Saint Athanasius of Alexandria, On the Incarnation of the Word, in Tamil.
1. அறிமுக உரை — இந்த ஆய்வுக் கட்டுரை வார்த்தை எதிர்கொண்ட இகழ்ச்சி மற்றும் அதன் அவதாரம் பற்றி விவாதிக்கிறது. இது படைப்பின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துவதோடு தந்தையாகிய தேவன் உலகத்தைப் படைத்து அதே வார்த்தையின் வழியாகவே அதைக் காத்தார் என்பதையும் எடுத்துரைக்கிறது
முந்தைய புத்தகத்தில், சிலைகள் தொடர்பான புறஜாதியினர் செய்த தவறுகள், சிலைகளை வணங்குதல், அவை எவ்வாறு முதலில் கண்டுபிடிக்கப்பட்டன என்பது பற்றிய பலதரப்பட்ட விபரங்களை – பல்வேறு நூல்கள் மற்றும் ஏனைய குறிப்புகளில் இருந்தும் தேர்ந்தெடுத்து – நாம் வெளியிட்டோம்; அதாவது, துன்மார்க்கத்திலிருந்து மனிதர்கள் சிலைகளை வணங்குவதை எவ்வாறு உருவாக்கினர் போன்ற விபரங்கள் அங்கே தொகுத்து வழங்கப்பட்டிருந்தன. கடவுளின் கிருபையால், பிதாவின் வார்த்தையின் தெய்வீகத் தன்மை மற்றும் அவர் தனது சக்தியால் எல்லாவற்றையும் எவ்வாறு கட்டுப்படுத்துகிறார் என்பதையும் நாங்கள் குறிப்பிட மறக்கவில்லை. இப்போது, கிறிஸ்துவை உண்மையிலேயே நேசித்த மக்காரியஸ் (உண்மையிலேயே அந்தப் பெயருக்குத் தகுதியானவர்) என்பவரின் அனுபவங்களோடு நாம் பயணிப்போம். நம் விசுவாசத்தில் ஆழமாக மூழ்கி, வார்த்தை எவ்வாறு மனிதனாக மாறியது மற்றும் நம்மிடையே அவரது தெய்வீக பிரசன்னம் எவ்வாறிருந்தது என்பது பற்றி விவாதிப்போம். யூதர்கள் இதை விமர்சிக்கிறார்கள், கிரேக்கர்கள் அதை கேலி செய்கிறார்கள், ஆனால் நாம் அவரை வழிபடுகிறோம். இந்த வழியில், வார்த்தை தாழ்மையுடன் தோன்றினாலும் அவர் மீதான உங்கள் பக்தி வளர்ந்து பெருகும். 2. விசுவாசியாதவர்களிடையே அவர் எவ்வளவு அதிகமாக கேலி செய்யப்படுகிறாரோ, அவ்வளவு அதிகமாக அவர் உண்மையான கடவுள் என்பதை அனைவருக்கும் காட்டுகிறார். மக்கள் சாத்தியமற்றது என்று நினைப்பது உண்மையில் நடக்கும் என்பதை அவர் நிரூபிக்கிறார். மக்கள் அவமானமாகக் கருதுவதை அவர் தனது நன்மையின் மூலம் கௌரவப்படுத்துகிறார். மக்கள் நீதியான மனிதனை ஏளனத்துக்கு உள்ளாகும்போது அவர் தனது சக்தியால் அவனை தெய்வீகத்துவம் கொண்ட மனிதனாகக் காட்டுகிறார். சிலுவையில் அவர் பலவீனமாகத் தோன்றினாலும், அவர் போலியான சிலைகளைத் தோற்கடித்து, தன்னை கேலி செய்தவர்களை, தனது உண்மையான மற்றும் கண்ணுக்குப் புலப்படாத தெய்வீகத்தையும் வலிமையையும் அவர்களுக்கு காட்டி அமைதியாக அவர் மீது விசுவாசம் கொள்ள வைக்கிறார். 3. ஆனால் இந்த விஷயத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமாயின், இதுகுறித்து முன்னர் சொல்லப்பட்ட காரணிகளை நினைவு கூர்வது அவசியம்; இவ்வளவு உயர்ந்ததாகவும், மகத்துவமாகவும் இருக்கும் பிதாவின் வார்த்தை, உடல் ரீதியாக தோன்றியதற்கான காரணத்தை நீங்கள் நிச்சயம் அறிந்திருக்கவேண்டும். மேலும் இரட்சகர் ஒரு மனித உடலைப் பெற்றிருப்பது அவரது சொந்த இயல்பின் விளைவாகவே என்றும் கருதக்கூடாது; அவர் இயற்கையாகவே சரீர வடிவற்றவர் மற்றும் ஆரம்பத்திலிருந்தே அவர் வார்த்தையாக இருந்தாலும், அவர் நமது இரட்சிப்புக்காக தனது தந்தையிடமிருந்து கிடைத்த அன்பு மற்றும் நன்மையின் மூலம் ஒரு மனித அவதாரத்தைப் பெற்றார். 4. எனவே, இந்தப் பொருளின் ஆய்வுப் பணியை பிரபஞ்சத்தின் படைப்பைப் பற்றியும், அதன் படைப்பாளரான கடவுளைப் பற்றியும் பேசுவதன் மூலம் தொடங்குவது முறையானதாக இருக்கும். ஆரம்பத்தில் பிரபஞ்சத்தை உருவாக்கிய அதே வார்த்தைதான் அதன் புதுப்பித்தலுக்கும் பொறுப்பாகும் என்பதைப் புரிந்துகொள்ள இது உதவும். பிதா அதை உருவாக்கிய அதே வார்த்தையின் மூலம் அதன் இரட்சிப்பைக் கொண்டு வருவார் என்பது இங்கே மிகத் தெளிவாக இருக்கிறது.
2. படைப்பைப் பற்றி நாம் ஏற்றுக்கொள்ள முடியாத தவறான கருத்துக்கள் உள்ளன. (1) எபிகியூரியர்கள் (அதிர்ஷ்டவசமான தலைமுறை) சீரற்ற படைப்பை நம்புகிறார்கள், ஆனால் உயிரினங்களின் பன்முகத்தன்மை ஒரு அறிவார்ந்த படைப்பாளர் இருப்பதைக் காட்டுகிறது. (2) பிளேட்டோனிஸ்டுகள் (முன்பு இருந்த பொருள்) ஒரு பொருள் எப்போதும் இருப்பதாக நினைக்கிறார்கள், ஆனால் இது கடவுளை மனித வரம்புக்குட்படுத்துகிறது மற்றும் அவரை ஒரு உண்மையான படைப்பாளரை விட ஒரு இயந்திர வல்லுநராக ஆக்குகிறது. (3) ஞானிகள் (படைப்பாளி அல்லது உலகைப் படைத்த வேறு ஒரு அந்நிய படைப்பாளர் என நம்புகிறார்கள்) இந்த யோசனைக்கு வேதாகமம் எவ்விதத்திலும் தனது ஆதரவை வெளியிடவில்லை
பிரபஞ்சமும் அதில் உள்ள அனைத்தும் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பது குறித்து பலர் மத்தியில் வெவ்வேறு கருத்துக்கள் உள்ளது போல, ஒவ்வொருவருக்கும் அவரவரது நம்பிக்கைகள் உள்ளன. எபிகியூரியர்களைப் போல எல்லாம் தற்செயலாக நடந்தது என்று சிலர் நம்புகிறார்கள், அதேவேளை விஷயங்களை வழிநடத்தும் உயர்ந்த சக்தி இல்லை என்று சிலர் நினைக்கிறார்கள். இது நாம் காணக்கூடிய மற்றும் அனுபவிக்கக்கூடியவற்றுக்கு எதிரானது என்றாலும் பொதுக்கருத்தாக இவை காணப்படுகின்றன. 2. அவர்கள் சொல்வது போல், எந்த நோக்கமும் இல்லாமல் எல்லாம் தானாகவே தொடங்கி இருக்கும் என்றால், எல்லாம் ஒரே மாதிரியாக இருந்திருக்கவேண்டும், வேறுபட்டதாக இருந்திருக்க முடியாது. இதன் பொருள் படைக்கப்பட்ட அனைத்தும், உதாரணத்துக்கு, சூரியன் அல்லது சந்திரனைப் போல இருந்திருக்க வேண்டும். அதேபோல், மக்களான எமக்கு இருக்கும் கைகள், கண்கள் அல்லது கால்கள் போல் இருந்திருக்கவேண்டும் என்று அர்த்தம். இருப்பினும், இது உண்மையல்ல. சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகியவை ஒன்றுக்கொன்று வேறுபட்டவை என்பதையும், மனித உடல்களில், கால்கள், கைகள் மற்றும் தலை போன்ற தனித்துவமான பாகங்கள் இருப்பதையும் நாம் காணலாம். இந்தத் தெளிவான மற்றும் வித்தியாசமான அங்கங்கள் அவை தாங்களாகவே தோன்றவில்லை என்பதைக் காட்டுகிறது; மாறாக, அவற்றின் பின்னால் ஒரு காரணம் இருப்பதையும் குறிக்கிறது. இந்தக் காரணம் ஒன்றை மட்டுமே வைத்து, எல்லாவற்றையும் படைத்தவராகவும் ஒழுங்கமைப்பவராகவும் கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
3. ஆனால் கிரேக்கர்களிடையே மிகவும் புகழ்பெற்ற பிளேட்டோ உட்பட மற்றவர்கள், கடவுள் உலகத்தை முன்பு இருந்த மற்றும் வெறுமையில் இருந்து படைத்தார் என்று வாதிடுகின்றனர். ஏனெனில், ஏதேனும் ஒரு பொருள் ஏற்கனவே இல்லாமல் இருந்திருந்தால் கடவுள் எதையும் படைத்திருக்க முடியாது; உதாரணமாக, தச்சன் தனது தொழிலை செய்ய மரம் தயாராக இருக்க வேண்டும் என்பது போல.
4. ஆனால் அப்படிச் சொல்வதன் மூலம் அவர்கள் கடவுளை பலவீனத்திலும் சங்கடத்திலும் ஆழ்த்துகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. கடவுள் பொருட்களைப் படைக்க இருப்பில் உள்ள பொருட்களை மட்டுமே பயன்படுத்தினார் என்ற மக்களின் நிலைப்பாட்டைக் கொண்டு அவர்கள் அவரை பலவீனர் என்று காட்டுகிறார்கள். கடவுள் பொருட்களுக்கு ஆதாரமாக இல்லாவிட்டால், ஏற்கனவே இருப்பில் உள்ளவற்றிலிருந்து மட்டுமே பொருட்களை உருவாக்க முடியும் என்றால், அவர் உண்மையிலேயே சக்திவாய்ந்தவர் அல்ல என்றே பொருள்படும். இது எப்படியென்றால், மரம் இன்றி எதையும் உருவாக்க முடியாத ஒரு தச்சரைப் போன்றது; அது அவரின் திறமையின்மையைக் காட்டும். பொருட்கள் இல்லையென்றால், கடவுளால் எதையும் உருவாக்க முடியாது. அவர் ஏற்கனவே இருந்த பொருட்களைக் கொண்டு வேறு ஒன்றைப் படைக்க நினைத்திருந்தால் அவரை எப்படிப் படைப்பாளர் என்று அழைக்க முடியும்? இந்தக் கருத்தின்படி பார்த்தால், கடவுள் ஒரு இயந்திர வல்லுநராக மட்டுமே இருப்பார், வெறுமையில் இருந்து பொருட்களை உருவாக்கும் உண்மையான படைப்பாளராக அல்ல. மற்றைய அனைத்தையும் படைக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களின் மூலமாகவும் அவர் இருந்தால் மட்டுமே அவரைப் படைப்பாளர் என்று அழைக்க முடியும்.
5. இருப்பினும், பின்பற்றுபவர்கள் எல்லாவற்றையும் படைத்த ஒரு வித்தியாசமான படைப்பாளரை நம்புகிறார்கள். இவர்களின் கண்ணோட்டத்தில் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவிடமிருந்து வேறுபட்டவர்கள் ஒருவரையே தேடுகிறார்கள், தாங்கள் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகளில் கூட எவ்வித புரிதலும் இல்லை என்பதை அவர்கள் காட்டுகிறார்கள்.
6. ஆதிமுதலே அவர்களைப் படைத்தவர் ஆணும் பெண்ணுமாகவே அவர்களைப் படைத்தார் என்பதை நீங்கள் வாசிக்கவில்லையா? இதற்காக ஒரு மனிதன் தன் தந்தையையும் தாயையும் விட்டுவிட்டு, தன் மனைவியுடன் இணைந்துகொள்வான், அவர்கள் இருவரும் ஒரே சரீரமாக இருப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளதை அறியவில்லையா? என்று கர்த்தர் யூதர்களிடம் கேட்கிறார். எனவே, கடவுள் இணைத்ததை யாராலும் பிரிக்கக்கூடாது. ஆகவே படைத்தல் என்பது பிதாவிலிருந்து வேறுபட்டது என்று இந்த மனிதர்கள் எவ்வாறு கூற முடியும்? எல்லாம் அவரால் படைக்கப்பட்டது என்றும் (யோவான் 1:3) அவர் இல்லாமல் எதுவும் உருவாக்கப்படவில்லை என்றும் யோவான் கூறுகிறார். படைப்பாளர் எப்படி கிறிஸ்துவின் பிதாவான தேவனில் இருந்து வேறுபட்டவராக இருக்க முடியும்?
