்போஸ்தலர்களும் போதகர்களும் தேவகுமாரனுடைய வல்லமையினாலும் விசுவாசத்தினாலும் நித்திரையில் ஆழ்ந்தபோது, அவர்களுக்கு முன்பாக நித்திரையில் ஆழ்ந்தோருக்கும் பிரசங்கித்தார்கள். அவர்களுக்கு பிரசங்க முத்திரையையும் கொடுத்தார்கள். அவர்கள் அவர்களுடன் தண்ணீரில் மூழ்கி மீண்டும் மேலே வந்தனர். ஆனால் இவர்கள் உயிருடன் தண்ணீரில் இறங்கி உயிருடனேயே வெளியே வந்தனர். அவர்களுக்கு முன் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் இறந்தவர்களாக தண்ணீரில் இறங்கினார்கள், உயிருள்ளவர்கள் தண்ணீரிலிருந்து மேலே வந்தனர். 7 ஆகையால் அவர்கள் முன்னவர்களால் உயிர்ப்பிக்கப்பட்டு, தேவ குமாரனுடைய நாமத்தை முழுமையாக அணிந்துகொண்டார்கள். இதனாலேயே அவர்களும் நாம் குறிப்பிட்ட கற்களை போன்று இவர்களுடன் வந்து கோபுர நிர்மாணத்திலே இணைந்து கொண்டனர். இதனால்தான் கற்கள் உருமாற்றம் பெறாமல், பதப்படுத்தாமல் அப்படியே இணைக்கப்பட்டன. அவர்கள் நேர்மையாகவும் மிகுந்த தூய்மையுடனும் உறங்கியதால் மட்டும் அவர்கள் இந்த முத்திரையைப் பெறவில்லை என்பது இங்கே தெளிவாகிறது. இப்போது இந்த விஷயங்கள் குறித்த உனது கேள்விக்கு விளக்கம் கிடைத்திருக்கும் என்றெண்ணுகிறேன், ”என்று அவர் கூறினார். “ஆமாம் ஐயா” என்றேன்.

பன்னிரு மலைகள் பற்றிய விளக்கம்

94 “ஐயா, அப்படியானால், மலைகளைப் பற்றி எனக்கு விளக்கவும். அவை பார்ப்பதற்கு ஏன் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருக்கின்றன? அப்படி அவை வித்தியாசமாக இருப்பதற்கு காரணம் என்ன?” என்று ஆவலுடன் கேட்டேன். அவர் பதிலாக, “உன்னிப்பாகக் கேள்,” என்று கூறத்தொடங்கினார். “இந்தப் பன்னிரண்டு மலைகளும் உலகம் முழுவதும் பரந்து வாழும் பன்னிரண்டு பழங்குடிகள் குறித்த அடையாளங்களை காட்டுகின்றன. ஆகவே, அப்போஸ்தலர்கள் அவை கடவுளுடைய குமாரன் என்று அறிவித்தார்கள்,” என்றார். உடனே நான், “ஆனால், ஐயா, மலைகள் ஏன் மிகவும் மாறுபட்டதாகவும் தோற்றத்தில் ஒன்றுக்கொன்று வித்தியாசமாகவும் உள்ளன என்பதை எனக்கு விளக்குவீர்களா?” “அது இந்த உலகம் முழுவதும் வசிக்கும் இந்த பன்னிரண்டு பழங்குடியினரும், பன்னிரண்டு தேசங்களும், சிந்தனையாலும், செயலாலும், மனதாலும் வேறுபட்டவை. எனவே, மலைகள் பலதரப்பட்டவை என்பதை நீ கவனித்தது போல, பல்வேறுபட்ட நாடுகளிடையே சிந்தனையும், செயலும், கொள்கைகளும் வித்தியாசமாய் உள்ளன. மேலும் ஒவ்வொரு தேசத்தின் செயல்பாடுகளையும் நான் உனக்கு விளக்குகிறேன்,” என்றார். “ஐயா, முதலில் இதைக் கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள், பலவகை மலைகள் இருப்பதால், அவற்றிலிருந்து கொண்டுவரப்பட்ட கற்களை கட்டிடத்தில் பொருத்தும்போது, ​​​​அவை ஆழத்திலிருந்து வரும் கற்களைப் போல பிரகாசமாகவும் அதே நிறமாகவும் மாறியது எப்படி?” என்று நான் கேட்டேன்.அதற்கு அவர், “வானத்தின் கீழ் வாழ்கிற எல்லா தேசத்தாரும் இறை வார்த்தைகளைக் கேட்டு அதை விசுவாசிக்கும் போது, ​​அவர்கள் தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படுகிறார்கள். எனவே அவர்கள் முத்திரையைப் பெற்றபோது, ​​அவர்களுக்குள்ளே ஒரே எண்ணம், ஒரே மனம், ஒரே நம்பிக்கை, ஒரே விதமான அன்பு மாத்திரமே இருந்தது. அந்தப் பெயருடன் கன்னிப் பெண்களின் ஆன்மாவையும் கொண்டிருந்தனர். இதனால்தான் கோபுரத்தின் நிர்மாணம் சூரியனைப் போல ஒரே நிறத்தில் பிரகாசமாக ஜொலித்தது. அவர்கள் ஒன்றாகப் பிரவேசித்து ஒரே சரீரமான பின்பு, அவர்களில் சிலர் தங்களைத் தாங்களே கெடுத்துக்கொண்டதும், நீதிமான்களுடைய தேசத்திலிருந்து துரத்தப்பட்டார்கள். எனவே அவர்கள் முன்பு இருந்ததை போலவே அல்லது அதைவிட மோசமான நிலைக்குத் திரும்பிவிட்டனர் என்றுதான் கூறவேண்டும்,” என்று அவர் விளக்கம் கூறினார்.

95 உடனே நான் “ஐயா, அவர்கள் கடவுளை அடையாளம் கண்டு அறிந்த பிறகும் கூட எப்படி அவர்கள் மோசமாகிவிட்டவர்களாக முடியும்?” என்று கேட்டேன். அதற்கு அவர் பதிலாக” கடவுளை அறியாதவர்களும், தீய செயல்களைச் செய்பவர்களும் தங்கள் தீய செயல்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் தண்டனையைப் பெறுவார்கள். ஆனால் கடவுளை அறிந்த பிறகு அவர்கள் இனி பாவமோ தீமையோ செய்யக்கூடாது, நன்மை செய்யவேண்டும். நன்மை செய்ய வேண்டியவர்கள் தீமை செய்வார்களானால், கடவுளை அறியாதவர்களை விட பெரிய தீமை செய்தவர்கள் ஆகிறார்கள் என்பது தெரியவில்லையா? அதனால்தான் கடவுளை அறிந்தும் தீமை செய்பவர்கள் மரணம் என்ற தண்டனைக்கு ஆளாகின்றனர். கடவுளை அறிந்து அவருடைய மகத்தான செயல்களைக் கண்டும், தீமைகளைச் செய்கிறவர்கள் இரட்டிப்புத் தண்டனையைப் பெற்று நித்திய மரணத்தைத் தண்டனையாக அடைவார்கள். எனவே, இந்த வழியில், கடவுளின் திருச்சபை பரிசுத்தப்படுத்தப்படும். கோபுரத்திலிருந்து கற்களை அகற்றி, அவற்றைத் தீய சக்திகளிடம் ஒப்படைத்து, அங்கிருந்து தூர எறியப்பட்டதை நீ பார்த்தாய் அல்லவா? அதுபோல, தூய்மையானவர்கள் ஒரே சரீரத்தை உடையவர்களாக மாறுவார்கள். கோபுரம் சுத்தப்படுத்தப்பட்ட பிறகு, அது ஒரே கல்லால் ஆனது போல, சுத்திகரிக்கப்பட்ட கடவுளுடைய திருச்சபை பிரகாசத்துடன் மிளிரும். அப்பொழுது கயவர்களும், ஏமாற்றுவித்தைக்காரர்களும், தூஷகரும், இருமனம் கொண்ட, இரட்டை எண்ணமுடையோரும், எல்லாவிதமான தீமைகளைச் செய்கிறவர்களும் கண்டனத்துக்கு உள்ளாவர். அவர்கள் கண்டனத்துக்கு உள்ளாகும்போது, தேவனுடைய பரிடுத்த திருச்சபை ஒரே உடலாகவும், ஒரே எண்ணம் கொண்டதாகவும், ஒரே மனதுடையதாகவும், ஒரே விசுவாசத்தோடு பயணிக்கக் கூடியதாகவும், ஒரே விதமாக அன்பு செலுத்தக்கூடியதாகவும் இருக்கும். அப்பொழுது தேவ குமாரன் தம்முடைய மக்கள் மீண்டும் சுத்திகரிக்கப்பட்டதால் அவர்களோடு மகிழ்ந்து சந்தோஷமாயிருப்பார்” என்று கூறினார். “ஐயா, இதெல்லாம் அருமை, மகிமையானதாகத் தான் இருக்கிறது. ஆனால் இன்னொன்று பற்றியும் தெரிந்துகொள்ள ஆவலாயிருக்கிறேன்.” ஐயா, மேலும், ஒவ்வொரு ஆன்மாவும், இறைவனை விசுவாசித்து, அவருடைய இரக்கத்தை இறைஞ்சி, அவருடைய மகத்தான, அற்புதமான, மகிமை வாய்ந்த நாமத்தை மகிமைப்படுத்துவதை வெளிப்படுத்தும் ஒவ்வொரு மலையின் ஆற்றலையும் அவற்றின் செயல்பாடுகளையும் குறித்து எனக்கு தயவுசெய்து விளங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்,” என்றேன்.” அவரோ, “மலைகளின் பன்முகத்தன்மையையும் பன்னிரு இனங்களைப் பற்றிய வேறுபாடுகளைப் பற்றி கீழே சொல்கிறேன் கேட்டு அறிந்துகொள்வாயாக,” என்றார்.

