Saint Augustine, Confessions, Book 2, in Tamil
அத்தியாயம் 1 – தனது இளமைகால அக்கிரமங்களை எண்ணி வருந்துகிறார்
இப்போது, அவர்கள் மீது கொண்டுள்ள அன்பினால் அல்ல, என் தேவனே, நான் உம்மை நேசிக்க வேண்டும் என்பதற்காக, எனது கடந்தகால ஒழுக்கக்கேடுகளையும், என் மனதில் குடிகொண்டுள்ள உள்ள சிற்றின்ப சீர்கேடுகளையும் வேதனையுடன் நினைவு கூர்கிறேன். உனது அன்பின் மீதுகொண்டுள்ள அளவில்லாத பற்றுதல் காரணமாக இதைச் செய்கிறேன். நீர் என்றும் என் மனதில் இனிமை மற்றும் வஞ்சகமற்ற ஊற்றாக இருக்கவேண்டும் என்பதற்காக, நான் செய்த மிகவும் கசப்பான மற்றும் மோசமான செயல்களை என் நினைவில் இருந்து அகற்ற வேண்டுமென நினைக்கிறேன். அந்தச் சிதறலில் இருந்து நான் என்னை மீண்டும் இன்றாக இணைக்க முயல்கிறேன். அங்கு நான் எண்ணற்ற மாயைகளுக்கு மத்தியில் தொலைந்து போனேன். உம்மிடமிருந்து விலகிச் செல்லும் போது நான் நார் நாராய்க் கிழிந்துபோனது போல உணர்ந்தேன். எனது இளமைக்காலத்தில் நான். பொருளாசையில் சிக்கித்தவித்து, அதில் நிறைவு காணவேண்டுமென ஏங்கினேன். அத்தோடு, பலவிதமான புதிரான ஆசைகளால் பீடிக்கப்பட்டு மீண்டும் தான்தோன்றித்தனமாக மாறத் துணிந்தேன். என் கெளரவம் அழிந்தது, உமது பார்வையில் நான் கெட்டவனாய் மாறி, சுயநலத்தோடு என்னைத் திருப்திப்படுத்தி, மற்றையோர் மத்தியில் கர்வமுடையவனாக வாழவேண்டுமென துடிப்புடன் இருந்தேன்.
அத்தியாயம் 2 – அளவுகடந்த துக்கத்தால் பீடிக்கப்பட்ட அவர், தனது பதினாறாவது வயதில் அவர் அனுபவித்த உணர்ச்சிப்பெருக்கான நிகழ்வுகளை நினைவு கூர்கிறார்
2. ஆனால் நேசிப்பதையும் நேசிக்கப்படுவதையும் தவிர நான் மகிழ்ச்சியடைந்தது எதில்? ஆனால் நான் அதை வேண்டாவெறுப்பாக இல்லாமல் மனதிற்குள் ஒளிரும் நட்பின் பிரகாசமான பாதையில் வைத்திருந்தேன். ஆனால் சரீரத்தில் ஊற்றெடுத்த சிற்றின்ப வேட்கையும் இளவயதில் ஏற்பட்ட இச்சைகள் போன்றவையும் என் இதயக்கண்களை மறைத்து விட்டது. பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஆசைகள் காரணமாக, என்னால் புனிதத் தன்மை என்பது பற்றி அறிய முடியவில்லை. இந்த இரண்டு தரம்கெட்ட செயல்களால் நான் புழுங்கி வெந்து கொண்டிருந்தேன். கட்டுப்பாடின்றி இருந்த என் இளமையை கேவலமான இச்சைகள் கடுமையான இடங்களுக்கு இழுத்துச் சென்றது மட்டுமல்லாமல், என்னை இழிவான குழிக்குள் தள்ளியது. உமது கோபம் என்னை ஆட்கொண்டது, ஆனால் நான் தான் அதை அறியாமல் இருந்தேன். என் ஆன்மாவின் பெருமைக்கான தண்டனையான என் மரணத்தின் சங்கிலிகள் எழுப்பும் ஓசையால் நான் செவிடனாக வளர்ந்தேன்; இதைத்தான் “உங்களுக்கெல்லாம் விசுவாசமில்லை. உங்கள் வாழ்க்கை முறையே தவறானது. இன்னும் எவ்வளவு காலம் நான் உங்களுடன் இருக்க முடியும்? உங்களுடன் எத்தனை நாட்கள் பொறுமையுடன் காலந்தள்ள முடியும்?” என்று மத்தேயு 17:17. இல் கூறப்பட்டுள்ளதை இங்கே காட்டுவது பொருத்தமாக இருக்கும். நான் சீரழிவுக்கு உள்ளானேன், காமாந்தகார சிந்தனைகளாலும், செயல்களாலும் சிக்கித் தவித்து உருகிப்போனேன். ஆனால் நீர் அமைதியாக இருந்தீர், ஓ என் மகிழ்ச்சியின் பிறப்பிடமே! அப்போதும் நீர் அமைதியாவே இருந்தீர், மேலும் மனச்சோர்வு, வெறுமை, துக்கம், வேதனை போன்ற அமைதியற்ற தன்மை காரணமாக நான் இன்னும் உம்மைவிட்டு வெகு தூரத்துக்கு சென்று நிர்க்கதியான நிலைமையில் வாழ்ந்தேன்.
3. ஐயகோ, யாரேனும் ஒருவர் என் மனதில் ஏற்பட்ட குழப்பத்தை தெளிவுபடுத்தியிருந்தால், என்னைச் சுற்றியுள்ள பொருட்களின் வசீகரத்தை என் போக்கிற்கு மாற்றி அமைத்திருந்தால், அவை தரும் இனிமையின் மீது ஒரு பற்றுதலை ஏற்படுத்தியிருந்தால், கரை புரண்டோடும் என் இளமை எனும் அலைகள் திருமணம் என்ற கரையில் சங்கமித்திருக்கும். அப்படியானால், உமது சட்டத்தின்படி, ஒரு குடும்பம் என்ற ஒரு வட்டாராரத்துக்குள் அவர்களால் அமைதியாகவும் திருப்தியாகவும் வாழக்கூடிய சூழ்நிலை இல்லையென்ற அர்த்தத்தையே இது காட்டுகிறது. ஆண்டவரே – எங்கள் மரணத்தின் பின்பும் சந்ததிகளை உருவாக்குபவர் நீர், சொர்க்கத்திலிருந்து விலக்கப்பட்ட முட்களை உமது மென்மையான கைகளால் மழுங்கடிக்கச் செய்ய உம்மால் முடியும்! ஏனென்றால் நாங்கள் உம்மிடமிருந்து வெகு தொலைவில் இருந்தாலும், உமது சர்வ வல்லமை நாம் இருக்கும் இடத்திலிருந்து வெகு தொலைவில் இல்லை. அப்படியானால், மேகங்களிலிருந்து ஒலிக்கும் குரலை நான் மிகவும் கவனமாகக் கேட்டிருக்க வேண்டும்: அப்படியிருந்தும், அப்படிப்பட்டவர்கள் உடலால் மிகவும் கஷ்டத்தை அனுபவிப்பார்கள், ஆனால் நான் உன்னைக் காப்பாற்றுவேன்; இதை 1 கொரிந்தியர் 7:28 இல் பிவருமாறு கூறப்பட்டுள்ளது: “ஆனால் நீங்கள் திருமணம் செய்து கொண்டால், நீங்கள் பாவம் செய்யவில்லை; ஒரு கன்னி திருமணம் செய்து கொண்டால், அவள் பாவம் செய்யவில்லை. ஆனால் திருமணம் செய்பவர்கள் இந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், ஆகவே நான் உங்களை இதிலிருந்து காப்பாற்ற விரும்புகிறேன். மேலும், ஒரு பெண்ணைத் தொடாதிருப்பது ஆண்களுக்கு நல்லது என்பதை 1 கொரிந்தியர் 7:1 “ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் உடல் ரீதியான உறவு கொள்ளாமல் இருப்பது நல்லது.” மேலும், திருமணமாகாதவன் கர்த்தருக்குச் சொந்தமானவைகளில் அக்கறை கொள்கிறான்; திருமணமானவன் தன் மனைவியை எப்படிப் பிரியப்படுத்தலாம் என்ற உலகத்திற்குரிய விடயங்களைக் கவனிப்பதில் அக்கறை கொள்கிறான் என்று 1 கொரிந்தியர் 7:32-33 கூறுகிறது. ஆகையால், நான் இந்த வார்த்தைகளை அதிக கவனத்துடன் கேட்டிருக்க வேண்டும், மேலும், “சிலர் ஏன் திருமணம் செய்துகொள்ள முடியாது என்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. சிலர் குழந்தைகளை பெற இயலாதவாறு பிறந்தார்கள். சிலர் மற்றவர்களால் அவ்வாறு ஆக்கப்பட்டார்கள். மேலும் சிலர் பரலோக இராச்சியத்தின் நிமித்தம் திருமணத்தைக் கைவிட்டார்கள். ஆனால் திருமணம் செய்துகொள்ளக் கூடியவர்கள் திருமண வாழ்வைக் குறித்த இந்தப் போதனையை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று மத்தேயு 19:12 இல் கூறுகிறார். ஆகவே உமது மேலான அரவணைப்பை நான் அதிக மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.