3. கடவுள் எல்லாவற்றையும் வெறுமையிலிருந்து படைத்து, நமக்கு இருப்பு என்ற வெகுமதியாய்க் கொடுத்தார். மனிதர்கள் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் சிறப்பு வாய்ந்தவர்கள். இருந்தும், பரஸ்பர உதவி இல்லாமல் நாம் தனியாக வாழ முடியாது. மகிழ்ச்சியாக இருக்க நமக்கு வாய்ப்பு உள்ளது, ஆனால் அது கடவுளின் கிருபையில் நிலைத்திருக்கும் நமது திறனைப் பொறுத்தது
மக்கள் பெரும்பாலும் விஷயங்களைப் பற்றி அர்த்தமற்ற முறையில் ஊகிக்கிறார்கள். இருப்பினும், உண்மையான போதனைகளும் கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையும் அவர்களின் கருத்துக்கள் முட்டாள்தனமானவை என்பதைக் காட்டுகின்றன. பிரபஞ்சம் தற்செயலாகத் தோன்றவில்லை, ஏற்கனவே இருந்த ஒன்றிலிருந்து வரவுமில்லை, ஆகவே கடவுள் சக்திவாய்ந்தவர் என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். மாறாக, கடவுள் தனது வார்த்தையின் மூலம் பிரபஞ்சத்தை உருவாக்கினார். இது ஆதியாகமம் 1:1 இன் தொடக்கம் முதல் வேதாகமத்தில், கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார் என்று கூறுகிறது. மேலும், மேய்ப்பர் என்ற புத்தகத்தில், வெறுமையிலிருந்து எல்லாவற்றையும் படைத்த ஒரே கடவுள் இருக்கிறார் என்பதை நாம் முதலில் நம்ப வேண்டும் என்பது குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. 2. விசுவாசத்தின் மூலம், கடவுள் தம்முடைய வார்த்தையால் உலகைப் படைத்தார் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம், அதாவது நாம் காண்பது அனைத்தும் வெறுமையில் இருந்து உருவாக்கப்பட்டது என்று அப்போஸ்தலர் பவுல் எபிரெயர் 11:3 இல் குறிப்பிடுகிறார். 3. கடவுள் நல்லவர், சகல நன்மைகளுக்கும் ஆதாரமானவர். அவர் எவரிடமிருந்தும் எதையும், விசேடமாக நல்லதைத் தடுத்து நிறுத்துவதில்லை. அவர் தனது வார்த்தையான இயேசு கிறிஸ்து மூலம் அனைத்தையும் வெறுமையில் இருந்து படைத்தார். அவருடைய படைப்புகள் அனைத்திலும், மனிதர்கள் வலுவாக வாழப் போராடுவதைக் கண்டு, அவர்கள் மீது விசேட அக்கறை காட்டினார். மற்ற உயிரினங்களைப் போல மனிதர்களை அவர் படைக்கவில்லை; மாறாக, அவர் மனிதர்களைத் தம்முடைய சொந்த சாயலில் படைத்து, தம்முடைய வார்த்தையின் சக்தியை அவர்களுக்குக் கொடுத்தார். இதன் பொருள், மனிதர்கள், பகுத்தறிவு உள்ளவர்களாக இருப்பதால் கடவுளின் வார்த்தையைப் பிரதிபலிக்க முடியும், மேலும் விண்ணகத்தில் உள்ள புனிதர்களைப் போலவே, ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழவும் முடியும். 4. மனிதன் நல்லது எது மற்றும் கெட்டது எது என்பதைத் தெரிவு செய்யக்கூடும் என்பதை கடவுள் அறிந்திருந்தார். எனவே அவர் சட்டம் மற்றும் அவர் அவர்களைத் தங்க வைத்த ஸ்தானம் போன்றவற்றின் மூலம் அவர்களுக்கு ஒரு சிறப்பு வெகுமதியை அருளினார். அவர் அவர்களைத் தம்முடைய தோட்டத்திற்குள் அழைத்து வந்து விதிகளைக் கட்டளையாக வழங்கினார். அவர்கள் விதிகளைப் பின்பற்றி நல்லவர்களாக இருந்திருந்தால் அவர்கள் எந்த சோகமோ வேதனையோ இல்லாமல் சொர்க்கத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திருக்க முடியும். மேலும் அவர்களுக்கு சொர்க்கத்தில் நித்திய வாழ்வுக்கான வாக்குறுதியும் அளிக்கப்பட்டிருக்கும். இருப்பினும், அவர்கள் விதிகளை மீறி கெட்டவர்களாக இருக்க முடிவுசெய்தபடியால், அவர்கள் மரணத்தின் இயற்கையான விளைவுகளை எதிர்கொண்டு, அதற்கு மேல் சொர்க்கத்தில் வாழும் தகுதியை இழந்தனர். அதன்பின் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, அன்றிலிருந்து மரணத்திலும், துன்பத்திலும், ஊழல்கள் நிறைந்த உலகில் வாழவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். 5. நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தைத் தவிர, தோட்டத்திலுள்ள எந்த மரத்தின் கனியையும் நாம் புசிக்கலாம் என்று கடவுள் சொன்னதாக வேதாகமம் நம்மை எச்சரிக்கிறது. அந்த மரத்தின் கனியைப் புசித்தால், நாம் நிச்சயமாக மரணத்துக்கு ஆளாவோம். இதன் பொருள் உடல் ரீதியாக இறப்பது மட்டுமல்ல, மரணம் மற்றும் அழிவு நிலையில் என்றென்றும் வாழ்வது என்று பொருள்படும்.
4. நமது படைப்பும் கடவுளின் அவதாரமும் மிக நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. வார்த்தையின் மூலம் மனிதன் இல்லாத நிலையிலிருந்து இருத்தலுக்குக் கொண்டுவரப்பட்டு தெய்வீக வாழ்வின் அருளைப் பெற்றான். இருப்பினும் ஒரு தவறு காரணமாக அவர்கள் அந்த வாழ்க்கையை இழந்து, ஊழலையும், பாவத்தையும், துன்பத்தையும் உலகிற்குக் கொண்டு வந்தனர்
வார்த்தையின் அவதாரம் பற்றிப் பேச முன்மொழிந்த பிறகு, நாம் ஏன் மனிதகுலத்தின் தோற்றத்தைப் பற்றி விவாதிக்கிறோம் என்று நீங்கள் கேட்கலாம். அது ஏனென்றால், இந்தத் தலைப்பும் நமது விவாதத்திற்கு முக்கியமானது. 2. நம்மிடையே இரட்சகர் தோன்றியதைப் பற்றிப் பேசும்போது, மனிதர்களின் தோற்றத்தைப் பற்றியும் நாம் பேச வேண்டும். அவர் பாவங்களால் சூழப்பட்ட எம்மை இரட்சிக்கவே நம்மிடம் வந்தார் என்பதையும், அவருடைய அன்பு அவரை நமக்கு உதவும்படி செய்யவும், மக்கள் மத்தியில் இருக்கவும் தூண்டியது என்பதையும் இது புரிந்துகொள்ள உதவுகிறது. 3. கடவுள் நமக்காக மனித அவதாரம் எடுத்தார். நம்மைக் காப்பாற்ற மனித வடிவில் பிறந்து தம்முடைய அன்பை எமக்கு வெளிப்படுத்தினார். 4. எனவே, கடவுள் மனிதனைப் படைத்தார், அவர்கள் அழியாமையில் நிலைத்திருக்க வேண்டும் என அவர் விரும்பினார்; ஆனால் மக்கள் அவரைப் புறக்கணித்து, அதற்கு பதிலாக தங்கள் மீது தீமையைக் கொண்டுவந்தனர். இதன் காரணமாக அவர்கள் மரணத்தை எதிர்கொள்ள நேரிட்டது. அது குறித்து அவர்கள் எச்சரிக்கப்பட்டனர். அப்போதிருந்து, அவர்கள் முதலில் உருவாக்கப்பட்ட விதத்திலிருந்து மாறி, அழிவுப் பாதையில் பயணிக்கத் தொடங்கினர், ரோமர் 5:14 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, “ஆதாம் காலத்திலிருந்து மோசே வரைக்கும் மரணமானது எல்லோரையும் ஆட்கொண்டது. தேவனுக்குக் கீழ்ப்படியாது பாவம் செய்ததால் ஆதாம் மரணித்தான். ஆனாலும் ஆதாமைப்போல பாவம் செய்யாமலிருந்தும் பலர் மரணமடைந்தனர்” என்கிறது. ஆகவே இந்தக் கூற்றின்படி, மரணம் அவர்களை ஆட்சி செய்தது. கடவுளின் கட்டளையை மீறியதால் காரணமாக மீண்டும் அவர்களின் விதிக்கப்பட்ட நிலைக்குத் திரும்பினர். அதாவது அவர்கள் வெறுமையில் இருந்து வந்தது போலவே, காலப்போக்கில் அதாவது, இறுதியில் வெறுமைக்கே திரும்புவார்கள். 5. வார்த்தையின் பிரசன்னம், அன்பு மற்றும் கருணையால் மனிதர்கள் வெறுமையில் இருந்து படைக்கப்பட்டிருந்தால் மக்கள் கடவுளைப் பற்றிய அறிவை இழந்து மீண்டும் வெறுமைக்கே திரும்பும்போது (தீமை உண்மையானது அல்ல, ஆனால் நன்மை உண்மையானது என்பதால்), அவர்கள் என்றென்றும் தம் இருப்பை இழந்தவர்களாக இருப்பார்கள் என்பது அர்த்தமுள்ளதாக இருக்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்கள் சீரழிந்து மரணம் மற்றும் அழிவு நிலையில் இருப்பார்கள். 6. மனிதர்கள் இயற்கையால் அழியக்கூடியவர்கள், ஏனென்றால் அவர்கள் வெறுமையிலிருந்து படைக்கப்பட்டவர்கள்; இருப்பினும், அவர்கள் கடவுளுடன் இணைந்திருந்து அவரை நினைவில் வைத்திருந்தால், அழிவில் இருந்து விடுபட்டு அழியாத வாழ்வைப் பெற முடியும். ஞானம் 6:18 சொல்வது போல், “ஞானத்தின்மீது அன்பு செலுத்துவது அதன் சட்டங்களைக் கடைபிடிப்பதாகும்; சட்டங்களைக் கடைபிடிப்பது அழியாமைக்கு உறுதி தரும்.” இதன்மூலம் கூறப்படுவது என்னவென்றால், கடவுளின் சட்டங்களைப் பின்பற்றுவது அழியாத தன்மைக்கு வழிவகுப்பதோடு, அவை அழியாமல் இருக்கும்பட்சத்தில், மனிதர்கள் கடவுளைப் போல வாழ்வார்கள் என்பதே. “நீங்கள் தேவர்கள் என்றும், நீங்கள் அனைவரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொன்னேன்” என்று வேதாகமத்தின் வாசகம் இதைக் குறிப்பிடுகிறது. ஆனால் நீங்களோ மற்ற அனைவரையும் போலவே சாமான்யர்களாக மரித்து சக்திவாய்ந்த தலைவர்கள் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்படுவதுபோல வீழ்ந்து விடுகிறீர்கள்.
5. கடவுள் நம்மை வெறுமையில் இருந்து படைத்து, அவருடைய கிருபையின் மூலம் தம்முடன் இணைத்துக்கொள்ளும் ஒரு வாழ்க்கையை நமக்குக் கொடுத்தார். இருப்பினும், மக்கள் நித்தியமானவற்றைப் புறக்கணித்து, பிசாசின் செல்வாக்கில் சிக்குண்டு சீர்கேடான வாழ்வுக்குத் திரும்பினர். அவர்களின் இந்த முடிவு அவர்களின் சொந்த வீழ்ச்சிக்கும் மரணத்திற்கும் வழிவகுத்தது. மக்கள் இயற்கையாகவே சீர்கேடு மிக்கவர்களாக இருந்த போதும், அவர்கள் நல்லவர்களாக இருந்து, வார்த்தையில் பங்கு பற்றி, அதன் ஒரு பகுதியாக இருந்து அதன்மூலம் வரும் கிருபையை ஏற்றுக்கொண்டிருந்தால், அவர்கள் இந்த நிலைமையை வென்று நன்றாக வாழ்ந்திருக்க முடியும்
2. வார்த்தை அவர்களுடன் வாசமாயிருந்ததால், அவர்களின் இயல்பான சீர்கேடு கூட அவர்களை நெருங்கவில்லை. சாலமோனின் ஞானம், கடவுள் மனிதனை அழியாதவராகவும், அவரது நித்திய இயல்பை பிரதிபலிக்கவும் படைத்தார் என்று கூறுகிறது. இருப்பினும், பிசாசின் பொறாமை மற்றும் சூழ்ச்சி காரணமாக மரணம் உலகில் நுழைந்தது. இது நடந்த பிறகு, மக்கள் இறக்கத் தொடங்கினர், மேலும் சீர்கேடு இயற்கையாக இருக்க வேண்டியதை விட மனிதகுலத்தின் மீது அதிக ஆற்றலுடன் ஆதிக்கம் செலுத்தியது. கடவுளின் கட்டளையை மீறியதால், அவர்கள் கடவுளிடமிருந்து தண்டனை மற்றும் அச்சுறுத்தலை எதிர்கொண்டதால் இது மேலும் மோசமாகியது.
3. ஏனெனில், தங்கள் தவறான செயல்களில் ஈடுபடுவதில் இருந்து மக்கள் பின்வாங்கவில்லை; அதற்கு பதிலாக அவர்கள் தொடர்ந்து முன்னேறி அதிக தூரம் சென்றனர். அவர்கள் தீய செயல்களை உருவாக்கத் தொடங்கினர். இது தான் அவர்களின் சொந்த அழிவுக்கு வழிவகுத்தது. பின்னர் அவர்கள் மேலும் தவறுகளுக்குத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். அனைத்து சட்டங்களையும் மீறி அவர்கள் கெட்ட விஷயங்களை உருவாக்கத் தொடங்கினர், இது அவர்களின் சொந்த அழிவுக்கு வழிவகுத்தது. பின்னர், அவர்கள் மேலும் தவறுகளுக்குத் திரும்பினர். அனைத்து சட்டங்களையும் மீறி, எந்த ஒரு தீமையான செயல்களைச் செய்வதிலிருந்தும் பின்வாங்கவில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் பாவம் செய்வதற்கான புதிய வழிகளைக் கண்டுபிடித்து பாவத்தை விட்டுவிட முடியாமல் திணறினார்கள். 4. ஏனென்றால், எல்லா இடங்களிலும் விபச்சாரங்களும் திருட்டுகளும் இருந்தன, பூமி முழுவதும் கொலைகளாலும் கொள்ளைகளாலும் நிறைந்திருந்தது. ஊழல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தலைவிரித்தாடின. மக்கள் சட்டத்தை புறக்கணித்தனர், தனிநபர்களாலும் குழுக்களாலும் குற்றங்கள் அரங்கேறின. நகரங்கள் ஒன்றுக்கொன்று எதிராகப் போரிட்டன, நாடுகள் யுத்தங்களில் ஈடுபட்டன; உலகம் முழுவதும் உள்நாட்டுக் கலவரங்களாலும் போர்களாலும் துண்டாடப்பட்டன. அனைவரும் சட்டவிரோத செயல்களைச் செய்யப் போட்டி போட்டனர். 5. இயற்கைக்கு எதிராக மேற்கொள்ளக்கூடிய குற்றங்கள் கூட அவர்களுக்கு எட்டிய தூரத்தில் தான் இருந்தன. கிறிஸ்துவின் அப்போஸ்தலரும் சாட்சியுமானவர் கூறுவது போல், அவர்களின் பெண்கள் இயற்கையான உறவு முறையை இயற்கைக்கு மாறான ஒன்றாக மாற்றினர். இதேபோல், ஆண்கள் பெண்களுடனான இயற்கையான உறவுகளை விட்டுவிட்டு, ஒருவருக்கொருவர் தங்கள் இச்சைகளுக்கு அடிமையாயினர். ஆண்கள் பொருத்தமற்ற செயல்களில் ஈடுபட்டு தங்கள் தவறுகளின் பின் விளைவுகளை எதிர்கொண்டனர்.