96 “கரிய நிறமுடைய முதல் மலையில் இருந்து கொண்டு வரப்பட்ட கற்களை போன்றவர்கள், அவிசுவாசிகள் எனப்படுவர். அவர்கள் விசுவாசத் துரோகிகள், நிந்தனை செய்பவர்கள் மற்றும் கடவுளின் ஊழியர்களைக் காட்டிக் கொடுப்பவர்கள். இவர்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் அவர்களுக்கு மரணம் கண்டிப்பாக உண்டு. அதனால்தான் அவர்கள் கருமை நிறத்தையுடையவர்களாக இருக்கிறார்கள். ஏனெனில் அவர்களின் பின்புலம் சட்டவிரோதமானது. வெறுமையான மலையாகிய இரண்டாம் மலையிலிருந்து கொண்டுவரப்பட்ட கற்களை ஒத்தவர்கள், இப்படிப்பட்ட விசுவாசிகள் வஞ்சகர்களும் தீய போதகர்களுமாக இருக்கிறார்கள்: அப்படியானால், அவர்கள் நீதியில் நம்பிக்கையற்ற முதலில் குறிப்பிட்ட இரகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய மலை தரிசாக இருந்ததால், அத்தகைய மனிதர்கள் விசுவாசம் இல்லாதவர்கள் என்று அறியப்படுவர். ஆனால் அவர்களிடம் சத்தியத்தின் மகத்துவம் காணப்படவில்லை. அத்தகைய பாவத்திற்காக அவர்கள் விரைவில் மனம் நொந்து மனந்திரும்பினால், அவர்களுக்கு மனந்திரும்புதல் அளிக்கப்படுகிறது; ஆனால் அவர்கள் தாமதித்தால், அவர்களின் இறப்பும் முதல் குறிப்பிட்ட குழுவினரைப் போலவே இருக்கும்,” என்றார். “ஏன் ஐயா, இவர்களுக்கு மட்டும் மனந்திரும்புதல் இருக்கிறது, முதல் குழுவிற்கு ஏன் இல்லை? ஏனெனில் அவர்களின் செயல்கள் யாவும் இவர்களுடன் ஒத்தவையாக தானே இருக்கின்றன” என்று நான் கேள்வி எழுப்பினேன். அவர், “இதன் காரணமாகத்தான் அவர்களுக்கு மனந்திரும்புதலுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அவர்கள் தங்கள் எஜமானரை அவமதிக்கவில்லை, கடவுளின் ஊழியர்களுக்கு துரோகம் செய்யவில்லை, ஆனால் அவர்கள் இலாபம் தேடும் நோக்கில் வஞ்சகமாக நடந்துகொண்டார்கள், மேலும் மனிதர்களின் இச்சைகள் காரணமாக, பாவத்தின் பிடியில் இருந்து மீளமுடியாவண்ணம் தவிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு தண்டனை உண்டு என்றபோதிலும், அவர்கள் மனந்திரும்பக் கூடியவர்களாக இருக்கிறார்கள். காரணம் என்னவென்றால், அவர்கள் தேவ நிந்தனையாளர்களோ அல்லது துரோகிகளோ இல்லை,” என்று விளக்கமளித்தார்.

97 காடு மற்றும் முட்களும் முட்புதர்களும் கொண்ட மூன்றாவது மலையிலிருந்து வருபவர்கள் பின்வரும் குணவியல்புகளைக் கொண்ட விசுவாசிகள்: அவர்களில் சிலர் செல்வந்தர்கள், சிலர் பல வணிக விவகாரங்களில் ஈடுபட்டுள்ளனர். முட்புதர் போன்றவர்கள் செல்வந்தர்கள் மற்றும் பல்வேறு வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள். எனவே, பொருள்தேடும் வணிக விவகாரங்களில் ஈடுபட்டிருக்கும் இவர்கள், தேவ ஊழியர்களுடன் உறவாடுவதில்லை. ஆனால் அவர்கள் தங்கள் வணிக விவகாரங்களில் சிக்கி, வழிதவறிச் செல்கிறார்கள். இதற்கிடையில், செல்வந்தர்கள் கடவுளுடைய ஊழியர்களுடன் விருப்பமின்றியே பழகுகிறார்கள். ஏனென்றால், கடவுளுடைய ஊழியர்கள் தங்களிடம் ஏதாவது கேட்பார்களோ என்ற அச்சம் தான் காரணம். எனவே, அத்தகைய மக்கள் கடவுளின் இராச்சியத்திற்குள் கடும் சிரமத்துடன் தான் நுழைகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தேவனுடைய இராச்சியத்திற்குள் பிரவேசிப்பது கடினமாக இருக்கிறது, அப்படிப்பட்டவர்கள் பாதணிகள் இல்லாமல் முட்செடிகள் மீதும் முட்புதர்கள் மேல் நடப்பது போலவும் கடினமான நிலைக்கு ஆளாகிறார்கள். ஆனால் இவை அனைத்தையும் விட்டுவிட்டு இவர்கள் மனந்திரும்பக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. ஆனால் அது உடனடியாகவே செய்யப்பட வேண்டும். ஆகவே அவர்கள் இப்போது நற்கிரியைகளில் ஈடுபட வேண்டும், ஏனென்றால் அவர்கள் கடந்த காலத்தில் அப்படியான நற்கிரியைகளைச் செய்யத் தவறிவிட்டனர். எனவே, அவர்கள் மனந்திரும்பி நல்வழி நடந்தால், அவர்கள் கடவுளுக்கு உகந்தபடி வாழ்வார்கள். அதேநேரம், அவர்கள் தங்கள் செயல்களில் விடாப்பிடியாக இருப்பார்களானால், அவர்கள் அந்த கருமையான தோற்றமுடைய பெண்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள், அவர்கள் அவர்களை மரணத்திற்கு அழைத்துச் செல்வார்கள்.

98 “நான்காவது குன்றிலிருந்து கொண்டுவரப்பட்ட விசுவாசிகள், பல பயிர்கள் விளையக்கூடிய மலைச்சரிவில் பசுமையாக இருந்தவர்களைப் போன்றவர்கள். ஆனால் அவர்களது வேர்கள் காய்ந்துபோயின, சில வெயிலில் உலர்ந்தவை போலாகின. அப்படியான இயல்பினைக் கொண்டவர்கள் இருமனம் படைத்தவர்கள். இறைவனை உதட்டில் வைத்திருந்தாலும் உள்ளத்தில் வைத்திராதவர்களும் உண்டு. அதனால்தான் அஸ்திவாரங்கள் வலுவிழந்து போய் சக்தியின்றி காணப்படுவர். அவர்களின் பேச்சுகள் மட்டுமே வாழ்கின்றன, செயல்கள் இறந்துவிட்டன. அப்படிப்பட்டவர்கள் உயிருடனும் இல்லாது, இறந்தவர்களாகவும் இல்லாது வெறும் நடைப்பிணங்களாக வாழ்வர். அதனால் தான் அவர்கள் இரட்டை எண்ணம் கொண்டவர்கள் எனப்படுகின்றனர். ஏனென்றால் இரட்டை எண்ணம் கொண்டவர்கள் பசுமையான குணம் கொண்டவர்கள் அல்ல. வாடிப்போனவர்களும் அல்ல. ஏனென்றால் அவர்கள் உயிரோடும் இல்லாமலும், மரித்தவர்களாகவும் இல்லாமல் இருப்பவர்கள். இவ்வாறான செடிகள் சூரியனைக் கண்டு வாடுவது போல, இருமனம் கொண்டவர்கள், துன்பத்தைக் கேள்விப்படும்போதெல்லாம், தங்கள் கோழைத்தன மிகுதியால் சிலைகளை வணங்குகிறார்கள். தங்கள் கர்த்தருடைய நாமத்தை நினைத்து வெட்கப்படுகிறார்கள். ஆகையால் அப்படிப் பட்டவர்கள் உயிரோடிருக்கிறவர்களோ, இறந்தவர்களோ அல்ல. ஆனால், இவர்களும் சீக்கிரம் மனந்திரும்பினால் தங்கள் வாழ்வை வாழலாம். அதேநேரம் மனந்திரும்பவில்லை என்றால், இவர்களும் ஏற்கனவே தங்கள் உயிரைப் பறிக்கும் பெண்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளனர் என்றே கருதப்படுவர்.