4. ஆனால், ஒரு கீழ்த்தரமான முட்டாளான நான் உம்மைக் கைவிட்டு, கடலைப் போல சீற்றம் கொண்டு என் சொந்த விருப்பத்தின் பேரில் வன்முறை வழிகளைப் பின்பற்றி, நீர் வகுத்த வரம்புகளையெல்லாம் மீறிவிட்டேன். அப்படியும் உமது கசையடி தண்டனைகளில் இருந்தும் என்னால் தப்ப முடியவில்லை. எந்த மனிதனால் அவ்வாறு செய்ய முடியும்? ஆனால் நீர் எப்போதும் என்னுடன் இருந்தீர், இரக்கத்துடன் கூடிய கண்டிப்பையும் கொண்டிருந்தீர், கசப்புடன் இருந்தபோதிலும், எனது மனசாட்சிக்கு விரோதமான முறையில் நான் அனுபவித்த அனைத்து இன்பங்களையும் களைந்தீர், இதனால் நான் கோபத்திலிருந்து விடுபட்டவனாய் இன்பங்களைத் தேடுவேன். ஆனால், ஆண்டவரே, உம்மைத் தவிர, நீர் ஒருவரைத் தவிர, அத்தகையவர்களை நான் எங்கு சந்திக்க முடியும். இதை உபாகமம் 32:39, பின்வருமாறு விளக்குகிறது: “‘இப்பொழுது நானே, நான் ஒருவரே தேவனாக இருக்கிறதைப் பார்! வேறு தேவன் இல்லை. நான் ஜனங்களை மரிக்கச் செய்வேன். நானே ஜனங்களை உயிருடன் வைப்பேன். நான் ஜனங்களைக் காயப்படுத்த முடியும். அவர்களைக் குணப்படுத்தவும் முடியும். எனது அதிகாரத்தைக் கொண்டு ஒருவனும் இன்னொருவனைக் காப்பாற்ற முடியாது”. ஆகவே, எங்களைக் குணப்படுத்தவே எங்களைக் காயப்படுத்துபவராய், எங்களுக்கு நித்திய வாழ்வைத் தரும் முகமாக எங்களை இறக்கச் செய்வதும் உம்மாலன்றி வேறு எவரால் முடியும்? “சிக்கலை ஒரு விதியாக உருவாக்கினீர்.” நீர் பிரச்சனையை எங்களுக்கு ஒரு கட்டளையாக ஆக்கிவிட்டீர், அதாவது நாம் முகம் கொடுக்கும் பிரச்சனையே எங்களுக்கு ஒரு கட்டளையாக இருக்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அந்த உமது மக்களெல்லோரும் ஒழுக்கம் மற்றும் அறிவுறுத்தல்களைப் பெற வேண்டும் என்று நீர் சித்தம் கொண்டுள்ளீர். அப்படிப்பட்டவர்களை வேறெதையும் நேசிப்பதிலிருந்தும் உண்மையான நன்மை நீர்தான் என்று அறிந்தும் உம்மை சட்டைசெய்யாமல் இருக்கும் நிலையில் இருந்தும் விடுவிக்க வேண்டும். எனக்கு பதினாறு வயது இருக்கும்போது, உமது சட்டத்தால் தடைசெய்யப்பட்டாலும், என் உடலில் மனித அவலம் காரணமாக முழு சுதந்திரத்தை அளிக்கும் காம இச்சையானது என் மீது தனது முழுமையான ஆதிக்கத்தையும் செலுத்தியது. அதற்கு நான் என்னை முழுவதுமாக விட்டுக்கொடுத்து விட்டேன். அப்படியானால் நான் இப்போது எங்கே இருக்கிறேன்? உமது இல்லத்தின் மகிழ்ச்சியிலிருந்து நான் வெகுதூரத்துக்குத் துரத்தப்பட்டுவிட்டேனா? இப்படி இருக்கையில் என்னைக் கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்கு திருமணம் மூலம் ஏற்படவிருக்கும் அழிவிலிருந்து என்னைக் காப்பாற்றுவதில் எந்த அக்கறையும் இல்லை. அவர்களின் ஒரே கவலை என்னவென்றால், நான் ஒரு சக்திவாய்ந்த பேச்சாற்றலைப் பெற வேண்டும் மற்றும் மனதை ஆழ ஊடுருவும் ஒரு பேச்சாளராக மாற வேண்டும் என்பதே.
அத்தியாயம் 3 – அவரது தந்தை தாகஸ்தேயில் வாழ்ந்த ஒரு சுதந்திர மனிதர். அவர் தனது மகனின் கல்வியை ஆதரிப்பவர், கற்பைப் பாதுகாப்பது குறித்து அவரது தாயின் அறிவுரைகளை அவருக்கு வழங்கினார்.
