யூசிபியஸ் தேவாலயம் வரலாற்றையும் எழுதினார்(Eusebius, Church History 1)

யூசிபியஸ், தமிழில் தேவாலய வரலாறு, புத்தகம் 1

Eusebius, The Church History in Tamil, book 1. Translated with permission from Paul L. Meier, Eusebius, The Church History: A New Translation with Commentary, 1999. Tamil translation is Public Domain.


முதல் புத்தகம் : மனிதநோக்கில் கிறீஸ்துவும் அவரது கிரியைகளும்

அகஸ்டஸ் திபேரியஸுக்கு எழுதியது

இந்த புத்தகங்களின் உள்ளடக்கம் பின்வருமாறு:

1. புனித அப்போஸ்தலரிடமிருந்து வரும் வாரிசுகளையும், நம்முடைய இரட்சகரின் காலத்திலிருந்து நம்முடைய காலம் வரையிலான காலகட்டங்களையும் பதிவு செய்வது எனது நோக்கம்;

திருச்சபை வரலாற்றில் நிகழ்ந்த பல முக்கிய நிகழ்வுகள்;

மிகவும் பிரபலமான இடங்களில் அதன் தலைமைத்துவத்தில் முக்கியத்துவம் பெற்றவர்கள்;

ஒவ்வொரு தலைமுறையிலும் கடவுளுடைய வார்த்தையை உரைகள் அல்லது எழுத்து மூலம் அறிவித்தவர்கள்;

புதுமையை விரும்பி பிழையின் உச்சக்கட்டத்திற்கு தங்களை இட்டுச்சென்று, கிறிஸ்துவின் மந்தையை இரக்கமின்றி, மூர்க்கத்தனம் மிக்க ஓநாய்களைப் போல துவம்சம் செய்து, தங்களை அறிவின் ஆதாரங்களாக (பொய்யுரைத்து அறியப்பட்டவர்கள்) அறிவித்துக் கொண்டவர்களின் பெயர்கள், எண்ணிக்கை மற்றும் வயது;

நமது இரட்சகருக்கு எதிரான சதித்திட்டத்திற்குப் பிறகு முழு யூத இனத்தையும் முந்திச் சென்ற விதி;

சில சமயங்களில் சித்திரவதை மற்றும் இரத்தம் சிந்துதல் மூலம், இறை வார்த்தை மற்றும் அதைக் காக்கப் போராடியவர்களின் வீரதீர செயல்களுக்கு எதிராக புறஜாதிகளின் பகைமை உணர்வு மற்றும் அவற்றைக் கொண்டு பழிதீர்த்த சந்தர்ப்பங்களும் நேரங்களும்;

நம் காலத்தின் தியாகங்கள் மற்றும் நமது இரட்சகரும் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவின் அருளால் வழங்கப்பட்ட இரட்சிப்பு போன்றவையே நான் தொடக்கத்தில் கூறக்கூடிய முக்கிய விடயங்களாக இருக்கும்.

இந்த திட்டத்திற்கு வாசகரின் ஒத்துழைப்பு முக்கியமாகிறது. ஏனென்றால் இதுபோன்ற ஒரு முயற்சியில் முதல் முறையாக ஈடுபடுவது என்பது, ஒரு பயணி, தனிமையான மற்றும் தடங்கல் இல்லாத பாதையில் பயணிப்பதற்கு ஒப்பானது என்பதை நியாயப்படுத்த எனது வாதங்கள் போதுமானதாக இல்லை. ஆனால் இந்த பாதையில் எந்த முன்னோடிகளின் கால் தடங்களையும் நான் காணவில்லை. சிலர் அவர்கள் வாழ்ந்த காலத்தின் எமக்காக விட்டுச்சென்ற பல்வேறு தடயங்கள் மற்றும் ஆதாரங்கள் பற்றிய சான்றுகள் மட்டுமே எனக்குத் துணை என்பதை கடவுள் எனக்கு வழிகாட்டவும், இறைவனின் சக்தி எனக்கு உதவவும் நான் பிரார்த்தனை செய்கிறேன். தொலைதூரக் காவற்கோபுரத்திலிருந்து உன்னிப்பாக நோக்குவது போல், பிழையை நிவிர்த்தி செய்ய இந்த கடமையின் போக்கை நான் எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்று அவர்கள் என்னிடம் கூறுகிறார்கள். எனது முன்னோடிகளின் சிதறிய நினைவுகளிலிருந்து இந்த திட்டத்திற்கு பொருத்தமானதாகத் தோன்றியவற்றை நான் சேகரித்தேன். பண்டைய எழுத்தாளர்களின் இலக்கியத் துறைகளிலிருந்து அவர்களது இலக்கண சுருக்கங்களை பூக்களைப் பறிப்பது போலப் பறித்தேன். மிகவும் பிரபலமான திருச்சபை வட்டாரங்களில் இருந்து நமது இரட்சகரின் அப்போஸ்தலர்களின் வாரிசுகளில் மிகவும் பிரபலமானவர்களை மறதியிலிருந்து மீட்கும் முகமாக, அவற்றை மகிழ்ச்சியுடன் ஒரு வரலாற்றுக் காவியமாக புனைகிறேன். இந்த படைப்பு மிகவும் அவசியமானது என்று நான் கருதுகிறேன், ஏனென்றால் இதுபோன்ற எழுத்துக்களில் ஆர்வம் காட்டிய எந்த கிறிஸ்தவ எழுத்தாளரையும் நான் அறிந்திருக்கவில்லை. வரலாற்றின் மதிப்பை அறிந்தவர்கள் மிகவும் மதிப்புமிக்கவர்களாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். முன்பு நான் இந்த விஷயத்தை எனது நாட்குறிப்புக்களில் சுருக்கமாகச் சொல்லி இருந்தேன். ஆனால் எனது தற்போதைய படைப்பில் நான் அதை முழு விவரத்துடன் கையாள உத்தேசித்துள்ளேன்.

நான் மனிதரால் இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடிய மிகவும் உன்னதமான மற்றும் உயர்ந்த ஒரு கருத்துடன் தொடங்குகிறேன்: நிகழ்வுகளின் வரிசைப்படுத்துதல் [கடவுள் அருளால்] மற்றும் கிறிஸ்துவின் தெய்வீகம். திருச்சபையின் வரலாற்றை எழுத விரும்பும் எவரும் கிறிஸ்துவில் இருந்து தான் தொடங்க வேண்டும். ஏனெனில் அவரிடமிருந்து தான் நாம் நமது பெயரையும் காலத்தையும் பெற்றோம். பெரும்பாலானவர்கள் உணர்ந்ததை விட அது ஒரு தெய்வீகமான காலகட்டம்.

கிறிஸ்துவின் இயல்பு

2. [அத்தியாயங்கள் (பிரிவுகள்) 2-4, ஏனைய திருச்சபை வரலாற்றைப் போலல்லாமல், கிறிஸ்துவின் முற்கால வாழ்வோடு தொடர்புடையது. இயூசிபியஸின் வழக்கமான வரலாறு பிரிவு 5ல் இருந்து தொடங்குகிறது.]

2. அவருடைய குணவியல்புகள் இரு வகைப்படும், அதாவது இரு மடங்கு அன்று கொள்ளலாம்; உடலுக்கு தலை எப்படியோ அதுபோல அவர் கடவுளாகக் கருதப்படுகிறார். ஆனால் அவர் கால்களுடனும் ஒப்பிடத்தக்கவர். அக்கால்களில் அவர் நம் இரட்சிப்பு என்ற மனிதகுலத்தை அணிந்தார். ஏனெனில் அவர் நம்மைப் போன்ற உணர்ச்சிகள் கொண்ட மனிதர். நான் அவரது கதையை முக்கியமாக மற்றும் கருத்தில் கொள்ள வேண்டிய மிக அடிப்படையான விடயங்களுடன் தொடங்கினால், கிறிஸ்தவத்தின் தொன்மை மற்றும் தெய்வீக தன்மை இரண்டும் சமீபத்தில் தான் தற்காலத்துக்குரியதும் மற்றும் அந்நியமானதும் என்று கருதுபவர்களுக்கு தோன்றியது.

எந்த மொழியாலும் கிறிஸ்துவின் தோற்றம், சாராம்சம் மற்றும் இயல்பு ஆகியவற்றை போதுமான அளவில் விவரிக்க முடியாது. உண்மையில் பரிசுத்த ஆவியானவர் தீர்க்கதரிசனத்தில் இவ்வாறு கூறுகிறார்: “அவரது தலைமுறையை யார் அறிவிப்பார்கள்?” [ஏசா. 53:8]. தேவ குமாரனைத் தவிர வேறொருவரும் பிதாவை அறியார்கள்; உலகம் சிருஷ்டிக்கப் படுவதற்கு முன் இருந்த ஒளியையும், காலத்திற்கு முந்திய ஞானத்தையும், தந்தையுடன் ஆதியில் கடவுளாக இருந்த உயிருள்ள வார்த்தையையும் தந்தையைத் தவிர வேறு யாரால் கொண்டிருந்திருக்க முடியும்? கண்களுக்குப் புலப்படக் கூடிய அல்லது புலப்படாத அனைத்து படைப்புகள் மற்றும் நாகரீக மாற்றங்களுக்கு முன், அவர் கடவுளின் முதல் மற்றும் ஒரே சந்ததியாகவும், பரலோகத்தின் ஆன்மீகப் படையின் தளபதியாகவும், வலிமைமிக்க ஆலோசனையின் தூதராகவும், தந்தையின் விவரிக்க முடியாத திட்டத்தின் முகவராகவும், படைப்பாளராகவும், சகல படைப்புக்களின் தந்தையாக, தந்தைக்குப் பிறகு பிரபஞ்சத்தின் இரண்டாவது பேறாக, இறைவனின் உண்மையான மற்றும் ஒரே பேறான குமாரனாக, வானம் மற்றும் வையம் போன்ற அனைத்தையும் படைத்த, சகலவற்றுக்கும் அரசரான ஆண்டவாராய், மாட்சிமை, புகழ் போன்ற அனைத்தையும் அவர் தந்தையிடமிருந்து தான் பெற்றுக்கொண்டார். இவையனைத்தும் வேதாகமத்தில் பின்வருமாறு அவருக்கு அளிக்கப்பட தெய்வீக விளக்கத்தின்படி கூறப்பட்டவை:

ஆதியில் வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனோடு இருந்தது, அந்த வார்த்தை தேவனாக இருந்தது…. சகலமும் அவராலே உண்டானது, அவரையன்றி எவராலும் எதுவும் உண்டாக்கப்படவில்லை [யோவான் 1:1, 3].

உண்மையில், இது அனைத்து தீர்க்கதரிசிகளுக்கும் முன்னோடியான மோயீசன் என்ற மகானின் போதனையாகும். பரிசுத்த ஆவியானவரால் அவர் பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் படைப்பை விவரித்தபோது: படைப்பாளர் என்ற தகுதி யாருக்கும் கொடுக்கவில்லை. ஆனால் அது கிறிஸ்து ஒருவருக்கே வழங்கப்பட்டது. தந்தைக்கு உகந்தவிதத்தில் சகவற்றையும் உருவாக்கினார். மேலும் மனிதனின் படைப்பைப் பற்றி அவருடன் விவாதித்தார்: “தேவன், “நாம் மனுக்குலத்தை நமது சாயலில் உருவாக்குவோம். மனிதர்கள் நம்மைப்போலவே இருப்பார்கள். அவர்கள் கடலில் உள்ள எல்லா மீன்களையும், வானத்திலுள்ள பறவைகளையும் ஆளட்டும். வனவிலங்குகளையும் தரையில் ஊரும் உயிரினங்களையும் ஆளட்டும்” என்று கூறினார்.” [ஆதியாகமம் 1:26].

மற்றொரு தீர்க்கதரிசி, இந்த தெய்வீக புகழாரத்தை பின்வருமாறு உறுதிப்படுத்துகிறார்: “அவர் வார்த்தையால் மொழிந்தார், அப்போது அவைகள் யாவும் உருவாக்கப்பட்டன; அவர் கட்டளையிட்டார், அப்போது யாவும் உருவாக்கப்பட்டன,” [ சங்கீதம் 33:9; 148:5]. இங்கே அவர் தந்தையையும் படைப்பாளரையும் ஒரு உன்னத இறையாண்மை மிக்கவராகக் காட்டுகிறார். இரண்டாவதாக, அவருடைய கட்டளைகள் மூலம் நிறைவேற்றப்படுவது தெய்வீக வார்த்தையைத் தவிர வேறு எவற்றாலும் இல்லை.

படைப்பின் தொடக்கம் முதல், நீதி மற்றும் நல்லொழுக்கத்தில் சிறந்து விளங்கிய அனைவரும் – மோயீசன், மற்றும் அவருக்கு முன் ஆபிரகாம் மற்றும் அவரது சந்ததி, அனைத்து நீதிமான்கள், தீர்க்கதரிசிகள் – மனக்கண்களால் அவரை அடையாளம் கண்டு அவருக்கு மரியாதை செலுத்தினர். பிதாவாகிய கடவுள், மனித குலத்தினர் அனைவருக்கும் தந்தையின் அறிவையும் விமசரிசையையும் போதித்தவர். இவ்வாறு, மம்ரேயின் கருவேல மரத்தடியில் அமர்ந்திருந்த ஆபிரகாமுக்கு கடவுள் ஒரு சாதாரண மனிதனாகத் தோன்றியதாகக் கூறப்படுகிறது, ஆனால் அவர் அவரைக் கடவுளாக வணங்கி, “ஓ ஆண்டவரே, பூமி முழுவதற்கும் நீரே நீதிபதி. நீர் நியாயமானவற்றையே செய்வீர் என்று எனக்குத் தெரியும்” என்றார். [ஆதியாகமம். 18:25].

கற்பனையால் கூட, சர்வவல்லவரின் மாறாத மாட்சிமை மனித வடிவமாக மாற்றப்படுவதை யதார்த்தம் ஒருபோதும் அனுமதிக்காது, அல்லது வேதாகமம் இதுபோன்ற ஒரு கதையைப் போலியாகக் கண்டாலும் கூட, வேறு யாரை மனித வடிவத்தில் தோன்றியதாக விவரிக்க முடியும்? ஆனால் இந்தப் பிரபஞ்சம் அதன் பெயரை பெற்றுக்கொண்டதன் முன்பே, இறை வார்த்தை பிரசன்னமாகி இருந்தது. அதன் காரணமாக, பிரபஞ்சத்தின் முதல் தோற்றம் அப்பெயருக்கு பொருத்தமற்றதா? அவரைப் பற்றி சங்கீதத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

தேவன் தமது வார்த்தையினால் கட்டளையிட்டு, அவர்களைக் குணமாக்கினார். எனவே அந்த ஜனங்கள் மரணத்திலிருந்து காப்பாற்றப்பட்டார்கள். [சங்கீதம் 107:20].

மோயீசன் அவரைப் பரலோகத் தந்தைக்குப் பிறகு இரண்டாவது ஆண்டவர் என்று தெளிவாகக் கூறுகிறார்: “கர்த்தர் சோதோமையும் கோமோராவையும் வானத்திலிருந்து நெருப்பையும் கந்தகத்தையும் அந்நகரின் மேல் விழுமாறு செய்து அழிக்க ஆரம்பித்தார்,” [ஆதியாகமம் 19:24]. யாக்கோபுவுக்கு மனித உருவில் தோன்றி, “இனிமேல் உன் பெயர் யாக்கோபு அல்ல, இஸ்ரயேல்… ஏனெனில் நீ கடவுளால் வெற்றி பெற்றாய்” என்று கூறியபோது புனித வேதாகமம் அவரை மீண்டும் கடவுள் என்று குறிப்பிடுகிறது. பின்னர் கூட: “யாக்கோபு அந்த இடத்திற்கு ‘கடவுளின் தரிசனம்’ என்று பெயரிட்டார், “உன் பெயர் இனி யாக்கோபு அல்ல. உன் பெயர் இஸ்ரவேல். நீ தேவனோடும் மனிதரோடும் போராடி வெற்றி கொண்டபடியால் நான் உனக்கு இந்தப் பெயரை வைக்கிறேன். உன்னைத் தோற்கடிக்க மனிதர்களால் முடியாது” என்றார். [ஆதியாகமம் 32:28-29]. Illustration 1 – யூசிபியஸ் அவர்கள் ஆயராக இருந்த மத்திய தரைக்கடல் நகரமான சிசேரியாவில் அலைகள் கடல் மடைச்சுவரில் மோதுவதை படம் சித்தரிக்கிறது

பதிவு செய்யப்பட்ட இந்த அறிக்கைகள் அனைத்தையும் உற்று நோக்கினால், தேவதூதர்கள் கடவுளின் துணை தேவதூதர்கள் மற்றும் ஊழியர்களின் தோற்றம் என்று கருதுவது சரியாக இருக்க முடியாது. இவை மக்களுக்குத் தோன்றும் போதெல்லாம், அவர்கள் அவர்களை தேவதூதர்கள் என்று அழைக்கிறார்கள், கடவுள் அல்லது இறைவன் என்று அல்ல, என்று எண்ணற்ற பத்திகளில் வேதாகமம் தெளிவாக உரைக்கிறது.