99 “ஐந்தாவது மலையிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள், பச்சைப் புற்கள் செறிந்து வளர்ந்த கரடுமுரடான இடத்திலிருந்து வருபவர்கள். அத்தகைய விசுவாசிகள் உண்மையுள்ளவர்கள், ஆனால் ஆணவம், தலைக்கனம் போன்ற காரணங்களால், கற்றுக்கொள்வதில் அசமந்தப் போக்கைக் கடைபிடிப்பவர்கள். அவர்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள விரும்பினாலும் எதையும் கற்றுக்கொள்வதில்லை. அவர்களுடைய இந்த ஆணவத்தினிமித்தம் அறிவுடைமை அவர்களை விட்டுப் போய்விட்டது; ஆனால் அவர்கள் ஞானம் உள்ளவர்கள் என்று தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்கிறார்கள் மற்றும் தாங்கள் அறிவிழிகளாக இருந்த போதிலும், தானாக முன்வந்து வேதாந்திகளாக மாற விரும்புகிறார்கள். ஆகவே, தற்பெருமை மற்றும் அதீத நம்பிக்கை ஒரு சக்தி வாய்ந்த அரக்கன் போன்றவை என்பதால், பலர் தங்களை உயர்த்திக்கொள்ள முயலும் பெருமையால் அழிந்து போயிருக்கிறார்கள். அதனால் அவர்களில் பலர் நிராகரிக்கப்பட்டனர். ஆனால் சிலர் தங்களுடைய அறியாமையை உணர்ந்து மனந்திரும்பி, விசுவாசித்து, விவேகமுள்ளவர்களுக்கு அடிபணிந்தார்கள். இந்த மக்களில் எஞ்சியவர்கள் மனந்திரும்புவதற்கு உடன்படக் கூடியவர்கள். ஏனென்றால் அவர்கள் கெட்டவர்கள் அல்ல. அறியாத் தன்மையால் பாதிக்கப்பட்டோர் அத்தோடு சிறிதளவான புரிதலைக் கொண்டிராதவர்கள். எனவே அவர்கள் மனந்திரும்பினால், கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழ்வார்கள். அப்படி அவர்கள் மனந்திரும்பா விட்டால், தீங்கு விளைவிக்கும் பெண்களுடன் தான் அவர்கள் அவர்களது எஞ்சிய காலத்தைக் கழிக்க வேண்டியிருக்கும்.

100 “ஆறாவது குன்றிலிருந்து வந்த விசுவாசிகள், பெரிய மற்றும் சிறிய பள்ளத்தாக்குகளில் இருந்து வந்தவர்களாகவும், அதே போல் பள்ளத்தாக்குகளில் காணப்படும் உலர்ந்த செடிகளையும் போன்றவர்கள். சிறிய பள்ளத்தாக்குகளில் இருந்து வந்தவர்கள், ஒருவருக்கொருவர் விரோதமான குணாதிசயங்களைக் கொண்டவர்கள் என்பதாலும், அவர்களுடைய அயோக்கியத் தனமான செயல்களாலும் வாடிப்போன செடிகளைப்போல, வலுவிழந்த விசுவாசத்தை உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் பலர் மனம் பாவங்களையிட்டு மனம் வருந்தியுள்ளனர். மீதமுள்ளவர்கள் என் அறிவுரைகளைக் கேட்டு மனந்திரும்பியுள்ளார்கள். அவர்களால் ஏற்படக்கூடிய நிந்தனைகள் ஒப்பீட்டளவில் சிறியதாக இருப்பதால், அவர்கள் விரைவில் மனந்திரும்புவார்கள். ஆனால் பெரிய பள்ளத்தாக்கிலிருந்து வந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் கோபம், பழி மற்றும் வெறுப்புணர்வை உடையவர்கள். தொடர்ந்து தீயவைகளைப் பற்றியே பேசுபவர்கள். எனவே அவர்கள் கோபுரத்திற்கு வெளியே தூக்கி எறியப்பட்டனர், மேலும் அதன் கட்டுமானத்திற்காக உபயோகிக்கும் தகுதியை இழந்தவர்களாக கணிக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு வாழ்க்கை என்பது கடினமான காரியமாக இருக்கும். நம்முடைய தேவனும் கர்த்தரும் சகல வல்லவரும் நித்தியருமான நம் இறைவன், தம்முடைய எல்லாப் படைப்புகளையும் ஆளுகிறவராக இருப்பதால், தங்கள் பாவங்களை அறிக்கையிடுகிறவர்கள் மீது கோபம் கொள்ளாது, அவர்கள்மேல் இரக்கமாய் இருக்கிறபடியால், ஒரு மனிதனை, அதுவும் ஒரு பெரும் பாவியாக இருக்கிற மனிதனையும் கூட அவர் அழித்துவிட நினைக்காத அல்லது இரட்சணியத்தை அடையக்கூடிய மனிதருடன் எவ்வாறு கோபப்படுவார்? ஆகவே மனந்திரும்புதலின் தூதனாகிய நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்தக் கருத்தை கொண்டிருப்பவரானால், அதை ஒதுக்கி வைத்துவிட்டு மனந்திரும்ப வேண்டும். சாத்தானின் தீய சக்திகளைக் கைவிட்டு உங்களை நீங்களே சுத்திகரிக்க உறுதியுடன் இருந்தால், கர்த்தர் உங்கள் முந்தைய பாவங்களை குணப்படுத்துவார். ஆனால் நீங்கள் அவ்வாறு செய்யா விட்டால், உங்களுக்கு மரணத்தை ஏற்படுத்தக்கூடியவனிடமே ஒப்படைக்கப்படுவீர்கள். அப்படியும் அவர்கள் மனந்திரும்பாவிட்டால், அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் பெண்களுடன் அவர்கள் குடியிருக்க வேண்டிவரும்,” என்று விளக்கினார்.

101 “ஏழாவது குன்றான, பசுமையான குன்றின் இருந்து வந்தவர்கள், அதன் பசுமையான வயல்களில் பூத்து, குன்று முழுவதும் செழித்து, அந்த மலையில் காணப்படும் தாவரங்களை உண்டு வாழும் அனைத்து வகையான கால்நடைகளும், வான் பறவைகளும், அவைகளை போஷித்து வளர்க்கும் வளமான தாவரங்களையும் போன்றவர்கள் தான் அத்தகைய விசுவாசிகள். அவர்கள் எப்பொழுதும் நேர்மை மிக்க, குற்றமற்றவர்களாகவும், ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவும், ஒருவருக்கொருவர் விரோத மனப்பான்மை எதுவும் இல்லாதவர்களாகவும், கடவுளுடைய ஊழியர்களின் செய்கைகளைக் கண்டு எப்போதும் மகிழ்ச்சியடைவவர்களாகவும், இந்தக் கன்னியர்களால் அணிவிக்கப்படும் பரிசுத்த ஆவியின் ஆடைகளை அணிந்தவர்களாகவும், எப்போதும் அனைவர் மீதும் இரக்கம், கருணை உள்ளவர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் உழைப்பின் மூலம், சோர்வு இல்லாமல், தயக்கமின்றி, மற்ற அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்பவர்கள். ஆதலால் ஆண்டவர் அவர்களுடைய நேர்மையையும் வெகுளியான மனப்பாண்மையைக் கண்டு, அவர்களுடைய கைகளினால் மேற்கொள்ளும் உழைப்பின் மூலம் அவர்கள் வாழ்வைச் செழிக்கச் செய்கிறார். அவர்கள் செய்த அனைத்து கிரியைகளிலும் அவர்களுக்கு தயவு காட்டினார். மனந்திரும்புதலின் தூதனாகிய நான், அத்தகையவர்கள் யார் என்பதை அறிவிப்பேன். இந்த வழியில் தொடர்ந்து செயல்படுங்கள், உங்கள் சந்ததியினர் ஒருபோதும் அழிவை எதிர்கொள்ள மாட்டார்கள். கர்த்தர் உங்களை நன்றாக சோதித்து, எங்கள் எண்ணிக்கையில் சேர்த்துக் கொண்டார். நீங்கள் அவருடைய கிருபையில் பங்கு பற்றியதால், உங்கள் சந்ததியினர் தேவ சுதனின் மகிமையைப் பெற்று வாழ்வார்கள்.

