யூசிபியஸ், தமிழில் தேவாலய வரலாறு, புத்தகம் 5
Eusebius, The Church History in Tamil, book 5. Translated with permission from Paul L. Meier, The Church History: A New Translation with Commentary, 1999. Tamil translation is Public Domain.
ஐந்தாவது புத்தகம்: மேற்கத்திய வீரர்களும், கிழக்கத்திய மதவெறியர்களும்
மார்கஸ் அவுரேலியஸ் முதல் செப்டிமஸ் செவெரஸ் வரை
உரோமைய ஆயரான சோட்டர் தனது பதவிக்காலத்தில் எட்டாவது ஆண்டு நடைபெறுகையில் இவ்வுலக வாழ்க்கையை நீத்தார். அன்டோனினஸ் வெரஸ் [மார்கஸ் ஆரேலியஸ்] என்ற பேரரசரின் பதினேழாவது ஆண்டு ஆட்சிக்காலத்தில், அப்போஸ்தலர் வரிசைக்கிரமத்தில் பன்னிரண்டாவது ஸ்தானத்தில் இருந்த எலியுதெரஸ் அவருக்குப் பின் பதவியேற்றார். இந்தக்காலப்பகுதியில், பல்வேறு இடங்களில் எங்களுக்கு எதிரான வன்முறைகள் மீண்டும் தீவிரமாக வெடித்தன. மேலும் நகரங்களில் வன்முறை கும்பல்களால் மேற்கொள்ளப்பட்ட கலவரங்களால் எண்ணற்ற வேதசாட்சிகளை அவர்களது வீர மரணத்துக்கு இட்டுச் சென்றது. இது ஒரு மாகாணத்தில் நடந்தேறிய நிகழ்வுகளின் அனுமானத்தைக்கொண்டு அவர்களின் பெருமைமிகு வேதசாட்சியத்துக்கு வழிவகுத்தது. முழு பதிவும் இங்கே எழுதப்பட்டு, வேதசாட்சிகள் பற்றிய எங்கள் தொகுப்பில் சேர்க்கப் பட்டுள்ளதால், தற்போதைய தேவைகளுக்குப் பொருத்தமான காரணிகளை மட்டும் நான் எடுத்துக்கொள்கிறேன். ஏனைய வரலாற்றாசிரியர்கள் போரில் பெற்ற வெற்றிகள், தளபதிகளின் சொந்த நலன்கள் மற்றும் நாடு, குடும்பம் மற்றும் சொத்துக்களுக்காக அவர்கள் படுகொலை செய்த ஆயிரக்கணக்கானோரின் இரத்தத்தால் கறைபட்ட வீரர்களின் வீரப்பிரதாபங்களை பதிவுசெய்வதற்கு மட்டுமே தங்கள் எழுத்தாற்றலை மட்டுப்படுத்தினர். அதற்கு பதிலாக, எனது நோக்கில் நான் எழுதியவை யாவும், அதாவது சமாதானத்தைப் பாதுகாக்க நடந்த போர்களையும், தேசத்தை விட சத்தியத்திற்காகவும், குடும்பத்தை விட பக்தியின் நிமித்தமும் இதுபோன்ற போர்களில் தைரியமாக போராடிய மனிதர்களை அழியாததாக முன்கொண்டு செல்லக்கூடியவையாக இருக்கும். இறைபக்தி என்ற போட்டியில் தைரியமான முறையில் பங்கெடுத்துக் கொண்ட விளையாட்டு வீரர்கள், சாத்தானிய எதிரிகளுக்கு எதிரான போட்டிகளில் பெற்ற வெற்றிகளைப் பார்க்கும் போது, அவர்களின் சகிப்புத்தன்மை, மன உறுதி மற்றும் இறுதியில் அவர்கள் சூடிக்கொண்ட வெற்றிக் கிரீடங்கள் என்றென்றும் புகழ் வாய்ந்தவையாக இருக்கும்.
1. இந்த நிகழ்வுகள் யாவற்றுக்கும் மைதானமாக விளங்கிய நாடு தான் கவுல். அதன் தலைநகரங்கள் லியோன்ஸ் மற்றும் வியன். இந்த இரண்டு நகரங்களுக்கு ஊடாகவே ரோன் நதி பாய்கிறது. அங்கு இயங்கிய முன்னணி திருச்சபைகள், வேதசாட்சிகள் பற்றிய ஆவணத்தை சிறிய ஆசியாவில் [தற்கால துருக்கி] உள்ள திருச்சபைகளுக்கு அனுப்பின. அவற்றில் இருந்து நான் பின்வருவனவற்றை மேற்கோள் காட்டுகிறேன்:
கவுல் நாட்டிலுள்ள வியென் மற்றும் லியோன்ஸில் உள்ள கிறிஸ்துவின் ஊழியர்களான ஆசியா மற்றும் ஃபிரிஜியாவில் உள்ள எங்கள் சகோதர ஊழியர்களுக்கு, நாம் பெற்றுக்கொண்ட அதே நம்பிக்கையையும் இரட்சிப்பு குறித்த விசுவாசத்தையும், பிதாவாகிய சர்வேசுரன் மற்றும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிடமிருந்து கிடைத்த அமைதி, கிருபை மற்றும் மகிமை போன்ற அனைத்தையும் நாம் இத்தால் பகிர்ந்து கொள்கிறோம்:
ஏனைய சம்பிரதாய அறிமுகக் குறிப்புகளைத் தொடர்ந்து, அவர்கள் பின்வருமாறு தங்கள் கதையைத் தொடங்குகிறார்கள்:
இங்கே குறிப்பிட்ட அழுத்தத்தின் தீவிரம் எப்படிப்பட்டதென்றால், மதவெறிகொள்கையுடையோர் புனிதர்கள் மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட வேதசாட்சிகள் போன்றோருக்கு எதிராக மேற்கொண்ட மோசமான அவலம் நிறைந்த கொடுமைகள் அதன் காரணமாக அவர்கள் அனுபவித்த சொல்லொணாத துன்பங்கள் சொல்லிலோ எழுத்திலோ விவரிக்க முடியாதவை. எதிரிகளைப் பொறுத்தவரையில், அவர்களின் வருகைக்கு முன்னர் விடுக்கும் ஒரு சமிக்ஞையாக, தனது முழு சக்தியையும் கொண்டு எங்களைத் தாக்கினார்கள். கடவுளின் ஊழியர்களுக்கு எதிராக செயல்பட, தம்மைப் பின்பற்றுபவர்களைப் பயிற்றுவிக்க அவர் சகல வழிகளையும் கையாண்டிருந்தார். இதனால் நாங்கள் வீடுகள், ஸ்நானம் செய்யும் இடங்கள் மற்றும் சந்தைகள் போன்ற இடங்களுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், கடவுளின் கிருபை பலவீனமானவர்களை மீட்டு, எதிரியைத் தாக்க வலிமையான, தூண்கள் போன்ற மனிதர்களை நியமித்தது. அவர்கள் கிறிஸ்துவின் மகிமையைக் கொண்டு அவர்களுக்கெதிராக விதிக்கப்பட்ட தண்டனைகள் யாவற்றையும் சகித்துக்கொண்டு வாழ்ந்த விதத்தைக் காணும்போது, இந்த காலத்தில் தங்களுக்கு ஏற்படக்கூடிய துன்பங்கள், எமக்கு வெளிப்படுத்தப்பட்ட தேவ மகிமைக்கு முன் ஒப்பிடத் தகுதியற்றவை என்பதை நிரூபிக்கிறது.
முதலில், அவர்கள் வன்முறையாளர்கள் ஏற்படுத்திய முழு துஷ்பிரயோகத்தையும் சகித்துக் கொண்டனர்: குறிப்பாக வெறுக்கப்படும் எதிரிகளுக்கு எதிராக வசைகள், சாட்டையடிகள், இழுத்துச் செல்லுதல், கொள்ளையடித்தல், சிறையில் அடைத்தல், கல்லெறிதல் போன்ற மிலேச்சத்தனமான கொடுமைகளையும் சகித்துக்கொண்டனர். பின்னர் அவர்கள் சந்தை அமைந்துள்ள இடத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டு, தீர்ப்பாய மற்றும் நகரசபை அதிகாரிகளால் குற்றம் சாட்டப்பட்டனர். மேலும் அவர்கள் [கிறிஸ்து] ஒப்புக்கொண்டதாக அறிவித்தபோது, ஆளுநர் வரும்வரை சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை ஆளுநர் முன் அழைத்து வந்து கொடூரமாக நடத்திக்கொண்டிருந்தபோது, வெட்டியஸ் எபகத்தஸ் தலையிட்டார். அவர் தனது இளமை பருவத்தில் இருந்தபோதிலும், அவரது நற்பெயர் சகாரியாவின் மூத்த குடிகளுக்கு சமமாக இருந்தது. கடவுள் மீதும் அயலவர் மீதும் அன்பை சொறிந்தவரான அவர், எங்களுக்கு எதிரான நியாயமற்ற தீர்ப்பைக் கண்டு கோபத்தில் மூழ்கினார். எங்கள் தரப்புக்கு ஆதரவாகப் பேசவும், நாங்கள் நாத்திகரோ அல்லது துரோகிகளோ இல்லை என்பதை நிரூபிக்கவும் அனுமதி கேட்டார். தீர்ப்பாயத்தைச் சுற்றியிருந்தவர்கள் அவர் அந்தஸ்தில் மேன்மையாக இருந்தவர் என்றாலும் கூட, அவரை எள்ளி நகையாடினர். எனினும் அவரது நியாயமான கோரிக்கையை ஆளுநர் நிராகரித்தார், “நீர் ஒரு கிறிஸ்தவரா?” என்று மிகத் தெளிவான முறையில் கேட்கப்பட்ட போது, வெட்டியஸ் உறுதியாக ஆம் என்று பதிலளித்தார். அதன் காரணமாக அவரும் வேதசாட்சிகளின் வரிசையில் தன்னை இணைத்துக் கொண்டார். அவர் “கிறிஸ்தவர்களின் தேற்றரவாளர்” என்று அழைக்கப்பட்டார். ஆனால் அவர் கிறிஸ்துவின் உண்மையான சீடராக, சகோதரர்களின் பாதுகாப்பிற்காக தனது சொந்த வாழ்க்கையைத் தியாகம் செய்த அவரது அன்பின் அடையாளமாக, அவருள் உன்னத ஆறுதலாளராக [பரிசுத்த ஆவியானவர்] எழுந்தருளி இருந்தார்.
எஞ்சியோர் பின்னர் குழுக்களாக பிரிக்கப்பட்டனர். முதல் குழுவுக்குள் அடங்கிய வேதசாட்சிகள் தெளிவாகவும் ஆர்வமாகவும் தங்கள் வேதசாட்சியத்தை ஒப்புக்கொண்டனர். இருப்பினும், மற்றவர்கள் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை. பயிற்சியில் தோல்வியுற்றாலும், அவர்கள் போராட்டத்திற்கு தயாரானவர்களாக இருக்கவில்லை. அவர்களில் பத்து பேரின் வெளித்தோற்றம் கருவிலேயே இறந்து பிறந்தவர்கள் போலிருந்தது. அது எங்களுக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது அதேநேரம், அதுவரை கைது செய்யப் படாதவர்களின் உற்சாகத்தை கட்டுப்படுத்தியது. அவர்களில் பத்து பேர் இறந்து பிறந்தவர்கள், எங்களுக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது மற்றும் இன்னும் கைது செய்யப் படாதவர்களின் உற்சாகத்தை கட்டுப்படுத்தியது. அவர்களுக்குள் மன உளைச்சல் இருந்தபோதிலும், வேதசாட்சிகளுனேயே தங்கி இருந்தனர், அவர்களைக் கைவிட்டுப் போய்விடவில்லை. அந்த நேரத்தில் நாங்கள் அனைவரும் அவர்கள் வெளிப்படுத்திய ஆதங்கத்தின் நிச்சயமற்ற தன்மையால் வேதனையடைந்தோம். வரவிருக்கும் தண்டனையைப் பற்றி நாம் கொஞ்சமும் பயப்படவில்லை, ஆனால் எவராவது விசுவாசத்தை இழந்து விடுவார்களோ என்று தான் பயமாக இருந்தது. நாளுக்கு நாள், தகுதியானவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர். இதனால் இரண்டு திருச்சபை அமைப்புகளைச் சேர்ந்த மிகவும் திறமையான உறுப்பினர்கள் அனைவரும் ஓர் இடத்துக்கு கொண்டுவரப்பட்டார்கள். எங்கள் எல்லோரையும் விசாரிக்க வேண்டும் என்று ஆளுநர் ஆணையிட்டதால், எங்களோடு சேர்த்து புறஜாதி ஊழியர்கள் சிலரும் கைது செய்யப்பட்டனர். சாத்தானின் வலையில் விழுந்து துறவிகள் துன்புறுவதைக் கண்டு அஞ்சி, தைஸ்டீயன் களியாட்டங்கள் என்ற நரமாமிசத்தைப் புசித்தல் மற்றும் ஓடிபியன் என்ற இயற்கைக்கு மாறான ஆண்-பெண் சேர்க்கை மற்றும் நாம் பேசக்கூட அஞ்சும் அல்லது சிந்திக்கக்கூட இயலாத விஷயங்களை எங்கள் மீது திணித்து அவர்கள் எங்கள் மீது பொய்யாகக் குற்றம் சாட்டினார்கள். இந்த வதந்திகள் பரவியபோது மக்கள் மிக மூர்க்கத்தனமாக எங்களுக்கு எதிராகத் திரும்பினர். முன்பு உறவினர்கள் என்று சொந்தம் கொண்டாடியவர்கள் கூட, எங்கள் மீது பொங்கி எழுந்து கோபத்தைக் கக்கினார். “மக்கள் தங்கள் ஆலயங்களில் இருந்து உங்களை வெளியேற்றுவர். மேலும் உங்களைக் கொல்பவன் தேவனுக்கு சேவை செய்கிறவன் என்று மக்கள் எண்ணும்படியான காலம் வரும்.” (யோவான் 16:2). பின்னர், இறுதியாக, புனித வேதசாட்சிகள் சொல்லமுடியாத அளவுக்கு, விளக்கங்களுக்கும் அப்பாற்பட்ட விதத்தில் துன்பங்களை அனுபவித்தார்கள். சாத்தான் அவர்கள் மத்தியில் தேவ நிந்தனையை விதைத்து அவர்களை மேலும் நசுக்க முயன்றான்.
கலவரக் கும்பல், ஆளுநர் மற்றும் படைவீரர்களின் முழு சீற்றமும் வியானைச் சேர்ந்த மறை மூப்பராகிய சாங்துஸ் [Sanctus] மீது விழுந்தது; அதேபோல், மதுருஸ் [Maturus] மீதும் விழுந்தது. மதுருஸ் புதியவரான போதும் ஒரு ஆர்வம் மிக்க போட்டியாளர். அவரோடு மற்றும் பெர்கமத்தில் கிறிஸ்தவர்களிடையே எப்போதும் தூணாக இருந்த அட்டாலுஸ் [Attalus] மீதும், ப்ளாண்டினா [Blandina] மீதும் விழுந்தது. இவர்கள் மூலம் மனிதர்கள் எவரைத் தாழ்வாக நினைக்கிறார்களோ அவர்களை கடவுள் பெரும் மகிமைக்கு தகுதியானவர்கள் என்று நிரூபித்தார். நாங்கள் அனைவரும் பயந்து போயிருந்தபோது, அவளது எஜமானி தானே முன்வந்து வேதசாட்சியத்தை எதிர்கொண்டார். மேலும் அவர் உடலால் பலவீனமடைந்து, [கிறிஸ்துவை] ஒப்புக்கொள்ளக் கூட முடியாமல் சோர்ந்து போயிருந்தார். காலை முதல் இரவு வரை அவளை சித்திரவதை செய்தவர்கள் சோர்வடைந்து அவர்களால் முடியாதென்று ஒப்புக்கொள்ளும் அளவுக்கு பிளாண்டினா பிரமிக்கத்தக்க சக்தியால் நிரப்பப்பட்டார். அவளைத் துன்புறுத்தியவர்கள் தாங்கள் உடல் நோகும் அளவுக்கு அடிபட்டு வலியை உணர்ந்ததாகக் கூறினர். அதற்குமேல் அவர்களால் அவளை எதுவும் செய்ய முடியாதென்று ஒப்புக்கொண்டனர். அவள் இன்னும் உயிருடன் இருப்பது குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். ஏனெனில் அவளுடைய முழு உடலும் நொறுங்கி, சிதைந்த நிலையில் இருந்தது. மேலும் அவளது வாழ்க்கையை முடிக்க அவள் அனுபவித்த சித்திரவதைகளில் ஒன்று மட்டும் கூடப் போதுமானது என்று கூறினார். ஆயினும்கூட, ஆசீர்வதிக்கப்பட்ட பெண்ணான அவர், ஒரு துணிச்சலான விளையாட்டு வீராங்கனையைப் போல விசுவாசத்தை ஒப்புக்கொண்டு “நான் ஒரு கிறிஸ்தவப் பெண், எங்களுக்கு எந்தத் தீமையும் நடக்காது” என்று பிரகடனப்படுத்தியதன் மூலம் தனது சரீர வேதனையில் கூட ஆறுதல் கண்டார்.
சாந்துஸ் ஒரு மனிதனுக்கு இருக்கக்கூடிய மிதமிஞ்சிய தைரியத்துடன் எல்லாக் கொடுமைகளையும் சகித்தார். கயவர்கள் தன்னிடம் இருந்து எப்படியாயினும் ஏதாவதொரு தவறான தகவல்களை பெற்றுக்கொள்ளும் நோக்குடன், தொடர்ச்சியான சித்திரவதைகளுக்கு அவரை உட்படுத்தினாலும், அவர் தனது சொந்தப் பெயரையோ, இனத்தையோ, பிறந்த நகரத்தையோ, அடிமையா அல்லது சுதந்திரமானவரா என்பதைக்கூட அவர்களிடம் சொல்லாமல், ஒவ்வொரு கேள்விக்கும் லத்தீன் மொழியில் “நான் ஒரு கிறிஸ்தவன்” என்று மட்டும் பதிலளித்தார். எனவே, ஆளுநரும் சித்திரவதை செய்பவர்களும் அவரை வேறு விதத்தில் கொடுமைப்படுத்தி தகவல்களைக் கறக்க ஆர்வமாக இருந்தனர். ஆயினும் அவர்களது மற்றைய அனைத்து வழிகளும் தோல்வி கண்டத்தைத் தொடர்ந்து, இறுதியாக அவர்கள் நெருப்பில் நன்றாகக் காய்ச்சி, கனன்று கொண்டிருக்கும் பித்தளை தகடுகளை எடுத்து அவரது உடலின் மிக மென்மையான பாகங்களின் மீது வைத்து அழுத்தினர். அவை அவரது உடல் மீது பட்டு எரிந்து கொண்டிருந்த போதும், அவர் கிறிஸ்துவிடமிருந்து வரும் வாழ்வுதரும் புனித நீரால் புத்துணர்ச்சி அடைந்து தனது எண்ணங்களிலும், சொற்களிலும் உறுதியாக இருந்தார். அவரது உடல் அவரது வேதனைக்கு சாட்சியாக இருந்தது: அது ஒரே காயமாகவும், சிதைக்கப்பட்டு, முழு உடம்பும் ஒரேவிதமான ரணகளமாகக் காட்சியளித்தது. அவரது சரீரத்தில் வேதனை இருந்தாலும், கிறிஸ்து தன் எதிரியை தோற்கடித்து, பிதாவின் அன்பு இருக்கும் இடத்தில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும், கிறிஸ்துவின் மகிமை இருக்கும் இடத்தில் எம்மைக் காயப்படுத்த எதுவுமில்லை என்பதையும் நிரூபித்தார்.
சில காலங்கள் சென்ற பிறகு, கொடுங்கோலர்கள் மீண்டும் அதே சித்திரவதைகளுக்கு வேதசாட்சியை உட்படுத்தினர். இப்போது அவரது உடல் வீங்கி, ரணமடைந்துவிட்டதால், அவரை அடிபணியச் செய்துவிட முடியும் என்று எண்ணினார்கள் – அவர்மேல் ஒரு கைவிரல் படுவதைக்கூட அவரால் தாங்க முடியவில்லை – அதேநேரம் அவருக்கு அளிக்கப்பட சித்திரவதை மற்றும் அவரது மரணம் மற்றவர்களுக்கு ஒரு பாடமாகவும் பயத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கும் என அந்தக் கொடூரர்கள் கணக்குப்போட்டனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால் அந்தக் கொடியவர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளுக்கும் நேரெதிராக, அவருக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகளால் அவரது உடல் சீராகியது. அவரது முன்னைய பழைய தோற்றத்தையும் அவரது கைகால்களின் பயன்பாட்டையும் மீட்டு அவரைப் பழைய நிலைக்கு கொண்டுவந்தது. கிறிஸ்துவின் கிருபையின் மூலம், அவருக்கு இரண்டாவது முறையாக இழைக்கப்பட்ட அநீதி மற்றும் கொடுமைகள் அவரை குணமடையச் செய்தது.
[கிறிஸ்துவை] மறுதலித்தவர்களில் ஒருவரான பிப்லிஸையும் சாத்தான் துன்புறுத்தினான். (பலவீனமான மற்றும் தளர்ந்து போனவளாகக் காணப்பட்ட) அவளை ஆட்டுவித்து எங்களைப் பற்றி தகாத வார்த்தைகளைப் பேசும்படி வற்புறுத்தியதன் மூலம், அவன் ஏற்கனவே அவளைக் கபளீகரம் செய்து விட்டான் என்றும், நிந்தனையின் மூலம் அவளை அழிக்க முடியும் என்றும் நம்பினான். நீண்ட உறக்கத்தில் இருந்து வந்தவள் போல் மேடைக்குத் திரும்பிய அவள், “பகுத்தறிவற்ற விலங்குகளின் இரத்தம் மற்றும் மாமிசத்தைக் கூட புசிக்க அனுமதிக்கப்படாத குழந்தைகளை இப்படிப்பட்டவர்கள் எப்படி உண்பார்கள்?” என்று நிந்தனை செய்பவர்களை நோக்கி சவால் விட்டாள். தற்காலிக தண்டனையின் வாயிலாக நரகத்தில் நித்திய தண்டனையை அவள் அனுபவிக்க நேரிடும் என்று அந்தக் கயவர்கள் அவளுக்கு நினைவுபபடுத்தினர். அப்போதிலிருந்து, அவள் தன்னை ஒரு உறுதியான கிறிஸ்தவப் பெண் என்று ஒப்புக்கொண்டு வேதசாட்சிகளின் வரிசையில் தன்னை இணைத்துக்கொண்டாள்.
கிறிஸ்துவானவரின் வல்லமையைக் கொண்டு புனிதர்கள் தாங்கள் விடாமுயற்சியால் கொடுங்கோலரின் சித்திரவதைகளை வெற்றிகொண்டபோது, சாத்தான் வேறு உபாயங்களை தேடினான்: அசுத்தத்திலும் இருளிலும் சிறைவாசத்தின் மூலமும், ஐந்தாவது துளைக்குள் கால்களை நீட்டவைத்து உபாதைக்குள்ளாக்குதல் மற்றும் பிற அட்டூழியங்கள், சிறைக்காவலர்களை கோபமூட்டி அதன்மூலம் தண்டனைகளை அதிகரிக்கச் செய்தல், வீண் பழிகளை கைதிகள் மீது சுமத்துதல் போன்ற கைங்காரியங்களில் சாத்தான் ஈடுபட்டிருந்தான். இவற்றின் பின்னணியில், அவர்களில் பலர் சிறையில் கழுத்து நெரித்து கொல்லப்பட்டனர். மற்றவர்கள் மிகவும் கொடூரமாக சித்திரவதைக்கு உள்ளாயினர். அவர்கள் அதற்கு மேல் உயிர்வாழ முடியாது என்று தோன்றியது. இருப்பினும் அவர்கள் மனம் தளர்ந்துவிடவில்லை. மனித உதவியை ஒதுக்கிவிட்டு, இறைவனால் மற்றவர்களை ஊக்குவிக்க பலப்படுத்தப்பட்டனர். ஆனால் சமீபத்தில் கைது செய்யப்பட்ட மற்றும் சித்திரவதையை அனுபவித்திராத இளைஞர்கள், சிறைவாசத்தின் கொடுமையைத் தாங்க முடியாமல் சிறையில் இறந்து போயினர்.
