தோல்வியுற்றோர் (The Lapsed)

Cyprian of Carthage, The Lapsed, in Tamil


அத்தியாயம் 1

அன்புள்ள சகோதர சகோதரிகளே, இதை நோக்குங்கள். திருச்சபையின் சமாதானம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. நம்பத்தகாத மற்றும் துரோகிகளாக மாறி இதை நாம் நோக்குவது சாத்தியமற்றது. தெய்வீக அனுக்கிரகம் மற்றும் அதன் பலனாகவே எமது பாதுகாவல் மீளக் கட்டமைக்கப்பட்டுள்ளது. எமது மனம் மகிழ்ச்சியை நோக்கி மீண்டும் திரும்பும் அதேவேளை, அடக்குமுறை என்ற கார்மேகங்கள் விலகி, பதற்றம் தணிந்து சமாதான ஒளி மீண்டும் பிரகாசிக்கத் தொடங்கியது. அதற்காக இறைவனைத் துதிக்கக்கடவோமாக. அவருடைய ஆசீர்வாதங்களையும் வெகுமதிகளை நாம் நன்றியுடன் கொண்டாடக் கடமைப்பட்டுள்ளோம். துன்பம் மிகுந்த காலங்களில் கூட, நன்றி சொல்லும் எங்கள் குரல் ஓயவில்லை. எந்தவொரு விரோதியாலும் கூட, அவரிடமிருந்து கிடைக்கும் ஆசீர்வாதங்களையும் அருட் கொடைகளையும் எப்போதும், எல்லா இடங்களிலும் பறைசாற்றுவதைத் தடுக்க இயலவில்லை. இறைவனை நம்முடைய முழு இதயத்தோடும், ஆன்மாவோடும், சக்தியோடும் மகிமைப் படுத்துவோம். நாம் அனைவரும் செபத்திற்காக மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த நாள் வந்துவிட்டது. பயங்கரமான மற்றும் வெறுக்கத்தக்க நீண்ட இருளின் பின், உலகம் கர்த்தருடைய வெளிச்சத்தில் பிரகாசித்தது.

அத்தியாயம் 2

நல்ல ஓழுக்கங்களையும், நம்பிக்கையையும் முன்னெடுத்துச் செல்வதோடு, நல்ல புகழுக்குரியவர்களின் பெயரை வெளிப் படுத்துவோரை கனிவுடன் நோக்குவோம். தெய்வீகத்தன்மையோ அன்றி பொறுமையோ அற்ற நாம் நாம் பரிசுத்தவான்களை மிகுந்த ஆர்வத்துடன் தழுவுகிறோம். வெள்ளை உடை அணிந்து கிறிஸ்துவின் படைகளும் சேனைகளும் எம் அருகில் உள்ளன. கொந்தளிப்பு மீதான தாக்குதலின் கொடூரத்தை அவர்கள் தொடர்ந்து குறைத்து மதிப்பிட்டதும் அல்லாமல், சிறையில் அடைக்கவும் துணிந்தனர். மரணத்தை எதிர்கொள்ள ஆயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நீங்கள் துணிச்சலுடன் அவ்வாறான உலகத்திற்கு எதிராக இருக்கிறீர்கள். நீங்கள் கடவுளுக்கு மகிமையுள்ளவர்களாக இருந்தீர்கள். உங்களைப் பின் தொடரும் உங்கள் சகோதரர்களுக்கு நீங்கள் ஒரு முன்மாதிரியாகக் காணப்பட்டீர்கள். கிறிஸ்துவின் நாமத்தை மட்டுமே விசுவாசிப்பவர்கள் என்ற காரணத்தால், உங்கள் விசுவாசத்தின் குரல் அவரின் நாமத்தை மாத்திரமே உச்சரித்தது. நீங்கள் கடவுளுக்கு மகிமை உள்ளவர்களாக இருந்தீர்கள். உங்களைப் பின்தொடரும் உங்கள் சகோதரர்களுக்கு நீங்கள் ஒரு முன்மாதிரியாகக் காணப்பட்டீர்கள். கிறிஸ்துவின் நாமத்தை மட்டுமே விசுவாசிப்பவர்கள் என்ற காரணத்தால், உங்கள் விசுவாசத்தின் குரல் அவரின் நாமத்தை மாத்திரமே உச்சரித்தது. நற்கிரியைகளை ஆற்றுவதற்கு மட்டுமே பழக்கமான புகழ்பெற்ற உங்கள் கரங்கள், அநியாயங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் எதிரான போக்கையே கொண்டிருந்தன. கர்த்தருடைய திருச் சரீரத்தையும், திரு இரத்தத்தையும் பெற்ற பிறகு, பரலோக போசணையால் பரிசுத்தமாக்கப் பட்ட உங்கள் வாய்கள், சிலைகளை அபிஷேகம் செய்து அதன் பிறகு கொடுக்கப் படும் உணவை உட்கொள்ளுவதைத் தவிர்த்துவிட்டன. பலிகளை நிறைவேற்றுபவர்களின் தலைகளை மறைத்திருந்த மோசமான மற்றும் அருவருக்கத்தக்க முக்காடுகளிலிருந்து உங்கள் தலையானது விடுபட்டு விட்டது. பூசைப்பலிகளை நிறைவேற்றும் போது, அடிமைப்படுத்தப் பட்டவர்களின் தலைகள் முக்காடுகளினால் மூடப்பட்டிருந்தன. இறைவனது அடையாளம் இடப்பட்டு தூய்மை யாக்கப்பட்ட உங்கள் நெற்றியில் சாத்தானின் கிரீடம் வரையப்பட்டிருக்க முடியாது. இது இறைவனின் கிரீடத்தை அணிவதற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. நீங்கள் மோட்சத்திலிருந்து மீண்டும் வரும்போது திருச்சபையால் உங்களுக்கு அளிக்கப்படும் வரவேற்பு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்!! முற்றிலும் வீழ்த்தப்பட்ட எதிரியிடமிருந்து வெற்றிக் கிண்ணத்தை சபைக்கு மீண்டும் கொண்டு வந்தால், ஒன்றுபட்ட சக்தியுடன் அந்த சபையானது தனது முழு மகிழ்ச்சியோடும் வெற்றிக் களிப்போடும் தனது கதவுகளைத் திறக்கும்! வெற்றிபெற்ற ஆண்மகன் பெண்கள் புடைசூழ வருவான். உலக வாழ்க்கையுடனான அவர்களின் போராட்டத்தில், அவர்கள் தங்கள் பாலுணர்வு போன்ற இச்சைகளை வென்றுள்ளனர். கன்னியர் போரின் வெற்றியை இரு மடங்காக ஆக்குகிறார்கள். சிறுவர்களின் நற்பண்புகள் அவர்களது வயதுக்கு அப்பாற் பட்டவையாகக் கருதப்படுகின்றன. மேலும் சொல்லப்போனால், மீதமுள்ளவர்கள், உங்கள் மகிமையைப் பின்பற்றுகிறார்கள், உங்கள் அடிச்சுவடுகளைப் பின் தொடர்கிறார்கள். அதே மகிமையில் இணைந்து கொள்கிறார்கள். இத்தகைய நேர்மை அவர்களின் இதயத்தில் காணப்படுகிறது. அதே உறுதியான நம்பிக்கையின் தொடர்ச்சியையும் அவர்களிடம் காணக்கூடியதாக இருக்கிறது. பரலோக கட்டளைகளின் அசைக்க முடியாத அஸ்திவாரத்தின் அடிப்படையில், சுவிசேஷ மரபுகளால் போஷிக்கப்பட்டு, அவர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நாடுகடத்தல், சித்திரவதை, சொத்து பறிமுதல் அல்லது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்த விதமான தண்டனையும் விதிக்கப்படுவதில்லை. அவர்களின் விசுவாசத்தை சோதிக்கும் நாள் தெரிவு செய்யப்பட்டது. எனினும், தாம் இவ்வுலக வாழ்வை விட்டு நீங்கி விட்டோம் என்று முடிவு செய்தவருக்கு இந்த உலக வாழ்வில் எந்த ஒரு நாளையும் பற்றிய கவலை ஏற்படப் போவதில்லை. அதேபோல், இறைவனிடத்தில் நித்திய வாழ்வை நாடுபவன் உலக வாழ்க்கையின் அவன் செலவிடும் காலத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.

அத்தியாயம் 3

சகோதரரே, இந்த மகிமையைப் பெறுவதில் எவருக்கும் குறைவு ஏற்பட்டு விடக் கூடாது. அப்படி வாழ்பவர்களின் மன உறுதியை யாரும் வேற்றுமையுடன் நோக்கி அவர்களுக்குத் தீங்கிழைத்து விடக்கூடாது. கிறிஸ்தவர்களை மதம் மாற்றும் ஆணை நிறைவேற்றப்பட்ட அந்தக் காலப்பகுதியில், கிறிஸ்தவர் என்று தம்மைக் கூறிக் கொள்ளாதவர்கள் கூட தம்மை கிறிஸ்தவர்கள் என்று அறிவித்தனர். அவரது வெற்றிக்கான முதல் படியாக இருந்தது, பிரமதத்தவர்கள் மூலமாக இறைவன் பற்றிய பிரகடனத்தை செய்வதாகும். மகிமையைப் பெறுவதற்கான இரண்டாவது படியாக அமைந்தது, சோதனை மிகுந்த சூழ்நிலையில் இருந்து விடுபட்டு, இறைவனுக்காக தம்மைத் தற்காத்துக் கொள்வது. அங்கே முதலாவது பகிரங்கமாகவும், இரண்டாவது தனிப்பட்ட முறையிலும் கூறப்பட்டுள்ளது. இங்கு குறிப்பிடப்பட்ட முதலாமவர் உலக நீதிபதியின் தீர்ப்புகளில் இருந்து வெற்றிபெற்றார். இரண்டாமவர், இறைவனையே தனது நீதிபதியாக ஏற்றுக்கொண்டு மன நிறைவுடனான சாட்சியங்களின் பிரகாரம், இதயத்தின் நேர்மையை பாதுகாக்கிறார். இங்கே குறிப்பிட்டுள்ள முதலாவது சந்தர்ப்பத்தில், ஸ்திரத்தன்மை என்பது விரைவில் அடையக்கூடியது என்றும், இரண்டாவது சந்தர்ப்பத்தில், மிகுந்த அவதானத்துடன் செயல்படுவது உசிதமானது என்றும் பொருள்படுகிறது. முதலாமவர் வரும் நேரத்தில், அவர் தயாராக இருப்பதாகத் தோன்றுகிறது. இரண்டாமவர், தனது நிலையை விட்டு விலகி, தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் காரணத்தால் தாமதத்துக்கு முகம் கொடுக்கிறார். ஆயினும் அவர் மறுப்புக்கு ஆளாவதில்லை. நிச்சயமாக அவர் அதை அறிவித்தபடியால் அவர் கைதானார்.

அத்தியாயம் 4

இந்த வேதசாட்சிகளின் மோட்சானந்த கிரீடங்கள், இந்த விசுவாசத்தை அறிவிப்பவர்களின் ஆன்மீக மகிமை, இவ்வாறான நம்முடைய மூத்த மற்றும் புகழ்பெற்ற சகோதரர்கள், நம்முடைய மிக முக்கியமான ஆவணங்கள் சிலவற்றைக் கிழித்து எறிந்துவிட்டு தம்மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட எதிரியின் முன்னிலையில், தாம் அழிவின் ஒரு அங்கமாக மாறி விட்டதில் மிகுந்த வருத்தத்தை அடைந்திருக்கலாம். அன்புள்ள சகோதர, சகோதரிகளே, இந்த சூழ்நிலையில் நான் எவ்வாறு செயல்பட வேண்டும்? பெருகிவரும் உணர்ச்சிப் பிரவாகத்தில் நான் நிலை தடுமாறும் போது என்ன சொல்ல வேண்டும்? இல்லாவிடில், நான் எவ்வாறு பேச வேண்டும்? எங்கள் உடலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு இரங்கல் தெரிவிக்க, இரங்கல் வார்த்தைகளை விட அதிகமாகி கண்ணீர் சிந்த வேண்டியிருந்தது. அதே நேரத்தில் எங்களுடன் இருந்த பலரின் இழப்பையிட்டு நாம் மிகவும் வேதனையுடன் அழுது புலம்பியிருக்க வேண்டும். ஏனென்றால், தம்மிடையே இருந்த தமது மக்களின் அழிவைக் காண நேரிடும் போது, ​உணர்ச்சியற்றவராக, அல்லது மிகவும் சாதாரணமாக இருக்க எவரால் ஆகும்? சகோதர பந்தத்தை யாரால் மறக்கக்கூடும்? அவர்களுடைய பரிதாபகரமான உடல் பெரும் துன்மார்க்கத்தால் சிதைக்கப்படும் போது அவருடைய கண்களில் இருந்து கண்ணீர் சிந்த முடியாதவர் யார்? இப்படிப்பட்ட கொடூர சித்திர வதைகளால் அவர்களின் உடல் பரிதாபமாக சிதைந்து போவதை பார்க்கும் போது தமது கண்களில் இருந்து கண்ணீர் சிந்தாதவர் எவரும் இருக்கக்கூடுமோ? சகோதரர்களே, நான் மிகவும் துக்கப்படுகிறேன், உங்களுடன் எனது துக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். ஏனென்றால், மேய்ப்பன் தனது மந்தைகளுக்கு ஏற்பட்ட காயங்களால் தனக்கும் காயப்பட வாய்ப்புள்ளது. நான் என் இதயத்தை ஒவ்வொரு இதயத்துடனும் இணைக்கிறேன்; மிகுந்த துக்கத்திலும் மரணத்தினால் ஏற்பட்ட வடுக்களின் நிமித்தம் நான் அவர்களுடன் சேர்கிறேன்; துக்கப்படுபவர்களுடன் சேர்ந்து நானும் துக்கப் படுகிறேன். அழுகிறவர்களுடன் சேர்ந்து நானும் அழுகிறேன். கண்டனம் செய்யப்பட்டவரோடு சேர்ந்து நானும் கண்டனம் செய்யப்பட்ட ஒருவனாக என்னை இணைக்கிறேன். அதே நேரத்தில் ஆத்திரமடைந்த எதிரியின் கூர்மையான ஈட்டி முனைகளால் என் கைகளும் கால்களும் துளைக்கப் பட்டன. அவர்களின் கொடூரமான வாள்கள் என் இதயத்தை ஊடுருவின. என் மனதால் எதிர்ப்பு சக்தியை தூண்டவோ அல்லது மேற்கொள்ளப்படும் கொடூரத் தாக்குதல்களிலிருந்து விடுபடவோ முடிய வில்லை. என் சகோதரர்கள் அனுபவித்த வலியை உணர்ந்து, எனக்கு ஏற்பட்ட வலியை நான் சகித்துக்கொண்டேன்.

அத்தியாயம் 5

என்னில் அன்பான சகோதரர்களே, எப்படிப்பட்ட சூழ்நிலையிலும், சத்தியத்தின் மகத்துவத்தை நாம் கடைபிடிக்க வேண்டும். ஒளி மற்றும் தெளிவுடன் இணைக்கப் பட்ட எதையும் பெற கொடூரமான சித்திரவதைகளால் ஆன இருளினால் நம் மனதை நாம் இருட்டாக வைத்திருக்கக்கூடாது. அப்படியானால் தெய்வீக கட்டளைகளை நாம் எவ்வாறு காண முடியும்? வேதனைக்கான காரணத்தை அறிந்து கொண்டால், காயத்திற்கான காரணத்தையும் அறிந்து கொள்ளலாம். கர்த்தர் அவருடைய குடும்பத்தை நிரூபிக்க விரும்பினார். பரலோகத்தில் இருந்து எமக்கு அருளப்பட்ட ஒழுக்கமானது, நமக்கு தெய்வீகமாக வழங்கப்பட்ட நீண்டகால அமைதியால் சீர்குலைந்து போனது. ஆகவே, நான் சொல்வது என்னவென்றால், நம்முடைய பாவங்களின் காரணமாக நாம் அதிகம் கணக்கு கொடுக்க வேண்டி இருந்தாலும், இரக்கமுள்ள இறைவன் எல்லாவற்றையும் மிதப்படுத்தியுள்ளார். நடந்தவை அனைத்தும் துன்புறுத்தலுக்குப் பதிலாக ஒரு சோதனையாகவே தோன்றியது.