102 எட்டாவது குன்றிலிருந்து கொண்டுவரப்பட்ட விசுவாசிகள் பற்றி பாத்தோமானால்,”பல நீரூற்றுகள் இருந்த போதிலும், கடவுளின் படைப்புக்களான அனைத்து நீரூற்றுகளிலிருந்து, அனைவரது தாகத்தைத் தீர்த்து வைக்கக்கூடிய தாராள மனப்பான்மை உடையவர்கள் தான் இந்த எட்டாவது குன்றில் இருந்து கொண்டு வரப்பட்ட கற்கள் போன்ற விசுவாசிகள். உலகம் முழுவதும் பிரசங்கித்து, கர்த்தருடைய வார்த்தையைக் கண்ணியமாகவும் தூய்மையாகவும் போதித்த அப்போஸ்தலர்களும் ஆசிரியர்களும், மேலும் அவர்கள் தங்கள் தீய ஆசைக்காக எதையும் தவறாகப் பயன்படுத்தாமல், பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டதை போலவே எப்போதும் நீதியிலும் சத்தியத்திலும் நடப்பவர்கள். எனவே அத்தகையவர்கள் வானகத் தூதுவர்களுடன் மோட்சானந்தத்தை அடையக் கூடியவர்கள்.”

103 “மனிதர்களை அழிக்கும் பாம்புகள், ஊர்ந்து திரியும் உயிரினங்கள், மற்றும் காட்டு மிருகங்கள் வாசம் செய்யும் பாழடைந்த ஒன்பதாம் குன்றிலிருந்து கொண்டு வரப்பட்ட கற்கள் போன்றவர்கள் தான் இந்த விசுவாசிகள். விசேட அடையாளங்களுடன் காணப்படும் இவர்கள், தமது மோசமான செயல்களினூடாக விதவைகள் மற்றும் அனாதைகளின் வாழ்வாதாரத்தை அழித்தவர்களாகக் காணப்படுகின்றனர். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தெய்வீக ஊழியத்தால் சுயநலத்துடன் பயனடைந்தவர்கள். எனவே, அவர்கள் அதே தீய ஆசையில் தொடர்ந்து நீடித்தால், அவர்கள் மரணித்துவிட்டவர்களாகவே கருதப்படுவர். வாழ்வின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள். ஆனால் அவர்கள் இல்லாத தீய செயல்களையும் கைவிட்டு, மீண்டும் திரும்பி வந்து தங்கள் சேவையை தூய்மையுடன் செய்வார்களானால், அவர்கள் இழந்த வாழ்வை மீண்டும் பெற முடியும். அப்படியில்லாமல், கடும் போக்குடைய தங்கள் இயல்புகளால், இறைவனை நிராகரித்து, அவரிடம் திரும்பாமல், அழிந்து, வெறுமையாக மாறியவர்கள். அவர்கள் தனித்து இருப்பதால், கடவுளின் ஊழியர்களுடன் உறவுகளைப் பேணாமல், தங்கள் ஆன்மாக்களை தாங்களாகவே அழித்துக் கொள்கிறார்கள். வேலியில் படரவிடப்பப்பட்ட திராட்சைக் கொடியை முறையாகக் கத்தரித்து, பேணாமல் விட்டால், அது களைகளால் பின்னப்பட்டு, அழிந்து, கடைசியில் களைகளோடு களைகளாய் அதன் உரிமையாளருக்கு இனிப் பயன்படாததுபோல, அத்தகைய மனிதர்கள் தங்களைக் குறித்து அவநம்பிக்கையடைந்து, தங்களுடைய எஜமானர்களுக்கு எவ்வித பயனும் கொடாதவர்களாகி விடுகிறார்கள். அவர்கள் மனந்திரும்புதலை நிராகரிக்காமல் இருக்கும் பட்சத்தில், அவர்கள் மனந்திரும்பக் கூடும். ஆனால் ஒருவன் மனதால் வருந்த மறுத்துவிட்டதாகக் கண்டறியப்பட்டால், அந்த மனிதன் தனது வாழ்வை மீண்டும் அடைய முடியுமா என்பது சந்தேகமே. மனந்திரும்ப மறுக்கிறவன் மனந்திரும்ப வேண்டும் என்ற காரணத்துக்காக நான் இவைகளை சொல்லவில்லை. ஏனென்றால் இனிமேல், கர்த்தரை நிராகரிக்கிற எவரும் இரட்சணியத்தை அடைய முடியாது. ஆனால் ஏற்கனவே அவரை நிராகரித்தவர்கள் மனந்திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகம். இருப்பினும், யாரேனும் மனந்திரும்ப உறுதிபூண்டிருந்தால், கோபுரம் கட்டி முடிக்கப்படுவதற்குள் அவர்கள் அதை விரைவாகச் செய்ய வேண்டும். அல்லது பெண்களால் தண்டனைக்குள்ளாக்கப்பட்டு அழிந்துவிடுவார்கள். சிறு சிறு துண்டுக் கற்களாய்க் கொண்டுவரப்பட்டவர்கள் துரோகம் இழைக்கக்கூடியவர்கள். இந்த மலையில் நீங்கள் பார்த்த பாம்புகள் போன்றவர்கள் தான் இவர்கள். ஏனென்றால், பாம்புகள் மனிதனைத் தங்கள் விஷத்தால் கொல்வது போல, அத்தகையவர்களின் வார்த்தைகள் ஒரு மனிதனை விஷமாக மாறி கொல்லும். ஆதலால், இவர்கள் ஒருவரையொருவர் ஒத்திருப்பதால் விசுவாசம் இல்லாதவர்கள், ஆனால் அவர்களில் சிலர் மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டார்கள். ஆகவே இது போன்ற மற்றவர்களும் பாவங்களை விட்டு மனந்திரும்பினால், இப்படியான நாசகார வாழ்விலிருந்து விடுதலை பெறலாம். ஆனால் அவர்கள் மனந்திரும்பவில்லை என்றால், அவர்கள் தண்டனை கொடுக்கக்கூடிய பெண்களின் கைகளில் சிக்கி இறந்துவிடுவார்கள்.

104 “பத்தாவது குன்றிலிருந்து கொண்டுவரப்பட்ட கற்களைப் போன்றவர்கள்; அதாவது சில ஆடு, மாடுகளுக்கு அடைக்கலம் கொடுத்த மரங்களால் சூழப்பட்ட மலையிலிருந்து கொண்டுவரப்பட்ட கற்களைப் போன்ற விசுவாசிகள் எப்படிப்பட்டவர்கள் என்றால், பாசாங்குத்தனம் இல்லாமல் விருந்தோம்பலில் ஈடுபாடுடைய மக்கள், ஊழியர்களை எப்போதும் மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரிக்கிறார்கள். அவர்களின் இல்லங்களில் ஆயர்கள் எப்போதும் தேவைப்படுபவர்களுக்கு தங்குமிடம் வழங்கினர். மேலும், அவர்கள் தங்கள் தெய்வீக சேவையின் மூலம் விதவைகளுக்கு அடைக்கலம் அளித்தனர். எப்போதும் தூய்மையுடன் செயல்பட்டனர். ஆதலால் இவை அனைத்தும் ஆண்டவரால் என்றென்றும் பாதுகாக்கப்படும். இவற்றைச் செய்கிறவர்கள் தேவனுடைய பார்வையில் மகிமையுள்ளவர்கள். அவர்கள் இறுதிவரை இறைவனைப் பணிந்தால், அவர்களுக்கான புகலிடம் ஏற்கனவே தேவதூதர்களால் தயார்படுத்தப்பட்டுள்ளது.