லியோன்ஸின் ஆயரான ஆசீர்வதிக்கப்பட்ட பொதினஸ் தொண்ணூறு வயதுக்கு மேற்பட்டவராகவும் உடல் ரீதியாக பலவீனமாகவும் இருந்தார். மூச்சு விடுவது அவருக்கு மிகவும் சிரமமாக இருந்தது. ஆனால் வேத சாட்சியாக இறக்கும் வைராக்கியம் அவருக்குள் வலுப்பெற்றது. உள்ளூர் அதிகாரிகள் மற்றும் படையினரால் அவர் நீதிமன்றத்திற்கு பலவந்தமாகக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கே மக்கள் இவரே கிறிஸ்து என்று உரக்கக் கூச்சலிட்டனர். ஆனால் அவர் அங்கு ஒரு பாரிய சாட்சியத்தை அளித்தார். “கிறிஸ்தவர்களின் கடவுள் யார்” என்று ஆளுநர் அவரிடம் கேட்டதற்கு, அவர், “நீர் அதற்கு தகுதியானவர் என்றால், அதை நீர் அறிவீர்” என்று பதிலளித்தார். பிறகு ஈவிரக்கமின்றி இழுத்து வந்து அவரது வயதைக் கூட மதிக்காமல் கை, கால்களால் அவரை அடித்து உதைத்து, தூரத்தில் இருந்தவர்கள் அனைவரும் தங்கள் தெய்வத்தைப் பழிவாங்குவதாக எண்ணி கைக்குக் கிடைத்ததையெல்லாம் எடுத்து அவர்மீது எறிந்தனர். அதன் பிறகு சிறையில் தள்ளப்பட்டு, மூச்சு விட முடியாமல் அவஸ்தைப்பட்டு, இரண்டு நாட்களுக்குப் பிறகு இறையடி சேர்ந்தார்.
அதன்பிறகு, உலகத்தை ஆளவேண்டுமென்ற கடவுளின் ஆணை நிறைவேற்றப்பட்ட ஒரு காலம் வந்தது. மேலும் இயேசுவின் எல்லையற்ற கருணை ஒரு அரிய வழியில் வெளிப்பட்டது. ஆனால் அது கிறிஸ்துவின் வல்லமைக்கு அப்பாற்பட்டது அல்ல. முதலில் கைது செய்யப்பட்டபோது அவரை மறுதலித்தவர்கள், அவ்வாறு செயற்பட்டாலும், மற்றவர்களுடன் சேர்த்து சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் கிறிஸ்தவர்கள் என்று கூறிக் கொண்டவர்கள் மேல் குற்றச் சாட்டுகள் எதுவும் இன்றி கிறிஸ்தவர்கள் என்ற காரணத்துக்காகவே சிறையில் அடைக்கப்பட்டனர். மற்றவர்கள் கொலையாளிகள் என்று பொய் குற்றம் சுமத்தப்பட்டு இரட்டை தண்டனை வழங்கப்பட்டது. ஏற்கனவே மேலே கூறிய கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டவர்களின் சுமை, கிறிஸ்துவின் வாக்குறுதிகளின் மீது கொண்ட விசுவாசம் காரணமாக இலகுவானது. ஆனால் கிறிஸ்துவை நிராகரித்தவர்கள் தங்கள் மனசாட்சியால் நிந்தனைக்குள்ளானர் என்று பின்பு நாம் குறிப்பிடப்பட்டவர்களின் முகங்களில் இருந்து தெளிவாகத் தெரிந்தது. விசுவாசிகள் மகிழ்ச்சியுடனும், மகிமையுடனும், கருணையுடனும், தங்கள் உடலில் பிணைக்கப்பட்ட சங்கிலிகளை ஆபரணங்களாக அணிந்து, கிறிஸ்துவின் நறுமணத்தால் சுகந்தமான விளங்கினர். இதை பார்த்த சிலர் உலக வாழ்வில் கவர்ச்சிபெற அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தியதாக எண்ணினர். மற்றவர்கள் மனச்சோர்வடைந்தவர்களாகவும், சாந்தகுணமுள்ளவர்களாகவும், ஏழ்மையானவர்களாகவும் கணிக்கப்பட்ட காரணத்தால், புறஜாதிகளால் துணிவற்ற கோழைகள் என்று கேலி செய்யப்பட்டனர். அவர்கள் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, அவர்களுக்கு பேரும் புகழும் ஈட்டித்தந்த நற்பெயரை இழந்தனர். இந்த நோக்கு மற்றவர்களை பலப்படுத்தியது: கைது செய்யப்பட்டவர்கள் தயக்கமின்றி தங்கள் விசுவாசத்தை உறுதிசெய்ததோடு, சாத்தானின் சோதனைகளைக்க கண்டு அஞ்சாது அவற்றைப் புறக்கணித்தனர்…..
இதற்குப் பிறகு, பரம தந்தைக்கு அர்ப்பணிப்பதற்காக ஒரே கிரீடத்தில் அலங்கரிக்கப்பட்ட வெவ்வேறு வடிவங்கள் மற்றும் வண்ணங்கள் கொண்ட மலர்களின் அழகிய வடிவமாய் வேதசாட்சிகளின் மரணங்களும் அமைந்திருந்தன. மதுரஸ், சாங்டஸ், பிளாண்டினா மற்றும் அட்டலஸ் போன்றோர் ஒரு விசேட பொது நிகழ்வின் போது மிருகங்களுக்கு இரையாகும் பொருட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். மதுரஸும் சான்க்டஸும் இதற்கு முன்பு சித்திரவதை செய்யப்படாததால், நடன மண்டபத்தில் மீண்டும் எல்லாவிதமான சித்திரவதைகளுக்கும் ஆளானார்கள். அத்தோடு அவர்கள் சரமாரியாக தாக்கப்பட்டனர். மிருகங்களின் குரூரமான தாக்குதல்கள் மற்றும் வெறியாட்டம் ஆடிய கும்பல் என்ன கோரியதோ அவையெல்லாம் நிறைவேற்றப்பட்டு, இறுதியாக அவர்களது உடல்கள் இரும்பு நாற்காலி உடன் சேர்த்து பிணைக்கப்பட்டு எரியூட்டப்பட்ட அவர்களது உடல்கள் துர்நாற்றம் வீசின. அதன் பிறகும் அவர்களின் சித்திரவதை நிற்கவில்லை. கொலை வெறித்தனமாக அவர்கள் வேதசாட்சிகளின் எதிர்ப்பை மீறிச் செல்ல முயன்றனர். ஆனால் ஆரம்பத்திலிருந்தே அவரிடம் இருந்த விசுவாசப் பிரகடனத்தைத் தவிர, அந்த கொடியவர்கள் சங்டஸிடமிருந்து வேறு எதையும் பெற முடியவில்லை.
அவர்களின் நீண்ட துன்பங்களுக்குப் பிறகு, நாள் முழுவதும் பல்வேறு பழங்கால உரோமைய வாட்போர் சமர்களுக்கு ஈடுகொடுத்து, இறுதியாக பலியாகினர். அதேவேளை, பிளாண்டினா ஒரு ஓடையில் தொங்கவிடப்பட்டு, விடுவிக்கப்பட்ட காட்டு மிருகங்களுக்கு உணவாக அளிக்கப்பட்டாள். அவள் சிலுவையின் வடிவத்தில் தொங்கிய நிலையில் காணப்பட்டாள். அவளுடைய தொடர்ச்சியான பிரார்த்தனை பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு உத்வேகம் அளித்தன. இவ்வாறு தன் சகோதரியின் சாயலில் சிலுவையில் அறையப்பட்ட அவரைக் கண்டு, கிறிஸ்துவுக்காகப் பாடுபடுகிற அனைவரும் ஜீவனுள்ள தேவனோடு நித்திய ஐக்கியத்தைக் கொண்டிருக்கிறோம் என்று அவளுடன் சேர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் விசுவாசத்துக்குள் பெரிதும் ஈர்க்கப் பட்டனர். விலங்குகள் எதுவும் அவளைத் தொடாத காரணத்தால், அவள் கயிற்றிலிருந்து இறக்கப்பட்டு மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். மற்றொரு துன்புறுத்தலுக்கு தயார் செய்யும் முகமாக இது செய்யப்பட்டது. அவளது வெற்றியால் அவளது சகோதரர்கள் உற்சாகமடைந்தனர். சிறிய, பலவீனமான மற்றும் அருவருப்பான தோற்றத்தையுடையவளாக இருந்த போதிலும், அவள் பெரிய, வெல்ல முடியாத மகிமையின் அரசனான கிறிஸ்துவை தனக்குள் அணிந்திருந்தாள்.
அட்டலஸ் சமூகத்துக்குள் நன்கு அறியப்பட்டவர். எனவே அவர்கள் அவரை உரத்த குரலில் அழைத்தனர். அவர் அதில் ஒரு ஆயத்த போட்டியாளராக நுழைந்தார். கிறிஸ்தவ ஒழுக்கத்தில் நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர் மற்றும் சத்தியத்தின் நிலையான சாட்சியாக, தெளிவான மனசாட்சியுடன் வாழ்ந்தார். இலத்தீன் மொழியில் “இந்த அட்டாலஸ், ஒரு கிறிஸ்தவர்” என்று எழுதப்பட்ட ஒரு பலகை அவருக்கு முன்பாக அணிவிக்கப்பட்டு, நடனமேடை முழுவதும் கொண்டு செல்லப்பட்டார். அவ்வேளை மக்கள் அவருக்கு எதிராக வெறித்தனமாக கூச்சலிட்டனர். ஆனால் ஆளுநர், அவர் ஒரு உரோமையர் என்பதை அறிந்து, பேரரசருக்கு அதுபற்றி கடிதம் எழுதி, அவரை மற்றவர்களுடன் சேர்த்து சிறைக்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டார். எனினும் அவர் பேரரசரின்பதிலுக்காக காத்திருந்தார். அவர்களின் காத்திருப்புக் காலம் வீண் போகவில்லை. கிறிஸ்துவின் இரக்கம் அவர்களின் துன்பத்தின் மூலம் வெளிப்பட்டது. வாழ்பவர்களின் மத்தியில் இருந்து இறந்தோர் உயிருடன் மீட்கப்பட்டனர். வேதசாட்சிய மரணத்தை அனுபவிக்கத் தவறியவர்களுக்கு வேதசாட்சிகள் கருணை காட்டினார்கள். அவர்கள் மூலம் இறந்தவர்களில் பெரும்பாலோர் மீண்டும் பிறந்து, கிறிஸ்துவில் விசுவாசத்தை வெளிப்படுத்தக் கற்றுக்கொண்டனர். மேலும் ஆளுநரால் விசாரிக்கப்படும் பொருட்டு மீண்டும் நீதிமன்றத்தின் முன் கொண்டுவரப்பட்டனர். ஏனெனில் சீசர் [மார்கஸ் அவுரேலியஸ்] அவர்கள் சித்திரவதை செய்து கொல்லப்பட வேண்டும் என்றும், ஆனால் அவர்கள் விசுவாசத்துக்கு எதிராக துரோகம் செய்தால் அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் எழுதியிருந்தார். ஏராளமான புறஜாதியினர் கலந்துகொண்ட உள்ளூர் விழாவின் தொடக்கத்தில், ஆளுநர் அவர்களை தீர்ப்பாயத்திற்கு அழைத்துச் சென்று அங்கு கூடியிருந்தோர் முன்னிலையில் ஆசீர்வதிக்கப்பட்ட மனிதர்களைக் காட்சிப் படுத்தினார். மீண்டும் அவர்களைப் விசாரித்து, உரோமைய குடிமக்களாகத் தோன்றிய அனைவரது தலைகள் துண்டிக்கப் பட்டன. மற்றைய அனைவரையும் மிருகங்களுக்கு உணவாக அனுப்பினார். புறஜாதிகளின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, ஏற்கனவே கிறிஸ்துவை நிராகரித்தவர்கள், கிறிஸ்துவை மகிமைப்படுத்தினர். அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்காக தனித்தனியாக அழைத்து விசாரிக்கப்பட்டாலும், அவர்கள் தங்களது விசுவாசத்தை உறுதிசெய்து வேதசாட்சிகள் என்ற எண்ணிக்கையில் இணைந்தனர். அதுமட்டுமல்லாமல், கடவுள் மீது நம்பிக்கையோ பயமோ இல்லாத அந்நியர் – அழிவின் மக்கள் – அவர்கள் தங்கள் நடத்தையால் (கிறிஸ்தவர்களின்) வழியை நிந்தித்தவர்கள், போன்ற அனைவரும் திருச்சபைக்குள் சேர்க்கப்பட்டனர்.
அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டபோது அலெக்சாண்டர் என்ற ஒரு மனிதர் இருந்தார். அவர் பிறப்பால் ஃபிரிஜியனாகவும், தொழிலில் மருத்துவரும் ஆவார். அவர் பல ஆண்டுகளாக கவுலில் வாழ்ந்தார். அவர் கடவுளின் மீதுள்ள அன்பு மற்றும் துணிச்சலான பேச்சுக்கு பேர்போனவர். மேலும் தீர்ப்பாயத்தில் நின்று, கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தை வெளிப்படுத்தும்படி அவர்களை அழைத்தார். தீர்ப்பாயத்தைச் சுற்றி இருந்தவர்களுக்கு அவர் பிரசவ வலியில் துடிப்பவர் போலத் தெரிந்தார். ஆனால் விசுவாச துரோகிகள் மீண்டும் மதம் மாறியதால் ஆத்திரமடைந்த கூட்டத்தினர், அங்கு நடப்பவற்றுக்கு அலெக்சாண்டர்தான் பொறுப்பு என்று கூச்சலிட்டனர். ஆளுநர் அவரை அழைத்து அவர் யார் என்று கேட்டார். அவர் தான் “ஒரு கிறிஸ்தவர்,” என்று அவர் பதிலளித்தார். பின்னர், அவர் [ஆளுநர்] கோபமடைந்து, அவரை மிருகங்களுக்கு இரையாக அரங்கத்துக்குள் தூக்கி எறியும்படி தீர்ப்பளித்தார்.
இவை அனைத்தையும் தவிர, போட்டியின் கடைசி நாளில், பிளாண்டினா சுமார் பதினைந்து வயது சிறுவனான பொன்டிகஸுடன் மீண்டும் அழைத்து வரப்பட்டார். ஒவ்வொரு நாளும் அவர்கள் சித்திரவதைகளைப் பார்வையிட அழைத்துச் செல்லப்பட்டனர், அத்தோடு சிலைகள் மீது சத்தியம் செய்யும்படியும் கேட்கப்பட்டனர். அவர்களின் உறுதியான மறுதலிப்பால் ஆத்திரமடைந்த அவர்கள், சிறுவனை எல்லாவிதமான சித்திரவதைகளுக்கும் உட்படுத்தினார்கள். அவனது சிறுபராயத்துக்காக இரக்கம் கொள்ளவோ அல்லது அந்தப் பெண்ணின் மீது மரியாதை காட்டவோவில்லை. தனது சகோதரியால் வழிநடத்தப்பட்ட பொன்டிகஸ் கிறிஸ்துவில் மேலும் உறுதியாக இருந்தார். மேலும் அவர் தனது ஆன்மாவை இறுதியாக ஒப்புக்கொடுக்கும் வரை தைரியமாக ஒவ்வொரு கொடுமைகளையும் தாங்கினார். இறுதியாக, ஆசீர்வதிக்கப்பட்ட பிளாண்டினா, ஒரு உன்னதமான தாயைப் போல, தனது குழந்தைகளை ஆறுதல்படுத்தி, அரசனிடம் வெற்றியுடன் அனுப்பினார். திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டதைப் போல அவள் சுதந்திரமாக வெளியேறுவதில் மகிழ்ச்சியடைந்தாள். சாட்டையால் அடிக்கப்பட்டு, மிருகங்களுக்கு எறியப்பட்டு, தடிகளால் அடிக்கப்பட்ட பிறகு, அவள் இறுதியாக வலையில் சுற்றப்பட்டு ஒரு காளையின் முன் வீசப்பட்டாள். கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தின் காரணமாக, அந்த உயிரினம் இவள் பலியிடப்படுவதற்கு முன்பு சிறிது நேரம் அவளை அங்கும் இங்கும் தூக்கி வீசியபடி இருந்தது. இதற்கு முன் ஒரு பெண் என்பவள் இவ்வளவு துன்பங்களை, ஒருக்காலும் அனுபவித்ததில்லை என்று புறஜாதிகள் ஒப்புக்கொண்டனர்.
இத்தனை கொடுமைகள் அரங்கேறிய பின்பும் கூட, அவர்களின் வெறித்தனம் அடங்கியதாகத் தெரியவில்லை. (சாத்தானின் தூண்டுதலால் மேற்கொள்ளப்பட்ட) தாக்குதல் காரணமாக, சிறையில் கழுத்துகள் நெரித்துக் கொல்லப்பட்டவர்களின் உடலங்களை நாய்களுக்குத் தூக்கி எறிந்தனர். நாங்கள் அவர்கள் செய்யும் இப்படியான கொடுமைகளைக் கவனியாதிருந்ததை இரவு பகலாக நோட்டம் விட்டபடியே இருந்தனர். பின்னர் அவர்கள் மிருகங்கள் உண்டு மீதமிருந்த எச்சங்களை வெளியே எறிந்து அவற்றுக்கு தீ வைத்தனர். இந்த நிகழ்வுகளை ஒரு இராணுவ சிப்பாய் அங்கே வைக்கப்பட்டிருந்த தலைகளையும் உடற்பகுதிகளையும் பார்த்தபடி பல நாட்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அவன் அந்த மீதமிருந்த மனித உடலங்களை அடக்கம் செய்வதைத் தடுத்தான். சிலர் அவனைப் பார்த்து மனத்தால் கொதித்தனர். மற்றவர்கள் சிரித்து கேலி செய்தனர். அவர்கள் தங்கள் எதிரிகளை தண்டிப்பதற்காக தங்கள் சிலைகளை மகிமைப்படுத்தினர். இன்னும் நிதானமாக, கொஞ்சம் அனுதாபத்துடன், “அவர்களின் கடவுள் எங்கே?” என்றும், “அவர்கள் தங்கள் உயிரை விட அதிகமாக நேசித்த, தங்களையே தியாகம் செய்யத் துணிந்த, அவர்கள் பின்பற்றிய மதத்தால் என்ன இலாபம்?” என்றெல்லாம் கேட்டனர். ஆனாலும், இறந்தோரின் உடல்களை அடக்கம் செய்ய முடியாமல் நாம் மிகவும் தவிப்போடும், வேதனையிலும் ஆழ்ந்திருந்தோம்.
ஆறு நாட்கள் அனாதரவாய் விடப்பட்டு, கேட்பாரற்று, அவமதிக்கப்பட்ட பின்னர், வேதசாட்சிகளின் உடல்கள் எரிக்கப்பட்டு, சாம்பலாக்கப்பட்டு, அருகிலுள்ள ரோஹ்ன் நதியில் அந்தக் கொடூரர்களால் மிதக்க விடப்பட்டது. அவ்வாறு செய்வதன் மூலம், பூமியில் அவர்களைப் பற்றிய எந்த தடயத்தையும் விட்டுவைக்கக் கூடாது என்று அவர்கள் விரும்பினர். கடவுளை தோற்கடிக்கவும், தங்கள் மறுபிறப்பை தோற்கடிக்கவும் அவர்கள் இதைச் செய்தார்கள். அவர்கள் சொன்னதை பார்த்தல் “அவர்களுக்கு மறுமை பற்றிய எண்ணம் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆகவே அவர்கள் ஒரு விசித்திரமான புதிய பிரிவை உண்டுபண்ணி, சித்திரவதைகளைப் புறக்கணித்து, மகிழ்ச்சியுடன் மரணத்திற்குச் சென்றார்கள். இப்படியான சூழ்நிலையில், அவர்கள் மீண்டும் எழுந்திருப்பார்களா, அவர்களின் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவார்களா என்று பார்ப்போம்” என்று கொக்கரித்தார்கள்.
வெளியேறியவர்களுக்கான மறுவாழ்வு
2. மேலே கூறப்பட்ட பேரரசரின் ஆட்சியின் கீழ் உள்ள கிறிஸ்தவ சபைகளில் இதுதான் நடந்தது. அதிலிருந்து மற்றைய மாகாணங்களில் என்னென்ன நடந்திருக்கக்கூடும் என்பதை ஊகிக்க முடியும். மேற்கூறிய வேதசாட்சிகளின் மென்மையான இயல்பையும் இரக்கத்தை விவரிக்கும் அதே ஆவணத்தில் மேலும் அறிக்கைகள் இணைக்கப்பட்டுள்ளன:
அவர்கள் கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கு மிகவும் ஆர்வமாகவும் ஆவலாகவும் இருந்தார்கள். ஒரு முறை அல்ல, பல முறை சாட்சியமளிக்கும் மகிமைக்காகவும், கொடிய மிருகங்களுக்கு இறையாகப் போடப்பட்ட பின்பும் அவர்கள் திரும்பி வந்து, எரிகாயங்களால் ஏற்பட்ட வடுக்கள் மற்றும் இரணங்களுடன் மீண்டும் மீண்டும் முழு மகிமையோடு வந்து அவர்கள் தங்களை வேதசாட்சிகள் என்று காட்டிக்கொள்ளவில்லை. தங்களை அப்படி அழைக்க முற்பட்ட எவரையும் கண்டித்து, அவர்களை அந்தப் பெயரில் அழைக்கக் கூட எங்களை அனுமதிக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் வேதசாட்சி என்ற பெயரைப் பெறவில்லை. காரணம், உண்மையான வேதசாட்சியாக, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த முதற்பேறான கிறிஸ்துவுக்கு மட்டுமே அந்த பெயரை மகிழ்ச்சியுடன் சூட்டினர். ஏற்கனவே மரித்துப்போன சாட்சிகளை அவர்கள் எங்களுக்கு நினைவூட்டினர்: “உண்மையில் அவர்கள் கிறிஸ்து தன்னை வெளிப்படுத்திய தருணத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட வேதத்தின் உண்மையான சாட்சிகள். நாம் தாழ்மையுடன் விசுவாசத்தை அறிவிப்பவர்கள் மட்டுமே” என்று தன்னடக்கத்துடன் கூறினர். வேதசாட்சிய மரணத்தின் சக்தியை தங்கள் செயல்களால் நிரூபித்து, அவர்கள் தங்கள் சக வேதசாட்சிகள் முழுமை பெற வேண்டுமென பிரார்த்தனை செய்யும்படி கண்ணீருடன் மன்றாடினர். ஆனால் கடவுளுக்குப் பயந்து அந்தப் பெயர்களை சொல்ல மறுத்துவிட்டார்கள்.
அவர்கள் அனைவரையும் பாதுகாத்தனர் ஒருவரையும் குற்றம் சாட்டவில்லை. ஸ்டீவன் கூறியதைப் போல், “ஆண்டவரே, இந்தப் பாவத்தை அவர்கள் மீது சுமத்தாதேயும்” என்று அவர்கள், தங்களைத் துன்புறுத்தியவர்களுக்காக செபித்தார்கள் (அப்போஸ்தலர் பணிகள் 7.60). தன் மீது கல்லெறிந்தவர்களுக்காக செபிக்கும் போது, தன் சகோதரர்களுக்காக அவர் எவ்வளவு அதிகமாக செபித்திருப்பார்?