அத்தியாயம் 6

எல்லோரும் தங்கள் நிலையை மேம்படுத்துவதிலே ஆர்வமாக உள்ளனர். அப்போஸ்தலர்கள் வாழ்ந்த காலம் தொட்டு அவர்கள் செய்த செயல்கள், அத்தோடு விசுவாசிகளால் செய்யப்பட்ட செயல்கள் அல்லது செய்யப்பட வேண்டிய இரண்டு செயல்களையும் மறந்து, பேராசையுடன் பொறுமையின்றி தங்கள் செல்வத்தையும் செல்வத்தை அதிகரிக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டிருந்தனர். இது குருமார்கள் மத்தியில் காணப்பட்ட ஒரு பக்தியுள்ள மதமாக இருக்கவில்லை. அவர்களின் சேவைகளில் பெரிதாக பக்தி இருந்ததாகத் தெரியவில்லை. அவர்களின் செயல்களில் கருணை காணப்படவில்லை. அவர்களின் பழக்க வழக்கங்கள் ஒழுக்கமின்றி காணப்பட்டன. ஆண்கள் தாடியோடு மிகவும் அவலட்சணமாகத் தோன்றினார்கள். பெண்கள் தமது முகங்களில் கோலம் வரைந்திருந்தார்கள். கடவுள் தன் கரங்களால் செதுக்கிய அழகிய கண்கள் உருக்குலைந்து போயிருந்தன. ஏமாற்றுப் பேர்வழிகள் போன்று தலைமுடியின் மீது நிறச்சாயம் தீட்டப்பட்டிருந்தது. அங்கே இருந்த அப்பாவி மனிதர்கள், தந்திரக்காரர்கள் மற்றும் நயவஞ்சகர்களால் ஏமாற்றப்பட்டிருந்தனர். சகோதரர்களைத் தவிர்ப்பதற்கான ஒரு நுட்பமான உத்தி கையாளப்பட்டது. அவர்கள் நாஸ்திகர்களுடன் திருமண ஒப்பந்தங்களில் ஈடுபட்டனர். அவர்கள் கிறிஸ்துவின் படைப்பில் அமையப்பெற்ற உறுப்புகளால் பிறவின மாந்தர்களோடு விபச்சாரத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மிகவும் ஆபத்தான முறையில் சத்தியம் செய்தது மட்டுமல்லாமல், பொய்யாகவும் சத்தியம் செய்தனர். அவர்கள் தங்களுக்கு மேலே இருந்தவர்களை குறையாக எடைபோட்டு ஆணவத்துடன் நடத்தினார்கள். அவர்கள் தமது நச்சு நாக்குகளால் ஒருவரை ஒருவர் அவதூறு செய்யும் நோக்கத்துடன் நடந்து கொண்டனர். அவர்கள் ஒருவரோடொருவர் பிடிவாதம் மிக்கவர்களாகவும், வெறுப்புடனும் கலகத்தில் ஈடுபட்டனர். தமது தெய்வீகக் கடமைகளை புறந்தள்ளி, அநேகமான ஆயர்கள் மற்றவர்களுக்கு தைரியமாகவும் முன்மாதிரியாகவும் இருப்பதை விட்டு, அவர்கள் உலக ஆசைகளுடன் வாழ்ந்த அரசர்களின் பராமரிப்பில் சரணடைந்தனர். அவர்கள் தங்கள் பதவிகளையும் விட்டு, மக்களையும் விட்டு, வெளிநாடுகளுக்குச் சென்று, தங்கள் சொந்த நலனுக்காக இலாபகரமாக வணிகம் செய்யக்கூடிய சந்தை வாய்ப்புகளைத் தேடினர். தங்கள் சபைகளில் உள்ள சகோதரர்கள் பட்டினியால் வாடும் போது, ​​அதிக பணத்தை தம்வசம் வைத்திருக்க அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். அவர்கள் தந்திரம் மற்றும் மோசடி மூலமாக பிறர் சொத்துக்களைக் கைப்பற்றினர். அதிக வட்டி வசூலித்து தமது மூலதனத்தை அதிகரித்துக் கொண்டார்கள். இதுபோன்ற பாவங்களில் ஈடுபட நாம் தகுதியற்றவர்கள் என்ற காரணத்தால், இவ்வாறான காரணிகளை தெய்வீக வழியில் தடை செய்துள்ளது பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே நாம் எச்சரிக்கப் பட்டுள்ளோம். “அவர்கள் என் கட்டளைகளுக்கும் என் நியமங்களுக்கு ஏற்ப நடக்காத போது, ​​அவர்கள் என் கட்டளைகளை மீறும் போது, ​​நான் அவர்களின் குற்றங்களை தடி கொண்டு தண்டிப்பேன். அவர்கள் செய்த பாவங்களை கசை வடுக்கள் மூலம் தண்டிப்பேன். அவர்களின் பாவங்களுக்காக நான் அவர்களை உடல் நோகும்படி தண்டிப்பேன்.”

அத்தியாயம் 7

இந்த விடயங்களைப்பற்றிய ஆரம்ப அறிகுறிகள் தென்படுகின்றன. நாம் அதைபற்றி எதிர்வு கூறியுள்ளோம். ஆனால் நமக்குக் கொடுக்கப்பட்ட சட்டத்தைப் பற்றி நாம் அறியாமலும், அதற்குக் கீழ்ப்படியாமலும் இருக்கும்போது, ​​அவருடைய கட்டளைகளை மீறிய பாவத்துக்கான பரிகாரங்களைத் தேடுவதன் மூலம், கர்த்தர் மீதான நம்முடைய விசுவாசத்தை மீள் பரிசீலனை செய்யக் கடமைப்பட்டுள்ளோம். ஆகவே, உண்மையில், நம்முடைய விசுவாசத்தை சோதனைக்கு உட்படுத்தும் கண்டிப்பு மிகுந்த தெய்வீக சோதனையில், நாம் பொறுமையுடனும் அச்சமின்றி கடவுளிடம் மீண்டும் திரும்பியுள்ளோம். முதல் சந்தர்ப்பத்தில், நம்மை அச்சுறுத்தும் எதிரியின் வார்த்தைகளைக் கேட்கையில், ​​மிக அதிக எண்ணிக்கையிலான சகோதரர்கள் தங்கள் விசுவாசத்தைக் கைவிட்டு மறுப்பு தெரிவித்து விட்டனர். அவர்கள் துன்புறுத்தலால் தாழ்ந்து போகவில்லை. தமது சுய விருப்பத்தின் பேரிலேயே தம்மைத் தாழ்த்திக்கொண்டனர். மற்றும் அவர்களின் தன்னார்வ செயற்படுகளின் நிமித்தம், தமது மதிப்பை இழந்தனர். நாம் இதற்கு முன் கேள்விப்பட்டிராத ஒன்று, இதற்கு முன் செய்யப்பட்டிராத ஒன்று, நமக்குத் தெரியாத ஒன்று, மற்றும் எதிர்பாராத சூழ்நிலைகளில் கிறிஸ்துவின் திருச்சபையை உடனடியாகக் கலைப்பது போன்ற வாக்குறுதிகள் ஏதும் உள்ளதா என்று நான் உங்களைக் கேட்கிறேன். இந்த நிகழ்வுகள் பற்றி முதலில் தீர்க்கதரிசிகளும் பின்னர் அப்போஸ்தலர்களும் தெரிவித்திருக்க வேண்டுமல்லவா? அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவார்கள், நீதிமான்களின் துன்பத்துக்கு ஆளாவதோடு, மற்ற நாடுகளால் எப்போதும் காயப்படுத்தப்படுவார்கள் என்று தீர்க்கதரிசனங்களில் சொல்லப்பட்டிருந்தது அல்லவா? நாம் கடவுளுடைய ஊழியர்களை நாம் சக்தி மயப்படுத்துகிறோம். அதனூடே நம்முடைய விசுவாசத்தை உறுதி செய்து கொள்கிறோம் என்று பரிசுத்த வேதாகமம் அவருடைய குரலில் பரலோகத்தில் இருந்து சொல்லியிருக்க வில்லையா? அதாவது, ‘உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மட்டுமே வணங்க வேண்டும். அவருக்கு மட்டுமே சேவை செய்யுங்கள் என்பது பற்றியே சொல்லப்பட்டுள்ளது. இறைவனின் கோபத்தின் முன்னறிவிப்பு மற்றும் தண்டனைக்கு பயந்து வாழ்தல் போன்றவற்றை பரிசுத்த வேதாகமம் தொடர்ச்சியாக நினைவு படுத்தவில்லையா? ‘அவர்கள் தங்கள் விரல்களால் செய்ததைப் பாராட்டுகிறார்கள். தமது சுய மரியாதையை இழந்து, மக்கள் அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறார்கள். அப்படிப்பட்டவர்களை நான் மன்னிக்க மாட்டேன். கடவுள் மீண்டும் இவ்வாறு கூறுகிறார்: “மற்றைய கடவுள்களுக்கு பலி ஒப்புக் கொடுப்போர் கொல்லப்பட வேண்டும். ஆகவே கர்த்தர் ஒருவருக்கு மட்டுமே சேவை செய்யுங்கள்.” சொற்களையும் செயல்களையும் கற்பிக்கும் ஆசிரியராக, நாம் என்ன செய்ய வேண்டும் என்று நற்செய்தியின் ஊடாக இறைவன் நமக்குக் கற்பிக்க வில்லையா? இப்போது நடக்கும் விடயங்கள் மற்றும் அவர் கற்பித்த அனைத்தையும் முதன்மையாகக் கொள்ளும் படியும், அதன் பின்னர், எதிர்காலத்தைப் பற்றி முன்னமே எமக்கு எச்சரிக்கை விடுக்கப்படவில்லையா? அவரை நிராகரிப்பவர்களுக்கு நித்திய தண்டனையையும், அவரைப் போற்றுபவர்களுக்கு ஆசீர்வாதங்களையும் வெகுமதிகளையும் அவர் ஸ்தாபிக்க வில்லையா?

அத்தியாயம் 8

சிலருக்கு இது ஒரு மிகவும் துரதிஷ்டம் மிக்கது! இவை அனைத்தும் நினைவில் இருந்து மறைந்து மங்கிவிட்டன. அவர்கள் குறைந்தபட்சம் கைது செய்யப்பட வேண்டும் என்ற வற்புறுத்தலைக்கூட எதிர்க்கவில்லை. விசாரணைக்கு கூட அவர்கள் நீண்ட நேரம் செலவிட அனுமதிக்க வில்லை. போருக்கு முன்னரே பலர் தோல்வியை சந்தித்தனர். பலர் மோதலுக்கு முன்னமே வீழ்ந்தனர். அவர்கள் விருப்பமின்றி சிலைகளுக்கு பிரசாதம் கொடுப்பதைப் போல் காட்டிக்கொண்டாலும், இதை அவர்கள் தாங்களாகவே விட்டுவிடவில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் சந்தைக்கு விரைந்து, மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களைப் போல, வாய்ப்பை ஆவலுடன் ஏற்றுக் கொண்டவர்களைப் போல, அவர்கள் விரும்பியதை அடைவதில் உள்ள அவசரத்தைப் போல், அவர்கள் சீக்கிரமே மரணத்தை நெருங்கினார்கள். மாலை வேளையில் நியாயாதிபதிகளால் எத்தனை பேர் தவற விடப்பட்டார்கள்? எத்தனை பேர் இவர்களுடைய அழிவை தாமதப்படுத்த வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தனர்! அத்தகைய நபர் தான் செய்த குற்றத்திலிருந்து விடுபட, தண்டனையை கொண்டு வரும் வழிமுறையை அவரே சுயமாய் வரவேற்க செய்யும் அவரே, ஏன் அந்த வகையான தண்டனை முறையை தவிர்த்து தப்பிக்கவும் வழி தேடுகிறார்? அவர்கள் தலைநகரை அடைந்தபோது, ​​அவர்கள் சுயமாக முன்வந்து, கொடூரமான குற்றங்களுக்கு ஆளான போது, அவர்களின் பாதங்கள் வலியை உணரவில்லையா? அவர்களின் கைகள் மற்றும் கால்கள் பலவீனமடைய வில்லையா? அவர்கள் கண்கள் சோபையிழந்து இருண்டு போகவில்லையா? மனம் நினைவை இழந்துவிட வில்லையா? நாக்குகள் வறண்டு போய்விட வில்லையா? அவர்களுடைய பேச்சு தடுமாறவில்லையா? ஏற்கனவே சாத்தானையும், உலக வாழ்வையும் கைவிட்ட கடவுளின் சேவகனுக்கு, அங்கே நின்று கிறிஸ்துவை மறுத்து உரைக்க முடியுமா? அவர் தனது மரணத்தை எய்துவதற்கு அணுகிய அந்த பலிபீடம் அவருக்கு இறுதி சடங்கு நடைபெறும் மேடையாக அல்லவா காட்சியளித்தது? சாத்தானின் பலிபீடத்தின் புகை மற்றும் துர்நாற்றத்தைக் கண்ட அவர், தனது வாழ்க்கையின் இறுதி சடங்கையும் கல்லறையையும் பார்த்தபடியே பயந்து நடுங்கி, அதிலிருந்து தப்பி ஓடியிருக்க வேண்டாமா? துரதிஷ்டசாலிகளே, நீங்கள் வரும்போது ஏன் பலிப்பொருளைக் கொண்டு வர வேண்டும்? யாகத்தை நிறைவேற்ற ஏன் பலி உயிரைக் கொண்டு வர வேண்டும்? ஏனென்றால், நீங்களே பலிபீடத்திற்கு பலிப் பொருளாகத் தானே வந்துள்ளீர்கள்? ஆகவே, நீங்களே பலிபொருளாகி விட்டீர்கள். உங்கள் இரட்சிப்பை நீங்களாகவே அங்கு எரித்து சாம்பலாக்கி விட்டீர்கள்! அங்கே நீங்கள் உங்கள் நம்பிக்கை, உங்கள் எதிர்பார்ப்பு அனைத்தையும் தீயில் போட்டு எரித்து விட்டீர்கள்.

அத்தியாயம் 9

ஆனால் பலருக்கு அவர்களின் சொந்த அழிவே பாரதூரமாகத் தெரிவதில்லை. பரஸ்பர அறிவுரை மற்றும் தெளிவற்ற போதனைகளால் பல மனிதர்கள் அழிவுக்குள் தள்ளப்பட்டனர். கொடிய கிண்ணங்களை ஏந்திவாறு ஒருவருக் கொருவர் மரணத்தைப்பற்றி யோசனைகளைப் பரிமாறிக் கொண்டனர். குற்றத்தைத் தடுக்க யாராலும் எதுவும் செய்ய முடியாது என்றபடியால், குழந்தைகளை பெற்றோர் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டோ அல்லது தாங்களே தூக்கிக்கொண்டோ சென்றனர். சிறு குழந்தைகளைப் போல, பிறப்பின் போது தாம் பெற்றுக்கொண்ட அனைத்தையும் அவர்கள் இழந்தார்கள். நடுத்தீர்ப்பு நாள் வரும்போது, ​​அவர்கள் இவற்றைப்பற்றி சொல்லாமல் இருக்கக்கூடுமோ? அப்படியாயின், ‘நாங்கள் எதுவும் செய்யவில்லை. கர்த்தருடைய அப்பத்தையும் கிண்ணத்தையும் நாங்கள் மறுதலிக்கவில்லை. நாம் நாமாகவே கட்டிக்கொண்ட பாவங்கள் மற்றும் அழிவுகளில் இருந்து விரைவாக எம்மை மீட்டுக்கொள்வோம். மற்றவர்களின் துரோகத்தால் நாங்கள் பேரழிவிற்கு ஆளானோம். எங்கள் பெற்றோர் அவர்களது பெற்றோரைக் கொலை செய்தவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அவர்கள் தேவாலயத்தை ஒரு தாயாகவும், கடவுளை ஒரு தந்தையாகவும் மதித்து ஏற்றுக்கொள்வதை விட்டுவிட்டார்கள். எனவே நாங்கள் இன்னும் இவை சிறிய அளவிலான குற்றங்கள் தான் என்று எண்ணி நாம் கவனக் குறைவாக இருப்பதோடு, மற்றையோரோடு சேர்ந்து நாம் செய்யும் இவை யாவும் பாவங்கள் தான் என்று எங்களுக்குத் தெரியாது என்று சொல்லக்கூடுமோ?