மோயீசனின் வாரிசான யோசுவா, அவருக்கு தேவதூதர்கள் மற்றும் தூதர்கள் மற்றும் பரலோக சக்திகளின் தலைவராக, கர்த்தருடைய படையின் தளபதி என்று பெயரிட்டார். மேலும் உலக ஆட்சியில் பிதாவின் சக்தி மற்றும் ஞானம் என்ற இரண்டாவது இடத்தைப் பெற்றார். ஆனால் யோசுவாவும் தான் ஒரு மனித வடிவத்தில் இருந்து மட்டுமே இதை பார்த்தார். அதுபற்றி இவ்வாறு எழுதப்பட்டிருப்பதால், அதி சற்று நோக்குவோம்:

யோசுவா எரிகோவில் இருந்தபோது, ஒருநாள், கையில் உருவிய வாளுடன் ஒரு மனிதன் தனக்கு முன்பாக நிற்பதைக் கண்டான். யோசுவா அவனை அணுகி, “நீர் எங்களுக்காகவா அல்லது எங்கள் எதிரிகளுக்காகவா?” என்ற கேட்டான். அதற்கு அவர், “நான் ஆண்டவரின் படைத் தளபதியாக வந்துள்ளேன்” என்றான். அப்போது யோசுவா தரையில் விழுந்து, முகம் குப்புற விழுந்து, “ஐயா, உமது அடியேனுக்கு என்ன கட்டளையிடுகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு கர்த்தருடைய படையின் தளபதியோ, “உன் காலணிகளைக் கழற்று, நீ நிற்கும் இடம் பரிசுத்தமானது” என்று பதிலளித்தான். [யோசுவா. 5:13-15].

மோயீசனிடம் பேசியவர் வேறு யாருமல்ல என்பதை அந்த வார்த்தைகள் இங்கே உங்களுக்குக் காண்பிக்கும்.

அவர் என்ன நடக்கிறது என்ற பார்க்க நெருங்கி வந்ததைக் கண்டபோது, கர்த்தர் புதரின் மத்தியிலிருந்து அவனை நோக்கி, “மோசே, மோசே!” என்றதும், அவர், “என்ன அது?” என்ற கேட்கும் தோரணையில் அருகிலே செல்ல, “அருகில் வராதே, உன் பாதணிகளைக் கழற்று, நீ நிற்கும் இடம் புனிதமான பூமி” என்றார். அவர் தொடர்ந்தார், “நான் உன் தந்தையின் கடவுள், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்” [யாத்திராகமம் 3:4 – 6].

இவை உண்மையில் கடவுளின் வார்த்தை மற்றும் ஞானம் என்று ஏன் பெயரிடப்பட்டது என்பதற்கான மேலதிக சான்றுகள் உள்ளன. அவர் உலகம் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன் இருந்தவர் மற்றும் அனைத்து படைப்புகளின் வடிவமைப்பில் பிரபஞ்சத்தின் படைப்பாளரான கடவுளுக்கு உதவினார். சொலொமனின் வாயால் ஞானம் தன் சொந்த ரகசியம் என்னவென்பதை தெளிவாக வெளிப்படுத்துகிறது:

ஞானத்தின் திறவுகோலான நான், அறிவுரையை என் வசிப்பிடமாக்கி, அறிவையும் சிந்தனையையும் தூண்டினேன். என்னால் அரசர்கள் ஆட்சி செய்கிறார்கள், ஆட்சியாளர்கள் நீதியின் வழியாக ஆணை இடுகிறார்கள்; என்னாலே பெரியவர்கள் மேம்படுத்தப்பட்டு, இறையாண்மையுள்ள ஆட்சியாளர்கள் ஆட்சி செய்கிறார்கள். ஆதியில் காலம் தொடங்கும் முன், அதாவது பூமியை படைப்பதற்கு முன், நீரூற்றுகள் பொங்கி, மலைகள் கம்பீரமாய் உயர்வதற்கு முன், கர்த்தர் என்னை உருவாக்கினார். அவர் வானங்களை ஆயத்தம் செய்தபோது, நான் அங்கே இருந்தேன், அவர் வானத்தின் கீழ் நீரூற்றுகளைப் பாதுகாத்தபோது, நான் அவருடன் இருந்தேன், அவற்றை ஒழுங்கு படுத்தினேன். அவர் தினமும் மகிழ்வுருவதற்கு நான் காரணமாய் இருந்தேன். அவர் உலகை சிருஷ்டித்து முடித்துவிட்டார் என்று அவர் அகமகிழ்ந்தபோது, அவர் முன்னிலையில் நான் மகிழ்ந்திருந்தேன்.

அப்படியானால், அனைவருக்கும் இல்லாவிட்டாலும், சிலருக்கு என்றாலும், தெய்வீக வார்த்தை முன்பே இருந்தது என்று தோன்றியது என்பதற்கு இது ஒரு சுருக்கமான முன்னுதாரணமாகும்.

இப்போது போல், அவர் ஏன் எல்லா மக்களுக்கும் எல்லா நாடுகளுக்கும் நீண்ட காலத்திற்கு முன்பே அறிவிக்கப்படவில்லை என்பது பற்றி பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் மனிதகுலம் கிறிஸ்துவின் போதனைகளை அது கொண்டிருந்த ஞானத்திலும் நல்லொழுக்கத்தின் வாயிலாகவும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆரம்பத்தில், ஆசீர்வதிக்கப்பட்ட உண்மையான நிலைக்குப் பிறகு, முதல் படைக்கப்பட்ட மனிதன் கடவுளின் கட்டளையைப் புறக்கணித்து, இந்த மரணம் எனும் பொறிக்குள் விழுந்து, பூமியின் சாபத்திற்கு உட்பட்டு மோட்சத்தை நித்திய ஆனந்தத்தை இழந்தான். உலகத்தை நிரப்பிய அவருடைய சந்ததியினர் மத்தியில், ஒருவர் அல்லது இருவரைத் தவிர, ஏனையோர் குரூரமான வாழ்வையும் வாழத் தகுதியற்ற வாழ்க்கையையும் தேர்ந்தெடுத்து தங்களை இன்னும் மோசமான நிலைக்கு இட்டுச்சென்றனர். நகரம், மாநிலம், கலை, அறிவு, சட்டங்கள், அறம், தத்துவம் என்ற எவற்றிலும் அவர்களில் பெயர்கள் கூட காணப்படவில்லை. அவர்கள் பாலைவனத்தில் நாகரிகம் அற்ற நாடோடிகளாக வாழ்ந்தனர். அதிகப்படியான அக்கிரமத்தின் மூலம் பகுத்தறிவையும் கலாச்சாரத்தையும் சீரழித்தார்கள். முழுமையான சீரழிவுக்குள் தங்களை உட்படுத்திக்கொண்டு அவர்கள் ஒருவரை ஒருவர் சிதைத்து, கொலை செய்து அல்லது நரமாமிசமாக்கி, தங்கள் பைத்தியக்காரத்தனத்தின் கடவுளுடன் போருக்குத் தயாராகி, புகழ்பெற்ற அசுர போர்களை தொடுத்தனர். பூமியை வானத்திற்கு எதிராக வலுப்படுத்தவும், அந்த வேட்கையின் காரணமாக, மிக உயர்ந்த நிலையில் உள்ள ஆட்சியாளருடன் போர் செய்யவும் துணிந்தனர்.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக, கடவுள் அவர்களை நோக்கி வெள்ளம் நில அதிர்வுகள், பஞ்சம், கொள்ளைநோய்கள், போர்கள் மற்றும் இடிமுழக்கங்களை அனுப்பினார் – அவை அவர்களின் ஆன்மாவுக்கு தீங்கு விளைவிக்கும் காரணிகளை தடுக்கும் முகமாக அனுப்பப்பட்ட தண்டனைகள் படிப்படியாக கடுமையாக இருந்தன. பின்னர், தீமை என்ற பெருவெள்ளம் கிட்டத்தட்ட மனிதகுலத்தை மூழ்கடித்தபோது, கடவுளின் முதற்பேறான மற்றும் முதன்முதலில் உருவாக்கப்பட்ட ஞானம், முன்பே இருந்த வார்த்தை, அவருடைய மகத்தான கருணையில் ஒரு தேவ தூதரின் வடிவிலான தரிசனமாகவோ அல்லது கடவுளின் இரட்சிப்பின் சக்தியாகவோ ஒரு சில பேருக்கு தோன்றியது. பழங்கால மனிதர்கள் கடவுளுக்குப் பயந்தவர்களாய் வாழ்ந்தபோதும், எப்போதும் மனித வடிவில் தான் இருக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் அவரை வேறு வழியிலோ அல்லது வேறு வடிவத்திலோ பெற முடியாது என்ற காரணத்தால்.

அவர்கள், பலரின் மத்தியில் உண்மையான மதத்தின் விதைகளை விதைத்தபோது, எபிரேயர்களின் வழித்தோன்றலான, உண்மையான மதத்தைப் பின்பற்றும் ஒரு முழுமையான தேசம் தோன்றியது. அவர்களுக்கு, தீர்க்கதரிசியான மோயீசன் மூலம், அவர் ஒரு அகநிலை உணர்வுகளுடன் கூடிய ஓய்வுநாள், விருத்தசேதனத்தின் உருவங்கள் மற்றும் சின்னங்களை வெளிப்படுத்தினார். அதேவேளை அவற்றுடன் கூடிய ஆன்மீகக் கோட்பாடுகளின் அறிவுறுத்தலையும் வெளிப் படுத்தினார். எனினும் இறை மர்மங்களை முழுமையாக வெளிப்படுத்த வில்லை, ஏனென்றால் அவர்கள் இன்னும் பழைய நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டிருந்தனர். ஆயினும்கூட, அவர்களின் சட்டம் பிரபலமானதும், மணம் வீசும் தென்றல் காற்று போல எல்லா இடங்களிலும் ஊடுருவிய போது, ​​பெரும்பாலான புறஜாதிகளின் மனங்கள் சட்டமியற்றுபவர்கள் மற்றும் தத்துவவாதிகளால் மிதப்படுத்தப்பட்டது. கொடூரமான அரக்கத்தனம் சாந்த குணமாக மாறியது. அதனால் ஆழ்ந்த அமைதி, நட்பு, எளிதான உறவு, மற்றும் தொடர்பாடல் நிலவியது.

இறுதியாக, உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து மக்களும் இப்போது இறைதந்தையைப் பற்றிய அறிவைப் பெறத் தயாராக இருந்தபோது, ​​உரோமப் பேரரசின் ஆரம்பத்தில் கடவுளின் அதே தெய்வீக வார்த்தை நம்மைப் போன்ற ஒரு மனிதனின் வடிவத்தில் தோன்றியது. அவருடைய செயல்கள் மற்றும் துன்பங்கள் தீர்க்கதரிசனங்களுடன் ஒத்துப் போகின்றன, அவர் கடவுளாக இருந்தவர், அவர் அசாதாரண செயல்களைச் செய்வார் மற்றும் தந்தையின் மகத்துவத்தை அனைத்து நாடுகளுக்கும் எடுத்துரைப்பார். அவருடைய பிறப்பு, அவருடைய புதிய போதனை, அவருடைய செயல்களின் அதிசயம், அவர் மரித்த விதம், மரித்தோரிலிருந்து அவர் உயிர்த்தெழுந்த விதம் மற்றும் இறுதியாக, கடவுளின் மாட்சிமை மிகு சக்தியால் அவர் பரலோகத்திற்கு எழுந்தருளியமை போன்றவற்றையும் அவர்கள் முன்னறிவித்தனர். பரிசுத்த ஆவியின் தூண்டுதலின் மூலம், தானியேல் என்ற தீர்க்கதரிசி தனது இறுதி இறையாண்மை மிக்க உண்மையை மனித வார்த்தைகளில் விவரித்தார்:

“நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, சிங்காசனங்கள் அவற்றின் இடத்தில் வைக்கப்பட்டன. நீண்ட ஆயுளை உடைய அரசர் ஒருவர் அவரது சிங்காசனத்தில் அமர்ந்திருந்தார். அவரது ஆடைகள் மிகவும் வெண்மையாக இருந்தன. அவை பனியைப் போன்று வெண்மையாக இருந்தன. அவரது தலை முடியும் வெண்மையாக இருந்தது. அது தூய கம்பளியைப் போன்று வெண்மையாக இருந்தது. அவரது சிங்காசனம் தீயினால் செய்யப்பட்டிருந்தது. அந்த அரசருக்கு முன்னால் ஒரு தீயினாலான ஆறு ஓடிக்கொண்டிருந்தது. பல லட்சம் பேர் அரசருக்குப் பணிவிடைச் செய்தனர். அவருக்கு முன்னால் கோடான கோடிபேர் நின்றார்கள். அந்த ஸ்தானம் செயல்படத் துவங்கும் நீதிமன்றம்போலும், அங்கே வைக்கப்பட்டுள்ள புத்தகங்களெல்லாம் திறந்துவைக்கப் பட்டிருந்தன…. இரவில் என் தரிசனத்தில் நான் பார்த்தபோது எனக்கு முன்னால் மனிதனைப்போல் காணப்பட்ட ஒருவரைப் பார்த்தேன். அவர் வானத்து மேகங்களின்மேல் வந்துகொண்டிருந்தார். அவர் நித்திய ஆயுசுள்ள அரசரிடம் வந்தார். அவர்கள் அவரை அரசருக்கருகில் கொண்டு வந்தனர். மனிதனைப்போன்று தோற்றமளித்த அவரிடம் அதிகாரம், மகிமை, ஆட்சி உரிமை கொடுக்கப்பட்டன. எல்லா ஜனங்களும் எல்லா மொழி பேசுபவர்களும் அவரை வணங்கக் கடவார்களாக. அவரது ஆட்சி என்றென்றும் நிலைத்திருக்கும். அவரது இராச்சியம் என்றென்றும் நிலைத்திருக்கும். இது என்றைக்கும் அழியாமல் இருக்கும். [தானியேல் 7: 9 – 10, 13 – 14].

இது வேறு யாருக்கும் பொருந்தாது என்பது இங்கே தெளிவாகிறது. ஆனால் நமது இரட்சகர், கடவுளுடன் தொடக்கம் முதல் இருந்த இறைவார்த்தை, அவரது அதியுத்தம, அதிமகத்துவ அவதாரத்தின் காரணமாக “மனுஷகுமாரன்” என்று அழைக்கப்பட்டார். ஆனால் நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய தீர்க்கதரிசனங்களை நான் சிறப்பு விளக்கங்களில் சேகரித்து வைத்திருக்கிறேன். ஆகவே இது போதுமானதாக இருக்கும் என்று கருதுகிறேன்.

இயேசு, கிறிஸ்து போன்ற பெயர்கள் ஏற்கனவே அறியப்பட்டவை

3. இயேசு மற்றும் கிறிஸ்து என்ற பெயர்கள் கடவுளை நேசிக்கும் பண்டைய தீர்க்கதரிசிகளால் கூட மதிக்கப்பட்டன. கிறிஸ்துவின் பெயர் எவ்வளவு புனிதமானது மற்றும் மகிமை வாய்ந்தது என்பதை மோயீசன் முதன் முதலில் அறிவித்தார், “மலையில் உங்களுக்குக் காட்டிய மாதிரியின்படி அனைத்தையும் செய்யுங்கள்” (யாத்திராகமம் 25:40) . கடவுளின் பிரதான ஆசாரியரை ஒரு உன்னத சக்தி கொண்ட மனிதராக விவரிக்கும் போது, அவர் அவரையும் அவருடைய மகத்துவத்தையும் “கிறிஸ்து” என்று அழைக்கிறார். உன்னதம் மற்றும் மகிமையின் அடையாளமாக, “கிறிஸ்துவின்” தெய்வீக தன்மை இங்கே அடையாளப் படுத்தப்பட்டுள்ளது.