மிருகங்களால் விழுங்கப்பட்டவர்கள் என்று எண்ணியவர்கள், அந்த மிருகங்கள் மூச்சுத் திணறல் காரணமாக அவர்களை விழுங்க முடியாமல் மீண்டும் வெளியே கக்கியது தான் அவர்கள் முகம் கொடுத்த மிகப்பெரிய சவாலாக இருந்தது. இவ்வாறான சூழ்ச்சிகளுக்குள் வீழ்ந்தவர்களுக்காக அவர்கள் இறை தந்தையிடம் பிரார்த்தித்தார்கள். அவர்களைப் பற்றி தற்பெருமை கொள்ளவில்லை. ஆகவே இறைவன் அதை அவர்களுக்கு வழங்கினார். வெற்றியுடன் கடவுளிடம் செல்வதற்கு முன், அவர்கள் இதை தங்கள் அயலாருடன் பகிர்ந்து கொண்டனர். அத்தோடு மகிழ்ச்சி, சமாதானம், நல்லிணக்கம் மற்றும் அன்பை அவர்கள் விட்டுச் சென்றனர்.
பிற்காலத்தில் கிறிஸ்துவின் வழியைத் தேர்ந்தெடுத்தவர்களை மிகவும் கொடூரமாக நடத்தியவர்களின் மனிதாபிமானமற்ற மற்றும் இரக்கமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, கிருபையை இழந்த தங்கள் சகோதரர்களிடம் அந்த ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் காட்டிய அன்பைப் பற்றி எடுத்துரைப்பதற்கு இந்த மேற்கோள் போதுமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
அட்டாலஸ் என்ற வேதசாட்சியின் வெளிப்பாடு
3. இந்த வேதசாட்சிகள் பற்றிய குறிப்பில் இன்னொரு கதையும் அடங்கும். அவர்களிடையே மிகவும் சிக்கனமான, எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர்களில் அல்சிபேட்ஸ் என்ற ஒரு கணவானும் இணைந்து கொள்கிறார். இவர் அப்பம் மற்றும் தண்ணீரைத் தவிர எல்லாவற்றையும் நிராகரித்து வாழ்ந்தார். ஆனால் வெளியரங்கத்தில் அவரது முதல் ஆட்டத்திற்குப் பிறகு, அல்சிபேட்ஸ் சரியாகச் செயல்படவில்லை, கடவுள் படைத்ததைப் பயன்படுத்தத் தவறி, மற்றவர்களையும் தடுமாறச் செய்தார் என்பது அட்டாலஸுக்குப் புரிந்தது. இதை அறிந்துகொண்ட அல்சிபேட்ஸ் எல்லாவற்றையும் சுதந்திரமாக சாப்பிடத் தொடங்கினார். அதற்காக கடவுளுக்கு நன்றி கூறினார்.
இந்த நேரத்தில் பிரிஜியாவின் மாண்டனஸ், அல்சிபேட்ஸ், தியோடோடஸ் மற்றும் அவர்களைப் பின்பற்றுபவர்கள் தீர்க்கதரிசனத்திற்கு நற்பெயர் பெறத் தொடங்கினர். ஏனென்றால், இன்னும் பல திருச்சபைகளில் கடவுளின் பல அற்புதமான வெகுமதிகள் உருவாக்கப்பட்டு வந்துகொண்டிருந்தன. இதனால் அவர்களும் தீர்க்கதரிசிகள் தான் என்று பலர் கருதினர். அவர்களைப் பற்றி தகராறு ஏற்பட்டபோது, கௌல் என்ற இடத்தில் இருந்த சகோதரர்கள் மீண்டும் இந்த கேள்விக்கு தங்கள் சொந்த விருப்பில் கவனமாக, நிதானமாக தங்கள் பாரம்பரிய தீர்ப்பை வழங்கினர். மேலும் அவர்களிடையே கோட்பாட்டு சாட்சிகளாக சிறையில் இருந்த புகழ்பெற்ற கல்வியாளர்கள், திருச்சபையின் சமாதானத் தூதர்கள் மூலம் நிருபங்கள் ஆசியா மற்றும் பிரிஜியாவில் உள்ள அவர்களது சகோதரர்களுக்கும் பின்னர் உரோமில் இருந்த ஆயரான லூத்தரஸுக்கும் கொடுக்கப்பட்டன.
வேதசாட்சிகள் இரேனியஸைப் போற்றுகின்றனர்
4. அதே வேதசாட்சிகள் ஏற்கனவே உரோமைய ஆயருக்கு இந்த வார்த்தைகளை தெரியப்படுத்தி, லியோன்ஸின் போற்றத்தக்க மனிதரான ஐரேனியஸை அன்புடன் பாராட்டினர்:
அருட்தந்தையான லூத்தரஸ் அவர்கட்கு, எப்போதும் போல், மீண்டும் கடவுள் பெயரால் உங்களுக்கு என் வாழ்த்துக்கள். இந்தக் கடிதத்தை எங்கள் சகோதரரும் சக ஊழியருமான ஐரேனியஸிடம் ஒப்படைத்துள்ளோம். கிறிஸ்துவின் உடன்படிக்கையின் ஆர்வலராக அவரை உயர்த்துமாறு உங்களை மன்றாடிக் கேட்கிறோம். ஏனென்றால், அந்தஸ்தின் அடிப்படையில் எவருக்கும் நீதி வழங்கப்படலாம் என்று நாங்கள் எண்ணியதால், முதலில் அவரை திருச்சபையின் ஒரு மூப்பராக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென பரிந்துரைக்கிறோம். அவர் உண்மையில் அவ்வாறான ஒரு ஒழுக்க சீலராகவும், கனவானாகவும் விளங்குகிறார்.
இங்கு ஏற்கனவே நான் குறிப்பிடப்பட்ட ஆவணத்திலிருந்து சாட்சிகளின் பட்டியலை நகலெடுக்க விரும்புகிறேன். சிலர் வேதசாட்சிய மரணத்தை தலைகளைத் துண்டிப்பதன் மூலம் நிறைவேற்றினர். மற்றவர்கள் காட்டு மிருகங்களுக்கு உணவாக வீசப்பட்டனர். ஏனையோர் சிறையில் சித்திரவதைகளுக்கு இலக்காகி கொல்லப்பட்டனர். அதனால், அந்தக் காலத்தில் உயிர் பிழைத்த விசுவாசிகளின் எண்ணிக்கையை எழுதுவது அவசியமா என்று கேட்கத் தோன்றுகிறது. ஆர்வமுள்ள எவரும் நான் முன்பு கூறியது போல் வேதசாட்சிகள் பற்றிய தொகுப்பில் (Collection of Martyrs) உள்ள முழு கட்டுரையையும் எளிதாகப் படிக்கலாம். அண்டோனியசின் (மார்கஸ் அவுரேலியஸ்) ஆட்சியின் கீழ் இடம்பெற்ற நிகழ்வுகள் இப்படித்தான் இருந்தன.
கிறிஸ்தவர்களின பிரார்த்தனைகளால் மழை பொழிந்தது
5. அவரது சகோதரர் மார்கஸ் அவுரேலியஸ் சீசர் ஜெர்மனியர்களுடனும் சர்மேத்தியர்களுடனும் சண்டையிட்டபோது, அவரது காலாட்படையினர் மிகவும் தாகமுற்று இருந்ததால் அவர் மிகவும் கவலையுடனிருந்தார் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்தக் காலத்திலிருந்து இன்றுவரை மெலிடியன் படையணியின் வீரர்கள் எதிரிகளுடனான அவர்களின் போரில் அவர்களை வலுப்படுத்த விசுவாசத்துடன் நிலத்தின் முழந்தாளிட்டு அமர்ந்து கடவுளிடம் முறையிட்டனர் (எங்கள் வழக்கப்படி பிரார்த்தனை என்று கூறுகிறோம்). அதைக் கண்டு வியந்த பகைவர், தாகத்தால் வாடி மரணத் தறுவாயில் இருந்த அனைவருக்கும் புத்துணர்ச்சி அளித்து, பிரார்த்தனை செய்து படையின் மீது மழை பொழியச் செய்தனர். அதன்மூலம் அவர்களிடமிருந்து தப்பியோடியவர்களை அழிக்க அங்கே தோன்றிய மின்னலைக் கண்டு மேலும் வியப்பும் அச்சமும் கொண்டனர்.
இந்தப் பேரரசர்களின் காலத்திலும் நம் காலத்திலும் வாழ்ந்த நம் நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட எழுத்தாளர்களால் இந்தக் கதை புனையப்பட்டுள்ளது. புறஜாதி எழுத்தாளர்கள் இந்த அற்புதமான நிகழ்வை பதிவு செய்துள்ளனர். எனினும், அது கிறிஸ்தவர்கள் செய்த பிரார்த்தனைகளின் விளைவாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால் நம் சொந்த எழுத்தாளர்கள், சத்தியத்தை நேசிப்பவர்கள், இந்த அத்தியாயத்தை எளிமையாகவும் நேரடியாகவும் விவரித்துள்ளனர். உதாரணமாக, அப்போலினாரியஸ் இலத்தீன் மொழியில் “தண்டரிங் லீஜியன்” என்று அழைக்கப்படும் அதிசயமான பிரார்த்தனைகளைச் செய்த படையணிக்கு பேரரசர் பொருத்தமான பெயரைக் கொடுத்தார் என்று கூறுகிறார். நான் ஏற்கனவே மேற்கோள் காட்டியபடி, உரோமைய சட்டசபையில் உரையாற்றிய டெர்டுல்லியன், அவரது லத்தீன் மொழிமூல புத்தகமான Defence of the faith இல் கூறப்பட்டவற்றை மேலும் ஆதாரங்களுடன் உறுதிப்படுத்துகிறார். பேரரசர்கள் மத்தியில் புத்திசாலியான மார்கஸின் கடிதங்கள் இன்னும் நம்மிடையே இருப்பதாகவும், ஜேர்மனியில் அவரது படைகள் தண்ணீரின்றி அழிவை நோக்கி சென்றபோது, கிறிஸ்தவர்களின் பிரார்த்தனையால் அவர்கள் காப்பாற்றப்பட்டனர் என்றும், எனவே, எங்கள் மீது குற்றம் சாட்ட முயற்சிக்கும் எவருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று பேரரசர் உத்தரவிட்டார் என்றும் கூறுகிறார். டெர்டுல்லியன் மேலும் தொடர்ந்து கூறுகையில்:
பொல்லாத, அக்கிரம, கொடூரத் தன்மை கொண்ட மனிதர்கள் நமக்கு எதிராக மட்டும் ஏன் வேறு மாதிரியான சட்டங்களைப் பயன்படுத்துகிறார்கள்? வெஸ்பாசியன் யூதர்களை வென்றார். ஆனால் அவர்களை அடக்கியாளவில்லை. ட்ரொஜன் அவர்களை ஓரளவு பிடித்து வைத்திருந்தார், ஆனால் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதைத் தடை செய்தார். ஹட்ரியன், தேவ இரகசியங்கள் அனைத்தையும் பற்றி அறிந்துகொள்ள ஆர்வமாக இருந்தாலும், அவற்றை ஒருபோதும் கூடாதென்று அங்கீகரிக்கவில்லை. பயஸும் தன் பெயருக்கு ஏற்ற வகையில் அவற்றை நிறைவேற்றவில்லை.
இந்த விஷயங்களில் ஒவ்வொருவரும் தத்தம் சொந்த கருத்தைக் கொண்டிருக்கலாம். எனினும் நான் நடைபெற்ற நிகழ்வுகளுக்குள் மீண்டும் செல்ல வேண்டும்.
உரோம் நகரத்து ஆயர்கள்
போத்தினஸ் தொண்ணூறு வயதில் கவுல் பிரதேசத்தில் ஒரு வேதசாட்சியாக இறையடி எய்திய பின், ஐரேனியஸ் லியோன்ஸின் ஆயராக நியமனம் பெற்றார். அவர் தனது இளமை பருவத்தில் பொலிகார்ப் அவர்களது உரையை செவிமடுத்ததாக கூறப்படுவதை அறிகிறோம். லூதரஸ் வரையிலான உரோமைய ஆயர்களது வாரிசுகளின் வரிசையை அவர் தனது 3வது புத்தகத்தில் பட்டியலிட்டுள்ளார். நான் இப்போது விவரிக்கும் காலம் அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தது. ஐரேனியஸ் அங்கே இவ்வாறு எழுதினார்:
6. ஆசீர்வதிக்கப்பட்ட அப்போஸ்தலர்கள் திருச்சபையை நிறுவி அதைக் கட்டியெழுப்பியபோது, தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதிய நிருபத்தில் (2 தீமோத்தேயு 4:21) குறிப்பிடப்பட்டவாறு லீனஸுக்கு ஆயர் பதவியை வழங்கினார்கள். அவருக்குப் பிறகு அனெக்லேட்டசும், அவருக்குப் பிறகு அப்போஸ்தலர்களான கிளெமென்ட் மூன்றாவது ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார். ஆனார். அவர் ஆசீர்வதிக்கப்பட்ட அப்போஸ்தலர்களுடன் உரையாடினார். அவர்களின் போதனைகள் இன்னும் அவரது காதுகளில் ஒலிக்கின்றன என்றார். அவர் மட்டுமல்ல, அப்போஸ்தலர்கள் கற்பித்தவர்களில் பலர் அச்சமயம் உயிருடன் இருந்தனர். கிளெமெண்டின் காலத்தில், கொரிந்துவில் உள்ள கிறிஸ்தவர்களிடையே பெரும் சர்ச்சை மூண்டது. மேலும் உரோமைய திருச்சபையானது கொரிந்தியர்களை சமாதானம் செய்து, அவர்களின் விசுவாசத்தைப் புதுப்பித்து, அச்சமயம் அப்போஸ்தலரிடமிருந்து பெற்ற பாரம்பரியத்தின் படி ஒரு வலுவான கடிதத்தை அனுப்பியது…
ஆயர் கிளெமென்ட் அவர்களுக்குப் பின், எவரெஸ்டஸ் பதவியில் அமர்ந்தார். அவர் பெயர் அலெக்சாண்டர் எவரெஸ்டஸ். அவருக்குப் பின் சிஸ்டஸ் பதவியேற்றார். அவர் அப்போஸ்தலர்களுக்குப் பிறகு ஆறாவது ஸ்தானத்தில் இருந்தார். அவருக்குப் பின் டெலஸ்போரஸ் ஆட்சிக்கு வந்தார். அவரும் வேதசாட்சியாக மகிமையுடன் மரணத்தைத் தழுவினார். அவருக்குப் பிறகு ஹைஜினஸ், தொடர்ந்து பயஸ், அவரைத் தொடர்ந்து அனிசெட்டஸ் ஆகியோர் பதவியில் நிலைத்திருந்தனர். சோட்டர் அனிசெட்டஸுக்குப் பின் பதவிக்கு வந்தார். மேலும் அப்போஸ்தலர்களுக்குப் பிறகு பன்னிரண்டாவது ஸ்தானத்தில் இருந்த லூத்தரஸ் ஆயராக திருநிலைப்படுத்தப் பட்டார். திருச்சபையின் அப்போஸ்தலிக்க மரபும் சத்திய பிரசங்கமும் ஒரே ஒழுங்கு மற்றும் போதனையின் படி எம்மை வந்தடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆச்சரியப்படத்தக்க சக்திகள் தொடர்ந்து செயல்படுகின்றன
7. ஐரேனியஸ் இந்தக் காரணிகளை ஐந்து புத்தகங்களில் Refutation and Overthrow of Knowledge Falsely So-Called [மறுப்பு மற்றும் அறிவு பொய்யாக அழைக்கப்பட்டதை முறியடித்தல்] என்ற தலைப்பில் விவரிக்கிறார். அதன் இரண்டாவது புத்தகத்தில், சில திருச்சபை அமைப்புக்களில் தெய்வீக மற்றும் அற்புத சக்தி அவரது காலம் வரை தொடர்ந்ததாகக் குறிப்பிடுகிறார்:
ஆனால் அவை மரித்தோரை உயிர்த்தெழச் செய்தல் போன்ற அற்புதங்களை விட குறைவானதாகவே இருந்தன. கர்த்தரும் அவருடைய அப்போஸ்தலர்களும் செபத்தின் மூலமும், கிறிஸ்தவர்களிடையே காணப்படும் அவசியத் தேவைகளின் நிமித்தமும் முழு உள்ளூர் திருச்சபை அமைப்புகளும் உபவாசம் இருந்து தியானித்து கடவுளிடம் செபித்தபோது, இறந்தவர்களின் ஆத்மாக்கள் புனிதர்களின் பிரார்த்தனை மூலம் மீண்டும் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், கர்த்தர் வெளித் தோற்றத்தில் மட்டுமே இவற்றைச் செய்தார் என்று அவர்கள் கூறுவார்களானால், இவை அனைத்தும் அவரைப் பற்றி தீர்க்கதரிசிகளால் முன்னறிவிக்கப்பட்டவை என்பதையும், அவை உண்மையில் நிகழ்ந்தன என்பதையும், அவர் ஒருவரே பிதாவாகிய இறைவனின் ஏக சுதன் என்பதையும் தீர்க்கதரிசன சான்றுகளைக் கொண்டு அவர்களுக்கு நான் நிரூபிப்பேன். அவருடைய உண்மையான சீடர்கள், அவருடைய அருளால் நிரப்பப்பட்டவர்கள், அவரிடமிருந்து பெற்ற வரப்பிரசாதங்களுக்கு ஏற்ப மற்றவர்களின் நன்மைக்காக அவருடைய பெயரில் பயன்படுத்துகிறார்கள். சிலர் உண்மையில் அசுத்த ஆவிகளை விரட்டும் காரியங்களிலும் ஈடுபடுகிறார்கள். இவ்வாறு தீய ஆவிகளிலின் பிடியிலிருந்து மீட்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டவர்கள் விசுவாசம் கொண்டு திருச்சபையில் இணைகின்றனர். மற்றும் சிலருக்கு எதிர்காலம் பற்றிய ஆரூடம் கூறுதல், தரிசனங்கள் மற்றும் தீர்க்கதரிசனம் பற்றிய அறிவு போன்ற வெகுமதிகளாய்த் தரப்பட்டு உள்ளன. வேறு சிலர் தமது கைகளை நோயுற்றவர்கள் மீது வைத்து, அவர்களைக் குணப்படுத்தி, அவர்களை மீட்டெடுக்கிறார்கள். நான் ஏற்கனவே சொன்னது போல், இறந்தவர்கள் கூட மீண்டும் உயிர்த்தெழுந்து எங்களுடன் பல ஆண்டுகளாக வாழ்ந்திருக்கிறார்கள். போஞ்சியு பிலாத்துவின் கீழ் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் பெயரில் உலகம் முழுவதும் உள்ள திருச்சபைக்கு கடவுள் வழங்கிய வெகுமதிகளை ஆசீர்வாதங்களும் எண்ணிலடங்காதவை. அவை புறஜாதிகளின் நலனுக்காக தினமும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் எவரும் தவறாக வழிநடத்தப் படவில்லை, எவரையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவர்கள் கடவுளிடமிருந்து இவ்விதமான அருட்கொடைகளை இலவசமாகப் பெற்றுக் கொள்கிறார்கள். ஆதலால் இலவசமாகவே சேவை செய்கிறார்கள்.
இதே ஆசிரியர் வேறொரு இடத்தில் பின்வருமாறு எழுதுகிறார்…
பல சகோதரர்கள் தீர்க்கதரிசன வரப்பிரசாதங்களைப் பெற்றிருப்பதையும், தூய ஆவியின் மூலம் பலவிதமான பாஷைகளில் பேசுவதையும், பொது நன்மைக்காக மனிதர்களின் ஒளிந்திருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்துவதையும், கடவுளின் இரகசியங்களை விளக்குவதையும் நாம் கேள்விப்படுகிறோம்.
இவ்வாறாக நான் பேசிக்கொண்டிருக்கும் காலம் தொடக்கம் இற்றை வரை, தகுதியானவர்களிடையே இதுபோன்ற பல்வேறு கொடைகள் வரப்பிரசாதங்களாய் அருளப்பட்டுள்ளன.
வேதாகமத்தைப் பற்றி ஐரேனியஸ் வெளியிட்ட கருத்துக்கள்
8. எனது இந்த எழுத்துப் பணியின் தொடக்கத்தில், ஆரம்பகால மூப்பர்கள் மற்றும் திருச்சபை வரலாற்றாசிரியர்களின் மரபுகளை மேற்கோள் காட்டுவதாக உறுதியளித்தேன். அவர்களில் ஒருவரான ஐரேனியஸ் பரிசுத்த நற்செய்திகளைப் பற்றி பின்வருமாறு எழுதுகிறார்:
எபிரேயர்களுக்காக அவர்களின் சொந்த மொழியில் எழுதப்பட்ட ஒரு நற்செய்தியை மத்தேயு இயற்றினார். அதேபோல், பேதுருவும் பவுலும் உரோமில் நற்செய்தியைப் பிரசங்கித்து அங்கு திருச்சபையைத் தொடங்கினர். அவர்களின் மரணத்திற்குப் பிறகு, பேதுருவின் சீடரும் மொழிபெயர்ப்பாளருமான மார்க், பேதுரு சொன்னதை எழுத்து பூர்வமாக தொகுத்து எங்களிடம் ஒப்படைத்தார். அதேவேளை, பவுலைப் பின்பற்றிய லூக்கா, பவுல் பிரசங்கித்த நற்செய்தியை ஒரு புத்தகமாக எழுதினார். பின்னர், கர்த்தராகிய இயேசுவின் அன்பில் சார்ந்திருந்த, கர்த்தரின் சீடரான யோவான், ஆசியா கண்டத்தின் எபேசஸில் வாழ்ந்தபோது நற்செய்தியை இயற்றினார்.
இந்த அறிக்கைகள் மேற்கோள் காட்டப்பட்ட படைப்பின் புத்தகம் 3 இல் ஐரேனியஸால் எழுதப்பட்டது. புத்தகம் 5 இல் அவர் யோவானின் வெளிப்பாடு மற்றும் அந்துக்கிறிஸ்து சம்பந்தப்பட்ட பெயர்களின் எண்ணிக்கையைப் பற்றி கூறுகிறார்:
இந்த எண்ணிக்கை அனைத்து தெளிவான, பண்டைய கையெழுத்துப் பிரதிகளிலும் காணப்படுகிறது மட்டுமன்றி, யோவானை நேருக்கு நேர் பார்த்தவர்களால் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. மேலும், அங்குள்ள எழுத்துக்களில் இருந்து கிரேக்க எண்ணில் மிருகத்தின் பெயர் தோன்றுவதைக் காண்கிறோம் என்றும் வாதிடப்படுகிறது… அந்துகிறீஸ்து என்று கூறப்படுவோரின் பெயரைப் பற்றி நேர்மறையான அறிக்கையை வெளியிடும் ஆபத்தான சூழ்நிலைக்குள் நான் போக விரும்பவில்லை. இந்த இடத்தில் அவருடைய பெயர் தெளிவாக அறிவிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அந்த வெளிப்பாட்டைக் கண்ட ஒருவரால் மட்டுமே அதுபற்றி தெளிவுபடுத்தப்படும். இது மிக நீண்ட காலத்திற்கு முன்பு நடந்தது அல்ல, எனது சொந்த தலைமுறையினருக்கு நெருக்கமாகவும், டொமிஷியனின் ஆட்சியின் இறுதியிலும் இது காணப்பட்டது.
