Cyprian of Carthage, To Dematrians, in Tamil
ஆறாவது புத்தகம்: டிமெட்ரியர்களுக்கு எழுதியது (To Dematrians)
அத்தியாயம் 1
டெமேட்ரியன், நீர் கடவுளுக்கு எதிராக, அதாவது எமது ஒரே நீதியுள்ள, உண்மையான கடவுளுக்கு எதிராக மத விரோதமாக, தேவ தூஷணம் பேசியபோது, நான் உம்மை நிந்தித்தேன். அத்தோடு, இது மிகவும் பொருத்தமான வார்த்தைகள் என்று எண்ணி நான், பல முறை உம்மை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியுள்ளேன். அறியாமையினால் ஒரு மனிதன் பேசிய பேச்சைக் கணக்கிலெடுக்காதும், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனின் கோபத்தைத் தூண்டும் விதத்தில் வார்த்தைகளால் அவரை இம்சிக்காது இருப்பதை விட, மௌனமாக இருப்பது மேலானது. அதேநேரம், தெய்வீக போதனையின் மூலம் பெற்ற அதிகாரம் இல்லாதிருந்திருந்தால் நான் அவ்வாறு செய்திருக்க மாட்டேன். எனவே அங்கு எழுதப் பட்டுள்ளதைப் போல; “முட்டாள் ஒருவன் முன் பேசாதே; அவன் உனது வார்த்தையின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள மாட்டான்.”[1] அதுபோல் மீண்டும் “நீயும் முட்டாளாக இல்லாமல், அவனுடைய முட்டாள்தனத்துக்கு ஏற்றபடி பதில் சொல்லாதே”[2] என்று கூறப்பட்டுள்ளது. அதற்கிணங்க, புனிதமானதை நம் மனதில் கொண்டிருக்கும் படி நாம் நினைவில் நிறுத்திக் கொள்வோமாக. ஆகவே பன்றிகள் மற்றும் நாய்கள் மிதிக்கும் வண்ணம், அவற்றை வெளியில் வீசியெறிய வேண்டாம். கர்த்தர் அதைப்பற்றி குறிப்பிடும்போது, இவ்வாறு கூறுகிறார்: “புனிதமானவற்றை நாய்களுக்கு கொடுக்க வேண்டாம். உங்கள் முத்துக்களை பன்றியின் முன் வீச வேண்டாம், அவை அவற்றைக் காலிலே மிதித்திப் போடும்.”[3] நீர் என்னிடம் பல முறை வந்திருந்தாலும், அந்த சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றும் பரஸ்பர விரோதத்தன்மையைக் குறித்ததே அன்றி, எதையேனும் கற்றுக் கொள்ளும் விருப்பத்துடனோ நோக்கத்துடனோ அந்த சந்திப்புகள் இடம்பெற வில்லை. அதேசமயம், எங்களுடைய சொந்த வார்த்தைகளை பொறுமையாக செவிமடுப்பதற்குப் பதிலாக, உமது நோக்கத்தை தைரியமாகவும் ஆனால், ஒழுக்கக்கேடான வகையிலும் முன்வைப்பதிலும், உரத்த குரலில் சத்தமிட்டு சொல்வதிலும் நீர் ஆர்வமாக இருந்தீர். உம்முடன் கொடுக்கல்- வாங்கலில் ஈடுபடுவது ஒரு முட்டாள் தனமான காரியமாகத் தோன்றலாம் என்பதால், கோபத்தின் உச்சத்தால் சீறியெழும் பொது, உமது பைத்தியக்காரத்தனத்தைப் பற்றி விவாதிப்பதிலும் அதைப் பற்றி ஆராய்வதிலும் பார்க்க, எளிதாகவும் புத்திசாலித்தனமாகவும் அதிலிருந்து விலகியிருப்பதே மேல். ஆயினும், அது தோல்வியுற்ற முயற்சியாகவே இருக்கும். பார்வையற்றவர் முன் வெளிச்சத்தைப் பாய்ச்சுவதால் எந்தப் பயனும் இல்லை என்பது போலவும், காது கேளாத ஒருவரிடம் வார்த்தைகளைப் பேசுவது போலவும் தான் இதுவும். மேலும் சொல்லப் போனால், மிருகத்திடம் ஞானம் போதிப்பது பயனற்றது. மிருகத்தால் அதைப் புரிந்து கொள்ள முடியாததால், அந்த முயற்சி வீணாகிப் போகிறது. அதுபோலத்தான், பார்வை இழந்தோரால் ஒளியை ஏற்கவோ, செவிப்புலன் அற்றோரால் கேட்கவும் முடியாது என்பதும், அவ்வாறான முயற்சிகள் பயனற்றவை என்பதுமே யதார்த்தம்.
அத்தியாயம் 2
இதைக் கருத்தில் கொண்டு, நான் அநேகமாக அமைதியாகவே இருந்தேன், பொறுமை இல்லாமல் அல்ல. பொறுமை காத்தே நான் வெற்றி கொண்டேன். ஏனென்றால், நான் கல்லாதவர்களுக்குக் கற்பிக்கவோ, மதத்தைப் பற்றி இழிவாகப் பேசுவோரைப்பற்றி ஆராய்ந்து பார்க்கவோ, பிரிவினைகளை ஏற்படுத்தும் நோக்கில் ஆர்ப்பாட்டம் செய்து பெரும் கூச்சம் போட்டு கலகம் விளைவிப்பவர்களையோ அடக்குவது என்னால் இயலாத காரியம். அப்படி இருந்தும், அடிக்கடி போர்கள் இடம்பெற்று வந்த காரணத்தாலும், பெரும் தொற்றுநோய்கள் பரவிய காரணத்தாலும், நீடித்த வறட்சி காரணமாக மழை இல்லாமல் போனதாலும், பஞ்சம் மற்றும் பட்டினி தலைவிரித்து ஆடியதாலும், பலர் எங்களை குறைகூறுவது மட்டுமன்றி, எம்மீது குற்றம் சாட்டுகிறார்கள். எனவே நான் இனிமேல் மௌனம் காப்பது கூடாது என்று நீங்கள் கூறியிருந்தீர்கள். அப்போது அது நாம் கடைபிடித்த தாழ்ச்சியினால் அல்லாமல், வேறுபட்டதாக இருக்கிறது. பொய்யான குற்றச்சாட்டுகளை மறுப்பது அவமரியாதை என்று நாம் கருதினால், அது நாம் எமது குற்றத்தை ஒப்புக்கொள்வதற்கு சமம். ஆகையால், டிமெட்ரியனே, உமக்கும், உம்மால் தூண்டப்பட்ட மற்றைய அனைவருக்கும் நான் பதிலளிக்கக் கடமைப் பட்டுள்ளேன். உமது நயவஞ்சகத்தன்மையான வார்த்தைகளால் நீர் எங்களுக்கு எதிராக வெறுப்பை விதைத்துள்ளீர். உமது செல்வம் மற்றும் உமது பூர்வீகத்தை பெருக்கியதன் மூலம், உமக்கு சார்பானவர்கள் பலரை உமது வழிக்குக் கொண்டுவந்தீர். இவை அனைத்திற்கும் நான் பதில் அளிப்பேன். அப்படி இருந்தும், அவர்கள் எங்கள் பக்கத்தின் நியாயத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால், பொய்களால் ஏமாற்றப்பட்டு தீமைகளைச் செய்ய முனைபவர், சத்தியத்தை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், அதே அளவு நன்மைகளைச் செய்யும் நிலைமைக்கு மாற்றம் பெறுகிறார்.
அத்தியாயம் 3
உலகம் தனது அதிர்வினால் துன்பத்தை அனுபவித்துவருகின்ற போதும், அதற்கு கூட, நாங்கள் தான் காரணகர்த்தாக்கள் என்று நீர் கூறினீர். அத்தோடு, நீர் வழிபடும் தெய்வங்களை நாங்கள் வணங்காததால், அவ்வகையான விபரீதங்கள் எங்களுக்கு ஏற்படவேண்டும் என்றும் நீர் கூறியுள்ளீர். இந்த விடயத்தில் ஆன்மீகத் தெளிவைப் பெறாதவரும், சத்தியத்திற்கு அப்பாற்பட்டவருமாகிய நீர் முதலில் இந்த உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். அதாவது, இந்த உலகுக்கு வயதாகி விட்டபடியால், அது ஒரு முறை அனுபவித்த ஆற்றலை மீண்டும் ஒருமுறை அனுபவிக்கப் போவதில்லை, ஒரு காலத்தில், அது தனது முந்தைய வீரியம் மற்றும் உற்சாகத்துடன் இருந்ததைப் போல, இனியும் வளமானதாக இருக்க மாட்டாது. வேதாகமம் மற்றும் தெய்வீக தீர்க்கதரிசனங்களிலிருந்து நாம் எந்தவிதமான மேற்கோள்களையும் எடுத்துக் காட்டாது இருந்தாலும், இப்போது உலகமே இதைத் தான் சொல்கிறது. அதாவது, அதன் தோல்வியின் காரணிகளால் உலகம் அதன் சீரழிவுக்கே சாட்சியம் கூறுகிறது. குளிர்காலத்தில் விதைகளை முளையிடும் போது, அவற்றை ஊட்டம் பெறச் செய்ய, மழை பெய்ய வேண்டுமென்பது கட்டாயம் இல்லை; அதேபோல், கோடையில் பயிர்கள் முற்றி அறுவடைக்குத் தயார் செய்யப்படும் போது, வழக்கமான வெப்பம் என்பது அவசியம் இல்லை. வசந்த காலத்தில் சோளக்கதிர்கள் அவ்வளவு இனிமையானவையாக இருக்கமாட்டாது. அதேபோலத்தான், இலையுதிர் காலத்தில் இலைவகைகள் மற்றும் காய்கறி வகைகள் அத்தனை இனிமை யானவையாக இருப்பதில்லை. சரிந்து போன மற்றும் களை இழந்த குன்றுகளில் இருந்து, ஓரளவு தோண்டி எடுக்கப்பட்ட பளிங்குக் கற்கள் பிரகாசம் குன்றியவையாகவே காணப்படும்; தற்போதைய நிலையில் கூட, சுரங்கங்களில் வெள்ளி மற்றும் தங்கம் போன்ற விலை உயர்ந்த உலோகங்கள் குறைவாகவே காணப்படுவது மட்டுமன்றி, அவை குறைந்தும் வருகின்றன. அவை நாளுக்கு நாள் பலவீனமடைந்து அருகி வருகின்றன. விவசாயி வயல்களை விட்டுவிட்டு ஓடி ஒளிந்து விட்டான். கடலில் தொழில் புரியும் மாலுமிகள் மற்றும் கடலோடிகள், முகாமில் உள்ள இராணுவ சிப்பாய், மற்றும் சந்தையின் பாரம்பரியத் தன்மை, நீதிமன்றத்தின் நியாயவாதம், நட்புக்கு இடையே நிலவும் நல்லிணக்கம், கலையின் சிறப்பு, ஒழுக்கத்தின் ஆதிக்கம் ஆகியவை பொலிவிழந்து கொண்டிருக்கின்றன. இளமை பருவத்தில் இருந்ததைப் போல, மற்றும் துடிப்பான இளமை துள்ளும் பருவத்தில் இருந்ததைப் போல, வயதுசென்ற பின்பு, அதேவிதமான துடிப்புடன் இருக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அது எதுவாக இருந்தாலும், அது அதன் மங்கிப்போகும் தன்மையில் மூழ்கி இறுதியில் அழிந்து போகிறது. இதேபோலத்தான், சூரியன் மறையும் போது, அதன் கதிர்கள் குறைந்த பிரகாசத்தையும், மங்கலான ஒளியையும் கொடுக்கின்றன. இதேபோலத்தான் நிலவும். அது மறையும் நேரம், சோபையிழந்து, மங்கிய ஒலியுடன் காணப்படும். ஒரு காலத்தில் பசுமையான பச்சை நிறத்துடன் வளமான தோற்றத்துடன் காணப்பட்ட மரம், பின்னர் வாடிப்போய், முதுமை அடைந்து, சிதைந்து போய் விடுகிறது. முன்னாளில் நிரம்பி வழிந்த ஆறுகளில் இருந்து நீரைப் பெற்று, நிரம்பி வழிந்த நீரூற்றுகள் பிற்காலத்தில் குறைவான நீருடன் வழிந்தோடுவதைக் காணலாம். இது இந்த உலகத்துக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையாகவே தெரிகிறது. இது இறைவன் வகுத்த நியதி; அதாவது, தோன்றிய அனைத்தும் ஒருநாள் இறந்தும், அழிந்தும் போகும்; வளரும் அனைத்தும் முதுமையை எட்டும்; பலசாலிகள் பலவீனர்களாக மாறுவர்; பெரிய அளவில் காணப்படுபவை யாவும் மங்கி, மறைந்து போகும்; இவை அனைத்தும் பலவீனமான நிலையை அடையும் போது, அனைத்தும் இல்லாமல் போய்விடும் என்பது தான் இறைவனின் நியதி.