இயேசு என்ற பட்டத்துக்குரிய பெயரை மிகத் தெளிவாக உரைக்க அவர் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட்டார். இதுவரை அறிந்திராத போதிலும், மோயீசன் இயேசு என்ற பட்டத்தை மீண்டும் ஒரு வகையாக, அல்லது அடையாளமாக வழங்கினார். அவர் இறந்த பிறகு அவருக்குப் பின் வருவார் என்று அவர் அறிந்த மனிதருக்கு மட்டுமே அது சாலவும் பொருந்தும். அவருக்கு வழங்கப்பட்டது [எண்ணாகமம் 13:16], ஆனால் மோயீசன் அவரை இயேசு என்று அழைக்கிறார் – நூனின் மகன் யோசுவா, நம்முடைய இரட்சகரின் உருவத்தைத் தாங்கியவர், மோயீசனுக்குப் பிறகு மட்டுமே உண்மையான மற்றும் தூய்மையான மதத்தின் மீது அதிகாரம் செலுத்தும் வரத்தைப் பெற்றார். இந்த வழியில், மோயீசன் தனது காலத்தில் தகுதியிலும் மகிமையிலும் மற்ற அனைவரையும் மிஞ்சிய இரண்டு மனிதர்களுக்கு ஒரு உன்னதமான மரியாதையாக நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரை வழங்கினார்: அதாவது, பிரதான ஆசாரியர் மற்றும் அவருக்குப் பிறகு ஆட்சி செய்யும் ஆட்சியாளர்.

பிற்காலத்து தீர்க்கதரிசிகளும் கிறிஸ்துவை அவரது பெயரால் தெளிவாக முன்னறிவித்தனர். அத்தோடு யூத மக்களால் அவருக்கு எதிரான மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டங்களையும், அவர் மூலம் புறஜாதியாரின் அழைப்பையும் முன்னறிவித்தனர். உதாரணமாக, எரேமியா கூறுகிறார்:

அரசன் எங்களுக்கு மிக முக்கியமானவனாக இருந்தான். எங்கள் நாசியின் சுவாசத்தைப் போல் இருந்தான். ஆனால் அரசன் அவர்களால் வலைக்குட்படுத்தப்பட்டிருந்தான். இந்த அரசன் கர்த்தராலேயே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தான். அரசனைப் பற்றி நாம், “நாங்கள் அவனது நிழலில் வாழ்வோம். அவன் எங்களை பிற தேசங்களிடமிருந்து காப்பாற்றுகிறான்” என்று சொல்லியிருந்தோம். [புலம்பல் 4:20].

தாவீது குழப்படைந்தவராய் பின்வருமாறு கேட்கிறார்:

யூதரல்லாத மனிதர்கள் ஏன் இவ்வளவு கோபமாயிருக்கிறார்கள்? ஏன் அந்தத் தேசங்கள் மதியீனமான திட்டங்களை வகுக்கின்றன? அவர்களுடைய அரசர்களும், தலைவர்களும் கர்த்தரையும், கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனையும் எதிர்க்க ஒன்றுகூடினார்கள். [சங்கீதம் 2:1-2].

அவர் கிறிஸ்துவை ஒரு மானிடர் என்ற நோக்கில் பேசுகிறார்.

இப்போது கர்த்தருடைய உடன்படிக்கையை உனக்குக் கூறுவேன்.

கர்த்தர் என்னிடம், “இன்று நான் உனக்குத் தந்தையானேன்! நீ எனது குமாரன். நீ என்னிடம் கேட்டால், நான் தேசங்களையெல்லாம் உனக்கு கொடுப்பேன். பூமியின் ஜனங்களெல்லாம் உன்னுடையவர்களாவார்கள்!” (சங்கீதம் 2:7-8].

அதன்படி, எபிரேயர்களிடையே கிறிஸ்து என்ற பெயருடன் வாழ்ந்தவர்கள், அடையாளமாக எண்ணெய்களால் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் பிரதான ஆசாரியர்கள் மட்டுமல்ல, அரசர்களும் நியமிக்கப்பட்டனர்; ஏனென்றால், தெய்வீக கட்டளைப்படி, அவர்களும் தீர்க்கதரிசிகளால் அடையாளக் கிறிஸ்துகளாக அபிஷேகம் செய்யப் பட்டனர். ஏனென்றால் அவர்கள் அனைவரையும் ஆளும் தெய்வீக வார்த்தையான ஒரே உண்மையான கிறிஸ்துவின் அரச மற்றும் இறையாண்மை அதிகாரத்தின் வடிவங்களைத் தங்களுக்குள் கொண்டிருந்தனர். இதேபோல், சில தீர்க்கதரிசிகள், அபிஷேகம் செய்வதன் மூலம், கிறிஸ்துவின் வழிவாழ்பவர்களாக ஆனார்கள். அதனால் இவை யாவும் [மூன்றும்] உண்மையான கிறிஸ்துவைக் குறிக்கிறது, அதாவது இறைவார்த்தை. அவர் பிரபஞ்சத்தின் ஒரே பிரதான ஆசாரியர். சகல படைப்புகளுக்கும் ஒரே அரசர் மற்றும் தந்தையின் ஒரே ஏகபோக தீர்க்கதரிசி.

பண்டைய காலத்தில் அடையாளப்பூர்வமாக அபிஷேகம் செய்யப்பட்டவர்கள், துறவிகளாகவோ, அரசராகவோ அல்லது தீர்க்கதரிசியாகவோ இருந்தாலும், நம்முடைய இரட்சகரும் ஆண்டவருமான இயேசு – ஒரே உண்மையான கிறிஸ்து – போன்ற தெய்வீக சக்தியைப் பெற்றதில்லை என்பதே இதற்குச் சான்று. அவர்களில் எவரும், பல தலைமுறைகளாகத் தங்கள் சொந்த மக்களிடையே மதிக்கப்பட்டிருந்தாலும், கிறிஸ்துவின் அடையாளத்தை பறைசாற்றும் வகையில் தங்கள் குடிமக்களுக்கு கிறிஸ்தவப் பெயர்களை, அதாவது கிறீஸ்து என்ற கெளரவம் மிக்க நாமத்தை வழங்கவில்லை. அவரது குடிமக்களால் எவராலும் எவரும் வழிபடவில்லை அல்லது அவரது மரணத்திற்குப் பிறகு மரியாதைக்கு உரியவருக்காக இறக்கத் தயாராகவும் இருக்கவில்லை. உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் இதுபோன்ற ஒரு பரபரப்பை யாரும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் அடையாளத்தின் மூலம் நம்  இரட்சகரின் உண்மையான தோற்றப்பாட்டை போன்ற விளைவை உருவாக்க முடியாது. அவர் யாரிடமிருந்தும் உயர் ஆசாரியத்துவத்தின் சின்னங்களைப் பெறவோ அல்லது பாதிரியார்களிடமிருந்து அவரது சரீர இயல்புகளைக் கண்டறியவோ இல்லை. ஆயுத சேனைகள் அவரது ஆட்சியை ஊக்குவிக்கவில்லை. முக்காலத்தில் நிகழ்ந்தது போல அவர் ஒரு தீர்க்கதரிசியாக மாறவும் இல்லை. அதேநேரம், யூதர்கள் அவருக்கு எந்த பதவியையும் முன்னுரிமையையும் கொடுக்கவில்லை. இருப்பினும்கூட, அவர் தேவ தந்தையால் இவை அனைத்தையும் கொண்டு அலங்கரிக்கப்பட்டார். அடையாளங்களின் மூலமாக அல்ல, நிதர்சனமாக. அவர் பற்றி மேற்கோள் காட்டப்பட்ட பெருமைகளைப் பெறவில்லை என்றாலும், அவர் அனைவரையும் விட மேலாக, கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறார். ஏனென்றால் அவர் முழு உலகத்தையும் தனது படைப்புகளான கிறிஸ்தவர்களால் நிரப்பிய ஒரே கடவுளின் குமாரனாகிய உண்மையான கிறிஸ்து. அவர் இனி தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு வடிவங்கள் அல்லது உருவங்களை வழங்கப் போவதில்லை. ஆதலினால், உண்மைகளை முழுமையாக வெளிப் படுத்தினார். மேலும் அவர் பிதாவின் மூலம் கருவில் தோன்றாத இறைமகிமையில் பங்கு கொள்வதன் மூலம் கடவுளின் கிருபையால் தெய்வீக அபிஷேகத்தைப் பெற்றார்.

கிறிஸ்து பேசுவதைப் போல ஏசாயா பேசுவதன் மூலம் இந்தக் கருத்தை எடுத்துரைக்கிறார்:

“எனது கர்த்தராகிய ஆண்டவர், என் மீது அவருடைய வல்லமையை வைத்தார். தேவன் என்னை ஏழை மக்களுக்கு நற்செய்திகளைச் சொல்லவும், துக்கப்படுவோருக்கு ஆறுதலளிக்கவும் சிறையில் இருப்போரை விடுவிக்கவும், பார்வையற்றோருக்கு பார்வை அளிக்கவும் தேவன் என்னை அனுப்பினார்.” [ஏசாயா 61:1-2].

ஏசாயா மட்டுமல்ல, தாவீதும் அவரைக் குறித்து பின்வரும் சங்கீத வார்த்தைகளால் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

தேவனே, உமது ஆட்சி என்றென்றும் தொடரும். நன்மையே உமது செங்கோலாகும். நீர் நன்மையை விரும்பித் தீமையைப் பகைக்கிறீர். எனவே உமது தேவன் உமது சகாக்களுக்கு மேலாக உம்மை அரசனாக்கினார். [சங்கீதம் 45:6-7].

முதல் வசனம் அவரை கடவுள் என்று அழைக்கிறது. இரண்டாவது வசனம் அவருக்கு ஒரு அரச செங்கோலைக் கொடுக்கிறது. இறை மற்றும் அரச பண்புகளால் மதிக்கப்பட்ட அவர், மூன்றாவது இடத்தில், கிறிஸ்துவாக மாறியவராக, எண்ணெய் என்ற திரவத்தால் அல்ல, தெய்வீக அபிஷேகம் செய்யப்பட்டவராகவும், சரீர ரீதியாக அபிஷேகம் செய்யப்பட்ட தனது முன்னோடிகளை விட மிக உன்னதமானவரும் காட்டப்படுகிறார். ஏனைய இடங்களிலும் அதே எழுத்தாளர் தனது நிலைப்பாட்டைவிளக்குகிறார்:

கர்த்தர் என் ஆண்டவரிடம், “நான் உமது எதிரிகளை உமது பாதபடியாக்கும் வரை என் வலது பாரிசத்தில் அமரும். விடியற் காலைக்கு முன் கர்ப்பத்திலிருந்து நான் உன்னைப் பெற்றெடுத்தேன்” என்றார். கர்த்தர் உறுதிகூறுவார், எப்போதும் இரத்துசெய்ய மாட்டார்: “நீ என்றென்றும் மெல்கிசேதேக்கிற்கு இணையான ஒரு ஆசாரியனாக இருக்கிறாய்,” [சங்கீதம் 110:1-4].

இந்த மெல்கிசேதேக் எந்தத் திரவ அல்லது திண்மப் பொருளாலும் அபிஷேகத்தையும் பெறாதவறாய், எபிரேய ஆசாரியத்துவத்தைச் சேர்ந்தவராக, மிக உயர்ந்த கடவுளின் ஆசாரியராக புனித நூல்களில் போற்றப்பட்டுள்ளார். அதனால்தான், நம்முடைய இரட்சகர், தேவ பிரமாணத்தின்படி கிறிஸ்து என அவருடைய கட்டளையின்படியே அழைக்கப்படுகிறார். அடையாளங்கள் மற்றும் வடிவங்களைப் பெற்ற மற்றவர்கள் போல் அல்ல. அவர் யூதர்களால் சரீர ரீதியாக அபிஷேகம் செய்யப்பட்டார் அல்லது ஆசாரியத்துவம் பெற்றவர்களின் கோத்திரத்தைச் சேர்ந்தவர் என்று எந்தப் பதிவிலும் கூறப்படவில்லை. அவர் தனது பிரசன்னத்தை கடவுளிடமிருந்தே காலை நட்சத்திரத்திற்கு முன்பு கொண்டிருந்தார். அதாவது உலகம் படைக்கப்படும் முன்பிருந்து. அதன் வழியாக அவரது ஆசாரியத்துவத்தை நித்தியத்துக்கும் கொண்டவராக இருக்கிறார்.

அதாவது, இதுவரை வாழ்ந்த அனைவரைப் பார்க்கிலும், அவர் ஒருவரே கிறிஸ்து என்று உலகம் முழுவதும் அறியப்படுகிறார். கிரேக்கர்கள் மற்றும் கிரேக்கர்கள் அல்லாதவர்களால் கூட அவர் இவ்வாறு அழைக்கப் படுகிறார். இன்றுவரை அவரது வழிபாட்டாளர்களால் கௌரவிக்கப் படுகிறார் என்பதன் மூலம் அவரது அபிஷேகம் தெய்வீகமானது என்பது நிரூபணமாகிறது. உலகம் அவரை ஒரு தீர்க்கதரிசியை விட அதிக பிரமிப்புடன் நடத்தியது. மேலும் கடவுளின் உண்மையான மற்றும் ஒரே பிரதான ஆசாரியராக மகிமைப்படுத்தியது. எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளுக்கு முன்பு தோன்றிய வார்த்தையாக அவர் மகிமைப்படுத்தப்பட்டார். அவர் அனைத்து காலங்களுக்கும் முன்னம் இருந்து கடவுளாக வணங்கப்பட்டார். அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாம், குரல் மற்றும் வார்த்தையால் மட்டுமல்ல, நம் முழு ஆன்மாவினாலும் அவரை மதிக்க வேண்டியவர்களாகிறோம். இதனால் அவருடைய சாட்சியை உயிரை விட அதிகமாக மதிக்கிறோம்.

தொன்மைதொட்டு வாழும் உண்மையான நம்பிக்கை

4. நமது இரட்சகரும் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவை ஒரு கதையாக எண்ணுவதை தவிர்ப்பதற்கு இந்த அறிமுகம் அவசியமாகிறது. அவர் அவதரித்த நாள் அல்லது அவரது போதனைகள் புதிய மற்றும் விசித்திரமானதுமான விடயங்கள் போன்றன, சமீபத்திய காலத்தின் ஒரு பொதுவான மனிதனால் வடிவமைக்கப்பட்டது. அவரது சமீபத்திய வருகையுடன், புதியவர்களான மக்கள் – சிறியவர்கள், பலவீனர்கள் அல்லது தொலைதூரத்தில் வாழும் மக்கள் அல்ல. கடவுளின் நித்திய உதவியால் மிகவும் ஏராளமான, பக்தியுள்ள மற்றும் வெல்ல முடியாதவர்கள் – நியமிக்கப்பட்ட நேரத்தில் தோன்றி, கிறிஸ்துவின் பெயரால் கௌரவிக்கப்பட்டனர். தீர்க்கதரிசிகளில் ஒருவர் பரிசுத்த ஆவியின் மூலம் எதிர்காலத்தை முன்னறிவித்தபோது இது மிகவும் ஆச்சரியமாக இருந்தது:

இப்படிப்பட்ட விஷயங்களைக் கேட்டவர் யார்? மேலும் இவ்வாறு பேசியது யார்?

பூமி உழைப்பில் உண்டானதா? அப்படியானால் ஒரு நாள், ஒரு தேசம் ஒரே நேரத்தில் பிறந்ததா? [ஏசாயா 66:8].

அதே எழுத்தாளர் அதன் எதிர்காலப் பெயரையும் சுட்டிக்காட்டுகிறார்; “அவர் தம் ஊழியர்களைப் புதிய பெயரால் அழைப்பார். ஜனங்கள் இப்போது பூமியிலிருந்து ஆசீர்வாதத்தைக் கேட்கின்றனர். ஆனால் எதிர்காலத்தில், அவர்கள் நம்பிக்கைக்குரிய தேவனிடமிருந்து ஆசீர்வாதத்தை பெறுவார்கள்”. [ஏசாயா 65:15-16].

ஆனால் நாம் புதியவர்கள் என்றாலும், கிறிஸ்தவர்களின் இந்த புதிய பெயர் சமீபகாலமாக எல்லா நாடுகளாலும் அறியப்படுகிறது. நமது வாழ்க்கை, நடத்தை மற்றும் மதக் கோட்பாடுகள் ஆகியவை நமது சமீபத்திய கண்டுபிடிப்புகள் அல்ல. அவை பழங்காலத்தில் கடவுளின் நண்பர்களாக இருந்த மனிதர்களின் இயல்பான கருத்துகளிலிருந்து உருவாகின்றன. ஆகவே, நாங்கள் நிரூபிப்போம். எபிரேயர்கள் என்போர் ஒரு புதிய மக்கள் கூட்டம் அல்லர், ஆனால் அனைவராலும் அறியப் பட்டவர்கள் மற்றும் அவர்களின் பழமைவாதத்துக்காக மதிக்கப் படுகிறார்கள். இப்போது அவர்களின் வாய்மொழி மற்றும் எழுதப்பட்ட பதிவுகள் ஆரம்ப கால மனிதர்களை வழிநடத்தின. ஒரு சில மற்றும் எண்ணிக்கையில் பற்றாக்குறை நிலவுகின்ற போதிலும், இன்னும் பக்தி, நீதி மற்றும் பிற நற்பண்புகளில் சிறந்து விளங்குகின்றன. அவர்களில் சிலர் ஜலப்பிரளயத்திற்கு முன் வாழ்ந்தனர். மற்றவர்கள் – நோவாவின் குழந்தைகள் மற்றும் சந்ததியினர் – ஆனால் குறிப்பாக ஆபிரகாம் அவர்களை எபிரேயர்கள் தங்கள் சொந்த நிறுவனர் மற்றும் மூதாதையர் என்று பெருமை கொள்கிறார்கள். ஆபிரகாமிலிருந்து முதல் மனிதன் வரையிலான நீதிக்காகப் புகழ் பெற்ற இவை யாவும் உண்மையில் கிறிஸ்தவர்கள் என்று விவரிக்கப்படலாம். பெயரில் இல்லாவிட்டாலும், சத்தியத்தை மீறாமல் இவை இருப்பதைக் காணலாம். கிறிஸ்துவின் அறிவு மற்றும் போதனையின் மூலம், கிறிஸ்தவர் சுயக்கட்டுப்பாடு மற்றும் நீதி, ஒழுக்கம் மற்றும் நல்லொழுக்கத்தில் சிறந்து விளங்குகின்றனர். எல்லாவற்றிலும் ஒரே ஒரு கடவுளின் பிள்ளைகள் என்ற சொல்லின் ஊடாக சிறந்து விளங்குகின்றனர். இவை அனைத்திலும் எங்களை விட, அவர்கள் எவ்விதத்திலும் வைராக்கியத்தைக் காட்டவில்லை.