அவர் 1 யோவான் புத்தகத்தில் பல மேற்கோள்களுடன் இதுபற்றிக் குறிப்பிடுகிறார். 1 பேதுருவின் புத்தகத்திற்கும் இது பொருந்தும். அவர் மேய்ப்பனை அறிந்தது மட்டுமல்லாமல், அவரை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டார். ‘சகலவற்றையும் படைத்து, அனைத்தையும் ஒன்றாக இணைத்தவர் இறைவன் ஒருவரே என்பதை முதலில் விசுவாசியுங்கள்” என்று கூறினார். அவர் சொலமனின் ஞானத்திலிருந்து மேலோட்டமாக மேற்கோள் காட்டுகிறார்; அதாவது, கடவுளின் தரிசனத்தின் நிலையான தன்மையைப் பற்றி விவாதிக்கிறார். மேலும் அழியாத தன்மை என்பது நம்மை கடவுளிடம் நெருங்கி இருக்கச் செய்கிறது.” அவர் பரிசுத்த வேதாகமத்தில் பெயரிடப்படாத அப்போஸ்தலிக்க மூப்பரையும் மேற்கோள் காட்டுகிறார், வேதசாட்சிகளான ஜஸ்டின் மற்றும் இக்னேஷியஸின் எழுத்துக்களை அடிக்கடி மேற்கோள் காட்டுகிறார். மேலும் மார்சியனின் சொந்த படைப்புகளின் அடிப்படையில் மார்சியனை மறுப்பதாக சபதம் செய்தார்.அவர் பெயரிடப்படாத அப்போஸ்தலிக்க மூப்பரையும் மேற்கோள் காட்டுகிறார். அத்தோடு மார்சியனின் சொந்த படைப்புகளின் அடிப்படையில் மார்சியனை நிராகரிப்பதாகவும் உறுதியளித்தார்.
Septuagint அதாவது, பழைய ஏற்பாட்டின் எபிரேய-கிரேக்க பதிப்பு பற்றி அவர் பின்வருமாறு எழுதுகிறார்:
எனவே கடவுள் மனிதரானார், ஒரு மாசற்ற கன்னியின் அடையாளத்தை நமக்குக் கொடுத்து கர்த்தர் நம்மை இரட்சித்தார். ஆனால் இது நம் காலத்தில் வாழ்ந்த சிலர் அந்த பகுதியை மொழிபெயர்க்க முயற்சித்தது போல் தெரியவில்லை: “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெறுவாள்.” எபிசஸின் தியோடோசியஸ் மற்றும் பொன்டஸின் அகியூலா ஆகியோரால் முன்வைக்கப்பட்ட போலியான வெற்று வாதங்களைக் கொண்டு பார்க்கும்போது, எம் கர்த்தர் ஜோசப்பின் குழந்தை என்று கூறிக்கொள்ளும் எபியோனைட்டுகளைப் போல இது இல்லை என்றே தோன்றுகிறது.
உரோமையர்கள் தங்கள் ஆட்சியை நிறுவுவதற்கு முன்பும், மசிடோனியர்கள் ஆசியாவில் அந்நேரம் ஆட்சியைப் பிடித்திருந்த போதும், அலெக்சாந்திரியாவில் அவர் நிறுவிய நூலகத்தை முழுவதுமாக சிறந்த நூல்களால் அலங்கரிக்க ஆர்வமாக இருந்த லேகஸின் மகன் தொலமி, ஜெருசலேம் வாசிகளிடம் அவர்களது மொழியில் எழுதப்பட்டிருந்த வேதாகமத்தை கிரேக்க மொழியில் மொழிபெயர்ப்பு செய்து தரும்படி கேட்டுக்கொண்டார். மசிடோனியர்களின் ஆட்சி நிலவிய காலத்தில், அவர்கள் வேதாகமம் மற்றும் மொழிப்புலமை போன்ற இரண்டிலும் பாண்டித்தியம் பெற்ற, தங்களிடம் இருந்த மிகவும் திறமையான மூப்பர்களில் எழுபது பேரை தொலமியிடம் அனுப்பினார்கள். இவ்வாறு செய்ததன் வாயிலாக, அவர்கள் கடவுளின் நோக்கத்தை நிறைவேற்றினார்கள். அவர்கள் வேதாகமத்தின் உண்மையான அர்த்தத்தை மறைத்துவிடுவார்களோ என்று தொலமி பயந்தார். எனவே அவர் அந்த அறிஞர்களை வெவ்வேறு குழுக்களாகப் பிரித்து, வேதாகமத்தின் அனைத்து புத்தகங்களையும் ஒரே விதமான மொழிபெயர்ப்புக்குள் உள்வாங்கி எழுதும்படி அனைவருக்கும் கட்டளையிட்டார். அவர்கள் தொலமிக்கு முன்பாக மீண்டும் கூடி, தனித்தனியாக எழுதப்பட்ட மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டுப் பார்த்தபோது, வேதாகமம் உண்மையிலேயே தெய்வீகமானதாகவும், கடவுளை மகிமைப்படுத்தியதாகவும் காணப்பட்டது. அவர்கள் அனைவரும் ஒரே வார்த்தைகளிலும் சொற்றொடர்களிலும் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே விஷயத்தை மொழிபெயர்த்து அதன் அர்த்தத்தை விளக்கி இருந்தபடியால், வேதாகமம் கடவுளின் தூண்டுதலால் மொழிபெயர்க்கப்பட்டது என்பது, கூட இருந்த அஞ்ஞானிகளுக்கும் தெரியவந்தது. கடவுள் இவ்வாறு செய்ததில் ஆச்சரியம் கொள்வதற்கு ஒன்றுமில்லை. பாரசீக மன்னன் அர்தசஷ்டாவின் ஆட்சிக் காலத்தில், நேபுகாத்நேச்சார் அவர்கள் நாடுகடத்தப்பட்டு, வேதாகமங்கள் அழிக்கப்பட்டு எழுபது ஆண்டுகள் கடந்த நிலையில், யூதர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்பியபோது, மோயீசன் வழங்கிய சட்டம் அதேபோல் பண்டைய தீர்க்கதரிசிகளின் அனைத்து வார்த்தைகளும் மீள உருவாக்கப்பட வேண்டும் என லேவி கோத்திரத்தின் துறவியான எஸ்ராவிடம் கூறினார். அவர் கூறியவாறே அவை யாவும் நடந்தேறின.
இவைதான் ஐரேனியஸ் வெளியிட்ட கருத்துக்கள் பற்றிய விளக்கங்கள்.
அலெக்சாந்திரியாவின் பன்டீனஸ்
9. அன்டோனியஸ் (மார்கஸ் அவுரேலியஸ்) பத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு, கொமோடஸ் அவர்களுக்கு இறையாண்மை கைமாறியது. அவரது ஆட்சியின் முதல் ஆண்டில், அக்ரிப்பினஸ் பன்னிரண்டு வருட சேவையை முடித்த பிறகு, ஜூலியன் அலெக்சாந்திரியாவின் ஆயராக நியமிக்கப்பட்டார்.
10. அந்தச் சமயத்தில், கல்வியில் புகழ் பெற்று விளங்கிய பன்டீனஸ் என்பவர், அலெக்சாந்திரியாவில் உள்ள விசுவாசிகளின் பள்ளியின் பொறுப்பாளராக இருந்தார். இந்தக் கல்வி நிறுவனம் நமது காலம் வரை இருந்து வந்ததாகவும், உயர்ந்த அறிவும், ஆன்மீக ஆர்வமும் கொண்டவர்களால் இது கண்காணிக்கப்பட்டு வந்தது என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பன்டீனஸ் அக்காலகட்டத்தில் மிகவும் பிரபலமான ஆசிரியர்களில் ஒருவராக விளங்கினார். நடுநிலையுணர்வு கோட்பாடுசார் தத்துவவாதிகளில் ஒருவராகவும் அவர் திகழ்ந்தார். அவர் தெய்வீக வார்த்தையை பின்பற்றுவதில் மிகவும் வைராக்கியமாக இருந்ததால், கீழைத்தேய மக்களுக்கு கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரசங்கிக்க இந்தியா வரை சென்றார் என்று அவர்கள் கூறுகிறார்கள். கிறிஸ்துவை அறிந்த சிலர் மத்தியில், மத்தேயுவின் நற்செய்தி ஏற்கனவே அங்கு இருந்ததை அவர் கண்ணுற்றார். அப்போஸ்தலர்களில் ஒருவரான பர்த்தலோமியஸ் அவர்களுக்குப் பிரசங்கித்திருந்தார். அதுவரை அங்கே பாதுகாக்கப்பட்டிருந்த மத்தேயுவின் நற்செய்தி அவர்களுக்கு எபிரேய எழுத்துக்களில் கொடுக்கப்பட்டது. பல வெற்றிப் படிகளைக் கடந்த பிறகு, பன்டினெஸ் இறுதியில் அலெக்சாந்திரியாவில் உள்ள பள்ளியின் அதிபராக நியமனம் பெற்றார். அங்கு அவர் தெய்வீக நியதியின் பொக்கிஷங்களை வாய்வழியாகவும் எழுத்து வடிவிலும் வெளிப்படுத்தினார்.
அலெக்சாந்திரியாவின் கிளமென்ட்
11. கிளெமென்ட் அவர்களின் காலத்தில் அப்போஸ்தலர்களின் சீடராக, இருந்த, அதே பெயரில் உரோமைய திருச்சபையின் முன்னாள் தலைவராக இருந்த கிளெமென்ட், அலெக்சாந்திரியாவில் வேதாகமத்தை ஆய்வு செய்தமைக்காக பிரபலம் பெற்று விளங்கினார். அவரது Outlines என்ற நூலில், பான்டீனஸை தனது ஆசிரியராகக் குறிப்பிடுகிறார். மேலும் அவரது Miscellaneous 1 என்ற புத்தகத்திலும் இதுபற்றிக் குறிப்பிடப் பட்டதாகத் தெரிகிறது. அவர் தொடர்பு கொண்ட அப்போஸ்தலிக்க வாரிசுகள், அவர்களுள் மிகவும் புகழ்பெற்ற உறுப்பினர்கள் போன்றோரைக் குறித்து அவர் பின்வருமாறு கூறுகிறார்:
இது மனதைக் கவரும் வண்ணம் எழுதப்பட்ட ஒரு நூல் அல்ல என்ற போதிலும், மறதிக்கான மருந்தாக நான் செய்யும் குறிப்பு, என் முதுமையின் காரணமாக எனது நினைவில் இருந்து இவை மறைந்து விடக்கூடும் என்று எண்ணி பாதுகாக்கப்பட்ட குறிப்புகள். அவற்றில் நான் புனைந்திருப்பது தெளிவான மற்றும் முக்கியமான வார்த்தைகளின் சுருக்கம் மட்டுமே. உண்மையில் உத்தமர்கள் என்று போற்றப்படக்கூடிய மனிதர்களிடமிருந்து நான் அறிந்து கொண்ட ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் பெரும் பாக்கியம் பெற்ற அந்த தெளிவான மற்றும் முக்கியமான வார்த்தைகளின் சுருக்கம். இங்கே குறிப்பிடப்பட்டுள்ள அயோனியர்கள் வாழ்ந்தது கிரேக்கத்தில். இரண்டாமவர் தெற்கு இத்தாலியிலும், மூன்றாமவர் லெபனானிலும் நான்காமவர் எகிப்திலும் வாழ்ந்தனர். ஏனையோர் கீழைத்தேயத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் அசிரிய நாட்டவர். மற்றொருவர் பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர் மற்றையவர் எபிரேய வம்சாவளியைச் சேர்ந்தவர். பிந்தையவரை நான் சந்தித்தபோது – அவர் திறமையில் முதன்மையானவர் என்பதை அறிந்து கொண்டேன் – அவர் எகிப்தில் இருந்த காலத்தில் நான் அவரைத் தேடிச்சென்று சந்தித்த் பின்பு எனக்கு கொஞ்சம் ஓய்வு கிடைத்தது. இந்த மனிதர்கள் புனித அப்போஸ்தலர்களான பேதுரு, யாக்கோபு, யோவான் மற்றும் பவுல் ஆகியோரிடமிருந்து நேரடியாக கிடைத்த பரிசுத்தமான போதனையின் உண்மையான பாரம்பரியத்தை பாதுகாத்தனர். தந்தைமாரிடமிருந்து மகன்மார் அதைப் பெற்றுக் கொண்டதன் காரணமாக பின்பற்றினர். (ஆனால் சிலர் தங்கள் தந்தைகளைப் போல இருந்தனர்). கடவுளின் அருளால் அவர்கள் என்னிடம் வந்துள்ளனர். இது அந்த பாரம்பரிய மற்றும் அப்போஸ்தலிக்க வித்துக்களை நடச் செய்து அவற்றை முளைக்கச் செய்யும் நோக்கத்திற்காகவே என்னிடம் வந்துள்ளனர்.
ஜெருசலேமின் ஆயர்கள்
12. அவர்கள் காலத்தில், நர்சிஸஸ் ஜெருசலேமில் உள்ள திருச்சபையின் ஆயராக இருந்தார். மேலும் ஹட்ரியனின் கீழ் மேற்கொள்ளப்பட்ட யூதர்களின் முற்றுகைக்குப் பிறகு அவர் தொடர்ந்து பதினைந்தாவது ஆயராக இருந்தார். அவர் இன்னும், மிகவும் பிரபலமானவர். அப்போதிருந்த சபை யூத கிறிஸ்தவர்களுக்குப் பதிலாக புறஜாதிகளை அதிகமாகக் கொண்டிருந்தது, மேலும் ஏற்கனவே இங்கு குறிப்பிட்டபடி முதல் புறஜாதி ஆயராக மார்க் திகழ்ந்தார். அவருக்குப் பிறகு, காசியன் ஆயராக நியமனம் பெற்றார் என்று உள்ளூர் பதிவு கூறுகிறது. அவருக்குப் பிறகு பப்லியஸ், பிறகு முறையே மாக்சிமஸ், ஜூலியன், கேயஸ், சிம்மாச்சஸ், மற்றுமொரு கயஸ், மற்றுமொரு ஜூலியன், கேபிடோ, வலன்ஸ், டோலிச்சியன் போன்றோரும், இறுதியாக நர்சிசஸ் ஆகியோர் சேவையாற்றினர். கடைசியாகக் குறிப்பிடப் பட்டுள்ளவர் அப்போஸ்தலர்களின் முப்பதாவது வாரிசானவர் என்பது இங்கே முக்கியத்துவம் பெறுகிறது.
ரோடோவுக்கு எதிராக மார்ஸியன்
13. அதே நேரத்தில் ரோடோ என்பவர் ஒரு ஆசியர். உரோமில் வாழ்ந்த டேஷியன் என்பவரது மாணாக்கராக இருந்தார். அத்தோடு அவர் பல்வேறு நூல்களை எழுதியிருந்தார். அவற்றுள் குறிப்பாக, மார்சியனின் மதங்களுக்கு எதிரான கொள்கையை நோக்கமாகக் கொண்ட புத்தகம் பற்றிக் குறிப்பிடப்பட வேண்டும். அவர் தனது சகாப்தத்தில் கருத்து வேறுபாடு கொண்ட குழுக்கள் பிரிந்து செயலாற்றியதாகக் கூறுகிறார். மேலும் பிளவுகள் பற்றி விவரிக்கையில், அதில் உள்ள தவறான போதனைகளை அவர் நிராகரிக்கவும் செய்கிறார்.
அதன்படி, அவர்கள் தொடர்ந்தும் ஒருவருக்கொருவர் உடன்படவில்லை. ஆனால் ஒருவருக்கொருவர் வேறுபட்ட கருத்துக்களையும் கொள்கைகளையும் கொண்டிருந்தனர். தமது வாழ்க்கை முறை மற்றும் முதுமை ஆகியவற்றை எண்ணி கவலையில் வாடும் அப்பல்லெஸ் குழு என்பது அவர்களது குழுக்களில் ஒன்று. இந்த ஒரே ஒரு ஆதாரம் மட்டுமே உள்ளது என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார். ஆனால் ஃபிலோமீன் என்ற ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட ஒரு பெண்ணின் வார்த்தைகளை நம்பி, தீர்க்கதரிசனங்களுக்கு விரோதமாக செயல்படுபவை ஒருசில வெறுக்கப்பட்ட சக்திகள் தான் என்று அவர் கூறுகிறார். தளபதி மார்சியன் போன்ற மற்றவர்கள் இரண்டு ஆதாரங்களை முன்வைக்கின்றனர். பொன்டிடஸும் பசிலிக்கஸும் அவ்வாறேதான் செய்தார்கள். பிரிக்கப்பட்ட காரணிகளைக் கண்டுபிடிக்க முடியாமற்போனதால் அவர்கள் பொன்டஸின் ஒநாய்க் குணத்தைப் பின்பற்றினர். இவ்வாறு தைரியமாகவும் ஆதாரமின்றியும் தம்வசமிருந்த இரண்டு ஆதாரங்களை மேற்கோள் காட்டி எளிய தீர்வை நாடினர். மற்றவர்கள் இரண்டு அல்ல, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தீர்வுகளால், இன்னும் மோசமான சர்ச்சையில் விழுந்தனர். அவரது கற்கை நிறுவனத்தின் உறுப்பினர்கள் சினிரோஸைத் தலைவராகக் கொண்டிருந்தனர்.
அதே எழுத்தாளர், [Rhodo] தான் அப்பல்லெஸுடன் பேசியதாகவும் கூறுகிறார்:
அப்பல்லெஸ் என்ற முதியவர் எங்களுடன் கலந்துரையாடியபோது, அவருடைய பல பொய்யான கூற்றுகள் தெளிவாகத் தெரிந்தன. எனவே, நியதிகளைப் பற்றி வாதிட வேண்டிய அவசியம் இருக்க வில்லை. ஆனால் ஒவ்வொருவரும் அவரவர்க்கு ஏற்றவாறு விசுவாசத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்: சிலுவையில் அறையப்பட்டவர் மீது விசுவாசம் கொண்டோர் தங்களது நற்கிரியைகளால் தொடர்ந்தால் இரட்சிக்கப்படுவார்கள். நான் ஏற்கனவே கூறியது போல், அவருடைய போதனைகளின் மிகவும் தெளிவற்ற அம்சம் கடவுளைப் பற்றியது, ஏனென்றால் அவர் நமது கோட்பாட்டில் உள்ளதைப் போல ஒரே ஒரு மூலக் கருவை மட்டுமே வலியுறுத்தி வந்துள்ளார்.
அப்பல்லெஸின் அனைத்து கோட்பாடுகள் மற்றும் நியதிகளை வரையறுத்த பிறகு, ரோடோ தொடர்ந்து பின்வருமாறு கூறுகிறார்:
“அந்த ஒரே ஆதாரத்தை உறுதிப்படுத்த, உங்களிடம் இருக்கும் ஆதாரம் என்ன? அதை விளக்குங்கள்” என்று நான் அவரிடம் கேட்டதற்கு, அவர் தீர்க்கதரிசனங்களில் மாறுபாடு காணப் படுவதாகவும், உண்மையற்ற தன்மை நிலவுவதாகவும், முரண்பாடானவை என்றும், அதன் மூலத்தைப் பற்றி தனக்குத் தெரியாது என்றும் நினைவுகளுக்கு மட்டுமே அவை வரையறுக்கப்பட்டுள்ளவை என்றும் பதிலளித்தார். நான் விடாப்பிடியாக அவரை உண்மையைப் பேசும்படி வற்புறுத்திய போது, படைக்கப்படாத கடவுள் ஒருவரே என்பது பற்றி தனக்குத் தெரியாது என்றும், ஆனாலும் தான் அதை நம்புவதாகச் சொல்லி உறுதிபூண்டார். நான் அவரைப் பார்த்து சிரித்தேன். ஏனென்றால், அவர் தன்னை ஒரு ஆசிரியர் என்று கூறிக்கொள்கிறார். அப்படியானால் அவர் என்ன கற்பிக்கிறார் என்பதை தன் மனசாட்சியின்படி உணர்கிறாரா என்று எண்ணித்தான் நான் நகைத்தேன்.
அதே காரணம் குறித்து நான் காலிஸ்டியோவிடம் பேசுகையில், ரோடோ, தான் ஒருமுறை உரோமில் டேசியனின் சீடராக இருந்ததாகவும், டேசியனின் பிரச்சனைகள் அடங்கிய [Problems] என்ற ஒரு புத்தகத்தை எழுதியதாகவும், அதில் அவர் பரிசுத்த வேதாகமத்தில் காணப்படும் தெளிவற்ற விடயங்களைப் பதிவு செய்ததாகவும் கூறினார். ரோடோ அவற்றுக்கு பதிலளிப்பதாக உறுதியளித்தார். Hexameron பற்றிய அவரது ஒரு ஆய்வுக் கட்டுரையும் உள்ளது. அப்பெல்லெஸைப் பொறுத்தவரை, அவர் மோயீசனுடைய சட்டத்திற்கு எதிராக எண்ணற்ற விமர்சனங்களை அடுக்கிக்கொண்டே போனார். அத்தோடு அவர் மேற்கொண்ட பல ஆய்வுகளில் பரிசுத்த வார்த்தைகளை நிந்தித்து, அவற்றை மறுதலித்து அழிக்கும் தனது முயற்சிகளில் இறங்கியிருந்தார் அல்லது குறைந்தது, அதுபற்றி தனது மனதில் எண்ணியிருந்தார் என்று கூறலாம்.
போலித் தீர்க்கதரிசிகள் மற்றும் அவர்களிடையே நிலவிய பேதங்கள்
14. கடவுளுடைய திருச்சபையின் எதிரி மனிதகுலத்திற்கு எதிராக மேற்கொள்ளக்கூடிய எந்த சதியையும் விட்டுவைக்கவில்லை. இவ்வாறு திருச்சபைக்கு தீங்கு விளைவிப்பதற்காக துரோக சக்திகளின் புதிய பயிர் முளைவிட்டு எழுந்தது. இவற்றில் சில பிரிவுகள் விஷத்தன்மை கொண்ட சர்ப்பங்களைப் போல ஆசியா மற்றும் பிரிஜியா முழுவதும் ஊர்ந்து பரவலாகக் காணப்பட்டது. மொன்டானஸ் தான் ஆறுதல் அளிப்பவர் என்று அவரைப் பின்பற்றிய பெண்களான பிரிசில்லா மற்றும் மாக்சிமில்லா போன்றவர்கள், தம்மை அவரது தீர்க்கதரிசிகள் என்று பெருமையடித்துக் கொண்டனர்.
15. மற்றையோர் உரோமில் செழித்தோங்கி இருந்தனர். அவர்கள் குருத்துவப் பணியில் இருந்து வெளியேற்றப்பட்ட மறை மூப்பரான ஃப்ளோரினஸ் மற்றும் அதேபோன்ற அபகீர்த்திக்குள்ளான பிளாஸ்டஸ் ஆகியோரால் வழிநடத்தப்பட்டனர். அவர்கள் பலரை திருச்சபை வட்டாரங்களில் இருந்து தங்கள் சொந்த நியதிகளை பின்பற்றுமாறு கூறி கவர்த்திழுத்துச் சென்றனர். ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற வரையில் சத்தியத்தை சிதைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருந்தனர்.