6. அந்த நேரத்தில், மனிதகுலம் அழிந்து கொண்டிருந்தது, கடவுளின் உருவம் சோபை இழந்து அவரது படைப்பை அழித்துக் கொண்டிருந்தது. கடவுளுக்கு இரண்டு தெரிவுகள் இருந்தன: மனிதன் அழிவுக்குக் காரணமான தம்முடைய வார்த்தையை கடவுள் கைவிட வேண்டும் என்பது ஒன்று. மற்றையது அவரது வார்த்தையின் ஒரு பகுதியாக இருந்ததை மீண்டும் அழிவில் விழ அனுமதிப்பது; அதாவது அவரது திட்டங்கள் தோல்வியடைந்துவிட்டன. அப்படியானால், என்ன நடக்கும்? கடவுளின் நன்மை இதை அனுமதிக்குமா? அத்தோடு அவர் ஏன் மனிதனைப் படைத்தார்? அப்படியானால் இது கடவுளின் நன்மை அல்ல, அவரது பலவீனத்தின் அடையாளமாகத் தோன்றும்.
இந்தக் காரணத்தினால், மனிதர்கள் மீது மரணம் ஆட்சி செய்தது. அவர்கள் மீது ஊழல் நிலைத்திருந்ததால் மனித இனம் அழிந்து கொண்டிருந்தது; கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட பகுத்தறிவுள்ள மனிதன் மறைந்து கொண்டிருந்தான். இதனால் கடவுளின் படைப்பும் அழிந்து கொண்டிருந்தது. 2. நான் முன்பு குறிப்பிட்டது போல, அந்த நேரத்திலிருந்து மரணம் நம் மீது சட்டப்பூர்வமான அதிகாரத்தைப் பெற்றது (ஆதியாகமம் 2:15), மேலும் இந்த சட்டத்தின் பிடியிலிருந்து எம்மால் தப்பிக்க முடியாது. ஏனெனில் மரணம் நம் பாவங்கள் காரணமாக கடவுளால் ஆணையிடப்பட்டது. விளைவு உண்மையிலேயே பயங்கரமானதும் தவிர்க்கமுடியாததுமாக இருக்கிறது. 3. ஏனென்றால், கடவுள் பேசியது பொய் என்று நிரூபிக்கப்படுவது கொடூரமானது. கட்டளையை மீறினால் மனிதன் இறக்க வேண்டும் என்று அவர் கட்டளையிட்டபோது, அவ்வாறான மீறுதலுக்குப் பிறகு மனிதன் இறக்கக்கூடாது, அப்படி இறப்பதனால் அங்கு கடவுளின் வார்த்தை மீறப்படுகிறது. ஏனென்றால், நாம் இறக்க வேண்டும் என்று அவர் சொன்னபிறகும் மனிதன் இறக்கவில்லை என்றால் கடவுளின் வாக்கில் உண்மை இல்லை என்பதே அர்த்தம். 4. மீண்டும், ஒரு காலத்தில் பகுத்தறிவுள்ளவர்களாகவும், வார்த்தையில் பங்கு பெற்றவர்களாகவும் இருந்த உயிரினங்கள், அழிவுக்குச் சென்று, மீண்டும் அழிவின் வழியாக வெறுமை நிலைக்குத் திரும்புவது முறையற்றது. 5. ஏனெனில், பிசாசினால் மனிதர்கள் மீது திணிக்கப்பட்ட வஞ்சகத்தின் காரணமாக, அவர் படைத்தவை அழிந்து போவது கடவுளின் நன்மைக்கு தகுதியற்றது. 6. குறிப்பாக மக்கள் மத்தியில் கடவுளின் படைப்பின் கிரியை இழக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. அது அவர்களின் சொந்த அலட்சியத்தினாலோ அல்லது அசுத்த ஆவிகளின் வஞ்சக தந்திரத்தின் காரணமாக் கூட இருக்கலாம். 7. பகுத்தறிவுள்ள மக்கள் தங்களை வீணடித்துக்கொண்டு அழிவை எதிர்கொண்டபோது, கடவுள் தனது நன்மைத்தனத்தின் மூலம் என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்? ஊழல் மற்றும் மரணம் ஆட்சி செய்ய அவர் அனுமதிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்களா? அப்படியானால் முதலில் அவற்றைப் படைத்ததன் பயன் தான் என்ன? அப்படி என்றால், அவை ஒருபோதும் படைக்கப்படாமல் இருந்து, அல்லது படைக்கப்பட்டு பின்னர் அழிந்து போக விடப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். 8. அலட்சியம் என்பது கடவுளின் நன்மையை அல்ல, பலவீனத்தையே காட்டுகிறது. அவர் தனது படைப்பை உருவாக்கிய பிறகு அவை அழிந்து போக அனுமதித்திருந்தால், அது அவர் மனிதர்களைப் படைக்கவில்லை என்பதை விட மோசமான கருத்தாகும். 9. கடவுள் மக்களைப் படைக்கவில்லை என்றால், அவர்களின் பலவீனங்களுக்கு எவரும் அவரைக் குறை கூற முடியாது. ஆனால் அவர் அவற்றை வெறுமையில் இருந்து படைத்ததால், அவருடைய படைப்பு அவருக்கு முன்பாகவே அழிக்கப்படுவது மிகவும் கொடுமையானதாக இருக்கும். 10. எனவே, மக்கள் அநீதி மற்றும் ஊழல்களில் விழ அனுமதிப்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல, ஏனெனில் அது கடவுளின் நன்மையைப் பிரதிபலிக்காது.
7. கடவுளின் இயல்பு நிலையானது, அதை எமது இலாபத்துக்கு ஏற்ப மாற்ற முடியாது. மக்கள் மனந்திரும்ப வேண்டும் என்று கேட்கப்பட வேண்டுமா? இருப்பினும், மனந்திரும்புதலால் சட்டத்தை மாற்றவோ அல்லது நமது குறைபாடுள்ள இயல்பை சரிசெய்யவோ முடியாது. நாம் ஊழல் நிறைந்த மனிதர்களாகிவிட்டோம், ஆதலால் நாம் கடவுளின் கிருபைக்குத் திரும்ப வேண்டும். படைப்பாளரால் மட்டுமே நம்மைப் புதுப்பிக்க முடியும். அவரால் மட்டுமே (1) அனைத்தையும் மீண்டும் உருவாக்க முடியும், (2) அனைவருக்காகவும் துன்பங்களை அனுபவிக்கவும் முடியும், (3) பிதாவாகிய கடவுளிடம் நம் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தவும் முடியும்.
இருப்பினும் இந்த விளைவு அவசியமானது என்பது போலவே, கடவுள் செயல்படவும் சரியான காரணங்கள் உள்ளன. கடவுள் மரணம் பற்றி அவர் நிறுவிய சட்டத்திற்கு நாம் உண்மையாக இருக்க வேண்டும். சத்தியத்தின் மூலமான கடவுளை எமது சொந்த நன்மைக்காகவோ அல்லது நம்மைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காகவோ ஒரு போலியான தோற்றத்தைக்கொண்டவர் போல் சித்தரிப்பது மிகவும் கொடியது. 2. எனவே, இந்த சூழ்நிலையில் கடவுள் என்ன தான் செய்ய முடியும்? மக்கள் தங்கள் பாவங்களுக்காக அவர்களது சொந்த வழிகளை மாற்றிக்கொண்டு மனந்திரும்ப வேண்டும் என்று அவர் கேட்க வேண்டுமா? இது கடவுளுக்குப் பொருத்தமாகத் தெரிகிறது, ஏனென்றால் மக்கள் தங்கள் தவறான செயல்களால் ஊழலின் பக்கம் சாய்ந்தது போல, மனந்திரும்புதலின் மூலம் அவர்கள் ஒரு நல்ல பாதைக்குத் திரும்பவும் முடியும். 3. மனந்திரும்புதல் கடவுளின் நியாயமான கூற்றுக்கு அமைவாக இராது. மக்கள் மரணத்தை எதிர்கொள்ளாவிட்டாலும் கடவுள் எப்போதும் உண்மையாகவே இருப்பார். அத்தோடு மனந்திரும்புதல் மக்களின் இயல்பை மாற்றாது; அது அவர்களை பாவம் செய்வதிலிருந்து மட்டுமே தடுக்கிறது. 4. கடுமையான பாவம் செய்திராமல், ஒரு சிறிய பாவம் மட்டும் செய்திருந்தால், அதுகுறித்து வருத்தப்படுவது போதுமானதாக இருக்கும். ஆனால், மக்கள் தவறு செய்யத் தொடங்கிய பிறகு, தங்களுக்கே உரித்தான சீர்கேட்டில் விழுந்து, கடவுளின் சாயலில் படைக்கப்பட்டதிலிருந்து அவர்கள் பெற்ற நன்மையை இழக்க நேரிட்டால், அதுபற்றி வேறு என்ன சொல்வதற்கு இருக்கிறது? ஆரம்பத்தில் வெறுமையிலிருந்து சகலவற்றையும் படைத்த கடவுளின் வார்த்தையைத் தவிர வேறு எதனால் அந்த நன்மையை மீண்டும் கொண்டு வர முடியும்? 5. அவருக்கு, சீரழிந்து போனதை தூய்மையான ஒன்றாக மாற்றுவதும், அனைவரின் மீதும் பிதாவின் நீதியான கூற்றை அப்படியே பராமரிப்பது போன்ற இரண்டும் தான் தேவை. பிதாவின் வார்த்தையாக இருப்பதாலும், எல்லாவற்றிற்கும் மேலாக, இயற்கையான தகுதி கொண்ட அவரால் மட்டுமே எல்லாவற்றையும் மீண்டும் உருவாக்க முடிந்தது. அதேபோல் அனைவரின் சார்பாகவும் துன்பப்படவும், அனைவருக்கும் பிதாவின் தூதராக இருக்கவும் தகுதியானவர்.
8. வார்த்தையானவர் தான் எப்போதும் இருந்த பூமிக்கு வந்து, அங்கு எல்லா தீய காரியங்களும் நடப்பதைக் கண்டு, அவர் ஒரு தூய கன்னியிடமிருந்து பிறந்த ஒரு மனித உடலை எடுத்து, தன்னைக் வெளிப்படுத்தவும், மரணத்தை வெல்லவும், வாழ்க்கையை மீட்டெடுக்கவும் வகை செய்தார்
இந்த நோக்கத்திற்காகவே, கடவுளின் உருவமற்ற, என்றும் அழியாத வார்த்தை நம் உலகிற்கு வருகிறது என்று பொருள்படும்படியாக அப்போஸ்தலர் 17:27 இல், “மக்கள் தன்னைத் தேடவேண்டுமென்று தேவன் விரும்பினார். அவர்கள் எல்லா இடங்களிலும் தேடி அவரைக் கண்டுகொள்ளக்கூடும். ஆனால் அவர் நம் ஒவ்வொருவருக்கும் தொலைவில் இல்லை” கூறப்பட்டுள்ளது. ஏனென்றால், படைப்பின் எந்த ஒரு பகுதியும் அவர் இன்றி இல்லை; அவர் சகல இடங்களில் நீக்கமற நிறைந்திருக்கிறார், எப்போதும் அவரது தந்தையுடன் வாசம் செய்கிறார். அவர் அன்பு மற்றும் தயவின் காரணமாக நம்முடன் இருக்க எம்மில் இறங்குகிறார். 2. மனிதர்கள் அழிந்து போவதையும், மரணம் அவர்களை ஆட்கொள்ளப் போவதையும், தண்டனை பற்றிய அச்சுறுத்தல் அவர்களின் பிரச்சினைகளை இன்னும் மோசமாக்குவதையும் உணர்ந்ததால், சட்டம் நிறைவேறுவதற்கு முன்பு அது தோல்வியடைய வேண்டும் என்பது தவறாகத் தோன்றியது. உலகம் முகம்கொடுக்கக் கூடிய பயங்கரமான நிலையை அவர் கவனித்தார். அங்கு அவர் படைத்த பொருட்கள் அழிந்து கொண்டிருந்த. மக்களின் அயோக்கியத்தனம் தாங்க முடியாத அளவிற்கு வளர்ந்திருந்தது. இந்த நிலையில், அனைவரும் மரணத்தை எதிர்கொண்டதை அவர் கண்டார். மனிதகுலத்தின் மீது இரக்கம் கொண்டதாலும், அவர்களின் பலவீனங்களைப் புரிந்துகொண்டதாலும், மரணம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் இது அவரது படைப்பின் அழிவுக்கு வழிவகுக்கும் என்ற காரணத்தால், அவர் நம்மைப் போலவே ஒரு மனித உடலை எடுக்க முடிவுசெய்தார். 3. அவர் தன்னை வெறுமனே உருவகப்படுத்தவோ அல்லது வெறுமனே தோன்றவோ விரும்பவில்லை. அப்படி அவர் தோன்ற விரும்பி இருந்தால் அவர் அதை வேறுவிதமாக, மிகவும் சக்திவாய்ந்த விதத்தில் செய்திருக்க முடியும். அதற்கு பதிலாக, அவர் ஒரு சாமான்ய மனித உடலை எடுத்தார். குறிப்பாக ஒரு ஆணுடனும் ஒருபோதும் துணையாய் இணைந்திராத ஒரு மாசில்லாத, தூய கன்னியிடமிருந்து, அந்தக் கன்னி உண்மையிலேயே பரிசுத்தமாகவும் தீண்டப்படாமலும் இருப்பதை உறுதிசெய்து, அந்தக் கன்னித்தாயின் வயிற்றிலிருந்து அவதரித்தார். சர்வ வல்லமையுள்ளவராகவும், அனைத்தையும் படைத்தவராகவும் இருப்பதால், அவர் இந்த உடலை கன்னிதாயின் கருவறையை தனக்கென ஒரு சிறப்பு இடமாகத் தயார்படுத்தினார். இதன்மூலம் தன்னை வெளிப்படுத்தவும் அதில் வாழவும் அதைத் தனது சொந்தக் கருவியாக மாற்றினார். 4. எனவே, அவர் நம்முடையதைப் போன்ற ஒரு உடலை எடுத்துக் கொண்டதன் காரணம், எல்லோரும் மரணத்தை எதிர்கொள்ளவேண்டும் என்பதால். அனைவர் சார்பாகவும் மரணத்திற்குத் தன்னை உட்படுத்திக்கொண்டு அதன்மூலம் தனது மேலான உயிரை பிதாவிடம் ஒப்புக்கொடுத்தார். முதலில், அவரில் மரித்த அனைவரும் மக்களுக்கு அழிவைக் கொண்டுவரும் சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காக, அவர் தனது தயவால் இதைச் செய்தார். இந்தச் சட்டம் கர்த்தருடைய சரீரத்தில் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு, இனி மக்களைப் பிடித்துக் கொள்ள முடியாததால் அதன் சக்தியை இழந்தது. இரண்டாவதாக, மக்கள் சீரழிவுக்குத் தங்களை உட்படுத்திக் கொண்டிருந்தாலும், அவர் அவர்களை மீண்டும் அழியாதவர்களாக மாற்றி, தம்முடைய சரீரத்தாலும், உயிர்த்தெழுதலின் கிருபையாலும், நெருப்பில் இடப்பட்ட வைக்கோல் சிதறுவது போல மரணத்திலிருந்து விடுபட்டு அவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடிந்தது.