5. அந்த ஆண்டு எனது கல்வி நடவடிக்கைகள் தடைபட்டன, அதே நேரத்தில் நான் மதவ்ரா நகரிலிருந்து (அயல் நகரம், அங்கே இலக்கணம் மற்றும் சொல்லாட்சியைக் கற்றுக்கொள்வதற்காக நான் சென்றிருந்தேன்) திரும்பிய பிறகு, கார்தேஜில் தங்குவதற்கான செலவுகள் யாவும் எனக்கு வழங்கப்பட்டன; அது தாகஸ்தேயில் ஒரு மிகவும் எளிமையான மற்றும் சுதந்திரமாக வாழ்ந்த என் தந்தையின் வழியைக் காட்டிலும் உறுதியால் நிறைந்து காணப்பட்டது. நான் இந்தக் கதையை யாரிடம் சொல்வேன்? என் தேவனே, உம்மிடமல்ல; ஆனால் என்னுடைய இந்த எழுத்தாக்கங்களுக்கு ஊட்டமும் ஒளியும் வாய்ப்பும் கொடுத்த என் சொந்த இனத்தவருக்கும், மனிதகுலத்தின் சிறு பகுதியினருக்கும் உமது பிரசன்னத்தின் முன் சொல்கிறேன். அது எவ்வளவு தூரம்? அந்த வகையில் நானும் அதைப் படிக்கும் அனைவருமே உம்மிடம் எவ்வளவு ஆழமாக கதறி முறையிட வேண்டும் என்று சிந்திக்க வேண்டியுள்ளது. பாவங்களை அறிக்கையிட்டு அவற்றலுக்காக மனம் வருந்தும் இதயத்தையும் விசுவாச வாழ்வையும் விட உமது செவிகளுக்கு இதமாக இருக்கப்போவது எது? தன் மகனின் கல்விக்கு தேவையான அனைத்தையும் செய்து, அதன் நிமித்தம் வெகு தூரம் பயணிப்பதற்கு உதவியையும், ஒத்தாசையையும் புரிந்த என் தந்தையை எப்படி போற்றாமல், புகழாமல் இருக்க முடியும்? ஏனென்றால், அவரை விட செல்வந்தர்களாக வாழ்ந்த பலர் தங்கள் குழந்தைகளுக்கு அதை செய்ய விரும்பவில்லை. ஆனால் இந்த தந்தையோ ஆனால், நான் உம்மில் எப்படி வளர்ந்தேன் என்றும், எவ்வளவு கற்புடைவனாக வாழ்ந்தேன் என்றும், எனது பேச்சாற்றலில் எவ்வளவு திறமையாக இருந்தேன் என்றும், உமது கிருபையை உணராத வெறுமை உடையவனாகவும் இருந்தேன், கடவுளே, நீர் தாமே ஒரே உண்மையானவரும் நல்லவருமாவீர். என் இதயத்தின் காவலரான ஆண்டவரே, நீரே என் அடைக்கலம்.
6. ஆனால், எனக்குப் பதினாறு வயது நிரம்பியிருந்த போது, நான் சிறிது கால பாடசாலை விடுமுறையின் போது, என் பெற்றோருடன் தங்கியிருந்தேன். (என் பெற்றோரின் தேவைகளால் இந்த அலட்சியம் என் மீது திணிக்கப்பட்டது). காம இச்சைகள் என் தலைக்குள் முளைவிடத் தொடங்கின. அவர்களை வேரோடு பிடுங்கி எறிவதற்கு எவரும் இருக்கவில்லை. மேலும், குளியலறையில் என்னைப் பார்த்த என் தந்தை, நான் ஒரு பருவமடைந்த மனிதனாக மாறுவதை உணர்ந்து, அமைதியற்ற இளமையால் உந்தப்பட்டு, இந்த வருங்கால சந்ததியை எதிர்பார்த்து இருந்தவர் போல் மகிழ்ச்சியுடன் என் தாயிடம் இதுபற்றிக் கூறினார்; உலகம் தன் படைப்பாளனை அடிக்கடி மறந்து, உமக்குப் பதிலாக நீர் படைத்த மற்றைய உயிரினங்களை நேசிக்கிறது. அந்த மாயையில் மகிழ்கிறது. கண்ணுக்குத் தெரியாத போதையுடன் அதன் சொந்த வக்கிரம் காரணமாக, மிகவும் இழிவான விஷயங்களுக்குள் தன்னை மூழ்கடித்துக் கொள்கிறது. ஆனால் என் தாயின் பாலூட்டும் மார்நாகங்களில் இப்போதும் உமது தேவாலயத்தைக் கட்டியெழுப்பி அங்கே நீர் எழுந்தருளியுள்ளீர். ஆனால் என் தந்தை சமீபத்தில் தான் கிறீஸ்தவ மதத்துக்குள் உள்வாங்கப்பட்டவராக இருக்கிறார். அவள் பின்னர் நியாயமான அச்சத்துடனும் நடுக்கத்துடனும் மேலும் தொடர்ந்தாள். நான் இன்னும் ஞானஸ்நானம் பெறவில்லை என்றாலும் அவர்கள் நடக்கும் கோணலான வழிகளைக் கண்டு அவள் பயந்தாள். அவர்கள் உமது முகத்தைப் பார்க்கக்கூடிய திராணியைக் கூட இழந்தவர்களாகக் காணப்பட்டனர். இதை எரேமியா 2.27 இல் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: “அவர்கள் அனைவரும் வெட்கப்படுவார்கள். அந்த ஜனங்கள் என் முகத்தைப் பார்க்கமாட்டார்கள். ஆகவே அவர்கள் எனக்குத் தம் முதுகையே காட்டினார்கள்.”
7. ஐயகோ! என் தேவனே, நான் உம்மை விட்டு வெகுதூரம் விலகிச் சென்றபோதும், நீர் அமைதி காத்தீர் என்று உறுதியாக சொல்கிறேன். அப்படியானால் நீர் உம்முடைய சமாதானத்துக்குள் என்னை உள்வாங்கி கொண்டீரா? அப்படியானால் ஏன் உமக்காகத் தன்னை அர்ப்பணித்த பக்தியுள்ள பெண்ணான என் தாய் வாயிலாக நீர் என் காதுகளுக்குள் பொழிந்த வார்த்தைகள் எதுவுமே என்னை கட்டாயப்படுத்தும் விதத்தில் என் இதயத்தை எட்டவில்லை? விபச்சாரத்தில் ஈடுபட வேண்டாம் என்று என் அன்னை என்னை மிகவும் கடுமையாக எச்சரித்தாள். அவள் இதை எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த வேண்டுகோளுடன் எடுத்துரைத்தாள். அத்தோடு, எல்லாவற்றுக்கும் மேலாக இன்னொருவரின் மனைவியை ஒருபோதும் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்த வேண்டாம் என்று எனது தாய் என்னை உரிமையுடன் எச்சரித்தது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. இவை சாதாரணமாக பெண்களால் வழங்கப்படும் அறிவுரைகளாகவே எனக்குத் தோன்றியது. அவற்றுக்கு கீழ்ப்படியவோ, அவற்றையிட்டு வெட்கப்படவோ கூடிய அறிவுரைகள் அல்ல என்று நான் நினைத்தேன். ஆனால் அவை உம்மிடமிருந்து வந்த ஆலோசனைகள் என்பதை நான் அறியவில்லை. நீர் அமைதி காப்பவர் என்றும் அவள் தான் இதுபற்றிப் பேசுகிறாள் என்று தான் நான் நினைத்தேன். அவள் மூலம் நீரே எனக்கு அமைதியை உண்டுபண்ணினீர் என்றும், அவள் மூலமாக, அவளுடைய மகனுக்கு, அதாவது உமக்குத் தன்னை அர்ப்பணித்த ஒரு பெண்ணின் மகன், உம்மைக் கண்டனம் செய்தவனாகக் காணப்பட்டான். அதனால் கண்மூடித்தனமாக தலையை உயர்த்தி அதை நோக்கி ஓடினேன். எனக்கு சமமானவர்கள் மத்தியில் நான் கேவலமான செயல்களைச் செய்ததற்காக வெட்கப்பட்டேன். அவர்கள் தாங்கள் செய்யும் இழிவான செயல்களால் மகிழ்ச்சியடைந்த போதும், அதையிட்டு அவர்கள் மேலும் உயர்த்தப்படுவதை நான் கேள்விப்பட்டபோதும், நான் அவற்றைச் செய்வதில் மகிழ்ச்சியடைந்தேன். இது வேடிக்கைக்காக மட்டுமல்ல, பாராட்டுக்காகவும் செய்ததாகவே எண்ணுகிறேன். ஒழுக்கக்கேட்டை விட கேவலமான அவதூறு என்ன இருக்கிறது? ஆனால் நான் நிந்திக்கப் படாமல் இருக்கவேண்டும் என்ற நோக்கில், முன்பிருந்ததை விட மோசமான நிலைமைக்குள் என்னை கொண்டுசென்றேன். எதில் நான் குற்றம் செய்யவில்லையோ அதை விட்டுவிட்டேன். அதேநேரம், நான் செய்யக் கூடாததை செய்தேன் என்றும் உறுதியளிக்கிறேன். மேலும் நான் குற்றமே செய்யாதவனாகவோ அல்லது அதிக கற்புடையவன் என்பதற்காகவோ என்னைக் குறைவாக மதிப்பிட்டு விடக்கூடாது என்பதற்காகத் தான் இதைச் செய்யும் நிர்ப்பந்தத்துக்கு உள்ளானேன்.