இப்படிப்பட்டவர்களுக்கு சரீர ரீதியான விருத்தசேதனத்தில் விருப்பமில்லை. எங்களுக்கும் இஷ்டம் இல்லை; ஓய்வு நாட்களைக் கடைப்பிடிப்பதற்கும் இஷ்டம் இல்லை; மோயீசன் அவர்களின் வாரிசுகளுக்கு முதன்முதலில் வழங்கிய சில உணவுகள் மற்றும் பிற வேறுபாடுகளை அடையாளங்களாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது பற்றியோ இப்போது கிறிஸ்தவர்கள் கவலைப்படுவதில்லை. ஆனால் தெளிவாக அவர்கள் கடவுளின் கிறிஸ்துவை அறிந்திருந்தார்கள். ஏனெனில் அவர் ஆபிரகாமுக்கு முன் தரிசனம் கொடுத்து, ஈசாக்கை வழிநடத்தி, இஸ்ரவேலுடன் [யாக்கோபுடன்] உரையாடினார். நான் இந்த உரையில் காட்டியபடி மோயீசனுடனும் மற்றும் பிற்கால தீர்க்கதரிசிகளுடனும் உரையாடியதாக சான்றுகள் உள்ளன. ஆகையால், இந்த கடவுள்மீது பற்றுள்ள மனிதர்கள் வார்த்தையின்படி கிறிஸ்துவின் பெயரைக் கூட பெற்றிருப்பதை நீங்கள் காண்பீர்கள்: “தேவன், “நான் தேர்ந்தெடுத்த ஜனங்களுக்குத் தீமை செய்யாதீர்கள். எனது தீர்க்கதரிசிகளுக்கு எந்தத் தீமையும் செய்யாதீர்கள்” என்றார்.” [சங்கீதம் 105: 15]. அப்படியானால், தெளிவாக கிறிஸ்துவின் போதனையை அனைத்து நாடுகளுக்கும் சமீபத்தில் அறிவித்தன. ஆபிரகாம் மற்றும் அவரைப் பின்பற்றிய கடவுளின் அன்பர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து மதங்களிலும் முதலாவதும் மற்றும் மிகவும் பழமையானதும் இதுதான். விருத்தசேதனத்திற்கான கட்டளையை ஆபிரகாம் நீண்ட காலத்திற்குப் பிறகு தான் பெற்றார் என்று அவர்கள் வாதிட்டாலும், இறைவார்த்தை கூறுவது போல், இதற்கு முன்பும் அவர் விசுவாசத்தின் மூலம் நீதியுள்ளவராகக் கருதப்பட்டார் என்று நான் பதிலளிக்கிறேன்: “ஆபிரகாம் கடவுளை நம்பினார், அது அவருக்கு நீதி எனக் கருதப்பட்டது” [ஆதியாகமம்: 15:6]. அவருக்கு விருத்தசேதனம் செய்யப்படுவதற்கு முன்பு அவருக்குக் காட்டப்பட்ட கடவுளால் உரைக்கப்பட்ட தேவ அசரீரி – கிறிஸ்து, கடவுளின் இறைவார்த்தை – எதிர்காலத்தில் அவரைப் போலவே நியாயப்படுத்தலுக்கு உள்ளானோரை குறித்து பின்வருமாறு கூறினார்: “உன்னை ஆசீர்வதிக்கிற ஜனங்களை நான் ஆசீர்வதிப்பேன். உன்னை தூற்றுபவர்களை நான் தூற்றுவேன். நான் உன் மூலம் பூமியிலுள்ள அனைத்து ஜனங்களையும் ஆசீர்வதிப்பேன்” என்றார்.” (ஆதியாகமம்: 12:3). மேலும்: “ஆபிரகாம் ஒரு மகத்தான பலமிக்க தேசமாவான். அவனால் பூமியிலுள்ள ஜனங்கள் யாவரும் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.” [ஆதியாகமம் 18:18].

இப்போது இது வெளிப்படையாக நம்மில் நிறைவேறியுள்ளது, ஏனென்றால், கடவுளின் வார்த்தையின் மீது விசுவாசம், அவருக்கு தரிசனம் கொடுத்த கிறிஸ்து மூலம் அவர் நீதிமான் ஆக்கப்பட்டார் மற்றும் ஒரே கடவுளை ஏற்றுக்கொள்வதற்கு அவரது மூதாதையர் கொண்டிருந்த மூடநம்பிக்கையை கைவிட்டார். அனைவரும், முலையான நடத்தை மூலம் அவருக்கு சேவை செய்கிறார்கள், அப்படியிருக்க, பின்னர் வந்த மோயீசனின் சட்டத்தால் அல்ல. அவருக்கு, அப்போது இருந்த ஆசீர்வாதத்தைப்போலவே, எல்லா நாடுகளும் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்று கூறப்பட்டது. தற்போது, வார்த்தைகளை விட சத்தமாக, தமது செயல்களில், உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் மட்டுமே ஆபிரகாம் பின்பற்றிய விதத்தில் தங்கள் விசுவாசத்தை கடைப்பிடிக்கிறார்கள். அதன்படி, கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் பழங்கால கடவுள்பற்றுள்ள மனிதர்களைப் போலவே அதே வாழ்க்கையையும் மதத்தையும் பகிர்ந்து கொள்கிறார்கள். எனவே கிறிஸ்துவின் போதனை புதியதோ அல்லது விசித்திரமானதோ அல்ல, ஆனால், நேர்மையானது, பழமையானது, தனித்துவமானது மற்றும் உண்மையானது.

இயேசுவின் பிறப்பும் யூத வம்சத்தின் முடிவும்

5. இப்போது, என் திருச்சபை வரலாற்றில் இந்த அவசியமான அறிமுகத்திற்குப் பிறகு, நமது இரட்சகரின் சரீரமயமான தோற்றத்துடன் தொடங்குவோம். முதலில் வார்த்தையின் தந்தையான கடவுளையும், மற்றும் இயேசு கிறிஸ்துவையும் பற்றிய ஒரு உண்மையான கருப்பொருளை உருவாக்க நமக்கு உதவுங்கள். அகஸ்டஸ் ஆட்சி காலத்தின் நாற்பத்தி இரண்டாம் வருடத்திலும், எகிப்தைக் கைப்பற்றிய இருபத்தி எட்டாவது வருடத்திலும், டோலமி வம்சத்தின் கடைசி வழித்தோன்றல்களான ஆண்டனி மற்றும் கிளியோபாட்ரா இறந்த பிறகும், நமது இரட்சகரும் ஆண்டவருமான இயேசு கிறிஸ்து பிறந்தார். அவரைப் பற்றிய தீர்க்கதரிசனங்களின்படி யூதேயாவின் பெத்லகேமில். கியுரினியஸ் சிரியாவின் ஆளுநராக இருந்தபோது நடந்த முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, எபிரேய வரலாற்றாசிரியர்களில் மிகவும் பிரபலமானவர் என்று அறியப்பட்ட ஃபிளேவியஸ் ஜோசபஸ் என்பவரால் இதுபற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள அதேவேளை, சமகாலத்தில் தோற்றம் பெற்ற கலிலியன் பிரிவு பற்றிய விபரத்தையும் இத்தோடு சேர்த்திருப்பதாக, நமக்கு மிகவும் பரிச்சயமான லூக்கா அப்போஸ்தலர் பணி புத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

அவனுக்குப்பின் கலிலேயாவிலிருந்து யூதா என்னும் பெயருள்ள மனிதன் வந்தான். மக்கள்தொகை பதிவு செய்த காலத்தில் அவன் வந்தான். அவன் தன்னைப் பின் பற்றியவர்களுக்குத் தலைமையும் தாங்கினான். பின்னர் அவனும் கொல்லப்பட்டான். அவனைப் பின்பற்றிய அனைவரும் சிதறியோடினர். [அப்போஸ்தலர் பணி 5:37].

Illustration: 2 கி.மு. 27 முதல் கி.பி. 14 வரையில் ஆட்சிசெய்த பேரரசர் அகஸ்டஸ் அவர்களது சிலை ஒரு பாதிரியார் உடையில் காணப்படுகிறது. (மியூசியோ நேசியோனாலே, உரோம்)

முன்னர் வரலாற்றாசிரியர் [ஜோசஃபஸ்] என்பவரால் மேற்கோள் காட்டப்பட்ட மேற்கூறிய தொல்பொருட்கள், புத்தகம் 18 இல் அங்கீகரிக்கிறார்:

மேல் அரசவை உறுப்பினரான கியுரினியஸ், தூதரக ஆவதற்கு தகுதி பெரும் மற்ற எல்லா அலுவலகங்களையும் கடந்து அனைத்து வழிகளிலும் உயர்ந்த மனிதராக இருந்தார். அவர் ஒரு சிறிய ஊழியர்கள் கொண்ட குழுவோடு சிரியாவிற்கு வந்தார். தேசத்தை ஆளுவதற்கும் அவர்களின் சொத்துக்களை மதிப்பிடுவதற்கும் அவர் சீசரால் அனுப்பப்பட்டார்… கமாலா என்ற நகரத்தைச் சேர்ந்த யூதாஸ், இவன் ஒரு கௌலோனைட் எனப்படுபவன். இவன் ஒரு பரிசேயரான சாடோக்கை தன்னுடன் அழைத்துச் சென்று ஒரு கலகத்தைத் தூண்டினான். ஏனெனில் குடிசன மதிப்பீடு முழு அடிமைத்தனத்தைத் தவிர வேறொன்றுக்கும் உதவாது என்றும், மேலும் கலகங்களுக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் கூறினர். அவர்கள் தங்கள் சுதந்திரத்தைப் பாதுகாக்க மக்களை அழைத்தனர்.

அவர் யூதர்களுக்கு எதிரான போர் பற்றிய இரண்டாவது புத்தகத்தில், அதே மனிதனைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார்:

இந்த நேரத்தில் யூதாஸ் என்ற கலிலேயன், பூர்வீகவாசிகளை கிளர்ச்சி செய்ய தூண்டினான். கடவுளுக்கு சேவை செய்த பிறகு, அவர்கள் சர்வாதிகார எஜமானர்களை ஏற்றுக்கொண்டு உரோமையர்களுக்கு வரி செலுத்திய காரணத்தால், அவர்களை கோழைகள் என்று விளித்தார்.

6. இக்காலப்பகுதிதான் ஏரோது யூத தேசத்தின் அரசனாக முடிசூட்டப்பட்ட முதல் வெளிநாட்டவர். “யூதாவின் குடும்பத்தில் வருபவர்கள் அரசர் ஆவார்கள். சமாதான கர்த்தர் வரும்வரை உன்னை விட்டு செங்கோல் நீங்குவதில்லை. ஏராளமான ஜனங்கள் அவனுக்கு அடிபணிந்து சேவை செய்வார்கள்.” [ஆதியாகமம் 49:10]. அவர் “புறஜாதியாரின் எதிர்பார்ப்பாக” இருப்பார் என்றும் மோயீசன் கூறுகிறார். மோயீசன் தொடங்கி அகஸ்டஸின் ஆட்சி வரை, யூதர்கள் தங்கள் சொந்த இனத்தின் ஆட்சியாளர்களின் கீழ் வாழ்ந்த வரை இந்த கணிப்பு சரியான ஊகிப்பது தராது. இருப்பினும், அவரது காலத்தில், உரோமையர்கள் யூதர்களின் ஆட்சி அதிகாரத்தை முதல் வெளிநாட்டவரான ஏரோதுக்கு வழங்கினர்.

ஜோசபஸ் தனது தந்தையின் வம்சத்தில் ஒரு இடுமின் தேசத்தைச் சேர்ந்த இடுமிய வம்சத்தினன் என்றும், அவனது தாய்வழி வம்சத்தில் ஒரு அரேபியன் என்றும் கூறுகிறார். ஆனால் [ஜூலியஸ்] ஆப்பிரிக்கானஸ் என்பவர் சாதாரண வரலாற்றாசிரியர் இல்லை – ஆனால் ஆண்டிபேட்டர் என்ற ஹெர்டின் தந்தை, அஸ்கலோனின் ஒரு குறிப்பிட்ட ஏரோதின் வழித்தோன்றலான மகன் என்று கூறுகிறார். அவன் அப்பல்லோ ஆலயத்தின் சேவகர்கள் ஒருவனாக இருந்தவன். இந்த ஆண்டிபேட்டர் சிறுவயதில் இடுமிய தேசத்து கொள்ளைக் காரர்களால் பிடிக்கப்பட்டு அவர்களுடன் கைதியாக வைக்கப்பட்டார். ஏனெனில் அவரது தந்தை தன்னை மீட்க கொள்ளைக்காரர்களால் கோரப்பட்ட தொகையை செலுத்த முடியாத அளவுக்கு ஏழையாக இருந்தார். அவர் அவர்களின் பழக்கவழக்கங்களில் வளர்க்கப்பட்டார். பின்னர் யூத பிரதான குருவான ஹிர்கானஸுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டார். அவருடைய [ஆண்டிபேட்டரின்] மகன் தான் நமது இரட்சகரின் காலத்தின் ஏரோது என்ற பெயரில் வாழ்ந்த சர்வாதிகார ஆட்சியாளன் என்பவன்.

Illustration 3. கி.மு. 73 இல் ஏரோது என்ற பேரரரசன் பிறந்த அஷ்கெலோனின் மத்திய தரைக்கடல் நகரத்தின் கடற்கரை. கீழ் இடதுபுறத்தில், பண்டைய ஃபிலிஸ்டைன் நகரத்தின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடிபாடுகள் காணப்படுகின்றன.[ The Mediterranean seafront of Ashkelon, where Herod the great was born in 73 BC. at the lower left, the ruins of the ancient Philistine city]

யூத அரசாட்சி அத்தகைய ஒரு மனிதரிடம் ஒப்படைக்கப்பட்டபோது, ​​தீர்க்கதரிசனத்தின்படி புறஜாதிகளின் எதிர்பார்ப்பு ஏற்கனவே மிக அருகாமையில் இருந்தது. ஏனென்றால் மோயீசனின் காலத்திலிருந்து அவர்களின் ஆட்சியாளர்கள் மற்றும் ஆளுநர்களின் வழக்கமான வாரிசு முடியாட்சி நிறைவுக்கு வந்தது. அவர்கள் பாபிலோனியாவில் சிறைப்படுத்தப்படுவதற்கு முன், அவர்கள் சவுல் மற்றும் அதற்கு முன் தாவீது என்ற அரசர்களால் ஆளப்பட்டனர். நீதிபதிகள் என்று அழைக்கப்படும் ஆட்சியாளர்கள், மோயீசன் மற்றும் அவருக்குப் பின் வந்த யோசுவாவைப் பின்பற்றி அவர்களை ஆட்சி செய்தனர். பாபிலோனிலிருந்து திரும்பிய பிறகு, உரோமைய தளபதி பாம்பே ஜெருசலேமை முற்றுகையிட்டு, ஆலயத்தின் உள்ளேயுள்ள சரணாலயத்திற்குள் நுழைந்து புனித இடங்களை மாசுபடுத்தும் வரை அப்பகுதி பாதிரியார்களின் தன்னலப் பிரபுத்துவம் என்ற கட்டுப்பாட்டில் இருந்தது. உடனே அவர் தனது குழந்தைகளுடன், அரசர் மற்றும் பிரதான பாதிரியார் அரிஸ்டோபுலஸ் ஆகியோருடன் உரோமுக்கு கைதியாக அனுப்பப்பட்டார். அவர் தனது முன்னோர்களின் வாரிசைத் தொடர்ந்தார். மேலும் பிரதான ஆசாரியத்துவத்தை அவரது [அரிஸ்டோபுலஸின்] சகோதரர் ஹிர்கானஸுக்கு கையளித்தார். அப்போதிருந்து யூத தேசம் உரோமுக்கு அடங்கியதாக இருந்தது. பார்த்தியர்களால் ஹிர்கானஸ் சிறைபிடிக்கப்பட்டபோது, உரோமைய மேல் சட்டசபை மற்றும் பேரரசர் அகஸ்டஸ் ஆகியோரால் யூத தேசத்தின் மீது ஆட்சி அமைக்க நியமிக்கப் பட்ட முதல் வெளிநாட்டவர் ஏரோது ஆவார். கிறிஸ்துவின் வருகை அவரது காலத்தில் தான் தெளிவாக நிகழ்ந்தது. மேலும் எதிர்பார்க்கப்பட்ட இரட்சிப்பும் புறஜாதியினரின் அழைப்பும் தீர்க்கதரிசனத்தின்படி பின்பற்றப்பட்டது.