9. மரணம் மட்டுமே பாவத்தின் தாக்கத்தை நிறுத்த முடியும் என்பதால், வார்த்தையானவர் மனித உடலை எடுத்தார். அவருடன் இணைந்த இந்த உடல் அனைவருக்கும் உதவுவதாகவும், அவரது நித்திய ஜீவனைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் மனிதகுலத்தின் அழிவைத் தடுக்க வல்லதாகவும் இருந்தது. எல்லாவற்றையும் விட உன்னதராக இருப்பதன் மூலம் அவர் நம் ஆன்மாக்களுக்கு தனது சாயலை வழங்கி, நம்முடன் ஒன்றாக இருப்பதன் மூலம் அவர் நமக்கு நித்திய ஜீவாழ்வு என்ற வெகுமதியைக் கொடுத்தார்
மனித பாவத்தின் பிரச்சினையை சரிசெய்ய ஒரே வழி மரணம் மட்டுமே என்பதை வார்த்தையானவர் உணர்ந்ததாலும், வார்த்தையானவருக்கு என்றும் அழிவில்லை என்பதாலும், அவர் பிதாவின் ஏக சுதனானவர் என்பதாலும், அவர் என்றும் இறக்க முடியாது. எனவே, வார்த்தையானவர் இறக்கக்கூடிய ஒரு மனித உடலை எடுத்து மற்ற அனைவருக்கும் பதிலாக தன்னையே மரணத்துக்கு உட்படுத்திக் கொண்டார். வார்த்தையானவர் இந்த சரீரத்தில் வாசம்செய்வதால், அவர் தூய்மையாகவும், அழியாமல் இருக்கிறார். இந்தச் செயல் உயிர்த்தெழுதலின் வல்லமையின் மூலம் அனைவருக்கும் அழிவை நிறுத்தியது. அவர் தன்னையே ஒரு தூய பலியாகக் கருதி, தன்னுடைய உடலை ஒப்புக்கொடுத்ததன் மூலமும், அவர் ஒரு தகுதியான பலியைச் செலுத்துவதன் மூலமும் சகல மக்களிடமிருந்தும் மரணத்தை நீக்கினார். 2. தேவனுடைய வார்த்தை அவருடைய மரணத்தின் மூலம் அனைவருக்கும் விலையைக் கொடுத்தது மட்டுமன்றி, அவருடைய சொந்த உடலை நமக்கு ஒரு ஆலயமாகக் கொடுத்தது. தேவனுடைய குமாரனாக, அவர் நம்முடைய மனித இயல்பைப் பகிர்ந்து கொள்கிறார். மரணத்திற்குப் பிறகான வாழ்க்கையின் வாக்குறுதியை நமக்கு வழங்குகிறார். இதன் காரணமாக, வார்த்தையானவர் அவருடைய சரீர வடிவில் நம்முடன் வாழ வந்த காரணத்தால் மரணம் இனிமேல் நம்மீது ஆதிக்கம் செலுத்துவதில்லை.
3. ஒரு பெரிய அரசர் ஒரு பெரிய நகரத்திற்குக் குடிபெயர்ந்து அதன் வீடுகளில் ஒன்றில் வசிக்கும் போது, அந்த நகரம் முக்கியமானதாகவும் மரியாதைக்குரியதாகவும் பார்க்கப்படுகிறது. எந்த எதிரியோ அல்லது கள்வர்களோ இனி அதைத் தாக்குவதில்லை. மேலும் அரசர் அந்த நகரத்தில் வசிப்பதால் மக்கள் அதை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். ஒரு உச்சத்தில் உள்ள ஆட்சியாளரின் வருகையால் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. 4. இப்போது அவர் நம்முடன் இருக்கிறார், நம்மைப் போன்ற மக்களிடையே ஒரே உடலில் வாசம் செய்கிறார். மனிதகுலத்திற்கு எதிரான எதிரியின் திட்டம் அகன்றுவிட்டதோடு, நமக்குத் தீங்கு விளைவித்த மரணத்தின் சக்தி விடைபெற்றுவிட்டது. மக்கள் அழிவை எதிர்கொண்ட போதிலும், கடவுளின் ஏக சுதனான ஆண்டவரும் இரட்சகரும் மரணத்தை வெல்ல நமக்கு உதவ முன் வந்தார்.
10. மீட்பின் நியாயத்தன்மையும் இதேபோல் காட்டப்படுகிறது. கிறிஸ்து நமது பிரச்சினைகளை சரிசெய்து, அவரது போதனைகள் மூலம் ஒரு தீர்வை வழங்கினார். வார்த்தை மனிதனாக மாறியது அவர் செய்த தியாகம் என்ற கருத்தை வேதாகமம் ஆதரிக்கிறது.
இந்த மகத்தான பணி கடவுளின் நன்மையை எடுத்துக்கூறுகிறது. 1. ஒரு வீட்டையோ அல்லது நகரத்தையோ நிர்மாணித்து, அதைக் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாக்கும் ஒரு அரசரைப் போலவே, கடவுள் மனிதகுலத்தை, அவருடைய படைப்பை, அது சிக்கலில் இருந்தபோதும் புறக்கணித்ததில்லை. மக்களை அவர்களின் தவறுகளுக்குக் குறை கூறுவதற்குப் பதிலாக, அவர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுத்தார். அவர் தனது சொந்த உடலை பலியாகக் கொடுத்து மரணத்தை வென்று அவர்களின் தவறுகளைச் சரிசெய்யவும், தனது சக்தியால் இழந்ததை மீட்டெடுக்கவும் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். 2. கிறிஸ்துவின் அன்பு நம்மை இயக்குகிறது என்று கூறும் இரட்சகரின் சீடர்களின் எழுத்துக்களால் இது உறுதிப்படுத்தப்படுகிறது. அவர் எல்லோருக்காகவும் இறந்ததால், நாம் இனி நமக்காக வாழக்கூடாது, நமக்காக மரித்து மீண்டும் உயிர்த்தெழுந்த நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காக வாழ வேண்டும் என்று அவர்கள் நம்புகிறார்கள். தேவதூதர்களை விட தாழ்ந்தவராக தன்னை மாற்றிக்கொண்ட இயேசு, அவர் மரணத்தை அனுபவித்ததால் மதிக்கப்பட்டு முடிசூட்டப்பட்டார். மரணத்தை அனுபவிப்பதன் மூலம் அனைவருக்கும் கடவுளின் கிருபையைக் காட்டினார் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். 3. வார்த்தையாகிய கடவுள் மனிதனாக மாறுவது ஏன் முக்கியம் என்பதை அவர் விளக்குகிறார். எல்லாவற்றையும் படைத்தவரும், அவரால் தான் எல்லாம் இருக்கிறது என்பதாலும், துன்பத்தின் மூலம் அவர்களின் இரட்சிப்பின் அதிபதியை பரிபூரணமாக்குவதன் மூலமும் பலரை மகிமைக்கு இட்டுச் செல்வது பொருத்தமானது. இதன் பொருள், மனிதர்களை ஆரம்பத்திலிருந்தே படைத்த கடவுளின் வார்த்தை மட்டுமே தொடங்கிய அழிவிலிருந்து அவர்களை மீண்டும் மீட்டுக் கொண்டு வர முடியும். 4. தம்மைப் போன்றவர்களுக்காக தம்மை ஒரு பலியாய் செலுத்த வார்த்தையானவர் மனித உடலை எடுத்தார். இது வார்த்தைகளில் காட்டப்பட்டுள்ளது: பிள்ளைகள் இரத்தத்திலும் சரீரத்திலும் பங்கு கொண்டதால், அவரும் அதே காரியங்களில் பங்கு கொண்டார். இறப்பதன் மூலம், மரணத்தின் மீது வல்லமை கொண்டுள்ள பிசாசை அவர் தோற்கடிக்கவும், மரணத்திற்கு பயந்து வாழ்நாள் முழுவதும் பயத்தில் வாழ்ந்தவர்களை விடுவிக்கவும் முடியும். 5. தன்னைப் பலிகொடுத்ததன் மூலம், இயேசு நமக்கு விரோதமாயிருந்த பழைய நியாயப்பிரமாணத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, உயிர்த்தெழுதலின் நம்பிக்கையின் மூலம் நமக்கு வாழ்வில் ஒரு புதிய வாய்ப்பைக் கொடுத்தார். மனிதனால் மரணம் உலகிற்கு வந்தது, ஆனால் இப்போது, கடவுள் மனிதரானதால், மரணம் தோற்கடிக்கப்பட்டு வாழ்க்கை மீட்டெடுக்கப்படுகிறது. ஆதாமின் மூலம் மரணம் வந்தது போல, கிறிஸ்துவின் மூலம் உயிர்த்தெழுதல் வருகிறது. ஆதாமின் காரணமாக அனைவரும் இறக்கும் அதே வேளையில், கிறிஸ்துவின் மூலம் அனைவரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். நாம் இனி மரணத்தை பயத்துடன் எதிர்கொள்ளத் தேவையில்லை; அதற்கு பதிலாக, கடவுள் தான் சித்தம் கொண்ட நேரத்தில் வெளிப்படுத்தவிருக்கும் அனைத்து மக்களின் உயிர்த்தெழுதலையும் எதிர்நோக்குகிறோம். 6. இரட்சகர் மனிதராக மாறியதற்கான முதல் காரணம் தெளிவாகிறது. இருப்பினும், அவர் நம்மிடம் வருவது ஏன் பொருத்தமானதாக இருக்கிறது என்பதைக் காட்டும் பிற காரணங்களும் உள்ளன.
11. அவதாரத்திற்கான இரண்டாவது காரணம், மக்கள் தன்னைத் தாங்களாகவே முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது என்பதை கடவுள் அறிந்திருந்தார். அவர்களுக்கு உதவ, அவரை நன்கு அறிய ஒரு வழியை அமைத்துக் கொடுத்தார். வார்த்தையைப் புரிந்துகொள்ளவும், அதன் மூலம் தந்தையை அறியவும், அவர் மனிதர்களை வார்த்தையானவரின் சாயலில் படைத்தார். கடவுள் பல வழிகளில் தன்னை வெளிப்படுத்தியிருந்தபோதிலும், மக்கள் இதை சட்டைசெய்யாது, கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்குப் பதிலாக மந்திரம் மாயம் மற்றும் ஜோதிடத்தை மையமாகக் கொண்டு சிலைகளை வழிபடத் தொடங்கினர்.
சகல படைப்புகளின் மீதும் அதிகாரம் கொண்ட கடவுள், தம்முடைய வார்த்தையின் மூலம் மனிதர்களைப் படைத்தார். மக்கள் பலவீனமானவர்கள் என்றும், அவர்களால் அவரைத் தாங்களாகவே அறிய முடியாது ஏனென்றால் அவர் உண்டாக்கப்பட்டவர் அல்ல என்றும், மனிதர்கள் வெறுமையிலிருந்து படைக்கப்பட்டவர்கள் என்றும் அவர் கண்டார். அவர் ஆவியாக இருந்தாலும், மனிதர்கள் உடல் ரீதியானவர்கள், அவர்களால் தங்கள் படைப்பாளரை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது. கடவுள் தம்மைப் பற்றிய அறிவைப் பெறாத வகையில் மக்களை வழிநடத்தவில்லை. அதனால் அவர்கள் தங்கள் வாழ்க்கையின் அர்த்தத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. 2. உயிரினங்கள் தங்கள் படைப்பாளரை அறியாவிட்டால் அவை இருப்பதன் பயன் என்ன? அவர்களுக்கு உயிர் கொடுத்த தந்தையின் வார்த்தையையும் பகுத்தறிவையும் புரிந்து கொள்ளாமல் அவர்களால் எப்படி தெளிவாக சிந்திக்க முடியும்? அவர்கள் பௌதிக உலகத்தைப் பற்றி மட்டுமே அறிந்திருந்தால், அவர்கள் விலங்குகளிலிருந்து வேறுபட்டவர்களாக இருக்க மாட்டார்கள். எனவே, அவர்கள் அவரை அறிய விரும்பவில்லை என்றால், கடவுள் ஏன் அவற்றைப் படைத்தார்? 3. இது அவ்வாறு இருக்கக்கூடாது என்பதற்காகவும், இது நடப்பதைத் தடுக்கவும் கடவுள் நல்லவராக இருந்து, தனது சுதனாகிய நமது கர்த்தர் இயேசு கிறிஸ்துவுடன் தம்முடைய சொந்த சாயலைப் பகிர்ந்து கொண்டு, மக்களைத் தம்முடைய சாயலில் படைத்துள்ளார். இந்தக் கிருபையைப் பெறுவதன் மூலமும், பிதாவின் வார்த்தையானவரின் சாயலைக் காண்பதன் மூலமும், அவர்கள் பிதாவை நன்கு புரிந்துகொள்ள முடியும். தங்கள் படைப்பாளரை அறிந்து அவர்கள் மகிழ்ச்சியான மற்றும் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ முடியும். 4. ஆனால் மீண்டும் ஒருமுறை மக்கள் தங்கள் ஆணவம் மற்றும் பிடிவாதத்தின் காரணமாக தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வெகுமதிகளைப் புறக்கணித்து, கடவுளை முற்றிலுமாக நிராகரித்தனர். அவர்கள் கடவுளைப் பற்றி மறந்துவிட்டது மட்டுமல்லாமல், அவரைப் பற்றிய தங்கள் சொந்தக் கருத்துக்களையும் உருவாக்கினர். அவர்கள் உண்மையைப் பின்பற்றுவதற்குப் பதிலாக சிலைகளை உருவாக்கினர், கடவுளல்லாத அற்பத்தனமானவற்றை மதிக்கிறார்கள். படைப்பாளருக்குப் பதிலாகப் படைக்கப்பட்டவற்றை வழிபடுகின்றனர். இன்னும் மோசமான செயல் என்னவென்றால், அவர்கள் மரம், கல் மற்றும் பிற பொருட்களுக்கும் ஒருசில மனிதர்களுக்கும் கடவுளுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுத்தனர். நாம் முன்பு விவாதித்ததை விட இன்னும் அதிகமாக அவர்களது செயற்பாடுகள் அமைந்திருந்தன. 5. தெய்வீகத்திற்கு அவர்கள் அவமரியாதை செய்தது மட்டுமன்றி, அவர்கள் அசுத்த ஆவிகளை வணங்கத் தொடங்கினர். தங்கள் சொந்த நோக்கங்களைப் பூர்த்தி செய்ய அவற்றை கடவுள்கள் என்று அழைத்தனர். அவர்கள் விலங்குகளையும், மனிதர்களையும் கூட அந்த அசுத்த ஆவிகளுக்குப் பலியிட்டனர். அது அவர்களுக்குப் பொருத்தமானது என்று தோன்றியது. இது அவர்களை அறிவீனத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. 6. இந்தக் காரணத்திற்காகவே அவர்களுக்கு மந்திரக் கலைகள் கற்பிக்கப்பட்டன. தெய்வீக வாக்கு என்ற பெயரில் புனையப்பட்ட பல புனைகதைகள் வெவ்வேறு இடங்களில் மக்களை தவறாக வழிநடத்தின. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையையும், அவர்களது பிறப்பு மற்றும் இருப்புக்கான தாக்கங்களை நட்சத்திரங்கள் மற்றும் பிற விண்ணில் சஞ்சரிக்கும் கிரகங்கள் கட்டுப்படுத்துவதாக நம்பினர். அவர்கள் காணக்கூடியதற்கு அப்பால் சென்று எதையும் தேட முயற்சிக்கவில்லை. 7. எல்லாமே மதச்சார்பின்மையாலும், அக்கிரமத்தாலும் நிறைந்திருந்தது. மக்கள் கடவுளையோ அல்லது அவருடைய போதனைகளையோ அறிய முயலவில்லை. இருப்பினும், கடவுள் தன்னை மக்களிடமிருந்து மூடி மறைக்காமல், தன்னை பல வழிகளில் வெளிப்படுத்தியிருந்தார்.