அத்தியாயம் 4
காலப்போக்கில் உலகில் உள்ள அனைத்தும் நலிவடைந்துவிடும் என்பதை நீர் கிறிஸ்தவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. முதியவர்கள் வயதான காலத்தில் தங்கள் வலிமையை இழந்துவிடுவர் என்பதையும், அவர்களின் காதுகள் முன்பு இருந்ததைப் போல கேட்கும் வலிமையை இழந்துவிடும் என்பதையும், அவர்களின் கால்கள் முன்பைப் போல வேகமாக நடக்கக்கூடிய சக்தியை இழந்துவிடும் என்பதையும், அவர்களின் கண்கள் முன்பு போல கூர்மையாக பார்க்கும் சக்தியை இழந்து விடும் என்பதையும், அவர்களின் உடலில் உள்ள ஆற்றல் குறைவடைந்து போகும் என்பதையும், அவர்களது அவயவங்கள் மற்றும் உறுப்புகள் புத்துணர்ச்சி இழந்து நலிவடைந்து காணப்படும் என்பதையும் கிறீஸ்தவர்களுக்கு உணர்த்தப்படல் வேண்டும். ஆகையால், அந்தக்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் எண்ணூறு, தொளாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார்கள் என்றும், இக்காலத்து மனிதர்கள் நூறு வயதைக் கூடத் தாண்டுவது மிகவும் அரிதாயிருக்கிறது என்பதைப் பற்றி கூறினால், அதில் என்ன விதமான பிரயோசனம் இருக்கப்போகிறது? சிறுவயது ஆண்பிள்ளைகளில் கூட, நரை முடியை நாங்கள் காண்கிறோம்; அவர்களது தலையில் முடி வளர்வதற்கு முன்பு நரைத்த முடிகள் உதிர்ந்து விடும்; அதுபோலத்தான், வாழ்க்கை தொடங்கி, முதுமையுடன் தான் முடிவடையும் என்பதல்ல. ஆனால் இப்போதெல்லாம், வாழ்க்கை முதுமையில் கூட தொடங்குகிறது. இதனால், பிறப்பு ஆரம்பமாகும் போதே, அது விரைவாக முதுமையை நோக்கி நகர்கிறது.[4] இவ்வாறு, இவ்வுலகில் தோன்றிய அனைத்தும், முதுமைத் தன்மையை அடைந்து, அருகி, நலிந்து போகின்றன. இதனால் முழு உலகமும் ஏற்கனவே நலிவடைந்து வருவதைக் காணக் கூடியதாக இருக்கிறது. உலகத்தின் முடிவுக்கு முன், அதில் உள்ள அனைத்தும் அவையின் உண்மையான நிலையில் இருந்து அழிவுறும் நிலைக்கு போய்விடும் என்பது குறித்து பெரிதாக ஆச்சரியப்படுவதற்கில்லை.
அத்தியாயம் 5
அதுமட்டுமல்ல, பெரும் யுத்தங்கள், அழிவுகள், பதட்டம் மற்றும் பஞ்சம் ஏற்படும் போது, அங்கே தோன்றக்கூடிய நோய் நொடிகளால், மனித இனத்தின் ஆரோக்கியம் கெட்டுப்போகிறது. அங்கே அமைதியின்மை உண்டாகிறது. நடுத்தீர்ப்பு நாள் நெருங்கும் போது, தீமைகள் பெருக்கம் அடைந்து, பலவிதமான துன்பங்களுக்கு அங்கே முகம் கொடுக்க வேண்டியேற்படும். கடவுளின் கோப ஆக்கினைக்குள் மனித இனம் மேலும் மேலும் விழக்கூடிய நிலைமைகள் ஏற்படும் என்பதையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அத்தோடு, நீங்கள் செய்த போலியான முறைப் பாடுகள் மற்றும் போதிய அனுபவம் இல்லாமை போன்ற காரணங்களால், உங்களுக்கு உண்மை தெரியாது. தற்பெருமை கொள்ளாதீர்கள். நீங்கள் வணங்கும் தெய்வங்களை நாங்கள் வணங்காததனால், இவை நடைபெற சாத்தியம் இல்லை. ஆனால் நீங்கள் உண்மையான இறைவனை வணங்காததால் தான் இவை அனைத்தும் நடக்கின்றன. ஏனென்றால், அவர் தான் எம் இறைவன் மற்றும் பிரபஞ்சத்தின் படைப்பாளர். அனைத்தும் அவருடைய சித்தத்தின்படி இடம்பெறுவதால், அவர் செய்யும்படி கட்டளையிட்ட அல்லது செய்ய அனுமதித்ததைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது என்பதால், நிச்சயமாக இவ்வாறான தவறான விடயங்களால் கடவுளின் மனம் புண்படுத்தப்பட்டு, அவரது கோப ஆக்கினையால் இவ்வாறான நெருக்கடி மிகுந்த நிலைமைகள் உருவாகின்றன. இவை எல்லாம் நடப்பது ஏனென்றால், இறைவனை வணங்கும் எமது செய்கைகளால் அல்ல. நாம் அவரைத் தேடுவதாலோ அல்லது அவரைப் போற்றுவதாலோ, வெற்று மூடநம்பிக்கைகளை கைவிட்டு உண்மையான மதத்தை ஏற்றுக் கொள்வதாலோ அல்லது அனைவரதும் ஒரே தேவனாகிய அவரை வணங்குவதாலோ, அவரை மட்டும் தேடாதபடியாலோ அல்ல, நீங்கள் கட்டிக்கொள்ளும் உங்கள் சொந்த பாவங்களின் காரணமாகவே ஆகும்.
அத்தியாயம் 6
இறுதியாக, கர்த்தர் தானே வந்து பேசும்போது அவருக்கு செவிமடுங்கள். அவருடைய தெய்வீக வார்த்தைகளினால் அவர் நமக்கு அறிவுறுத்துவதால், அந்த வார்த்தைகளுக்கு செவிசாயுங்கள். “உங்கள் தேவனாகிய கர்த்தரை மட்டுமே வணங்குங்கள். அவருக்கு மட்டுமே சேவை செய்யுங்கள்.”[5] மீண்டும் ஒருமுறை கூறுகையில்: “என்னைத் தவிர வேறு கடவுள்கள் உங்களுக்கு இல்லாமல் போவதாக.”[6] மீண்டும் இவ்வாறு கூறுகிறார்: “நீங்கள் என்னைக் கோபாக்கினைக்கு உட்படுத்தி, உங்களை கலைந்து சென்று விடாதபடிக்கு, பிற தெய்வங்களை வழிபட வேண்டாம். அவைகளுக்கு சேவை செய்யவும் வேண்டாம். உங்கள் செயல்களால் என்னை கோபத்துக்கு உள்ளாக்க வேண்டாம்.”[7] பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட தீர்க்கதரிசியானவர் ஒருவர், கடவுளின் கோபத்தைப் பற்றி தனது வார்த்தைகளால் சாட்சியம் அளிக்கையில்: “எல்லாம் வல்ல இறைவன் இவ்வாறு கூறுகிறார்: “‘எனது வீடு வெறிச்சோடி இருக்கும்போது, நீங்கள் அவசரமாக உங்கள் சொந்த வீட்டைக் கட்டிக்கொண்டு அங்கு சென்று விடுவீர்கள். ஆகையால் வானத்தில் உள்ள மேகங்கள் விலகிபோய், பூமி தன்னுடைய பலன்தரும் தன்மையை இழக்கிறது. நானே தானியமாய் இருக்கிறேன். நான் திராட்சைத் தோட்டத்தின் மீதும், எண்ணெய் மீதும், மனிதன் மீதும், மிருகத்தின் மீதும், பூமியெங்கும், அவர்கள் கைகளினால் மேற்கொள்ளும் உழைப்பின் மேலும் நான் ஒரு வாளைக் கொண்டு வருவேன்.”[8] இதேபோல், மற்றொரு தீர்க்கதரிசி இவ்வாறு கூறுகிறார்: “நான் ஒரு நகரத்துக்கு மழையை அனுப்புவேன், மற்றொரு நகரத்தில் பெய்யும் மழையை நிறுத்துவேன். ஒரு பக்கம் மழை பெய்யும். நான் மழை அனுப்பாத பிராந்தியங்கள் வறண்டு போகும். குடிதண்ணீர் பெற்றுக்கொள்வதற்காக, இரண்டு அல்லது மூன்று நகரத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு நகரத்தில் சந்திக்க வேண்டி ஏற்படும். அப்படியிருந்தும் அவர்கள் திருப்தி அடைய மாட்டார்கள். இவையெல்லாம் நடந்தேறியும், அவர்கள் மீண்டும் என்னிடம் திரும்பி வரவில்லை.”[9]
அத்தியாயம் 7
இதோ, நீங்கள் கர்த்தரிடத்தில் திரும்பி வராதபடியால், கர்த்தர் உங்கள் மீது கோபமாய் இருக்கும் அதேவேளை, உங்களுக்கு அறிவுரை கூறுகிறார்; உங்களது பெருமை மற்றும் ஆற்றாமையால் என்ன நடக்கிறது என்பது பற்றி நீங்கள் முறையீடு செய்யும் போது, நீங்கள் ஆச்சரியத்துக்குள்ளாவீர்கள். மேலே இருந்து மழை லேசாக பெய்யும் போது, பூமி மீது தூசி படிவதைக் கண்டு கொள்ளாதிருக்கும் போது, தரிசான பூமி, கடும் சிரமங்களுடன் பலவீனமான மற்றும் சாரமற்ற புல்லை விளைவிக்கும் போது, அழிவுகளை ஏற்படுத்தும் வெள்ளம் மற்றும் புயல்கள் திராட்சைக் கொடிகளை துவம்சம் செய்யும் போது, பலத்த காற்று ஓலிவ் மரங்களை வேரோடு சாய்க்கும் போது, வசந்தகாலம் வறட்சியால் பாதிக்கப் பட்டிருக்கும் போது, காற்றின் மூலமாய் ஒரு தொற்றுநோய் பரவும் போது, ஒரு கொடிய நோய் மனித குலத்தின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் போது, அவை இதைக் குறிக்கின்றன என்றால், இவை யாவும் அவர்கள் கட்டிக் கொண்ட பாவத்தினாலேயே அவர்களைத் தொரடர்கின்றன. மேலும் அவ்வாறான பாரிய தீமைகளில் இருந்து எந்த நன்மையும் ஏற்படாத போது, கடவுள் மேலும் மேலும் தனது கோபத்தை வெளிப்படுத்துகிறார். கர்த்தர் வேதாகமத்தில் இவ்வாறு கூறுகிறார்: “அதாவது, பிடிவாதகாரர்களை ஒழுங்குபடுத்துவதற்கும் சாத்தானைத் தண்டிப்பதற்குமே இவை நடக்கின்றன: “நான் உங்கள் பிள்ளைகளைத் திருந்தவேண்டுமெனத் தண்டித்தேன். ஆனாலும் அவர்கள் திருந்தவில்லை.”[10] மேலும், இந்த வார்த்தைகளுக்கு பதிலளிக்கும் விதமாக பக்தியுள்ள தீர்க்கதரிசி தன்னை கடவுளுக்கு இவ்வாறு அர்ப்பணிக்கிறார்: “நீங்கள் அவர்களைத் தாக்கினீர்கள், ஆனால் அவர்கள் கவலைப்படவில்லை; நீங்கள் அவர்களை நசுக்கினீர்கள், ஆனால் அவர்கள் திருந்தி வாழ முயற்சிக்க வில்லை.”[11] நன்றாகக் பாருங்கள், கடவுளிடமிருந்து தண்டனை கிடைத்தும், அவருக்குப் பயப்படுவது போலத் தெரியவில்லை. மேலே இருந்து வரும் தண்டனைகளுக்கும், தொற்றுநோய்களுக்கும் பஞ்சமே இல்லை. ஆனாலும் அதைப்பற்றிய எவ்வித பய உணர்வோ இல்லை. அதைப்பற்றி விடுக்கப் படும் எச்சரிக்கையையும் கண்டுகொள்வதில்லை. இத்தகைய தடை உத்தரவுகள் கூட மனித விவகாரங்களில் தலையிடாவிட்டால், அதனால் ஏற்படப்போகும் பலன் தான் என்ன? குற்றச்செயல்களில் இருந்து தப்பி, பாதுகாப்பாக இருக்க முடியுமானால், மக்களுக்கு மென்மேலும் குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடிய தைரியத்தை அவர்கள் மேலும் பெரிதாக விரிவுபடுத்திக் கொள்வார்கள் அல்லவா?