Illustration 4: கி.மு. 63 இல் ஜெருசலேமைக் கைப்பற்றிய க்னேயஸ் பொம்பேயின் ஆட்சித்தலைவருடைய படம் இந்த கே காணப்படுகிறது. (கிளிப்டோடெக், கோபன்ஹேகன்) A head of Gnaeus Pompey, who conquered Jerusalem in 63 BC. (Glyptotek, Copenhagen)

யூத ஆட்சியாளர்களின் ஆட்சிமுறை நிறுத்தப்பட்டபோது, தலைமுறை தலைமுறையாக பிரதான ஆசாரியர்களின் ஒழுங்கான வாரிசுகள் சடுதியாக குழப்பத்தில் ஆழ்ந்தன. ஒருமுறை உரோமையர்களால் அரசனாக ஆக்கப்பட்ட ஏரோது, பாரம்பரிய வழிபாட்டின் பிரதான ஆசாரியர்களை நியமிக்கவில்லை. மாறாக தெளிவற்ற ஆசாரியர்களை நியமித்தார் என்று ஜோசிஃபஸ் நம்பகமான வகையில் தெரிவிக்கிறார். யூதர்களின் அரசாங்கத்தை கைப்பற்றியபோது, அவருடைய மகன் ஆர்கெலாஸ் மற்றும் அவருக்குப் பிறகு வந்த உரோமைய ஆளுநர்கள் ஆட்சியைத் தொடர்ந்தனர். அவருடைய வாரிசான ஆர்கெலஸ் மற்றும் அவருக்குப் பின் வந்த உரோமையர்களைப் போலவே, பிரதான ஆசாரியரின் புனித வஸ்திரத்தைப் பூட்டிவைத்து, ஆசாரிய கட்டுப்பாட்டிற்குப் பதிலாக தனது சொந்த அதிகாரத்தின் கீழ் ஆட்சியில் அமர்த்திய முதல் நபர் ஏரோது என்று அதே எழுத்தாளர் தெரிவிக்கிறார்.

நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் தோற்றத்தில் மற்றொரு தீர்க்கதரிசனம் நிறைவேறியதையும் இந்த உண்மைகள் காட்டுகின்றன. தானியேலில் உள்ள வாசகம் கிறிஸ்துவின் ஆட்சி வரையிலான வாரங்களின் சரியான எண்ணிக்கையைக் குறிப்பிடுகிறது – நான் இந்த விஷயத்தை வேறு இடத்தில் குறிப்பிடுகிறேன் – மேலும் இந்த வாரங்களுக்குப் பிறகு யூதர்களின் அபிஷேகம் நிறுத்தப்பட்டு விட்டதாக தீர்க்கதரிசனம் கூறுகிறது. நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து பிறந்த நேரத்தில் இது நிறைவேறியது. அப்படியானால், அந்தத் திகதியின் உண்மையை கோடிட்டுக் காட்ட இந்த பூர்வாங்கங்கள் அவசியமாகப் படுகிறது.

கிறிஸ்துவின் மாறுபட்ட மரபுவழிகள்

7. மத்தேயு மற்றும் லூக்காவின் சுவிசேஷங்கள் கிறிஸ்துவின் வித்தியாசமாக பதிவு செய்கின்றன. மேலும் அவை ஒன்றுக்கொன்று முரண்படுவதாக பலர் கருதலாம். ஒவ்வொரு விசுவாசியும் இந்த பத்திகள் குறித்து அறியப்படாத யூகங்களை இங்கே வழங்க நான் ஆர்வமாக இருப்பதால், மேற்கூறிய ஆப்பிரிக்கானஸ் மரபுவழி நற்செய்தியின் இணக்கப்பாடு குறித்து அரிஸ்டைட்ஸுக்கு எழுதிய கடிதத்தில் பொதிந்துள்ள பிரச்சனைக்கான விளக்கத்தை மீண்டும் இங்கே தருகிறேன். மற்றவர்களின் கருத்துக்கள் பலவந்தமாகத் திணிக்கப்பட்டவை என்றும், அடிப்படையில் தவறானவை என்பதை மறுத்த பிறகு, அவர் தனக்கு வந்த விளக்கத்தை பின்வருமாறு அளிக்கிறார்:

இஸ்ரவேலின் குடும்பங்களில் உள்ள பெயர்கள் அந்நாட்டிற்கே உரித்தான சட்டத்தின்படி அல்லது உண்மையான சந்ததியினரின் வழியாக; அதாவது குழந்தை இல்லாமல் இறந்து போன ஒரு சகோதரனின் பெயரில் மற்றொரு சகோதரன் அல்லது வேறு ஒரு நபர் அந்தக் குழந்தைகளை ஏற்று வளர்த்து பராமரிக்கும் பட்சத்தில், சட்டப்படி இந்தக் குடும்பப் பெயர்களால் அவர்கள் அழைக்கப் படுகிறார்கள். உயிர்த்தெழுதல் பற்றிய நம்பிக்கை இன்னும் தெளிவற்றதாக இருப்பதால், இறந்தவரின் பெயர் தொடர்ந்தும் நிலைத்திருக்க, அவர்கள் பிற்காலத்தில் மரணத்திலிருந்து “உயிர்த்தெழுதல்” என்று கொடுக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் மட்டுமே நம்பிக்கை கொண்டிருந்தனர். இந்த மரபுவழியை நோக்கும்போது, அவர்களின் உண்மையான தந்தைக்கு பின் வந்த சிலரும் மற்றும் ஒரு தந்தையின் பிள்ளைகளும் ஆவர். இருப்பினும் மற்றொருவரின் குழந்தைகளாக பதிவு செய்யப்பட்டவர்கள் உள்ளனர். இதனால், உண்மையான மற்றும் வளர்ப்பு தந்தையரின் நினைவுகள் ஆகிய இரண்டும் பாதுகாக்கப்பட்டன. எனவே சுவிசேஷங்களில் பிழை எதுவும் இல்லை; ஏனெனில் அவை இயற்கை மற்றும் சட்டம் இரண்டையும் சரிசமமாக எடுத்துக் காட்டுகின்றன. இரண்டு குடும்பங்களுக்கு – ஒன்று சொலமனின் வழித்தோன்றல் மற்றொன்று நேதனின் வழித்தோன்றல் – குழந்தை இல்லாத விதவைகளின் மறுமணம் மற்றும் சந்ததிகளின் “மறுவாழ்வு” ஆகியவற்றின் மூலம் ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்துள்ளது. சில சமயங்களில், அதே நபர்கள் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பெற்றோரின் குழந்தைகளாகக் கருதப்படலாம் – புகழ்பெற்ற தந்தைகள், சில நேரங்களில் உண்மையானவர்களாக இருக்கக்கூடும். எனவே இரண்டு அனுமானங்களும் துல்லியமானவை. சற்றே சிக்கலானதாக இருந்தாலும், அவை ஜோசப் வரை மரபுவழிப் பாரியத்தைக் கொண்டதாக இருக்கின்றன.

மேலும் தெளிவுபடுத்த வேண்டுமானால், குடும்பங்களின் உறவை இங்கே விளக்குகிறேன். தாவீது முதல் சொலமன் வரையிலான தலைமுறைகளை எடுத்துக்கொண்டால், [மத்தேயு 1:15-16 வரை], முடிவில் இருந்து மூன்றாவதாக வந்தவர் மாத்தான், அவருடைய மகன் யாக்கோபு, ஜோசப்பின் தந்தை. ஆனால் நாம் லூக்காவின் கூற்றுப்படி பார்த்தால், [லூக்கா 3:23-37] தாவீதின் மகன் நாத்தானிடமிருந்து கணக்கிட்டால், முடிவில் இருந்து தொடர்புடைய மூன்றாவது மெல்கி, இவருடைய மகன் ஹெலி, ஜோசப்பின் தந்தை என்ற தரவுகளையே தருகிறது. ஆகவே, ஹெலி மற்றும் யாக்கோபு இருவரும் ஜோசப்பின் தந்தைமாராக எப்படி இருக்க முடியும் என்பதை காட்ட வேண்டும். மேலும் இரண்டு வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த மாத்தான் மற்றும் மெல்கி இருவரும் பாட்டன்மாராவர்.

இங்கே மற்றும் ஒன்றைப் பற்றிக் கூறவேண்டும். மாத்தனும் மெல்ச்சியும் ஒரே மனைவியை பகிர்ந்து கொண்டதால், மாற்றாந்தாய் வழிக் குழந்தைகளுக்கு தந்தைமாராக இருந்தனர், ஏனெனில் விவாகரத்து செய்யப்பட்ட அல்லது விதவையான ஒரு பெண்ணை மீண்டும் திருமணம் செய்து கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. இப்போது கேள்விக்குரிய விடயம் என்னவென்றால், பாரம்பரியப் பெயருடைய மனைவி எஸ்தா, முதலில் மாத்தனை (சொலமனின் வழிவந்தவர்) மணந்து அவருக்கு யாக்கோபுவைப் பெற்றெடுத்தார். மாத்தன் இறந்தபின், அவரது விதவையான எஸ்தா, அதே பழங்குடியைச் சேர்ந்த, ஆனால் வெவ்வேறு குடும்ப பாரம்பரியத்தைச் சேர்ந்த மெல்கியை (நேதனின் வழித்தோன்றல்) மணந்து, அவர் மூலம் ஹெலியைப் பெற்றெடுத்தார்.

Illustration: 5 (Chart)

இவ்வாறு யாக்கோபு மற்றும் ஹெலிக்கு ஒரே தாயாக எஸ்தா காணப்பட்டாள். மேலும் ஹெலி குழந்தை இல்லாமல் இறந்தபோது, அவனது [உடன்பிறவா- ஒருவழி சகோதரன்] சகோதரன் யாக்கோபு அவனது விதவை மனைவியை மணந்து அவள் மூலம் யோசேப்பைப் பெற்றான். யோசேப்பு, யாக்கோபுவின் சொந்த மகன் ஆனால் ஹெலியின் சட்டப்பூர்வ மகன் என்ற ஸ்தானத்தை பெற்றான். அவருக்கு ஒரு நல்ல சகோதரன் என்ற அந்தஸ்தோடு, “வளர்க்கப்பட்ட மகன்” என்ற சந்ததியுடன் இணைத்துக்கொள்ளப்பட்டான். மத்தேயு சரீர மரபுவழிப்பிறப்பு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். அதேசமயம் லூக்கா “கருதப்பட்டது போல் இருந்தது” என்று கூறுகிறார்; அதாவது – பிற்குறிப்பை நோக்கினால், யோசேப்பின் மகன், ஹெலியின் மகன், மெல்கியின் மகன்” [லூக்கா 3:23-24] என்ற நிர்ணயத்துக்கு  வரக்கூடியதாக இருக்கிறது. சட்டப்பூர்வ மரபுவழிப் பாரம்பரியத்தை இன்னும் துல்லியமாக வெளிப்படுத்துவது என்பது சாத்தியமற்றது. மேலும் “கடவுளின் பிள்ளை ஆதாம்” என்ற வரியைக் கொண்டு அத்தகைய குழந்தைகளைப் பற்றி அவர் ‘ஈன்ற அல்லது பிறந்த’ என்ற வார்த்தையை அவர் ஒருபோதும் பயன்படுத்தவில்லை.

இது நிரூபணமாகவோ யூகமாகவோ இருக்கவேண்டுமென்பதில்லை. இரட்சகரின் வழிவந்த மனித உறவினர்கள் இந்த பாரம்பரியத்தை தற்பெருமை கொள்ளும் நோக்கத்துடனோ அல்லது வெறுமனே தகவலை வழங்குவதற்காகவோ சமர்ப்பித்துள்ளனர். எப்படி இருந்தாலும், இவை உண்மைகளை எடுத்துரைக்கின்றன. இடுமிய போராளிகள் பாலஸ்தீனத்தில் உள்ள அஸ்கலோன் நகரைத் தாக்கியபோது, குறிப்பிட்ட ஏரோதின் வாரிசான அப்பல்லோவை, ஆண்டிபேட்டர் ஊழியராக இருந்த கோவிலில் இருந்து கைப்பற்றினர். பாதிரியார் தனது மகனை மீட்க செலுத்தவேண்டிய தொகையை செலுத்த முடியாததால், ஆண்டிபேட்டர் இடுமிய சூழ்நிலையில் ஒரு இடுமியனாக வளர்க்கப்பட்டார். அப்படி இருந்தபோது, யூத பிரதான பாதிரியார் ஹிர்கானஸுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டார். ஹிர்கானஸின் சார்பாக பொம்பேயுவுக்கு அனுப்பப்பட்ட அவர், அவரது சகோதரர் அரிஸ்டோபுலஸால் கைப்பற்றப்பட்ட தனது இராச்சியத்தை மீட்டெடுப்பதில் உறுதியுடன் நின்று அவருக்காக [ஹிர்கேனஸ்] வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். அதன் மூலம் [ஆன்டிபேட்டர்] பாலஸ்தீனத்தின் மேற்பார்வையாளரானார். அவர் சூழ்ச்சிகளால் படுகொலை செய்யப்பட்ட பிறகு, அவருக்குப் பிறகு அவரது மகன் ஏரோது பதவியேற்றார். பின்னர் அவர் யூதர்களின் அரசராக ஆண்டனி, அகஸ்டஸ் மற்றும் மேல் சட்டசபையின் ஆணையால் நியமிக்கப் பட்டார். அவருடைய மகன்மார் ஏரோது [அன்டிபாஸ்] மற்றும் ஏனையோர் மண்டல ஆட்சியாளர்களாக விளங்கினார். கிரேக்க வரலாற்றாசிரியர்கள் இதை உறுதிப்படுத்துகின்றனர்.

ஆனால் எபிரேய குடும்பங்கள் பற்றிய வரலாறு இன்னும் காப்பகங்களில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. அதேபோல் மதமாற்றம் பெற்று அதன் பின்னணியில் இருந்து வந்தவர்கள்- அக்கியோன் அம்மோனியர், ரூத் மோவாபியர்கள் மற்றும் அவர்களுடன் எகிப்தை விட்டு வெளியேறிய கலப்பு குடும்பங்கள் போன்றவற்றின் விபரங்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, ஏரோது, இஸ்ரேலிய வம்சாவளிக்கு சொந்தமில்லாத அவரது அடிப்படை தோற்றத்தால் ஏமாற்றமடைந்து பொது ஆவணங்களில் இருந்து தனது மரபுவழியை யாராலும் கண்டுபிடிக்க முடியாவண்ணம் அவர் உன்னதமான பிறப்பாளராக கருதப்படவேண்டும் என்று நினைத்து, வம்சாவளி பதிவுகளை எரித்தார். இருப்பினும், ஒரு சிலர், தங்கள் வசமிருந்த சொந்தப் பதிவுகளை கவனமாகப் பாதுகாத்து, பெயர்களை நினைவில் நிறுத்திக் கொண்டு அல்லது அவற்றை நகல்களாக உருவாக்கி தங்கள் பிரபுத்துவப் பிறப்பின் பின்னணியைப் பாதுகாப்பதில் பெருமிதம் கொண்டனர். இவர்களில், இரட்சகரின் குடும்பத்துடனான உறவின் காரணமாக டேஸ்போஸினி அதாவது, ஆளும் வர்க்கத்துக்கு சொந்தமானவர்கள் என்று அழைக்கப்பட்டனர். நாசரேத் மற்றும் கொச்சாபாவில் உள்ள யூத கிராமங்களில் வாழ்ந்த அவர்கள், மற்றைய நிலப்பகுதிகள் வழியாக பிரயாணித்து, தங்கள் வம்சாவளியின் மேற்கூறிய பரம்பரை கௌரவத்தை விளக்கி, தினசரி பதிவுப் புத்தகத்திலிருந்து தங்களால் இயன்றவரை அவைபற்றி மேற்கோள் காட்டினர். இது உண்மையா இல்லையா என்பது பற்றி எவராலும் தெளிவான விளக்கத்தை கொடுக்க முடியாது. ஆனால் இவை அனைத்தையும் நோக்குமிடத்து, நற்செய்தி பதிவு எப்படி இருந்தாலும் உண்மைதான் என்பதில் ஐயமில்லை.