அத்தியாயம் 10

ஐயகோ!, இவ்வளவு பெரிய ஒரு குற்றத்தை மன்னிக்க எப்படியான ஒரு நியாயமான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணமும் இல்லை. தாயக பூமி கைவிட வேண்டிய நிலையில் காணப்பட்டது. தனிப்பட்ட சொத்துக்களை இழந்துவிடும் சூழ்நிலையும் உருவானது. பிறந்து வாழ்ந்து பின்பு இறந்து போகும் மனிதன், என்றாவது தன் வாழ்வில் தான் பிறந்த மண்ணை விட்டு வெளியேறி, தனது சொந்த உடைமைகளை இழக்க வேண்டிய சூழ்நிலை உருவாகக்கூடுமல்லவா? நாம் கிறிஸ்துவை என்றும் கைவிடாதிருப்போம். ஒருவரது இரட்சணியம் மற்றும் தனது நிரந்தர வசிப்பிடத்தை இழப்பது என்பது கவலையும் பயத்தையும் தரக்கூடிய காரணமாக அமைந்து விடும். இதோ, பரிசுத்த ஆவியானவர் தீர்க்கதரிசி மூலம் ஆணித்தரமாக இவ்வாறு உரைக்கிறார்: “வெளியே போ, வெளியே போ, அங்கிருந்து வெளியேறு, அழுக்கான எதையும் தொடாதே, அவளிடமிருந்து வெளியேறிப் போய்விடு. தனித்தே இரு. நீங்கள் கர்த்தருடைய பாத்திரங்களைச் சுமப்பவர்களாக இருக்கிறீர்கள்.” கர்த்தருடைய பாத்திரமும் அவருடைய ஆலயமுமாக இருப்பவர்கள், அவற்றிலிருந்து விலகி, வெளியே சென்று, அசுத்தமானவற்றைத் தொடவோ அன்றி மாசுபட்ட உணவுகளைப் புசிக்கவோ உங்களை நிர்ப்பந்திக்க வேண்டாம். மற்றொரு இடத்தில், தேவனின் ஊழியர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்று எச்சரிக்கும் வகையில் வானத்திலிருந்து ஒரு குரல் இவ்வாறு கூறியது: “என் மக்களே, அவளுடைய பாவங்களுக்கு உடந்தையாக இராமலும், அவளுடைய தொற்றுகள் உங்கள் மீது பரவக்கூடாது என்பதற்காகவும், நீங்கள் அவளிடமிருந்து விலகியிருங்கள்.” விட்டு விலகி வெளியேறுபவர் பாவத்தில் பங்குதாரர் அல்ல. ஆனால் குற்றத்தில் பங்குதாரராக அடையாளம் காணப்பட்டு அம்மனிதர் கொள்ளை நோய்க்குள் அகப்பட்டுக் கொள்கிறார். இவ்வாறான உபத்திரவம் மிகுந்த காலத்தில், விலகிச் செல்வது பற்றி கர்த்தர் தமது வார்த்தைகளால் மட்டுமன்றி, செயலாலும் விளக்கியிருந்தார். தேவனுடைய நன்மையின் வெகுமதியாக கிரீடம் நமக்கு அணிவிக்கப்படுகிறது என்றாலும், அது இப்பொழுதே வந்துவிட்டது என்று கருத முடியாது. கிறிஸ்துவில் நிலைத்திருப்பவர் சிறிது காலம் விலகி இருக்கும் பட்சத்தில், அவர் விசுவாசத்தை இழந்தவராகக் கருதப்பட மாட்டார். சரியான காலம் வரும் என்று எண்ணி, அவர் அதைச் செய்திருக்கலாம். ஆனால் விழுந்தும் பின் வாங்காமல் இருக்கும் போது, ​​அவர் மறுதலித்துக்கொண்டே இருப்பவராகிறார்.

அத்தியாயம் 11

சகோதரரே, சத்தியம் என்பது என்றும் மறைக்கப்படக் கூடாதது. நமக்கு ஏற்பட்ட காயத்தின் காரணமாக நாம் அமைதியாகவும் இருத்தலாகாது. ஒருவரின் தனிப்பட்ட சொத்தின் மேல் ஏற்படும் குருட்டுத்தனமான அன்பின் மூலம் எல்லோரையும் ஏமாற்றுதலாகாது. அதேவேளை, அவர்களுடைய உடைமைகள் அவர்களை பிடரியில் பிடிப்பது போன்று பிடிக்கும் போது அவர்கள் வெளியேறவோ அல்லது தயார் நிலையில் இருக்கவோ முடியாது. எஞ்சியவர்களுக்கு அந்த பிணைப்புகள் விலங்குகளாய் இருந்தன. அவ்விலங்குகள் ஓழுக்கமுள்ளவையாக இருந்தன. எனினும் விசுவாசம் என்பது கடுமையான அழுத்தத்தில் மூழ்கி இருந்தது. மனம் இறுகிப்போய் இருந்தது. ஆன்மா சிறைப்பட்டிருந்தது. இத்தகைய பூமிக்குரிய விஷயங்களோடு ஒன்றித்துப் போய் இருந்தவர்கள் கெட்டுப்போய், உலகையே விழுங்காக் காத்திருக்கும் சர்ப்பத்திற்கு உணவாக மாறினர். கடவுளின் கூற்றுப்படி, சர்ப்பம் எனப்படுவது பூமியை விழுங்கக்கூடியது. ஆகையால், நன்மைகளைக் கற்பிக்கும் கர்த்தர் எதிர்காலத்தைப் பற்றி எச்சரிக்கிறார்: “நீங்கள் பரிபூரணமாக இருக்க விரும்பினால், உங்களிடம் உள்ள அனைத்தையும் விற்று ஏழைகளுக்குக் கொடுங்கள். அப்போது நீங்கள் மோட்சத்தில் பொக்கிஷங்களைப் பெறுவீர்கள். ஆகவே என்னைப் பின்தொடரக்கடவீர்களாக. செல்வந்தர்கள் இதைச் செய்திருந்தால், அவர்கள் தங்கள் செல்வத்தால் அழிவடைய மாட்டார்கள். அவர்களது சொத்து பரலோகத்தில் இருப்பதால், அவர்களுக்கு எதிரி என்று எவரும் இல்லாதிருப்பார்கள். அவர்கள் ஒருவருக்கும் அடிபணியவும் தேவையில்லை. அவர்களின் சொத்து பரலோகத்தில் இருக்கும் காரணத்தால், அவர்களின் இதயங்களும், மனங்களும், உணர்ச்சிகளும் சொர்க்கத்தைப் பற்றியதாகவே தான் இருக்கும். அவர்களின் சொத்து சொர்க்கத்தில் இருப்பதால், உலகம் அவர்களைத் தோற்கடிக்க முடியாது. எதுவும் இல்லாது உலகில் வாழும் ஒருவரை எவ்வாறு தோற்கடிப்பது? அவர் சுதந்திரமாகவும் எவ்வித கடப்பாடுகளுமின்றி இறைவனை பின்பற்றுவார். அப்போஸ்தலர்களும் மற்றவர்களும் திருத்தூதர்கள் வாழ்ந்த காலங்களில் செய்ததைப் போலவே, அவர்கள் தங்கள் சொத்துக்களையும் பெற்றோர்களையும் கைவிட்டு, கிறிஸ்துவுக்குள் ஒரு பிரிக்கப்படாத இணைப்பில் இணைந்து கொண்டனர்.

அத்தியாயம் 12

ஆனால் தனிப்பட்ட உடைமைகள் என்ற சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுள்ள அவர்கள் கிறிஸ்துவை எவ்வாறு பின்பற்றுவார்கள்? அல்லது உலகமய ஆசைகளால் கவரப்பட்ட அவர்கள், மிகவும் உயர்ந்த கம்பீரமான மோட்சத்தை எப்படி அடையப் போகிறார்கள்? உயர்ந்த, கம்பீரமான சொர்க்கத்திற்கு அவர்கள் எப்படி போகப் போகிறார்கள்? அவர்கள் தாங்கள் செல்வம் சேர்த்து வைத்திருப்பதாக நினைக்கிறார்கள், ஆனால் உண்மையில் அவர்கள் தங்கள் சொந்த செல்வத்துக்கு அடிமையானவர்கள். ஏனென்றால், அவர்கள் செல்வத்தைத் தன்னகத்தே கொண்டிருப்பவர்களைப் போலல்லாமல், தாங்கள் பணத்திற்கு அவர்கள் அடிமைகளாக இருக்கிறார்கள். அப்போஸ்தலர்கள் அந்த காலகட்டத்தையும், அந்த மனிதர்களையும் பற்றி இவ்வாறு கூறுகிறார்கள்: ‘ஆனால் செல்வந்தர்களாக இருக்க முற்படுபவர்கள் சோதனையிலும் சூழ்ச்சிகளிலும் சிக்குண்டு பல தீங்கு விளைவிக்கும் காம இச்சைகளுக்கு அடிமை ஆகிறார்கள். அவை மனிதர்களை அழிவிற்கும் தண்டனைக்கும் இட்டுச் செல்கின்றன. எல்லா தீமைகளுக்கும் பேராசையே ஆணிவேர்’. ஆனால் தனிப்பட்ட செல்வங்களை விரும்பாதபடி இறைவன் எம்மை அழைக்கிறார் என்றால், அங்கே ஏதோ பின்விளைவுகள் இருக்கக் கூடும் என்று தோன்றுகிறதல்லவா? தற்காலத்தில் நடைபெறும் இந்த சிறிய மற்றும் பிரயோசனமற்ற இழப்புகளுக்கு அவர் எவ்வாறு ஈடுசெய்கிறார்? தேவனுடைய இராச்சியத்திற்காக தனது வீடு, நிலம், பெற்றோர், சகோதரர்கள், மனைவி அல்லது மக்களை விட்டு வெளியேறும் எவரும், தற்போதைய உலகில் “ஏழு மடங்கு” பெறுவார்கள் என்றும், வரவிருக்கும் உலகில் நித்திய சீவனைப் பெறுவார்கள் என்றும் அவர் கூறுகிறார். இந்த விடயங்கள் பற்றி நாம் அறிந்திருப்பதாலும், வாக்குறுதியளிக்கும் கடவுளின் சத்தியத்தை அறிந்திருப்பதாலும், அது உறுதியாக இருப்பதால், இந்த வகையான இழப்புக்கு நாம் அஞ்சாமல் இருப்பது மட்டுமல்லாமல், அதை எதிர்பார்த்திருக்கவும் வேண்டும். ஏனெனில் கர்த்தர் நமக்கு  அறிவிப்பதோடு, நமக்கு எச்சரிக்கையும் செய்கிறார். ‘மனித குமாரனை விசுவாசிக்கும் காரணத்தால், மனிதர்கள் உங்களைத் துன்புறுத்தி, உங்களை ஒதுக்கி வைத்து, நிந்தித்து, உங்களை சிறையில் தள்ளும்போதும், ​​உங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் போதும், நீங்கள் பாக்கியவான்கள். அவ்வாறான நாட்களில் நீங்கள் சந்தோஷமாக இருங்கள். ஏனெனில் பரலோகத்தில் உங்களுக்குக் கிடைக்கும் வெகுமதி மிகப்பெரியது.’

அத்தியாயம் 13

இருப்பினும், பிற்காலத்தில், துன்புறுத்தியவர்கள் துன்புறுத்தப்பட்டனர் அத்தோடு கடுமையான துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டு அச்சுறுத்தலுக்கு உள்ளாயினர். சித்திரவதையை வெற்றிகொள்பவரே சித்திரவதையைப்பற்றி விமர்சிக்கத் தகுதி பெறுகிறார். வலியைக் கடந்தவர் தான் வலியின் அருமையை உணர்ந்து அதைப்பற்றிக் கூற முடியும். அத்தகைய நபர் ஒருவர் தான் அதுபற்றி கேட்கவோ, சொல்லவோ முடியும். ‘உண்மையில், நான் தைரியமாக போராட நினைத்தேன், அந்த வைராக்கியத்தை மனதில் கொண்டு, பக்தி மற்றும் விசுவாசம் என்ற ஆயுதங்களை தயார் செய்து கொண்டேன். ஆனால் போட்டியில் நான் பார்த்தது போல் அல்லாமல், பல்வேறு சித்திரவதைகள் மற்றும் தொடர்ந்த தண்டனைகளால் நான் தோற்கடிக்கப் பட்டேன். ஆயினும், என் மனம் சீராகவும், என் நம்பிக்கை பலமாகவும் இருந்தது. நீண்ட காலமாக, தாங்க முடியாத வேதனைக்கு மத்தியிலும் என் ஆன்மா சலனமின்றி உறுதியாய் இருந்தது. ஆனால் மிகவும் கடுமையான தீர்ப்பாயத்தின் அதிபதியுடைய கொடுமையான தீர்ப்புக்கு நான் முகம் கொடுக்க நேரிட்ட போது, நான் களைத்துப் போய் சரிந்தேன். பின்னர் முதல் முறையாக, நான் பட்ட அடிகளால் ஏற்பட்ட வேதனையால் நிலத்தில் சாய்ந்தேன். தாக்குதலால் நான் காயமடைந்தேன். எனது தாங்கக்கூடிய சக்தி என்னை மீறிச் சென்றது. வலி எனக்குள் ஆழமாக ஊடுருவியது. பின்னர் நான் தீயில் இட்டு எரிக்கப்பட்டேன். அந்த போராட்டத்தில் என் தசைகள் என்னை விட்டு நீங்கின. நான் பலவீனமடைந்து எனது உயிர் மூச்சு தனது பிராணனை இழந்தது. என் ஆன்மா அல்ல, என் உடல் தான் துன்பத்திற்கு ஆளானது. ‘அத்தகைய வேண்டுகோள் விரைவில் மன்னிப்புக்கு வழிவகுக்கும்; இந்த வகையான பச்சாதாபம் அனுதாபத்துக்கு தகுதியானது. எனவே, இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான், கர்த்தர் ஒரு முறை செஸ்டசுக்கும் எமிலியாசுக்கும் மன்னிப்பு அருளினார். இவ்வாறு, அவர் முதல் மோதலில் வென்றாலும், இரண்டாவது மோதலில் அவர்களை வெற்றியாளர்களாக மாற்றினார். முன்பு நெருப்போடு போராடியவர்கள், பின்பு நெருப்பை விட வலிமை பெற்று அவர்கள் நெருப்பின் ஆக்கினையை வென்றார்கள். அவர்கள் தங்கள் வேண்டுகோளை முன்வைத்தது, அனுதாபத்தினால் கண்ணீர் சிந்தி அல்ல, அவர்களுக்கு ஏற்பட்ட காயங்களால். அழுது புலம்புவது உடல் ரீதியான தாக்குதல் காரணமாக ஏற்பட்ட வலியின் காரணமாகவே. புலம்பலுக்கு நடுவே இரத்தம் பீறிட்டு வெளியேறியது. கண்ணீருக்குப் பதிலாக, அவர்களின் அரைவாசி எரிந்த உடலிலிருந்து இரத்தம் பீறிட்டது.