அத்தியாயம் 8
வளமான நீரூற்றுகள், காற்று, காலம் தவறாது பெய்யும் மழை மற்றும் செழிப்பான நிலம் ஆகியவை உங்களுக்கு குறைந்தபட்ச ஒத்துழைப்பையே அளிக்கின்றன என்று இப்போது நீங்கள் அனாவசியமாக முறையீடு செய்கிறீர்கள், முணுமுணுக்கிறீர்கள். அத்தோடு, இந்த இயற்கையின் கொடைகள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யாது என்றும், உங்களுக்கு திருப்தி அளிக்காது என்றும் நீங்கள் முணுமுணுக்கிறீர்கள். நீங்கள் கர்த்தருக்காகக் காத்திருக்கிறீர்களா? கர்த்தர் அவரது தலையை அசைத்தால் நீங்கள் நினைப்பதெல்லாம் நடந்துவிடும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறீர்களா? உங்கள் சொந்த அடிமைத்தனத்தில் இருந்துகொண்டு, நீங்கள் அடிமைத்தனம் எப்படி இருக்கும் என்பது பற்றி கற்பனை செய்கிறீர்கள். அதாவது, நீங்கள் ஒரு மனிதனாக இருந்துகொண்டு, மற்றொரு மனிதனை உங்களுக்கு அடிபணிந்து, கீழ்ப்படியும்படி கட்டாயப் படுத்துகிறீர்கள். நீங்கள் இருவரும் ஒன்றாகப் பிறந்திருந்தாலும், ஒரே விதமான அங்க வடிவங்களைக் கொண்டிருந்தாலும், மரணத்தில் கூட ஒரே விதமான போக்கைக் கொண்டிருந்தாலும், உடல் அளவிலும் கூட ஒருவர் மற்றொருவரை ஓத்திருந்தாலும், மனதளவிலும் ஒரே விதமான மற்றும் பொதுவான ஒழுங்கைக் கொண்டிருந்தாலும், சமமான உரிமை மற்றும் பொதுவான சட்டத்துக்கமைய நீங்கள் இந்த உலகத்திற்கு எப்படி வந்தீர்கள் என்றும், பின்னர் நீங்கள் உலகை விட்டு பிரிந்து செல்லப் போகிறீர்கள் என்றும், உங்கள் விருப்பத்துக்கு அமைய உங்களுக்கு சேவை செய்யப்படாத பட்சத்தில், உங்கள் விருப்பத்திற்கு இணங்க எவரும் செயல் படாவிட்டால், நீங்கள் அதிகார செருக்குடனும் எந்தவித தேவையும் இன்றி அடிமைத்தனத்துக்கு அவர்களை உட்படுத்துகிறீர்கள். அதன்மூலம், அடித்துத் துவைத்தல், சவுக்கால் தண்டனை கொடுத்தல், துன்புறுத்தல், பசியுடன் மற்றும் தாகத்துடன் தவிக்கவிடுதல், நிர்வாணமாக விட்டு சித்திரவதை செய்தல் மற்றும் தொடர்ச்சியாக வாளாலும், சிறைப் படுத்தியும் சித்திரவதைகளை மேற்கொள்ளல் போன்றவற்றை நோக்கும் போதும் உங்களில் எவ்வித வேறுபாட்டையும் காணவில்லை. நீங்கள் இவ்வாறாக, சொல்லொணாத் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினீர்கள். நீங்களே உங்களை எஜமானர்களாக எண்ணி மிகுந்த செருக்குடன் செயல்படும்போது, உங்கள் தேவனாகிய இறைவனை எவ்வாறு உங்கள் கடவுளாக ஏற்றுக் கொள்ள முடியும்?
அத்தியாயம் 9
இதன் காரணமாக, கடவுளிடம் இருந்து உங்களை நோக்கி வரும் சகல கடுமையான தண்டனைகளை அனுபவிக்க, நீங்கள் முழுமையான தகுதியுடையவர்களாக இருப்பீர்கள், மேலும் இந்த தண்டனைகள் பெருந்தொற்றுகளைப் பார்க்கிலும் எவ்விதத்தித்திலும் குறைவாக இருக்காது. ஏனென்றால் இவற்றால் இங்கே எந்தப் பயனும் விளையப் போவதில்லை. அத்தகைய வன்முறை மற்றும் அழிவுகள் காரணமாக, நீங்கள் எவரும், ஒவ்வொருவராகவேணும் கடவுளிடம் திரும்பும் சந்தர்ப்பத்தை இழந்து விட்டிர்கள். பின்னாளில், அங்கே உங்களுக்கு சதாகால சிறை, நித்திய ஆக்கினை மற்றும் நித்திய தண்டனை காத்திருக்கிறது. அங்கே ஒப்பாரி வைத்து அழுவோரின் புலம்பல்களை செவிமடுக்க ஒருவரும் இருக்க மாட்டார்கள். ஏனெனில், தேவனுடைய கோப ஆக்கினை பற்றி அங்கே ஒருவருக்கும் கேட்கும் அதிகாரம் இல்லை. அவர் தீர்க்கதரிசிகள் மூலம் இவ்வாறு உறக்கக் கூறுகிறார்: “இஸ்ரவேல் புத்திரர்களே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்! இந்தத் தேசத்தில் எந்தவிதமான உண்மைத்தன்மையோ, கருணையோ, கடவுளைப் பற்றிய அறிவோ இல்லாத காரணத்தால், இங்கு வசிப்பவர்களிடம் இறைவன் தனது முறையீட்டை இவ்வாறு முன்வைக்கிறார். சாபம், பொய் உரைத்தல், கொலை, திருட்டு மற்றும் விபச்சாரம் போன்றவை தவிர இங்கு வேறொன்றும் காணேன்; மாறி, மாறி ஏற்படும் இரத்தக்களரிகள் போன்றவற்றால் நாடு ஆற்றாமையால் வாடுகிறது. நாட்டில் வசிக்கும் மக்கள், காடுகளில் வாழும் மிருகங்கள் மற்றும் வானில் சிறகடிக்கும் பறவைகள் உட்பட அனைத்துமே சோபையிழந்து காணப்படுகின்றன. கடலில் வாழும் மீன்கள் கூட உற்சாகமின்றி கடலுக்கடியில் சென்று விட்டன. ஆனாலும், எவரும் இதுபற்றி முறையீடு செய்யாது, எச்சரிக்கை விடுக்காது, இருப்பது இதைக் குறிக்கிறது என்றால், உம்முடைய மக்கள் மதகுருமாரிடம் போய் முறையீடு செய்வது போலதான் இருக்கிறது.[12] மேலும், இறைவனைப் பற்றிய அறிவு பூமியில் இருப்பவர்களுக்கு இல்லாமையாலும், அவரைப் பற்றி தெரியாததாலும், இறைவன் மேல் பயபக்தி இல்லாததன் காரணத்தாலும், இறைவனின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று கர்த்தர் உரைக்கிறார். பொய், காம இச்சை, வஞ்சகம், கொடுமை, குரூரத்தன்மை, பயபக்தியின்மை, தீய நோக்கம் போன்ற பாவங்களை கடவுள் கண்டிப்பது மட்டுமன்றி, அதைக் கட்டிக்கொள்பவர்கள் மீது அவர் குற்றம் சாட்டுகிறார். ஆயினும், அப்படியான தவறுகளிலிருந்து யாரும் விடுபட்டதாகத் தெரியவில்லை. நன்றாகக் கவனியுங்கள், தேவனுடைய வார்த்தைகளினூடாக முன்னறிவிக்கப்பட்ட விடயங்கள் யாவும் நிறைவேறிக் கொண்டு இருக்கின்றன. தனது விசுவாசத்தின் ஊடாக, எதிர்காலத்திற்கான ஆலோசனையைப் பெறுவதற்கான எச்சரிக்கையை, நிகழ்காலத்தில் வாழும் எவரும் பெற்றுக்கொள்வதில்லை. இந்த சிரமங்களுக்கு மத்தியில், ஆன்மாவானது கடுமையான சிரமத்துக்கு மத்தியில் சுவாசிக்கிறது மட்டுமன்றி, மற்றும் பல விடயங்களுடன் பிணைக்கப் பட்டுள்ளது. மேலும் மக்கள் தீயவர்களாக மாறுவதற்குக் கால நேரம் இருக்கிறது. மேலும், இதுபோன்ற பெரிய நிகழ்வுகளில், மற்றவர்களுக்கு மிக உயர்ந்த தீர்ப்பு வழங்கப்படுகிறது, ஆனால், மற்றையோர் அதைப் பெறவில்லை. கடவுள் கோபப்படுகிறார் என்று நீங்களும் கோபப் படுகிறீர்கள். அவ்வாறு செய்வது, ஒரு மோசமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு, உங்களுக்குத் தகுதியானதைப் பெற, நீங்கள் தகுதியுடையவர்கள் என்று எதிர்பார்ப்பது போன்றது. நடக்கும் விடயங்கள் அனைத்தும், நீங்கள் செய்த பாவங்களை விட குறைவாகவும் இலகுவாகவுமே தெரிகிறது.
அத்தியாயம் 10
மற்றவர்களுக்கு நியாயதீர்ப்புக்கூறும் முன், நீங்கள் நியாயம் கூறத் தகுதியுள்ளவரா என்று சற்றே சிந்தித்துப்பாருங்கள். உங்கள் மனதில் உள்ள குறைகளைப் பற்றி அறிந்துகொள்ள முயலுங்கள். அதற்கு பதிலாக, நீங்கள் உண்மையில் தவறு செய்ய வெட்கப்பட வேண்டியதில்லை. உங்கள் சொந்த இன்பம் பாவங்கள் ஊடாக வந்ததைப் போல காணப்படுகிறது. ஆகவே, அவற்றை எல்லாம் நீங்கள் தெளிவாகவும் வெளிப்படையாகவும் பார்க்கிறீர்களா? ஏனென்றால் நீங்கள் ஆணவம் பிடித்த, பேராசைகொண்ட, கோபாவேசம் கொண்ட, சூதாட்டத்தில் ஈடுபட்டு உங்கள் இருப்புகளை வீணடிப்பவராக, குடிபோதையில் திளைப்பவராக, பொறாமைத்தனம், காம இச்சையுடனும் கொடுமையும், குரூரத்தன்மையும் கொண்டவராக இருக்கின்றீர்கள். இப்படியான துர்க்குணம் கொண்ட நீங்கள், தண்டிக்கப்பட வேண்டிய காரணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும்போது, மனிதகுலம் தண்டனை பெறுவதற்குத் தகுதியானது தான் என்று இறைவன் கோபம் கொள்வது சரியென்றும், அவரின் கோபம் அதிகமாகக் கூடும் என்று நீங்கள் நினைப்பது சரிதானே? எதிரி உங்களுக்கு எதிராக எழுந்திருப்பதைப் போல எண்ணி நீங்கள் முறையீடு செய்கிறீர்கள். அப்படியே இருந்தாலும், சமாதானத்தின் மத்தியில் அமைதி இருக்கக்கூடும். காட்டுமிராண்டித்தம் கொண்டவர்களினாலும் அவர்களின் ஆயுதங்களினாலும் ஏற்படக்கூடிய ஆபத்துகள் ஒடுக்கப்பட்டாலும், வசைகளாலும், காயங்களாலும் ஏற்படும் ஆபத்துக்கள் குடிகளை மிகவும் தீவிரமான நிலைக்கு இட்டுச்செல்வதில்லை. வறட்சி என்பது பேராசை கொண்டு நிலைமைகளைகளைக் கபளீகரம் செய்வதைப்பார்க்கிலும், பஞ்சத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையில், கடின உழைப்பு மற்றும் அறுவடைக்கான விலை ஏற்ற இறக்கங்களுக்குப் பிறகு, வருடாந்தர பயிர்களின் விளைச்சலை விட தேவையின் தீவிரம் அதிகமாக இல்லை என்பது பற்றியும் நீங்கள் முறையீடு செய்கிறீர்கள். என்னதான் பூமியிலுள்ள தானியக் களஞ்சியங்கள் மூடி வைக்கப்பட்டிருந்தாலும், மழை பெய்வது நின்றுவிட்டதாக முறையீடு செய்கிறீர்கள். நீங்கள் ஏற்கனவே உற்பத்தி செய்தவற்றை தேவைப்படுபவர்களுக்கு கொடுத்துவிட்டு, இப்போது உற்பத்தி குறைவாக இருக்கிறது என்று குறை கூறுகிறீர்கள். பெருந்தொற்று நோய்கள் மற்றும் நோய் நொடிகளால் மக்களின் குற்றம் கண்டறியப் பட்டாலும் அல்லது அதிகரித்தாலும் கூட, அவ்வகையான தொற்றுநோய் மற்றும் அதனாலேற்படும் குற்றத்தையும் நீங்கள் விமர்சிக்கிறீர்கள். அவர் பலவீனமானவர்களுக்கு இரக்கம் காட்டுவதில்லை. ஆனால் பேராசை கொண்டவர்களையும், ஊழல் வாதிகளையும், இறந்தவர்களையும் நோக்கி வாளைப் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதே மனிதர்கள், தாம் பக்தியைக் கடைபிடிப்பதில் பலவீனமாக இருக்கிறார்கள். அருவருப்பான வழிகளில் கிடைக்கும் அனுகூலங்களைப் பயன்படுத்திக் கொள்வதில் அவசரம் காட்டுகிறார்கள். மேலும் இறக்கும் தருவாயில் இருப்பவர்கள், மரணம் எய்துவதைத் தடுக்கிறார்கள். ஆனால் இறந்து போனவர்கள் கொள்ளையிட்டதைத் தேடுகிறார்கள். எனவே அவர்கள் துரதிர்ஷ்ட வசமான விதத்தில் நோய்வாய்ப் பட்டு, அதன் காரணமாக, கைவிடப் பட்டவர்கள் போலத் தெரிகிறது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆனால் அவர்களால் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. நோய்வாய்ப் பட்டு, இறக்கும் தருவாயிலுள்ள மனிதனின் சொத்தை அடைய முயற்சிப்பவன், அம்மனிதன் இறக்க வேண்டும் என்றே விரும்புவான்.