8. நான் பாபிலோனியாவின் தெருக்களில் எப்படிப்பட்ட தோழர்களோடு சேர்ந்து அலைந்து திரிந்திருக்கிறேன் என்று கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்; நான் கறுவா மற்றும் விலைமதிப்பற்ற தைலங்களால் ஆலாபனை செய்யப்பட்டிருந்தபோதும், அவர்களோடு கெட்ட சிநேகிதம் கொண்டிருந்தேன் என்பதை எண்ணி வியக்கிறேன். அதன் மையத்தை நான் இன்னும் உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, என் கண்ணுக்கு புலப்படாத எதிரி என்னைத் துவம்சம் செய்து என்னை ஏமாற்றுவதை எளிதாக்கினான். என்னை இந்த உலகுக்குக் கொண்டு வந்த என் தாய், பாபிலோனை விட்டு தப்பி ஓடத் தன்னை தயார் செய்து கொண்டிருந்த போதிலும், அதைச் செய்வதில் அவள் உறுதியாகவே இருந்தாள். அதேநேரம் அவள், என்னை கற்பு நெறி தவறாது வாழவேண்டுமென அறிவுரை செய்தபடியே இருந்தாள். இதுபற்றி எரேமியா ….. பின்வருமாறு கூறியிருக்கிறது: “பாபிலோனை விட்டு ஓடுங்கள்! உங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடுங்கள்! தயங்காதீர்கள். பாபிலோனின் பாவத்தால் கொல்லப்படாதீர்கள். பாபிலோனின் ஜனங்களை அவர்கள் செய்த தீமைக்காக கர்த்தரால் தண்டிக்கப்படக் கூடிய காலம் இது! பாபிலோன் தனக்குத் தகுதியான தண்டனையைப் பெறும்”. என்னைப் பற்றி அவள் கணவன் சொன்னதை அவள் மனதில் கொள்ளவில்லை. என் உணர்வுகள் அழிவுகரமானவை, உண்மையில், அவற்றை விரைவாகத் தவிர்த்துவிட முடியாதுபோகும் படசத்தில், எதிர்காலத்திற்கு ஆபத்தானவை என்பதை அவள் அறிந்திருந்தாலும், அவை திருமண பந்தத்தின் மூலம் கட்டுப்பட்டு விடும் என்று அவள் நினைக்கவில்லை. அவள் இதைப் பற்றிக் கவலைப்பட வில்லை, ஏனென்றால் என் நம்பிக்கைக்கு ஒரு மனைவி தடையாகவும் சுமையாகவும் இருப்பாள் என்று அவள் பயந்தாள். இவையெல்லாம் வரப்போகும் உலகத்தைப் பற்றிய அவளுடைய அனுமானங்கள் அல்ல, என் தாய் உம்மீது வைத்திருந்த நம்பிக்கை, நான் நல்ல கல்வியைப் பெறவேண்டும் என்பதில் என் பெற்றோர் இருவரும் மிகவும் ஆர்வமாக இருந்தார்கள் – என் தந்தை, அவர் உம்மைப் பற்றிக் கொஞ்சம் கூட அல்லது அறவே எவ்வித சிந்தனையும் இல்லாதிருந்தார் என்றே கூறவேண்டும். என்மீதும் அவர் கொண்டிருந்தது மேலோட்டமான பாசமே. ஆனால் என் தாய் வழக்கமான படிப்பு எந்த இடையூறையும் ஏற்படுத்தாது என்றும், உண்மையில் நான் உம்மை நெருங்கி வருவதற்கான ஒரு படி என்று அவள் எண்ணினாள். ஏனென்றால் என் பெற்றோரின் அணுகுமுறையை என்னால் முடிந்தவரை நினைவில் கொள்கிறேன். இதற்கிடையில், நான் விரும்பிய விளையாட்டை விளையாடுவதற்கும், நான் நினைத்ததை செய்வதற்கும் என் மீது விதிக்கப்பட்டிருந்த கடும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை உணர்ந்தேன். நீர் கற்பித்த சத்தியத்தின் பிரகாசம் என் கண்களை முழுவதுமாக மூடிய மூடுபனி போல் இருந்தது. மேலும், கடவுளே, நான் செய்த அக்கிரமம் எனக்கே மிகுந்த திமிரை ஏற்படுத்துவதாகத் தோன்றியது.
அத்தியாயம் 4 – அவர் தனது சிநேகிதர்களுடன் திருட்டில் ஈடுபட்டது வறுமையின் காரணமாக அல்ல, நல்வாழ்வின் மீது ஏற்பட்ட ஒரு சடுதியான வெறுப்பின் காரணமாக
9. ஆண்டவரே, திருட்டு என்பது உமது சட்டத்தாலும், அக்கிரமத்தில் இருந்து விடுபட முடியாத மனிதர்களின் இதயங்களிலும் எழுதப்பட்ட சட்டத்தாலும் கூடத் தண்டிக்கப்படக் கூடியதாயிருக்கிறது. ஒரு திருடன் தான் செய்த எந்தத் திருட்டு நிமித்தம் அவதிப்படுகிறான்? ஒரு பணத்தாசை பிடித்த திருடன் கூட தேவை காரணமாகத் திருடிய மற்றொரு திருடனை அனுமதிக்க மாட்டான். ஆனால் நான் கொள்ளையடிக்கும் ஆசை காரணமாகவே திருடுவதில் ஈடுபட்டேன். என்னை செய்யத் தூண்டியதும் அந்த ஆவல் தான். பசியோ, ஏழ்மையோ நான் திருடுவதற்குக் காரணம் அல்ல. நன்மை செய்ய விரும்பாது, தீமை செய்ய என் மனம் என்னைத் தூண்டியதன் காரணமாகவே நான் இதைச் செய்தேன். ஏற்கனவே திருட்டில் மூலம் என்னிடம் ஏராளமாக இருந்தவற்றைப் போலவே மென்மேலும் உயர்ந்தவற்றையே நான் திருடினேன். அது மிகவும் உயர்ந்த தரமாக இருந்தது. எனது திருட்டுத் தொழிலையும் செயலையும் அதனால் நான் புரிந்த குற்றத்தை மட்டுமே நான் பெரிதாக எண்ணினேன். நான் எடுத்த பொருட்களை அல்ல. ஏனென்றால் என்னிடம் ஏற்கனவே போதுமான அளவு இருந்ததை நான் அறிவேன். மேலும் என்னிடம் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும், திருடிய பாவம் காரணமாக, திருடியதை அனுபவிக்க மனம் வரவில்லை. எங்களுக்குச் சொந்தமான திராட்சைத் தோட்டத்திற்கு அருகிலேயே ஒரு பேரிக்காய் மரம் இருந்தது. அதன் நிறத்திற்கோ, சுவைக்கோ அதன் மீது ஈர்ப்பு ஏற்படாமல் இருந்தாலும், அம்மரத்தில் அதிக அளவில் பழங்கள் நிறைந்திருந்தது. எங்களுடைய கூடாத பழக்கம் எங்களை எப்போதுமே தொற்றிக்கொண்டிருந்தபடியால், ஒரு நாள் இரவு வெகுநேரமாக நாங்கள் தெருவில் விளையாடிவிட்டு, நானும் என்னோடு விளையாடிய மற்றைய இளம் குறும்புக்காரர்களுடன் சேர்ந்து நாங்களெல்லோரும் அந்த கனிகள் நிறைந்த மரத்தை அசைத்து கனிகளைத் திருட ஆயத்தமானோம். திருடிய பேரிக்காய்களை எல்லாம் நாமே உண்பதற்காக அல்ல, சிலவற்றை ருசித்துப் பார்த்த பிறகு, பன்றிகளுக்குக் உணவாய்ப் போடுவதற்காகப் பெரிய அளவிலான பேரிக்காய்களை எடுத்துச் சென்றோம். இவ்வாறான செயல்கள் செய்வது குற்றம் என்று தெரிந்திருந்தும், இதைச் செய்வது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என் தேவனே, இதுதான் என் குணமாகவும், இயல்பாகவும் இருந்தது. இவ்வாறான அந்த அதலபாதாளத்தில் நான் வீழ்ந்துவிட்ட போதிலும் நீர் என்மீது பரிதாபம் கொண்டீர். இப்போது, இதோ, நான் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டிருந்தபோதும், இதோ, இப்போது என் மனம் எதைத் தேடுகிறது என்பதை என் இதயம் உம்மிடம் ஒப்புக்கொள்ளட்டும். அது தவறாக இருந்தாலும், நான் அதை மிகவும் ரசித்தேன். தீமையில் நாட்டமில்லாத நான், ஏன் தேவையில்லாமல் அதை விரும்ப வேண்டும் என்று எண்ணினேன். நான் இல்லாதொழிக்கப் படுவதை விரும்பினேன். தவறுகளையே நான் நேசித்தேன். நான் செய்த தவறை அல்ல. பாழ்பட்ட ஆன்மாவானது, உமது பாதுகாப்பில் இருந்து விடுபட்டு, முற்றிலும் அழிவை நோக்கி விழுகிறது, அது அங்கே அவமானத்தைத் தவிர வேறு எதையும் தேடவில்லை!