அத்தியாயம் 14

ஆனால் இப்போது, ​​விசுவாசம் என்ற யுத்தத்தின் போது தோல்வி ஏற்படும் என்று சொல்வதற்கல்ல. ஆனால் அவ்வாறான யுத்தம் ஒன்று ஏற்படும் முன் காட்டிக் கொடுக்கப்பட்டால், வெற்றியாளரால் காட்டக்கூடிய காயங்கள் எவை? அவரது உடலில் எங்கே காயங்கள் ஏற்பட்டுள்ளன போன்ற கேள்விகள் எழும். கைகால்கள் மற்றும் எலும்புகளுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய வலிகள் எப்படி இருக்கும்? குற்றத்தை இஷ்டம் போல செய்யும் போது, கைது செய்யப் பட்டவர்களுக்கு குற்றம் செய்வதற்கான அவசியம் ஒரு சாக்குப்போக்காக இருக்கமாட்டாது. சகோதரர்களுக்கு அழுத்தம் கொடுக்க நான் இதைச் சொல்லவில்லை. ஆனால், சகோதரர்களின் திருப்தியின் பொருட்டு, செபங்களைத் தியானிப்பது அவ்வாறு செய்யக்கூடிய உந்துதல் ஏற்பட்டமையால். ஏனெனில், இங்கே இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: ‘நீங்கள் ஆசீர்வாதிக்கப்பட்டவர்கள் என்று எண்ணுபவர்கள், உங்களை ஏமாற்றி, நீங்கள் பயணிக்கும் பாதையை அழிக்கின்றவர்களாக இருக்கக்கூடும்.’ எவராவது ஒருவர் ஒரு பாவியைப் புகழ்ந்து அவரை ஊக்குவித்தால், அவர் அந்த நபரை மேலும் பாவம் செய்ய தூண்டுகிறவர் ஆகிறார். அவர் அவற்றை ஆராயாமல், அவர்களை போஷிக்கிறார். ஆனால், கடுமையான அறிவுரைகளுடன் அவரைக் கண்டிப்பவர் ஒரு சகோதரனைக் காப்பாற்றத் தூண்டும் மீட்சியான செயற்பாட்டை அங்கே ஆற்றுகிறார். ‘நான் யாரை நேசிக்கிறேனோ, அவரை நான் கண்டிப்பேன், அவரை நான் தண்டிப்பேன்’ என்று கர்த்தர் சொல்கிறார். எனவே, கர்த்தருக்கு சேவை செய்யும் மதகுருவானவர், தவறான கூற்றுக்களால் ஏமாற்றப்படாமல், இன்முகத்தோடும், இதயசுத்தியோடும் பதிலளிக்க வேண்டும். பயிற்சி பெறாத, திறமையற்ற மருத்துவர் ஒரு காயத்திற்கு சிகிச்சையளிக்கும்போது, ​​அவர் காயம் ஏற்பட்ட இடத்தில் கவனமாக சிகிச்சை அளிக்காது, நச்சுப் பொருள்களைப் பயன்படுத்தி ஆழமான காயம் ஏற்பட வழி வகுக்கிறார். இது சம்பந்தப்பட்ட ஏனைய உறுப்புகளை மேலும் சேதப்படுத்தும். உண்மையில், அந்தக் காயத்தை முறையாக வெட்டித் திறந்து, அசுத்தமான கலங்களை அகற்றுவதன் மூலமும், நச்சுகளை அகற்றுவதன் மூலமும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அவ்வாறு நோய் வாய்ப்பட்ட மனிதன், அவனது வலியைத் தாங்க முடியாதவனாக, அழுது அரற்றி புகார் செய்தாலும், அவன் உடல் நிலை தேறியவுடன், அவன் நன்றியுடன் நடந்ததை நினைத்து மகிழ்வான்.

அத்தியாயம் 15

ஏனெனில் அன்புள்ள சகோதர சகோதரிகளே, ஒரு புதிய வகையான அழிவு தோற்றம் பெற்றுள்ளது. புயலால் எழக்கூடிய துன்பம் மிகக் குறைவான விளைவையே ஏற்படுத்தினாலும், கருணை என்ற பெயரில் மாயையை ஏற்படுத்தும் தீமை என்பது ஒரு கவர்ச்சியான அழிவு என்றே இங்கு பொருள்படுகிறது. நற்செய்தியின் உண்மைத் தன்மைக்கு மாறாகவும், தேவனாலும், எம் கர்த்தராலும் உண்டாக்கப்பட்ட நீதிக்கு விரோதமாக செயல்படும் சிலரின் அறியாமை, இறைவன் மற்றும் கடவுளின் சட்டத்திற்கு முரணாக போதிப்பவர்களுக்கு அபாயத்தைக் கொண்டு வரும் சூழ்நிலை ஏற்படுத்தும். அதைப் பெறுபவர்களுக்கு எந்தப் பிரயோசனமும் அற்ற சமாதானம் கிட்டும். அவர்கள் ஆரோக்கியம் தரும் பொறுமையையும், திருப்தியிலிருந்து பெறப்பட்ட உண்மையான பரிகாரத்தையும் தேடுவதில்லை. அவர்களுடைய இதயங்கள் தண்டனையிலிருந்து விடுபட்டு விட்டன. பெரிய மற்றும் சாவான பாவங்களின் வடுக்கள் மனதிலிருந்து நீக்கப்பட்டன. மரணத்தை உண்டுபண்ணும் காயங்கள் ஆழமான மற்றும் ரகசிய உறுப்புகளில் வைக்கப்பட்டிருக்கும். வேதனைகளை ஏற்படுத்திய காயங்களின் வலியின் போர்வையில் அவை மறைந்துள்ளன. அவர்கள் அசுத்தமான மற்றும் அருவருப்பான துர்நாற்றத்துடன் சாத்தானின் பலிபீடத்திலிருந்து திரும்பி கர்த்தருடைய புனிதமான ஸ்தலத்திற்குள் பிரவேசித்தார்கள். விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்டு ஏப்பம் விடும் போது கூட தாடைகள் தங்கள் செய்த குற்றத்தை சீரணிக்க முடியாது திணறுகின்றன. மேலும் ஆபத்தான தீட்டுகளால் அவை கர்த்தருடைய சரீரத்தை ஆக்கிரமிக்கின்றன. அப்போது, வேதாகமம் அவர்களின் வழியில் நின்று: “புனிதமானவர் எவரோ அவர் மாமிசத்தை உண்ணக்கடவர். எனினும் கடவுளின் இரட்சணியத்தின் பலியின் போது ஒப்புக்கொடுக்கப்படும் மாமிசத்தை உண்ணும் அசுத்தமானவர் எவரேனும் இருப்பாராயின், அந்த அசுத்தம் அவர் மீதே தங்கிவிடும். அப்படிப்பட்ட மனிதன் தனது மக்களிடமிருந்து துண்டிக்கப்படுவான்.’ அப்போஸ்தலர் சாட்சியளிக்கையில்: “நீங்கள் கர்த்தருடைய கிண்ணங்களிலும், அதேநேரம் சாத்தான்களின் கிண்ணங்களிலும் குடிக்க முடியாது. கர்த்தரோடும், சாத்தானோடும் ஒரே மேசையில் நீங்கள் கூட்டுசேர்ந்து அமர்ந்து இருக்க முடியாது. அவர் இதேபோல் பிடிவாதமான மக்களையும் மற்றும் பிடிவாதக்காரர்களையும் கண்டித்து இவ்வாறு சொல்கிறார்: “எவராவது கர்த்தருடைய அப்பத்தை தகாத முறையில் உண்டு கர்த்தருடைய கிண்ணத்தில் தகாத முறையில் பானம் பண்ணினால், அவர் இறைவனின் சரீரத்தையும், இரத்தத்தையும் தகாத முறையில் உபயோகித்த குற்றவாளி ஆகிறார்.”

அத்தியாயம் 16

இந்த எச்சரிக்கைகள் அனைத்தையும் மீறி, அவர்கள் செய்த பாவ மன்னிப்புக்கு முன், அவர்கள் செய்த குற்றங்களை ஒப்புக்கொள்வதற்கு முன், பலியை ஒப்புக்கொடுக்கும் மதகுருவின் கைகளால் அவர்களின் மனசாட்சி சுத்திகரிக்கப்படுகிறது. அவர்கள் தங்கள் கைகளாலும் வாயாலும் கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்யும்போது, ​​அவர்கள் அவருடைய சரீரத்துக்கும், திரு இரத்தத்துக்கும் விரோதமாக செயல் படுவதன் மூலம் பாவங்களைக் கட்டிக்கொள்கிறார்கள். ஏமாற்று வார்த்தைகளைச் சொல்வதன் மூலம், சிலர் சமாதானத்தை ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள். அது சமாதானம் அல்ல, யுத்தம். சுவிசேஷத்திலிருந்து விலகி இருப்பவர், திருச்சபையில் இணைந்திருக்க தகுதியற்றவர். அவர்கள் ஏன் காயத்தை ஒரு கருணையின் வடிவம் என்று அழைக்கிறார்கள்? அவர்கள் விசுவாசமற்ற தன்மையை ஏன் விசுவாசமுள்ள தன்மை என்று அழைக்கிறார்கள்? தண்டனையின் போது எழும் புலம்பலின் போது குறுக்கிடுவதும், இறைவனிடம் முறையிட வேண்டியது ஏன் என்று அவர்களுக்குத் தெரிவிப்பதும் ஏன்? இவ்வாறான சூழ்நிலைகளில், அவற்றுக்கு முகம் கொடுக்க முடியாது தோல்வியுற்றவர்கள், அறுவடையின் போது பெய்யும் ஆலங்கட்டி மழை போலவும், மரங்களை வேரோடு சாய்க்கும் புயல் போலவும், கால்நடைகளின் பேரழிவுக்கு வித்திடும் தொற்று நோயைப் போலவும், கப்பல்களைக் கவிழ்க்கும் சூறாவளியையும் போன்றவர்கள். அவர்களின் மிலேச்சத்தனமான வார்த்தைகளால், அவர்கள் கொடிய விஷத்தை கக்குகிறார்கள். நம்பிக்கையின் ஆறுதலையும் அழிக்கிறார்கள். அனைத்தையும் வேரோடு பிடுங்கி எறிந்து விடுகிறார்கள். அவர்கள் கப்பல் துறைமுகத்தை அடையாதபடி அதை பாறைகள் மீது மோத விடுகிறார்கள். இத்தகைய அபத்தமான செயல்கள் சமாதானத்தை ஏற்படுத்தப் போவதில்லை. உண்மையில் அவை சமாதானத்தை துவம்சம் செய்கின்றன. இது ஒற்றுமையை ஏற்படுத்தவில்லை. மாறாக, இரட்சணியத்துக்கு எதிராகவே செயல் படுகிறது. இது எதிரிகளாய் எண்ணி வெளியேற்றப் பட்டவர்களை, மறைந்து நின்று தாக்கி மேலும் சோதனையை ஏற்படுத்துவதற்கு சமமாகும். அப்போது அங்கு எழும் புலம்பலை மெளனமாக அனுஷ்டிக்க வேண்டும். துக்கத்தை மௌனமாக அனுஷ்டிக்க வேண்டும். பாவம் பற்றிய நினைவுகள் மறைந்ததும், இதயத்தின் படபடப்பு அடங்கியதும், கண்களில் வழியும் கண்ணீர் வற்றியதும், ‘நீங்கள் எங்கு விழுந்தீர்கள் என்பதை நினைவில் மீட்டுப்பார்த்து மனந்திரும்புங்கள்’ என எழுதப் பட்டிருந்தாலும், வெட்கி, முழுமையான மனந்திரும்புதலில் ஈடுபடாத வரை, நாம் இறைவனிடம் வேண்டுகோள் விடுப்பது முழுமையற்ற செயலாகவே இருக்கும்.

அத்தியாயம் 17

எவரும் தன்னைத் தானே காட்டிக் கொடுக்காத்திருக்கக்கடவர். எவரும் தன்னைத் தானே ஏமாற்றாதிருக்கக்கடவர். இறைவன் ஒருவர் மட்டுமே எம்மீது இரக்கம் உள்ளவராக இருக்க முடியும். அவருக்கு எதிராக செய்த பாவங்களை அவரால் மட்டுமே மன்னிக்க முடியும். அவர் மட்டுமே நம்முடைய பாவங்களைச் சுமந்தார். அவர் எங்களுக்காக கொடிய வேதனைகளை அனுபவித்தார். நம்முடைய பாவங்களுக்காக தேவ கட்டளையின் படி, கர்த்தர் தனது இன்னுயிரைத் தியாகம் செய்தார். மனிதன் எக்காரணம் கொண்டும் கடவுளை விட பெரியவனாக இருக்க முடியாது. மேலும், எஜமான் தனது ஊழியனால் செய்யப்பட்ட மோசமான பாவத்தை தள்ளுபடி செய்யவோ அல்லது அதற்காக பிரதியுத்தரம் செய்யவோ முடியாது. இப்படி எழுதப்பட்டிருப்பதை அவர் அறிந்திராமால் மேலும் மேலும் அவ்வாறே நடந்து கொள்ளும் பட்சத்தில், அவர் மிகப் பெரிய குற்றத்தைச் செய்தவராகிறார். ‘மனிதனை நம்பும் பிறிதொரு மனிதனுக்கு கேடு வரும்.’ மனிதன் இறைவனிடம் இரந்து கேட்க வேண்டும்; நமது மனம் திருப்தியைப் பெறுவதற்காக நாம் இறைவனிடம் இருந்து மன்னிப்பைப் பெற வேண்டும். என்னை நிராகரிப்பவன் இறைவனை நிராகரிக்கிறான் என்று கர்த்தர் கூறினார். அவர் ஒருவர் மட்டுமே அனைத்துத் தீர்ப்புகளையும் பிதாவிடமிருந்து பெற்றவராவார். வேதசாட்சிகளின் வெகுமதியும் நீதிமான்களின் செயல்களும் தீர்ப்பில் பெரும் சக்தியைக் கொண்டுள்ளன என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் நடுத்தீர்ப்பு நாளின் போதும், ​​இந்த யுகத்தின் முடிவிலும், இந்த உலகத்தில் அவருடைய மக்கள் கிறிஸ்துவின் தீர்ப்பு ஆயத்தின் முன் தோன்றுவார்கள்.

அத்தியாயம் 18

ஆனால், அனைவரையும் ஒரு கணத்தில் மன்னிக்க முடியும் என்று யாராவது நினைத்தால், அல்லது கர்த்தருடைய கட்டளைகளை மீறிச் செயல்பட்டால், அது விட்டு விலகிச் சென்றவர்களுக்கு ஆற்றும் சேவை என்பது மட்டுமல்லாமல், அது அவர்களுக்கு ஒரு முட்டுக்கட்டையாகவும் இருக்கும். இறைவனின் தீர்ப்பைக் கடைப்பிடிக்காமலும், அவரின் நீதியைப் பின்பற்றாமலும், தம்முடைய சொந்த சக்தியை நம்பி இறைவனுக்குக் கீழ்ப்படிய முயற்சிப்பது, அவரை இகழ்வதற்கு ஒப்பாகும். அவ்வாறு, செய்வதனூடாக, இறைவனின் கோபத்துக்கு ஆளாயினர். கடவுளின் பலிபீடத்தின் கீழ், வேதசாட்சிகளின் ஆன்மாக்கள் சத்தமிட்டு இவ்வாறு ஓலமிடுகின்றன: ‘பரிசுத்தத்தினதும், சாத்தியத்தினதும் ஆண்டவரே, பூமியில் வாழ்பவர்கள் எங்கள் இரத்தத்தின் மீது நியாயந்தீர்க்கப்படுவதிலும், பழிவாங்குவதிலும் இருந்து நீர் எவ்வளவு காலம் விலகியிருப்பீர்?’ அமைதியாக இருக்கவும், பொறுமையாக இருக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடப்படுகிறது. எதேச்சையாக அவர்களது பாவங்கள் நீக்கப்படும் போது, ஒருவர் நல்லவர் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் அவர் விடுவிக்கப் படுவதற்கு முன் மற்றவர்களை விடுவிக்க முடியும் என்று எவராலும் எண்ணக்கூடுமோ? வேதசாட்சிகள் ஏதாவது சாதிக்கப்பட வேண்டும் என்று கட்டளை இடுகிறார்கள். ஏதாவது முறையானது என்றால், அல்லது இறைவனுக்கு முரணானது அல்ல என்றால், இதுபோன்ற விஷயங்களை கடவுளின் அடியாராக மதகுருமார் நிறைவேற்ற வேண்டும். அவற்றை நடத்த விரும்பும் நபருக்கு மதத்தைப் பற்றிய நடுநிலையான பார்வை இருக்குமாயின், கீழ்ப்படிதலுக்கு ஏற்புடையவரின் உடன்படிக்கைக்கு உடனடியாகவும், உறுதியாகவும் அவர் இணங்க வேண்டும். வேதசாட்சிகள் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்கள். அவர்கள் கட்டளையிடுவது கர்த்தருடைய தீர்ப்பில் எழுதப்படவில்லையாயினும், அவர்கள் சொல்வது கர்த்தரிடமிருந்து பெறப்பட்டது என்பதை நாம் முதலில் நினைவில் கொள்ள வேண்டும். பின்னர் அவர்கள் கட்டளை இட்டதைச் செய்ய வேண்டும். ஏனெனில், மனிதனின் வாக்குறுதியால் உறுதிப் படுத்தப்பட்டவை, தெய்வீக மகிமையால் வழங்கப்பட்ட கட்டளையா என்பது பற்றி ஒரே நேரத்தில் அறிந்துகொள்ள முடியவில்லை.