மொண்டானஸ் மற்றும் ஃபிரிஜியாவின் மதங்களுக்கு எதிரான கொள்கை
16. ஹீராபோலிஸில் சத்தியத்தைப் பாதுகாக்கும் சக்தியானது, மேலே குறிப்பிட்ட அபோலினேரியஸ் மற்றும் அக்காலத்தில் வாழ்ந்த பல அறிஞர்களின் வடிவத்தில் ஃபிரிஜியாவின் மதங்களுக்கு எதிராக சக்திவாய்ந்த, எதிர்த்து நிற்க முடியாத ஒரு ஆயுதத்தை உருவாக்கியது. அவர்கள் அனைவரும் இந்த வரலாற்றை எழுதுவதற்கு ஏராளமான தகவல்களை நமக்கு விட்டுச் சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர், இந்த மதவெறியர்களுக்கு எதிரான தனது புத்தகத்தின் ஆரம்பத்தில் அவர்களுடன் வாய்வழி விவாதத்தில் ஈடுபட்டதாகவும், அதுபற்றி தனது முன்னுரையில் பின்வருமாறு எழுதுகிறார்:
அன்புக்குரிய அவெர்சியஸ் மார்செல்லஸ் அவர்கட்கு, மில்டியாட்ஸ் எனப் பெயரிடப்பட்ட பிரிவிற்கு எதிராக ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதுமாறு நீங்கள் என்னிடம் நீண்ட காலமாகக் கேட்டுக் கொண்டிருந்தீர்கள். ஆனால் நான் அதை எழுதுவதற்கு இதுவரை சற்றே தயங்கினேன் என்று தான் கூறவேண்டும். பிழையை மறுதலித்து உண்மையை நிலைநாட்ட இயலாமையால் அல்ல, மாறாக நான் புதிய ஏற்பாட்டு நற்செய்தி வார்த்தைகளில் விஷயங்களைச் சேர்க்கிறேன் என்று சிலர் எண்ணக் கூடும் என்ற பயம் தான் எனது தயக்கத்திற்கு காரணமாய் அமைத்திருந்தது. நற்செய்தியின்படி வாழ்பவர் எவராக இருந்தாலும், அவர் அதனுடன் எதையும் சேர்க்கவோ அல்லது அதிலிருந்து எதையும் குறைக்கவோ முடியாது என்பதை பரிபூரணமாக ஒப்புக்கொள்வார். அதேநேரம், நான் கலேஷியாவில் உள்ள அன்சிராவுக்கு வந்தபோது, அங்கிருந்த உள்ளூர் திருச்சபை இந்த கபடம் மிகுந்த வெறித்தனத்தால் பிளவுபட்டிருப்பதைக் கண்டேன் – அது அவர்கள் தங்களை தெய்வீகமான மனிதர்கள் என்று கருதுவதால் அல்ல, மாறாக அவை போலியான தீர்க்கதரிசனங்கள் என்று என்னால் நிரூபிக்க முடியும். என்னால் இயன்றவரை இவர்களைப் பற்றி சபையில் பல நாட்கள் தொடர்ந்து பேசி அவர்களின் வாதங்களை நிராகரித்தே வந்தேன். அங்கே கர்த்தர் எனக்கு உதவி செய்தார். சபை மகிழ்ச்சியடைந்தது மட்டுமன்றி, சத்தியத்தில் மீண்டும் பலப்படுத்தப்பட்டது. அப்போதுதான் எங்கள் எதிரிகள் தோற்கடிக்கப்பட்டனர். ஆகவே, எங்கள் சகோதர மூப்பரான ஓட்ரஸ் வாசியான சோட்டிகஸ் என்பவரும் அங்கே சமூகமளித்திருந்தார். சத்தியத்தை எதிர்த்தவர்களுக்கெதிராக நான் கூறியவற்றின் சுருக்கத்தை தங்களிடம் விட்டுச் செல்லும்படி உள்ளூர் பெரியவர்கள் என்னிடம் வினயமாகக் கேட்டார்கள். அது அப்போது என்னால் முடியாவிட்டாலும், இறைவன் விருப்பம் நிறைவேறும் பட்சத்தில், இங்கிருந்து அவர்கள் கேட்டுக்கொண்ட விடயங்கள் யாவற்றையும் எழுதி விரைவில் அவர்களுக்கு அனுப்புவதாக உறுதியளித்தேன்.
இதே போன்ற கருத்துக்களை வெளியிட்ட பிறகு, இந்த மதவெறிக்கான காரணத்தை அவர் பின்வருமாறு விளக்குகிறார்:
கிராடஸ் சிரியாவின் அரச அதிபராக பணியாற்றிய போது, அவர்களது மிக சமீபத்திய மதவெறி பிளவு தொடங்கியது. மொன்டானஸ் என்று அழைக்கப்படும் ஒரு சமீபத்திய மதம் மாறியவர், அவரது வெறிகொண்ட இலட்சியம் எதிரிக்கு ஒரு ஊக்க மருந்தாக அமைந்திருந்தது. மேலும் அவரது கோபத்தின் காரணமாக, ஃபிரிஜியன் மாநிலத்தின் மிசியாவில் உள்ள அர்டாபாவ் குடியேற்றத்தில் இருந்தபோது தனது சுயநினைவை இழந்தார். ஆரம்பத்திலிருந்தே, அவர் திருச்சபையின் வழக்கம் மற்றும் பாரம்பரியத்திற்கு எதிராக தீர்க்கதரிசனம் சொல்லும் போது, கிண்டலடிக்கவும், கேலியாகப் பேசவும், முட்டாள்தனத்தை உருவாக்கவும் தொடங்கினார். அவரது மூர்க்கத்தனமான இந்த செயற்பாடுகளைக் கேட்டவர்களில் சிலர் கோபமடைந்தனர். மேலும் அவர் ஒரு தவறான கடும்போக்குவாதி என்றும் சாத்தானால் தவறான வழியில் நடத்தப்படுகிறார் என்று பேசிக்கொண்டனர். இறைவனுடைய அருளின் வேறுபாட்டையும், கள்ளத் தீர்க்கதரிசிகளைத் தேடுவதற்கான அவருடைய முயற்சிகளை அவருக்கு எடுத்துரைத்த பிறகு, அவர்கள் அவரைக் கண்டித்து, மௌனிக்க முயற்சி செய்தனர். இருப்பினும், மற்றவர்கள், இது பரிசுத்த ஆவியால் ஈர்க்கப்பட்டதாகவும், தீர்க்கதரிசனத்தின் பரிசாகவும் – மிகுந்த பெருமையுடன் – இறைவன் தந்த பகுத்தறிவை புறக்கணித்து, மனதைக் கெடுத்து ஏமாற்றும் ஒரு சக்தியின் பின்னால் சென்றனர். அதை நம்பி ஏமாந்தவர்கள் இப்போது அமைதியாக இருக்க முடியாத அளவுக்கு தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். சில சூழ்ச்சிகள் அல்லது தீய கைவினைகளால், சாத்தான் கீழ்ப்படியாதவர்களை அழித்து, உண்மையான விசுவாசத்துடன் ஏற்கனவே இறந்தவர்களின் மனங்களைக் குழப்பியடித்தது மட்டுமன்றி, 30 பெண்கள் அவனது குரூர சக்தியால் எழுப்பினான். அவர்களை போலியான சக்தியைக் கொண்டு செயல்படுமாறு தூண்டி விட்டான். அதனால் அவர்கள் மோன்டானஸைப் போல வெறித்தனமாகவும், இயற்கைக்கு மாறானதாகவும், கோரமாகவும் பேசி, ஏற்கனவே உண்மையான நம்பிக்கையில் ஒட்டிக் கொண்டிருக்கும் கீழ்ப்படியாத மனங்களை அழிப்பதில் ஈடுபட்டனர். அதே தீய சக்தி பொய்யான வாக்குறுதிகளால் பாதிக்கப்பட்டவர்களின் மனதை ஆட்கொண்டது. இல்லையெனில், சில சமயங்களில் விமர்சனம் செய்தமைக்காக அவர்கள் கண்டனம் செய்யப்பட்டனர். அதேநேரம் பிரிஜியர்கள் சிலர் ஏமாற்றப்பட்டனர். ஆசியாவில் உள்ள விசுவாசிகள் சமீபத்திய கூற்றுகளை விசாரிக்க பல இடங்களில் கூடினர். அவற்றை மதவெறி என்று அறிவித்ததோடு, மதங்களுக்கு எதிரான கொள்கையை நிராகரித்தனர். பொய்யான தீர்க்கதரிசனங்களின் ஆணவம் மிகுந்த வழிகாட்டுதல், உலகம் முழுவதும் பொதுவாக முழு திருச்சபையையும் நிந்திக்கும்படி அறிவுறுத்தியபோது இறுதியாக, மொண்டானிஸ்டுகள் வெறுத்தொதுக்கப்பட்டு சபைகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்த திறந்த அறிக்கைக்குப் பிறகு, அவர் தனது எழுத்தாக்கங்கள் முழுவதிலும் அவர்களின் தவறை தொடர்ந்து மறுதலித்தே வந்துள்ளார். புத்தகம் 2 இல் அவர் அவர்களின் முடிவைப் பற்றிக் கூறுகிறார்:
அவர்கள் பக்க சார்பாகப் பேசும் தீர்க்கதரிசிகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளாததால், அவர்கள் எங்களை “தீர்க்கதரிசிகளைக் கொன்றவர்கள்” என்று அழைத்தனர். (அந்த தீர்க்கதரிசிகள் கூறுவது போல் கடவுள் அவர்களை அனுப்புவதாக வாக்களிக்கப் பட்டவர்கள்) ஆகவே அவர்கள் கடவுள் முன் பதில் சொல்லட்டும். மொண்டனஸ் மற்றும் பெண்கள் தொடங்கி பேசியவர்களில் யாராவது யூதர்களால் துன்புறுத்தப்பட்டார்களா அல்லது கொடூரர்களால் கொல்லப் பட்டார்களா? இல்லை, ஒருவர் கூட கொல்லப்படவில்லை. அந்தப் பெயர் நிமித்தம் எவராவது கைது செய்யப்பட்டு சிலுவையில் அறையப் பட்டிருக்கிறார்களா? நிச்சயமாக இல்லை. அந்த பெண்களில் யாராவது யூத செப ஆலயங்களில் கசையடிக்கு உள்ளானார்களா அல்லது கல்லெறித் தண்டனைக்கு உள்ளானார்களா? அப்படி எதுவும் எங்கும் நடந்ததில்லை. மொன்டானஸ் மற்றும் மாக்சிமில்லா ஆகியோர் வெவ்வேறு விதத்தில் மரணத்தைத் தழுவிக்கொண்டதாக கூறப்படுகிறது. யூதாஸ் என்ற துரோகியைப் போலவே, ஒவ்வொருவரும் தனித்தனியாக மனதை அழிக்கும் தீய சக்தியால் தற்கொலைக்கு உந்தப்படுகிறார்கள். இதேபோல், பொதுவான அறிக்கையின்படி, அவர்கள் கூறும் “தீர்க்கதரிசனங்களின்” அடிப்படையில் பேசினால், அவர்களின் நெருக்கமான சகாவான முதல் நிர்வாகி தியோடோடஸ் ஒருமுறை பரலோகத்திற்கு சென்றார். ஆனால் ஏதோ ஒரு சலனம் காரணமாக தன்னை வஞ்சித்த ஒரு சக்திக்கு அவர் அடிமையானார். இதனால் அவர் தரையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். எப்படியும் அது நடந்துவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், அந்த விஷயங்களை எமது கண்களால் காணாதபடியால், மொண்டனஸ், தியோடோடஸ் மற்றும் அங்கு குறிப்பிடப்பட்ட பெண்கள் போன்றோர் இந்த வழியில் இறந்திருக்கலாம் அல்லது இறந்திராமலும் இருக்கலாம்.
அக்காலத்தில் வாழ்ந்த புனித ஆயர்கள் மாக்சிமில்லாவை ஆட்கொண்ட சக்தியுடன் வாதிட முயன்றனர், ஆனால் அந்த சக்தியுடன் தெளிவாக ஒத்துழைத்த மற்றவர்களால் அவர்கள் தடுக்கப்பட்டனர்.
ஆஸ்டீரியஸ் அர்பானஸின் கூற்றுப்படி, மாக்சிமில்லா மூலம் பேசும் அந்த சக்தியானது, “ஆடுகள் மத்தியிலிருந்து விரட்டப்பட்ட ஓநாய் போல் ஆனேன். ஆனால் நான் ஓநாய் அல்ல, நான் வார்த்தையும் ஆவியும் வல்லமையுமாக இருக்கிறேன்” என்று கூறக்கூடாது. தெமிசோவும் அவரது குழுவும், குமானே கிராமத்தைச் சேர்ந்த மனிதர்களையும் ஆயர்களான சோட்டிகஸ் மற்றும் அபாமியோவைச் சேர்ந்த ஜூலியன் ஆகியோரையும் மயக்கினர், இதனால் மக்களை தவறாக வழிநடத்திய போலியான ஆவியை இலேசாக எடைபோட முடியாது. ஆனால், ஆவியானவர் பேசும்போது ஆராய்ந்து பேசுவதற்கு நம் முன் நிற்பவர்கள் – அதாவது, புகழ்பெற்ற மனிதர்கள் மற்றும் ஆயர்கள் முன்னிலையில் அதன் வல்லமை நிரூபிக்கப்படட்டும்.
மாக்சிமில்லாவின் போலியாக அமைந்த தீர்க்கதரிசனங்களை நிராகரித்த பிறகு, அவர் இதை எழுதிய காலத்தை சுட்டிக்காட்டி, எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் போர்கள் மற்றும் புரட்சிகள் பற்றிய அவரது தவறான கணிப்புகளை அம்பலப்படுத்துகிறார்:
இது இன்னுமொரு பொய் என்பது ஏற்கனவே தெளிவாகத் தெரிகிறதல்லவா? அந்தப் பெண் இறந்து இப்போது பதின்மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிறது, உலகில் உள்ளூர் அல்லது பொதுவான போர் என்று எதுவும் இல்லை. ஆனால் கிறிஸ்தவர்களுக்கு என்றும் கடவுளின் கருணை மூலம் அமைதி கிட்டுகிறது.
இது புத்தகம் 2ல் இருந்து மேற்கோள் காட்டப்பட்ட ஒரு பகுதி. மேலும் புத்தகம் 3ல் இருந்து, நான் ஒரு சிறிய பத்தியில் குறிப்பிடுகிறேன். அதில் அவர்கள் [மொண்டானிஸ்டுகள்] தங்களுக்கு பல இறையியலாளர்கள் இருப்பதாக பெருமையாக கூறினார்கள்.
அவர்களது வாதங்கள் அனைத்தும் தோல்வியடைந்து, பதில் சொல்ல எதுவும் இல்லாதபோது, அவர்கள் வேதசாட்சியத்துக்குள் தஞ்சம் புக முயல்கின்றனர். இவ்வாறு அவர்கள் தீர்க்கதரிசன சக்தி என்று அழைக்கப்படுவதற்கு பல சான்றுகள் இருப்பதாக கூறுகிறார்கள். இதைவிட உண்மைக்கு அப்பால் இருக்கக்கூடிய காரியம் என்னவாக இருக்க முடியும்! வேறு சில மதவெறியர்கள் எண்ணற்ற வேதசாட்சிகள் அவர்களிடம் இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் நாம் அவர்களை வேதசாட்சிகளென்று ஏற்றுக் கொள்வதில்லை. அத்தோடு அவர்கள் சத்தியத்தை கடைபிடிப்பவர்கள் என்பதையும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. Marcians (Marcion) என்ற மதங்களுக்கு எதிரான கொள்கையில் சார்ந்திருப்போர்) கிறிஸ்துவுக்காக வாழும் எண்ணற்ற வேதசாட்சிகள் தங்களிடையே இருப்பதாக கூறுகிறார்கள். இருப்பினும் அவர்கள் உண்மையாக கிறிஸ்துவைப் பிரகடனப்படுத்துவதில்லை. ஆகையால், சபையின் உறுப்பினர்கள் உண்மையான விசுவாசத்தின் நிமித்தம் இரத்தசாட்சியாக அழைக்கப்படும் போதெல்லாம், அவர்களிடையே ஃபிரிஜியன் என்ற மதவெறிக்கொள்கை உடையவர்கள் மத்தியில் இருந்த காரணத்தால், அவர்கள் உண்மையான சாட்சிகளிடமிருந்து வேறுபடுத்தப்படுகிறார்கள். அவர்கள் பரிபூரணத்துவம் பெறும் வரை அவர்களுடன் எந்த உறவும் வைத்துக்கொள்ளக்கூடாது என்ற ஒரு நியதி காணப்பட்டது. ஏனென்றால் அவர்கள் மொண்டனஸ் மற்றும் பெண்களின் ஆன்மாக்களை அடையாளம் காணவில்லை. இது உண்மைதான் என்பதும், கயஸ் மற்றும் யூமேனியாவின் அலெக்சாண்டர் ஆகியோருடன் சேர்ந்து வேதசாட்சியத்தின் மூலம் மரித்தவர்கள் பற்றிய விடயங்கள் துல்லியமானவை என்பதையும், இது நம் காலத்தில் அபாமியாவில் உள்ள ஒரு வளைவில் நடந்தது என்பதையும் நிரூபிக்கிறது.
மிலியாட்ஸ் எதிர் மொண்டேனஸ்
17. இவரது இந்த நூலில் அவர் மிலியாட்ஸை மதங்களுக்கு எதிராக ஒரு கட்டுரையை எழுதியுள்ள ஆசிரியராகக் குறிப்பிடுகிறார். அவர்களின் சில உரைகளை மேற்கோள் காட்டிய பிறகு, பின்வருமாறு அவர் தொடர்கிறார்: ஒரு தீர்க்கதரிசி பரவசமான முறையில் பேசக்கூடாது என்ற நமது சகோதரர் மில்டியாட்ஸின் வாதத்தை விமர்சித்து அவர்களின் ஒரு குறிப்பில் நான் கண்டதை இங்கே உள்ளடக்கியுள்ளேன். புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளின் பட்டியலை வெளிப்படுத்துவதோடு, அதில் அம்மியா மற்றும் குவாட்ராடஸ் என்ற பெயர்களில் இரண்டு பேர் உள்ளனர் என்று அவர் மேலும் தொடர்கிறார்.
ஆனால் போலித் தீர்க்கதரிசியோ வெட்கமோ, கூச்சமோ பயமோ இல்லாமல் மகிழ்ச்சியுடன் பேசுகிறார். அவர் வேண்டுமென்றே அறியாமையுடன் தொடங்கி, குறிக்கோளற்ற மூடனைப்போல் நிறைவு செய்கிறார். பழைய ஏற்பாடு அல்லது புதிய ஏற்பாட்டின் எந்தவொரு தீர்க்கதரிசியும் இவ்வழியில் ஈர்க்கப்பட்டதாக அவர்களால் நிரூபிக்க முடியாது – அகபஸ், யூதாஸ், சீலா அல்லது பிலிப்பின் மகள்மார், அல்லது பிலிடெல்பியாவைச்சேர்ந்த அம்மியா, குவாட்ராடஸ் அல்லது அவர்களோடு சம்பந்தமில்லாத வேறு எவருக்கும் இவ்வாறான நிலை ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஏனெனில், தீர்க்கதரிசனப் போட்டியில் குவாட்ரடஸ் மற்றும் அம்மியா ஆகியோருக்குப் பிறகு மொன்டானிஸ்ட் பெண்கள் வெற்றி பெற்றால், அவர்களில் மொன்டானஸ் மற்றும் பெண்களுக்குப் பின் யார் முதலில் வந்தார்கள் என்று சொல்லட்டும். அப்போஸ்தலர்களின் கூற்றுப்படி, தீர்க்கதரிசன வெகுமதி என்பது முழு திருச்சபைக்குள்ளும் இறுதிவரை தொடர வேண்டும். ஆனால் மக்சிமில்லா இறந்து பதினான்கு ஆண்டுகள் நிறைவடைந்த இந்த ஆண்டு வரை அவ்வாறான நிலைமைக்கு முகம் கொடுத்த ஒருவரை எனும் பற்றி அவர்களால் சொல்ல முடியாது.
அவர் குறிப்பிடும் மிலிடியாட்ஸ், புறஜாதிகள் மற்றும் யூதர்களுக்கு எதிரான அவரது கட்டுரைகளில் தெய்வீக வார்த்தை பற்றிய அவரது வைராக்கியத்தை நினைவுபடுத்துகிறது. இதேபோல், மதச்சார்பற்ற ஆட்சியாளர்களுக்கான உரை பற்றிய விளக்கம் Defence என்ற அவரது புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மொண்டனிஸ்டுகள் எதிர் அப்பல்லோனியஸ்
18. பிரிஜியாவில் பிரிஜிய மதவிரோதம் மேலும் தழைத்தோங்கி இருந்தபோது, அப்போலோனியஸ் என்ற ஒரு பேரவை எழுத்தாளர், அவர்களின் “தீர்க்கதரிசனங்களை” பொய்யாக்கி, மதவெறியர்களின் வாழ்க்கை முறையை அம்பலப்படுத்தி அக்கோட்பாடுகளுக்கு எதிராக ஒரு மறுப்புப் புத்தகத்தை எழுதினார். மொன்டானஸைப் பற்றி அவர் கூறுவதை அவரது சொந்த நடையிலே கேளுங்கள்:
அவருடைய சொந்தச் செயல்களும் போதனைகளும் இந்தப் புதிய ஆட்சியரின் இயல்பை வெளிப்படுத்துகின்றன. திருமணத்தை ரத்து செய்யத் துணை புரிந்தவர். உபவாசம் இருக்க உத்தரவிட்டவர். அவர்தான் சிறிய பிரிஜிய நகரங்களான பெபுசா மற்றும் டிமியோன் ஆகியவற்றுக்கு ஜெருசலேம் என்று பெயரிட்டார். அப்படிப் பெயரிட்டபடியால் எல்லா இடங்களிலிருந்தும் வரும் மக்கள் அங்கே கூடுவார்கள் என்று எண்ணினார். “காணிக்கை” என்ற பெயரில் பணம் மற்றும் ஏனைய பெறுமதியான பொருட்களை சேகரிக்க முகவர்களை நியமித்தார். அவருடைய செய்தியைப் பிரசங்கித்தவர்களுக்கு அவர்தான் பணம் கொடுத்தார். இவ்வாறான அவரது பேராசைக் குணத்தின் மூலம் தான் முன்னேறிச் சென்று விடலாமென அவர் எண்ணினார்.
இவ்வாறு அவர் மொண்டானஸ் பற்றி சொல்லும்போது, மொண்டானஸின் தீர்க்கதரிசிகளைப் பற்றி அவர் தொடர்ந்து இவ்வாறு விளக்குகிறார்;
ஆகவே, இந்த தீர்க்கதரிசிகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பெண்கள், தீய ஆன்மாக்கள் அவர்களுக்குள் உட்புகுந்த காலம் முதல், தங்கள் கணவர்மாரை விட்டு வெளியேறினர் என்பதை நாங்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டினோம். அப்படியானால், பிரிஸ்சில்லாவை கன்னிப்பெண் என்று அழைத்தது எவ்வளவு பெரிய பொய் என்று இப்போது தெரிகிறதா?
பின்னர் அவர் தொடர்ந்து கூறுகையில்:
ஒரு தீர்க்கதரிசி அன்பளிப்பையும் பணத்தையும் வாங்கக்கூடாது என்று அனைத்து வேதாகமங்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது அல்லவா? அப்படியிருக்கையில், ஒரு தீர்க்கதரிசி தங்கம், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த ஆடைகளைப் பெறுவதை நான் கண்டால், நான் எப்படி அவளைக் கண்டிக்காமல் இருக்க முடியும்?
மேலும், அவர்களின் நூல் வெளியீட்டாளர்களில் ஒருவரைப் பற்றி அவர் பின்வருமாறு கூறுகிறார்:
பேராசை கொண்ட தெமிசோ, தனது வாக்குமூலத்தின் உயர்தரத்தை பேணத் தவறிவிட்டார். மேலும் பெரும் செல்வத்தை அடையும் நோக்கில் சிறைவாசத்தை அனுபவிப்பதிலிருந்து தப்பித்துக்கொண்டார். இதில் அவர் நடுநிலைமை வகுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் வேதசாட்சியத்தைப் பற்றிப் பெருமையடித்து, அப்போஸ்தலரைப் பின்பற்றினார். அப்படிச் செய்ததன் மூலம், தன்னை விட விசுவாசம் மிகுதியாய் உள்ளவர்களுக்கு தனது வீண் வார்த்தைகள் கொண்டு ஒரு ‘பொது நிருபத்தைத் தீட்டி’ கர்த்தரையும், அப்போஸ்தலர்களையும், பரிசுத்த திருச்சபையையும் தூஷித்து சத்தியத்திற்காகப் போராடும் அளவுக்குத் துணிச்சல் மிகுந்தவரானார்!