அத்தியாயம் 11
அழிவை ஏற்படுத்தக்கூடிய ஆபத்து மகத்தானது, அதற்கு அப்பாவித் தனத்தைப் பற்றி எதுவும் எடுத்துக்கூற முடியாது. அதுபோன்றே, வழக்கமாக நிகழ்த்தப் படும் கொலைகளால் ஏற்படக்கூடிய மனித உயிரிழப்புகளுக்கு மத்தியில், அவனோ அல்லது அவளோ தானும் அவ்வாறே உயிரிழப்போம் என்று ஒருபோதும் எண்ணியதில்லை. அது நீதியால் அங்கீகரிக்கப்பட்டது போலும், சரியானது தான் என்பது போலும், தீங்கு விளைவிக்காதவருக்கு தீங்கோ அல்லது இழப்போ ஏற்படுவது போலும் எல்லா இடங்களிலும் அதன் பிரசன்னம் காணப்படுகிறது. அந்த நிலைமையை நிறுத்த வேண்டியுள்ளது. அதைக் கையகப் படுத்தவும் வேண்டி உள்ளது. அங்கே ஒளிவு மறைவின்றி பகிரங்கமாக கொள்ளை இடம் பெறுகிறபடியால், இவற்றை செய்ய வேண்டியுள்ளது. அங்கே தாமதிப்பதற்கு இடமில்லை. இப்படித்தான் எல்லோரும் அடுத்தவரின் உடமைகளைக் கைப்பற்றுவதற்கு அவசரம் காட்டுகிறார்கள். திருடர்கள் தங்கள் செய்யும் குற்றங்களையிட்டு குறைந்த பட்சம் வெட்கப் படுகிறார்கள். அவர்கள் பாதைகள் அற்ற மலைப் பாங்கான இடங்கள், மற்றும் பாழடைந்த தனிமையான இடங்களையே விரும்புகிறார்கள். அவ்வாறான இடங்களில் குற்றவாளிகள் பல குற்றச் செயல்களை புரிந்திருந்தாலும், அந்தக் குற்றங்கள் பாழடைந்த நிழல் பிரதேசங்கள் மற்றும் இரவின் இருளால் மூடிமறைக்கப்படுகின்றன. மற்றவர்களின் உடமைகளை அடைய பேராசை கொண்டவர்கள், வெளிப்படையாகவும், பாதுகாப்பாகவும், அசட்டுத் தைரியத்துடன் பகலில் பொது இடங்களில் தங்கள் கைவரிசையைக் காட்டி கொள்ளையில் ஈடுபடுகிறார்கள். இப்படியானவர்கள் பெரும் மோசடிக் காரர்களாகவே இருக்கின்றனர். அவர்கள் விஷத்தைப் போன்றவர்கள். இதன் காரணமாக, கொலையாளிகள் நகர மத்தியில் குற்றச்செயல்களில் ஈடுபட தயக்கம் காட்டுவதில்லை. அவ்வாறு செய்ய அவர்களுக்கு உரிமை இருப்பதைப் போல அவர்கள் நடந்து கொள்கிறார்கள். குற்றத்தைச் செய்து, அதுபற்றிக் கூறித்திரிபவர்கள் குற்றவாளிகள். ஆனால் அப்பாவிகள் மற்றொருவர் மீது குற்றச்சாட்டை சுமத்த முன்வருவதில்லை. குற்றம் சாட்டுபவரோ அல்லது நீதிபதியோ எதற்கும் அஞ்சத் தேவையில்லை. கொடூரர்கள் தண்டனைக்கு உள்ளாகாமல் இருப்பதைக் கண்டு, தாழ்மையான ஏனையோர் அமைதியாக இருப்பார்கள். அவ்வாறான பாவச் செயல்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் அச்சத்துக்கு உள்ளாகின்றனர். அவ்வாறாக தீர்ப்பளிக்கப்பட வேண்டியவர்களுக்கு ஒரு விலை வழங்கப்படுகிறது. எனவே, தீர்க்கதரிசியின் வாயிலாக இவற்றின் உண்மைதன்மை, தூய்மையான மனம், உத்வேகம் போன்றவை வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அங்கே அதன் முறையான மற்றும் தெளிவான வழிமுறை காட்டப்பட்டுள்ளது. இறைவனால் பேரழிவுகளைத் தடுக்க முடியும் என்றாலும், பாவிகளின் பாவச் செயல்கள், அவரை உதவி செய்ய இயலாத ஒரு கட்டத்துக்கு இட்டுச் செல்கின்றன. “இதோ, கர்த்தருடைய கைகள் காப்பாற்ற முடியாத அளவுக்கு சிறியதாகவோ, அவரது காதுகள் கேட்க முடியாத அளவுக்கோ போய்விட வில்லை. ஆனால் நீங்கள் செய்த அக்கிரமம் உங்களை கடவுளிடமிருந்து பிரித்துவிட்டது. அவர் உங்கள் குரலுக்கு செவிசாய்க்காதபடிக்கு, உங்கள் பாவங்கள் அவருடைய முகத்தை உங்களிடமிருந்து மறைத்துவிட்டன.”[13] எனவே உங்கள் பாவங்களையும் தவறுகளையும் எண்ணுவதற்கு இடம் கொடுங்கள். உங்கள் மனசாட்சியில் ஏற்பட்டுள்ள காயங்களைக் கவனியுங்கள். மேலும், நீங்கள் கஷ்டப்பட நியமிக்கப்பட்ட காரணத்தினால் அப்படிப்பட்ட கஷ்டங்களை அனுபவிக்கிறீர்கள் என்பதை உணர்ந்து, நீங்கள் ஒவ்வொருவரும் கடவுளையோ அல்லது எங்களையோ பற்றி குறை கூறுவதை நிறுத்துங்கள்.
அத்தியாயம் 12
எங்கள் உரையாடலின் கருப்பொருள் என்ன விதமான இயல்பைக் கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள் – நிரபராதிகளாகிய எங்களை நீங்கள் துன்புறுத்துகிறீர்கள், கடவுளை அவமதிக்கும் விதத்தில் நீங்கள் அவரின் ஊழியர்களை அடக்கி ஒடுக்குகிறீர்கள்? நீங்கள் புரிந்த கொடிய குற்றங்கள் மற்றும் அட்டூழியங்கள், இரத்தக்களரி, கற்பழிப்புகள் போன்ற கொடிய சித்தரவதைகள் போன்றவற்றால், நீங்கள் உண்மையான மதத்தை தவறான மூடநம்பிக்கைகளின் வாயிலாக சிதைத்து விட்டீர்கள். நீங்கள் கடவுளை ஒருபோதும் நாடாமலும், அவர்மீது எவ்வித பயமோ, பக்தியோ கொள்ளவும் இல்லை. இவைபோன்ற பலவிதமான கொடிய குற்றச் செயல்களைப் புரிந்த உங்கள் வாழ்க்கை மோசமான வடுக்களால் நிறைந்துள்ளதையிட்டு நீங்கள் பெரிதாக கரிசனை கொண்டதாகத் தெரியவில்லை. நீங்கள் கடவுளின் ஊழியர்களையும் அவருடைய மகிமைக்கும் சித்தத்துக்கும் அர்ப்பணித்துக் கொண்டவர்களை தாங்கொணாத அளவுக்கு துன்புறுத்தியுள்ளீர்கள். நீங்கள் கடவுளை வணங்காமல் விடுவதில் மாத்திரம் திருப்தி கொண்டாகத் தெரிய வில்லை. கடவுளை வணங்குபவர்களை நீங்கள் துன்புறுத்துவது மட்டும் அல்லாமல், அவர்களை நிந்தனைக்கும் ஆளாக்குகிறீர்கள். நீங்கள் கடவுளை வணங்காமல் இருப்பது மட்டுமன்றி, மற்றவர்களையும் ஒருபோதும் இறைவனை வணங்க அனுமதிப்பதில்லை. மனிதனின் கைகளால் வடிக்கப் பட்ட வெறும் சிலைகளையும் உருவங்களையும் நீங்கள் வணங்குவது மட்டுமல்லாமல், சில அடையாளாச் சின்னங்கள் மற்றும் அசுரர்களின் உருவங்களை அபிஷேகம் செய்வதில் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள். ஆனால் கடவுளை வணங்குபவர்களைக் கண்டு நீங்கள் அதிருப்தி கொள்கிறீர்கள். நீங்கள் செல்லும் கோவில்களில் எல்லா இடங்களிலும் பலியிடப்பட்ட எச்சங்களையும், புகைசூழ மாடுகளுக்கு காட்டப்படும் அர்ச்சனையும் தான் காணப்படுகின்றன. ஆனால் தேவனை ஆராதித்து வணங்கும் புனிதமான பலிபீடங்கள் அங்கே இல்லை. அப்படி இல்லாவிடின், அங்கே உள்ளவை யாவும் மூடப்பட்டிருக்கும். முதலைகள், தேனீக்கள், கற்கள் மற்றும் பாம்புகள் போன்றவற்றுக்கு அங்கே வழிபாடுகள் செய்யப் படுகின்றன. இருப்பினும், இறைவனை மட்டுமே அந்தத் தளத்தில் வணங்காமல் விடுகிறார்கள். அப்படிப்பட்ட அவர்கள் தண்டனைக்கு உள்ளாகாமல் கடவுளை வணங்க முடியாது. குற்றமற்றவரான, நீதியுள்ளவரான, கடவுளை நேசிக்கும் நீங்கள், உங்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப் படுவீர்கள். அத்தகையவர்களின் பாரம்பரியத்தை நீங்கள் கொள்ளையடிக்கிறீர்கள். நீங்கள் அவர்களை சங்கிலிகளால் பிணைத்து, சிறையில் அடைத்துள்ளீர்கள். அவர்களைக் கொடிய மிருகங்கள் வேட்டையாடி, துவம்சம் செய்ய வேண்டும் என நீங்கள் திட்டம் தீட்டுகிறீர்கள். நீங்கள் அவர்களை வாள்களால் வெட்டியும், தீயினால் சுட்டும் தண்டிக்கக் காத்திருக்கிறீர்கள். எங்களை சித்திரவதை செய்வதிலும், சாதாரண, கெதியான மற்றும் சுருக்கமான தண்டனைகளை வழங்குவதிலும் நீங்கள் திருப்தி கொள்ள மாட்டீர்கள். எங்களுக்கு சரீர இம்சைகள் அளிப்பதன், மூலம் நீங்கள் எங்களை சித்திரவதைக்கு உள்ளாக்குகிறீர்கள். எங்கள் உடலிலுள்ள அவையவங்களைக் கிழித்து, இரணமாக்கி அதன் மூலம் எங்களது தண்டனையை அதிகரிக்கிறீர்கள். பாரம்பரிய வழக்கத்தில் கொடுக்கப் படும் சித்திரவதைகளை எங்கள் மீது திணிப்பதனால் மட்டும் உங்கள் மிருகத்தனமும், குரூரதன்மையும் திருப்தி கொள்ளாது. எனவே நீங்கள் புதிது புதிதாகக் கண்டுபிடித்த கொடுமைகளைக் கொண்டு எங்களை மேலும் கொடும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்குகிறீர்கள்.