அத்தியாயம் 19

மோசேயைப் பொறுத்தவரை, மக்கள் பாவம் செய்தபோது, ​​அவர்கள் செய்த பாவங்களை மன்னிக்கும்படி கடவுளிடம் கேட்டார். ஆனால் அவர்கள் அந்த பாவ மன்னிப்பைப் பெறவில்லை. மேலும் மோசே ‘ஆண்டவரே, நான் உம்மைத் தேடுகிறேன். இந்த மக்கள் ஒரு சாவான பாவத்தைச் செய்திருக்கிறார்கள். இப்போது அவர்கள் செய்த பாவத்தை மன்னியும். நீர் மன்னிக்கவில்லை என்றால், அதற்குப் பதிலாக என்னைத் தண்டித்து, உமது வாழ்வு தரும் புத்தகத்திலிருந்து என் பெயரை நீக்கிவிடும்’ என்று உரைத்தார். கர்த்தர் மோசேயை நோக்கி: “எவர் எனக்கு விரோதமாய்ப் பாவத்தைக் கட்டிக்கொள்கிறாரோ, அவருடைய பெயரை என் புத்தகத்திலிருந்து நான் நீக்கிவிடுவேன்” என்று அருளினார். இறைவனுடன் எப்பொழுதும் நேருக்கு நேர் பேசிய அந்த கர்த்தரின் நண்பர், அவர் எதிர்பார்த்ததைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அவருடைய தலையீட்டால் கூட கடவுளின் கோப ஆக்கினையில் இருந்து விடுபட முடியவில்லை. கடவுள் எரேமியாவைப் புகழ்ந்து கூறுகையில்: ‘நான் உன்னை கர்ப்பப்பையில் உருவாக்குவதற்கு முன்பே உன்னை அறிந்திருந்தேன். நீ கருவறையிலிருந்து வெளியே வருவதற்கு முன்பு நான் உன்னைப் புனிதமாக்கி, தேசங்களுக்கு ஒரு தீர்க்கதரிசியாய் ஆக்கியுள்ளேன்.’ எரேமியா தொடர்ந்து மக்களின் பாவங்களுக்காக பரிந்துரை செய்து மன்றாடிக் கொண்டிருந்தபோது, ​​கடவுள் எரேமியாவை நோக்கி, “இந்த மக்களுக்காக நீ செபிக்க வேண்டாம். அவர்களுக்காக இரக்கம் கொள்ளவோ அல்லது பிரார்த்தனை செய்யவோ வேண்டாம். அவர்கள் துன்பத்தில் பங்குகொள்ள என்னை அழைத்தால், ​​நான் அவர்களுக்கு செவிமடுக்க மாட்டேன்.” என்றார். நோவாவை விட நீதியுள்ள மனிதர் எவர் இருக்கக்கூடும்? பூமி பாவத்தில் மூழ்கி இருந்தபோது அவர் மட்டுமே நீதிமானாக இருந்தார். தானியேலை விட மகிமை வாய்ந்தவர் எவர் இருக்கக்கூடும்? தனது உயிரைத் தியாகம் செய்து வேதசாட்சியத்தை சகித்துக்கொள்ள விசுவாசத்துடனும் உறுதியுடனும் அவர் பலமாக இருந்தார். கடவுளின் வரப்பிரசாதங்களால் அவர் திருப்திபடைத்தார். அவரைப் போலவே, அவருக்கு எதிரான போர்களில் அவர் வெற்றி வாகை சூடியவர். மற்றும் அவர் பெற்ற வெற்றிகளையிட்டு மமதை கொள்ளாமல் உறுதியான மனதோடு வாழ்ந்தவர் எவர் உளர்? யோபுவை விட நற்கிரியைகளில் ஈடுபட்டோர் வேறு யார் உளர்? மேலும், சோதனைகளில் உறுதியாக நின்று, துன்பத்தை அதிகம் சகித்துக்கொண்டு, உண்மையான நம்பிக்கையோடும், வலிமையுடன், துன்பத்தில் பொறுமை காத்தும், நீதிக்கு பயந்தும், விசுவாசத்தில் வேரூன்றியும் இருந்தவர் வேறு யார்? ஆனால் இறைவன் மேலும் கூறுகையில், அவர்கள் அதைக் எப்படி இரந்து கேட்டாலும் தான் அதை வழங்க மாட்டேன் என்றார். தீர்க்கதரிசியான எசேக்கியேல் மக்களின் பாவங்களுக்காக பரிந்துரை செய்தபோது, ​​கடவுள் “சாவான பாவங்களைக் கட்டிக்கொண்டும், இறைவனின் நீதியை மீறி, செயல்படும் உலக தேசங்களுக்கு எதிராக நான் ஒவ்வொரு தேசத்தின் மீதும் எனது கையை நீட்டி, உணவு கிடைக்கும் வழிகளைத் தடை செய்து, பஞ்சத்தை அனுப்பி, மனிதனையும் விலங்குகளையும் நிர்மூலம் செய்வேன். நோவா, தானியேல், யோபு ஆகிய மூன்று பேரும் அங்கே வாழ்ந்த போதிலும், நான் அவர்களின் மகன்மாரையோ, மகள்மாரையோ காப்பாற்ற மாட்டேன். பதிலாக, அவர்கள் மட்டுமே காப்பாற்றப்படுவார்கள்.” என்று கூறினார். ஆகையால், மன்னிப்பு என்பது அதைத் தேடுபவரின் தப்பான எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. ஆனால் மன்னிப்பை அருளுபவரின் முடிவின் அடிப்படையிலேயே அது தங்கியிருக்கிறது. மேலும் மனித எண்ணத்தில் அல்லது மனிதனின் நினைப்பில் என்ன உதயமாகிறதோ, அது தெய்வீக சித்தத்தால் உறுதிப்படுத்தப்படாவிட்டால், அவற்றில் எவ்வித பிரயோசனமும் இல்லை.

அத்தியாயம் 20

நற்செய்தியில் இறைவன் இவ்வாறு கூறுகிறார்: ‘மனிதர்களுக்கு முன்பாக என்னைப் ஏற்றுக்கொள்பவர்கள் அனைவரையும், நான் என் பரலோக பிதாவின் முன் ஏற்றுக் கொள்வேன். ‘ஆனால் மக்கள் முன்னிலையில் என்னை நிராகரித்தால், நானும் அவர்களை நிராகரிப்பேன்.’ மறுப்பவன் அவரை மறுக்கவில்லை என்றால், ஒப்புக்கொள்பவரை அவர் ஏற்றுக்கொள்வதில்லை. நற்செய்தியின் ஒரு பகுதி நிரந்தரமாகவும், மற்றொரு பகுதி நிலையற்றதாகவும் இருக்க முடியாது. நற்செய்தியின் இரு பக்கங்களும் வலுவாக இருக்க வேண்டும். அல்லது இரண்டு பகுதிகளுமே உண்மையற்றதாக இருக்க வேண்டும். அதை நிராகரிப்பவர்கள் ஏதாவதொரு குற்றத்தில் குற்றவாளிகள் இல்லை என்று காணப்படின், அதை ஏற்றுக்கொள்பவர்களுக்கு நன்மையின் வெகுமதிகள் அருளப்படுவதில்லை. மேலும், வெற்றிபெற்ற விசுவாசம் முடிசூட்டப்பட்டால், தோற்கடிக்கப்பட்ட துரோகி தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு, நற்செய்தியை உண்மையற்றதாக்க முயன்றால், வேதசாட்சிகளுக்குக்கூட எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை. இல்லையென்றால், சுவிசேஷத்தை மறுதலிக்க முடியாது எனும் பட்சத்தில், சுவிசேஷத்தின் மூலம் வேதசாட்சிகளாக மாறியவர்கள் சுவிசேஷத்திற்கு மாறாக செயல்பட முடியாது. அன்புள்ள சகோதரர்களே, வேதசாட்சிகளை இகழும் இந்தக் காரியங்களிலும் நீங்கள் யாரும் ஈடுபட வேண்டாம். அவர்களின் மகிமையையும் கிரீடங்களையும் யாரும் அழிக்காது இருக்கக் கடவராக. அப்பழுக்கற்ற விசுவாசத்தின் சக்தி மிகவும் வலுவானது, கிறிஸ்துவுக்கு எதிராக யாரும் எதையும் சொல்லவோ செய்யவோ முடியாது. கிறிஸ்துவில் நம்பிக்கை, விசுவாசம், நல்லொழுக்கம், மகிமை ஆகியவற்றைக் கொண்ட எவருக்கும் எதிராக யாரும் எதையும் சொல்லவோ செய்யவோ முடியாது. இவ்வாறு, கடவுளின் கட்டளைகளை நிறைவேற்றியவர்கள், கடவுளுக்கு எதிராக ஆயர்களால் இடப்படும் கட்டளைகளை நிறைவேற்றக்கூடாது. கடவுளை விட உயர்ந்தவர் அல்லது தெய்வீக இரக்கமுள்ளவர் வேறு யாராவது உளரோ? அல்லது இறைவனால் செய்ய சித்தம் கொண்டுள்ளதை ஒழிக்க முற்படும் எவரேனும் உளரோ? அல்லது, தேவனுடைய சபையை பாதுகாக்க அவருக்கு அதிகாரம் இல்லை என்றும், நம்முடைய சொந்த உதவியால் நாம் இரட்சிக்கப்படலாம் என்றும் நினைக்கும் எவராவது உளரோ?

அத்தியாயம் 21

ஆனால் இவை கடவுளின் சித்தத்தால் நிறைவேற்றப்பட்டிருந்தால், அல்லது இவையெல்லாம் அவருடைய சித்தமின்றி நடந்திருக்கும் என்று கூறுவார்களானால், அறிந்து கொள்ள விழைபவர்கள் பரிசுத்த வேதாகமத்தின் மூலம் அறிந்து கொள்ளக் கடவார்களாக. இந்த வார்த்தைகளை மறந்துபோனவர்கள் எச்சரிக்கப்படக் கடவார்களாக. ‘யாக்கோபை ஒரு கொள்ளைக்காக யார் கொடுத்தார்? தம்மை சூறையாடியவர்களுக்கு இஸ்ரேலைக் கொடுத்தது யார்? அது இறைவனால் கொடுக்கப்பட்டதல்லவா? நாங்கள் அவருக்கு எதிராக பாவம் செய்தோம். அவருடைய வழிகளில் செல்ல அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் அவருடைய நீதிக்குக் கீழ்ப்படியவில்லை. ஆகவே அவர் தம்முடைய கடுமையான கோபத்தையும் போரின் கடுமையான சீற்றத்தையும் அவர்கள் மீது பொழிந்தார்.’ மேலும், வேறு பல இடங்களில் இதைப்பற்றி சாட்சி பகரப்பட்டுள்ளது. “கர்த்தருடைய இரட்சிக்கும் கரம் சக்தியற்றது அல்ல, அவருடைய காதுகள் செவிசாய்க்க முடியாத அளவுக்கு கேட்காமலும் அல்ல. ஆனால் உங்கள் சொந்த பாவங்கள் உங்களுக்கும் கடவுளுக்கும் இடையில் ஒரு பிரிவை ஏற்படுத்தின. உங்கள் குரல் அவர் காதுகளுக்கு கேட்காதபடி, நீங்கள் செய்த பாவங்கள் அவரது திருமுகத்தை உங்களிடமிருந்து மறைத்தது.’ நம்முடைய பாவங்களைபற்றி நாம் ஆராய்ந்து பார்ப்போம். நம்முடைய செயல்களின் ரகசியங்களையும், நம் மனசாட்சியின் குணங்களை ஆராய்ந்து பார்ப்போம். நம்முடைய இதயங்களை மீட்டுப் பார்ப்போம். நாம் கர்த்தருடைய வழிகளில் நடக்கவில்லை. தேவனுடைய நீதியை நிராகரித்திருக்கிறோம். அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மருத்துள்ளோம். இரட்சணியத்தின் மகிமையை பின்பற்றத் தவறியுள்ளோம் என்பதை நாம் நினைவில் மீட்டெடுத்துப் பார்ப்போம்.

அத்தியாயம் 22

அவரைப் பொறுத்தவரை உங்களுக்கு என்ன நன்மை இருக்கிறது, என்ன மற்றும் எவ்வாறான அச்ச உணர்வு அவரிடம் இருந்தது என்று நம்புகிறீர்கள்? அந்த அச்ச உணர்வை சரிசெய்ய முடியவில்லை, துன்புறுத்தல் போன்ற உணர்வு சீர் செய்யப் படவில்லை. அவர் விழுந்தும் கூட, அவரது நேர்த்தியான கழுத்து சரிய வில்லை; அவர் பெற்ற வெற்றியின் காரணமாக கிடைத்த கௌரவத்தால் அவர் சிறிதும் மமதை கொள்ளவில்லை. தான் பட்ட காயங்களாலும், அவரது பலத்தினாலும் அவர் மீண்டும் எழுந்து நின்று தனக்கு எதிராக நின்றவர்களுக்கு ஒரு சவாலாக விளங்கினார்.. அவர் மாசடைந்த தனது கைகளால் கர்த்தருடைய திருச்சரீரத்தைப் பெறவுமில்லை, மாசடைந்த தனது வாயால் கர்த்தருடைய திரு இரத்தத்தை பானம் பண்ணவும் இல்லை. அவர் மதகுருமாருக்கு எதிராக பக்தி, விசுவாசத்துடன் காரியமாற்றினார். ஐயகோ, உங்கள் அதிகரித்த பைத்தியக்காரத்தனத்தையிட்டு நான் பெரிதும் கலக்கமடைந்துள்ளேன். கடவுளின் கோபத்திலிருந்து உங்களைக் காப்பாற்ற போராடிய எல்லோரிடமும் நீங்கள் உங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினீர்கள். உங்கள் சார்பாக இறைவனின் இரக்கத்தை இரந்து கேட்டவரை நீங்கள் அச்சுறுத்தினீர்கள். உங்களை அறியாதிருந்த, ஆனால் உங்கள் காயத்தை நன்கு அறிந்த எல்லோரையும் நீங்கள் அச்சுறுத்தினீர்கள். நீங்களே உங்களுக்காக கண்ணீர் வடிக்காத போதும் கூட, உங்களுக்காக வருந்தி கண்ணீர் சிந்தியவரை நீங்கள் அச்சுறுத்தினீர்கள். உங்கள் குற்றங்களையும், பாவங்களையும் அதிகரித்துக் கொண்டீர்கள். இறைவனின் ஊழியர்களான ஆயர்கள் மற்றும் மதகுருமார் மீது நீங்கள் இரக்கம் காட்டாத போது, ​​கர்த்தர் உங்களை மன்னிக்கக்கூடும் என்று நினைக்கிறீர்களா?