இந்த கடிதத்தின் முடிவில் ஆப்பிரிக்காநூஸ் மேலும் கூறுகிறார்:

சொலமனின் வழித்தோன்றலான மாத்தான், யாக்கோபுவை பெற்றான், மாத்தான் இறந்த பின்னர், நேதனின் வழித்தோன்றலான மெல்கி, அதே பெண் மூலம் ஹெலியைப் பெற்றான். ஹெலி மற்றும் யாக்கோபு இருவரும் ஒரே தாய் வயிற்றுப பிள்ளைகள். ஹெலி குழந்தை பாக்கியம் இன்றி இறந்தபோது, யாக்கோபு யோசேப்புவை, அதாவது அவரது சொந்த மகன் அதேநேரம் ஹெலியின் சட்டப்பூர்வமான மகனுக்கு தந்தையாக இருந்து அவனை வளர்த்தார். எனவே, யோசேப்பு இருவருக்கும் மகன் ஆகிறார்.

யோசேப்புவின் இந்த மரபுத்துவமானது மேலும் உறுதிபெறக் காரணம், மரியாள், அவர் அதே கோத்திரத்தைச் சேர்ந்தவர் என்பதற்கு மெய்நிகர் சான்றாகும். ஏனெனில், மோயீசனின் சட்டத்தின்படி, வெவ்வேறு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்வது சட்டவிரோதமானது. [குடும்ப] பரம்பரை ஒரு கோத்திரத்திலிருந்து மற்றொரு கோத்திரத்திற்கு மாற்றப்படாமல் இருக்க பங்காளிகள் ஒரே ஊர் மற்றும் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

Illustration 6: பெத்லஹேமில் உள்ள கிறீஸ்துவின் பிறப்பை குறிக்கும் தேவாலயம் இந்த புகைப்படத்தின் இடது பாதியில் காணப்படுகிறது. இங்கே காணப்படும் செயற்கைக் குகையின் கீழ் உள்ள ஒரு பீடம் போன்ற அமைப்பு கிறிஸ்தவ விழுமியத்தை எடுத்துரைக்கும் பழமைவாய்ந்த தேவாலயமாகும். இது தான் இயேசு பிறந்ததாகக் கருதப்படும் இடத்தைக் குறிக்கிறது. The church of the nativity at Bethlehem is the structure in the left half of this photograph. a grotto under the alter of this is the oldest church in Christendom, marks the presumed place where Jesus was born.

ஏரோதுவும் பெத்லகேமின் குழந்தைகளும்

8. யூதேயாவிலுள்ள பெத்லகேமில் ஏற்கனவே தீர்க்கதரிசனத்தில் குறிப்பிடப்பட்ட நேரத்தில் கிறிஸ்து பிறந்தபோது, கிழக்கிலிருந்து வந்த மூன்று அறிஞர்கள் யூதர்களின் அரசராகப் பிறந்தவரை எங்கே பார்க்கலாம் என்று ஏரோதைக் கேட்டனர். சிசுவை கடவுளாக வழிபட வேண்டும் என்ற ஆர்வத்தில் நீண்ட பயணத்தை மேற்கொண்ட அவர்களை நட்சத்திரம் ஒன்று வழிநடத்தியதைக் கண்டு வியந்தனர். இந்த வேண்டுகோள் அவரை [ஏரோது] பெரிதும் தொந்தரவாக அமைந்தது. உடனே அவர் தனது இறையாண்மைக்கு ஆபத்து வரப்போகிறதோ என்று கவலையுற்றார். எனவே அவர் கிறிஸ்து எங்கே பிறந்திருக்கிறார் என்று சட்ட வல்லுநர்களை விசாரித்தார். அது பெத்லகேமாக இருக்கும் என்ற மீகாவின் தீர்க்கதரிசனத்தின் ஊடாக அறிந்து, அறிஞர்கள் சுட்டிக்காட்டிய நேரத்தின்படி பெத்லகேம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள இரண்டு வயது மற்றும் அதற்குக் குறைவான அனைத்து குழந்தைகளையும் படுகொலை செய்யும்படி ஒற்றை ஆணையை வெளியிட்டான். ஏனெனில், இப்படியாக சிசுக்களை படுகொலை செய்தால் அதில் குழந்தையாக அவதரித்த இயேசுவும் உள்ளடங்கக்கூடும் என்று நினைத்தே இவ்வாறான கட்டளையைப் பிறப்பித்தான். எவ்வாறாயினும், குழந்தையான இயேசுவின் பெற்றோருக்கு ஒரு தேவதூதரால் முன்னறிவிக்கப்பட்டதால், அவர்கள் மூவர் சகிதம் எகிப்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதன விளைவாக, ஏரோதின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. இது [மத்தேயுவின்] புனித நற்செய்தியிலும் கூறப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் கிறிஸ்து மற்றும் அவரது வயதையொத்த குழந்தைகளுக்கு எதிராக ஏரோது செய்த குற்றம் பற்றிக் குறிப்பிடுவது சிறப்பாக இருக்கும். எந்தத் தாமதமும் இன்றி, மறு உலகில் அவருக்கு என்ன காத்திருக்கிறது என்பதற்கான முன்னெச்சரிக்கையாக, அவர் உயிருடன் இருந்தபோதே கடவுளின் நீதி அவரை முந்தியது. மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களை குரூரமான வகையில் கொலை செய்ததன் மூலம் அவனது புகழ்பெற்ற ஆட்சியின் பெருமைகளை இருட்டடிப்பு செய்த வழிகளை இங்கே சுருக்கமாகக் கூற முடியாது. ஜோசஃபஸ் தனது வரலாற்றில் விரிவாகக் கூறுவதற்கு அமைய, எந்த அராஜக நிகழ்வுகளுக்கும் ஒரு மாரு விளைவு உண்டு. நம் இரட்சகருக்கும் மற்ற அப்பாவிகளுக்கும் எதிராக அவன் சதி செய்த தருணத்திலிருந்து, கடவுளின் கசை அவனை மரணத்திற்குத் தள்ளியது. பழங்கால யூதப் புத்தகம் 17 இல், [ஜோசபஸ்] அவனுக்கு ஏற்பட்ட முடிவைப் பற்றி இவ்வாறு விபரிக்கிறார்:

ஏரோது செய்த கொடிய குற்றங்களுக்கு கடவுள் தண்டனை கொடுத்ததால், நோயினால் அவனது நிலை படிப்படியாக மோசமடைந்தது. அவனுக்குள் மெதுவான தீ எரிவதை உணர்ந்தான். அநேகமாக அது அவனை வதைத்ததை உணர்ந்தான். அவனுக்கு உணவின் மீது அலாதியான ஆசை இருந்தாலும், குடலில் ஏற்பட்ட புண்கள், பெருங்குடலில் ஏற்பட்ட பயங்கர வலி, கால்களில் நீர்க்கோர்வை காரணமாக ஏற்பட்ட வீக்கம் காரணமாக அவனால் எதுவும் செய்ய முடியாத நிலை இருந்தது. அவனது சிறுநீர்ப்பை வீக்கமடைந்து, குடலிறக்கமானது அவனது பிறப்புறுப்புகளில் அழுகல் நிலையை ஏற்படுத்தி, புழுக்களை உண்டுபண்ணியது. அவற்றில் இருந்து வெளிப்பட்ட துர்நாற்றம் காரணமாக அவனது சுவாசம் அதிகரித்தும், அவனது நிலை மோசமான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. மேலும் ஒவ்வொரு மூட்டுகளும் தாங்க முடியாமல் வலித்தது. ஏரோது அரசனின் பல தீய, கொடிய, மிலேச்சத்தனமான செயல்களுக்காக கடவுள் பழிவாங்குகிறார் என்று அறிவார்ந்த மக்கள் அறிந்துகொண்டனர்.

அவரது யூதப் போர் பற்றிய புத்தகம் 2 இல், ஜோசபஸ் இதேபோன்ற தகவலை வழங்குகிறார்:

காய்ச்சல், உடல் முழுவதும் தாங்க முடியாத அரிப்பு, பெருங்குடலில் தொடர் வலி, பாதங்களில் வீக்கம், அடிவயிற்றில் வீக்கம், புழுக்கள் நிறைந்த பிறப்புறுப்புகளில் குடலிறக்கம் என அவரது உடல் முழுவதும் நோய் தீவிரமாகப் பரவியது. அவன் சுவாசிப்பதற்கு மிகவும் கஷ்டப் பட்டான். குறிப்பாக அவர் படுத்திருந்த போதும் கூட பிடிப்புகள் ஒவ்வொரு மூட்டுகளையும் குடைந்தெடுத்தது – தெய்வீக நிபுணர்களின் கூற்றுப்படி, இவை யாவும் தண்டனைகள். இருப்பினும், அவனது உடம்பில் உயிர் ஒட்டிக்கொண்டிருந்தபடியால், குணமடைவான் என்ற நம்பிக்கையில் தனது சொந்த சிகிச்சையைத் தொடங்கினான். அவன் ஜோர்டானைக் கடந்து, கலிரோஹ் நதியில் சூடான குளியல் எடுத்தான். அந்த கலிரோஹ் நதி செங்கடலில் கலக்கிறது. இருப்பினும் அவை இனிமையாகவும் பருகுவதற்கு ஏற்றதாகவும் இருக்கும்.

illustration 7: செங்கடலுக்கு வடகிழக்கு கரைக்கு அருகில் உள்ள கலிரோஹ் பகுதியில் அமைந்துள்ள சூடான நீரூற்றுகளில் ஒரு நீராவி நீர்வீழ்ச்சியே இங்கே படத்தில் காட்டப்பட்டுள்ளது. இங்கு தான் ஏரோது மாமன்னன் தனது கொடிய நோயைக் குணப்படுத்த குளியலை மேற்கொண்டான். A steaming waterfall at the hot springs of Callirrhoe, the spa near the northeastern shore of the dead sea, where Herod the great tried to cure his fatal illness

அங்குள்ள மருத்துவர்கள் அவனை சூடான எண்ணெய் தொட்டியில் இறக்கி அவனது உடலை சூடேற்ற முடிவு செய்தனர். அதனால் அவன் மயக்கமடைந்தான். இறந்துவிடுவது போல் அவனது கண்கள் செருகின. அவனருகில் இருந்த பணிப்பெண்கள் அவனது மார்பில் தட்டிய சத்தம் அவனுக்கு புத்துயிர் அளித்தது. எனினும் அவன் குணமடைவான் என்ற நம்பிக்கையை இழந்தபடியால், ஐம்பது கிரேக்க நாணயங்களை தனது ஒவ்வொரு சிப்பாய்க்கு வழங்கவும், அதிகாரிகள் மற்றும் நண்பர்களுக்கு பெரிய தொகைகளை வழங்கவும் உத்தரவிட்டான்.

தீவிர மன அழுத்தத்துடன் ஜெரிகோவுக்குத் திரும்பிய அவன், இறுதியாக, ஒரு கொடூரமான குற்றத்தை இழைக்கத் திட்டமிட்டான். அவன் யூதேயா முழுவதிலும் உள்ள ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் மிகவும் புகழ்பெற்ற மனிதர்களைக் கூட்டி, அவர்களை நீர்யானைகள் அடைத்து வைக்கப்படும் சுனைக்குள் அடைத்து வைத்தான். பின்னர் அவன் தனது சகோதரி சலோமி மற்றும் அவளது கணவன் அலெக்ஸாஸ் ஆகியோரிடம் பின்வருமாறு கூறினான்: “யூதர்கள் என் மரணத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் பிறருக்காக துக்கம் அனுசரிக்க முடியும். ஆகவே நான் சொன்னபடி நீங்கள் செய்தால், ஒரு ஆடம்பரமான இறுதிச் சடங்கை நடத்தலாம். நீர்யானை சுனைகளில் அடைத்து வைக்கப்பட்டிருப்போரைச் சுற்றி போர் வீரர்களை காவலுக்கு நிறுத்துங்கள். நான் இறக்கும் தருணம் நெருங்கும் போது, அவர்கள் அனைவரையும் உடனடியாகக் கொன்றுவிடுங்கள். அதன் காரணமாக, யூதேயாவில் உள்ள அனைவரும், எல்லா வீடுகளும் என் மரணத்தை நினைத்து அழுவார்கள்” என்று கூறினான்.

பின்னர், பசி மற்றும் வலிப்பு, இருமல் ஆகியவற்றால் கொடிய சித்திரவதைகளை அனுபவித்த அவன், தனது தலைவிதியை நிர்ணயிக்க முயன்றான். ஒரு ஆப்பிளை எடுத்து அதனை வெட்ட கத்தியைக் கேட்டான் – ஆப்பிள்களை வெட்டி உண்பது போல பாசாங்கு செய்து, தன்னைத் தானே குத்திக்கொண்டு தற்கொலை செய்வதற்கு முயன்றான். ஆனால் அதற்காக அவன் தனது வலது கையை உயர்த்திய போதும் [ஆனால் தடுக்கப்பட்ட காரணத்தால்] அவனது முயற்சி நிறைவேறவில்லை.

Illustration 8: ஜெரிகோவில் உள்ள ஏரோதுடைய குளிர்கால அரண்மனையில் புதிதாக தோண்டப்பட்ட ஒரு குளத்தின் இடிபாடுகளை படத்தில் காணலாம். அங்கு ஏரோது கி.மு. 4 இல் இறந்தான். நடுவில் காணப்படும் “ஓபஸ் ரெக்டிகுலேட்டம்” என்று அழைக்கப்படும் “வலை” பாணியில் ஆன சிற்பக்கலை உரோம கட்டிடக்கலையின் சிறப்பம்சத்தை காட்டுகிறது. Newly excavated ruins of a pool in Herod’s winter palace in Jericho, where he died in 4 B.C. at the centre is the “net” styled Roman masonry called ‘opus reticulatum’

அவன் இறப்பதற்கு முன்பு, ஏரோது ஏற்கனவே கொலை செய்யப்பட்ட இருவரைத் தவிர, தனது சட்டப்பூர்வ மகன்மாரில் மூன்றில் ஒரு பகுதியினரை [ஆன்டிபேட்டர்] தூக்கிலிட உத்தரவிட்டான் என்றும் ஜோசபஸ் கூறுகிறார். பெத்லகேம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அவன் கொலை செய்த குழந்தைகளுக்கு நியாயமான தண்டனையாக ஏரோதின் முடிவு இப்படி இருந்தது. இதற்குப் பிறகு, யோசேப்பு எகிப்தில் இருந்தபோது ஒரு தேவ தூதன் அவரது கனவில் தோன்றி, குழந்தை மற்றும் அவரது தாயுடன் யூதேயாவுக்குத் திரும்பும்படி கட்டளையிட்டார். சிறு குழந்தையின் உயிரை எடுக்கத் தேடுபவர்கள் இறந்துவிட்டார்கள் என்று அறிவித்தார். நற்செய்தியாளர் மேலும் தொடர்கிறார்: “ஆனால், அர்கிலேயுஸ் தனது தந்தை ஏரோதுக்குப் பதிலாக யூதேயாவை ஆட்சி செய்கிறார் என்று கேள்விப்பட்டபோது, அவர் அங்கு செல்ல பயந்தார். கனவில் எச்சரிக்கப்பட்ட பிறகு, அவர் கலிலேயா மாவட்டத்திற்குச் சென்றார்” [மத்தேயு 2:22].

பிலாத்துவும் துறவிகளும்

9. ஏரோதின் விருப்பம் மற்றும் அகஸ்டஸின் முடிவின்படி ஆர்கெலாஸின் வாரிசை ஜோசபஸ் உறுதிப்படுத்துகிறார். மேலும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அதிகாரத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட போது, அவரது சகோதரர்கள் பிலிப் மற்றும் இளைய ஏரோது [ஆண்டிபாஸ்], லிசானியாஸுடன் சேர்ந்து, தத்தம் ஆட்சி வரம்புகளுக்குப் பொறுப்பாக இருந்து எவ்வாறு ஆட்சி செய்தார்கள் என்பது பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அகஸ்டஸின் ஐம்பத்தேழு ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு அரியணைக்கு வந்த திபேரியஸின் பன்னிரண்டாம் ஆண்டு நிறைவின் போது, யூதேயாவின் நிர்வாகம் போஞ்சியு பிலாத்துவுக்கு வழங்கப் பட்டது என்றும், பிலாத்து தொடர்ந்து ஆட்சியில் இருந்ததாகவும் அவரது பழமைச் சின்னங்கள் பற்றிய புத்தகம் 18 இல் எழுதுதியுள்ளார். திபேரியஸ் இறக்கும் வரை, கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் பதவியில் இருந்தார். சமீபத்தில் வெளியிடப்பட்ட பிலாத்துவின் சட்டங்கள் 14 போலியானவை என்பதை இது தெளிவாக நிரூபிக்கிறது. ஏனெனில் இரட்சகரின் மரணம் திபேரியஸின் நான்காவது ஆட்சியதிகாரத்தின் போது தான் நடந்தது என்று அவர்கள் கூறுகிறார்கள். இது திபேரியஸின் ஆட்சியின் ஏழாவது ஆண்டு என்றிருக்கும் போது, அந்த சமயம் பிலாத்து இன்னும் யூதேயாவின் ஆட்சியை பொறுப்பேற்கவில்லை. ஜோசபஸ் கூற்றுப்படி தனது ஆட்சியின் பன்னிரண்டாம் ஆண்டில் தான் யூதேயாவின் ஆட்சி அதிகாரத்தில் பிலாத்துவை நியமித்தார் என்று தெளிவாகக் கூறுகிறார்.