அத்தியாயம் 13
சித்திரவதைக்கு உட்படுத்துவதற்கு ஏன் இந்த தீராத வேட்கை? கொடுமைக்கு உட்படுத்துவதற்கு ஏன் இந்த தீராத ஆசை? கிறிஸ்தவராக இருப்பது ஒரு குற்றம் அல்ல என்றால், கிறீஸ்தவராக இருப்பதற்கு உங்களுக்குள் காணப்படும் இரண்டு விருப்பத் தேர்வுகளில் ஏன் ஒன்றை தெரிவு செய்யக்கூடாது? கிறிஸ்தவராக இருப்பது ஒரு குற்றம் என்றால், ஒருவர் தான் கிறீஸ்தவர் என்று பிரகடப்படுத்தும் பொது, ஏன் அவர் கொல்லப்படாமைக்குக் காரணம் என்ன? அது ஒரு குற்றம் அல்ல என்றால், நீங்கள் ஏன் குற்றமற்றவர்களைத் துன்புறுத்துகிறீர்கள்? ஏனெனில், நான் அதை மறுத்திருந்தால், நான் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டிருப்பேன். உங்களால் தண்டிக்கப்படுவேன் என்ற பயத்தில் நான் வஞ்சகமாக பொய் சொல்லியிருந்தால், எனது முந்தைய நிலைமையையும், உங்கள் தெய்வங்களை நான் வணங்கவில்லை என்ற உண்மையையும் மறைத்திருந்தால், நான் சித்திரவதைக்கு உள்ளாகியிருக்க வேண்டும். அப்படியானால், குற்றத்தைச் செய்தவன் தான் குற்றவாளி அல்ல என்று ஒப்புக் கொள்வதுபோல, குற்றவாளி இல்லை என்று வழக்குகள் மூலமாக நிரூப்பிக்கப்பட்ட ஏனைய நிகழ்வுகளைப் போலவே, நானும் சித்திரவதை செய்யப்பட்டு, நான் செய்த குற்றத்தை ஒப்புக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்க வேண்டும். பின்னர், தவறு காரணமாக வாய்வழி சாட்சியத்தில் இருந்து வராத உண்மை, சரீர இம்சைகளை ஏற்படுத்துவதன் மூலம் பெறப்படுகிறது. ஆனால் இப்போது, என் சொந்த விருப்பத்தின் பேரில், நான் ஒரு கிறிஸ்தவன் என்று என் சொந்த வார்த்தைகளால், எனது குரலை உயர்த்தி அறிவிக்கிறேன். நான் ஒரு கிறிஸ்தவன் என்று அறிவிக்கிறேன். நீங்கள் வணங்கும் உங்கள் தெய்வங்களை நான் இரகசியமாகவோ அல்லது ஒளிவுமறைவுடனோ மறுக்கவில்லை. ஆனால் எல்லோர் முன்னிலையில்; அதாவது நீதிபதிகள் மற்றும் அதிகாரிகளினால் நடத்தப்பட்ட விசாரணையின் போது நான் அதுபற்றி பகிரங்கமாகவே பிரகடனம் செய்தேன். அப்படியிருக்கும் போது, நீங்கள் ஏன் என்னை சித்திரவதைக்கு உள்ளாக்குகிறீர்கள்? அப்படியானால், நீங்கள் முன்பு என்மீது குற்றம் சாட்டியது ஒரு அற்பமான விடயத்துக்காகவே. ஆனால் இப்போது நீங்கள் என்னை மேலும் மேலும் வெறுத்து, என்னைத் தண்டிக்கும் அளவுக்கு உங்கள் பக்கக் காரணிகளை பெரிதாக்கிக் கொண்டீர்களா? பொது இடத்திலும், ஜன நெரிசல் அதிகமான இடத்திலும், என்னைச் சுற்றி மக்கள் இருக்கும்போது, நான் ஒரு கிறிஸ்தவன் என்று தெளிவாக ஒப்புக்கொண்டு, உங்களையும் உங்கள் தெய்வங்களையும் பகிரங்கமாகவே விமர்சித்த போது, சரீரத்தின் பலவீனத்தைப் பற்றி ஏன் நீங்கள் கவலைப்படுகிறீர்கள்? உலக வாழ்க்கையில் சரீரத்தின் பலவீனம் பற்றி ஏன் வாதிட வேண்டும்? உங்களால் முடிந்தால், மனதில் உள்ள ஆற்றலை இல்லாது செய்யுங்கள் பார்க்கலாம்! மனதின் சக்தியை தகர்த்து, விசுவாசத்தை நிர்மூலமாக்கி அதன் மூலம் உங்களால் வெற்றிகொள்ள முடியுமா என்று பாருங்கள். உங்களால் இயன்றால், விவாதத்தின் மூலம், நன்கு கலந்துரையாடி, தர்க்கரீதியாக வெல்ல முடியுமா என்று பாருங்கள்.
அத்தியாயம் 14
உண்மையில், நீங்கள் வழிபாடும் தெய்வங்களுக்கு ஏதேனும் தெய்வீகமோ அல்லது சக்தியோ இருந்தால், அவர்கள் தங்களை நிரூபிக்கவும், தங்களை வெளிப்படுத்தவும் முன்வரட்டும். அவர்கள் தங்கள் மகிமையால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளட்டும். அப்படிப்பட்ட தெய்வங்களை வணங்காதோரைப் பழிவாங்க அவைகளுக்கு முடியாவிட்டால், அந்த தெய்வங்களை வணங்குவதால் என்ன பயன் ஏற்படப்போகிறது? ஏனென்றால், பழிவாங்கப் படுவோரை விட, பழிவாங்குபவர் அவரது அதிகாரத்தில் உயர்ந்தவர் என்றால், நீங்கள் உங்கள் தெய்வங்களை விட மேலானவர்கள் அல்லவா? எனவே, நீங்கள் வணங்குபவர்களை விட நீங்கள் உயர்ந்தவராக இருக்கும் பட்சத்தில், நீங்கள் அவர்களை வழிபடலாகாது. மாறாக, அவர்கள் தான் உங்களை வணங்க வேண்டும்! இந்த வழியில், உங்கள் பழிவாங்கல்களால் அவர்கள் பாதிக்கப்படும் போது அவைகளுக்கு பாதுகாப்பு வழங்கப் படுகின்றன. அவர்கள் ஆபத்தில் சிக்கி இருக்கும் போது, நீங்கள் அவர்களைப் பாதுகாப்பதால், அவை அழிவிலிருந்து தடுக்கப்படுகின்றன. உங்களால் பாதுகாக்கப் படுபவர்களை வணங்க, நீங்கள் வெட்கப்பட வேண்டும். உங்களால் பாதுகாக்கப்படுவோரிடம் இருந்து பாதுகாப்பை எதிர்பார்ப்பது என்பது நீங்கள் வெட்கித் தலை குனியவேண்டிய விடயமாகும்.
அத்தியாயம் 15
நாங்கள் அவர்களை வருந்தி அழைக்கும் போது, நீங்கள் அவர்கள் சொல்வதைக் கேட்கும் போது, அவர்களை பார்க்கும் போது, அவர்கள் மனநோய் என்ற அல்லல்களால் துன்புறுத்தப்பட்டு, சாத்தானால் ஆட்கொள்ளப்பட்ட உடல்களில் ஏற்படும் வேதனை மிகுந்த வார்த்தைகளால் துன்பங்களுக்கு உள்ளங்கையில், அவர்கள் மனிதக் குரலில் கத்திக் கூச்சலிட்டு, முணுமுணுக்கும் போது, அது தெய்வீகத் தனமான அதிகாரத்தின் வீச்சுகளால் ஏற்படும் வலியை அவர்கள் உணரும்போது, வரவிருக்கும் தீர்ப்பை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது. ஏனென்றால், நீங்கள் தெய்வங்களை வணங்குகிறீர்கள் என்று சொல்கிறீர்கள். அதேவேளை, அவர்கள் நீங்கள் அவர்களை வணங்குவீர்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். இதுபற்றி நாங்கள் சொல்வது உண்மை என்று தெரிந்து கொள்ளுங்கள். அப்படி இல்லாவிடில், நீங்கள் நம்பலாம் என்று நினைக்ககூடுமானால், நீங்கள் கேட்டுக்கொண்டபடி, அது (அசுத்த ஆவி) உங்களைப் பற்றிப் பேசும். அந்த அசுத்த ஆவி இப்போது உங்கள் இதயத்தை ஆட்கொண்டுள்ளது. இப்போது அசுத்த ஆவியானது, அறியாமையின் இருளுக்குள் உங்கள் மனதை இட்டுச்செல்கிறது. நீங்கள் இரந்து கேட்பவர்கள், எங்களிடம் இரந்து கேட்பதை நீங்கள் காண்பீர்கள். உங்களால் போற்றப்படுபவர்கள், எங்களுக்கு பயப்படுகிறார்கள் என்பதை நீங்கள் காண்பீர்கள். அவர்கள் எங்களுக்குக் கட்டுப்பட்டவர்களாகவும், எங்களால் அழைத்துச் செல்லப் படும் அடிமைகளைப் போல நடுக்கத்துடன் காணப்படுகிறார்கள். எங்களை எஜமானர்களைப் போல அவர்கள் மதிக்கிறார்கள் என்பதை நீங்கள் காண்பீர்கள். உங்கள் முன்னிலையில், இனிவரும் காலங்களில் கூட அந்த ஏமாற்று வேலைகளையும், தந்திரங்களையும் மறைக்க முடியாது என்பதை நீங்கள் காணும்போதும், கேட்கும்போதும், நீங்கள் இழைத்த தவறுகளைப் பற்றி நீங்கள் நிச்சயமாக குழப்பமடையக்கூடும்.
அத்தியாயம் 16
ஆகவே, கடவுளுக்குப் பயப்படாமல், இருளில் இருந்து வெளிச்சத்திற்கு வர விருப்பமின்றி, சதாகால மரணத்தின் பிணைப்புகளால் பிணைக்கப்பட்டு, அழியாத விசுவாசத்தை அடைய விரும்பாதது எவ்வளவு பெரிய கோழைத் தனம், எவ்வளவு பெரிய அறிவீனம், எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? கர்த்தர் நம்மை எச்சரிக்கும் தோரணையில் இவ்வாறு கூறுகிறார்: “உங்கள் கர்த்தரைத் தவிர வேறு எந்த கடவுளுக்கும் பலி ஒப்புக்கொடுப்பவன் மரணத்தின் மூலம் தண்டிக்கப்படுவான்.”[14] மறுபடியும் அவர் கூறுகையில்: “அவர்களுடைய பூமி சிலைகளால் நிறைந்துள்ளது; அவர்கள் தங்கள் சொந்த கைகள் மற்றும் விரல்களால் வடித்தவற்றையே வணங்குகிறார்கள். இவ்வாறு தாழ்ந்த மனிதன் அடக்கி ஒடுக்கப்பட்டு, உயர்ந்தவன் தாழ்த்தப் படுகிறான். எனவே அவர்களை நான் மன்னிக்க மாட்டேன்.”[15] நீங்கள் ஏன் போலி தெய்வங்களுக்கு சிரம் தாழ்த்தி அவர்களை வணங்குகிறீர்கள்? அஞ்ஞான சிலைகளுக்கும், பூமியிலே வடிக்கப்பட்ட உருவங்களும் உங்கள் அடிமைப்பட்ட உடலை வளைத்து ஏன் வணங்க வேண்டும்? கடவுள் உங்களை நிமிர்ந்து நேராக நிற்கும் நிலையில் படைத்தார். மற்றைய விலங்குகளைப் போல், வளைந்து பூமியை நோக்கி பார்க்கும் வகையிலே இறைவன் உங்களை படைக்கவில்லை. நீங்கள் ஒரு உயர்ந்த, மற்றும் சிறந்த ஆளுமை மற்றும் விண்ணகத்தையும் தேவனையும் நோக்கிப் பார்க்கக்கூடிய கம்பீரமான ஒரு முகத்துடன் படைக்கப்பட்டுள்ளீர்கள். நேராகப் பாருங்கள், உங்கள் கண்களை விண்ணகத்தை நோக்கி உயர்த்தி, கடவுளைப் பார்த்து அவரைத் தேடுங்கள். அவ்வாறு செய்வதன் மூலம், பூமியில், அதாவது கீழே காணப்படும் காரணிகளிலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ள முடியும். உங்கள் தலையை உயர்த்தி, உங்கள் இதயத்தை உயர்ந்த விண்ணக நோக்கங்களை அடையும் வகையில் வழிநடத்துங்கள். நீங்கள் வழிபாடும் பாம்பைக் கொண்டு, மரணத்தின் அழிவுக்கு முன் ஏன் மண்டியிடுகிறீர்கள்? சாத்தானுடனும், அவன் காட்டும் வழியிலும் சென்று, நீங்கள் அந்த கொடிய சாத்தானின் சூழ்ச்சியில் அகப்பட்டு ஏன் அழிவில் விழுகிறீர்கள்? நீங்கள் இந்தப் பூமியில் அவதரித்தபடியால், அந்தப் பிறப்பின் விழுமியங்களப் பாதுகாக்க முயற்சி செய்யுங்கள். கடவுள் உங்களைப் படைத்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் வாழ முயற்சி செய்யுங்கள். உங்கள் முகம் மற்றும் உடலின் தன்மைக்கு ஏற்ப உங்கள் மனத்தைத் திடப்படுத்தி அதற்கேற்ப வாழ முயற்சி செய்யுங்கள். நீங்கள் கடவுளை அறிந்து கொள்ளும் முன், முதலில் நீங்கள் உங்களைபற்றி அறிந்து கொள்ள முயலுங்கள். மனிதனின் மந்தபுத்தியாலும், பிழையான நோக்குடனும் அணுகப்பட்ட சிலைகளை வழிபடுவதைக் கைவிடுங்கள். இவற்றை எல்லாம் விட்டுவிட்டு, எம் இறைவனாகிய கடவுளிடம் திரும்புங்கள். நீங்கள் அவரிடம் கேளுங்கள். அவர் நிச்சயம் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார். எம்மை விரைவாக ஆயத்தப்படுத்தவும், மீட்டெடுக்கவும் பிதாவாகிய சர்வேசுரனால் அனுப்பப்பட்ட எம் ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவை விசுவாசியுங்கள். எம் இறைவனாகிய தேவன் மற்றும் எம் கர்த்தராகிய கிறிஸ்துவின் ஊழியர்களைத் துன்புறுத்துவதையும், அவர்களைக் காயப் படுத்துவதையும் நிறுத்துங்கள். காரணம் என்னவெனில், அவர்கள் காயப்படும்போது, தெய்வீக இரக்கமானது அவர்களைப் பாதுகாக்கும்.