அத்தியாயம் 23

நாம் சொல்வதை நன்றாக மனதிற் கொள்ளவும். நாங்கள் உங்களுக்கு வழங்கும் நல்ல ஆலோசனையையும் ஒழுக்கத்தையும் உங்கள் செவிடாகிப்போன காதுகளுக்கு என் கேட்கவில்லை? நாங்கள் உங்கள் முன் வைக்கும் மனந்திரும்புதல் ஏன் உங்கள் குருட்டுக் கண்களுக்குத் தெரியவில்லை? நாங்கள் பரலோகத்திலிருந்து பெற்றுக் கொண்ட வேதாகமத்தில் இருந்து தான் இவை யாவற்றையும் கற்றுக்கொள்கிறோம் என்பது உங்கள் பைத்தியக்கார மனதுக்கு ஏன் புரியவில்லை? சில அவிசுவாசிகளுக்கு எதிர்கால நிகழ்வுகளில் கொஞ்சம் நம்பிக்கை இருந்தால் கூட, குறைந்தபட்சம் நிகழ்கால நிகழ்வுகளைக் கண்டு அவர்கள் கொஞ்சமேனும் அச்சம் கொள்ளக்கூடும். ‘இதோ பாருங்கள்! அஞ்ஞானிகளுக்கு நாம் கொடுக்கும் தண்டனை எவ்வளவு துயரமானது என்று! நாங்கள் புலம்பக்கூடிய அளவுக்கு அவர்களின் மரணங்கள் எவ்வளவு துன்பகரமானவையாக இருக்கக்கூடும்!’ நடுத்தீர்வை நாள் இன்னும் வரவில்லை என்றாலும், அவர்களால் இங்கு தண்டனையிலிருந்து தப்ப முடியாது. அதே நேரத்தில், மற்றவர்கள் அனைவரையும் காப்பாற்றுவதற்காக சிலர் தண்டனைக்கு உள்ளாகின்றனர். ஒருவர் அனுபவிக்கும் துன்பம் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது.

அத்தியாயம் 24

தனது இஷ்டப்படி, தலைநகருக்குச் சென்று கிறிஸ்துவை நிராகரித்த ஒருவர், கிறிஸ்துவை நிராகரித்த பின்னர் வாய்பேச முடியா ஊமையாகிவிட்டார். குற்றம் தொடங்கிய இடத்திலே தான் தண்டனையும் ஆரம்பமாகியது. ஏனெனில், இனிமேல் அவர் கருணை காட்டும்படி செபிப்பதைக் கேட்கக் கூடாது என்பதற்காக. அந்த விடயம் குறித்து அவர் அமைதி காத்தே ஆகவேண்டும். மேலும் பெண்ணொருத்தி, அவளது குற்றங்கள் மற்றும் தவறான செயல்கள் நிறைவடைந்தவுடன், குளியலறைக்குச் செல்லும் வழியில் விழுந்து இறந்து போனாள். அவள் வாழ்வு தரும் சர்வேசுரனின் தயவை இழந்து விட்டிருந்தாள். அசுத்தமான ஆவியின் தூண்டுதலால் அவள் வாயிலிருந்து வெளிவந்த அசுத்தமான மற்றும் தேவபக்தியற்ற வார்த்தைகள் அவளது பேரழிவிற்கு வித்திட்டன. மாசடைந்த உணவை உண்ட பிறகு, மனப்பிரமை காரணமாக உளறும் வாயானது, அதன் அழிவுக்கு காரணமாய் இருந்தது. அவளுடைய மரணத்துக்கு அவளே காரணகர்த்தாவாக அமைந்தாள். அதன் காரணமாகவே தான் பின்னாளில் அவளால் நீண்ட காலம் வாழ முடியவில்லை. அவளது வயிறு மற்றும் அதனுடன் தொடர்புடைய மற்றைய உறுப்புகளில் ஏற்பட்ட கடுமையான வலியின் காரணமாக அவள் இறந்து போனாள்.

அத்தியாயம் 25

என் கண் முன்னே என்ன நடந்தது, அதைப்பற்றி நான் சொல்லும் சாட்சியைக் கேளுங்கள். பயம் காரணமாக, ஒரு தம்பதியினர் தங்கள் சிறிய மகளை ஒரு செவிலியரிடம் அழைத்துச் சென்று அவரின் பாதுகாப்பில் விட்டுவிட்டு வேறு ஒரு நாட்டிற்கு விரைந்தனர். கைவிடப்பட்ட அந்த சிறுமியை செவிலியர் நீதவான்களிடம் ஒப்படைத்தார். ஒரு சிலை அருகில் மக்கள் கூடியிருந்தனர். அந்த இடத்தில், சிறுமிக்கு மாமிசம் சாப்பிட முடியாதபடியால், மதுவில் தோய்த்த அப்பம் ஒன்று வழங்கப்பட்டது. அங்கு பலியிடக் கூடி இருந்தவர்கள் விட்டுச்சென்ற மது கொஞ்சம் எஞ்சியிருந்தது. அதேநேரம், சிறுமியின் தாயார் அவரது மகளை கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. இருப்பினும், சிறுமி தான் செய்த குற்றத்தை விளக்கவோ அல்லது சுட்டிக்காட்டவோ அவளால் முடியவில்லை. ஏனென்றால், அவள் முன்பு செய்ததை அவளால் தடுக்கவோ உணரவோ முடியாமற் போயிற்று. அறியாமை காரணமாக, நாங்கள் பூஜை செய்யும் போது ஒரு தாய் குழந்தையை எங்களிடம் கொண்டு வந்தார். மேலும், அந்தப் பிள்ளை புனித மக்களுடன் இருந்தாள். எங்கள் பிரார்த்தனைகளாலும் வேண்டுகோள்களாலும் பொறுமையிழந்து, அந்தப் பிள்ளை அந்நேரத்தில் அழுது நடுங்கிக் கொண்டிருந்தாள். அதனால் அவள் மனதில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அவளைத் துன்புறுத்தியவரின் அழுத்தம் காரணமாக, அவள் இன்னும் ஒரு சிறுமியாக இருந்தும் கூட, அவள் செய்ததை உணர்ந்து, முன்பு நடந்த நிகழ்வுகளை மீட்டெடுத்து, அவளது செய்கைகளுக்காக பாவ சங்கீர்த்தனம் செய்தாள். ஆனால் அங்கே நடந்த நிகழ்வுகள் நிறைவுற்றதும், உதவியாளர் ஒரு கிண்ணத்தை எடுத்து அதிலிருந்ததை கலந்துகொண்டவர்களுக்கு வழங்கத் தொடங்கினார். மற்றவர்கள் அவற்றைப் பெற்றுக் கொண்டிருந்த போது, ​​அவளுடைய முறை வந்தது. ஆனால் அந்த சிறுமியோ, தெய்வீக மகிமையை உணர்ந்து, தனது முகத்தைத் திருப்பி, வாயையும் உதட்டையும் ஒன்றாக அழுத்தி மூடிக்கொண்டு கிண்ணத்தில் இருந்தவற்றை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டாள். இருப்பினும், ஏற்றுக்கொள்ள மறுத்தபடியால், பலி ஒப்புக்கொடுத்தவர் தொடர்ந்து பெண்ணின் வாயில் அந்தக் கிண்ணத்தில் இருந்தவற்றை ஊற்றினார். அதன் காரணமாக, அவளுக்குக் குமட்டல் மற்றும் வாந்தி ஏற்பட்டது. பாவப்பட்ட உடலிலும், வாயிலும் திவ்விய நற்கருணை எழுந்தருளி இருக்க இயலவில்லை. இரட்சணியத்துக்காக சிந்தப்பட்ட கர்த்தருடைய திரு இரத்தத்தை, மாசுபடிந்த அவயவங்களால் தொட்டு, மேலும் மாசடையச் செய்தால், அந்த உறுப்புகள் வெடித்து சிதறிவிடும். இறைவனின் சக்தி மிகவும் பெரியது. அவரது மகிமை மிகவும் மகத்தானது. அவருடைய ஒளியின் நிழல்களின் கீழ் அனைத்து ரகசியங்களும் வெளிப்படுகின்றன. கடவுளின் ஊழியரான மதகுருமாரால் மறைக்கப்பட்ட குற்றங்களால் தேவனை ஏமாற்ற முடியாது.

அத்தியாயம் 26

மற்றவர்கள் தனக்கு எதிராக செய்த குற்றத்தைப் பற்றி பேசும் அளவுக்கு அந்தச் சிறுமிக்கு இன்னும் பக்குவம் ஏற்படவில்லை. ஆனால் அந்த அனுபவ முதிர்ச்சியுள்ள பெண்மணியான அவளது தாய், தனது வாழ்க்கையின் பல ஆண்டுகளை வாழ்ந்து அனுபவம் பெற்றவர். நாங்கள் சடங்குகளை நடத்தும் போது இரகசியமாக வந்து, மெளனமாக இருந்து, உண்டு கழித்ததன் மூலம், தனது கழுத்துக்கு தானே ஒரு வாளை சூடிக்கொண்டாள். இதன் பின், அவளது தாடையிலும் உடலிலும் ஒருவித கொடிய நச்சுத்தன்மை பரவத் தொடங்கியாதும், அவள் ஒரு மன நோயாளியைப் போல் அலறித் துடித்தாள். அப்படி அவள் துடித்தது வலியினால் ஏற்பட்ட வேதனையின் காரணமாக அல்ல. அவள் கட்டிக்கொண்ட பாவத்தின் காரணமாகவே அவள் நடுங்கி, துடித்து பெரும் வேதனையை அனுபவிக்க வேண்டியிருந்தது. அவளுடைய மனதில் ஒளிந்திருந்த பாவங்கள் நீண்ட காலமாக தண்டிக்கப்படாமல் மறைந்திருந்தன. மனிதர்களை ஏமாற்றியதற்காக கடவுளின் தண்டனையை அவள் அனுபவித்து உணர்ந்தாள். வேறு ஒரு சந்தர்ப்பத்தில், மற்றுமொரு பெண் தனது அசுத்தமான கைகளால் தனது பெட்டியைத் திறக்க முயன்றபோது, அதில் கர்த்தருடைய திவ்விய சரீரம் இருந்தது. அப்போது அங்கே கிளம்பிய ஒரு தீப்பிழம்பு அவள் அதைத் தொடுவதைத் தடுத்தது. மற்றும் ஒரு மனிதன், அவன் ஒரு பாவி. திருப்பலி நிறைவேற்றப்பட்ட பிறகு சடங்கின் பின் மிகுதியாயிருந்த புனிதப் பொருள்களை களவாக எடுத்துச் செல்ல முயன்றபோது, கர்த்தருடைய புனிதத் தன்மைக்கு முன் அதை உட்கொள்ளவோ அல்லது கையாளவோ முடியவில்லை. அவன் தனது கைகளைத் திறந்து பார்த்தபோது, ​​அவன் கையில் ஒரு கரித்துண்டு இருந்ததைக் கண்டான். இதன்மூலம் அறிந்து கொள்ளும் பாடம் என்னவென்றால், எவர் ஒருவர் இறைவனை நிராகரிக்கிறாரோ, ​​அவரும் நிராகரிக்கப்படுகிறார் என்பதற்கு இது ஒரு நல்ல சான்று. எதோ ஒன்றைப் பெற தகுதியற்ற ஒருவர், அதைப் பெறும்போது, ​​அது அவருக்கு எந்த நன்மையும் செய்யப்போவதில்லை. இரட்சிப்பின் மகத்துவம் இல்லாமற்போவது என்பது, புனிதப் பொருளானது கரித்துண்டாக மாற்றமடைவதற்கு ஒப்பாகும். ஒவ்வொரு நாளும் எத்தனை பேர் அசுத்த ஆவிகளால் பீடிக்கப்படுகிறார்கள்? எத்தனை பேர் கோப வெறியுடனும், மனநோயுடன் பைத்தியக்காரர்கள் போல் சுற்றித் திரிகிறார்கள்? ஒவ்வொரு மனிதரும் எப்படி இறந்தார்கள் என்பது பற்றி இங்கே சொல்வது அவசியமில்லை. உலகின் பல்வேறு விதங்களில் பாவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, அப்படி செய்யப்படும் குற்றங்களின் நிமித்தம் வழங்கப்படும் தண்டனை முறைகளிலும் மாறுதலைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஒருவர் மற்றவர் அடைந்த துன்பத்தையும், வேதனையையும் பற்றி கவலை கொள்ள வேண்டியதில்லை. மாறாக, தாம் எதிர்கொள்ள வேண்டிய தண்டனையை அவர் கருத்தில் கொள்ள வேண்டும். அதேவேளை, அந்த தண்டனையிலிருந்து தான் தப்பித்துவிட்டதாக அவர் ஒருக்காலும் நினைக்கக்கூடாது. மேலும், அவர் நீதிபதியான கடவுளின் கோபத்தால் தண்டிக்கப்பட்டிருந்தால், அவர் மென்மேலும் பயந்திருக்க வேண்டும்

அத்தியாயம் 27

தண்டிக்கப்படக்கூடாது என்று அவர்கள் உங்களை நம்பவைக்கும்படி இடமளிக்க வேண்டாம். விசுவாசமற்ற முறையில் தேவ சடங்குகளை அவர்களின் கைகளால் நிறைவேற்றும் போது, அவர்களின் கரங்கள் மாசடைந்து இருக்கவில்லை என்றாலும், அவர்களின் மனசாட்சி அந்த நிகழ்வை சரியானது அன்று கணக்குப்போடும் போது, அவர்கள் பாவங்களைக் கட்டிக் கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். நிராகரிக்கப் படுபவரின் நிலை போன்றது தான் அது. தான் ஒரு கிறிஸ்தவர் என்பதை அவர் மறுக்கிறார் என்பது அவருடைய சாட்சியமாகும். ‘நீங்கள் இரண்டு எஜமானர்களுக்கு சேவை செய்ய முடியாது’ என்று எழுதப்பட்டிருந்தாலும், உண்மையில் வேறு யாரோ செய்ததை அவர் தான் செய்ததாகக் கூறியுள்ளார். அவர் உலக எஜமானருக்கு சேவை செய்தார், அந்த எஜமானரின் கட்டளைக்கே கீழ்ப்படிந்தார். மேலும் அவர் கடவுளை விட மனித அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்தார். அவர் என்ன செய்தார் என்பது மக்கள் மத்தியில் குறைத்து மதிப்பிடப்பட்டதா அல்லது குறைவான குற்றம் தான் என்று விளம்பரப் படுத்தப்பட்டதா என்பதை அவர்தான் அறிந்திருக்க வேண்டும். மேலும், கடவுள் தம்முடைய நீதிபதியாக இருக்கிறார். ஆகவே அவர் அதிலிருந்து தப்பி ஓடி விட முடியாது. பரிசுத்த ஆவியானவர் சங்கீத ஆகமத்தில் இவ்வாறு கூறுகிறார்: ‘உமது கண்கள் எனது குறைபாடுகளைக் கண்ட அதேவேளை, அதுபற்றி உமது புத்தகத்திலும் எழுதப்பட்டிருக்கும்’ இதே போன்று பிறிதொரு இடத்திலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: கூறப்பட்டுள்ளது: ‘மனிதன் தோற்றத்தைப் பார்க்கிறான். ஆனால் கடவுள் இதயத்தைப் பார்க்கிறார்.’ மேலும், இறைவன் தாமே இந்த வார்த்தைகளை முன்கூட்டியே கூறி எச்சரித்து உங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். ‘மனதின் ஆசைகளை அறிந்தவன் நான் மட்டுமே என்பதை எல்லா திருச்சபைகளும் அறிந்து கொள்ளக் கடவதாக.’ அவர் இதயத்தின் இரகசியங்களையும் மர்மங்களையும் அறிந்துள்ளார். மறைந்திருப்பதை அவர் தெரிந்துகொள்கிறார். இறைவனின் பார்வையில் இருந்து எவரும் தப்ப முடியாது. கர்த்தர் இவ்வாறு கூறுகிறார்: ‘நான் அருகிலுள்ள கடவுள், தொலைவிலுள்ள கடவுள் அல்ல. எனது பார்வையில் இருந்து ஒரு மனிதன் எங்காவது சென்று இரகசியமாக மறைந்து இருக்க முடியுமா?’ கர்த்தர் அனைவரின் இதயங்களையும் அறிந்துள்ளார். ​​நம்முடைய செயல்களை மட்டுமல்ல, நம்முடைய சொற்களையும் எண்ணங்களையும் அறிந்து நடுநிலை வகிக்கத் தயாராகவும், எமது மனங்களையும், இதயத்தின் விருப்பு வெறுப்புகளையும் அறிந்துள்ளார்.