105 “பதினோராவது குன்றிலிருந்து, அதாவது பல கனிதரும் மரங்கள் நிறைந்த குன்றிலிருந்து கொண்டு வரப்பட்ட கற்கள் போன்ற விசுவாசிகள், கடவுளின் சுதனாகிய கர்த்தரின் திருநாமத்தைப் போற்றுமுகமாகத் துன்பப்பட்டவர்கள். முழு மனதுடன் மனமுவந்து துன்பங்களை ஏற்றுக்கொண்டு அனுபவித்தவர்கள்,” என்றுமெய்ப்பேன் கூறியபோது, நான் அவரை நோக்கி, “ஐயா, எல்லா மரங்களும் கனிகளைத் தருகின்றன. ஆனால் சில மரங்களில் இருந்து கிடைக்கும் கனிகள் ஏன் மற்றவற்றை விட அழகாக இருக்கின்றன?” என்று கேட்டேன். “கேள் சொல்கிறேன் என்று அவர் பின்வரும் விளக்கத்தை அளித்தார். “அவரது கிருபை நிறைந்த திருநாமத்தின் பெயரால் இதுவரை பாடுகளை அனுபவித்த அனைவரும் கடவுளின் பார்வையில் மகிமை வாய்ந்தவர்கள், அவர்கள் கடவுளின் மகனின் பெயரால் துன்பப்பட்டதால், அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. ஆனால் சில மரங்களின் பழங்கள் ஏன் வித்தியாசமாக இருக்கின்றன, அவை ஏன் சிலவற்றை விட உயர்ந்தவைகளாகக் காணப்படுகின்றன என்ற னது கேள்விக்கு நான் விளக்கமளிக்கிறேன், நன்றாகக் கேள்,” என்று தொடர்ந்தார். “அதிகாரிகளுக்கு முன்பாகக் கொண்டுவரப்பட்டு, சித்திரவதை செய்து விசாரிக்கப்பட்ட போது, ​​அவரை மறுதலிக்காமல் மனமுவந்து துன்பங்களையும், பாடுகளையும் ஏற்றுக்கொண்டோர் கர்த்தரின் பார்வையில் மகிமையுள்ளவர்கள். உயர்ந்த மதிப்புள்ள பழங்கள் அவர்களுடையது. ஆனால், கூச்ச சுபாவமும் தயக்கமும் கொண்ட பலர், மறுதலிப்பதா அல்லது ஏற்றுக்கொள்வதா என்று தங்கள் மனங்களில் தர்க்கம் செய்கிறார்கள். இவ்வாறு இருமனம் கொண்ட நோக்கத்தோடு இருப்போருக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் குறைவாகவே இருக்கும். ஏனெனில் இந்த எண்ணம் அவர்களின் உள்ளத்தில் எழுந்தது. இந்த எண்ணம் ஒரு சேவகன் தன் எஜமானை மறுதலிப்பது போன்ற ஒரு தீய எண்ணத்தையே இங்கு காட்டுகிறது. ஆகவே, இவ்வாறான கருத்துக்களைச் சொல்பவர்களே, இந்தத் தீயே எண்ணம் உங்கள் இதயங்களில் குடியிருக்காமல் இருக்கவேண்டும் என்றும், கடவுளின் பொருட்டு நீங்கள் உங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்யவேண்டி வரும் என்பதையிட்டும் எச்சரிக்கையாக இருங்கள். ஆனால் அவரது பெயரால் துன்பப்படுகிற நீங்கள் கடவுளை மகிமைப்படுத்த வேண்டும். ஏனென்றால், இந்தப் பெயரைத் தாங்குவதற்கும், உங்கள் எல்லா பாவங்களிலிருந்தும் மீட்கப் படுவதற்கும் நீங்கள் தகுதியானவர் என்று தேவன் கருதினார். ஆகையால், உங்களைப் பாக்கியவான்கள் என்று எண்ணிக் கொள்ளுங்கள்; உண்மையில், உங்களில் எவரேனும் கடவுளுக்காக துன்பப்பட்டால், நீங்கள் ஒரு பெரிய தியாகத்தையோ, புனிதமான கடமையையோ செய்தீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களுக்கு வாழ்வைக் கொடுக்கிறார், ஆனால் நீங்கள் அதை புரிந்து கொள்ளவில்லை, ஏனென்றால் உங்கள் பாவங்கள் உங்களைத் தனிமைப்படுத்தியது. கர்த்தருடைய திருநாமத்தினிமித்தம் நீங்கள் பாடுபடாமல் இருந்திருந்தால், உங்கள் பாவங்களினிமித்தம் நீங்கள் தேவனால் எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பீர்கள். பாவத்தில் இருந்து விடுதலை பெற்று மனந்திரும்பவோ அல்லது தவறுகளை ஏற்றுக் கொள்ளவோ தயங்குவோரே, உங்களை நோக்கியே இவற்றைச் சொல்கிறேன். எஜமானரை மறுதலிப்பதனால் நீங்கள் சிறையில் தள்ளப்படாமல் காக்க, கர்த்தர் உங்களோடு இருக்கிறார். ஆகவே பாவங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். எஜமானனை நிராகரித்ததற்காக வெளியாட்கள் தங்கள் அடிமைகளைத் தண்டிப்பார்களானால், அனைத்தையும் ஆளும் ஆண்டவர் உங்களுக்கு என்ன செய்வார் என்று நினைக்கிறீர்கள்? ஆகவே நீங்கள் என்றென்றும் கடவுளுக்குள் வாழ்வதற்கு, இந்த இவ்வாறான தீய எண்ணங்களை உங்கள் இதயங்களிலிருந்து அகற்றிவிடுங்கள்,” என்று விளக்கமளித்தார்.

106 “பன்னிரண்டாவது குன்றில், அதாவது வெள்ளை மலை என்று பெயரிடப்பட்ட குன்றில் இருந்து கொண்டுவரப்பட்ட கற்களைப் போன்ற விசுவாசிகள், உண்மையில் குழந்தைகளைப் போன்றவர்கள். எந்தத் தீமையும் அவர்களுடைய உள்ளத்தில் நுழைவதில்லை. தீமை என்றால் என்னவென்று கூட அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் ஒரு குழந்தையைப் போல அப்பாவிகள், இந்தப் பாவமும் அறியாதவர்கள். எனவே, அத்தகைய மக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கடவுளுடைய இராச்சியத்தில் நுழையும் பேறுபெற்றவர்கள். ஏனென்றால், அவர்கள் கடவுளின் கட்டளைகளை எந்த வகையிலும் மீறாமல், தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரே மனநிலையுடன் குழந்தைகளைப் போல நிர்மலமான மனதுடன் வாழ்ந்தவர்கள். ஆகையால், இந்த இயல்பை அவர்கள் இடைவிடாமல் கடைப்பிடிக்கிறவர்கள். அக்கிரமத்திலிருந்து விடுபட்ட குழந்தைகளைப் போன்றவர்கள். அவர்கள் மேற்கூறிய அனைத்தையும் விட மகிமை வாய்ந்தவர்கள். ஏனென்றால் எல்லாக் குழந்தைகளும் கடவுளுக்கு முன்பாக மகிமையுள்ளவர்கள், மேலும் அவர் திருமுன் முதன்மையானவர்கள். ஆதலால், உங்களைவிட்டு தீமையை விலக்கி, குற்றமற்ற நிர்மலமான தன்மையை அணிந்து கொண்ட நீங்கள் பாக்கியவான்கள். “நீங்கள் முதலில் கடவுளுக்காக வாழ்கிறீர்கள்” என்று அவர் கூறினார். 4 அவர் மலைகளைப் பற்றிய உவமைகளைச் சொல்லி முடித்ததும், நான் அவரிடம், “ஐயா, சமவெளியிலிருந்து எடுத்து கட்டிடத்தில் போடப்பட்ட கற்களை, அதாவது கோபுரத்திலிருந்து அகற்றப்பட்டு மீண்டும் உபயோகிக்கப்பட்ட கற்களைப் பற்றி எனக்கு சற்று விளக்குவீர்களா? அத்தோடு மற்றும் கட்டிடத்தில் பொருத்தப்பட்ட வட்டவடிவமான மற்றும் உருளை வடிவமான கற்கள் பற்றியும் அறிந்துகொள்ள ஆவலாயிருக்கிறேன்,” என்றேன்.