மேலும், வேதசாட்சிகளாக போற்றப்படும் மற்றவர்களைப் பற்றி அவர் இப்படி எழுதுகிறார்:
உதாரணமாக, பலரால் போற்றப்படும் தீர்க்கதரிசி என்றும், தன்னை வேதசாட்சி என்றும் கூறிக்கொள்ளும் இந்தப் பெண், அலெக்ஸாண்டருடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார் என்று சொல்லக் சொல்லுங்கள் பார்க்கலாம்! தான் ஈடுபட்ட கொள்ளை , பிற குற்றங்கள் மற்றும் அதன் விளைவாக அவருக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் பற்றி குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அவை குறித்த பதிவுகள் அலுவலகத்தில் உள்ள கோப்பில் உள்ளன. யாருடைய பாவங்களை யார் மன்னிப்பார்கள்? தீர்க்கதரிசி வேதசாட்சியம் என்ற பேரில் மேற்கொள்ளும் கொள்ளைச் சம்பவங்களை மன்னிக்கக்கூடுமோ அல்லது வேதசாட்சிகள் தீர்க்கதரிசிகளின் பேராசைமிகுந்த செயல்களை மன்னிப்பாரா? ‘பொன், வெள்ளி அல்லது இரண்டு அங்கிகளை உன்னிடம் வைத்துக் கொள்ளாதே’ என்றார் ஆண்டவர். ஆனால் இந்த தடைசெய்யப்பட்ட விஷயங்களை செய்வதில் அவர்கள் எதிர்மாறாக செய்கிறார்கள். அவர்களின் கீழ் செயல்படும் தீர்க்கதரிசிகள் மற்றும் வேதசாட்சிகள் எனப்படுவோர் இவ்வாறு பொருட்களை பலவந்தமாக தனதாக்கிக்கொள்வது பணக்காரர்கள் என்று அழைக்கப்படுபவர்களிடமிருந்து மட்டுமல்ல. ஏழை, எளியோர், அனாதைகள் மற்றும் விதவைகளிடமிருந்தும் கூட அவர்களது உடமைகளை இந்த அநியாயக்காரர்கள் பலவந்தமாகப் பிடுங்கி எடுத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு தைரியம் இருந்தால், இவ்வாறான நீச்ச செயல்களை நிறுத்திவிட்டு இந்த விஷயத்தை விவாதிக்கட்டும். இவற்றை நம்பும் பட்சத்தில், அவர்கள் தங்களது எதிர்கால தவறுகளைத் தவிர்க்கலாம். ஏனெனில் “மரம் அதன் கனிகளால் தான் அறியப்படுகிறது” (மத்தேயு 12:31). அதுபோன்றே, இந்த தீர்க்கதரிசிகளின் உண்மைத்தன்மை பரீட்சித்து ஆராயப்படல் வேண்டும்.
அலெக்சாண்டரைப் பற்றிக் கூறவேண்டுமானால், அவர் எபேசஸின் ஆளுநரான ஏமிலியஸ் ஃபிராண்டினஸால் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டார். இது இறைவனின் பெயரால் அல்ல, மனசாட்சியற்ற கொள்ளைகள் மற்றும் சித்தாந்தங்களின் பற்றிய அவரது அறிக்கை தான் அதற்குக் காரணமாகும். பிறகு இறைவனின் பெயரால் போலி வேண்டுகோள்கள் மூலம் விசுவாசிகளை ஏமாற்றினார். இதனால் அவர் சுதந்திரமாக வாழ்ந்தார். இருப்பினும் அவர் தனது சொந்த மறைமாவட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. காரணம் அவர் ஒரு கொள்ளைக்காரன் என்பதால். அவரது கதையை அறிய விரும்புவோர் ஆசியாவின் பொது ஆவணக் காப்பகத்தில் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். அவருடன் பல ஆண்டுகள் வாழ்ந்த தீர்க்கதரிசிக்குக் கூட அவரைப் பற்றி முழுதாக எதுவும் தெரியாது. ஆனால் நான் அவரையும் அவரது ‘தீர்க்கதரிசி’ என்ற பாத்திரத்தையும் வெளிப்படுத்தினேன். நான் இன்னும் பலரைப் பற்றியும் அவர்களது வேஷத்தையும் கலைக்கவும் இவ்வாறு செய்ய முடியும்: தைரியம் இருந்தால், அவர்கள் தானாகவே முன்வந்து இதற்கு முகம் கொடுக்கட்டும்.
அந்த புத்தகத்தின் மற்றொரு பகுதியில் அவர் வீண் பெருமை பேசும் “தீர்க்கதரிசிகள்” பற்றி கூறுகிறார்:
அவர்களின் தீர்க்கதரிசிகள் எந்த வித கைமாறுகளை பெற்றதை அவர்கள் ஒப்புக்கொள்ள மறுத்தால், அவ்வாறன்றி அவர்கள் குற்றம் சாட்டப்பட்டால் அவர்கள் தீர்க்கதரிசிகள் அல்ல என்பதை ஒப்புக் கொள்ளட்டும். எனவே இதற்கு எண்ணற்ற ஆதாரங்களை என்னால் சமர்ப்பிக்க முடியும். ஆனால் ஒரு தீர்க்கதரிசியின் உண்மைத் தன்மை ஆராயப்படல் வேண்டும். ஒரு தீர்க்கதரிசி தனது தலைமுடிக்கு சாயம் பூசுகிறாரா? அவரது புருவங்களுக்கு சாயம் பூசுகிறாரா? அவர் வெவ்வேறு உச்சரிப்புகளை விரும்புகிறாரா? அவர் சூதாட்டத்தில் ஈடுபடுகிறாரா? கடன் கொடுக்கிறாரா? இது விஷயங்களை என்னிடம் சொல்லுங்கள். இந்த விஷயங்கள் சரியா பிழையா என்பதை அவர்களே கூறட்டும். அவர்கள் இடையே இவை யாவும் நடைபெற்றன என்பதை என்னால் காட்டமுடியும்.
அதே புத்தகத்தில் அப்பல்லோனியஸ் இவ்வாறு கூறுகிறார். மொண்டனஸ் தனது போலியான தீர்க்கதரிசனங்களைச் சொல்லத் தொடங்கியதிலிருந்து அவை பற்றி அவர் எழுதிய காலம் வரை நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. மாக்சிமில்லா பெபுசாவில் தீர்க்கதரிசனம் சொல்வது போல் நடித்துக் கொண்டிருந்தபோது, சோட்டிகஸ் அவளின் உடம்பில் குடிகொண்டிருந்த ஆன்மாவை விரட்ட முயன்றார். ஆனால் அவரது ஆதரவாளர்களால் தான் தடுக்கப்பட்டதாக அவர் கூறுகிறார். அக்காலத்து வேதசாட்சிகள் மத்தியில் வாழ்ந்த திரேசியஸ் என்ற நபரையும் பற்றிக் குறிப்பிடுகிறார். மேலும், வரலாற்று அடிப்படையில், அவர் கூறும் போது: அதாவது, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு எருசலேமை விட்டு வெளியேறவேண்டாம் என இரட்சகர் தனது அப்போஸ்தலர்களுக்கு கட்டளையிட்டார். அவர் யோவானின் வெளிப்பாட்டை மேற்கோள் காட்டி, எபேசஸில் இறந்த மனிதனை யோவான் எவ்வாறு தெய்வீக சக்தியால் மீண்டும் உயிர்ப்பித்தார் என்பது பற்றிக் கூறுகிறார். ஏனைய பத்திகளிலும் இந்த மதவெறியின் போக்கை அவர் வெளிப்படையாக நிரூபிக்கிறார்.
இதுவரை கூறப்பட்டவை அப்பல்லோனியஸ் பற்றிய எழுதப்பட்ட விபரங்கள்.
மாண்டனிஸ்டுகள் எதிர் செராபியர்கள்
19. பிற்காலத்தில் மாக்சிமினுக்குப் பிறகு அந்தியோக்கியாவின் ஆயராக பதவியேற்றதாகக் கூறப்படும் செராபியஸ், இந்த மதவெறிக்கு எதிரான அப்பல்லினேரியஸின் நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிடுகிறார். காரிகஸ் மற்றும் பொன்டியஸுக்கு அவர் எழுதிய கடிதத்தில் இதுபற்றித் தெரிவித்துள்ளார். அதில் அவர் அக்காலத்தில் கடைபிடிக்கப்பட்ட மதவெறியையும் நிராகரிக்கிறார். அவர் மேலும் கூறுகையில்:
இந்த போலி அமைப்பின் புதிய தீர்க்கதரிசனங்கள் முழு உலக சகோதரத்துவத்தையும் வெறுப்படையச் செய்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆசியாவின் ஹைராபோலிசின் ஆயரான குளோடியஸ் அப்பல்லினேரியஸின் பாதுகாக்கப்பட்ட நினைவேட்டுக் குறிப்புகளை நான் உங்களுக்கு அனுப்புகிறேன்.
செராபியஸின் இந்தக் நினைவேட்டுக் குறிப்புகளில் பல்வேறு ஆயர்களின் பல கையொப்பங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. அவர்களில் ஒருவர், தானே தன் கைப்பட ஒரு குறிப்பை எழுதி அதிலே கையெழுத்திட்டார்: “நான் ஆயரான ஆரேலியஸ் குய்ரினியஸ். உங்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்கிறேன்” என்று அந்தக் குறிப்பு கூறுகிறது. மற்றொருவர் பின்வருமாறு எழுதினார்.
நான் ஏலியஸ் பப்லியஸ் ஜூலியஸ், திரேஸில் உள்ள குடியேற்றப் பகுதியான டெபெல்டமின் ஆயர். கடவுள் பரலோகத்தில் வாசம் செய்வது போலவே தான், அஞ்சியாலஸின் ஆசீர்வதிக்கப்பட்ட சோடஸ் என்பவரும். அவர் பிரிஸ்சில்லாவின் உடம்பில் குடிகொண்டிருந்த அசுத்த ஆவியை விரட்ட விரும்பினார். ஆனால் கபடவாதிகள் அவரை அவ்வாறு செய்ய அனுமதிக்கவில்லை.
தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட பல ஆயர்களின் கையொப்பங்களும் இந்த நினைவேட்டுக் குறிப்பில் பாதுகாக்கப் பட்டுள்ளன.
ஐரேனியஸ் மற்றும் உரோமைய மதப் பிரிவுகள் (Schismatics)
20. உரோமைய திருச்சபையின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக ஐரேனியஸ் பல்வேறு நிருபங்களை எழுதினார். அவைகளில் ஒன்றில், அவர் பிளாஸ்டஸ் பற்றி எழுதினார். அது மத வேறுபாடுகளைப் பற்றியது. மற்றொன்று புளோரினஸ் என்பவருக்கு எழுதப்பட்டது. அவர் பிளாஸ்டஸ் என்பவருக்கு, On Schism, என்ற நிருபத்தின் வாயிலாகவும், ஃப்ளோரினஸ் என்பவருக்கு On the Sole Sovereignty or God Is Not the Author of Evil என்ற நிருபத்தின் வாயிலாகவும் உரையாற்றினார். இவற்றில் ஒன்று ஃப்ளோரினஸ் என்பவரைப் பாதுகாப்பது போல அமைந்திருந்தது என்ற ஒரு கருத்தும் நிலவியது. இரண்டாவது நிருபம் வாலண்டினியர்கள் சூழ்ச்சி வலையில் விழுந்த போது, இரேனியஸ் The Ogdoad என்ற நூலை இயற்றினார். அதில் அவர் தன்னை அப்போஸ்தலிக்க வாரிசாகக் குறிப்பிடுகிறார். இந்த படைப்பின் முடிவில் அவரது மிக அழகான குறிப்பை நான் கண்டேன், அதை என்னால் இங்கே மேற்கோள் காட்டாமல் இருக்க முடியாது.
எம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இந்தச் சிறிய புத்தகத்தை நீங்கள் நகலெடுத்தால், அவர் உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தோரையும் நடுத்தீர்க்க மாட்சிமையுடன் வரும்போது, உங்கள் பிரதியை இதனுடன் ஒப்பிட்டு, இந்த நகலுடன் கவனமாகச் சரிபார்த்து, நீங்கள் உறுதிசெய்து கொள்ள வேண்டும். இது உங்கள் வசமிருக்கும் நகல். மூலப்பிரதியிலும் அதே விடயங்கள் தான் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை நான் உங்களுக்கு இத்தால் தெரிவிக்கிறேன்.
இவை கடந்த காலத்தில் வாழ்ந்த உண்மையான புனிதர்களின் துல்லியமான மிக மிகச் சரியான வார்த்தைகளை நமக்கு நினைவூட்டுகின்றன. மேலே குறிப்பிட்டுள்ள புளோரினஸுக்கு எழுதிய கடிதத்தில், ஐரேனியஸ் மீண்டும் பொலிகார்ப்புடனான தனது உறவைக் குறிப்பிடுகிறார்:
இலகுவான முறையில் சொல்வதென்றால், ஃப்ளோரினஸ் பற்றிய இந்தக் கருத்துக்கள் சரியான தீர்ப்பை பிரதிபலிக்கவில்லை. இந்த கருத்துக்கள் திருச்சபையுடன் முரண்படும் அதேவேளை, அவற்றைப் பகிர்ந்து கொள்பவர்களை மிகப்பெரிய தீமைக்குள் இட்டுச்செல்கின்றன.
திருச்சபைக்கு வெளியே உள்ள மதவெறியர்கள் கூட இந்தக் கருத்துக்களை சொல்லத் துணியவில்லை. எமக்கு முன் வாழ்ந்த இறைத்தூதர்களுடன் இருந்த மறை மூப்பர்கள் இது போன்ற உங்கள் கருத்துக்களுக்கு செவிசாய்க்கவில்லை. நான் சிறுவனாக இருந்தபோது, ஏகாதிபத்திய சபையில் ஒரு உயர் அந்தஸ்தைக் கொண்டிருந்த நீங்கள் அவருடைய ஆதரவைப் பெற விரும்பியபோது, ஆசியாவின் கீழைத்தேயத்தில் பொலிகார்ப்புடன் உங்களைப் பார்த்தேன். அந்த நாட்களில் நடந்த நிகழ்வுகள், சமீபத்தில் நடந்த சம்பவங்களை விட, சிறுவயதில் நாம் கற்றுக்கொண்டவை. அவை என் மனதில் அப்போது புதிதாகப் பதிந்து அந்த நினைவுகளோடு நான் வளர்ந்ததாகவும் எனக்கு நினைவிருக்கிறது. அதனால் மிகவும் பாக்கியவானான பொலிகார்ப் அவர்கள் அமர்ந்து உரையாடிய இடங்கள் கூட எனக்குத் தெளிவாக நினைவில் உள்ளன. அவரது தொலைநோக்குப் பார்வை, குணாதிசயம், அவரது தனிப்பட்ட தோற்றம், கூட்டங்களுக்கு அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகள் போன்ற நன்றாக நினைவில் உள்ளன. மேலும், அவர் யோவான் மற்றும் கர்த்தரைக் கண்ணால் கண்ட மற்றவர்களுடன் அவர் விவாதித்த விதம் இன்னும் என் மனதில் பசுமையாக உள்ளது. அவர் அவர்களின் வார்த்தைகளை நினைவு கூர்ந்தார். அவர்கள் கர்த்தரைப் பற்றியும், அவர் நிகழ்த்திய அற்புதங்களைப் பற்றியும், அவருடைய போதனைகளைப் பற்றியும், அவற்றில் பொதிந்திருந்த கருப்பொருள் பற்றியும், பொலிகார்ப் அவர்களின் வாழ்வுதரும் இறைவார்த்தையை கேட்டும், நேரில் கண்ட சாட்சிகளிடமிருந்து நேரடியாக அறிந்து கொண்டதையும், அவை பரிசுத்த வேதாகமத்துடன் முழுமையாக ஒத்துப்போகவும் கூறியுள்ளார். அவர்கள் சொன்ன வார்த்தைகளையே அவரும் சொன்னார். அதனால் அவர்கள் கர்த்தரையும் அவருடைய அற்புதங்களையும் அவருடைய போதனைகளையும் அறிக்கை செய்தார்கள் – பொலிகார்ப் நேரில் கண்ட சாட்சிகளிடமிருந்து நேரடியாக வாழ்வுதரும் இறை வார்த்தையைக் கேட்டு, வேதாகம வார்த்தைகளின்படி முழுமையாக அறிக்கை செய்தார். நான் அப்போது மிகவும் ஆர்வத்துடன் இவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தேன். எனவே, கடவுளின் கருணையால், நான் அவற்றை ஒரு ஏட்டில் அல்ல, என் இதயத்தில் பதிவு செய்தேன். கடவுளின் அருளால் அவற்றைத் தொடர்ந்து தியானிப்பேன். கடவுள் எனக்கு சாட்சியாக இருக்கிறார். ஆகவே தன் சொல்கிறேன், அந்த ஆசீர்வதிக்கப்பட்ட, அப்போஸ்தலிக்க உத்தமராகிய அந்தப் பெரியவர், நான் இங்கு ஏற்கனவே கூறியிருந்த இந்த கருத்துகளில் ஏதேனும் ஒன்றைக் கேட்டிருந்தால் கூட, அவர் தனது காதுகளை பொத்தியபடி,
“ஓ நல்ல கடவுளே, நான் இவற்றையெல்லாம் பொறுத்துக்கொள்ள வேண்டுமென்றா நீர் என்னை இத்தனை காலமாகக் காப்பாற்றினீர்? என்று கூறி கதறி அழுதிருப்பார். “இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்டால், அவர் எங்கு அமர்ந்திருந்தாலும், நின்றிருந்தாலும், அவ்விடத்தைவிட்டு உடனே ஓடிவிடுவார். அயலில் செயல்படும் சபைகளைப் பலப்படுத்துவதற்காக அல்லது அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவதற்காக சில ஊழிய சகோதரர்களுக்கு அவர் அனுப்பிய கடிதங்களிலிருந்து இது தெளிவாகிறது.
அப்பல்லோனியஸின் வேதசாட்சிய மரணம்
21. இதே காலக்கட்டத்தில் நிலவிய கொமோடஸ் ஆட்சியின் போது எங்கள் நிலைமைகள் விருத்தியடைந்தன. மேலும் கடவுளின் கிருபையால் உலகம் முழுவதும் உள்ள திருச்சபை அமைப்புகளுக்கு சமாதானம் ஏற்பட்டது. இரட்சிப்பின் வார்த்தையானது உரோமில் வாழ்ந்த செல்வச் செழிப்பு மிக்க அல்லது குடும்ப அந்தஸ்து போன்ற காரணிகளால் வேறுபடுத்தப்பட்ட அனைத்து மக்கள் மற்றும் உறவினர்கள் உட்பட அனைத்து தேசங்களுக்கும், பிரபஞ்சத்தில் கடவுளின் பக்தி வழிபாட்டிற்கு மீண்ட அனைவருக்கும் இவை கிடைக்கப்பெற்றன. இயல்பிலேயே நல்லதை வெறுக்கும், பொறாமை கொண்ட சாத்தான், அவனால் மேற்கொண்ட இவ்வாறான தீமைகள் மற்றும் பிரிவினைகள் போன்றவற்றை மேலும் தாங்கிக்கொள்ள முடியாதவனாய், மீண்டும் ஒரு முறை களத்தில் இறங்கி, நம்மை அழிவுக்கு இட்டுச்செல்லும் அனைத்து வழிமுறைகளையும் கண்டறிவதில் தீவிரம் காட்டத் தொடங்கினான். உரோமில், அவன் அப்பல்லோனியஸை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தான். அப்போலோனியஸ் தனது நிறைந்த கல்வியறிவு மற்றும் தத்துவ முதிர்ச்சி காரணமாக அக்கால விசுவாசிகளிடையே மிகவும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஒரு மனிதராக விளங்கினார். அவர் மீது குற்றம் சுமத்தும் பொருட்டு அவரது வேலையாள் ஒருவன் அவரை தவறாக வழிநடத்தியதையடுத்து, அவர் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார். அந்த கேவலமானவன் மிகவும் இக்கட்டான நேரத்தில் இந்த வழக்கை தொடுத்திருந்தான். காரணம் என்னவென்றால், பேரரசரின் ஆணைக்கு இணங்க, இது போன்ற விஷயங்களைத் தெரிவிப்பவர்களை வாழ அனுமதிக்கக் கூடாது என்ற நீதி அங்கே அமுலில் இருந்தது. நீதிபதி பெரேனியஸுக்கு தண்டனை விதித்த உடனேயே, அவர்கள் உடனடியாக அவரது கால்களை முறித்தனர். ஆனால் கடவுளின் உண்மையான வேதசாட்சியான அவர், சட்டசபை முன் தனது வாதத்திற்கு பதிலளிக்குமாறு நீதிபதி அவரை அழைத்தபோது, அவர்கள் அனைவருக்கும் முன்பாக விசுவாசத்தில் மிகவும் நேர்த்தியான மனிதரான அவர், தக்க பதிலை அளித்தார். அதன் பிறகு அவரது தலை துண்டிக்கப்பட்டது. மேலும் அவர் வேதசாட்சிய மரணத்தின் மூலம் பரிபூரணமடைந்தார். இது சட்டசபையின் உத்தரவின்படியே நடந்தேறியது. அதற்குக் காரணம் பழைய சட்டம் நடைமுறையில் இருந்தமையே. அதாவது, நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டவர்கள் தங்கள் கருத்தை மாற்ற மறுத்தால், வழக்கில் வேறு எந்த முடிவும் இருக்க முடியாது. பெரேனியஸின் கேள்விக்கு பதிலளித்த அப்பல்லோனியஸின் உண்மையான வார்த்தைகளும், சட்டசபையின் முன் அவர் அளித்த பதில் போன்ற விபரங்கள் யாவும் ஆரம்பகால சாட்சிகள் பற்றிய எனது குறிப்பேட்டில் விளக்கப்பட்டுள்ளன.