அத்தியாயம் 28

இறுதியாக, எந்தவொரு பலி சடங்கை நடத்தியதன் மூலம் குற்றத்தில் ஈடுபடாத அல்லது குற்றம் செய்ததற்கான எந்தவொரு சான்றும் இல்லாதவர்களுக்கு அதைவிட பெரிய நம்பிக்கையும் வேறு எந்த அச்ச உணர்வும் இருக்க முடியாதல்லவா? இருப்பினும் அவர்கள் இதைப் பற்றி யோசித்திருக்கிறார்கள், இந்த விஷயத்தை வேதனையுடன் ஒப்புக் கொள்கிறார்கள். வெறுமனே கடவுளின் ஊழியர்களுக்கு முன்பாக, மனசாட்சியைத் திறந்து, பலர் அறிய சூளுரைத்து, தங்கள் மனதில் உள்ள சுமையை இறக்கி, அவர்களின் மனக் காயங்களுக்கு தீர்வைத் தேடுகிறார்கள். ‘இறைவனைக் கேலிக்குள்ளாக்குவது மனிதனால் இயலாத காரியம்’ கடவுளை கேலி செய்யவோ, ஏமாற்றவோ முடியாது. துரோக மற்றும் தந்திரமான செயல்களாலும் அவரை வஞ்சிக்க முடியாது. கடவுளை சாதாரண மனிதராகக் கருதி, தனது சொந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டு பாவத்தை வெளிப்படையாக அறிக்கையிடாவிட்டால், அவர் ஒரு சாவான பாவத்தைச் செய்தவராகிறார். இறைவன் தனது கட்டளைகளில் இவ்வாறு கூறுகிறார்: ‘யார் என்னைப் பற்றி வெட்கப்படுகிறாரோ, மனிதகுமாரன் அவரைப் பற்றி வெட்கப்படுவார்.’ ஒரு கிறிஸ்தவராக இருப்பதற்கு வெட்கமோ அல்லது பயமோ கொள்ளும் ஒருவர், தான் தன்னை ஒரு கிறிஸ்தவர் என்று எப்படி நினைக்கக்கூடும்? கிறிஸ்துவுக்கு சொந்தமானவர் என்று கூறப் பயப்படுபவர் கிறிஸ்துவுடன் எப்படி இருக்க முடியும்? அவர் சிலைகளை வணங்குவதை விட்டு, அவற்றை ஏறெடுத்தும் பார்க்காது, அவர்களை இகழ்ந்த மக்களின் முன் விசுவாசத்தின் புனிதத்தன்மை கெடாதவாறு, உயிர்ப் பலிகளைச் செலுத்தி அதன் மூலம் அவர் கைகளை மாசுபடுத்திக் கொள்ளாது, தனது வாயை மாசடைய இடம் கொடாதிருந்தார் என்பது இங்கே தெளிவாகிறது. ஆயினும், இது ஓரளவிற்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் ஏற்படக்கூடிய தவறுகள் அங்கு குறைவாகவே காணப்படுகின்றன.

எனினும் அங்கே மனசாட்சி எப்போதும் அந்தக் குற்ற உணர்வுகளைக் கொண்டிருக்கும். அவர் செய்த பாவங்களுக்கு எளிதாக மன்னிப்பைப் பெற அவரால் இயலுமாக உள்ளது. அப்படிப்பட்டவர் ஒரு அவர் குற்றவாளி அல்ல. ஆனால் அவர் தொடர்ந்து தனது பாவங்களை அறிக்கையிட்டு இறைவனின் கருணையை இடைவிடாது பெற முயற்சி செய்ய வேண்டும். அவர் தொடர்ந்து பாவங்களுக்கு பரிகாரம் தேடுவதையும், கர்த்தருடைய இரக்கத்தை வேண்டி மன்றாடுவதையும் நிறுத்தக்கூடாது. அவர் தான் செய்த பாவம் தரத்தில் குறைவாக இருப்பதையிட்டு அவர் திருப்தி கொள்ளும் பட்சத்தில், அப்பாவங்கள் அதிகரித்த்துச் செல்லக்கூடும். ஆகையால், சகோதரர்களே, உங்கள் பாவங்களை கர்த்தரிடம் முறையிட்டு அறிக்கையிடும்படி நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

அத்தியாயம் 29

பாவிகளானோர் இந்த உலகில் வாழும் காலம் வரை, தமது பாவங்களை உரிய முறையில் அறிக்கையிட்டு, தேவ ஊழியரான குருமாரிடம் சென்று பாவசங்கீர்த்தனம் செய்து, அதன் மூலம் இறைவனை புகழ்ந்தேற்றி, நன்றி செலுத்துவது மட்டும் அல்லாமல், பிறர் பாவங்களை மன்னித்து அதன் மூலம் இறை மகிமையைப் பெற்று வாழ நான் உங்களைக் கோருகிறேன். நாம் எமது முழு மனதுடன் கர்த்தரில் சார்ந்திருப்போம். நம்முடைய பாவங்களுக்காக உண்மையாக மனஸ்தாபப்பட்டு மனந்திரும்புவோம். கடவுளின் கருணையை என்றும் நாடுவோம். நம்முடைய செபங்களை அவர் முன் காணிக்கை ஆக்குவோம்; நம்முடைய கவலைகளை தீர்த்திட அவரிடத்தில் விட்டு விடுவோம். நம்முடைய அனைத்து நம்பிக்கைகள் மற்றும் விசுவாசம் அவர் மீது மட்டும் என்றும் நிலைத்திருக்கட்டும். நாம் எப்படிக் அவரிடம் மன்றாடுவது என்று அவரே நமக்கு கற்பித்துள்ளார். கர்த்தர் இவ்வாறு கூறுகிறார்: “உங்கள் முழு ஆடைகளோடு அல்ல, நொறுங்கிய உங்கள் இதயத்தோடும், விரதமிருந்து, நோன்பு நோற்று, அழுகை மற்றும் துக்கத்துடன், ஆனால் முழு மனதோடு என்னிடம் வாருங்கள்.” நாம் முழுமையான இதயத்துடன் இறைவனிடம் அடைக்கலம் பெறுவோம். விரதம், அழுகை, துக்கம் ஆகியவற்றின் மூலம், அவரே அறிவுறுத்துவதைப் போல, அவருடைய கோபத்திற்கும் வெறுப்புக்கும் முற்றுப்புள்ளி வைத்து அவருடன் அன்பால் இணைந்து கொள்வோம்.

அத்தியாயம் 30

பாவம் செய்த முதல் நாள் தொட்டு, தினமும் குளிப்பவர், பகட்டான உணவு மற்றும் பானங்களால் போசணை பெற்று, படாடோபமான உணவு முறைகளால் செல்வந்தராக வளர்ந்தவர், மறுநாள் வரை சீரணிக்காத வகையில் அளவுக்கதிகமாக உணவருந்தி மகிழ்பவர், எஞ்சி இருக்கும் உணவை உணவில்லாமல் தவிப்போரோடு பகிர்ந்து கொள்ளாது வாழும் ஒருவர், தனது முழு மனதுடன் இறைவனிடம் இறைஞ்சி, அழுது, விரதம் இருந்து துக்கப்படுகிறான் என்று சொன்னால் எம்மால் நம்பக் கூடுமோ? மகிழ்ச்சியோடும் ஆர்வத்தோடும் முன்னோக்கிச் சென்று, ‘உங்கள் தாடியின் முனைகளை வெட்ட வேண்டாம்’ என்று எழுதினார், ஆனால் தாடியை மழித்து, முகத்தை அழகுபடுத்துபவர் எவரும் எப்படி அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்க முடியும்? தனது இறைவனை நேசியாதவர் வேறு எவரையேனும் மகிழ்விப்பதில் ஆர்வம் காட்டக்கூடுமோ? தனக்கு கிடைக்காத கிறிஸ்துவின் திரு உடையை மதிக்காது, தனது விலை உயர்ந்த அழகிய ஆடை அணிகலன்களை அணிய நேரம் ஒதுக்கும் அவள், அழுது புலம்புகிறாள் என்று சொல்லப்பட்டால், அதை நம்பக்கூடுமோ? மிக விலை உயர்ந்த நகைகள் மற்றும் விலையுயர்ந்த அணிகலங்களைப் பெறுவது பற்றி யோசித்துப் பார்க்கும் அவள், தெய்வீக மற்றும் பரலோக ஆடை அணிகலன்களை இழந்ததைப் பற்றி கவலைப்படுவாளா? நீங்கள் என்னதான் வெளிநாட்டு உடைகள் மற்றும் அணிகலன்களை அணிந்திருந்தாலும், நிர்வாணமாகவே இருக்கிறீர்கள். நீங்கள் தங்கம், வைரம், பவளம், முத்து மற்றும் நகைகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தாலும், கிறிஸ்துவின் ஆபரணத்தை அணியாமல் இருந்தால், அது உனக்கு எந்த ஈர்ப்பையும் தரப்போவது இல்லை. நீ உன் தலை முடிக்கு சாயம் பூசுபவளாக இருந்தால், குறைந்தபட்சம் உன் துக்கத்தின் போதாவது அவ்வாறு செய்வதை நிறுத்திவிடு. கண்களுக்கு கருமை நிறம் தீட்டும் நீ, உன் கண்களில் வழியும் கண்ணீரால் உன் கண்களைக் கழுவு. நீ நேசிப்பவரை மரணத்தின் மூலம் இழந்திருந்தால், நீ அழுது அரற்றி துக்கப்படுவாய். பின்னர் நீ துக்கத்தின் அறிகுறிகளைக் காண்பாய், விரக்தியடைந்த முகம், உடைகளில் மாற்றம், வாரப்படாத கூந்தல், சோர்வும், கலவரமும் நிறைந்த முகத்தோடு நீ உன் துக்கத்தை வெளிப்படுத்துவாய். துரதிர்ஷ்டம் மிக்க பெண்ணே, நீ உன் ஆன்மாவை இழந்து விட்டாய். ஆன்மீக ரீதியில் இறந்த நீ இங்கே வாழ ஆரம்பித்து விட்டாய். நீ இங்கேயும் அங்கும் நடக்கும்போது கூட, உன் சொந்த மரணத்தையே நீ ஏற்றுக் கொண்டது போல் தோற்றமளிக்கிறாய். நீ துக்கத்தால் நொந்து போகவில்லையா? தொடர்ந்து அழவில்லையா? நீ செய்த பாவங்களுக்காக நீ வெட்கப்படவில்லையா? இதற்காக நீ அழுது புலம்பி மறைந்து வாழப் போகிறாயா? நன்றாகப் பார், பாவத்தை விட, பாவத்தினால் ஏற்படும் வடுக்கள் மிகப் பயங்கரமானவை. நன்றாகக் கேள், பாவத்தைக் கட்டிக்கொண்ட பின், அதற்காக ஏற்றாப்போல் அறிக்கை செய்யாது இருப்பின், பாவங்கள் மேலும் அதிகரிக்கின்றன. பாவத்தை செய்தபின், பாவத்தின் மீது ஏற்படும் குற்ற உணர்ச்சி அற்றுப்போகும் போதும், பாவங்கள் அதிகரிக்கின்றன.

அத்தியாயம் 31

அனனியாஸ், அஸாரியா மற்றும் மிஷாயேல் ஆகியோர் சிறந்த மற்றும் உன்னத இளைஞர்களாக இங்கே அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். எரியும் தீச்சுவாலையின் நடுவே கூட, அவர்கள் தங்கள் பாவங்களை கடவுளிடம் அறிக்கை இடுவதில் இருந்து தவறவில்லை. அவர்கள் நேர்மையான மனசாட்சியைக் கொண்டிருந்ததாலும், விசுவாசத்திலும், கீழ்ப்படிதலினாலும் இறைவனுக்குத் தகுதியானவர்களாக இருந்த படியாலும், கடவுளைப் பிரியப்படுத்த, அவர்கள் வேதசாட்சிகளாக மரித்த போதும் கூட, அவர்கள் தங்கள் தாழ்மையையும் நல்லொழுக்கங்களையும் தக்க வைத்துக் கொள்வதில் மிகவும் சிறந்தவர்களாகப் போற்றப்பட்டார்கள். பரிசுத்த வேதாகமத்தில் இந்த வார்த்தைகள் சிலாகிக்கப்படுகின்றன. வேதசாட்சிகளாக மரித்தபோதும் கூட, அவர்கள் தங்கள் தாழ்மையையும் நல்லொழுக்கங்களையும் தக்க வைத்துக் கொள்வதில் மிகவும் சிறந்து போற்றப்பட்டார்கள். ‘அசாரியா எழுந்து நின்று, வாய் திறந்து மன்றாடி, உக்கிரமான தீயின் கொடூர வேதனையின் மத்தியில் கூட, தன் கூட இருந்த நண்பர்களுடன் கடவுளைப் புகழ்ந்தார். விசுவாசம் மற்றும் நேர்மை காரணமாக தானியேலுக்கு பல்வேறு சலுகைகள் இருந்தபோதும், அவர் தொடர்ந்து கடவுளை மகிமைப்படுத்தியே வந்தார். பெரும்பாலும் அவருடைய நற்பண்பு, விரதம் போன்ற நற்கிரியைகளாலும், இறைவனின் மகிமையை பலமுறை வெளிப்படுத்தி வந்தார். அவர் சாக்கு தைக்கும் துணியில் உடை அணிந்து, சாம்பலில் அமர்ந்து கொண்டு தனது பாவசங்கீர்த்தனத்தின் போது இவ்வாறு கூறுகிறார்; “கர்த்தராகிய தேவனே, உம்மை நேசிப்பவர்களின் உடன்படிக்கையையும் கிருபையையும் காத்து வருவதன் மூலமாகவும், அதி உத்தம, வலிமை மிக்க, பயத்துடன் வணங்கும் உமது கட்டளைகளைக்கு எதிராக நாங்கள் எங்கள் கடமையை நிறைவேற்றாது பாவங்களைக் கட்டிக்கொண்டோம். நாங்கள் விசுவாசத்திற்கு எதிராக செயல் பட்டோம். உமது சட்டம் மற்றும் தீர்ப்பிலிருந்தும் விலகியதன் காரணமாக நாங்கள் பாவிகளானோம். உமது ஊழியர்கள் எமது ஆட்சியாளர்களுக்கும், எல்லா தேசங்களுக்கும், முழு உலகத்துக்கும், உமது பெயரில் சொன்னதை நாங்கள் செவிமடுக்கவில்லை. ஆண்டவரே, நீர் சரியானதை மட்டுமே செய்கிறீர். நாங்கள் தான் குழப்பமடைகிறோம்.”

அத்தியாயம் 32

இவை நேர்மையான, எளிமையுள்ள சாமானிய மக்கள் கடவுளின் மகிமையை அறிந்து செயல்படுத்தியவை. இறைவனை நிராகரிப்பவர்கள் இறைவனைப் பிரியப்படுத்தவும், அவரிடம் மன்றாடுவதையும் மறுத்து வருகிறார்கள். சகோதர சகோதரிகளே, இரட்சணியத்துக்கு தகுதியானவற்றை ஏற்றுக் கொள்ளவும். சிறந்த அறிவுரைகளுக்குக் கீழ்ப்படியவும், உங்கள் கண்ணீரை எங்கள் கண்ணீருடன் ஒன்றிக்கவும், உங்கள் துன்பத்தை எங்கள் துன்பங்களோடு பகிர்ந்து அதைப்பற்றி விபரித்து எழுதவேண்டுமென நான் உங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்காக நாங்கள் கர்த்தரிடத்தில் பரிந்து பேச எங்களுக்கு சந்தர்ப்பம் கிட்ட வேண்டுமென மன்றாட நாங்கள் உங்களைக் கோருகிறோம். எங்களது வேண்டுதலை முதலில் உங்களுக்காக முன்வைக்கிறோம். இப்படி நாங்கள் செய்வது கடவுளின் கருணை உங்களுக்கு கிட்ட வேண்டும் என்பதற்காகவும், அவரது இரக்கம் உங்கள் மேல் படிய வேண்டும் என்பதற்காகவுமே. முழு மனதுடன் பாவசங்கீர்த்தனம் செய்யவும். மனதால் வருந்தி, கண்ணீர்விட்டு அழுது, மனதில் உள்ள பாவங்களுக்குப் பரிகாரம் தேடவும்.