வட்ட வடிவமான கற்கள் பற்றிய விளக்கம்

107 “இவைகளையெல்லாம் பற்றி நீ அறிந்துகொள்ள வேண்டுமானால், நான் சொல்வதை நன்றாகக் கேள்,” என்று கூறத்தொடங்கினார். இந்த வெள்ளை மலையின் அடிவாரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கற்களை அகற்றி, சமவெளியில் இருந்து கொண்டு வரப்பட்டு, அந்த கோபுரத்தின் அமைப்பில் பொருத்தப்பட்ட கற்கள் பற்றி சொல்கிறேன், கேள்,” என்று கூறத்தொடங்கினார். வெள்ளை மலையிலிருந்து கொண்டுவரப்பட்ட கற்களைப் போன்ற விசுவாசிகள் அனைவரும் குற்றமற்றவர்கள் என்று கண்டறியப்பட்டது போல, கோபுரத்தின் உரிமையாளர், கோபுர நிர்மாணத்தில் இந்த மலையின் அடிவாரத்தில் இருந்து பெறப்பட்ட கற்களைப் பதிக்க உத்தரவிட்டார். இந்தக் கற்கள் கோபுரத்தின் அமைப்பில் இணைக்கப்பட்டால், அவை பிரகாசமாக இருக்கும் என்றும், அவற்றில் எதுவும் கருமை நிறமாக இராது என்றும் அவர் அறிந்திருந்ததால், அவர் அவ்வாறு கட்டளை பிறப்பித்திருந்தார். ஆனால் மற்ற மலைகளில் இருந்து எடுக்கப்பட்ட கற்களை அவர் கட்டிடத்தில் இணைத்திருந்தால், அவர் மீண்டும் மீண்டும் கோபுரத்திற்குச் சென்று சுத்தம் செய்ய வேண்டியிருக்கும். அதுபோலத்தான், விசுவாசிகளும், விசுவாசம் கொண்டோரும் வெள்ளை குன்றின் கற்களாகக் காணப்படுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் அனைவரும் ஒரே விதமானவர்கள். அத்தகையவர்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள். ஏனென்றால் அவர்கள் அப்பாவிகள். வட்டமான மற்றும் பிரகாசமான கற்களைப் பற்றி இப்போது சொல்கிறேன் கேள். இவை அனைத்தும் அந்த வெள்ளை மலையில் இருந்து எடுக்கப்பட்டவை. இப்போது அவை ஏன் வட்டமாக இருந்தன என்று சொல்கிறேன், அதையும் கேள். அவர்களுடைய செல்வச் செழிப்பு சத்தியத்தை விட்டு அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக விலக்கி தூரத்தில் கொண்டு செல்ல முயன்றது. ஆனால் அவர்கள் ஒருபோதும் கடவுளை விட்டு விலக வில்லை, அவர்கள் வாயிலிருந்து எந்த கெட்ட வார்த்தையும் வரவில்லை. அவர்களுடைய சொல், செயல், எண்ணங்கள் போன்ற எல்லாவற்றிலும் நீதியும் உண்மையான தர்மமும் மட்டுமே இருந்தது. ஆகையால், அவர்களுடைய மனம் சத்தியத்தின்பால் இரக்கத்துடனும், நன்மைதரும் விதத்திலும் இருக்க முடியும் என்பதை ஆண்டவர் உணர்ந்தபோது, ​​அவர்களுடைய செல்வத்தை ஓரளவு அவர்களிடம் இருந்து அகற்றிவிடும்படி கட்டளையிட்டார். ஆனால் அதை முழுவதுமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் கட்டளையிட்டார். அப்போது தான் அவர்கள் தங்களிடம் எஞ்சியிருப்பதைக் கொண்டு சில நன்மைகளைச் செய்து, கடவுளுக்கு பிரமாணிக்கமாக வாழ்வார்கள். ஏனென்றால் அவர்கள் நல்ல மனிதர்கள். ஆகவே, அவர்களுக்கு உதாரணங்களாகக் காட்டப்பட்ட கற்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி, உருவமைக்கப்பட்டு இந்த கோபுரத்தின் அமைப்பில் பொருத்தப்பட்டன.

108 “இருப்பினும், ஒப்புதல் முத்திரை இன்னும் கிடைக்காததால், இன்னும் உருளைவடிவமாகக் காணப்பட்ட கற்கள், அவை மிகவும் வட்டமாக இருந்ததால், அவற்றைக் கொண்டுவந்த இடத்துக்கே மீண்டும் கொண்டு செல்லப்பட்டன. இந்த உதாரணம் கூறுவது என்னவென்று பார்த்தோமானால், இந்த உலகமும் அவர்களுடைய உடைமைகள் மீதுள்ள மோகங்களும், வெறும் மாயைகளும் அவர்களைவிட்டு விலக்கப்பட வேண்டும். அப்போது அவர்கள் கடவுளுடைய இராச்சியத்தை அடையத் தகுதியானவர்களாக இருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் தேவனுடைய இராச்சியத்துக்குள் பிரவேசிப்பது அவசியம். ஏனெனில் ஆண்டவர் இவர்கள் போன்ற குற்றமற்ற வகையினரை ஆசீர்வதித்துள்ளார். எனவே, இந்த வகையானவர்கள் அழிந்து போக இடமளிக்கப்பட மாட்டார்கள். உண்மையில், அவர்களில் ஒருவரேனும் கொடிய சாத்தானால் சோதிக்கப்பட்டாலும், சில தவறுகளைச் செய்தாலும், அந்த மனிதர் விரைவில் இறைவனை சரணடைவார். உண்மையில், மனந்திரும்புதலின் தூதனாகிய நான், குழந்தைகள் போன்ற குற்றமற்றவர்கள் அனைவரும் பாக்கியவான்கள் என்றே அறிவிக்கிறேன். ஏனென்றால், அப்படிப்பட்டவர்களின் பங்கு கடவுளின் பார்வையில் சிறந்ததும் மதிப்புக்குரியதுமாக இருக்கிறது. ஆகையால், இந்த ஒப்புதல் முத்திரையைப் பெற்ற உங்கள் அனைவருக்கும் நான் சொல்கிறேன்: உங்கள் உத்தம கிரியைகளைத் தொடருங்கள், எவரையும் புண்படுத்தாதீர்கள், உங்களுக்கு தொந்தரவு கொடுக்கும் தீயனவற்றையும் கசப்பையும் நினைத்துக் கொண்டிருக்காதீர்கள். ஒரே மன உறுதியுடன் இந்தத் தீய பிரிவினைகளைக் கண்டறிந்து அவற்றை உங்களிடமிருந்து அகற்றுங்கள். அவ்வாறு செய்வதன் மூலம், மந்தையின் மேய்ப்பராகிய எம் ஆண்டவர் மகிழ்ச்சி அடைவார். ஏனென்றால், எல்லாரும் பாதுகாப்பாக இருந்தால், அவர்களில் ஒருவரும் காணாமல் போகாமல் இருந்தால் அவர் மகிழ்ச்சியடைவார். ஆனால், அவற்றில் ஒன்று காணாமல் போயிருந்தால் கூட மேய்ப்பன் அதனையிட்டு துக்கம் அடைவான். ஆடுகள் தொலைந்துவிட்டன என்று மந்தையின் உரிமையாளரிடம் அவன் எவ்வாறு முறையிடுவான்? அப்படியே சொன்னாலும், அவனை நம்புவார்களா? இல்லை, நம்ப மாட்டார்கள். ஏனென்றால், மேய்ப்பன் ஆடுகளால் காயம் அடைந்தான் என்பது நம்பமுடியாதது. மாறாக, அப்படியான அவர்களின் பொய்களுக்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். நானும் ஒரு மேய்ப்பன், நிச்சயமாக நான் உங்களுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டி வரும்,” என்றார்.