10. சுவிசேஷகரின் [லூக்கா] கூற்றுப்படி, திபேரியஸ் சீசர் தனது ஆட்சியின் பதினைந்தாம் ஆண்டிலும், போஞ்சியு பிலாத்து தனது ஆளுநர் பதவியின் நான்காவது ஆண்டிலும் இருந்தபோதும், எரோது, லைசனியாஸ் மற்றும் பிலிப்பு ஆகியோர் யூதேயாவின் எஞ்சிய ஆட்சி வரம்புகளுக்குப் பொறுப்பாளர்களாக இருந்தபோதும், நமது இரட்சகர் மற்றும் ஆண்டவர், தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து – [அவரது ஊழியத்தின்] ஆரம்பத்தில் சுமார் முப்பது வயது இருக்கும் போது – யோவானின் மூலமாக ஞானஸ்நானம் வழங்கப்பட்டு, நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கினார்.

Illustration 9: போஞ்சியு பிலாத்து C. யினால் கி.பி. 30 இல் அச்சிடப்பட்ட வெண்கல நாணயம். இடதுபுறத்தில் காணப்படும் நாணயத்தில் லிட்டூஸ் எனப்படும் ஒரு வடிவம் உள்ளது. வளைந்த தடியானது முன்னரே அறிவிக்கப்பட்ட உரோம பேரரசின் முதன்மையான அரசியல் அதிகாரத்தைக் குறிக்கிறது. அதன் விளிம்பில் உள்ள எழுத்து “திபேரியஸ் சீசர்” என்ற பதத்தின் கிரேக்க TIBERIOU KAISAROS மொழிபெயர்ப்பாகும். கிறிஸ்தவ ஆயர்கள் பிற்காலத்தில் ஆயர் உபயோகிக்கும் செங்கோலை அல்லது கைத்தடிகளை தங்கள் அதிகாரத்தின் சின்னங்களாகப் பயன்படுத்துவார்கள்.

A bronze coin minted by Pontius Pilate c. in A.D. 30. The obverse to the left features a lituus, the curving staff symbolizing the priestly-political office of the Roma augur, while the lettering in the rim is Greek TIBERIOU KAISAROS “of Tiberius Caesar.” Christian bishops would later use the bishop’s staff or crosier as symbols of their authority.

அன்னாஸ் மற்றும் கைப்பாஸ் போன்றோரின் பிரதான ஆசாரியத்துவத்தின் கீழ் அவர் தனது போதனையை நிறைவு செய்தார் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. இதன் மூலம் அன்னாசின் கீழ் தனது பணியைத் தொடங்கி, கைப்பாஸ் வரை தொடர்ந்தார். இது நான்கு முழுமையான ஆண்டுகளைக் கொண்டிருக்கவில்லை. சட்டத்தின்படி, பரம்பரைப் பாதிரியார்களுக்கான கால வரையறை இப்போது இல்லை. ஏனெனில் உரோமைய ஆளுநர்களில் ஒருவருக்கு முதன்மை ஆசாரியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. பின்னர் மற்றொருவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த பதவியை எவரும் வகிக்கவில்லை. அவர் வாழ்ந்த பண்டைய காலங்களில் ஜோசபஸ் அவர்களின் கூற்றுப்படி, அன்னாஸ் மற்றும் கைப்பாஸ் ஆகியோருக்கு இடையே அடுத்தடுத்து நான்கு பிரதான ஆசாரியர்கள் பதவி வகித்ததாக வரலாற்றுப் பதிவுகள் காணப்படுகின்றன.

வலேரியஸ் கிராடுஸ், அனானுஸை [அன்னாஸ்] ஆசாரியத்துவத்தில் இருந்து அகற்றி, பாபியின் மகனான இஸ்மாயலை தலைமைக் குருவாக நியமித்தார். விரைவில் அவர் அவரையும் அகற்றி, அனனஸின் மகன் எலியாசர் என்பவனை பிரதான ஆசாரியராக பெயரிட்டார். ஒரு வருடத்திற்குப் பிறகு, அவர் எலியாசர் என்பவனையும் நீக்கிவிட்டு, காமித்தஸின் மகன் சைமனுக்கு தலைமை ஆசாரியத்துவத்தை மாற்றினார். அவரது பதவிக்காலம் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடிக்கவில்லை, மேலும் காய்பாஸ் என்று அழைக்கப்படும் ஜோசப் அவருக்குப் பின் தலைமைப் பொறுப்பேற்றவர்.

அன்னாஸ் தொடக்கம் கைப்பாஸ் வரை நான்கு ஆண்டுகளில் நான்கு பிரதான ஆசாரியர்கள் ஒவ்வொரு வருட காலம் மட்டுமே பதவி வகித்ததால், நமது இரட்சகரின் போதனையின் முழு காலமும் நான்கு ஆண்டுகள் கூட இல்லை. இயற்கையாகவே, எம் இரட்சகரின் உச்சகட்ட போதனைகள் செய்ததாக கூறப்படும் ஆண்டில் கைபாசை பிரதான ஆசாரியராக நற்செய்தி பெயரிட்டது. எனவே கிறிஸ்துவின் போதனையின் காலம் இந்த ஆதாரத்துடன் ஒத்துப்போகிறது.

நம்முடைய இரட்சகரும், எம் ஆண்டவரும் தம்முடைய பிரசங்கத்தைத் தொடங்கிய சிறிது காலத்துக்குள்ளேயே பன்னிரண்டு சீடர்களை அவரோடு இணைத்துக்கொண்டார் – தம்முடைய எல்லா சீடர்களுக்கும் அவர் அப்போஸ்தலர் என்ற கௌரவப் பெயரை ஒரு சிறப்பு சலுகையாக மட்டுமே வழங்கினார் – மேலும் எழுபது பேரை நியமித்தார். அந்த எழுபது பேரையும் அவர் போகத் திட்டமிட்டிருந்த ஒவ்வொரு ஊருக்கும் அல்லது இடங்களுக்கும் முன்கூட்டியே அனுப்பி வைத்தார்.

Illustration 10: 1990 இல் ஜெருசலேம் பழைய நகரத்தின் தென் சரிவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சுண்ணக்கல் பேழையில் ஜோசப் கயபாஸ் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது இங்கே படத்தில் காட்டப்பட்டுள்ளது. இந்த மிகச்சிறப்பாக செதுக்கப்பட்ட பேழையில் காணப்படும் இரண்டு பெரிய வட்டங்களுக்கு மத்தியில் உள்ள மலர் வடிவான அமைப்பைச் சுற்றி ஐந்து வட்ட வடிவ மலர் வடிவ செதுக்கல்கள் காணப்படுகின்றன. இதில் போஞ்சியு பிலாத்துவுக்கு முன் இயேசுவின் மீது குற்றம் சாட்டிய யூத பிரதான பாதிரியாரின் எச்சங்கள் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. (பட உதவி: காரோ நலபண்டியான்).

A limestone ossuary, discovered on the slope south of the old city of Jerusalem in 1990 is inscribed with the name of Joseph Caiaphas. Five whorl rosettes surround a centre rosette inside the two great circles of this superbly carved bone chest, which probably contained the remains of the Jewish high priest who indicted Jesus before Pontius Pilate. (Courtesy Garo Nalbandian).

ஸ்நாபக யோவான் மற்றும் இயேசு

11. அதன் பிறகு, ஸ்நாபக யோவான் இளைய ஏரோதுவால் [ஆண்டிபாஸ்] தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்று நற்செய்தியிலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம் [மாற்கு 6:14 – 29]. ஜோசஃபஸ் இந்த நற்செய்தி விவரத்தை உறுதிப்படுத்துகிறார், ஹெரோடியாஸின் பெயரைக் குறிப்பிட்டு, ஏரோது தனது சகோதரனின் மனைவியாக இருந்தபோதிலும், அவன் உயிருடன் இருக்கும் போதே அவளை எப்படி மணந்தார் என்பதைச் சொல்லியுள்ளார். மேலும் பெட்ராவின் மன்னன் அரேடாஸின் [IV] மகளான தனது சொந்த சட்டபூர்வமான மனைவியை விலக்கிவிட்டு தனது சகோதரனின் மனைவியை திருமணம் செய்தார். அவளைப் பிரியப்படுத்த, அவன் ஸ்நாபக யோவானைக் கொன்றுவிட்டு, அவனது முன்னாள் மனைவியின் தந்தையான அரேட்டாஸுடன் போருக்குத் தயாரானான். அதன் மூலம் அவருடைய மகளை அவன் அவமதித்தான். ஸ்நாபக யோவானுக்கு எதிராக செய்யப்பட்ட கொடுமைக்கு பழிவாங்கும் விதமாக ஏரோதின் முழு இராணுவமும் போரில் அழிக்கப்பட்டதாக ஜோசபஸ் கூறுகிறார். அதே ஜோசபஸ், ஸ்நாபக யோவான் நீதியுள்ளவர் என்றும் ஞானஸ்நானம் கொடுப்பவர் என்றும் ஒப்புக்கொள்கிறார். அவரைப் பற்றிய இந்த விளக்கம் நற்செய்திகளில் உறுதிப்படுத்துகிறது. அதே ஹெரோடியாஸ் காரணமாக ஏரோது தனது அரச பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டதாகவும், அவளுடன் வியென்னேவின் கவுல் நகரத்திற்கு நாடுகடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவிக்கிறார். இந்த கதை பழமைச் சின்னங்கள் சம்பந்தமான புத்தகம் 18 இல் காணக்கூடியதாக இருக்கிறது. அங்கு அவர் ஸ்நாபக யோவானைப் பற்றி பின்வருமாறு எழுதுகிறார்:

அதன் பின், சில யூதர்களுக்கு, ஏரோதின் படை சந்தித்த அழிவு, ஸ்நாபக யோவான் என்று அழைக்கப்பட்ட யோவானுக்கு அவன் செய்த கொடுமைகளுக்கு கடவுளிடமிருந்து கிடைத்த ஒரு தண்டனையாக,  அதுவும் நியாயமான தண்டனையாகவே தோன்றியது. யோவான் ஒரு நல்ல மனிதர் என்பதை அறிந்திருந்தும் ஏரோது அவரை தூக்கிலிட்டான். மேலும் யூதர்கள் தங்கள் மத்தியில் ஒருவருக்கொருவர் நீதியை கடைப்பிடிப்பதிலும், கடவுளிடம் பக்தி கொள்வதிலும், நல்லொழுக்கத்தை கடைப்பிடித்தலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், ஞானஸ்நானம் பெற்றிட வேண்டும் என்றும் யோவான் அறிவுறுத்தினார். ஆகவே, உடலைச் சுத்திகரிப்பதற்காக அவர்கள் செய்த பாவங்களுக்கு மன்னிப்பைப் பெறாமல், ஞானஸ்நானம் மூலம் கழுவுவது ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதாக இருக்கும் என்று அவருக்குத் தோன்றியது. இது  நேர்மையான நடத்தையால் ஆன்மா ஏற்கனவே முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கிறது. மற்றவர்களும் அவரைப் பற்றிக் கேள்வியுற்று கூட்டத்துடன் சேர்ந்தபோது – அவருடைய வார்த்தைகளைக் கேட்டு அவர்கள் மிகவும் மனத்தைரியம் கொண்டவர்களா மாற்றமடைந்த போது – ஏரோது பயந்தான்: மக்கள் மீது இவ்வளவு பெரிய செல்வாக்கு செலுத்தும் யோவானால் எழுச்சி ஒன்றுக்கு வழி ஏற்படலாம். ஏனென்றால் அவர்கள் யோவான் தனது போதனை மூலம் அறிவுறுத்தும் எதையும் செய்யத் தயாராக இருப்பதாகத் தோன்றியது. அதன்படி, ஏரோது தான் சிக்கலில் மாட்டிக் கொள்வதை விட, கிளர்ச்சி தொடங்கியவுடன் அதை மேலும் வளர விட்டு, பின்னர் அதைக்குறித்து வருந்துவதை விட, அவ்வாறான கிளர்ச்சி உருவாகும் முன் அதை ஒடுக்குவதோடு, அதற்கு காரண கர்த்தாவாக இருக்கும் யோவானை அழித்து விடுவது மிகவும் நல்லது என்று முடிவு செய்தான். எனவே, ஏரோதின் சந்தேகத்தின் காரணமாக, யோவான் நாம் முன்பு குறிப்பிட்ட கோட்டையான மக்கேரஸுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே சங்கிலியால் பிணைக்கப்பட்டு, அங்கேயே கொல்லப்பட்டார்.

Illustration 11: செங்கடலின் கரைக்கு அருகிலுள்ள மகெரெயுஸ் கோட்டை-அரண்மனை இங்குள்ள குன்றின் உச்சியில் காணப்படுவதை படத்தில் காணலாம். ஜோசபஸின் கூற்றுப்படி, ஏரோது ஆன்டிபாஸ் ஸ்நாபக யோவானை இங்கே தான் தூக்கிலிட்டான் என்று கூறப்படுகிறது.

The fortress-palace of Machaerus crowned the summit of this mound near the shore of the dead sea. Herod Antipas executed John the Baptist here, according to Josephus.

யோவானைப் பற்றிக் கூறும்போது, அதே வரலாற்றுப் படைப்பில் நமது இரட்சகரைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்:

இக்காலப்பகுதியில் தான் இயேசு என்ற ஒரு ஞானி, வாழ்ந்தார்.  உண்மையில் அவரை ஒரு மனிதன் என்று தான் அழைக்க வேண்டும்.  ஏனென்றால், அவர் அசாதாரணமான செயல்களைச் செய்தவர் மற்றும் சத்தியத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்பவர்களுக்கு ஆசிரியராக இருந்தார். அவர் பல யூதர்களினதும், கிரேக்கர்களினதும் மனங்களை  வென்றார். அவர் தான் மெசியா. எங்கள் மத்தியில் இருந்த முக்கிய மனிதர்களால் அவர் குற்றஞ்சாட்டப்பட்டு, பிலாத்து என்பவன் அவரை சிலுவையில் அறையும்படி கண்டனம் செய்தபோது, முதலில் அவரை நேசிக்க வந்தவர்கள் அவ்வாறு செய்வதை நிறுத்தவில்லை; ஏனென்றால், கடவுளின் தீர்க்கதரிசிகள் அவரைப் பற்றிய எண்ணற்ற அற்புதமான விஷயங்களை முன்னறிவித்த காரணத்தால், அவர் உயிர்த்தெழுந்த மூன்றாம் நாளில் அவர்களுக்குத் தரிசனம் அருளினார். மேலும் அவரது பெயரால் அழைக்கப்பட்ட கிறிஸ்தவ பழங்குடியினர் இன்றுவரை மறைந்துவிடவில்லை, இன்றும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

எபிரேயரான ஒரு சரித்திராசிரியர், ஸ்நாபக யோவான் மற்றும் நமது இரட்சகரைப் பற்றிய இந்த ஆதாரத்தை தனது சொந்த எழுத்தில் வடித்தபோது, அவர்களைப் பற்றிய சட்டங்களை போலியாக இயற்றியவர்களின் வெட்கமற்ற செயல்களைக் கண்டிப்பதைத் தவிர வேறு என்ன இருக்கிறது என்று வினவுகிறார்.