அத்தியாயம் 33

மற்றவர்களின் பயனற்ற, முட்டாள் தனத்தாலும் அவர்களின் ஞானமற்ற செய்கைகள் போன்றவற்றைக் கண்டும் நீங்கள் உணர்ச்சி வசப்படாதீர்கள். அவர்கள் இவ்வளவு கடுமையான குற்றத்தை செய்திருந்த போதிலும், மனதால் அவர்கள் அசட்டையாக இருந்ததன் காரணமாக, அவர்களுடைய பாவங்களை அவர்களால் புரிந்து கொண்டு, பச்சாதாபம் கொள்ள முடிய வில்லை. இது கோபம் கொண்ட கடவுளிடமிருந்து அனுப்பப்பட்ட ஒரு கொடிய தொற்றுநோய் போன்றது. இது சம்பந்தமாக இவ்வாறு எழுதப் பட்டுள்ளது: ‘கடவுள் அவர்களுக்கு ஒரு கிளர்ந்தெழும் உணர்வைக் கொடுத்திருந்தார்.’ மீண்டும் இது குறித்து பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: ‘அவர்கள் இரட்சிக்கப்படுவதற்காக அவர்கள் மீதான கடவுளின் அன்பு அவர்களுக்கு கொடுக்கப் படவில்லை. ஆதலினால், தவறானவற்றை நம்பும்படி கடவுள் அவர்களைத் தவறான வழியில் அனுப்புகிறார். சத்தியத்தை நம்பாதவர்கள் மற்றும் அநீதி இழைப்பதில் திருப்தி காண்பவர்கள் அனைவரும் தீர்ப்புக்கு ஆளாவர்.’ நேர்மையற்ற செய்கைகள் மூலம் திருப்தி அடைந்து, நொந்துபோன மனதுடன் தனிமைப்பட்டு, அதனால் மன நோயாளர்களாக மாறி, தனிமை வாழ்க்கை வாழ்பவர்கள், இறைவன் காட்டிய ஒழுக்கத்தையும், அவரின் கட்டளைகளையும் மதிப்பதில்லை. அவர்கள் தங்கள் காயங்களைக் குணப்படுத்தும் மருந்தை புறக்கணித்து, தங்கள் கட்டிக்கொண்ட பாவங்களில் இருந்து மீண்டுவர அவர்களுக்கு இஷ்டம் இல்லை. அவர்கள் பாவம் செய்வதற்கு முன்பு கவனக்குறைவாக இருந்தும், பாவம் செய்தபின் பிடிவாதமாகவும், மன உறுதி அற்றவர்களாகவும் காணப்பட்டனர். அத்தோடு அவர்கள் மன்றாட்டுகளில் ஈடுபடவும் இல்லை. அவர்கள் உறுதியாக நிமிர்ந்து நிற்கவேண்டியிருந்த வேளையில் அவர்கள் சோர்ந்து விழுந்தார்கள். அவர்கள் கடவுளுக்கு முன்பாக வணங்க வேண்டி இருந்த போது, ​​எழுந்து நிற்பது தான் முறை என்று நினைத்தார்கள். சமாதானத்தை எவரும் அவர்களுக்குப் பெற்றுக்கொடுக்க வில்லை என்றாலும், சமாதானம் தம்மிடமே இருக்கிறது என்று அவர்களாகவே எடைபோட்டு விட்டார்கள். போலியான வாக்குறுதிகளை நம்பி தவறாக வழிநடத்தப்பட்டு, ஏமாற்றுக்காரர்களிடமும், மோசடிக் கும்பல்களிடமும் சேர்ந்துகொண்டு, பிழையானவற்றையும், அசுத்தமானவற்றையும் நல்லதென நம்பி அதையே ஏற்றுக்கொண்டனர். சேரக்கூடாதவர்களோடு சேர்ந்து கூடாத நட்புடையவரோடு அவர்கள் காணப்பட்டனர். அவ்வகையான சகவாசம் சரியென்றும் அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். மக்களுக்கு எதிராக, மக்கள் சார்பாக அவர்கள் கடவுளை ஏற்றுக்கொள்ளவில்லை. பதிலாக, கடவுளுக்கு எதிரான மக்களை நம்புகிறார்கள்.

அத்தியாயம் 34

அத்தகைய மனிதர்களிடமிருந்து உங்களைக் காப்பாற்ற, உங்கள் முழு பலத்தோடு ஓடுங்கள்; மேலும், இதுபோன்ற சட்டவிரோத செயற்படுகளில் ஈடுபடுவோரிடமிருந்து மிகவும் கவனமாக இருங்கள். ஏனென்றால், அவர்களின் கதைகள் புற்றுநோய் போல பரவக்கூடும். அவர்களின் கதை தடைகளைத் தாண்டி ஒரு தொற்றுநோய் போல பரவிற்று. அவர்களின் தீங்கு விளைவிக்கும் கொடிய நச்சுத்தன்மைக்கு ஒப்பான தூண்டுதல், சித்திர வதையால் ஏற்படும் மரணத்தை விடக் கொடியது. மனநிறைவைப் பெற்றுத்தருவதற்கே மனந்திரும்புதல் என்ற ஒன்று உண்டு. தங்கள் பாவங்களுக்காக மனந்திரும்பாமல் வெளியேறுபவர்கள், மனநிறைவுக்கான கதவை மூடி விடுகிறார்கள். ஆகவே, அறியாமை காரணமாக போலியான இரட்சணியம் பற்றி சிலருக்கு உறுதிமொழி அளிக்கப்படுகிறது. அல்லது அவர்கள் நம்பவைக்கப் படுகிறார்கள். அங்கு உண்மையான இரட்சணியம் பற்றிய நம்பிக்கை தகர்க்கப்படுகிறது.

அத்தியாயம் 35

ஆனால், சகோதரரே, கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களாகவும், அழிவுக்கு உள்ளானவர்களாக இருந்தாலும், அவர்களுடைய மனதால் தங்கள் செய்த பாவங்களை நினைத்து, வருந்தி, மனந்திரும்பி, வருத்தப்பபவர்களாக இருந்தால், நீங்கள் உங்கள் மனசாட்சிக்கு விரோதமாக செய்த சாவான பாவத்தை உணர்ந்து, உங்கள் இதயக் கண்களைத் திறந்து உங்கள் குறைபாடுகளை உணருங்கள். இதன் மூலம், கர்த்தர் காட்டும் இரக்கத்தை எதிர்பார்க்கும் நீங்கள், இன்னும் அவரிடம் மன்னிப்புக் கோர மனம் திரும்பவில்லை. நம்முடைய பிதாவாகிய சர்வேசுரன் நம்மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாக அவர் எப்போதும் இரக்கமுள்ளவராகவும், நல்லவராகவும் இருக்கிறார். ஆகையால், ஒரு நீதிபதியாக அவருடைய மகிமைக்கு நாம் அஞ்சி நடக்க வேண்டும். நம்முடைய பாவத்தின் மகத்துவம் காரணமாக நாம் அழுகிறோம். ஆழமான காயத்துக்கு நீண்ட காலம் மிகக் கவனமாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அந்தக்காயம் குணமடையாது. எனவே மனந்திரும்புதல் என்பது ஒருபோதும் பாவத்தைவிடக் குறைவாக இருத்தலாகாது. நீங்கள் ஏமாற்று வார்த்தைகளால் கடவுளை ஏமாற்றுகிறீர்கள். அவரை விட நீங்கள் உங்கள் சொந்த உடைமைகளுக்கு மகத்துவம் கொடுக்கிறீர்கள். உங்களது தேவபக்தி மற்றும் விசுவாசமற்ற செயல்களால் அவருடைய புனிதமான ஆலயம் மாசுபட்டுள்ளது. இவற்றைச் செய்வதன் மூலம் இறைவனுடன் எளிதில் சமரசம் செய்துக்கொள்ள முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவரைத் தங்களுடையவர் அல்ல என்று சொல்பவர்கள் மீது அவர் எளிதில் கருணை காட்ட வேண்டும் என்று எதிர்பார்த்தது உண்டா? நீங்கள் உங்கள் செபத்தில் அவரை மிகவும் ஆர்வத்துடன் தேடியிருக்க வேண்டும். உங்களால் மிகுந்த கவலையோடு நாட்களைக் கழிக்க வேண்டியிருந்தது. இரவில் எழுந்து அழ வேண்டியிருந்தது. அழுது புலம்பி உங்கள் நேரத்தை கவலையுடன் கழித்திருக்க வேண்டும். நீங்கள் சாம்பலில் படுத்திருந்து, சாக்குத் துணியால் உடை உடுத்த வேண்டியிருந்தது. கிறிஸ்துவின் உடையை இழந்து விட்டதால், இப்போது எந்த ஆடைகளையும் நீங்கள் பெறத் தகுதியானவர்கள் இல்லை. சாத்தானுக்குப் படைத்த உணவை உட்கொண்ட பிறகு, உண்ணாவிரதம் இருக்க தயாராக வேண்டியிருந்தது. பாவத்திலிருந்து விடுதலை பெற்று, தன்னைத் தூய்மைப்படுத்தும் முறையான செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. அடிக்கடி தான தர்மம் செய்ய வேண்டிய அவசியம் இருந்தது. அவ்வாறு செய்வது உங்கள் வாழ்க்கையை மரணத்திலிருந்து காப்பாற்றும். எதிரி கொண்டுபோக முயன்றதை கிறிஸ்துவுக்கு கிடைக்கச்செய்வோம். உங்கள் சொத்தை கையகப் படுத்தி வைத்துக் கொள்ள வேண்டாம் அல்லது அதையிட்டு அளவுக்கு அதிகமாக மகிழ்ச்சியடையவும் வேண்டாம். ஏனெனில் அவர் வஞ்சிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டார். ஒரு திருடனைப் போல செல்வம் கொண்டு செல்லப்பட வேண்டும். ஒரு திருடனிடமிருந்து தப்பி ஓடுவது போல், தப்பி ஓட வேண்டும். வாள் ஒன்றை தம்மிடம் வைத்திருக்கும் போது ஏற்படும் பயத்தைப்போல், நாம் அதைப் பற்றி பயப்பட வேண்டும். விஷத்திற்கு பயப்படுவது போல் இதற்குப் பயப்பட வேண்டும். எஞ்சியிருப்பவர்கள், இவற்றிலிருந்து மட்டுமே பயனடைய முடியும். அவ்வாறு செய்வதன் மூலம் ஒருவர் குற்றத்திலிருந்தும் பாவத்திலிருந்தும் விடுபட முடியும். உங்கள் பணி தாமதமின்றியும், தாராள மனதோடும் நிறைவேறட்டும். காயங்கள் குணமடைய செய்யப்படும் அனைத்தும் செவ்வனே செய்யப்பட வேண்டும் நம்முடைய நீதிபதியான கர்த்தர் நமக்குத் தேவையான வளங்களையும் திறன்களையும் குறைவின்றித் தருவார். அப்போஸ்தலர்களின் கீழ் விசுவாசம் இப்படித்தான் வளர்ச்சி பெற்றது. ஆதியில் விசுவாசிகளின் மக்கள் கிறிஸ்துவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தார்கள். அவர்கள் தயாராகவும், தியாகசீலர்களுமாகவும் இருந்தார்கள். எல்லாவற்றையும் விநியோகிப்பதற்காக அப்போஸ்தலர்களிடம் கொடுத்த அதேவேளை, அத்தகைய பாவங்களை அவர்கள் கொண்டிருக்கவில்லை.

அத்தியாயம் 36

ஒருவன் முழு மனதுடன் செபிக்கும் போது, அவன் உண்மையிலேயே மனந்திரும்பி வருந்தி அழும்போது, அவன் செய்த பாவங்களை கைவிட்டு நியாயமான செயல்களைத் தொடர்ந்து செய் யும் போது, அவன் கடவுளிடம் மீண்டும் வரும் போது, அவன் இறைவனுடைய இரக்கத்தைப் பெறக்கூடும். இந்த வார்த்தைகளில் அவர் தன் கருணையை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்: ‘நீ மீண்டும் வந்து அழுது புலம்பும்போது, ​​நீ இரட்சிக்கப்படுவாய். நீ எங்கே இருக்கிறாய் என்பதையும் நீ அறியக் கடவாய். மீண்டும் அவர் இவ்வாறு கூறுகிறார்: அழிந்துபோனவர்களின் மரணம் எனக்குப் பிடிக்கவில்லை. இறைவன் தாமாகவே இந்த வார்த்தைகளைக் கூறுகிறார்; ‘திரும்பி வா. உங்கள் தேவனாகிய கர்த்தர் இரக்கமுள்ளவர், கிருபையுள்ளவர், பொறுமையுள்ளவர். உறுதியான அன்பில் நிறைந்தவர்’. தன்னிடம் கேட்பவர்களுக்கு அவர் இரக்கமெனும் அருளை பொழிவார். அவர் தான் எழுதிய தீர்ப்பை இரத்துச் செய்ய முடியும். மனந்திரும்பி வருகின்ற, நன்மை செய்கின்ற, அவரைத் தேடுகின்ற, அவருக்காக பரிந்துரை செய்யும் எவரையும் அவர் மன்னித்தருள்வார். இதுபோன்ற காரியங்களைச் செய்த வேதசாட்சிகள் மற்றும் மதகுருமாரை ஏற்றுக் கொள்ள அவரால் முடியும். இல்லையெனில், எவராவது தான் ஒப்புக் கொடுத்த சடங்குகளால் அவரை கோபமடையச் செய்திருந்தால், நியாயமான கோரிக்கை மூலம் அவரது கோபம் தணிக்கப் படுகிறது. தோற்கடிக்கப்பட்ட வீரன் ஆயுதம் ஏந்தக்கூடிய வகையில், அவர் மீண்டும் அவனுக்கு ஆயுதங்களைக் கொடுப்பார். விசுவாசம் வளரும்படி அவனை சக்திமயப்படுத்தி உறுதியான நிலைக்கு அவனை கொண்டு வருகிறார். அதன் பின் இராணுவ வீரன் மீண்டும் முழுப்பலத்தோடு தனது கடமைக்குத் தயாராகி போர்க்களத்தில் நுழைவான். அவ்வீரன் எதிரிகளைத் துவம்சம் செய்ய தான் பட்ட துன்பத்தின் மூலம் போராட்டத்திற்கு தேவையான சக்தியை அடைந்து விட்டான். ஒருவன் தான் செய்த செயல்களையிட்டு வருந்தி, மனந்திரும்பி, தன் பாவங்களைக் கண்டு வெட்கப்பட்டு நல்லொழுக்கம் மற்றும் நம்பிக்கை இரண்டையும் பெற்று, கர்த்தரைப் போற்றும் அவனுடைய குரலை இறைவன் கேட்கிறார். மேலும் கடவுளின் மன்னிப்பு மட்டுமல்ல, கிரீடமும் அவருக்குத் தகுதியுடையதாக இருக்கும். இது திருச்சபையை மகிழ்ச்சிப்படுத்த ஒரு காரணமாக நிச்சயம் அமையும். அவர் நீண்ட காலத்திற்கு முன்பு துக்கத்துக்கு ஆளாகியிருந்த காரணம், கடவுளின் மன்னிப்பைப் பெறுவதற்கு மட்டுமல்ல, கிரீடத்தைப் பெறுவதற்கும் அது மிகவும் பயனுள்ளதாக அமைத்திருந்தது.