இறுதி உபதேசங்கள்

109 “ஆகையால், கோபுரத்தை நிர்மாணித்துக்கொண்டிருக்கும் இக்கால கட்டத்திலே உங்கள் வழிகளை ஆயத்தப்படுத்துங்கள். சமாதானத்தை விரும்புகிற மனிதர்களுக்குள்ளே கர்த்தர் வாசம் செய்கிறார். ஏனென்றால் சமாதானம் அவருக்குப் பிரியமானது. எனவே, உங்கள் ஆன்மாவை நீங்கள் எவ்வாறு பெற்றீர்களோ அவ்வாறு பெற்றபடியே முழுவதுமாக அவரிடம் திருப்பி கொடுங்கள். ஒரு சலவைத் தொழிலாளியிடம் நீங்கள் ஒரு கிழியாத ஆடையைக் கொடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும் போது, நீங்கள் எப்படிக் கொடுத்தீர்களோ அப்படியே இருக்க வேண்டும் என்று தானே எதிர்பார்ப்பீர்கள்? ஆனால் சலவைத் தொழிலாளி கிழிந்த ஆடையை உங்களுக்குத் திருப்பிக் கொடுத்தால், நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்களா? உடனே கோபமடைந்து, ‘நான் கொடுத்த உடை கிழிந்திருக்கவில்லை. நீ ஏன் அதைக் கிழித்து எதற்கும் பயனற்றதாக ஆக்கினாய், நீ கிழித்ததால், அதைப் பயன்படுத்த முடியாது!’ சொல்வீர்கள் அல்லவா? உடை கிழிந்து போனதால் நீங்கள் அந்த சலவைத் தொழிலாளியிடம் எவ்வளவு கோபம் கொள்கிறீர்கள்? அப்படியென்றால், உங்களது உடை கிழியாமல் திரும்பக் கிடைக்காததால் மனமுடைந்து குறை கூறுவீர்களானால், மாசில்லாத, முழுமையான ஆன்மாவை உங்களுக்கு கொடுத்த எம் ஆண்டவராகிய தேவன், அதை முழுவதுமாகத் திருப்பிக் கொடுக்கவேண்டும் என எதிர்பார்த்தரானால், அதைச் செய்ய உங்களால் முடியுமா? ஏனென்றால், நீங்கள் அதை முறையாக காப்பாற்றாமல் உங்களது இஷ்டம் போல அதை சிதைத்தபோது, ​​​​அது குறைந்த பயனுள்ளதாக மாறியது. உங்களுடைய இந்த செயலுக்காக இறைவன் உங்களுக்கு மரண தண்டனை கொடுக்காதிருப்பாரா? அவர் நீங்கள் பாவங்களில் ஈடுபடும் போது மிகவும் பொறுமையாக இருக்கிறார். அவர் உங்களைப் போன்றவர் அல்ல, எனவே உங்களுக்கு நன்மை கொண்டு வரக்கூடிய வகையில் உங்கள் பாவங்களுக்காக மனம் வருந்துங்கள், “என்று அவர் தெளிவுபடுத்தினார்.

110 மேலே எழுதப்பட்ட இவைகளையெல்லாம், மேய்ப்பனாகிய நான், ஒரு மனந்திரும்புதலின் தூதனாக, தேவனுடைய ஊழியர்களுக்கு அறிவித்து, தெளிவுபடுத்தினேன். நீங்கள் அவைகளை விசுவாசித்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவற்றின் படி நடந்து, உங்கள் வழிகளை ஆயத்தப்படுத்தினால், நீங்கள் சிறப்பான வாழ்வைப் பெறலாம். ஆனால் நீங்கள் தீயவழிகளிலும், துரோகத்திலும் தொடர்ந்தால், எவராலும் கடவுளுக்குள் வாழ முடியாது. நான் சொல்ல வேண்டியதை எல்லாம் இப்போது சொல்லி முடித்துவிட்டேன்,” என்று கூறிய மேய்ப்பன், என்னை நோக்கி, “நீ என்னிடம் எல்லாவற்றையும் கேட்டு விட்டாயா?” என்று வினவினார். நான், “ஆமாம் ஐயா” என்றேன். “அப்படியானால், கட்டிடத்தில் போடப்பட்ட கற்களில் உள்ள அடையாளங்கள், நாங்கள் நிரப்பியவற்றில் காணப்பட்ட அடையாளங்கள் போன்றவை பற்றி நீ ஏன் என்னிடம் எதுவும் கேட்கவில்லை?” என்று அவர் கேட்க, “நான் மறந்துவிட்டேன், ஐயா,” என்றேன். “இப்போது அவற்றைப் பற்றி சொல்கிறேன், கேள். அவர்கள் என் கட்டளைகளைக் கேட்டு முழு மனதுடன் வருந்தியவர்கள். அவர்கள் மனந்திரும்பி நல்லொழுக்கத்துடனும் தூய்மையாகவும் இருந்ததைக் கண்ட இறைவன், அவர்கள் மனந்திரும்புதலைத் தொடர்ந்து மேற்கொள்வதைக் கண்டதும், அவர்களுடைய பழைய பாவங்களைத் துடைக்கும் படி கட்டளையிட்டார். இந்த அடையாளங்கள் தான் அவர்களுடைய பாவங்கள்; எனவே அவை இனி காண முடியாதபடி மெழுகப்பட்டு விட்டன, ”என்று மிகவும் அழகாக எடுத்துக்கூறினார்.

10 வது உவமை

முடிவுரை

111 நான் இந்தப் புத்தகத்தை எழுதி முடித்த பின், நான் தங்கி இருந்த வீட்டில் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, ​​இந்த மேய்ப்பனிடம் என்னை ஒப்படைத்த தேவதை என் முன் தோன்றினாள். அப்போது மேய்ப்பன் அவளது வலது பக்கத்தில் நின்றிருந்தார். பின்னர் அவள் என்னை அழைத்து என்னிடம் பின்வருமாறு கூறினாள்: “நான் உன்னையும் உன் குடும்பத்தையும் இந்த மேய்ப்பனிடம் ஒப்படைத்தேன். நீங்கள் அவரால் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இது செய்யப்பட்டது,” என்றாள். “நான் அதை அறிவேன் ஐயா” என்றேன். “எனவே, நீங்கள் எல்லாத் துன்பங்களிலிருந்தும் தீமைகளிலிருந்தும் பாதுகாக்கப்படவும், ஒவ்வொரு நற்செயல்களிலும், வார்த்தைகளிலும் வெற்றிபெறவும், நீதியின் அனைத்து நற்பண்புகளைப் பெறவும் விரும்பினால், நான் உங்களுக்கு அவர் மூலமாகக் கொடுத்த கட்டளைகளின்படி வாழக்கடவீர்கள். அப்போதுதான் எல்லாத் தீமைகளையும் உங்களால் வெல்ல முடியும். நீங்கள் அவருடைய உபதேசங்களைக் கடைபிடித்தால், எல்லா தீய இச்சைகளும் உலக இன்பங்களும் உங்களுக்கு அடிபணியும். மேலும் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நன்மையையும் வெற்றியையும் காண்பீர்கள். அவருடைய முதிர்ச்சியையும் சுயகட்டுப்பாட்டையும் தழுவி அதன்படி நடக்க முயற்சியுங்கள். அவர் கர்த்தர் மீது மிகுந்த மரியாதையும் மகிமையும் கொண்டிருக்கிறார் என்றும், அவரது பயணத்தில் அவரை அதீத சக்தியுடனும் வல்லமையுடனும் வழிநடத்துகிறார் என்றும், சகல மகிமையுடன் அவருக்குள் வாசம் செய்கிறார் என்றும் எல்லா மனிதர்களிடமும் சென்று உரக்க சொல்லுங்கள். இந்த முழு உலகத்தின் மீதும் மனந்திரும்புதலை வழங்குவதற்கு அவருக்கு மட்டுமே ஆதிக்கமும், வல்லமையும் உள்ளது. நீங்கள் அவரை வலிமைமிக்கவராக பார்க்கிறீர்கள் தானே? இருப்பினும், அவர் உங்களிடம் காட்டும் முதிர்ச்சியையும் மிதமான தன்மையையும் நீங்கள் புறக்கணிக்கிறீர்கள், ”என்று அவர் கூறினார்.

112 அவர் அவ்வாறு கூறியதும், நான் அவரிடம்: “ஐயா, அவர் என் வீட்டில் இருந்தபோது, அவருடைய கட்டளைகளுக்கு மாறாக நான் ஏதாவது செய்திருக்கிறேனா என்று அவரிடம் கேளுங்கள்,” என்றேன். அதற்கு அவர், “நீ கட்டளைகளுக்கு புறம்பாக எதுவும் செய்யவில்லை என்பது எனக்குத் தெரியும். அப்படி எதுவும் நடக்கவும் இல்லை என்பதும் எனக்குத் தெரியும். எனினும் அப்படிச் செய்யாதபடி உன்னைத் தடுக்கவே இவற்றைச் சொல்கிறேன். ஏனென்றால் அவர் உன்னைப் பற்றி எனக்கு ஒரு நல்ல பரிந்துரை அறிக்கை கொடுத்தார். எனவே, இவற்றை மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம், மனம் வருந்தியவர்களிடமும், மனம் வருந்தப் போகிறவர்களிடமும் நீ கொண்டிருக்கும் உனது அணுகுமுறை மாறும். அப்போது அவர் அவற்றைப் பற்றியும் எனக்கு ஒரு நல்ல அறிக்கையை வழங்க முடியும். அப்போது நான் அவர்களைப் பற்றிய நல்ல அறிக்கையை ஆண்டவரிடம் கையளிக்க முடியும்,” என்றார். அப்போது நான், “ஐயா, நான் கர்த்தருடைய வல்லமைமிகுந்த கிரியைகளை மற்றவர்களுக்கு அறிவிப்பேன். ஏனென்றால், கடந்த காலத்தில் பாவத்தில் வாழ்ந்தவர்கள் மகிழ்ச்சியுடன் மனந்திரும்புவார்கள் என்றும், இவற்றைக் கேட்டால், அவர்கள் மீண்டும் அவர்களது வாழ்வைப் பெறுவார்கள் என்றும் நான் நம்புகிறேன்,” என்றேன். அப்படியானால் இந்த சேவையைத் தொடர்ந்து செய்து கொண்டு போகவும். அவருடைய கட்டளைகளைக் கடைபிடிப்பவர்கள் அனைவரும் வாழ்வார்கள். மேலும் அவ்வாறான வாழ்க்கையை வாழ்பவர்கள் ஆண்டவரிடமிருந்து பெரும் மதிப்பைப் பெறுவார்கள். அதேநேரம், அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாதவர்கள், தங்கள் சொந்த வாழ்க்கையை விட்டு ஓடி, அவரை நிராகரித்தாலும், இறைவனிடம் அவர்களுக்கு மரியாதை உண்டு. எனவே, அவரை இகழ்ந்து, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காத அனைவரும், மரணத்திற்குத் தங்களை ஒப்படைத்தவர்களாகக் கருதப்படுவர்; ஆகையால், நீங்கள் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று நான் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். அப்போது உங்கள் முந்தைய பாவங்களை நீங்கள் துறந்து, அவற்றில் இருந்து விடுதலை அடைவீர்கள்.