அத்தியாயம் 17
இந்த காரணமாக, உங்கள் துன்பங்கள் எவ்வளவு அதிகரித்தாலும், எவ்வளவு ஏராளமாக இருந்த போதிலும், நாங்கள் கைது செய்யப்படும்போது எங்களில் ஒருவரும் அதற்கு எதிராகப் போராடவோ, உங்கள் நியாயமற்ற தீய செயல்களின் நிமித்தம், எங்கள் மக்கள் உங்களைப் பழிவாங்க மாட்டார்கள். வரவிருக்கும் பழிவாங்கலை எதிர்கொள்ள நாம் கொண்ட உறுதியானது, நம்மை பொறுமையாக வைத்திருக்கிறது. தீங்கு விளைவிக்காதவர்கள், தீங்கு விளைவிப்பவர்களுக்கு வழி விட்டு ஒதுங்கி விடுவார்கள்; அப்பாவிகள் தண்டனைகளையும் சித்திரவதைகளையும் ஏற்றுக் கொள்கிறார்கள். மேலும் அவர்கள் அனுபவிக்கும் எந்தவொரு துன்புறுத்தலுக்கும் சித்திரவதைக்கும், அவர்களைத் துன்புறுத்தபவர்கள் மீது பழி வருவது உறுதியானது என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். துன்பங்களால் ஏற்படக்கூடிய காயம் எவ்வளவு பெரியது என்பதால், அந்தத் துன்புறுத்தலுக்கான பழிவாங்கல் மிகவும் நியாயமானதாகவும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவும் இருக்கும். எங்கள் பெயருக்கு எதிராக, தீயகுணம் கொண்ட மனிதனின் நோக்கங்கள் எழுச்சி பெற்றதில்லை. அத்தோடு, அது தெய்வீக பழிவாங்கல் போன்றவற்றுடன் ஒன்றித்தும் இருக்க வில்லை. கடந்த கால நிகழ்வுகளையிட்டு நாம் மௌனமாக இருந்தபோதிலும், கடவுளை வணங்குபவர்களுக்கு அடிக்கடி பதிலடி கொடுப்பதில் தெளிவான ஒரு அபிப்பிராயம் இல்லாதிருந்தாலும், சமீபத்திய நிகழ்வுகளின் சான்றுகள், இவை யாவும் இவ்வளவு விரைவாக நடந்தேறுகிறது என்பதனை உறுதிப்படுத்துகிறது. உறவுகள் முறிந்து போவதும், செல்வம் மற்றும் உடைமைகள் நம்மிடம் இருந்து இல்லாமல் போவதும், இராணுவத்தினர் மற்றும் சிப்பாய்களின் அழிவு மற்றும் கோட்டைகளின் வீழ்ச்சி போன்றவை இதற்குக் காரணம் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த நிகழ்வுகள் தற்செயலானவை என்றோ, அல்லது எதேச்சையாகவோ நடந்தவை என்று ஒருவரும் கருத இடமளிக்க வேண்டாம். இதைப்பற்றி நீண்ட காலத்திற்கு முன்பு வேதாகமத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: “பழிவாங்குவது பற்றிய தீர்மானம் என்னுடையது. நானே அந்த விளைவுகளைத் திருப்பித் தருவேன்”[16] அதேபோன்று, பரிசுத்த ஆவியானவர், மீண்டும் எம்மைத் தெளிவுபடுத்தும் தோரணையில், இவ்வாறு உரைக்கிறார்: “தீமை செய்தால், நான் தீமையைத் திருப்பித் தருவேன் என்று சொல்லாதே, கர்த்தருக்காக காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார்.”[17] இவ்வாறு, கடவுளின் கோபத்தின் மூலம் நடந்தேறும் இவை அனைத்தும் நம்மைச் சுற்றி நடப்பவை அல்ல; ஆனால், அவை எம் அனைவரையும் நல்வழிப்படுத்தவே நடக்கின்றன என்பது தெளிவாகிறது.
அத்தியாயம் 18
நடக்கும் இந்த விஷயங்களுக்கு கிறிஸ்தவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று யாரும் நினைக்கக்கூடாது. கிறிஸ்தவர்களாக இருக்கும் காரணத்தால், நடக்கும் இவ்வாறான காரணிகளுக்காக அவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று யாரும் நினைத்துவிடக் கூடாது. ஏனெனில் இப்படிப்பட்ட நிகழ்வுகளால் அவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். எல்லா மகிழ்ச்சியையும் மகிமையையும் தன்னகத்தே கொண்ட மனிதன், உலகில் நடக்கும் அழிவுகளால் தனக்கும் தண்டனை உண்டு என உணர்கிறான். மனிதனானவன் இப்பூவுலக வாழ்வின் போது நோய்வாய்ப்பட நேர்ந்தால், அவனது வாழ்க்கைக்குப் பிறகு அதை குணப்படுத்த முடியா விட்டால், அதையிட்டு அவன் மிகுந்த துக்கத்திலும் மிகுந்த வேதனையிலும் இருக்க நேரிடும். இந்த உலகில் அவன் வாழ்ந்த வாழ்க்கையின் பலனானது முற்றிலுமாக பறிக்கப்பட்டிருந்தால், அவனது நிம்மதி, ஆறுதல் எல்லாம் இங்கேயே நிறைவு பெற்றிருக்கும். அவனது எளிமையான மற்றும் குறுகிய காலம் வாழ்ந்த வாழ்க்கையினூடாக, ஏதாவது இன்பத்தையோ அல்லது இனிமையையோ பெற்றிருந்தால், அவன் இந்த வாழ்க்கையிலிருந்து விடைபெற்ற பிறகு, கவலை கொள்வதற்கு எஞ்சியிருப்பது அவன் அனுபவித்த தண்டனை மாத்திரமே. ஆனால் எதிர்காலத்தில் கிடைக்கவிருக்கும் ஆசீர்வாதங்களில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு, தற்காலத்தில் நடக்கும் தீமைபற்றியும், அதனால் பாதிக்கப்படுவது பற்றியும் கவலை கொள்வதில்லை. இறுதியாக, நாங்கள் அழிவுகளை எண்ணி அவற்றுக்குத் தலைவணங்க மாட்டோம். அதனால் நாங்கள் நொறுங்கிப்போய்விடவில்லை. அவற்றால் நாம் துக்கப்படப் போவதுமில்லை. நமக்கு ஏற்படும் இந்த அழிவுகள் காரணமாக எமது சரீரத்துக்கு ஏற்படக்கூடிய ஏதேனும் நோய்நொடி குறித்தோ நாங்கள் முறையீடு செய்யவோ அல்லது வருத்தப்படவோ இல்லை. நாம் சரீரத்தின் சக்தியினால் அல்ல; ஆன்மாவின் சக்தியால் தான் வாழ்கிறோம். சரீரத்தின் பலவீனத்தை ஆன்மாவின் சக்தியைக் கொண்டு வென்றேடுப்போம். எங்களை சித்திரவதை செய்து, மிகவும் களைப்படையச் செய்ய நீங்கள் மேற்கொண்ட அத்தனை காரணிகளும், எம்மைப் பலமுள்ளவர்களாகச் செய்கின்றன என்றும் அவை எம்மை மேலும் பலப்படுத்தும் என்பதையும் நாம் நிச்சயமாக அறிவோம்.
அத்தியாயம் 19
நீங்களும் நாமும் ஒரே விதமான அழிவுக்கு முகம்கொடுக்கவில்லை என்பதை நீங்கள் காண்கிறீர்கள். அப்படியிருக்க, நாங்களும் உங்களைப் போலவே பேரழிவுக்கு முகம் கொடுக்கிறோம் என்று நீங்கள் எப்படி நினைக்கக்கூடும்? நீங்கள் எப்போதும் கூச்சலிட்டு, முறையீடு செய்து, பொறுமையின்மை சார்ந்த காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் அப்படியல்ல. எப்போதும் ஒரு வலுவான மற்றும் மதவிடயங்களை அணுகும்போது, அதற்கான பொறுமையுடனேயே அணுகுகிறோம். அதனூடாக, எப்போதுமே அமைதியுடனும், கடவுளுக்கு நன்றி உள்ளவர்களாகவும் இருப்போம். அதேபோல், அதுபற்றி இங்கு எதையும் வெளிப்படுத்துவதில்லை. அவற்றை மகிழ்ச்சியுடனோ அல்லது வளமான ஒரு நோக்கத்துடன் வெளிப்படுத்தவில்லை. ஆயினும், மாறிவரும் உலகில் உள்ள அனைத்து தடைகளுக்கும் எதிராகவும், மென்மையுடனும், கனிவுடனும், உறுதியுடனும் அது காணப்படுகிறது. தெய்வீக வாக்குறுதிகளில் கூறப்பட்டுள்ள காலம் வரும் வரை காத்திருக்கிறது. இந்த உடலானது மற்றையவர்களுடைய உடலைப் போலவே இருக்கும் வரை, அதன் பௌதீக நிலைமையும் பொதுவானதாக இருக்க வேண்டும். அவ்வாறே, மனித இனத்தின் அங்கத்தவர்கள் இந்த வாழ்க்கையை விட்டு வெளியேறாது இருக்கும் பட்சத்தில், மனித வர்க்கத்தினர் இடையே பிரிவினைக்கு இடமில்லை. அதே சமயம், நன்மை, தீமை போன்றவற்றுடன் பிணைக்கப்பட்ட நாம், எமது உடல் என்னும் கூட்டினுள்ளே அடைபட்டு இருப்போம். தற்காலிகமான எமது உலக வாழ்வின் காலம் நிறைவுறும் வரை, நம் நமது வீட்டிற்குள் வரும் எதையும் அனுமதிப்பது போலவே, அவற்றையும் எமது விதிப்பயன் என்று கருதி அனுபவிப்போம். பின்னர் நாம் நித்திய மரணம் அல்லது சதாகாலமும் அழியாத வீட்டிற்குள் பிரவேசிக்க வேண்டி மாற்றம் பெறுவோமாக. எனவே நாம் எங்களை உங்களுடன் ஒப்பிட முடியாது. காரணம், நாம் உங்களைப் போன்றவர்கள் அல்ல என்பதால். ஏனென்றால், இந்த உலகில் உங்களது சரீர வாழ்க்கையில் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இன்னல்களைப் போலவே, எங்கள் சரீர வாழ்க்கைக்குள்ளும் இருக்கும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். தண்டிக்கும் அனைவரும் அந்தத் தண்டனை வேதனையை ஏற்படுத்தவேண்டும் என்ற அர்த்தத்தில் தண்டிப்பதால், அவர் உங்கள் தண்டனையில் பங்கேற்பவர் அல்ல என்பது உங்களுக்குத் தெரியும். அத்தோடு அவர் நீங்கள் அனுபவிக்கும் வேதனையை உணர்வதுமில்லை.
அத்தியாயம் 20
விசுவாசத்தின் நம்பிக்கையும் விடாமுயற்சியின் சக்தியும் நம்மில் ஏராளமாக உள்ளன. அதுபோல், நொறுங்கிப்போன உலகின் இடிபாடுகளின் மத்தியில் இருந்து எமது மனம் உயர்ந்து காணப்படுகிறது. அங்கே நம்முடைய தைரியமானது அசைக்க முடியாததாகவே உள்ளது. மேலும், எங்கள் பொறுமையானது, ஒருபோதும் மகிழ்ச்சி கொள்ளாமல் இருந்ததில்லை. அதேபோல், மேலும், நமது ஆன்மாவானது எப்போதும் கடவுளின் பாதுகாப்பில் திளைத்து இருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் தீர்க்கதரிசி ஊடாக, தனது மோட்சானந்த உரையில் எமது நம்பிக்கையையும், விசுவாசத்தையும் சக்தி மயப்படுத்தும் நோக்கில் இவ்வாறு கூறுகிறார்: “அத்தி மரம் இன்னும் தளிர் விடாவிட்டாலும், திராட்சைக்கு கொடி கனிகொடுக்காவிட்டாலும், ஓலிவ் மரம் பலனைத் தராவிட்டாலும், வயல்களில் இருந்து முற்றிய கதிர்கள் பெறப்படா விட்டாலும், வடலியில் உள்ள செம்மறியாட்டு மந்தைகள் கொன்று துவம்சம் செய்யப்பட்டாலும், கொட்டில்களில் மாடுகள் இல்லாமற் போனாலும், நான் கர்த்தரில் வாழும் வாழ்க்கையையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைவேன். என்னை இரட்சிக்கும் இறைவனையிட்டு நான் மிகவும் அகமகிழ்வேன்.”[18] கடவுளின் அடியோரும், கடவுளை வணங்குபவரும், விசுவாசத்திலும், சத்தியத்திலும் நம்பிக்கை கொண்டோரும், விசுவாசத்தின் ஸ்திரத்தன்மையில் நிலைநாட்டப் படுகிறார்கள் என்றும், இந்த உலக நடப்பு மற்றும் உலக வாழ்க்கையின் பாதிப்புகளால் அவர்கள் என்றும் அசைய மாட்டார்கள் என்றும் அவர் கூறுகிறார். திராட்சைக்கொடி பலன் தரவில்லை என்றால்; ஓலிவ் மரம் பலனைத் தரவில்லை என்றால், வயல்களில் கதிர்கள் வாடி வதங்கிப் போய் பலன் தராவிட்டால், கிறிஸ்தவர்களுக்கு அதனால் என்ன நடக்கக்கூடும்? பரலோக இராச்சியத்தின் அனைத்து சலுகைகளும், ஏராளமான கொடைகளும் அவர்களுக்காக விண்ணகத்திலே அருளக் காத்திருக்கும் இறைவனின் ஊழியர்களுக்கு இதனால் என்ன நடக்கக்கூடும்? அவர்கள் எப்போதும் கர்த்தரிடத்தில் அளவில்லாத ஆனந்தத்தில் திளைப்பதோடு, தங்கள் கடவுளின் பிரசன்னத்தில் முடிவில்லா மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்கள். அதே சமயம், அவர்கள் ஆசீர்வாதங்களையும் எதிர்காலத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் சௌபாக்கியங்களையும் எதிர்பார்க்கிறார்கள். அதற்காக அவர்கள், உலகில் காணப்படும் எல்லாவிதத் தீமைகளையும் அழிவுகளையும் அச்சமின்றி சகித்துக்கொண்டும், அவற்றை எதிர்கொள்ளவும் செய்கிறார்கள். ஏனென்றால், நம்முடைய உலகவாழ்வுக்குரிய அவதாரத்தைக் கைவிட்டு, ஆன்மாவால் மீண்டும் பிறந்து, மீளுருவாக்கம் செய்யப்பட்டு, அதன்பின்னர் உலக இச்சைகளுக்காக வாழாமல், கடவுளிடம் திரும்பி, அவருடைய சித்தத்தின்படி வாழ முயற்சிக்காவிட்டால், இறைவனுடைய வெகுமதிகளையோ அன்றி அவர் அளித்த வாக்குறுதிகளை அடைவதற்கோ நாம் எமக்கு உண்டான தகுதியை இழக்கிறோம். ஆனால் நாம் எப்போதும் இறைவனைத் தேடுவோமாக. எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பாற்றவும், பூமியின் மீது மழையைப் பெறவும், அழிவுகளை தடுக்கவோ அல்லது குறைக்கவோ அவரிடம் செபிப்போமாக. அதேபோல, தேவனுடைய கோபத்துக்கு ஆளாகாது, அவரைப் பிரியப்படுத்தும் படி நடந்து, விடா முயற்சியுடனும் மன்றாடி, உங்களுக்கு விண்ணகத்திலே ஒதுக்கப்பட்ட இடத்தை அடையும்படியும், இரட்சணியத்தை எமக்கு அளிக்கும் படியும் தொடர்ந்து விசுவாசத்தோடு, அயராது செபிப்போமாக.