ஆயர்களின் திருநிலை வாரிசு
22. கொமோடஸ் ஆட்சியின் பத்தாம் ஆண்டில், உரோமின் ஆயராக பதின்மூன்று ஆண்டுகள் பணியாற்றிய விக்டருக்குப் பிறகு லூத்தரஸ் பதவியேற்றார். அதே ஆண்டில் ஜூலியன் தனது பத்தாவது ஆண்டு சேவைக்காலத்தை நிறைவுசெய்தபோது, டெமெட்ரியஸ் அலெக்சாந்திரியாவின் ஆயராக நியமனம் பெற்றார். அதே நேரத்தில், ஏற்கனவே நான் குறிப்பிட்ட புகழ்பெற்ற செராபியஸ், அப்போஸ்தலர்களின் வரிசைக்கிரம அடிப்படையில், அந்தியோகியாவின் எட்டாவது ஆயராகப் பதவியேற்றார். தியோபிலஸ் பாலஸ்தீனத்தில் சிசேரியாவை ஆட்சி செய்த அதே சமயம், மேற்கூறிய நர்சிஸஸ் ஜெருசலேமின் ஆயர் பணிமன்றத்துக்குப் பொறுப்பாக இருந்தார். பிற சமகாலத்தவர்களில் கொரிந்துவின் ஆயர் பக்கஸ் மற்றும் எபேசசின் ஆயரான பாலிகிரேட்ஸ் ஆகியோர் சேவையாற்றினர். இவர்களோடு இன்னும் பல முக்கியஸ்தர்கள் இருந்தபோதிலும், அவர்களில் எழுத்துப்பூர்வமாக பாதுகாக்கப்பட்டவர்களின் தகவல்கள் மற்றும் பெயர்களை மட்டுமே நாங்கள் இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
உயிர்த்த ஞாயிறு குறித்து எழுந்த சர்ச்சை
23. அக்காலத்தில், அனைத்து ஆசிய ஆயர்களும், பண்டைய பாரம்பரியத்தின் படி, யூதர்கள் பூரண சந்திரனுக்குப் பின் பதினான்காம் நாளில் ஆட்டுக்குட்டியைப் பலியிடும்படி கட்டளையிட்டு இரட்சகரின் பஸ்காவைக் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதனால் சர்ச்சை ஏற்பட்டது. அதையிட்டு எழுந்தது சிறிய சர்ச்சை அல்ல, அது பெரிதாக உருவெடுத்தது. வாரத்தில் எந்த நாளாக இருந்தாலும், அதே நாளில் தொடங்கிய உபவாசத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் வலியுறுத்தப்பட்டது. இருப்பினும், உலகெங்கிலும் உள்ள மற்ற எல்லா திருச்சபை அமைப்புகளில் இவ்வழியில் பாஸ்கா பெருவிழாவைக் கொண்டாடுவது வழக்கமாக இல்லை. ஏனெனில், அப்போஸ்தலிக்க மரபின்படி, அவர்கள் இந்தக் கருத்தைப் பேணி வந்தனர். அது இன்னும் நடைமுறையில் உள்ளது: நமது இரட்சகரின் உயிர்த்தெழுதல் நாளில் (ஞாயிற்றுக்கிழமை) உபவாசம் முடிவடைகிறது. ஆயர்களின் பேரவைகள் மற்றும் மாநாடுகள் இந்த பிரச்சினையை விவாதிக்கத் தொடங்கின. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை தவிர வேறு எந்த நாளிலும் கர்த்தரான கிறீஸ்து உயிர்த்தெழுந்த அந்த புனித நிகழ்வு கொண்டாடப் படக்கூடாது என்றும், அன்று மட்டும் பாஸ்கா பண்டிகைக்கு முன் கடைபிடித்த உபவாசம் நிறைவுக்கு வரவேண்டும் என்றும் திருச்சபைக்கு ஒரு கட்டளையை ஏற்படுத்துவதில் அனைவரும் ஒருமனதாக இருந்தனர். இது கடிதங்கள் வாயிலாக அனைவருக்கும், மற்றும் எல்லா இடங்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. செசரியாவின் ஆயரான தியோபிலஸ் மற்றும் ஜெருசலேம் ஆயர் நர்சிஸஸ் ஆகியோர் தலைமையில் பாலஸ்தீனத்தில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு கடிதம் இன்னும் உள்ளது. அதே தலையங்கத்தில் கீழ்,ல் இதே பிரச்சினையை விவாதிக்க ஆயர் விக்டரின் தலைமையில் உரோமில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் கடிதமும் இற்றைவரை காணப்படுகிறது. அங்கே சமூகமளித்திருந்த ஏனையவர்களான, குறிப்பாக, பொன்டஸின் ஆயர்கள், மூத்தவரான பால்மாஸ் நகரத்து ஆயர் இவர் கவுலில் இருந்து வந்து மூத்தவராகத் தலைமை தாங்கினார், ஐரேனியஸ் ஓஸ்ரோயீன் மற்றும் நகரங்கள் சார்பாகத் தலைமை தாங்கினார், அத்தோடு கொரிந்துவின் ஆயர் பாக்கிலஸ் மற்றும் பலர் ஒரே கருத்தை ஏகமனதாக வெளிப்படுத்தினர்.
24. இருப்பினும், ஆசியாவைச் சேர்ந்த ஆயர்கள், நீண்ட காலத்திற்கு முன்பே தங்களுக்கு வழங்கப்பட்ட சடங்குகளின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினர். மேலும் அவர்கள் பாலிகிரேட்ஸ் என்பவரால் தலைமை தாங்கி வழிநடத்தப்பட்டனர். விக்டர் மற்றும் உரோம் திருச்சபைக்கு அவர் எழுதிய கடிதத்தில் அவர்கள் பெற்ற பாரம்பரியத்தை பின்வருமாறு விளக்குகிறார்.
கூட்டாமல், குறைக்காமல் சரியாக அந்த நாளை கடைபிடிப்போம். ஆசியாவின் பெரிய மனிதர்கள், அதாவது முடிவெடுக்கும் தகுதியுள்ள பெரியவர்கள் மீளா உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டனர். கர்த்தருடைய வருகையின் கடைசி நாளில் அவர்கள் மீண்டும் எழுந்திருப்பார்கள். ஆகவே, அவர் வானத்திலிருந்து மாட்சிமையுடன் இறங்கி வந்து, தம்முடைய பரிசுத்தவான்கள் அனைவரையும் திரும்ப அழைக்கும்போது, பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவரான பிலிப்பும், அவருடைய வயதான கன்னிப் பெண்களான மகள்மார் இருவரும் ஹைராபோலிஸ் என்ற இடத்திலிருந்தும், எபேசஸில் பரிசுத்த ஆவியின் மகிமை பெற்று வாழ்ந்து, மரித்து, மீளாத துயிலில் ஆழ்ந்திருக்கும் அவரது மூன்றாவது மகளும் உயிருடன் எழுவர். கர்த்தரான இறைவனுக்கு மிகவும் நெருங்கியவரும், வேதசாட்சியும், ஆசிரியரும், பின்னர் துறவற அங்கி அணிந்த துறவியான யோவான் எபேசஸில் மீளாத் துயிலில் இருக்கிறார். அதேபோன்று ஸ்மிர்னாவின் ஆயரும் வேதசாட்சியுமான பொலிகார்ப், யூமேனியாவின் ஆயரும் வேதசாட்சியுமான த்ரேஸியஸ் போன்றோர் ஸ்மிர்னாவில் மீளாத் துயிலில் உள்ளனர்.
லாஓதிசியாவில் துயில்கொள்ளும் ஆயரும், வேதசாட்சியுமான சாகரிஸைப் பற்றி, அல்லது ஆசீர்வதிக்கப்பட்ட பாப்பிரஸ்ஸைப் பற்றி, அல்லது பரலோகத்திலிருந்து வரும் அழைப்புக்காகக் காத்திருக்கும், முழுக்க முழுக்க பரிசுத்த ஆவியில் வாழ்ந்து, சர்திஸில் மீளாத் துயிலில் இருக்கும் மெலிட்டோவைப் பற்றியும் நாம் பேசலாமா? இவர்கள் அனைவரும் நற்செய்தியின்படி மாதம் தொடங்கி பதினான்காம் நாளை பஸ்காவின் தொடக்க நாளாக எவ்வித மாற்றமும் இன்றி அனுசரித்தனர். நான், பாலிகிரேட்ஸ், உங்கள் அனைவரையும் விட இளையவர் நான் எனது உறவினர்களின் பாரம்பரியத்தின்படியே வாழ்ந்தேன். அவர்களில் சிலரை நான் இன்னும் பின்பற்றுகிறேன். அவர்களில் ஏழு பேர் ஆயர்கள் மற்றும் நான் எட்டாவது. மக்கள் புளித்த மாவை வெளியே எறியும் நாளை எனது உறவினர்கள் எப்போதும் அனுசரித்துள்ளனர். ஆகையால், என் அன்பான சகோதரர்களே, அறுபத்தைந்து ஆண்டுகள் ஆண்டவரின் வழிகாட்டுதலில் வாழ்ந்த நான், உலகின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள சகோதரர்களுடன் கலந்தாலோசித்தேன். பரிசுத்த வேதாகமத்தை முழுமையாகப் படித்திருக்கிறேன். எந்தவித அச்சுறுத்தல்களுக்கும் நான் அஞ்சமாட்டேன். ஏனெனில் “மனிதரை விட கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்” (அப்போஸ்தலர் 5:29) என்று என்னை விட சிறந்த மக்கள் நமக்கு உபதேசித்திருக்கிறார்கள்.
என்னதான் அவர் தனது கருத்தை எழுதியபோதும், பகிர்ந்துகொண்ட போதும், அவருடன் இருந்த ஆயர்கள் குறித்து அவர் இவ்வாறு கூறுகிறார்:
மேலும் எங்களுடன் இருக்கும் ஆயர்களின் பெயர்களையும், உங்கள் வேண்டுகோளின் பேரில் நான் குறிப்பிட்ட ஆயர்களின் பெயர்களையும் என்னால் சொல்ல முடியும். ஆனால் நான் அவர்களின் பெயர்களை எழுதலாம். ஆனால் அங்கே மிகப் பெரிய எண்ணிக்கையானவர்கள் உள்ளனர். இப்படி அவர்களைப் பற்றி எழுதுவதால் அவர்கள் என் பலவீனத்தை புரிந்துகொண்டாலும் கூட, நான் இந்தக் கடிதத்தில் எழுதியுள்ளவற்றை அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். ஏனென்றால் என் தலைமுடி வீணாக நரைக்க வில்லை. நான் எப்போதும் கிறிஸ்து இயேசுவின் தரையிலும் அன்பிலும் வாழ்ந்தேன் என்பதை அவர்கள் அறிந்துள்ளனர்.
உரோமைய திருச்சபைக்குத் தலைமை தாங்கிய விக்டர், அனைத்து ஆசிய மறைமாவட்டங்கள் அண்டை திருச்சபை அமைப்புகளுடன் கொண்டிருந்த சுமுகத்தன்மையை, வழக்கத்திலுள்ள கொள்கைகளுக்கு மாறான வழியில் குலைக்கவும், கடிதங்கள் மூலம் அவர்களை வெளியேற்றும் கைங்கரியத்தில் இறங்கினார். அங்குள்ள அனைத்து சகோதரர்களையும் முழுவதுமாக வெளியேற்றப் போவதாக அறிவித்தார். அவரது இந்த அபிப்பிராயம் குறித்து ஆயர்கள் எவரும் மகிழ்ச்சியடைய வில்லை. மாறாக அவர்கள் தங்கள் அயல் நாடுகளிடம் அமைதி, ஒற்றுமை, சமாதானம் மற்றும் அன்பின் குறிக்கோளுடன் வாழுமாறு கேட்டுக் கொண்டனர். விக்டரை கடுமையாக விமர்சித்து அவர்கள் எழுதிய வார்த்தைகள் இன்னும் காணப்படுகின்றன. ஐரேனியஸ் கவுலில் உள்ள கிறிஸ்தவர்களை மேற்பார்வை செய்தார். அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்களின் சார்பாக ஐரேனியஸ் எழுதினார். இந்த ஆவணங்களை எழுதியவர்களில் அவரும் ஒருவர். கர்த்தருடைய உயிர்த்தெழுதலின் தேவ மகிமையானது, கர்த்தருடைய நாளில் மட்டுமே கொண்டாடப்பட வேண்டும் என்று சொல்லும் அதே வேளை, பழைய மரபுகளைப் பின்பற்றும் நோக்கத்துடன் கடவுளின் சகல திருச்சபை அமைப்புகளையும் ஒதுக்கிவைக்க அனுமதிக்க வேண்டாம் என்று விக்டரிடம் கூறியிருந்தார். பின்னர் அவர் பின்வருமாறு தொடர்கிறார்:
ஏற்பட்ட சர்ச்சையானது இந்த நாளைப் பற்றியது மட்டுமல்ல, உபவாசத்தையும் பற்றியது என்றே கூறவேண்டும். சிலர் ஒரு நாள் மட்டுமே விரதம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். மற்றவர்கள் இரண்டு நாட்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று அபிப்பிராயம் கொண்டுள்ளனர். மற்றும் சிலர், இன்னும் அதிகமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். வேறு சிலர் தங்கள் “பகல் பொழுதை” நாற்பது பகல் மற்றும் நாற்பது இரவுகளாகக் கருதுகிறார்கள். இத்தகைய மாற்றங்கள் நம் காலத்தில் அல்ல, நமக்கு முன்னோடிகளின் காலத்திலேயே தொடங்கி இன்னும் தொடர்கிறது. புதிய நடைமுறைகளை உருவாக்கும் போது அவர்கள் தங்கள் சொந்த நலனுக்காக, அந்நடைமுகளில் காணப்பட்ட துல்லியமான சாராம்சங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டதாகவே தோன்றுகிறது. ஆயினும்கூட, அவர்கள் அனைவரும் இப்போது நாம் வாழ்வது போல சமாதானத்துடனேயே வாழ்ந்தனர். அதேபோல், உபவாசம் பற்றிய நிலவிய கருத்து வேறுபாடு, விசுவாசம் பற்றிய நமது உடன்பாட்டை உறுதிப்படுத்துகிறது.
இதற்கு அவர் ஒரு வரலாற்றுக் கதையை இணைத்துள்ளார். அதுகுறித்தும் நான் ஒரு பொருத்தமாக மேற்கோளைக் காட்ட முடியும்:
இவர்களில் சோட்டருக்கு முன் இருந்த பிரதானிகள், நீங்கள் இப்போது தலைமை தாங்கும் சபையின் தலைவர் — அனிசெட்டஸ், பயஸ், டெலிஃபோரஸ் மற்றும் சிஸ்டஸ் போன்றோர் இதில் ஈடுபடவில்லை, அல்லது அவர்களைப் பின்பற்றுபவர்கள் கூட அவற்றில் ஈடுபடவில்லை. ஆனால் அதற்குக் காரணகர்த்தாக்கள் போன்றோர் வாழ்ந்த மறைமாவட்டங்களில் இருந்து வந்தவர்களுடன் இணக்கமாக காணப்பட்டனர். அதைக் கடைப்பிடியாதவர்களுக்கு பிரச்சினை எதுவும் காணப்படாவிட்டாலும், கடைப்பிடிப்பவர்களுக்கு அதில் சிரமங்கள் காணப்பட்டன. இருப்பினும் அவர்கள் வேற்றுமைகளின்றி வாழ்ந்தார்கள். இதையிட்டு எவரும் நிராகரிக்கப்படவில்லை. ஆனால் மாற்றங்களை நடைமுறைப் படுத்தாத உங்களுக்கு முன் இருந்த பிரதானிகள், அதை ஏற்படுத்திய மற்றைய மறைமாவட்டங்களில் உள்ளவர்களுக்கு நற்கருணை அனுப்பினார்கள். ஆசீர்வதிக்கப்பட்ட பொலிகார்ப் அனிசெட்டஸின் காலத்தில் உரோம் நகருக்கு சென்றபோது, அவர்கள் இந்த விடயம் குறித்து குழப்பத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. மற்றைய விடயங்களைப் பற்றி அவர்களுக்கு சிறிய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர்கள் உடனடியாக சமரசம் செய்து கொண்டனர். அனிசெடஸால் பொலிகார்ப்பிடம் அதை நடத்த வேண்டாம் என்று வற்புறுத்தவும் முடியவில்லை. ஏனென்றால், அவர் தனது விசுவாசத்தை எப்போதும் நம்முடைய கர்த்தருடைய சீடரான யோவானிடமும் அவருக்குத் தெரிந்த அப்போஸ்தலர்களிடமும் கொண்டிருந்தார். அதேவேளை பொலிகார்ப் அனிசெடஸை அதை நடத்தும்படி வற்புறுத்தவும் இல்லை. ஏனெனில் தான், தனக்கு முன் உள்ள பிரதானிகளின் கட்டளைக்குக் கட்டுப்பட்டவன் என்றார். இருப்பினும், அவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் மத்தியில் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். அனிசெட்டஸ், சட்டசபையில் பொலிகார்ப்புக்கு நற்கருணை ஆராதனையை வெளிப்படையான மரியாதையுடன் அர்ப்பணித்தார். அவர்கள் ஒருவரையொருவர் சமாதானமாக விட்டுப் பிரிந்தார்கள். அதை நடத்தியவர்களுக்கும் நடத்தாதவர்களுக்கும் இடையில் முழுமையான சமாதானம் ஒற்றுமை காணப்பட்டது.
சமாதானத் தூதுவராக, தன் பெயருக்கு ஏற்றவாறு வாழ்ந்த இரேனியஸ், சபையின் அமைதிக்காக இப்படிப்பட்ட பிரச்சினைகளை விவாதித்து, கலந்தாலோசித்து சுமுகமாகத் தீர்த்து வைத்தார். அவர் விக்டருக்கு மட்டுமல்ல, இந்த பிரச்சினையைப் பற்றி விவாதிக்கும் பல திருச்சபைப் பிரதானிகளும் இது பற்றி எழுதினார்.
25. பாலஸ்தீன ஆயர்கள் மேலே குறிப்பிட்ட விடயத்தை பரிசீலித்தனர். அங்கு நர்சிஸஸ் மற்றும் தியோபிலஸ், டையரைச் சேர்ந்த ஆயர் கஷியஸ், டொலமைசை சேர்ந்த ஆயர் க்ளாராஸ் மற்றும் அவர்களுடன் கூடியிருந்தவர்கள், தாங்கள் அப்போஸ்தலிக்க சம்பிரதாயங்களில் இருந்து பெற்ற பாஸ்கா பாரம்பரியத்தைப் பற்றி விரிவாக எழுதி, பின்வருவரும் விளக்கத்தோடு நிறைவு செய்தார்கள்.
ஒவ்வொரு மறைமாவட்டத்திற்கும் எங்கள் கடிதத்தின் நகல்களை அனுப்ப முயற்சிக்கவும். அவ்வாறு செய்வதன் மூலம், தங்கள் சுயபுத்தி காரணமாக தங்களையே தவறான வழியில் இட்டுச் செல்லும் மனிதர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பில் இருந்து நாம் விடுபடாமல் இருக்க வேண்டுமாயின், ஒவ்வொரு மறைமாவட்டத்திற்கும் எங்கள் கடிதத்தின் நகல்களை அனுப்ப முயற்சிக்கவும். நாங்கள் ஒரே நேரத்தில் புனித பாஸ்கா நாளைக் கடைப்பிடிக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் கடிதங்களைப் பரிமாறிக்கொண்ட காரணத்தால், அலெக்சாந்திரியர்களும் எங்களைப் போலவே, நாங்கள் அனுசரிக்கும் அதே நாளில் பாஸ்கா பெருவிழாவைக் கொண்டாடுகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருப்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்.
ஐரேனியஸ் மற்றும் அவரது சமகாலத்தவர்களின் ஆக்கங்கள்
26. ஏற்கனவே மேற்கோள் காட்டப்பட்ட ஐரேனியஸின் கடிதங்கள் மற்றும் படைப்புகளைத் தவிர, கிரேக்கர்களுக்கு எதிரான அவரது சுருக்கமான மற்றும் இடித்துரைக்கும் விதத்தில் அமைந்துள்ள கட்டுரை ஒன்று இன்னும் உள்ளது. Concerning Knowledge என்று பெயரிடப்பட்டுள்ளது. மார்சியன் என்ற கிறிஸ்தவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மற்றொரு நூலும் உள்ளது. இது Demonstration of Apostolic Preaching என்று அழைக்கப் படுகிறது. இது எபிரேயர்களுக்கு எழுதப்பட்ட நிருபம் மற்றும் சொலமனின் ஞானம் ஆகியவற்றிலிருந்து மேற்கோள்களைக் கொண்ட பல்வேறு நிருபங்களின் தொகுப்பான புத்தகமாகும். இவை எனக்கு பரிச்சயமான ஐரேனியஸின் படைப்புகள்.
பதின்மூன்று வருட ஆட்சிக்குப் பிறகு கொமோடஸ் இறந்தபின்பு, பெர்டினாக்ஸ் ஆறு மாதங்கள் பேரரசராக இருந்தார். அவருக்குப் பிறகு செப்டிமஸ் செவெரஸ் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார்.
27. அக்காலத்து சபை உறுப்பினர்களின் பல ஆக்கங்கள் இன்னும் பரவலாகப் பாதுகாக்கப்படுகின்றன. நானும் அவற்றைப் படித்திருக்கிறேன். இதில் ஹெராக்ளிட்டஸ் அவர்கள் எழுதிய On the Apostle, மதவெறியர்களினால் பரவலாக விவாதிக்கப்பட்ட கருப்பொருளை உள்ளடக்கிய மாக்சிமஸின் The Origin of Evil மற்றும் The Creation of Matter; என்ற நூல்களும், Candides என்பவரால் எழுதப்பட்ட Hexameron, Appian என்பவரால் எழுதப்பட்ட இதே கருப்பொருளை உள்ளடக்கிய நூலும், அரேபியானுஸ் என்பவரால் வடிக்கப்பட்ட Book on the Resurrection, மற்றும் நாம் அறிந்திராத வரலாற்றின் பல ஆக்கங்கள் இவற்றில் அடங்கும். இறுதியாக, பல மரபுவழி எழுத்துக்களும் பரவலாகக் காணப்படுகின்றன. இது பரிசுத்த வேதாகமம் பற்றிய அவர்களது விளக்கங்களிலிருந்து தெளிவாகிறது. இருப்பினும், பெயர் குறிப்பிடாத எழுத்தாசிரியர்களின் படைப்புக்கள் மற்றும் அவற்றின் ஆசிரியர்கள் போன்ற விபரங்கள் எதுவும் இல்லாத புத்தகங்கள் ஏராளமாக உள்ளன.
ஆர்டிமன் மற்றும் தியோடோடஸின் மதங்களுக்கு எதிரான கொள்கை
28. சமோசாட்டாவின் பவுல் என்பவர், நான் வாழ்ந்த காலத்தில் புதுப்பிக்க முயற்சித்த ஆர்ட்டிமனின் மதங்களுக்கு எதிரான கொள்கைகளுக்கு எதிராக இவர்களில் ஒருவர் ஆக்கிய ஒரு கட்டுரை, இங்கு நாம் விவாதத்திற்கு எடுத்துக்கொண்ட வரலாற்று காலத்திற்கும் பொருந்தும். இரட்சகர் வெறும் மனிதர் என்று வலியுறுத்தும் இந்த மதங்களுக்கு எதிரான கொள்கையை அவர் நிராகரிக்கிறார். இது ஒரு சமீபத்திய கண்டுபிடிப்பு, ஏனெனில் இதை அறிமுகப்படுத்தியவர்கள் அதை பழமையானது என்று கூறி அதை கௌரவத்துக்குரியதாக மாற்ற முயன்றனர். அவர்களின் அவதூறான பொய்களுக்கு எதிரான பல வாதங்களுக்குப் பிறகு, கட்டுரை இவ்வாறு தொடர்கிறது:
அவர்களின் முன்னோடிகளும் அப்போஸ்தலர்களும் தாங்கள் செய்வதை கற்பித்தார்கள் என்றும், உரோமின் பதின்மூன்றாவது ஆயர் விக்டரின் காலம் வரையும் பேதுருவுக்குப் பிறகும் உண்மையான போதனை பாதுகாக்கப்பட்டது என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அவரது வாரிசான செஃபிரினஸ் காலத்திலிருந்து உண்மை திரிபுபடுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. பரிசுத்த வேதாகமம் இவர்களின் கூற்றோடு முரண்படவில்லை என்றால், அவர்களின் கூற்றுகளை நம்பலாம். விக்டருக்கு முன் இருந்த கிறிஸ்தவ எழுத்தாளர்கள் தங்கள் காலத்து புறஜாதிகள் மற்றும் மதவெறியர்களுக்கு எதிராக எழுந்து சத்தியத்தை பாதுகாத்தனர். ஜஸ்டின், மில்டியாட்ஸ், டேஷியன், கிளெமென்ட் போன்ற பலரின் படைப்புகளால் கிறிஸ்து கடவுளாக ஏற்றுக் கொள்ளப்பட்டார் என்ற உண்மையை நான் ஆணித்தரமாகக் கூற விரும்புகிறேன். எம் இரட்சகரான கிறிஸ்துவை கடவுளாகவும் மனிதனாகவும் அறிவித்த ஐரேனியஸ், மெலிட்டோ மற்றும் பிறரின் புத்தகங்களையோ அல்லது கிறிஸ்துவை கடவுளின் வார்த்தையாகப் பாடி அவரைக் கடவுளாகக் கருதும் அனைத்து பண்டைய சங்கீதங்களையும் பாடல்களையும் அறியாதவர்கள் உளரோ? சபையின் புரிதல் பல ஆண்டுகளாக ஏற்றுக்கொள்ளப் பட்டிருந்த காலகட்டத்தில், விக்டரின் முன்னோர்கள் எப்படி இவர்கள் சொல்வது போல் பிரசங்கம் செய்திருக்க முடியும்? இந்த கடவுளை மறுதலிக்கும் துரோகத்தின் தந்தை தியோடோடஸ் விக்டர் என்பவரே. கிறிஸ்து வெறும் மனிதர் என்று முதன் முதலில் சொன்னபோது, செருப்புத் தைக்கும் தொழிலாளியும், கடவுளை மறுதலிக்கும் துரோகத்தின் தந்தையுமான தியோடோடஸை அவர் திருச்சபையிலிருந்து விலக்கிவைத்தார் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும், ஆயர் விக்டரை இவ்வாறு அவதூறாகப் பேசுவதற்கு வெட்கப்பட வில்லையா? அவர்கள் மீதான விக்டரின் அணுகுமுறை அவர்களுக்கு நிந்தனை செய்வது போல் இருந்ததாக அவர்கள் கருதுவார்களாக இருந்தால், இந்த மதங்களுக்கு எதிரான கொள்கையைக் கண்டுபிடித்த தியோடோடஸை அவர் எவ்வாறு வெளியேற்றியிருக்க முடியும்?