113 “மேலும், இந்தக் கன்னிகைகள் உன்னுடன் வாசம் செய்யும் பொருட்டு நான் அவர்களை உன்னிடம் அனுப்பினேன். ஏனென்றால், அவர்கள் உன்னுடன் நட்பாக இருப்பதைக் கண்டேன். அவர்களை உன் உதவியாளர்களாக ஏற்றுக்கொண்டாய். எனவே, உன்னால் தேவனுடைய கட்டளைகளை சிறப்பாகக் கடைபிடிக்க முடியும். ஏனென்றால், இந்தக் கன்னிகளின் உதவியின்றி அந்த கட்டளைகளைக் கடைபிடிக்க முடியாது. அவர்கள் உனது பிரசன்னத்தில் மகிழ்ச்சி அடைவதையும் பார்த்தேன். இருப்பினும், உன்னை வீட்டை விட்டு வெளியேற விட வேண்டாம் என்று நான் அவர்களுக்கு அறிவுறுத்தினேன். நீ மட்டுமே உன் வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் தூய்மையான இடத்தில் தான் மகிழ்ச்சியாக வாழ்பவர்கள். ஏனென்றால், அவர்கள் தூய்மையான, கற்புள்ள கன்னியர். மற்றும் கடின உழைப்பாளிகள். மேலும் அந்த கன்னியர்கள் அனைவரும் இறைவனின் அருளைப் பெற்றவர்கள். எனவே, உனது வீடு சுத்தமாக இருப்பதை அவர்கள் கண்டால், அவர்கள் தொடர்ந்து உன்னுடன் வாழ்வார்கள். அதில் சிறிதளவு அசுத்தம் இருந்தாலும் கூட, அவர்கள் உடனடியாக உனது இல்லத்தை வீட்டை விட்டு வெளியேறி விடுவார்கள். ஏனென்றால் இந்தக் கன்னிப்பெண்கள் எந்த விதமான அசுத்தத்தையும் விரும்புவதில்லை,” என்று என்னிடம் கூறப்பட்டது. அதற்கு நான் அவரிடம் இவ்வாறு சொன்னேன். “எனது வீட்டில் அவர்கள் என்றும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு நான் அவர்களை மகிழ்விப்பேன் ஐயா. நீங்கள் என்னை வழிநடத்தியவர்கள், ஆகவே என்னில் எந்தத் தவறையும் காண மாட்டார்கள் என்பது போல, அவர்கள் என்னில் எந்தத் தவறும் நிச்சயம் காண மாட்டார்கள்,” என்று உறுதியுடன் கூறினேன். அவர் அதைக்கேட்டு மேய்ப்பனிடம் இவ்வாறு கூறினார்: “கடவுளின் ஊழியன் வாழ விரும்புகிறான், இந்தக் கட்டளைகளைக் கடைபிடிக்க விரும்புகிறான், சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் இந்தப் பெண்களுக்கு உதவுவேன் என்று அவன் சொன்னது எனக்குத் தெரியும்.” இவைகளைச் சொன்னபின், அவர் என்னை மேய்ப்பனிடம் அனுப்பினார். அவர் அந்தக் கன்னிப்பெண்களை அழைத்து அவர்களிடம், “நீங்கள் இந்த மனிதனின் வீட்டில் வசிக்க விரும்புகிறீர்கள் என்று நான் அறிந்து கொண்டபடியால், அவனையும் அவன் வீட்டையும் நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன். அவன் வீட்டை விட்டு நீங்கள் ஒருபோதும் வெளியேறாதிருங்கள்,” என்று கூறியதும், அவர்கள் இந்த வார்த்தைகளைக் கேட்டு மிக்க மனமகிழ்ச்சியடைந்தனர்.

114 அதன் பின் அந்தத் தேவதை என்னிடம் இவ்வாறு கூறினார்: “தைரியத்துடன் உனது சேவையைத் தொடர்வாயாக. தேவனுடைய வல்லமையான, மாட்சிமைமிக்க செயல்களை எல்லா மனிதர் மத்தியிலும் அறிவிப்பாயாக. அவ்வாறு செய்வதன் மூலம், நீ உனது சேவையில் அருள் பெறுவாய். எனவே, இந்த கட்டளைகளைப் பின்பற்றுபவர், வாழ்வார் அத்தோடு மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறுவார். அதேநேரம் இவற்றை நிராகரிப்பவர் வாழ்வை இழக்கிறார். மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை வாழ்வார். சரியானதைச் செய்யத் திறமையுள்ள அனைவரையும் இடைவிடாமல் அவற்றைச் செய்யச் சொல். ஏனெனில் நற்செயல்களில் ஈடுபடுவது அவர்களுக்கு நன்மை தரும். மேலும், ஒவ்வொரு மனிதனும் துன்பத்திலிருந்து விடுபடுவது அவசியம். ஏனென்றால், தேவையுள்ளவனும், அன்றாடம் கஷ்டங்களையும், மிகுந்த வேதனையையும் சுமையையும் சுமந்து வாழ்பவன் இவ்வாறான பாடுகளில் இருந்து விடுதலை அடைய வேண்டும். எனவே, அத்தகைய நபரை துன்பத்திலிருந்து விடுவிப்பவர், தானும் மிகுந்த மகிழ்ச்சியை அனுபவிப்பார். இப்படிப்பட்ட அசௌகரியங்களால் துன்புறுத்தப்படுபவர், சங்கிலியால் பிணைக்கப் பட்டவருக்கு சமமான சித்திரவதைகளை அனுபவிக்கிறார். மேலும், பலர், இதுபோன்ற பேரிடர்களால் அவதியுறுவோர், அவற்றைத் தாங்க முடியாமல், தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ளும் நிலைக்குள் கூடத் தள்ளப்படுகிறார்கள். எனவே, இவ்வாறான துன்பத்தில் ஒருவரின் துயரத்தை அறிந்தவர், அந்த நபரை விடுவிக்காமல் விட்டால், அவர் பெரும் பாவத்தைச் செய்து, அந்த நபரின் இரத்தத்தால் குற்றவாளியாக மாறுகிறார். எனவே, நல்ல செயல்களைச் செய்யுங்கள். இறைவனிடமிருந்து நற்செயல்களைப் பெற்ற நீங்கள், அவற்றை மற்றவர்கள்பால் செய்யாவிட்டால் கோபுர நிர்மாணம் முழுமை பெறாது. ஏனெனில் கோபுரக் கட்டுமானம் நின்றுவிட்டால், அது உங்கள் கணக்கில் தான் சேர்க்கப்படும். எனவே, நீங்கள் சரியானதை உடனேயே செய்வீர்களானால், கோபுரக் கட்டுமானப்பணி விரைவில் நிறைவுறும். அத்தோடு நீங்களும் அதிலிருந்து விடைபெற்று சென்றுவிடலாம்,” என்று அவர் என்னிடம் சொல்லி முடித்ததும், தன் இருக்கையிலிருந்து எழுந்து, மேய்ப்பனையும் கன்னிப் பெண்களையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.

எனினும், மேய்ப்பனையும் கன்னிப் பெண்களையும் என் வீட்டிற்கு மீண்டும் அனுப்புவதாக உறுதி கூறிவிட்டுத்தான் சென்றார்.


< Part 1 < Part 2