அத்தியாயம் 21
ஆகவே, நமக்கும், மத அவதூறு செய்பவர்களுக்கும், கடவுளை வணங்குபவர்களுக்கும், கடவுளை எதிர்ப்பவர்களுக்கும் இடையில் சதைக்கும் உடலுக்கும் சமத்துவம் காணப்படுவதால், இந்த இரு குழுக்களுக்கும் உலக வாழ்க்கையின் தொல்லைகள் பொதுவானவை என்று யாரும் எண்ணுதல் ஆகாது. அதன்படி, இந்த விடயங்கள் சம்பந்தமாக நடைபெறும் யாவும், தனக்கு ஏற்படாது என்று அவர் நினைக்கிறார். இறைவன் தாமே அவருடைய முந்தைய தீர்க்கதரிசனங்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் உறுதிமொழிகள் ஊடாக, அநீதியானவர்கள் மீது அவரது கோபாக்கினை வரும் என்று முன்னறிவித்ததால், மனித குலத்தால் நமக்கு ஏற்படும் துன்புறுத்தல்களில் குறைவு ஏதும் இருக்காது. அப்படியிருந்தும், மனம் நொந்து போயிருப்போரையும், காயம் ஏற்பட்டோரையும் புனிதமான விதத்திலும், தெய்வீக வழியிலும் பாதுகாத்த போதும் பழிவாங்கல்கள் தொர்ந்து கொண்டே இருந்தன.
அத்தியாயம் 22
இதற்கிடையில், இங்கே எங்களுக்கு எத்தனை பெரிய காரியங்கள் எல்லாம் ஆற்றப்பட்டுள்ளன! கடவுளின் கோபத்தை நாம் அறிந்துகொள்ளும் படி, ஏதாவது ஒரு உதாரணம் கொடுக்கப் பட்டுள்ளது.அதேவேளை, நடுத்தீர்வை நாள் என்று ஒன்றும். இதை எமக்கு அறியத்தரும் முகமாக, வேதாகமம் இவ்வாறு கூறுகிறது: “சத்தமாக அழுது புலம்புங்கள்; கர்த்தருடைய நாள் நெருங்கிவிட்டது; இது சர்வத்துக்கும் வல்ல சர்வேசுரனால் அனுப்பப்பட்ட பேரழிவாக வருகிறது. இதோ, தேசத்தை வெறுமையாக்கி, அதில் இருக்கும் பாவிகளை வேரறுக்க, கர்த்தருடைய நாள் மிகுந்த கோபத்தோடும் ஆத்திரத்தோடும், கடுமையாகவும் வருகிறது.”[19] அதேபோல், மற்றும் ஓர் இடத்திலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: “உலையில் உள்ள தீச்சுவாலை போல எரியும் நாள் வருகிறது; அனைத்து அகங்காரம் கொண்டவர்கள் மற்றும் கொடூரச் செயற்பாடுகளில் ஈடுபட்டோர் அனைவரும் எழுந்து, வேரோ அல்லது கிளைகளோ கூட மிஞ்சாவண்ணம் அவர்கள் களையெடுக்கப்படுவார்கள். அந்த நாள் நிச்சயம் வரும் என்று சேனைகளின் கர்த்தர் கூறுகிறார்.[20] பிற தேசத்தினரும் தீயினால் துவம்சம் செய்யப்படுவர் என்று கர்த்தர் தனது தீர்க்கதரிசனத்தில் கூறுகிறார். அதாவது, தெய்வீக தேசத்தை நிந்திப்பவர்கள், அவதூறு செய்பவர்கள், ஆன்மீக ரீதியில் மீண்டும் பிறக்காதவர்கள், கடவுளின் மகன்களாக மாறாதவர்கள், அதாவது, தெய்வீக இனத்தைச் சேர்ந்த பிற தேசத்தினர், நிந்திப்பவர்கள், ஆன்மீக ரீதியில் மறுபிறவி எடுக்காதவர்கள் மற்றும் கடவுளின் பிள்ளைகளாக மாறாதவர்கள் யாவரும் அழிந்து போவர். மீண்டும் பிறந்து, கிறிஸ்துவின் அடையாளத்தைப் பெறுபவர்கள் மட்டுமே இரட்சிக்கப்படுவார்கள் என்று கடவுள் பிறிதொரு இடத்திலும் சொல்கிறார். உலகையும் அங்குள்ள மனிதகுலத்தையும் அழிக்க அவர் தனது தூதர்களை அனுப்பும்போது, இறுதி காலத்தைப் பற்றி அவர் கூறுவதைப்பார்க்கிலும், மிகவும் நுணுக்கமான முறையில் நம்மை இவ்வாறு எச்சரிக்கிறார்: “நான் கேட்டுக்கொண்டிருந்த போது, அவர் மற்றவர்களிடம், நீங்கள் அவரைப் பின் தொடர்ந்து நகரத்திற்குள் சென்று அங்கே தாக்குதலைத் தொடங்குங்கள். உங்கள் கண்களில் கருணையை வெளிப்படுத்தாதீர்கள். இரக்கம் காட்ட வேண்டாம். எனது புனித ஸ்தானத்தில் தொடங்கி, முதியோர்கள், வாலிபர்கள், யுவதிகள், இளைஞர்கள் மற்றும் கன்னியர் யாவரையும் கொன்று அழித்துவிடுங்கள். ஆனால் அடையாளம் இடப் பட்டவர்கள் எவரையும் நீங்கள் தொடக்கூடாது.[21] ஆனால் இந்த அடையாளம் என்றால் என்ன, அது உடலின் எந்த பகுதியில் இது இருக்கிறது என்பதை கடவுள் வேறொரு இடத்தில் இவ்வாறு விளக்குகிறார்: “கர்த்தர் அவனை நோக்கி கூறுகையில்; “முழு நகரத்துக்கும், அதாவது எருசலேமுக்குச் சென்று, அங்கே செய்யப்படும் வெறுக்கத்தக்க காரியங்களில் ஈடுபட்டு, அதனைப் பற்றி பெருமூச்சு விட்டு, கூச்சலிடும் மக்களின் நெற்றிகளில் ஒரு அடையாளத்தை இடுங்கள்.”[22] மேலும், கிறிஸ்துவின் பாடுகளும், அவர் சிந்திய திரு இரத்தமும் இந்த அடையாளத்தை பற்றிக் குறிக்கின்றன. எவராவது ஒரு நபர் இந்த அடையாளத்துடன் காணப்பட்டால், அவர் கடவுளின் சாட்சியத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டவர் ஆகிறார். கடவுள் இவ்வாறு கூறுகிறார்: “இந்த இரத்தம் நீங்கள் வசிக்கும் வீடுகளில் உள்ள உங்கள் அனைவருக்கும் அடையாளமாக கொடுக்கப் பட்டிருக்கும். நான் அந்த இரத்தத்தைக் கண்டு உங்கள் அனைவரையும் கடந்து செல்வேன். நான் எகிப்தின் கரங்களைத் தாக்கும் போது, அந்த அழிவின் தொற்றானது உங்கள் மீது படியாது.”[23] முன்னர் செம்மறிகளைக் கொன்ற அதே விதத்தில், பின்னாளில் கிறிஸ்துவுக்கு நடக்கும் என்ற உண்மை நிதர்சனமானது. அந்நாளில் எகிப்தின் மீது படையெடுத்த போது, ஏற்கனவே குறிப்பிட்டிருந்த படியே, செம்மறிப் பிறுவையின் இரத்தத்தால் அடையாளப்படுத்தப்பட்டவர்கள் தவிர்ந்த, வேறு எவரும் அந்தத் தாக்குதலில் இருந்து தப்ப முடியாது. அதுபோலத்தான், உலக அழிவின் போதும், கிறிஸ்துவின் திரு இரத்தத்தின் அடையாளத்தைக் கொண்டவர்கள் மட்டுமே இரட்சிக்கப்படுவார்.[24]
அத்தியாயம் 23
எனவே, இன்னும் காலம் எஞ்சியிருக்கும் நிலையில், மரங்களைப் பாருங்கள், அத்தோடு நித்திய மீட்பையும் பாருங்கள். உலக முடிவு நெருங்கி வரும் காரணத்தால், கடவுள் மீது பயபக்தி கொண்டு, உங்கள் மனதை கடவுளை நோக்கித் திருப்புங்கள். இந்த உலகில் நீதிமான்கள் மற்றும் சாந்த குணமுள்ளவர்கள் மீது உங்கள் அதிகாரமற்ற, வீண் ஆதிக்கத்தை செலுத்துவது பற்றி மகிழ்ச்சி கொள்ள வேண்டாம். நாம் உங்கள் தெய்வங்களை வணங்காத காரணத்தால், தீய காரியங்கள் நடக்கும் என்று நீங்கள் கூறக்கூடாது. ஏனெனில் வளமான மற்றும் உணவு உற்பத்தி பயிர்களை விட, வெற்றுக் கதிர்களும், களைகளும் வயல்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆகவே, இது கடவுளின் கோபம் என்பதையும், கடவுளின் நிராகரிப்பு என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவருடைய ஆசீர்வாதங்களைப் பெறத் தெரிவு செய்யப் படாதவர், குறைந்தபட்சம் கடவுளிடம் இருந்து வரும் பெருந்தொற்றின் போதெனும் அடையாளம் கண்டுகொள்ளப்படக்கூடும். தீர்க்கதரிசி மூலம், கடவுள் இவ்வளவு காலத்துக்குப் பிறகு, காலம் தாழ்த்தியேனும், கடவுளைத் தேடும்படி உங்களை எச்சரிப்பதோடு மட்டும் அல்லாமல், உங்களை இவ்வாறு ஊக்குவிக்கிறார்: “கடவுளைத் தேடுங்கள், அப்போது உங்கள் ஆன்மா வாழும்.”[25] குறைந்தபட்சம், தாமதமாகவேனும் கடவுளை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், கிறிஸ்துவும் அவருடைய வருகையைபற்றி எம்மை எச்சரித்து, தெளிவுபடுத்துகையில் இவ்வாறு கூறுகிறார்: “இது தான் நித்திய வாழ்வு. அவர்கள் ஒரே உண்மையான கடவுளை அறிந்து கொள்ளட்டும், அவர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவை அவர்கள் அறிந்து கொள்ளட்டும்.”[26] ஒருபோதும் உங்களை ஏமாற்றாத அவரை நம்புங்கள். இவை யாவும் நடக்கும் என்று எதிர்வு கூறியவரை நீங்கள் நம்புங்கள். விசுவசிப்பவர்களுக்கு, நித்திய வாழ்வின் வெகுமதியை அளிப்பவரை நம்புங்கள். அவிசுவாசிகளுக்கு, நித்திய நரக நெருப்பினால் தண்டனையை அளிப்பவர் மீது நம்பிக்கை வையுங்கள்.