12. மனிதன் கிருபையால் படைக்கப்பட்டிருந்தாலும், அவன் தன்னை மறந்துவிடுவான் என்று அறிந்திருந்ததால் அவர்களது நினைவை மீட்டெடுக்கவே கடவுள் உலகைப் படைத்தார். அனைவரையும் வழிநடத்த அவர்களுக்கு சட்டங்களையும் தீர்க்கதரிசிகளையும் கொடுத்தார். இருப்பினும், மக்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த ஆசைகளைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டிருந்தனர்
கடவுளின் கிருபை ஒன்றே வார்த்தையாகவும் தந்தையாகவும் அவர் இருப்பதை வெளிப்படுத்த போதுமானதாக இருந்தது. இருப்பினும் மக்கள் கவனக்குறைவாக இருக்க முடியும் என்பதை கடவுள் புரிந்து கொண்டதால், அவரைப் பற்றி அறிய அவர்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்தினார். அவர்கள் தாங்களாகவே கடவுளை அறிய முற்படவில்லை என்றாலும், படைப்பின் அதிசயங்கள் மூலம் அவரைப் புரிந்து கொள்ள முடிந்ததால், இது அவர்தான் அவர்களின் படைப்பாளர் என்ற அறிவை தக்கவைத்துக் கொள்ள உதவியது. 2. மக்கள் பெரும்பாலும் கவனக்குறைவு காரணமாக குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துவதால், கடவுள் அவர்களின் பலவீனத்தை சரிசெய்ய சட்டங்களை உருவாக்கி தீர்க்கதரிசிகளை அனுப்பி மனிதருக்கு உதவினார். அவர்கள் தான் இருசாராருக்கும் இடையே தொடர்புகளை ஏற்படுத்தக்கூடியவர்களாக இருந்தனர். எனினும் இந்த மக்கள் கடவுளைப் பற்றியோ அல்லது தங்கள் படைப்பாளரைப் பற்றியோ சிந்திக்கத் தயாராக இல்லாவிட்டாலும், அவர்களைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து அவர்கள் இன்னும் கற்றுக்கொள்ள முடியுமாக இருந்தது. மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும்போது முக்கியமான கருத்துக்களை மக்களால் நன்றாகப் புரிந்துகொள்ள முடியுமாக இருந்தது. 3. அவர்கள் வானகத்தைக் காணவும் படைப்பின் அழகைப் புரிந்துகொள்ளவும் முடிந்தது, இது அதன் படைப்பாளரான தந்தையின் வார்த்தையை அறிய அவர்களுக்கு உதவியது. இந்த படைப்பாளர் மற்றும் தந்தை யார் என்பதை அனைவருக்கும் காட்டுகிறார், மேலும் அனைவரும் கடவுளை அறியும் வகையில் சகலவற்றையும் வழிநடத்துகிறார். 4. இது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தால், குறைந்தபட்சம் பரிசுத்தவான்களைச் சந்தித்து எல்லாவற்றையும் படைத்த கடவுளைப் பற்றியும், கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனைப் பற்றியும் கற்றுக்கொள்ள முடியும். அப்போது தான் சிலைகளை வணங்குவது தவறு என்றும் அது கடவுளுக்கு செய்யப்படும் இழுக்கு என்றும் அவர்கள் புரிந்துகொள்வார்கள். 5. மக்கள் சட்டத்தை மீறுவதை நிறுத்திவிட்டு, சட்டத்தைப் புரிந்துகொள்வதன் மூலம் நல்ல வாழ்க்கையை வாழ முயற்சிக்கலாம். சட்டம் யூதர்களுக்கு மட்டுமல்ல, தீர்க்கதரிசிகள் யூதர்களுக்கும் மட்டும் அனுப்பப்படவில்லை. அப்படியே தீர்க்கதரிசிகள் யூதர்களிடம் அனுப்பப்பட்டு, அவர்களிடமிருந்து துன்புறுத்தலை எதிர்கொண்டாலும், உலகில் உள்ள அனைவரும் கடவுளைப் பற்றியும் எப்படி நன்றாக வாழ்வது என்பதையும் எடுத்துக்கூற அவர்கள் உறுதி கொண்டிருந்தனர். 6. கடவுள் மிகவும் நல்லவராகவும் அன்பானவராகவும் இருந்தபோதிலும், மக்கள் தற்காலிக இன்பங்களாலும் தீய சக்திகளின் தந்திரங்களாலும் தங்கள் மனம் போனபோக்கில் வாழ்வதையே நோக்கமாகக் கொண்டிருந்தனர். உண்மையைத் தேடுவதற்குப் பதிலாக அவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தீய செயல்களாலும் பாவங்களாலும் நிரப்பத் தலைப்பட்டனர். தங்களைக் குறைவான பகுத்தறிவு கொண்டவர்களாகவும், நியாயமற்றவர்களாகவும் வாழ்ந்தனர்.
13. கடவுள் மீண்டும் அமைதியாக இருப்பாரா? மக்களைப் படைத்த அவரை வணங்குவதற்குப் பதிலாக பொய்யான கடவுள்களை வணங்க அனுமதிப்பாரா? ஒரு மன்னர் கலகம் செய்யும் தனது நாட்டின் குடிமக்களுடன் முதலில் தொடர்புகளை ஏற்படுத்தி நிலைமையை அறிந்த பிறகுதான் அவர்களிடம் நேரடியாகச் செல்வார். கடவுள் நம்மில் தனது சாயலை எத்தனை முறை தான் கொண்டுவருவார்? வெறும் பிரதிகளாக இருக்கும் மனிதர்கள் இதைத் தாங்களாகவே செய்ய முடியாது. எனவே, வார்த்தையானவர் (1) நம்மை மீண்டும் உருவாக்கவும் (2) நம்மில் மரணத்தைத் தோற்கடிக்கவும் வர வேண்டும்
மனிதர்கள் கொடூரமானவர்களாகிவிட்டார்கள், பொய்கள் எல்லா இடங்களிலும் பரவி கடவுளைப் பற்றிய உண்மையை மறைத்தன. கடவுள் என்ன செய்ய முடியும்? அவர் அமைதியாக இருந்து, மக்கள் தீய ஆவிகளால் தவறாக வழிநடத்தப்பட்டு, அவரை அறியாமல் இருக்க அனுமதிக்க வேண்டுமா? 2. மனிதன் கடவுளின் சாயலில் படைக்கப் பட்டதன் நோக்கம் என்ன? பகுத்தறிவுள்ளவனாகவும் மிருகங்களில் ஒருவனாகவும் வாழ்வதை விட, ஒரு மிருகத்தைப் போல உருவாக்கப் பட்டிருப்பது அவனுக்கு நல்லது. 3. முதலில் கடவுளின் கருத்தை அவன் ஏன் புரிந்து கொள்ள வேண்டியிருந்தது என்று அறியத் தவறிவிட்டான்? அவன் இப்போதும் அதைப் புரிந்துகொள்ளத் தயாராக இல்லை என்றால், அதைப் பெறாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். 4. அப்படியானால் அவர் படைத்த மக்கள் தன்னை வணங்காமல், வேறெவரோ ஒருவர் அல்லது பலர் அவற்றைப் படைத்ததாக நம்பினால் அவருக்கு என்ன பலன் கிடைக்கும்? இந்த வழியில் பார்த்தால், இவர்களின் கூற்று, கடவுள் அவற்றை தமக்காக அல்ல, வேறொருவருக்காகப் படைத்தது போன்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. 5. மீண்டும் ஒருமுறை, ஒரு சாதாரண அரசன் அரச உடமையாக்கப்பட்ட நிலங்களை மற்றவர்களுக்கு தொழில் செய்யக் கொடுக்க அனுமதிப்பதில்லை. அதேநேரம், அவற்றை வேறு எவருக்கும் கொடுக்கவும் அனுமதிப்பதில்லை; அதற்கு பதிலாக, அவர் அவர்களை கடிதங்கள் மூலம் எச்சரிக்கிறார், மேலும் அடிக்கடி அரச ஊழியர்கள் போன்றோரை அவர்களுடன் பேச அனுப்புகிறார். தேவைப்பட்டால் அவரே நேரில் வந்து அவர்களை எச்சரிக்கிறார். அவர்கள் மற்றவர்களுக்கு சேவை செய்யக்கூடாது என்பதற்காகவும், தனது சொந்த முயற்சிகள் வீணாகக்கூடாது என்பதற்காகவுமே இதைச் செய்கிறார். 6. அதேநேரம், கடவுள் தனது சொந்த படைப்புகளை இன்னும் அதிகமாகப் பாதுகாப்பார். ஏனெனில், அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு பயனற்றவற்றுக்கு சேவை செய்யக்கூடாது என்பதை உறுதிசெய்வார் என்பது உண்மையல்லவா? குறிப்பாக வழிதவறிச் செல்வது அவர்களின் அழிவுக்கு வழிவகுக்கும் என்பதால், அவர்கள் ஒரு காலத்தில் கடவுளின் சாயலைப் பகிர்ந்து கொண்டபடியால் அவர்கள் தொலைந்து போகவிடக் கூடாது என்பதற்காகத்தான் இதைச் செய்கிறார். 7. அப்படியானால் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டதைப் புதுப்பிப்பதைத் தவிர, அவர் என்ன செய்ய வேண்டும்? மக்கள் அவரை மீண்டும் அறியும் வகையில் என்ன செய்ய வேண்டும்? கடவுளின் உண்மையான சாயலாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிரசன்னம் இல்லாமல் இது எப்படி நடக்கும்? மனிதர்கள் அப்படியான ஒரு சாயலில் படைக்கப் பட்டிருப்பதால் அவர்களால் அதைச் செய்ய முடியாது; தேவதூதர்களும் அதைச் செய்ய முடியாது, ஏனென்றால் அவை (கடவுளின்) உருவங்கள் அல்ல. அதனால்தான் கடவுளின் வார்த்தை அவருடைய சொந்த வடிவத்தில் வந்தது. அது பிதாவின் சாயலாக இருப்பதால் மனிதனை அவருடைய சாயலில் மீண்டும் உருவாக்க முடியும். 8. ஆனால் மரணமும் அழிவும் நீக்கப்படாமல் இருந்திருந்தால் இது நடந்திருக்க முடியாது. 9. எனவே, அவர் இயற்கையாகவே, ஒரு பொருத்தமான, அழியக்கூடிய மனித உடலை எடுத்தார், இதனால் மரணம் ஒரு முறை தோற்கடிக்கப் பட்டு, அவருடைய சாயலில் படைக்கப்பட்டவை மீண்டும் புதுப்பிக்கப்படும். பிதாவின் சாயலைத் தவிர வேறு யாராலும் இந்த மகத்தான பணியைப் பூர்த்தி செய்திருக்க முடியாது.