விக்டர் காலத்து நிகழ்வுகள் இவைதான். அவர் பத்து வருடங்கள் பதவியில் இருந்து நிறைவுசெய்த பின்னர், அவருக்குப் பின் செபிரினசின் ஆட்சியின் ஒன்பதாம் ஆண்டு செவேரஸ் பதவிக்கு வந்தார். மேற்குறிப்பிட்ட மாதவிரோத கொள்கை சம்பந்தமான புத்தகத்தின் ஆசிரியர், செபிரினஸ் வாழ்ந்த காலத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தையும் இத்தோடு இணைத்து பின்வருமாறு கூறுகிறார்:
என் காலத்தில் நடந்த ஒரு சம்பவம் சோதோம் மக்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். நடாலியஸ் என்ற பிரசங்கி அஸ்க்லெபியோடோடிஸ் மற்றும் இரண்டாவது நபரான தியோடோடஸ் என்ற வங்கியாளர் போன்றோரால் வழிநடத்தப்பட்டார். இருவரும் செருப்பு தைக்கும் தொழிலாளியான தியோடோடஸின் சீடர்கள். அதே தியோடோடஸ் தான் முதன்முதலில் விக்டரால் இந்த எண்ணத்தின் காரணமாக அல்லது இல்லாத ஒரு காரணத்தின் நிமித்தம் சபை நடவடிக்கைகளிலிருந்து வெளியேற்றப்பட்டார். நடாலியஸை மாதத்திற்கு 150 டினாரி ஊதியத்துடன் இந்த மதங்களுக்கு எதிரான ஆயராகப் பணிபுரியத் தூண்டினர். அவர்களுடன் இணைந்த பிறகு, அவர் அடிக்கடி நம் இறைவனின் தரிசனங்களால் எச்சரிக்கப்பட்டார். ஏனென்றால், நம்முடைய இரக்கமுள்ள கடவுளும் ஆண்டவரும் தம்முடைய பாடுகளை நேரில் பார்த்த ஒருவர் திருச்சபைக்கு வெளியே சென்று இறப்பதை விரும்பவில்லை. அவர் தரிசனங்கள் வழியாகக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை சிறிதும் மதிக்கவில்லை, ஏனென்றால் அவர்களிடையே காணப்பட்ட புகழ், பணம் மற்றும் பேராசை போன்ற மாயைகளால் சிக்குண்டு திசைமாறிச் சென்றார். அதன் காரணமாக புனித தேவதூதர்களால் இரவு முழுவதும் சவுக்கால் அடிக்கப்பட்டு தண்டனைக்குள்ளாகி மிகவும் துன்பப்பட்டார். அவர் காலையில் சாக்குத் துணியால் ஆன உடையுடன் சாம்பலை உடல் முழுவதும் பூசிக்கொண்டு ஆயரான செஃபிரினஸ் அவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கோரும் நோக்கத்துடன் கண்ணீர் மல்க அவரை நோக்கி விரைந்தார். செஃபிரினஸ் அவர்களின் காலில் மட்டுமல்ல, அங்கிருந்த ஏனைய மதகுருமார்கள் மற்றும் சாதாரண மக்கள் இருவரின் காலடியிலும் விழுந்து கெஞ்சி உருகினார். அவர் கருணைக்காக இறைஞ்சி அவர் சவுக்கையால் தண்டிக்கப்பட்டமைக்கு ஆதாரமான வடுக்களையும் அவர்களிடம் காட்டினார். மிகுந்த தயக்கத்தின் பின், அவர் மீண்டும் திருச்சபை நடவடிக்கைகளுக்குள் அனுமதிக்கப்பட்டார்.
அந்த நபர்கள் பற்றி குறிப்பிட்ட அதே ஆசிரியரின் மற்றொரு மேற்கோளை நான் இங்கே இணைத்துள்ளேன்:
பரிசுத்த வேதாகமத்தை அவதூறு செய்வதையிட்டு அவர்கள் கிஞ்சித்தும் பயமோ, தயக்கமோ காட்டவில்லை. அவர்கள் தொன்றுதொட்டு வழக்கத்தில் இருந்துவந்த விசுவாசத்தை உதாசீனம் செய்தனர். அவர்கள் கிறிஸ்துவைப் பற்றி அறியாதிருந்தார்கள். சத்தியத்தின் ஆதாரமான வேதாகமத்தைப் புறக்கணித்தார்கள். அதன்மூலம் அவர்கள் தங்கள் நாத்திகத்தை முன்னெடுத்துச் செல்ல ஒரு ஆதாரத்தைத் தேடினர். யாராவது வேதாகமத்தின் ஒரு பகுதியை மேற்கோள் காட்டி அவர்களுக்கு சவால் விடுத்தால், அவர்கள் அதை தங்கள் வாதத்திற்கு இணையான அல்லது ஒத்திசைவான வாதமாக மாற்ற முடியுமா என்று பார்க்கிறார்கள். கடவுளின் பரிசுத்த வேதாகமத்தைக் கைவிட்டு, அவர்கள் “வடிவியல் வரைபுகள்” [நிலத்தை அளவீடு செய்யும் அளவீட்டு முறை] மீது கவனம் செலுத்துகிறார்கள். ஏனென்றால், அவர்கள் பூமியில் உதித்தவர்கள். ஆகவே அவர்கள் பூமியைப் பற்றி பேசுகிறார்கள். முகில் கூட்டத்தின் மத்தியில் இருந்து மாட்சிமையுடன் வருபவரை அவர்கள் அறிந்ததாகத் தெரியவில்லை. அவர்களில் சிலர் யூக்ளிட்டின் வடிவ மற்றும் அளவியல் கலைகளைப் படித்து அரிஸ்டோட்டில் மற்றும் தியோபிரஸ்டஸ் போன்றோரை மதிக்கின்றனர். மேலும் சிலர் கலெனை [Galen ] வழிபடுகின்றனர். அவிசுவாசிகளின் கலைகளை தங்கள் மதவெறிக்கு அனுகூலமாகப் பயன்படுத்தி வேதாகமத்தின் தெளிவான விழுமியங்களை சிதைத்து தாங்கள் அவற்றைத் திருத்தியதாகக் கூறுகிறார்கள்.
அவர்களின் ஆக்கங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் எவரும், நான் அவர்களைக் குற்றம் கூறவில்லை என்பதை உணர்ந்து கொள்வார்கள். அவர்களின் ஆக்கங்கள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. ஏனெனில் அஸ்லிபீடஸின் ஆக்கங்கள் தியோடோடஸின் ஆக்கங்களுடன் ஒத்துப்போவதில்லை. அவர்களிடம் பல கையெழுத்துப் பிரதிகள் காணப்படுகின்றன. காரணம் என்னவென்றால், உண்மையில் அவை சிதைந்திருந்தாலும், அவர்களது சீடர்கள் அந்தத் “திருத்தப்பட்ட” உரையை நகலெடுக்க விடாமுயற்சியுடன் உழைத்தனர். இவையும் ஹெர்மோபிலஸின் நூல்களுடன் ஒத்துப் போவதில்லை. ஆனால் அப்பல்லோனியாட்ஸின் ஆக்கங்கள் அவரது சொந்த ஆக்கங்களுடனேயே முரண்படுகின்றன. முன்னர் எழுதப்பட்ட பிரதிகள் பிந்தையவற்றுடன் ஒப்பிடுகையில், பாரிய வித்தியாசத்தைக் கொண்டிருந்தன. இது அவர்களால் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது ஊழல் மிகு கிரியையாகும். வேதாகமம் பரிசுத்த ஆவியின் கொடையாகவும், அவரது வழிகாட்டுதலாலும் இயற்றப்பட்டது என்பதை நம்பாத, அவிசுவாசிகள், பரிசுத்த ஆவியை விட தங்களை ஞானிகளாகக் கருதும் அசுத்த ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட இந்த நகல் எழுத்தாளர்கள், அவர்கள் செய்யும் பாவத்தின் விளைவுகள் பற்றித் தெரியாமல் இருந்திருக்காது. அவர்கள் தங்கள் செய்த குற்றத்தை மறுக்க முடியாது: ஏனெனில் இந்த பிரதிகள் அவர்களின் சொந்த கையெழுத்தில் எழுதப்பட்டுள்ளன. இந்த பரிசுத்த வேதாகமத்தை அவர்கள் தங்கள் ஆசிரியர்களிடமிருந்து பெறாத காரணத்தால், அவர்கள்போட்ட தப்புக்கணக்கு சாத்தியப்படவில்லை. மேலும் அவர்கள் நகலெடுத்த பிரதிகள் தொடர்பான மூலப் பிரதிகளை அவர்களால் எப்படியும் தயாரிக்க முடியாது. இவர்களில் சிலர் இந்த உரையை மறுபரிசீலனை செய்வது தேவையற்றது என்று அறிந்துகொண்டது மட்டுமல்லாமல், சட்டத்தையும் தீர்க்கதரிசிகளையும் வெறுமனே நிராகரிக்கின்றனர். இவ்வாறு துன்மார்க்கம் நிறைந்த, தேவபக்தியற்ற போதனைகளைப் பயன்படுத்தி அவர்கள் அழிவின் ஆழத்திற்குள் மூழ்கிவிட்டனர்.
மேற்கண்ட விடயங்களை விளக்குமுகமாக, இங்கே தரப்பட்ட விளக்கங்கள் போதுமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
கிறிஸ்தவ வாழ்வில் ஏற்படக்கூடிய துன்பங்கள் மற்றும் வாதப்பிரதிவாதங்கள்
நடப்பில் பிரான்ஸ் தேசத்திலுள்ள லியோன்ஸ் நகரில் நடந்த பயங்கரமான கொடூரமான துன்புறுத்தல்கள் குறித்து யூசிபியஸ் அளித்த தெளிவான விளக்கத்தின் காரணமாக, இந்த திருச்சபை வரலாறு [The Church History] என்ற புத்தகம் மற்ற புத்தகங்களை விட மேற்கத்திய கவனத்தை மிக வலுவாக ஈர்த்துள்ளது. ஆரம்பகால கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் உரோமைய வேதசாட்சிகள் என்றே பொதுவாக கருதப்படுகின்றனர். ஆனால் இது வழக்கில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. உரோமப் பேரரசின் போது உரோம் மற்றும் இத்தாலியில் கொடுமைகளுக்கு ஆளான கிறிஸ்தவர்கள், வட ஆபிரிக்க நாடுகளில் குறிப்பாக எகிப்து அத்துடன் பாலஸ்தீனம், சிரியா மற்றும் ஆசியாவின் சில குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்த கிறீஸ்தவர்கள் அனுபவித்த கொடுமைகளை விட மிகவும் குறைவு என்றே கூறலாம். கவுலைப் பொறுத்த வரையில், லியோனில் அமைந்துள்ள அரவட்டைப் பள்ள திறந்தவெளியரங்கில் அரங்கேற்றப்பட்ட சித்திரவதைகள் அலெக்சாந்திரியா அரங்கில் நடத்தப்பட்ட குரூரம் மிகுந்த சித்திரவதைகளுக்கு சரிசமமானவையாக இருந்தன. இந்த மனிதாபிமானமற்ற குரூரச் செயல்களில் ஈடுபட்டிருந்த மிருகத்தனமான மற்றும் மனிதாபிமானமற்ற தன்மையை இன்று கற்பனை செய்வது கூட கடினமாக இருக்கிறது. இந்த கொடூரங்களுக்கு முகம் கொடுத்தவர்களில் நெஞ்சுரம் மிக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் கூட அடங்குவர் என்பது முக்கியமாகக் குறிப்பிட வேண்டியுள்ளது. ஆனால் பண்டைய உரோமைய காட்சியரங்குகளில் அரங்கேற்றப்பட்ட வாட்போர் போன்றவற்றில் மகிழ்ச்சியடையக்கூடிய எந்தவொரு சமூகமும் உண்மையான இரத்தம் சிந்துதலை ஏற்படுத்தக்கூடிய உக்கிரமான கடற்போரை துச்சமென மதிக்கும். நிராயுதபாணிகளான கைதிகள் வெற்றுக் கைகளுடன் கொடிய காட்டு விலங்குகளுடன் சண்டையிடுவதைப் பார்ப்பவர்களுக்கு, கிறிஸ்தவர்களை சித்திரவதை செய்து பொழுதுபோக்குக்காக துன்புறுத்தும் அந்தக் குரூரம் மிக்க காட்சிகள் (அவர்களுக்கு) ஒரு விசித்திரமான மிலேச்சத்தனம் மிக்க கலாச்சாரமாக இருந்திருக்கும்.
பல ஆரம்பகால கிறிஸ்தவ இறையியலாளர்கள் தங்கள் விசுவாசத்தைக் காட்டிக் கொடுப்பதை விட, வேதசாட்சியாக வீர மரணத்தை எதிர்கொண்டனர் என்று பரவலாக கருதப்படுகிறது. மனித பலவீனத்தின் காரணமாக இதை யதார்த்த பூர்வமாக செய்வது கடினமாக இருந்தது குறித்து மட்டுமல்லாமல், யூசிபியஸ் நேர்மையாக அதுவும் வேறுவிதமாக நமக்கு எடுத்துக்காட்டுகிறார். பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த திருச்சபை, இறுதியாக எவ்வாறு வெற்றி பெற்றது என்பது பற்றிய “புகழ்பெற்ற கதையை” கருத்தில் கொண்டு பார்த்தால், சித்திரவதை மற்றும் மரணத்தை எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக தங்கள் விசுவாசத்தைக் கைவிடப் பயந்தவர்களைப் பற்றிய அவரது குறிப்பு நம்பகமானது மற்றும் போற்றத்தக்கது. இருப்பினும், அன்று தங்களது மரணம் வரை சத்தியத்துக்கு கட்டுப்பட்டு உண்மையாக இருந்தவர்களின் எண்ணிக்கையும், பயம் மற்றும் வேதனைகளுக்கு மத்தியிலும் அவர்கள் வெளிப்படுத்திய உண்மையான மற்றும் அசாத்தியத் துணிச்சலைப் பற்றி நினைக்கும்போது, அன்று போல் இன்றும் அது ஆச்சரியத்தைத் தருகிறது. எனவே, யூசிபியஸ் சில சமயங்களில் “அவர் முழுமையடைந்தார்”, “அவள் வெற்றி பெற்றாள்” அல்லது “வெற்றியாளரின் கிரீடத்தை அணிந்துகொண்டான்” போன்ற வேதசாட்சிய மரணங்கள் குறித்து அவர் உபயோகித்த தொடர்ச்சியான சொற்றொடர்களுக்காக அவர் மன்னிக்கப்படலாம் என்று தோன்றுகிறது.
பொதுவாக திருச்சபை துன்புறுத்தல்களுக்கு ஆளாகாமல் இருந்த பல தசாப்த காலங்களில், அதன் உள்ளக பிரச்சனைகள் மற்றும் சவால்கள் திருச்சபையின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் குறைத்தது. புத்தகம் 6 இல் யூசிபியஸ் கூறுவது போல், விசுவாச துரோகிகளை திருச்சபை அமைப்புகளிலிருந்து வெளியேற்ற வேண்டும் என உறுதியுடன் இருந்த பிரிவினைவாதிகள் உரோமில் இருந்தனர். புத்தகம் 5 மொண்டனிஸ்டுகளின் “பிரிஜிய மதங்களுக்கு எதிரான கொள்கை” பற்றி விவாதித்தது. அவர்கள் தெளிவானவர்களாகவும், தங்கள் நாட்களில் வெறியர்களாகவும் கவர்ச்சியானவர்களாகவும் இருந்தனர். மேலும் அந்நிய பாஷைகளில் பேசுவதில் மகிழ்ச்சியுடன் திளைத்திருந்தனர். இந்தப் பக்கங்கள் சுட்டிக்காட்டுவது போல, கிறிஸ்தவ உலகில் (மற்றும் அதற்கு அப்பாலும்) இன்று காணப்படும் பழமைவாத, மிதவாத சித்தாந்தங்கள், இறையியல் குறித்த சர்ச்சைகள் மற்றும் மதங்களுக்குப் புறம்பான கருத்துக்கள் கூட, பதினெட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே பிரகடனப்படுத்தப்பட்டன. திருமுன்னாயிரக்கொள்கையாளர்கள் மற்றும் திருமுன்னாயிரக்கொள்கையாளர் அல்லாதவர்கள், கவர்ச்சிமிக்க மற்றும் கவர்ச்சியற்றவர்கள், திருச்சபையை அன்று போல் இன்றும் தாங்கள் குணாதிசயத்தால் வகைப்படுத்துகிறார்கள்.
1952 ஆம் ஆண்டில், வேதாகாமத்தின் திருத்தப்பட்ட நிலையான பதிப்பில் ஏசாயா 7:14 ஐ எவ்வாறு மொழிபெயர்த்தது என்பது குறித்து ஒரு சர்ச்சை கிளம்பியது: “இதோ, (KJV பதிப்பில் “கன்னி” என்பதற்குப் பதிலாக), அவள் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெறுவாள். அவன் பெயர் இம்மானுவேல் எனப்படும்.” என்று சொல்லப்பட்ட வார்த்தையே சர்ச்சையைக் கிளப்பியது. வெளிப்படையாக அந்த விவாதம் சுமார் ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகள் பழமையானது. மொத்த மதவிரோதக் கொள்கைகளை பொறுத்தவரை, இன்றைய காலகட்டத்தின் தீவிர பெண்ணியல் இறையியல்களில் ஞானவாதம் மீண்டும் பிரதிபலிக்கிறது. இது சோபியாவை (ஞானம்) கடவுளுடன் அல்லது அதற்குப் பதிலாக வழிபடுவதை ஆதரிக்கிறது. பாஸ்காவைக் கொண்டாடுவதற்கான சரியான திகதி மற்றும் நாள் குறித்த இரண்டாம் நூற்றாண்டு சர்ச்சை கூட கிறிஸ்தவ உலகின் கிழக்கு மற்றும் மேற்கத்திய திருச்சபை அமைப்புகளில் இன்னும் பிரிவினையைத் தோற்றுவித்த வண்ணமே காணப்படுகிறது. சில விஷயங்களை மாற்ற முடியாது.
உரோமையப் பேரரசின் வரலாற்றில், மார்கஸ் அவுரேலியஸின் ஆட்சியின் கடைசி மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் நிறைவுற்ற காலப்பகுதி, 177 இல் [புத்தகம் 5 இன் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள] கௌலில் உள்ள வியன்னே மற்றும் லுக்டுனம் (லியோன்ஸில்) மாகாணங்கள் துன்புறுத்தலுக்கு உள்ளானதைக் கண்டது. அத்துடன் ஆப்பிரிக்காவில் உள்ள ஷிலியம் மாகாணத்தின் கடுமையான துன்புறுத்தல் மற்றும் சித்திரவதைகள் (c. 180) காணக்கூடியதாக இருந்தன. இவை உள்ளூர் மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுக்கு இடையே நிலவிய பூசல்களேயன்றி, பேரரசு முழுவதும் பரவியவை அல்ல. ஏனெனில் இவை அவ்வந்த மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களில் இருந்த கோபமடைந்த கும்பல்களால் தூண்டப்பட்டன. இருப்பினும், இந்த பேரரசர் உரோமில் நடந்தேறிய ஜஸ்டின் அவர்களின் வேதசாட்சிய மரணத்தைத் தடுக்கவில்லை. அங்குள்ள கிறிஸ்தவர்களைப் பற்றி கவுல் மாகாண ஆளுநர் ஒரு தீர்ப்பை வேண்டியபோது, மார்கஸ் அவுரேலியஸ் ட்ரொஜனின் மொழியைப் போன்ற ஒரு மொழியிலேயே பதிலளித்தார். அதாவது அவருடைய தீர்ப்புக்கு சமமான ஒரு தீர்ப்பையே வழங்கினார்: விசுவாசத்துக்கு துரோகம் இழைத்தவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். அதேநேரம் விசுவாசத்தில் நிலைத்திருப்பவர்கள் உரோமைய குடிமக்களாக இருந்தால் அவர்கள் மிருகங்களுக்கு இறையாகத் தூக்கி எறியப்படுவார்கள் அல்லது தலை துண்டிக்கப்பட்டு கொல்லப் படுவார்கள் என்றே அந்தத் தீர்ப்பு அமைந்திருந்தது. மார்கஸ் அவுரேலியஸ் டான்யூப் நதி எல்லையில் போரில் ஈடுபட்டிருந்த வேளை, பேரரசு முழுவதும் பரவிய பிளேக் என்னும் கொடிய கொள்ளைநோய், 180 இல் விண்டோபோனாவில் (தற்கால வியன்னா) அவரது மரணத்திற்கு வழிவகுத்தது.
கொமோடஸ் (180-192) என்பவன், மார்கஸ் அவுரேலியஸின் பிரயோசனம் எதுவுமற்ற மகனாக வலம் வந்தான். யூசிபியஸ் தனது ஆட்சியின் போது “எங்கள் நிலைமைகள் நன்றாக இருந்தன, மேலும் கடவுளின் கிருபையால் உலகம் முழுவதும் உள்ள திருச்சபை அமைப்புகளுக்குள் சமாதானம் வந்தது” (5.21) என்று ஒப்புக்கொண்டாலும், அவர் சீரழிந்து, கீழ்த்தரமான இச்சைகளுக்கு அடிமையாகி இருந்ததாகத் தெரிகிறது. அவரது ஆவேசமும் வெறியும் பேரரசரின் கவனத்தை சிதறடித்தது. இருப்பினும், 192 ம் ஆண்டின் இறுதி நாளில் அவர் தனது மல்யுத்தப் பயிற்சியாளரால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
ஏகாதிபத்திய கிரீடம் ஏலம் விடப்பட்ட அதேவேளை, பிரிட்டோரியன் காவல்படை ஸ்தாபிக்கப்பட்டது. பின்னர் பெர்டினாக்ஸ் கொல்லப்பட்டார். பின்னர் டிடியுஸ் மற்றும் ஜூலியனஸ் ஆகிய இருவரும் 193 இல் கொல்லப்பட்டனர். டான்யூபில் உள்ள படைகள் இப்போது செவெரன் வம்சத்தை நிறுவிய செப்டிமியஸ் செவெரஸ் (193-211) தான் தாங்கள் கட்டளை அதிகாரி என்று உரிமை கோரினர். வட ஆபிரிக்காவில் உள்ள லெப்டிஸ் மேக்னாவில் பிறந்து (ட்ரிபோலிக்கு அருகில்), கல்வியில் சிறந்து விளங்கிய செவெரஸ், மாநிலங்களின் உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்து, பிரிட்டோரியன் காவற்படையின் செயற்பாடுகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். அவரது நிதி, சட்ட மற்றும் இராணுவ சீர்திருத்தங்கள் மாநிலத்தை மீண்டும் செழிப்படையச் செய்தது. யூசிபியஸ் தனது ஐந்தாவது புத்தகத்தை செவெரஸின் ஆட்சியின் ஒன்பதாம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் வரை மட்டுமே எழுதி முடித்துள்ளார். (சி. 202).