அத்தியாயம் 24
நடுத்தீர்ப்பு நாள் வரும்போது, விசுவாசத்தின் மகிமை எப்படியாக இருக்கும், துரோகிகளுக்கு கிடைக்கும் தண்டனை என்ன மாதிரியான இருக்கக்கூடும்! விசுவாசிகளுக்கு எப்படிப்பட்ட சந்தோஷமும், அவிசுவாசிகளுக்கு எவ்வளவு துக்கமும் ஏற்படக்கூடும்! ஏனென்றால், அவர்கள் இங்கு இருந்த போது முன்பு விசுவாசிப்பதற்கு தயக்கம் காட்டினர். இப்போது அவர்களால் விசுவாசத்துக்குள் மீண்டும் பிரவேசிக்க முடியவில்லை! அவிசுவாசிகள், சதாகாலத்துக்கும் சுவாலை விட்டெரியும் நரகத் தீயின் தண்டனையால் அழிக்கப் படுவார்கள். மேலும், நரகத் தீயின் சித்திர வதைகளிலிருந்து நிவாரணம் பெறவோ, அதற்கான வாய்ப்போ இல்லை. அத்தோடு, நரக வேதனைக்கு எப்போதும் முடிவே இல்லை. அவர்களின் ஆன்மாக்களும், உடல்களும் முடிவில்லாத துன்பத்திற்கும் சித்திர வதைக்கும் உட்படுத்தப் படுகின்றன. இந்த உலகில் நாம் குறிப்பிட்ட சிறிது காலம் மட்டுமே பார்த்த ஒருவரை அங்கே நாம் நிரந்தரமாகப் பார்ப்போம். துன்புறுத்தப் பட்டவர்களின் கொடூரமான கண்களில் காணப்படும் தற்காலிக தோற்றம், நிரந்தர பார்வையால் ஈடுசெய்யப்பட வேண்டும். பரிசுத்த வேதாகமத்தில், விசுவாசத்தைப்பற்றி இவ்வாறு கூறப் பட்டுள்ளது: “அவர்கள் வெளியே சென்று, எனக்கு எதிராக பாவம் செய்த பாவிகளின் மரித்த உடல்களைப் பார்ப்பார்கள். அவர்களுடைய சடலங்களில் காணப்படும் புழுக்கள் உயிப்பதுமில்லை, அவர்கள் மீது எரியும் தீ அணைவதும் இல்லை. அவர்கள் சரீரத்தாலான எல்லா உயிரினங்களுக்கும் வெறுக்கத் தக்கவர்களாக இருப்பார்கள்.”[27] மீண்டும் ஒரு முறை, பின்வருமாறு கூறப் பட்டுள்ளது: “அப்பொழுது நீதிமான்கள் தம்மைத் துன்புறுத்தியவர்களுக்கு எதிராக முழு விசுவாசத்துடன் எழுந்து நின்று அவர்களின் துன்பத்தைத் தணிப்பார்கள். அதைப் பார்க்கும்போது, அவர்கள் பயத்தில் அஞ்சி நடுங்குகிறார்கள். அவர்கள் எதிர்பார்த்திராத மீட்பின் துரிதத்தை எண்ணி வியப்பார்கள். அவர்கள் தங்களுக்குள் மனந்திரும்பி, தமது மனதால் நிம்மதிப் பெருமூச்சு விட்டு இவ்வாறு சொல்லிக் கொள்வார்கள்: “சிறிது காலம் எங்களால் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானவர்கள் தான் இவர்கள்” என்று. அவர்களது வாழ்க்கை கேலிக்குரியது என்றும் அவர்களின் மரணம் ஒரு அவமானமானது என்றும் நாம் நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்? அப்படியானால், அவர்கள் இப்போது தேவனுடைய பிள்ளைகள் இடையே எவ்வாறு கணக்கிடப் பட்டு, புனிதர்களாக ஏற்றுக்கொள்ளப் படுகிறார்கள்? அப்படியென்றால், நாம் சத்தியத்தின் பாதையிலிருந்து விலகிபோய் விட்டோம் என்பது தெளிவாகிறது. அவ்வாறே, நியாயத்தின் ஒளியானது எங்கள் மேல் விழவில்லை. மேலும் சூரியன் நம்மீது பிரகாசிக்கவில்லை. நாம் அக்கிரமம், தீமை மற்றும் அழிவுக்கான பாதையில் சென்று, அங்கே வழி தெரியாது சிக்கித் தவிக்கிறோம். மேலும், நாங்கள் கடினமான பாதைகளை கடந்து சென்றோம். அப்படியிருந்தும், கர்த்தர் காட்டிய வழியை அறிந்துகொள்ள முடியாமல் இருந்தோம். ஆணவத்தால் நமக்குக் கிடைக்கப்போகும் நன்மை தான் என்ன? அப்படி இல்லையென்றால், எங்கள் செல்வத்தைப் பற்றி தற்பெருமை பாராட்டுவதில் என்ன நன்மை விளையப்போகிறது? அவை அனைத்தும் நிழல் போல மறைந்து போய்விட்டன.”[28] பின்னர் மனந்திரும்புதலில் எவ்வித பலனும் இல்லாமல், அழுது புலம்பி, பலனற்ற செபத்தால் கிடைக்கும் தண்டனையின் வலி உணரப்படும். நித்திய வாழ்வைப் பற்றி நம்பாதவர்கள், நித்திய தண்டனை பற்றி வெகுவாகக் காலம் தாழ்த்தியே அறிந்துகொண்டனர்.
அத்தியாயம் 25
எனவே, பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நாங்கள் எங்கள் மனதால் உங்களுக்கு, வேண்டிய ஆலோசனையையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உபகாரங்களை செய்கிறோம். நாம் வெறுப்பை மனதிலே கொள்ளாதபடியாலும், அந்த காரணத்திற்காகவே நாம் கடவுளுக்கு மிகவும் பிரியமானவர்களாக இருப்பதாலும், நம்மீது மீண்டும் காயத்தை ஏற்படுத்தினால் கூட, நாம் அதற்கு பதிலடி கொடுத்து பழிக்குப் பழி வாங்க மாட்டோம். சந்தர்ப்பம் அமையும் போது; அதாவது, இந்த வாழ்க்கையில் இன்னும் ஏதோ மிச்சம் இருக்கும் என்று நாம் என்னும் போது, கடவுளைத் திருப்திபடுத்தும் நோக்கில் வாழும்படி நாம் கேட்டுக்கொள்கிறோம். அத்தோடு, அஞ்ஞான இருளிலும், மூடநம்பிக்கைகளின் ஆழத்திலிருந்து விடுபட்டு, உண்மையான மதநம்பிக்கை என்ற பிரகாசமான வெளிச்சத்திற்கு வரும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறோம். உங்களிடம் உள்ள நன்மைகள் மற்றும் அனுகூலங்கள் குறித்து நாங்கள் ஒருக்காலும் பொறாமைப்பட வில்லை. அதேபோல், தெய்வீக அனுகூலங்களையும் நாம் உங்களிடம் இருந்து மறைக்கவில்லை. நீங்கள் உமிழும் வெறுப்புக்கு பதிலாக, நாங்கள் காரூண்யத்தோடு பிரதி உபகாரம் செய்வோம். எங்களுக்கு விதிக்கப்பட்ட சித்திரவதை மற்றும் தண்டனைக்கு பதிலாக, மீட்பின் வழியை நாங்கள் உங்களுக்குக் காண்பிப்போம். விசுவாசத்துடன் உங்கள் வாழ்க்கையைக் கொண்டு செல்லுங்கள். இப்போது எங்களைத் துன்புறுத்துகிற நீங்கள், காலப்போக்கில் எங்களுடன் சேர்ந்து என்றென்றும் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். தற்செயலாக, இந்த உலக வாழ்க்கையில் இருந்து விடைபெற நேர்ந்தால், நடந்தவைகளைப்பற்றி எண்ணி, மனக்கவலை அடையும் தேவை இருக்கப்போவதில்லை. அப்போது, திருப்தியை அடைய முடியாது போகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் தான், உயிர் இழக்கப் படுகிறது அல்லது காப்பாற்றப்படுகிறது. இங்கே நாம் கடவுளை துதிப்பதன் மூலமும், விசுவாசத்தின் பலன்களின் மூலமாகவும் நித்திய மீட்புக்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பாவத்தினாலோ அல்லது பல வருட தயக்கத்தினாலோ கூட மீட்பை அடையாமல் இருந்திருக்கலாம், ஆனால், மீட்பைத் பெற வரும் எவரையும் தடுத்தல் ஆகாது. இந்த உலக வாழ்வில் ஈடுபட்டிருப்போருக்கு, மனந்திரும்புவதற்கு இன்னும் தாமதமாகவில்லை. கடவுளின் மன்னிப்பைப் பெற்றுக்கொள்ள, அவரை அணுகும் பாதை என்றும் திறந்திருக்கும். சத்தியத்தை நாடி, அதைப் நன்றாகக் புரிந்து கொள்பவர்கள் அவரை அணுகுவது எளிதாக இருக்கும். உங்கள் தற்காலிக வாழ்க்கையின் முடிவிலும், சூரிய அஸ்தமனத்தின் கடைசி தருணத்திலும் கூட, நீங்கள் கட்டிக்கொண்ட பாவங்களுக்காக மனம்வருந்தி, பச்சாதாபப்பட்டு, உண்மையான விசுவாசத்துடன் அவரை ஏற்றுக்கொண்டு, சர்வத்துக்கும் வல்ல, ஒரே உண்மையான கடவுளிடம் மனமுருகி மன்றாடி, அவரது இரக்கத்தை நீங்கள் வேண்டினால், உங்கள் பாவங்கள் நிச்சயம் மன்னிக்கப்படும். மேலும், மீட்பின் மன்னிப்பை விசுவாசிப்பவர், கடவுளின் தயவாலும், அவரின் காரூண்யத்தாலும் மன்னிப்பைப் பெறுவர். மேலும், மரணத்தின் தருவாயில் கூட, அழியாத தன்மையை அடையக்கூடிய ஒரு மாற்றம் ஏற்பட இடமுண்டு.
அத்தியாயம் 26
இந்த அருட்கிருபை எம் கர்த்தராகிய கிறிஸ்துவால் மட்டுமே அருளப் படுகிறது; அவருடைய இந்த அருட்கிருபையின் வெகுமதியானது, சிலுவையில் அவர் அடைந்த, மீண்டும் உயிர்த்தெழும் வெற்றிகரமான மரணம். தனது விசுவாசிகளை மீட்டெடுக்க தனது விலைமதிப்பற்ற திரு இரத்தத்திற்கு அவர் கொடுத்த விலை, பிதாவாகிய சர்வேசுரனிடத்தில் மனிதனுக்கு நல் இணக்கத்தை ஏற்படுத்துதல், மற்றும் மோட்சானந்த பாக்கியத்தின் அழியாத தன்மையை துரிதப்படுத்துதல் போன்றவற்றின் ஊடாக எமக்கு அறிவிக்கப் படுகிறது. இதைச் செய்ய முடிந்தால், நாங்கள் அதைப் பின்பற்றுவோம். எனவே, திவ்விய நற்கருணை சடங்கு மற்றும் அதன் புனிதமான அடையாளத்தின் கீழ் நாம் அவருடைய மக்களாகக் கணக்கிடப்படுகிறோம். அவர் நமது வாழ்க்கைக்கு வழியைத் திறக்கிறார். அவர் நம்மை மீண்டும் விண்ணகத்துக்கு அழைத்துச் செல்வார். அவர் நம்மை பரலோக இராச்சியத்தை நோக்கி வழிநடத்துவார். நாம் அவருடன் நித்திய வாழ்வில் பங்கு கொள்வோம். அவர் நிமித்தம் நாம் கடவுளின் மக்களாக மாறுவோம். அவருடைய பரிசுத்த திரு இரத்தத்தால் முழுமையடைந்த நாம், அவருடன் என்றென்றும் மகிழ்ந்திருப்போம். கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவுடன் மகிமைப்படும் அதேவேளை, பிதாவாகிய சர்வேசுரனால் ஆசீர்வதிக்கப் பட்ட மக்களாவோம். இறைவனின் முன் நாம் நித்திய மகிழ்ச்சியில் திளைத்திருப்போம். மேலும், நாம் ஒவ்வொரு கணமும், இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டே இருப்போம். ஏனென்றால், மரணம் அடைந்த பின்பு, அழியாமை என்ற மகோன்னத கொடை மூலம் பாதுகாப்பைப் பெறும் ஒருவர், முன்னெப்போதையும் விட மகிழ்ச்சியுடனும், நன்றியறிதலுடனும், நித்திய வாழ்வில் திளைத்திருப்பார்.
[1] நீதிமொழிகள்; 28. 9.
[2] நீதிமொழிகள்; 26.4.]
[3] மத்தேயு; 7.6
[4] குறிப்பு: ஞானாகாமம்; 5.13.
[5] உபாகமம்; 6.13.
[6] யாத்திராகமம்; 20. 3.
[7] எரேமியா; 25.6.
[8] அகாய்; 1.9-11
[9] ஆமொஸ்; 4.7,8
[10] எரேமியா; 2.30.
[11] எரேமியா; 5.
[12] ஹொசியா; 4.1-4.
[13] ஏசாயா; 59. 1, 2.
[14] யாத்திராகமம். 22.20
[15] ஏசா. 2.8,9
[16] உரோமையர்; 12.19.
[17] குறிப்பு: நீதிமொழிகள்; 20.22.
[18] குறிப்பு: ஹபக்கூக்: 3.17,18.
[19] ஏசாயா; 13. 6.
[20] மலாக்கி; 4.1
[21] எசேக்கியேல்; 9.5,6.
[22] எசேக்கியேல்;9.4
[23] யாத்திராகமம்; 12.13
[24] குறிப்பு: எசேக்கியேல்; 9.4; அருள் வெளிப்பாடு; 7.3, 9.4.
[25] குறிப்பு: அமோஸ். 5.6.
[26] யோவான் 17. 3
[27] ஏசாயா: 66.24.
[28] நீதிமொழிகள்; 5.1-9.