14. அழிந்துபோன ஒரு உருவப்படத்தை மீண்டும் மீட்டெடுக்க வேண்டுமானால், அதை முதலிலிருந்து மீண்டும் உருவாக்க வேண்டும். இவ்வாறு பிதாவின் குமாரன் மனிதகுலத்தைத் தேடவும், காப்பாற்றவும், மீண்டும் உருவாக்கவும் வந்தார். இதைச் செய்ய வேறு வழியும் சாத்தியமாகப் படவில்லை. மனிதனின் குருட்டுத்தன்மை காரணமாக, தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ள ஒரு வழியைக் கண்டுபிடிக்க அவனால் முடியவில்லை. படைப்பின் சான்றுகளால் அவனைக் காப்பாற்றவோ அல்லது மீண்டும் கொண்டு வரவோ முடியவில்லை. வார்த்தையால் மட்டுமே இதைச் செய்ய முடியும், அதைச் செய்வதற்கான வழி அவன் தன்னை ஒரு மனிதனாகக் காண்பிப்பதாகும்
வரையப்பட்ட படம் ஒன்று வெளிப்புறக் கறைகளால் சேதமடைந்தால், அந்தப் படத்தில் உள்ளவர் திரும்பி ஓவியரிடம் வந்து, அதே பலகையில் அந்த ஓவியத்தை மீண்டும் வண்ணம் தீட்டுமாறு கேட்க வேண்டும். படம் சேதமடைந்ததால் வரையப்பட்ட பலகை நிராகரிக்கப்படுவதில்லை; அதற்கு பதிலாக, கலைஞர் தன் ஓவியம் வரையும் திறமையால் அதன் தோற்றத்தை மீண்டும் புதுப்பிக்கிறார். 2. அதேபோல், பிதாவின் சாயலாக இருக்கும் தேவனின் மகா பரிசுத்த குமாரன் முதலில் தம்முடைய சாயலில் படைக்கப்பட்ட மனிதகுலத்தை மீட்டெடுக்கவும், அவர்களின் பாவங்களை மன்னிப்பதன் மூலம் தொலைந்து போனவர்களைத் தேடவும் நம்மிடம் வந்தார். அவர் நற்செய்திகளில் கூறியதுபோல், நான் தொலைந்து போனவர்களைத் தேடி இரட்சிக்க வந்தேன். அதேவேளை அவர் மறுபிறப்பு என்றால், அவர் ஒரு பெண்ணிலிருந்து பிறப்பதைக் குறிக்கவில்லை, மாறாக கடவுளின் சாயலில் மீண்டும் பிறந்து புதிதாகப் படைக்கப்பட்ட ஆன்மாவைப் பற்றியே குறிப்பிடுவதாக யூதர்களை நோக்கி கூறுகிறார். 3. இருப்பினும், மூடத்தனமான விக்கிரக ராதனையும் கடவுள் மீதான நம்பிக்கையின்மையும் உலகை நிரப்பியதாலும், அதனால் கடவுளைப் பற்றிய புரிதல் மறைந்திருந்ததாலும், தந்தையைப் பற்றி உலகிற்குக் கற்பிப்பது எவரது பொறுப்பு? அது மனிதனின் பொறுப்பு என்று ஒருவர் கூறலாம். ஆனால் பூமியின் ஒவ்வொரு மூலையையும் அடையும் திறன் மனிதனுக்கு இல்லை; அவ்வளவு தூரம் பயணிக்க அவர்களுக்கு உடல் வலிமையும் இல்லை, அவர்களால் இந்த விஷயத்தில் நம்பிக்கையைப் பெற முடியவில்லை. மேலும் தீய ஆவிகளின் தந்திரங்களையும் பொய்களையும் எதிர்க்கும் அளவுக்கு அவர்களின் வலிமை குன்றியிருந்தது. 4. பிசாசினால் ஆட்டிப் படைக்கப்பட்ட வஞ்சகத்தாலும், சிலைகளின் மாயையாலும் அனைவரும் ஆன்மாவால் பாதிக்கப்பட்டு குழப்பமடைந்த நிலையில், அவர்களால் அவற்றைக் கூடப் பார்க்க முடியாத நிலை இருந்தும் கூட, மனிதனின் ஆன்மாவையும் மனிதனின் தன்மையையும் அவர்களால் எப்படி வெல்ல முடிந்தது – அல்லது ஒரு மனிதன் தான் காணாத ஒரு பொருளில் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்? 5. படைப்பு போதுமானது என்று சிலர் வாதிடலாம்; இருப்பினும், அது உண்மையாக இருந்தால், இந்தப் பெரிய பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது. படைப்பு ஏற்கனவே இருந்தது, ஆனால் மக்கள் கடவுளைப் பற்றிய அதே தவறுகளைச் செய்து கொண்டே இருந்தனர். 6. எனவே, ஆன்மாவையும் மனதையும் புரிந்துகொண்டு, படைப்பில் உள்ள அனைத்திற்கும் உயிர் கொடுத்து, அவற்றின் மூலம் தந்தையை வெளிப்படுத்தும் கடவுளின் வார்த்தையைத் தவிர வேறு என்ன வேண்டியிருக்கிறது? அவரே, தம்முடைய சொந்த வழிகாட்டுதலாலும், எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துவதாலும், தந்தையைப் பற்றி மக்களுக்குக் கற்பித்து வந்தார், மேலும் இந்தப் போதனையைப் புதுப்பிக்கக் கூடியவரும் அவரே. 7. அப்படியானால், இது எப்படிச் செய்யப்பட்டிருக்க முடியும்? படைப்பின் மூலம் தந்தையைப் பற்றிய உண்மையை மீண்டும் வெளிப்படுத்த அவருக்கு அதே வழிகள் கிடைத்தன என்று ஒருவர் கூறலாம். இருப்பினும், இது இனிமேலும் நம்பகமான வழி யாக இருக்க முடியாது. உண்மையில் மக்கள் முன்பு இதைப் பார்க்கத் தவறிவிட்டனர். மேல்நோக்கிப் பார்க்காமல் கீழ்நோக்கியே பார்த்துக் கொண்டிருந்தனர். 8 படைப்பின் மூலம் தந்தையைப் பற்றிய உண்மையை மீண்டும் வெளிப்படுத்த அவருக்கு அதே வழிகள் கிடைத்தன என்று ஒருவர் கூறலாம். இருப்பினும், இது இனி நம்பகமான வழி அல்ல. உண்மையில், மக்கள் முன்பு இதைப் பார்க்கத் தவறிவிட்டனர், மேலே பார்க்காமல் கீழே தான் பார்த்துக் கொண்டிருந்தனர். 8. எனவே, மக்களுக்கு உதவ விரும்பி, அவர் அவர்கள் மத்தியில் ஒரு மனிதனாக வாழ்ந்து, மனித உடலை எடுத்துக் கொண்டார். பூமியில் அவர் செய்த செயல்கள் மூலம், அவர் அவர்களுக்கு உணர்த்துகிறார். இதனால் எல்லாவற்றையும் தனது கவனிப்பு மற்றும் கட்டுப்பாட்டின் மூலம் அடையாளம் காணாதவர்கள் கடவுளின் வார்த்தையை அவரது பௌதீக பிரசன்னத்தின் மூலம் புரிந்துகொள்ள முடியும், அத்தோடு, அவர் மூலம் தந்தையை அறியவும் முடியும்.
15. எனவே வார்த்தையானவர் மனித உடலை எடுத்ததன் மூலம் மனிதர்கள் சரீரம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவதை உறுதிசெய்தார். மக்கள் இயற்கையையோ பிற மக்களையோ அல்லது அசுத்த ஆவிகளையோ வணங்க விரும்பினாலும், அவர் இவை அனைத்திற்கும் பொதுவான மனிதகுலத்திற்கும் தன் ஒருவரையே ஆண்டவராகக் காட்டினார்
கடினமான பாடங்களைக் கற்பதில் கஷ்டங்களை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு எளிமையாக, அவர்களுக்கு விளங்கும் வகையில் அந்தப் பாடங்களைக் கற்பிப்பதன் மூலம் மாணவர்களுக்கு உதவும் ஒரு அன்பான ஆசிரியரைப் போலவே, கடவுளுடைய வார்த்தையும் செயலாற்றுகிறது. இதுகுறித்து பவுல் 1 கொரிந்தியர் 1:21 இல் “தேவன் தனது ஞானத்தினால் விரும்பியது இதுவே: உலகத்தின் ஞானத்தால், உலகம் தேவனைக் கண்டுகொள்ள முடியவில்லை. தேவனை விசுவாசிக்கிற மக்களைக் காக்கும்பொருட்டு மடமையாய்த் தோன்றும் தனது செய்தியை தேவன் பயன்படுத்தினார்” என்று குறிப்பிடுகிறார். 2. இவ்வுலகில் பலர் கடவுளைப் பற்றி சிந்திப்பதை விட்டுவிட்டு, இயற்கையிலும் பௌதிக வடிவான பொருள்களிலும் அவரைத் தேடுகிறார்கள். அவர்கள் மனிதர்களிடமிருந்தும் ஆவிகளின் துணை கொண்டும் தங்கள் சொந்த கடவுள்களை உருவாக்குகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு உதவ, எம் அன்பான இரட்சகர், கடவுளின் வார்த்தையானவர், ஒரு மனித உடலை எடுத்துக்கொண்டு மக்கள் மத்தியில் வாழ்ந்தார். கடவுள் சரீரப்பிரகாரமானவர் என்று நம்புபவர்கள் குறித்தும், அவர் தனது உடலுடன் என்ன செய்கிறார் என்பதன் மூலம் உண்மையைக் காணுதல் குறித்தும், அவர் மூலம் பிதாவாகிய தேவனை அறியவும் முடியும் என்பதற்காக அவர் மனித உடலெடுத்து மனிதனாக வாழ்ந்தார். 3 எனவே, மனிதர்கள் எப்படி இருந்தார்களோ, அவர்கள் தங்கள் எண்ணங்கள் அனைத்திலும் மனிதர்களாக இருந்தாலும், எந்தப் பொருள்களின் மீது தங்கள் புலன்களை நிலைகொள்ளச் செய்தார்களோ, அங்கே அவர்கள் கண்ட எல்லாப் பக்கங்களிலிருந்தும் உண்மையைக் கற்பித்தார்கள். 4. அவர்கள் உலகத்தை ஆச்சரியத்துடன் பார்த்தபோதெல்லாம் அது கிறிஸ்துவையே ஆண்டவராகக் காட்டியது என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். அவர்கள் மற்றவர்களைப் போற்றினாலும், அவர்களைக் கடவுள்களாக நினைத்தாலும், வேறு எவரையும் போலல்லாமல் இரட்சகர் மட்டுமே கடவுளின் குமாரன் என்பதை நிரூபிக்கும் தனித்துவமான செயல்களைச் செய்தார் என்பதை உணர்ந்தார்கள். 5. அவர்கள் தீய ஆவிகளின் பக்கம் சாய்ந்திருந்தாலும், இந்த அசுத்த ஆவிகள் வார்த்தையானவர் மூலம் துரத்தப்பட்டபோது, கடவுளின் வார்த்தையானவராகிய அவர் மட்டுமே உண்மையான கடவுள் என்பதும், அசுத்த ஆவிகள் என்பன வெறும் வெற்றுவேட்டுக்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும். 6. அவர்களின் எண்ணங்கள் அவர்களது மனத்துக்குப் பிடித்த வீரர்களையும் கவிதைகளில் குறிப்பிடப்பட்டுள்ள கடவுள்களையும் வணங்கும் அளவுக்கு தாழ்ந்திருந்தாலும், இரட்சகர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்திருப்பதை அறிந்தபிறகும், இவை யாவும் பொய்யான கடவுள்கள் என்றும் கர்த்தர் மட்டுமே உண்மையானவர் என்றும் தேவனின் வார்த்தையானவரும் மரணத்தை வென்ற கர்த்தருமானவர் தான் இவர் என்றும் அவர்கள் உணர வேண்டும். 7. இந்தக் காரணத்திற்காகவே அவர் ஒரு மனிதனாகப் பிறந்து நம்மிடம் வந்தார், வாழ்ந்தார், மரித்தார், மீண்டும் உயிர்த்தெழுந்தார், முந்தைய எல்லா மக்களின் பாவச் செயல்களையும் தம்முடைய நற்கிரியைகளால் நீக்கினார். இதனால் மக்களின் விருப்பங்கள் எதுவாக இருந்தாலும், அவர் அவர்களைத் திரும்பக் கொண்டு வந்து தனது உண்மையான தந்தையைப் பற்றி அவர்களுக்குக் கற்பிக்க முடிந்தது. அவரே சொன்னது போல்: ‘நான் இரட்சிக்கவும், இழந்ததைக் கண்டுபிடிக்கவும் தான் வந்தேன்’ என்று.
16. ஒரு மனிதனாக மக்களின் கவனத்தை ஈர்க்கவும், அவரைக் கடவுளாகப் புரிந்துகொள்ள அவர்களை வழிநடத்தவும் வந்தார்
மனிதர்கள் உண்மையில் முக்கியமானவற்றில் கவனம் செலுத்த உதவும் முகமாக வார்த்தையானவர் மனித வடிவமானார். ஒரு மனிதனாக மாறுவதன் மூலம், அவர் மக்களைத் தம்மிடம் நெருங்கி வரச் செய்து அவர் சாதாரண மனிதனை மகத்தானவர் என்பதைக் காண அவர்களுக்கு உதவ முடியுமாக இருந்தது. அவர் கடவுள், இறை வார்த்தையானவர் மற்றும் உண்மையான கடவுளின் ஞானமாகவும் தன்னை வெளிப்படுத்தினார். 2. பவுல் இதை இவ்வாறு விளக்க முயற்சிக்கிறார்: நீங்கள் அன்பில் வேரூன்றி நிலைபெற்றிருந்தால், கிறிஸ்துவின் அன்பு எவ்வளவு விசாலமானதும், நீண்டதும், உயர்ந்ததும் மற்றும் ஆழமானதுமாக இருக்கிறது என்பதை அனைத்து புனிதர்களுடனும் சேர்ந்து புரிந்துகொள்ளும் அளவுக்கு நீங்கள் சக்திமயமாக இருப்பீர்கள். இந்த அன்பு நாம் அறிந்ததை விட பன்மடங்கு அதிகமாக உள்ளது. ஆகவே, நீங்கள் கடவுளின் முழுமையாலும் அன்பாலும் நிரப்பப்பட முடியும். 3. வார்த்தையானவர் தன்னை எல்லா இடங்களிலும், மேலேயும், கீழேயும், ஆழத்திலும் அகலத்திலும் – மேலே படைப்பிலும்; மண்ணுலகத்தில் மனிதனாக மாறுவதிலும்; ஆழத்தில், அதலபாதாளத்திலும்; அகலத்திலும், உலகிலும் – கடவுளைப் பற்றிய அறிவால் நிரப்பப்பட்டுள்ளது. 4. இந்தக் காரணத்திற்காக அவர் வந்தபோதும், தம்முடைய உடலை மரணத்துக்காக ஒப்புக்கொடுத்து, பின்னர் அதை மீண்டும் உயிர்த்தெழச் செய்ததன் மூலமும், அவர் உடனேயே அனைவர் சார்பாகவும் தன்னை மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கவில்லை. அப்படி செய்திருந்தால், அது அவரைக் கண்ணுக்குத் தெரியாதவராக மாற்றியிருக்கும். அதற்கு பதிலாக, அவர் தனது செயல்கள் மூலம் தன்னைக் காணக்கூடிய ஒரு மனித உடல்கொண்ட பொருளாக ஆக்கினார், அதில் வாசம் செய்தார், நற்கிரியைகளை ஆற்றினார். அத்தோடு அவரை ஒரு மனிதனாக மட்டுமல்ல, வார்த்தையாகிய கடவுளாகவும் வெளிப்படுத்த பிரத்தியேகமான அடையாளங்களைக் காட்டினார். 5. ஒரு மனிதனாக மாறுவதன் மூலம், இரட்சகர் இரண்டு அன்பின் செயல்களை ஆற்ற வேண்டியிருந்தது; முதலாவதாக, நம்மிடமிருந்து மரணத்தை நீக்கி நம்மைப் புதுப்பிப்பது; இரண்டாவதாக, காணப்படாதவராகவும் கண்ணுக்குப் புலப்படாதவராகவும் இருப்பது. அதே நேரத்தில் தந்தையின் வார்த்தையாகவும், பிரபஞ்சத்தின் ஆட்சியாளராகவும் அரசராகவும், அதிபதியாகவும் தனது படைப்புகள் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது.