அத்தியாயம் 5 – பாவத்திற்கான நோக்கங்களைப் பற்றியது. அவை தீய நோக்கத்தால் செய்யப்படவில்லை; மற்றவர்களின் சொத்துக்களை அடையும் நோக்கத்தோடேயே செய்யப்பட்டது
10. அலங்காரம் செய்யப்பட்ட அழகான மேனி, தங்கம், வெள்ளி மற்றும் எல்லாவற்றிலும் ஆசை எழும். எனவே சரீர ரீதியான ஸ்பரிசம் சக்தி வாய்ந்தது. மற்றும் பிற புலன்கள் அவற்றின் சரியான தொழிற்பாடுகளை உடலைத் தீண்டும் போது எழும் உணர்வில் காண்கின்றன. உலக மாண்பும், ஆட்சி செய்யும் திறனும், தனக்கே உரிய வெற்றியும் அங்கேதான் காணப்படுகின்றன. இவற்றில் இருந்துதான் பழிவாங்கும் ஆசை எழுகிறது. எனவே, இவை அனைத்தையும் நாம் பெறவேண்டுமானால், ஆண்டவரே, நாங்கள் உம்மைவிட்டு விலகவோ, உமது நீதியை விட்டு விலகவோ கூடாது. நாம் இங்கு வாழும் வாழ்க்கை அதன் தனித்துவமான கவர்ச்சியைக் கொண்டுள்ளது, ஏனெனில் அது ஒரு குறிப்பிட்ட அழகு மற்றும் இவ்வாறான அனைத்து அற்ப விடயங்களுடன் இணங்கியே செல்கிறது. மனித நட்பின் பிணைப்பும் அதற்கே உரித்தான இனிமையைக் கொண்டுள்ளது, அதன்மூலம் பல உள்ளங்களை ஒன்றாக இணைக்கிறது. இவை அனைத்தினாலும், இது போன்ற காரணிகளாலும் பாவத்தில் விழ நேரிடுகிறது; இந்த கீழ்த்தரமானவற்றை அடைய வேண்டுமென்ற அளவுகடந்த ஆசை காரணமாக, சிறந்த மற்றும் உயர்ந்தவை புறக்கணிக்கப்படுகின்றன – எங்கள் ஆண்டவராகிய உம்மையும் உமது சத்தியத்தையும் சட்டத்தையும் கூட புறக்கணிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். ஏனெனில் இந்த கீழ்மட்டமான விஷயங்கள் மகிழ்ச்சியைத் தருகிறது என்பதால். ஆனால் அவை யாவும் அனைத்தையும் படைத்த என் கடவுளுக்கு சமமானவை அல்ல. நீதிமான்கள் என்றும் அவரில் பிரியமாயிருப்பார்கள், ஏனெனில், அவர் குடிகொள்ளும் இதயத்தில் இனிதே எழுந்தருளுவார். 11. எனவே, ஒரு பாவம் ஏன் கட்டிக்கொள்ளப்பட்டது என்று சற்று ஆராய்ந்து பார்த்தால், ஒரு குறிப்பிட்ட சில அடிப்படை விஷயங்களை நாம் அடைய வேண்டும் என்ற ஆசையோ அல்லது அவற்றை இழந்துவிடுவோமோ என்ற பயமோ தோன்றினாலே தவிர, இந்த விளக்கத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். உண்மையில் அவை அழகானவை மற்றும் கவர்ச்சியானவையாக இருக்கக்கூடும். இருப்பினும் புனிதமான தெய்வீகமான பொருட்களுடன் ஒப்பிடுகையில், அவை இழிவானவை மற்றும் அற்பத்தனமானவை. ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கொல்கிறான். அப்படியானால் அவனுடைய நோக்கம் என்னவாக இருக்கும்? ஒருவேளை அவன் அந்த மனிதனின் மனைவியையோ அல்லது அவனுடைய சொத்தையோ விரும்பி இருக்கக்கூடும். அல்லது அவன் எதையாவது அடையவேண்டும் என்ற நோக்கத்தோடு திருடச் சென்றிருப்பான்; அல்லது தன்னிடம் உள்ளதை இழந்துவிடக்கூடுமோ என்று பயம் கொண்டிருப்பான்; அல்லது காயத்துக்குள்ளாகி பழிவாங்குவதற்காக புகைந்து கொண்டிருப்பான். எந்த நோக்கமும் இல்லாமல் ஒருவன் எப்படி ஒரு கொலையைச் செய்ய முடியும்? அல்லது அப்படிப்பட்ட கொலைப் பாதகச் செயலை பாராட்டுபவர் எவரும் உண்டோ? அந்த காட்டுமிராண்டித்தனமான மற்றும் கொலைவெறி பிடித்த மனிதனைப் பொறுத்தவரை, அவன் எக்காரணமுமின்றி ஒரு பாதகன் அல்லது கொடூரமானவன் என்று அறிவிக்கப்படுகிறான். ஏனென்றால் அவனது மூர்க்க செயலில் எவ்வித நோக்கமும் காணப்படாததால். அலட்சியத்தால் கை அல்லது இதயம் செயலாற்றுப் போக வேண்டும் என்கிறார். வேறு எந்த நோக்கத்தின் நிமித்தமாக இருக்கக்கூடும்? ஏனெனில், அந்த அக்கிரமச் செயலின் மூலம் நகரத்தை ஒருமுறை கைப்பற்றிக்கொண்டதால் அவர் மரியாதை, ஆட்சி மற்றும் செல்வத்தை பெற்றிருக்கக்கூடும். அத்தோடு, சட்டம், அவரது குடும்பத்தின் நலன் குறித்த பயம் மற்றும் அவரது கஷ்டங்களிலிருந்தும், உணர்வுகளிலிருந்தும் விடுபட்டிருக்கக்கூடும். இதனால் கேட்லீன் என்பவர் கூட தான் செய்த தீமைகளை விட வேறு எதையாவது நேசித்ததாக தெரிகிறது. அதாவது, வில்லத்தனங்களைச் செய்ய தூண்டப்பட்டதாகத் தெரிகிறது.