இயேசுவின் சீடர்கள்

12. அக்காலத்தில் வாழ்ந்த பன்னிரெண்டு அப்போஸ்தலர்களின் பெயர்கள் நற்செய்திகளின் வழியாக அனைவருக்கும் தெளிவாகத் தெரியும். ஆனால் எழுபது சீடர்களின் பட்டியல் எங்கும் எஞ்சியிருக்கவில்லை. எவ்வாறாயினும், அவர்களில் ஒருவரான பர்னபாஸ், அப்போஸ்தலர் நடவடிக்கைகளில் மேற்கோள் காட்டப்பட்டதாகவும், பவுல் கலாத்தியருக்கு எழுதிய சுவிசேஷத்தில் குறிப்பிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது [2:1, 9, 13]. அவர்களில் மற்றொருவர் சொஸ்தெனஸ் என்று கூறுகிறார்கள். அவர் பவுலுடன் இணைந்து கொரிந்தியர்களுக்கு எழுதினார் [1 கொரிந்தியர் 1:1]. அதன் பின், கிளெமென்ட் (விளக்கவுரை புத்தகம் 5) பற்றிய விரிவாக்கம் உள்ளது. அவரைப் பற்றி பவுல் இவ்வாறு கூறுகிறார், “சேபா அந்தியோக்கியாவுக்கு வந்தபோது, நான் அவரை முகத்துக்கு நேராக எதிர்த்தேன்” [ கலாத்தியர் 2:11] எழுபது பேரில் ஒருவர், அவர் அப்போஸ்தலரான பேதுரு என்பவற்றின் அதே பெயரைக் கொண்டிருந்தார். அப்போஸ்தலர்களின் பட்டியலில் யூதாஸின் இடத்தைப் பிடித்த மத்தியாஸும், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருடன் கௌரவிக்கப்பட்ட ஜஸ்டஸ் என்பவனாவான். [அப்போஸ்தலர் பணிகள் 1:23] இவன் பாரம்பரியத்தின்படி எழுபது பேரில் ஒருவனாகக் காணக்கிடப்பட்டான். ததேயுஸ் அவர்களில் அவர்களில் ஒருவர் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். அவரைப் பற்றி ஒரு கதை என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது, அதை நான் விரைவில் கூறுவேன்.

இந்த எழுபது பேரை விட இரட்சகரின் சீடர்களாக இருந்தோர் மிக  அதிகம். அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, இயேசுவை முதலில் சேஃபாவும், பின்னர் பன்னிரண்டு பேரும், பின்னர் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர்களும் ஒரே நேரத்தில் கண்டதாக பவுல் கூறுகிறார். அவர்களில் சிலர் மறுத்துவிட்டனர். ஆனால் பெரும்பான்மையானவர்கள் அவர் எழுதிய நேரம் உயிருடன் இருந்தனர். அவர் மேலும் இவ்வாறு கூறுகிறார். அவர் இரட்சகரின் சகோதரர்களில் ஒருவராக கூறப்பட்ட ஜேம்ஸ் என்பவரும் அடங்குவார். இறுதியாக, பவுலைப் போலவே “அனைத்து அப்போஸ்தலர்களாலும்”, பன்னிரண்டு பேர் மூலமாக ஒரு பாரிய எண்ணிக்கை வடிவமைக்கப்பட்டது.

ததேயுஸ் மற்றும் எடெஸாவின் இளவரசர்

13. அவருடைய அற்புத சக்திகளின் காரணமாக, கிறிஸ்துவின் தெய்வீகம் எல்லா இடங்களிலும் பரந்து ஒலித்தது. யூதேயா போன்ற தொலைதூர நாடுகளில் இருந்த எண்ணற்றோர் எல்லா வகையான நோய்களிலிருந்தும் குணமடைவோம் என்ற நம்பிக்கையில் அவரிடம் வந்தனர். இவ்வாறு, யூப்ரடீஸுக்கு அப்பால் உள்ள மக்களின் புகழ்பெற்ற ஆட்சியாளரான அப்கார் [V], தீராத நோயால் மிகவும் அவதிப்பட்டு, இயேசுவின் பெயரையும் அவரது அற்புதங்களையும் அடிக்கடி கேள்வியுற்ற போது, ​​அவருக்கு கடிதம் கொண்டுபோகும் ஒரு தூதுவர் மூலம் அவரது நோய்க்கு  நிவாரணம் வேண்டி ஒரு கோரிக்கையை அனுப்பினார். அந்த நேரத்தில் இயேசு அவருடைய கோரிக்கையை ஏற்கவில்லை, ஆனால் தனிப்பட்ட கடிதம் மூலம் அவருக்கு சாதகமாக பதில் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில் நோயைக் குணப்படுத்தவும், அவருக்கும் அவரது உறவினர்களுக்கும் இரட்சிப்பைக் கொண்டுவருவதற்கு அவருடைய சீடர்களில் ஒருவரை அனுப்புவதாக உறுதியளித்தார்.

வாக்குறுதி விரைவில் நிறைவேற்றப்பட்டது. அவருடைய [இயேசுவின்] உயிர்த்தெழுதல் மற்றும் விண்ணேற்றத்திற்குப் பிறகு, பன்னிருவரில் ஒருவரான தோமையார், எழுபது பேர்களில் ஒருவரான ததேயுஸை தெய்வீக தூண்டுதலால் எடெசாவுக்கு பிரசங்கியாகவும் சுவிசேஷகராகவும் அனுப்ப உடன்பட்டதன் வாயிலாக நம் இரட்சகரின் வாக்குறுதியின் அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றினார். அப்போதைய அரச தலைநகரான எடெசாவில் உள்ள ஆவணக் காப்பகங்களில் இருந்து இதற்கு எழுத்துப்பூர்வ ஆதாரம் உள்ளது. இதில் பண்டைய வரலாறு மற்றும் அப்கார் காலத்தில் நடந்த நிகழ்வுகள் உள்ளன. காப்பகங்களிலிருந்து நான் பிரித்தெடுத்து, சிரியாக் மொழியில் இருந்து வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்த கடிதங்கள் இங்கே தரப்பட்டுள்ளன:

அபகார் இயேசுவுக்கு எழுதிய கடிதத்தின் நகல், அனனியாஸ் என்ற  கடிதம் கொண்டுபோகும் ஒரு தூதுவர் மூலம் ஜெருசலேமில் வாசம் செய்யும் கிறீஸ்துவானவருக்கு அனுப்பப்பட்டது:

குறுநில மன்னனாகிய அப்கார் உசாமாவாகிய நான், எனது வாழ்த்துக்களுடன் எருசலேம் பகுதியில் அவதரித்த சிறந்த இரட்சகராகிய இயேசுவுக்கு எழுதும் கடிதம்,

மருந்துகள் மற்றும் மூலிகைகள் இல்லாமல் நீங்கள் செய்யும் அற்புத சிகிச்சைகள் மற்றும் உங்களைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் பார்வையிழந்தோருக்கு பார்வையையும், ஊனமுற்றவர்களை நடக்கவும் செய்கிறீர்கள். நீங்கள் தொழுநோயாளிகளைக் குணப்படுத்துகிறீர்கள், அசுத்த ஆவிகள் மற்றும் பிசாசுகளைத் துரத்துகிறீர்கள், நாட்பட்ட நோயால் துன்புறுபவர்களைக் குணப்படுத்தி இறந்தவர்களை உயிர்த்தெழச் செய்கிறீர்கள் என்று வார்த்தை கூறுகிறது. உங்களைப் பற்றிய இந்த எல்லா விஷயங்களையும் நான் கேட்டபோது, இரண்டில் ஒன்று உண்மை என்று நான் முடிவு செய்தேன்: ஒன்று நீங்கள் கடவுள், இவற்றைச் செய்ய பரலோகத்தில் இருந்து இறங்கி வந்தீர்கள். மற்றையது நீங்கள் அவற்றைச் செய்ததற்காக கடவுளின் மகன் எனப் போற்றப்படுகிறீர்கள். இந்த காரணமாக, நீங்கள் என்னிடம் வந்து என் துன்பத்தை குணமாக்கும் சிரமத்தை தயவு செய்து மேற்கொள்ளுமாறு   கேட்டுக்கொள்கிறேன். யூதர்கள் உங்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்து உங்களுக்கு தீங்கு செய்ய சதி செய்கிறார்கள் என்றும் கேள்விப்பட்டேன். ஆனால் எனது நகரம் – மாநிலம் மிகவும் சிறியது, ஆனால் உயர்வாகக் கருதப்படுகிறது மற்றும் எங்கள் இருவரையும் தாராளமாக ஏற்றுக்கொள்ளக்கூடியது.

(அவர் மீது தெய்வீக ஒளி பிரகாசிக்கத் தொடங்கியபோது அவர் இந்த கடிதத்தை எழுதினார். அதே கடிதம் தாங்கிய தூதுவர் மூலம் இயேசு அவருக்கு அனுப்பிய கடிதத்தையும் வாசித்தறிவது பொருத்தமானது. இது ஒரு சில வரிகள் மட்டுமே உடையது, ஆனால் மிகவும் சக்தி வாய்ந்தது)

கடிதம் தாங்கிய தூதுவர் அனனியாஸ் மூலமாக குறுநில மன்னனாகிய  அப்காருக்கு இயேசு அளித்த பதில் இதோ:

என்னைக் காணாமல் என்னை விசுவாசிக்க நீர் பாக்கியவான்! ஏனென்றால், என்னைக் கண்டவர்கள் என்னை நம்ப மாட்டார்கள் என்றும், காணாதவர்கள் என்னை விசுவாசித்து வாழ்வார்கள் என்றும் எழுதியிருக்கிறது. இப்போது நான் உம்மிடம் வரவேண்டும் என்ற உமது வேண்டுகோளைப் பொறுத்தவரை, நான் இங்கு அனுப்பப்பட்ட அனைத்தையும் முதலில் முடிக்க வேண்டும். அது முடிந்ததும், என்னை அனுப்பியவரிடமே எடுத்துச் செல்ல வேண்டும். நான் எடுத்துக் கொள்ளப்பட்டதும், உமது துன்பங்களைக் குணப்படுத்தி, உமக்கு வாழ்வளிக்க என் சீடர்களில் ஒருவரை அனுப்புவேன்.

சிரியாக் மொழியில் இந்த கடிதங்களுடன் பின்வருபவை இணைக்கப் பட்டுள்ளன.

இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு, தோமஸ் என்றும் அழைக்கப்படும் யூதா என்ற, எழுபதுகளில் ஒருவரான ததேயுஸை [அப்கார் இடம்] அனுப்பினார். மேலும் அவர் டோபியாஸின் மகன் தோபியாவுடன் தங்கினார். ததேயுஸ் ஒவ்வொரு நோயையும் பலவீனத்தையும் குணப்படுத்துகிறார் என்று அப்கார் கேள்விப்பட்ட போது, ​​இயேசு அவரைப் பற்றித்தான் எழுதி இருந்தார் என்று சந்தேகித்தார். எனவே, ததேயுஸை தன்னிடம் கொண்டு வரும்படி டோபியாஸுக்கு உத்தரவிட்டார். எனவே டோபியாஸ் ததேயுஸிடம், “நீங்கள் அவரைக் குணமாக்குவதற்காக உங்களை அவரிடம் அழைத்து வரும்படி குறுநில மன்னன் அப்கார் எனக்கு அறிவுறுத்தினார்” என்று கூறினார். ததேயுஸ், “நான் அதிகாரத்துடன் அவரிடம் அனுப்பப் பட்டதால் நான் செல்கிறேன்” என்று பதிலளித்தார்.

தோபியாஸ் மறுநாள் அதிகாலையில் எழுந்து, தனது பிரபுக்களால் சூழப்பட்டிருந்த அப்காரைப் பார்க்க ததேயுஸை அழைத்துச் சென்றார். அவர்கள் வந்தபோது, அப்கார் ததேயுஸின் முகத்தில் ஒரு அற்புதமான தேஜஸைக் கண்டு, அவரை வணங்கி, “நீங்கள் உண்மையிலேயே கடவுளின் குமாரனாகிய இயேசுவின் சீடரா? என்று வினவி, ‘என் சீடர்களில் ஒருவரை நான் உம்மிடம் அனுப்புகிறேன். அவர் உம்மைக் குணமாக்கி உமக்கு வாழ்வளிப்பார் என்று எனக்கு எழுதி இருந்தார்” என்று கூறினான்.

“ஆம், இந்த காரணத்திற்காக நான் உங்களிடம் அனுப்பப்பட்டேன்,” என்று ததேயுஸ் பதிலளித்தார். “நீங்கள் அவரை நம்பினால், உங்கள் பிரார்த்தனைகளுக்கு உங்கள் விசுவாசத்தின் அடிப்படையில் பதிலளிக்கப்படும்.”

“நான் அவரை மிகவும் உறுதியாக நம்பினேன், உரோமைய சக்தியால் நான் தடுக்கப்பட்டிருக்காவிட்டால், நான் ஒரு இராணுவத்தை தயார் செய்து அவரை சிலுவையில் அறைந்த யூதர்களை அழிக்க முயன்றிருப்பேன்.”

“நம்முடைய கர்த்தர் அவருடைய பிதாவின் சித்தத்தை நிறைவேற்றிவிட்டார்” என்று ததேயுஸ் கூறினார். “அதை நிறைவேற்றிய பிறகு, அவர் தந்தையிடம் எடுத்துக்கொள்ளப்பட்டார்.”

“நானும் அவர் மீதும் அவருடைய தந்தை மீதும் நம்பிக்கை வைத்துள்ளேன்.”

“இந்த காரணத்திற்காக நான் அவரது திருநாமத்தால் என் கையை உங்கள் மீது வைக்கிறேன்.”

அவர் இதைச் செய்தபோது, ​​அப்கார் உடனடியாக குணமடைந்தார் –  மருந்துகள் மற்றும் மூலிகைகள் இல்லாமல், இயேசுவின் குணப்படுத்துதல்களைப் போலவே அவரும் குணப்படுத்தப்பட்டார். அப்துஸின் மகனான அப்துஸ், ததேயுஸின் காலில் விழுந்து, அவருக்கு ஏற்பட்டிருந்த பக்கவாதத்திலிருந்தும் இதேபோல் குணமடைந்தார். அதே நேரத்தில் அவர்களது சக குடிமக்கள் பலர் அங்கே வந்து குணமடைந்தனர். அப்கார், இயேசுவைப் பற்றிய மென்மேலும் தகவல்களைத் ததேயுசிடமிருந்து கேட்டறிந்து கொண்டார்.

ததேயுஸ் பின்வருமாறு பதிலளித்தார்: “தயவுசெய்து உங்கள் குடிமக்கள் அனைவரையும் நாளை ஒன்றுகூட்டுங்கள். இயேசுவின் வருகை மற்றும் அவரது பணி, அவரை அனுப்பிய தந்தையின் நோக்கம், அவருடைய செயல்கள் மற்றும் சக்தி மற்றும் பிரசங்கம் பற்றி, அவருடைய தெய்வீகத்தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டிய அவரது பணிவு பற்றி நான் அவர்களிடம் கூறுகிறேன். மற்றும் அவர் எப்படி சிலுவையில் அறையப்பட்டு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பது பற்றியும், தனியாக பாதாளத்திற்குள்ளே இறங்கினார் என்பது பற்றியும், ஆனால் அவரது தந்தையிடம் திரளான கூட்டத்துடன் எழுந்தருளினார். என்பது போன்றவற்றையும் நான் அவர்கள் மத்தியில் எடுத்துரைப்பேன்’ என்று கூறினார்.

எனவே அப்கார் ததேயுஸின் பிரசங்கத்தைக் கேட்பதற்காக பகலில் தனது குடிமக்களைக் கூட்டினார். அதன் பிறகு அவருக்கு தங்கமும் வெள்ளியும் வெகுமதியாகக் கொடுக்க உத்தரவிட்டார். ஆனால் ததேயுஸ் அவற்றை வாங்க மறுத்து, “நாம் நம்முடைய சொந்தச் சொத்தை விட்டுச் சென்றிருந்தால் அன்றி, மற்றவர்களுடைய சொத்தை எப்படி ஏற்றுக் கொள்வது?” என்று கூறி வினயமாக அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

இவை அனைத்தும் 340 ஆம் ஆண்டில் இடம் பெற்றுள்ளன.

சிரியாக் மொழியில் இருந்து இந்த நேரடியான மற்றும் பயனுள்ள மொழிபெயர்ப்பு இப்போது போதுமானதாக இருக்கட்டும்.

Illustration 12: இந்த வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள பகுதியான கிழக்கு மத்திய தரைக்கடல் பிரதேசத்தில் கிறிஸ்தவம் மிக வேகமாக பரவியது. வரைபடத்தின் மேல் வலதுபுறத்தில் உள்ள எடெசா, வடமேற்கு மெசொப்பொத்தேமியாவில் யூஃப்ரெட்ஸ் ஆற்றின் மேல் பகுதிக்கு அருகில் உள்ள ஒரு நகரம். யூசிபியஸ் அதன் ஆட்சியாளராக இருந்தார். அப்கார், இயேசுவின் பொது ஊழியத்தின் போது அவருடன் கடிதப் பரிமாற்றம் செய்ததாக அறிவிக்கப்பட்டது.

Christianity spread rapidly into the eastern Mediterranean world; the area shown in this map. Edessa at the top right of the map was a city in northwestern Mesopotamia near the upper band of the Euphrates River. Eusebius was reported its ruler, Abgar, corresponded with Jesus during his public ministry.