17. சூரியன் மேகங்களுக்கு ஊடாகப் பிரகாசிக்கும்போதும் அதன் ஒளி பிரகாசமாகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருப்பது போல, அவதாரம் வார்த்தையின் பிரசன்னத்தைக் கட்டுப்படுத்தவோ அவரது தூய்மையைக் குறைக்கவோ இல்லை
ஏனென்றால், ஒருவர் நினைப்பது போல் அவர் ஒரு உடலுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை அல்லது ஒன்றில் இருக்கும்போது மற்ற இடங்களில் அவர் இல்லாமல் இருக்கவில்லை; அப்படியே அவர் தனது உடலை இடத்திற்கிடம் நகர்த்தினாலும், இந்தப் பிரபஞ்சம் அவரது செல்வாக்கு மற்றும் பார்வையில் நிறைந்திருந்தது. ஆச்சரியப்படும் விதமாக, வார்த்தையானவராக, அவர் எதனாலும் வரையறுக்கப்பட்டு இருக்கவில்லை; மாறாக, அவர் எல்லாவற்றையும் உள்ளடக்கியவராய் இருந்தார். எல்லாப் படைப்புகளிலும் அவர் இருக்கும் அதேநேரம், அவர் பிரபஞ்சத்திலிருந்து தனித்தனியாக இருக்கிறார். எல்லாவற்றிலும் நிறைந்திருக்க அவர் போதுமான சக்தி வாய்ந்தவர். அவர் எல்லாவற்றிலும் ஒழுங்கைக் கொண்டுவந்து எல்லாவற்றிம் மீதும் தனது அக்கறையைக் காட்டுகிறார். மேலும் அதில் சிக்கிக் கொள்ளாமல், முழு பிரபஞ்சம் உட்பட அனைத்திற்கும் உயிர் கொடுப்பவராக இருப்பதோடு, எல்லா வகையிலும் அவரது தந்தையில் முழுமையாக இருக்கிறார். 2. அவர் ஒரு மனித உடலில் இருந்து அதற்கு உயிர் கொடுத்த அதேவேளை, அவர் முழு பிரபஞ்சத்திற்கும் உயிர் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர் ஒவ்வொரு இயற்கையின் செயல்முறையில் மட்டுமல்லாமல், எல்லாவற்றிற்கும் அப்பாலும் இருந்தார். அவரது சரீர வடிவான செயல்கள் மூலம் மக்கள் அவரை அடையாளம் கண்டாலும், பிரபஞ்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதிலும் அவர் தெளிவான சாட்சியமாகக் காணப்பட்டார். 3. ஆன்மா தான் குடிகொண்டிருக்கும் உடலுக்கு வெளியே உள்ளவற்றை மனக்கண்ணால் பார்க்கும் திறனைக் கொண்டுள்ளது. ஆனால் அது உண்மையில் உடலைவிட்டு வெளியே செல்லவோ அல்லது தொலைவில் உள்ளவற்றை அசைக்கவோ இல்லை. ஒருவர் தொலைவில் உள்ள விஷயங்களைப் பற்றி நினைப்பதால், அவற்றை அசைக்கவோ அல்லது மாற்றவோ முடியும் என்று அர்த்தமல்ல. உதாரணமாக, ஒருவர் தனது வீட்டில் அமர்ந்து நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தால், அவர்களால் உண்மையில் சூரியனை அதன் பாதையில் இருந்து அசைக்கவோ அல்லது வானத்தை சுழற்றவோ முடியாது. இவை அனைத்தும் அவற்றின் பாதையில் ஒழுங்காகப் பயணித்துக் கொண்டிருப்பதை அவர்களால் பார்க்க முடியுமே தவிர, அவர்களது எண்ணங்கள் உண்மையில் அவற்றை எந்த விதத்திலும் பாதிக்காது. 4. மனித வடிவில் உள்ள கடவுளின் வார்த்தை வேறுபட்டது; ஏனென்றால் அவர் தனது உடலால் கட்டுப்படுத்தப்படவில்லை. அதற்கு பதிலாக, அவர் அதைக் கட்டுப்படுத்துகிறார்; அதாவது அவர் அவ்வுடலுக்குள் மட்டுமல்ல, எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார். அவர் பிரபஞ்சத்திற்கு வெளியே இருந்த போதெல்லாம் அவர் தனது தந்தையுடன் மட்டுமே வாழ்ந்தார். 5. இங்கு ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அவர் ஒரு மனிதனாக இருந்த அதே நேரத்தில், வார்த்தையானவராக எல்லாவற்றிற்கும் உயிரைக் கொடுத்துக்கொண்டே இருந்தார். மேலும் பிதாவின் குமாரனாக, தனது தந்தையுடன் வாழ்ந்துவந்தார். கன்னிமரியாள் அவரைப் பெற்றெடுத்தபோதும், அவர் சிறிதும் மாறவில்லை, ஒரு உடலில் இருப்பது அவரது மகிமையைக் குறைக்கவில்லை: அதன்மூலம் அவர் உடலையும் பரிசுத்தமாக்கினார். 6. அவர் பிரபஞ்சத்தில் இருந்தாலும், அவர் அதன் இயல்பில் பங்கு பெறுவதில்லை; மாறாக, எல்லாம் அவரால் உயிர்ப்பிக்கப்பட்டு காத்து இரட்சிக்கப்படுகிறது. 7. அவரால் படைக்கப் பட்டு, வானத்தில் சஞ்சரிக்கும் சூரியனின் கிரணங்கள் பூமியிலுள்ள பொருட்கள் மீது விழுவதால் அவை மாசடையாது. அல்லது இருளில் சூரியன் தன் ஒளியை இழக்கவில்லை என்றால், சூரியனைப் படைத்த கடவுளின் தூய வார்த்தை, மனித உடலில் வெளிப்படுவதன் மூலம் மாசுபட முடியாது. மாறாக, தூய்மையானவராகவும் மாறாதவராகவும் இருந்து, இயற்கையாகவே அழியக்கூடியதாக இருக்கும் இந்த உடலுக்கு உயிரையும் தூய்மையையும் அவர் கொண்டு வந்தார். இதைத்தான் 1 பேதுரு 2:22 நமக்கு இவ்வாறு சொல்கிறது, “அவர் பாவமேதும் செய்யவில்லை. அவரது வாயில் எந்தப் பொய்யும் வெளிவரவில்லை” என்று.
18. கடவுளின் வார்த்தையும் வல்லமையும் அவரது மனித செயல்களின் வாயிலாக பிசாசுகளை விரட்டுவதன் மூலமும் அற்புதங்கள் மூலமும் கன்னி மரியாளிடமிருந்து பிறத்தல் மூலமும் முழுமை பெறுகின்றன
அதன்படி, இந்த விஷயத்தில் ஆர்வமுள்ள எழுத்தாளர்கள் அவர் உண்பது, பிறப்பது போன்ற விடயங்கள் பற்றிப் பேசும்போது, அவரது மனித உடல் உண்மையில் பிறந்தது மற்றும் மற்ற எந்த உடலையும் போலவே அதற்கு உணவு தேவைப்பட்டது என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. இருப்பினும், அந்த உடலுடன் இணைக்கப்பட்ட கடவுள், அதாவது வார்த்தையானவர் தான் ஒரு மனிதன் மட்டுமல்ல, கடவுள் என்பதை தனது கிரியைகள் மூலம் காட்டினார். உண்ட, பிறந்த, துன்பப்பட்ட உடல் உண்மையிலேயே இறைவனுக்கு சொந்தமானது என்பதால் இந்த விஷயங்கள் அவரைப் பற்றிச் சொல்லப்படுகின்றன. அவர் மனிதரானதால், அவருக்கு வெறும் தோற்றம் மட்டும் அல்ல, உண்மையான உடல் இருந்தது என்பதைக் காட்ட அவரை இவ்வாறு விவரிப்பது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. 2. இயேசு தம்முடைய செயல்கள் மூலம் உலகில் உண்மையிலேயே சரீரப்பிரகாரமாக இருந்தார் என்பதைக் காட்டினார். அவர் அவிசுவாசிகளான யூதர்களிடம், “நான் என் பிதாவின் கிரியைகளைச் செய்யாவிட்டால், என்னை நம்பவேண்டாம். ஆனால் நான் இந்தக் கிரியைகளைச் செய்யும்போது, நீங்கள் என்னை நம்பாவிட்டாலும், நான் செய்யம் கிரியைகளை நம்புங்கள். இதன் மூலம், பிதா என்னிலும், நான் பிதாவிலும்வாசம் செய்கிறோம் என்பதை நீங்கள் அறிந்து புரிந்துகொள்ள முடியும்.” 3. அவர் படைத்தவற்றின் மூலம் கடவுளின் பிரசன்னத்தைக் காண முடிவது போல, மனிதனாக மாறி நம்மிடையே வாழ்ந்தவர் ஒரு சாதாரண மனிதர் மட்டுமல்ல, அவர் செய்த அற்புதமான செயல்களின் அடிப்படையில் கடவுளின் சக்திவாய்ந்த வார்த்தை என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம். 4. அசுத்த ஆவிகளை விரட்டி மக்களைக் குணப்படுத்தும் திறன் என்பது ஒரு சாதாரண மனிதனால் செய்யக்கூடிய ஒன்றல்ல; அவ்வாறு செய்யக்கூடியவர் கடவுள் என்பதைக் காட்டுகிறது. அவர் நோய்களைக் குணப்படுத்துவதைப் பார்த்த எவரும் அவர் வெறும் மனிதனை விட மேலானவர் என்பதை உணர வேண்டும். அவர் தொழுநோயாளிகளைக் குணப்படுத்தினார், முடவர்களுக்கு நடக்க உதவினார், காது கேளாதவர்களுக்கு மீண்டும் கேட்க உதவினார், பார்வையற்றோருக்கு பார்வை அளித்தார். ஒரே வார்த்தையில் மனிதர்களிடமிருந்து எல்லா நோய்களையும் பலவீனங்களையும் விரட்டினார்: இந்தச் செயல்கள் அவருடைய தெய்வீகத் தன்மையைத் தெளிவாகக் காட்டுகின்றன. ஏனென்றால், அவர் குறைபாடுள்ளவர்களின் குறைகளைக் களைந்தவர் என்றும், பிறப்பிலிருந்தே பார்வையற்றவனின் கண்களைத் திறப்பதையும் கண்டவர் என்றும், அவர் மனித இயல்பின் மீது அதிகாரம் கொண்டவர் என்பதையும், அதன் படைப்பாளர் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்வார்கள். மனிதனுக்குப் பிறப்பிலிருந்தே இல்லாததைத் திருப்பித் தந்தவர், மனிதர்களின் இயற்கையான பிறப்பாகிய கர்த்தர் என்பது நிச்சயமாகத் தெளிவாகிறது. 5. அவர் நம்மிடம் இறங்கி வவருவதற்காக ஒரு கன்னியிடமிருந்து தனது உடலைப் பெற்றார். இது அவர் கடவுள் என்பதை நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. ஏனெனில் அவரது உடலை உருவாக்கிய அதே ஒருவர் தான் மற்ற அனைத்தையும் படைத்தார். ஒரு கன்னியிடமிருந்து ஆண் துணை இல்லாமல் குழந்தை அவதரித்ததைக் காணும்போது, அந்த உடலில் இருப்பவர் மற்ற அனைத்து உடல்களையும் படைத்தவர் மற்றும் ஆண்டவர் என்பதை அவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். 6. தண்ணீர் திராட்சை இரசமாக மாறுவதைக் கண்டவர்கள், இதைச் செய்தவர் அனைத்து தண்ணீரையும் படைத்த ஆண்டவரும் படைப்பாளருமே என்பதை உணரவில்லையா? அவர் கடலின் அதிபதியாய் அதன்மீது நடந்து, அதைக் கண்டவர்களுக்கு எல்லாவற்றிற்கும் பொறுப்பானவர் என்பதைக் காட்ட வறண்ட நிலத்திலும் நடந்து சென்றார். அவர் ஒரு சொற்ப அளவு உணவைக் கொண்டு ஒரு பெரிய கூட்டத்திற்கு உணவளித்தபோது, ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்கு உணவளிக்கச் செய்தபோது, இன்னும் மீதமுள்ளவற்றை மீதப்படுத்தியபோது, எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ளும் இறைவன் அவர்தான் என்பதற்கு சான்றாகத் திகழ்ந்தார்.