அத்தியாயம் 6 – நல்லது எனத் தோன்றும் அனைத்தும் தீமையைக் கொண்டுவரும் பட்சத்தில், கடவுளில் மட்டுமே உண்மையும் பூரணமும் இருக்கும் போது அவர் ஏன் திருடுவதில் மகிழ்ச்சியடைந்தார்?
அப்படியானால், என் வாழ்க்கையின் பதினாறாம் வயதில் சீரழிவுக்கு உட்பட்டு, இருந்த யுகத்துக்குள் தள்ளப்பட்டு, ஒரு பரிதாபத்திற்குரிய நான் உம்மை மிகவும் நேசித்தேன். நீங்கள் என்னுடைய உடமையைத் திருடினீர்கள். இது வாழ்வின் ஒரு இருண்ட பகுதியே. ஆகவே திருடனாக இருந்ததால் நீ நல்லவனாக இருக்கவில்லை. ஆனால் இதைப் பற்றி என்னிடம் ஏதாவது வாதிடத் தோன்றுகிறதா? நாங்கள் திருடிய பேரிக்காய்களைப் பொறுத்தவரை, அது நியாயம் என்றே தெரிகிறது, ஏனென்றால் அவை உமது படைப்பு. நீர் எல்லாவற்றிற்கும் மேலானவர், நியாயத்துக்கு அதிபதி. நீரே அனைத்தையும் படைத்தவர், நீரே நல்ல தேவன் – உன்னதர் மற்றும் என் உண்மையான நேசர். அந்தப் பேரிக்காய்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகானவையாகவும் இனிமையானவையாக்வம் இருந்தன; ஆனால் பாவியான என் உள்ளம் அவற்றை விரும்பவில்லை. ஏனென்றால் நான் செய்யக்கூடிய இன்னும் சிறந்த விஷயங்கள் பல இருந்தன. ஆனால் திருடவேண்டுமென்றே அவற்றை பறித்தேன். ஏனென்றால் அவற்றை பறித்த பிறகு நான் அவற்றை தூக்கி எறிந்தேன். அவற்றை பறித்து மகிழ்ந்ததில் எனக்குள் எழுந்த குற்ற உணர்ச்சி மட்டுமே எனக்குத் திருப்தியைக் கொடுத்தது. இந்த பேரிக்காய்களில் ஒன்றை நான் என் வாயில் போட்டு அதன் சுவையை அனுபவித்தபோது, அது நான் செய்த பாவம் என்ற குற்ற உணர்ச்சி என்னை வதைத்தது. இப்போது, என் கடவுளாகிய ஆண்டவரே, என்னுடைய அந்தத் திருட்டில் என்னை மிகவும் சந்தோஷப்படுத்த என்ன தான் இருந்தது என்று நான் உம்மிடம் கேட்கிறேன். ஏனென்றால் நான் சொல்வது இதுதான். நீதியிலும் ஞானத்திலும் இருப்பது போல் இதில் எந்தவித நன்மையையும் காணப்படவில்லை. மேலும், மனிதனின் மறுபக்கத்தில் ஒளிந்திருக்கும் மிருக வாழ்வில் மனசாட்சியோ, நினைவுகளோ, புலன்களின் கவர்ச்சியோ காணப்படுவதில்லை. மின்னும் நட்சத்திரங்களின் பெருமையும் அழகும் அங்கு காணப்படவில்லை. அல்லது பூமியிலோ அல்லது கடலிலோ ஆரம்பகாலத்தினுள் சிருஷ்டிக்கப்பட்ட உயிர்களால் நிரம்பி இருக்கிறது. ஒன்று சிதைந்து அழிந்துவிடும்போது மற்றொன்று தோன்றும். அல்லது உண்மையில் தவறான மற்றும் இயற்கையின் இந்த போலியான சித்திரங்கள் உண்மையான தோற்றத்தின் நிழலைக்கூட அங்கே பிரதிபலிப்பதில்லை.
13. இவ்வாறு பெருமை என்பது உயர்ந்த அந்தஸ்தைத் தேடியே செல்கிறது. அதேசமயம் நீர் மட்டுமே கடவுள், எல்லாவற்றிற்கும் மேலான உன்னதர். எல்லாவற்றிற்கும் மேலாக நீர் ஒருவர் மட்டுமே ஆராதிக்கப்பட வேண்டும், என்றென்றும் புகழுக்குரியவராக இருக்க வேண்டும் எனும்போது, உம்மைத் தவிர, இலட்சியம், மரியாதை மற்றும் புகழ் போன்றவற்றை ஏன் நாடவேண்டும்? விரும்பத்தகாதவர்களின் கரிசனை கூட அன்பாகவே கருதப்படுகின்றன; ஆனால் உமது அன்பை விட மேலானது எதுவும் இல்லை, ஆழமாக நேசிக்கக்கூடியது எதுவும் இல்லை, நீர் வெளிப்படுத்திய சத்தியம் எல்லாவற்றையும் விட பிரகாசமானதும் மற்றும் அழகானதுமாகும். ஆர்வம் அறிவின் தேடலைத் தூண்டுகிறது, மேலும் நீர் மட்டுமே அனைத்தையும் அறிந்தவராக இருக்கிறீர். ஆம், எளிமை மற்றும் தீங்கற்ற தன்மை என்ற சாக்குப்போக்கின் கீழ், அறியாமை மற்றும் முட்டாள்தனம் மறைக்கப்படுகின்றன; அதற்குக் காரணம், உம்மைத் தவிர அப்பாவியாக இருப்பவர் ஒருவரை எவரும் காண முடியாது. ஒரு பாவியானவன் அவனுடைய சொந்தக் கிரியைகளை காரணமாக பாவங்களில் விழுவதைவிட, அவனுக்குத் தீங்கு விளைவிப்பது வேறு எது? மனிதனின் சோம்பேறித்தனம் அவன் ஓய்வுக்காக ஏங்குவது போல் அவனை நடிக்க வைக்கிறது. ஆனால் இறைவனிடம் கிடைக்கும் இளைப்பாறுதலைவிட மேலான ஓய்வு எங்கே இருக்கிறது? ஆடம்பரம் என்பது மிகுதியானதும் நேர்த்தியானதும் என்று அழைக்கப்பட்டாலும், நீரே என்றும் மாறாத நிறைவாகவும், குறைவில்லாத மகிழ்ச்சியைத் தருபவராகவும் இருக்கிறீர். ஊதாரித்தனம் சுதந்திரத்தின் நிழலை உங்கள் முன் ஏற்படுத்துகிறது. ஆனால் நீரோ எல்லா நல்ல விஷயங்களையும் வழங்கும் சர்வ வல்லமை உள்ளவராக இருக்கிறீர். பேராசை பல வடிவங்களைக் கொண்டிருக்கும்; ஆனால் நீரோ அனைத்தையும் உடையவர். பொறாமை மேலாதிக்கத்தை அடையப் போராடுகிறது: உம்மை விட சிறந்தவர் யார்? கோபம் பழிவாங்கத் துடிக்கிறது: ஆனால், உம்மை விட நியாயமாக தண்டிப்பது யார்? பயம் என்பது நாம் விரும்பாத நேரங்களில், மற்றும் எதிர்பாராமல் திடீர் என்று நம்மைத் தொற்றிக்கொள்கிறது. இது ஒருவர் மிகவும் விரும்பும் விடயங்களுக்கு முட்டுக்கட்டையாய் இருக்கிறது. மேலும் அவர்களின் பாதுகாப்பிற்கான ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கிறது; ஆனால் நீர் எதிர்பாராத நேரங்களில் திடீரென்று எதுவும் நடக்கக்கூடுமோ? அல்லது நீர் விரும்புவதை யாராலும் பறிக்க முடியுமா? உம்முடைய அசைக்க முடியாத பாதுகாப்பில் என்னை எங்கே வைத்திருக்கிறீர்? ஆசை மகிழ்ச்சியைக் கொடுக்கும். தொலைந்து போன விஷயங்களை நினைத்து துக்கமும் கவலையும் ஏற்படும். என்றாலும், அதில் இருந்து எதையும் பெற முடியாது, உங்களால் எதுவும் செய்யவும் முடியாது.
14. அவளது ஆன்மா உம்மைப் புறக்கணித்து, மீண்டும் உம்மிடம் திரும்பி வரும் வரை அவளால் கண்டடைய முடியாத, தூய்மையான மற்றும் மாசில்லாததை உமது துணையின்றித் தேடுகிறாள். அப்படித் தேடும் போது அந்த மனம் விபச்சாரத்தில் ஈடுபடுகிறது. இப்படி உம்மை விட்டு விலகி உமக்கு எதிராக செயல்படுபவர்கள் எல்லோரும் உம்மை வக்கிரமாக பின்பற்றுகிறார்கள். ஆனால் இவ்வாறு உம்மைப் பின்பற்றினாலும், நீரே சகலவற்றையும் படைத்தவர் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள், அதனால் அவர்கள் உம்மிடமிருந்து எங்கும் சென்று நிரந்தரமாக ஓய்வெடுக்க இயலாது. அப்படியானால் அந்தத் திருட்டில் நான் எதை விரும்பினேன்? என் இறைவனை நான் எங்கே, எப்போது ஊழலுடனும் வக்கிரமாகவும் பின்பற்றினேன்? ஏனென்றால், ஒரு அடிமையாக இருந்தபடியால் என்னால் அதை பலவந்தமாக செய்ய முடியவில்லை, உம்முடைய சட்டத்திற்கு மாறாகச் செயல்பட வேண்டும் என்று நான் விரும்பினேன், ஆனால் என்னால் முடியவில்லை. உம்முடைய சர்வ வல்லமையின் நிழலில், செய்ய அனுமதிக்கப் படாதவற்றையும், சட்டத்திற்குப் புறம்பான காரியங்களைச் செய்வதன் மூலமும் நான் பரிபூரண சுதந்திரத்தைப் பின்பற்றியிருக்கலாமே? ஆகவே, தனது இறைவனை விட்டு ஓடி போலியாகத் தெரியும் நிழலைப் பின்தொடரும் இந்த உமது அடியானைப் பாரும்! கெட்டுப்போனவனாய்! மிலேச்சத்தனமான வாழ்க்கை வாழ்ந்தவனாய், மரணத்தின் குழியில் வீழ்ந்தவனாய் இருக்கும் நான், சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிந்துகொண்டே கூடாத காரியங்களில் ஈடுபட்டவனாகிய நான், சட்டத்திற்கு புறம்பானதை விரும்பி ஏற்றுக்கொள்ள முடியுமா? நான் மட்டும் உமது சட்டத்திற்கு எதிராக நடக்க முடியுமா?
அத்தியாயம் 7 – அவர் தனது பாவங்களை மன்னித்ததற்காக கடவுளுக்கு நன்றி கூறும் அதேவேளை, சர்வவல்லமையுள்ள தேவன் சாவான பாவங்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துள்ளார் என்பதை அனைவருக்கும் நினைவூட்டுகிறார்
15. இவைகளை என் நினைவுகளில் மீட்டிப் பார்க்கும்போது என் ஆன்மா கலங்காதிருக்கவேண்டும். அதற்காக நான் கர்த்தருக்கு என்ன செய்ய பிரதியுபகாரம் செய்ய வேண்டும்? ஆண்டவரே, நான் உம்மை நேசிப்பேன், உமக்கு நன்றியுடைவனாயிருப்பேன், உமது பெயரை துதிப்பேன்; இதை வெளிப்படுத்துதல் 3:5 மிக அழகாக பின்வருமாறு விளக்குகிறது: “வாழ்வின் நூலிலிருந்து அவர்களின் பெயர்களை நீக்கிவிட மாட்டேன். மாறாக, என் தந்தை முன்னிலையிலும் அவருடைய வானதூதர்கள் முன்னிலையிலும் அவர்களின் பெயர்களை அறிக்கையிடுவேன்” என்கிறது. ஏனென்றால், என்னுடைய இந்த மிக மோசமான மற்றும் வெட்கக்கேடான பாத்திரத்தை என்னிடமிருந்து நீக்கினீர். என் பாவங்களை சூரியனைக் கண்ட பனியைப் போல உருக்கி விட்டீர் என்பதை நினைத்து உமது கருணை மற்றும் இரக்கத்தைக் கண்டு அதிசயிக்கிறேன். நான் தீமைகள் செய்யாத ஒவ்வொரு கணப்பொழுதையும் உமது மகிமைக்கு ஒப்புக்கொடுக்கிறேன். ஆம், நான் ஒப்புக்கொண்ட பாவங்களுக்காகவும், என் சொந்த வக்கிர புத்தி காரணமாக நான் செய்தவை மற்றும் உமது வழிகாட்டுதகளைப் பின்பற்றி நான் செய்யாத தவறுகளுக்காகவும் மன்னிக்கப்பட்டேன் என்று அறிவிக்கிறேன். தன் சொந்த பலவீனத்தை பெரிதாக எண்ணி, உம்மை அளவோடு நேசித்து, தன் கற்பையும் குற்றமற்ற தன்மையையும் தன் வலிமைக்குக் காரணம் காட்டத் துணிந்தவன் ஒருவன் இருப்பானாகில், அவன் உமது தயவுக்குத் தகுதியற்றவனாய் இருந்தபோதிலும், அவனைப்போல் பாவங்களைக் கட்டிக்கொண்டவர்கள் யாவரையும் மன்னிக்கும் கருணை உம்மிடம் உள்ளதன்றோ?
ஏனெனில், உம்மால் அழைக்கப்பட்டவர்களும், உமது குரலுக்குச் செவிசாய்ப்பவர்களும், என்னை நினைவுகூர்ந்து அவர் தனது பாவங்களை அறிக்கையிடும் போது, அவர் என்னைக் கண்டிக்காதிருப்பார். லூக்கா 4:23, இல் கூறப்பட்டுள்ளபடி, “நோய்வாய்ப்பட்ட பிறகு அதே மருத்துவரால் குணப்படுத்தப்பட்டவர், உமது உதவியின் காரணமாக அவர் உடல்நிலை தேறி இருந்தார் அல்லது ஓரளவு நன்றாக தேறி இருந்தார்”. இதன் நிமித்தம், அவர் உங்களை மேலும் மேலும் நேசிக்கட்டும், முற்றுமுழுதாக நேசிக்கட்டும். ஏனென்றால் அவர் தான் பாவம் எனும் பெரும் பலவீனத்திலிருந்து நான் மீட்கப் பட்டதைக் காண்கிறார். பலவீனம் காரணமாக, அவரால் பாதுகாக்கப் படுவதற்கு தான் மிகவும் தகுதியுடையவராக இருப்பதையும் காண்கிறார்.
அத்தியாயம் 8 – தனது திருட்டு நடவடிக்கைகளின் போது அவர் சக பாவிகளின் சகவாசத்தில் மகிழ்ந்திருந்தார்
16. உரோமையர் 6:21 இல் குறிப்பிட்டவாறு, “அன்று நீங்கள் பாவம் செய்தீர்கள். இப்போது அவற்றுக்காக வெட்கப்படுகின்றீர்கள். அதனால் உங்களுக்கு என்ன பலன்? அதற்குப் பதிலாக மரணமே கிடைத்தது”, என்பதற்கிணங்க, நான் ஒரு வீணாகிப்போனவனாய் இருக்கிறேன். கடந்து சென்ற கசப்பான நிகழ்வுகளை மீட்டிப் பார்க்கும்போது, நான் மிகவும் வெட்கத்துக்கு ஆளாகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக, திருட்டையும், அதை நான் மிகவும் நேசித்து அதில் ஈடுபட்டதையும் நினைத்து கூனிக்குருகிப் போகிறேன். திருட்டைப் பொறுத்தவரை, அதில் நன்மை என்று ஒன்றும் இல்லை, அதை விரும்பிய நான், மேலும் கீழ்நிலைக்கு ஆளாகினேன். ஆனால் நானே அதைச் செய்யா விட்டாலும், என் மனம் என்னை எப்படி அதற்குள் என்னை இட்டுச் சென்றது என்பது எனக்கு நினைவிருக்கிறது. என்னால் தனித்து அதில் ஈடுபட முடிய வில்லை. அந்த நேரத்தில் என்னுடன் சேர்ந்து அதைச் செய்த என் தோழர்களின் பிரசன்னத்தை நான் விரும்பினேன். அதனால் களவை மட்டுமே நான் நேசிக்கவில்லை, மாறாக, நான் அதை தனியாக செய்திருக்கலாம், ஆனால் சக தோழர்களோடு இணைந்து செய்வதில் ஒருவித மகிழ்ச்சியைக் கண்டேன். காரணம் என்னவாக இருக்கும்? என் இதயத்தை ஒளிரச் செய்து அதன் இருண்ட பகுதிகளைக் கண்டறிபவரைத் தவிர வேறு யார் எனக்கு நல்வழிகளைக் கற்பித்திருக்க முடியும்? அதைப்பற்றி தீவிரமாக விசாரிக்கவும், விவாதிக்கவும், சிந்திக்கவும் என் மனதில் தோன்றியது என்ன? அந்த நேரத்தில் நான் திருடிய பேரிக்காய்களை நான் சுவைத்து அவற்றை அனுபவிக்க ஆசைப்பட்டிருந்தால், அது என் மகிழ்ச்சிக்குக் கிடைத்த பலன் என்று கருதி அதை நான் தனியாகவே செய்திருக்கலாம். என் தோழர்கள் கொடுத்த ஊக்கம் ஒருபக்கம் இருந்தபோதிலும், எனது சொந்த புத்திக்கு எதிராக நான் செயற்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் என் மகிழ்ச்சி திருடப்பட்ட அந்தக் கனிகளில் இருக்கவில்லை, ஆனால் என் சகாக்களோடு இணைந்து செய்த பாவத்தில் தான் அந்த இனிமையை நான் கண்டேன்.
அத்தியாயம் 9. மற்றவர்களை ஏமாற்றி அதில் சிரித்து மகிழ்வது அவரது வாடிக்கையாக இருந்தது
17. அப்படியானால், எந்த விதமான உணர்வுகளைக் கொண்டு நான் உயிரோட்டம் பெற்றேன்? அது உண்மையிலேயே மிகவும் வெட்கக் கேடானது. அதைச் செய்த எனக்கு மிகவும் அருவருப்பாக இருந்தது. ஆனாலும், அதில் வேடிக்கை என்னவென்றால், அவருடைய தவறுகளை எவரால் கண்டுபிடிக்க முடியும். ஏனென்றால் நாங்கள் என்ன செய்கிறோம் என்று சிறிதேனும் அனுமானித்தவர்களை அவர்கள் ஏமாந்துவிட்டதாக நினைத்து எங்கள் இதயம் சிலிர்த்துப் போனது. ஆனால் அவர்கள் அதை கடுமையாக வெறுத்திருப்பார்கள். ஆகவே மீண்டும், நான் மட்டும் தனித்து செய்யாத இதையிட்டு நான் ஏன் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்? அதைப்பற்றியும் யாராவது நினைத்து தனியாக சிரித்திருப்பார்கள் அல்லவா? அப்படி அதை யாரும் எளிதாகச் செய்வதில்லை; ஆனால் சில நேரங்களில், மக்கள் தனியாக இருக்கும் போது, யாரும் இல்லாத நேரங்களில், அவர்களின் மனதில் அதைப்பற்றிய நினைவு தோன்றும் போது அவர்களின் உதடுகளில் சிரிப்பை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் அதற்காக மட்டும் நான் அதைச் செய்திருந்திருக்க மாட்டேன் – இதோ, என் மனதில் தோன்றும் உயிருள்ள எண்ணங்கள் உம்முன் வெளிப்படுகிறது – நான் திருடியது எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை, அதேநேரம் நான் திருடன் அல்ல, ஆனால் திருடுவது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஒருவேளை நான் தனியாகச் செய்திருந்தால் எனக்கு அதன் மீது ஒரு பிடிப்பை ஏற்படுத்தியிருக்காது. அப்படியான ஒரு சூழ்நிலையில் நான் அவ்வாறான காரியத்தை செய்திருக்கவும் மாட்டேன். ஒவ்வாத நட்பு என்பது எவ்வளவு விரும்பத்தகாததாக இருக்கிறது? நீ மர்மமான முறையில் மனங்களை தவறாக வழிநடத்திச் செல்பவன். மகிழ்ச்சியுடனும் ஒருவகையான நயவஞ்சகத்தன்மையோடும் குறும்புச் செயல்களை செய்வதில் பேராசை கொண்டவனும், சொந்த ஆதாயத்திற்கோ அல்லது பழிவாங்கலுக்கோ ஆசைப்படாமல் பிறருக்கு இழப்புகளை ஏற்படுத்துவதில் ஆனந்தம் கொள்கிறாய். அதேவேளை, வா, போய் அதைச் செய்வோம் என்று என் சகாக்கள் சொல்லும்போது, அந்த வெட்கம் கெட்ட செயல்களைச் செய்ததால் வெட்கப்படுகிறோம்.
அத்தியாயம் 10 – தேவனுக்குள் உண்மையான இளைப்பாறுதலும் மாற்றமில்லா வாழ்வும் உள்ளது
18. அந்த முறுக்கிய மற்றும் சிக்குண்ட முடிச்சை யாரால் அவிழ்க்க முடியும்? இது மோசமானது. நான் அதைப் பற்றிய நினைப்பையே நான் வெறுக்கிறேன். நான் அதைப் பார்ப்பதையும் கூட வெறுக்கிறேன். ஆனால் நான் உம்மிடம் நேர்மையானவனாகவும், குற்றமற்றவனாகவும், அனைத்து நல்லொழுக்கமுள்ள கண்களை உடையவனுமாகவும், அழகாகவனாகவும், என்றும் குறையாத திருப்தியைக் காண்பதற்கு ஏங்குகிறேன்! அனைத்திலும் நிறைவான இளைப்பாறுதல் மற்றும் மாறாத வாழ்வு உம்மிடமே உள்ளது. “உனக்குள் பிரவேசிக்கிறவன் தன் கர்த்தரின் சந்தோஷத்திற்குள் பிரவேசிப்பான்” என்று மத்தேயு 25:21கூறுகிறது. ஆகவே அவனுக்குள் பயம் கிடையாது. சிறந்த வழிகளைத் தேர்ந்தெடுத்து அவன் மிகவும் சிறப்பாக செயல்படுவான். என் தேவனே, நான் உம்மை விட்டு விலகி, என் இளமைப் பருவத்தில் உம்மை விட்டு வெகுதூரம் சென்று, கடல் அலைகளில் சிக்கித்தவித்து, மூழ்கிப்போய், என்னையே எவ்வித விளைச்சலையும் தராத தரிசு நிலமாக ஆக்கிக்கொண்டேன்.