19. இயற்கையால் பாதிக்கப்படாத மக்கள், இயற்கையின் தெய்வீகம் அனைத்தையும், குறிப்பாக அவரது மரணத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட ஒருவரின் புனித மனிதகுலத்தின் மூலம் கடவுளைப் பற்றி கற்றுக்கொள்ள வேண்டும்
ஆனால் இவை அனைத்தையும் இரட்சகர் செய்வது நல்லது என்று தோன்றியது. பிரபஞ்சத்தில் அவர் காட்டியுள்ள அக்கறையை மக்கள் அங்கீகரிக்கவில்லை அல்லது படைப்பில் அவரது தெய்வீக இயல்பைக் காணவில்லை என்பதால் இரட்சகர் இதைச் செய்யத் தேர்ந்தெடுத்தார். அவரது செயல்களைப் பார்ப்பதன் மூலம், மனிதர்கள் புரிதலைப் பெறவும், தந்தையாகிய கடவுளைப் பற்றி அறியவும் முடியும் என்று அவர் நம்பினார். நான் முன்பு கூறியது போல், குறிப்பிட்ட நிகழ்வுகளைக் கவனிப்பதன் மூலம் சகல விதத்திலும் அவரது அக்கறையை அவர்கள் புரிந்து கொள்ள முடியும். 2. அசுத்த ஆவிகள் மீது அவர் கொண்டிருந்த வல்லமையைக் கண்டவர்கள் அல்லது அந்த ஆவிகள் கூட அவர் தான் தங்கள் ஆண்டவர் என்று ஒப்புக்கொண்டதைக் கண்டவர்கள், அவர் தான் கடவுளின் குமாரன், ஞானம் மற்றும் வல்லமையும் கொண்டவர் என்பதைக் குறித்து இனிமேலும் சந்தேகப்படுவார்களா? 3. கர்த்தர் மரித்தபோது அனைத்து படைப்புகளின் மௌனத்தையும் கலைக்கச் செய்தார். குறிப்பாக சிலுவையில் அறியுன்று தன் இன்னுயிரை நீத்தபோது, அவர் வெறும் ஒரு மனிதனாக மட்டுமல்ல, கடவுளின் குமாரன் மற்றும் அனைவரின் இரட்சகர் என்பதைக் காட்டியது ஆச்சரியமாக இருந்தது. சூரியன் இருண்டு போனது, பூமி அதிர்ந்தது, மலைகள் பிளந்தது; எல்லோரும் அதிர்ச்சியால் உறைந்தனர். இந்த நிகழ்வுகள் சிலுவையில் அறையப்பட்டு மரித்தது கர்த்தராகிய கிறிஸ்து என்பதை நிரூபித்தன. மேலும் அனைத்து படைப்புகளும் அவரது மகத்தான வல்லமையை அங்கீகரித்தன. அவரது கிரியைகள் வாயிலாக, வார்த்தையாகிய கடவுள் மக்களுக்குத் தன்னை வெளிப்படுத்தினார். அடுத்து, அவரது வாழ்க்கையின் முடிவு மற்றும் அவரது மரணத்தின் தன்மை பற்றி நாம் பேச வேண்டும், ஏனெனில் இது நமது நம்பிக்கையின் மையமாகவும் அனைவரும் நம்பும் ஒன்றாகவும் இருக்கிறது. இது கிறிஸ்துவே உண்மையிலேயே கடவுள் என்றும் கடவுளின் குமாரன் என்றும் உறுதியானதைக் காட்டுகிறது.
20. கடவுள் மட்டுமே நமக்கு நித்திய வாழ்வைத் தர முடியும், மேலும் அவரது சொந்த உருவம் மட்டுமே நம்மை கடவுளின் சாயலுக்குத் திரும்பக் கொண்டுவர முடியும். அவர் வாழ்வுக்கும் சத்தியத்திற்கும் ஆதாரமாக இருக்கிறார். நமது பாவங்களுக்குப் பரிகாரமாக அவர் மரித்து பின்னர் மரித்தோரிலிருந்து எழுந்தவராக மீண்டும் உயிர்த்தெழ வேண்டும் என்றால் அவரது உடல் மனித உடலாக இருக்க வேண்டும். ஆனால் அவரது உடல் அழியக்கூடியதாக இருக்கவில்லை
அவர் ஏன் ஒரு உடல் வடிவத்தில் தோன்றினார் என்பதை இப்போது ஓரளவு விளக்கியுள்ளோம். அழியக்கூடியதை அழியாததாக மாற்றும் சக்தி இரட்சகருக்கு மட்டுமே இருந்தது. ஆரம்பத்தில் வெறுமையிலிருந்து சகலவற்றையும் படைத்தவர் அவரே. பிதாவின் சாயலைத் தவிர, வேறு யாராலும் மனிதர்களில் கடவுளுக்கு ஒப்பான சாயலை மீண்டும் உருவாக்க முடியாது. மேலும், ஜீவனாகிய நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் மட்டுமே மரணத்திற்குரியவர்களை அழியாதவர்களாக மாற்றவும், பிதாவைப் பற்றி மக்களுக்குக் கற்பிக்கவும், சிலை வழிபாட்டை இல்லாதொழிக்கவும் முடியும். எல்லாவற்றையும் ஒழுங்கமைக்கும் வார்த்தையானவரும், பிதாவின் ஒரே உண்மையான ஒரே பேறான சுதனானவரும் அவர் மாத்திரமே. 2. ஒவ்வொருவரும் தங்கள் பெற்ற கடனை மீளச் செலுத்துவது முக்கியம், அதிலும் விசேடமாக மரணம். அதனால்தான் அவர் நம்மிடம் வந்தார். அவரது அற்புதமான கிரியைகள் மூலம் அவரது தெய்வீக வல்லமையைத் தெரியப்படுத்திய பிறகு, அவர் அனைவருக்காகவும் தன்னை தியாகம் செய்து, நம்முடைய சரீரத்திற்குப் பதிலாக அவரது சரீரம் மரிக்கும்படி செய்தார். மக்களை அவர்களின் கடந்தகால பாவங்களிலிருந்து மீட்பதற்கும், அவரது திருவுடல் ஒருபோதும் சிதைவதில்லை என்பதை வெளிப்படுத்தியதன் மூலமும் அவர் மரணத்தை விட வலிமையானவர் என்பதை நிரூபிப்பதற்கும் இது செய்யப்பட்டது. அவரது உயிர்த்தெழுதல் என்பது அனைவருக்கும் உயிர்த்தெழுதலின் முதல் உதாரணமாகச் செயல்படுகிறது. 3. அடிக்கடி ஒரே விதமான தலைப்பையும் ஒரே விதமான வார்த்தைகளையும் பயன்படுத்தினால் ஆச்சரியப்பட வேண்டாம். கடவுளின் அறிவுரைகளைப் பற்றி நாம் விவாதிப்பதால், முக்கியமான எதையும் நாம் தவறவிடாமல் இருக்கும்பொருட்டு, ஒரே கருத்துக்களை வெவ்வேறு வழிகளில் விளக்குகிறோம். சொல்ல வேண்டிய ஒன்றை விட்டுவிடுவதை விட நாமே அவற்றை மீண்டும் சொல்வது நல்லது. 4. உடல் மற்ற அனைத்தையும் போலவே மனித உடலாகவே இருந்தது. அது ஒரு கன்னியின் கருவிலிருந்து ஒரு தனித்துவமான வழியில் உருவாக்கப்பட்டிருந்தாலும், அது இன்னும் அழியக்கூடியது மற்றும் மற்ற அனைவரையும் போலவே இறக்க விதிக்கப்பட்டது. இருப்பினும், வார்த்தை அதனுடன் இணைந்ததால், இந்த உடல் இனிமேல் சிதைவுக்கு உட்படாது. மாறாக, வார்த்தை அதில் வாழ்ந்ததால் அது சிதைவிலிருந்து பாதுகாக்கப்பட்டது. 5. ஒரே நேரத்தில் இரண்டு அற்புதமான விஷயங்கள் நடந்தன: அனைவரின் மரணமும் கர்த்தருடைய சரீரத்தில் நிறைவேறியது. அதனுடன் இணைந்த வார்த்தையின் காரணமாக மரணமும் சிதைவும் முற்றிலுமாக நீக்கப்பட்டன. மரணம் தவிர்க்கமுடியாதது, அதன்மூலம் அனைவராலும் செலுத்த வேண்டிய கடனை அடைக்க வேண்டும் என்பதற்காக மரணத்தை அனைவராலும் தாங்க வேண்டியிருந்தது.
6. வார்த்தையானவர் அழியாதவராகவும், மரணம் அவரை வெற்றிகொள்ள முடியாது என்றபோதிலும், இறக்கக்கூடிய ஒரு மனித உடலை அவர் எடுத்தார். அனைவருக்கும் தன்னை ஒரு பலியாகவும், அனைவருடைய பாவங்களுக்கும் பரிகாரமாக, தனது உடலை ஒப்புக்கொடுக்கவே இதைச் செய்தார். இதன் மூலம், மரணத்தின் மீது வல்லமை கொண்டிருந்த பிசாசை அவர் வென்றார். மேலும் மரணத்திற்கு பயந்து தங்கள் வாழ்நாள் முழுவதும் பயத்தில் வாழ்ந்தவர்களை அவர் விடுவித்தார்.
21. கிறிஸ்துவின் இறப்பால் மரணம் தோற்கடிக்கப்பட்டது. அப்படியானால், கிறிஸ்து ஏன் அமைதியாகவோ அல்லது மரியாதைக்குரிய விதத்திலோ மரிக்கவில்லை? மற்ற அனைவரையும் போல மரிக்காமல், அவர் மற்றவர்களால் கொல்லப்பட வேண்டியிருந்தது. அப்படியானால், அவர் ஏன் இறந்தார்? அவர் அந்த காரணத்திற்காக வந்தாரோ, அது நிறைவேறாமல், அவர் மீண்டும் உயிர்த்தெழுந்திருக்க முடியாது
எனவே, எம் அனைவருக்கும் பொதுவான இரட்சகர் நமக்காக மரித்ததால், கிறிஸ்துவுக்கு உண்மையுள்ளவர்களாகிய நாம் இனி முன்பு போல, சட்டத்தின் எச்சரிக்கைக்கு ஏற்ப இனி மரணத்தை எதிர்கொள்ள மாட்டோம். இந்த தண்டனை இனி இல்லை. உயிர்த்தெழுதலின் கிருபையால், கடவுள் தேர்ந்தெடுத்த நேரத்தில் நம் உடலின் இயற்கையான வரம்புகளின்படி மட்டுமே நாம் இறப்போம், அப்படியானால் மட்டுமே, நாம் ஒரு சிறந்த உயிர்த்தெழுதலைப் பெற முடியும். 2. நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகள் இல்லாமற் போகாமல் மீண்டும் முளைத்து வளர்வது போல, இரட்சகரின் கிருபையால் நாமும் மரணத்திற்குப் பிறகு எழுந்திருப்போம். உயிர்த்தெழுதலை நமக்கு உறுதியளிக்கும் அப்போஸ்தலன் பவுல், அழிவுள்ள பொருள் அழியாமையாக மாற வேண்டும் என்றும், சாவுக்கேதுவானது அழியாமையாக மாற வேண்டும் என்றும் கூறுகிறார். ஆனால் இந்த அழிவுள்ள பொருள் அழியாமையைத் தரித்துக்கொள்ளும்போது, இந்த சாவுக்கேதுவான பொருள் அழியாமையைத் தரித்துக்கொள்ளும்போது, மரணம் வெற்றியில் விழுங்கப்பட்டது என்று எழுதப்பட்ட வார்த்தை நிறைவேறும். ஓ மரணமே உன் பிடி எங்கே? ஓ கல்லறையே உன் வெற்றி எங்கே? என்பதை பவுல் நினைவுறுத்துகிறார். 3. அனைவர் சார்பாகவும் அவர் தனது உடலை மரணத்திற்குக் கொடுக்க வேண்டியிருந்தால், சிலுவையில் அறையப்படுவதற்குப் பதிலாக, அதை ஒரு சாதாரண மனித மரணமாக நிகழ்ந்திருந்தால் மிகவும் பொருத்தமானதாக இருந்திருக்கும் என்ற கேள்வியை எவரும் முன்வைக்கலாம். அத்தோடு தனது உடலை மரியாதையுடன் ஒதுக்கி வைப்பது அவருக்கு மிகவும் பொருத்தமானதாக இருந்திருக்கும் என்றும் சிலர் எண்ணக்கூடும். 4. இப்போது, நீங்கள் முன்வைக்கும் இந்த ஆட்சேபனை வெறும் மனித அக்கறை தானா என்பதை நான் உங்களிடம் கேட்கிறேன்? அதே நேரத்தில் இரட்சகர் செய்தது உண்மையிலேயே தெய்வீகமானது மற்றும் பல காரணங்களுக்காக மரியாதைக்குரியது. முதலாவதாக, மனிதர்கள் எதிர்கொள்ளும் மரணம் அவர்களின் இயற்கையான பலவீனத்தால் நிகழ்கிறது; அவர்கள் என்றென்றும் அப்படியே இருக்க முடியாது, காலப்போக்கில் இல்லாமற் போகிறார்கள். இதனால்தான் அவர்கள் நோய்வாய்ப்பட்டு இறக்கிறார்கள். இருப்பினும், கர்த்தர் பலவீனமானவர் அல்ல; அவர் கடவுளின் வல்லமையைக் கொண்டவர், கடவுளின் வார்த்தையாகவும் மற்றும் உண்மையான வாழ்வின் அர்த்தமாகவும் இருக்கிறார். 5. அப்படியானால், அவர் தம்முடைய சரீரத்தை எங்காவது தனிமையில், மனிதர்களின் முறைப்படி ஒரு படுக்கையில் கிடத்தியிருந்தால், அவர் பலவீனமானவர் என்பதால் இதைச் செய்தார் என்று மக்கள் நினைக்கலாம். ஆனால், முதலில் அவர் கடவுளின் ஜீவனாகவும் வார்த்தையாகவும் இருந்ததாலும், இரண்டாவதாக, அனைவரின் சார்பாகவும் தன்னுடைய மரணமும் நிறைவேற வேண்டியது அவசியம் எனப்பட்டதாலும், அவரே ஜீவனும் சக்தியும் என்பதாலும், அவரது உடல் பலம் பெற்றது. 6. மரணம் மனித வாழ்வில் நிகழ வேண்டிய ஒன்று என்றாலும், அவர் அதை தாமாகவே எடுத்துக்கொள்ளவில்லை, மாறாக மற்றவர்களின் கைகளிலிருந்து பெற்றார். இது அவரது பலியின் நிறைவாக இருந்தது. மற்றவர்களின் நோய்களைக் குணப்படுத்தும் இறைவன் தாமே நோய்வாய்ப்படுவது பொருத்தமானதல்ல, மற்றவர்களுக்கு வலிமை அளிக்கும் அவரது உடல் அதன் சொந்த சக்தியையும் இழப்பது சரியானதல்ல. 7. அப்படியானால், அவர் நோயைத் தடுத்தது போல, மரணத்தை ஏன் தடுத்து நிறுத்தவில்லை? மரணத்தை அனுபவிக்க அவருக்கு ஒரு உடல் தேவைப்பட்டது. ஆகவே மரணத்தை தடுத்து நிறுத்துவது உயிர்த்தெழுதலை அர்த்தமற்றதாக்கியிருக்கும். நோய் அவரது மரணத்திற்கு முன் வரவில்லை என்பதும் முக்கியமாகக் கவனிக்கப் படவேண்டியதொன்று. எனவே மக்கள் அவரை பலவீனமானவர் என்று நினைக்க இடமில்லை. அவர் பசியை உணர்ந்திருந்தாரா? ஆம், அவருக்கு ஒரு உடல் இருந்ததால் அவர் பசியை உணர்ந்திருப்பார். ஆனால் அவர் அந்த உடலினுள் ஆண்டவராக இருந்ததால் அவர் பசியால் இறக்கவில்லை. அனைவரையும் மீட்க அவர் இறந்தாலும், அவரது உடல் சிதைந்துபோகவில்லை. அது மீண்டும் முற்றிலும் ஆரோக்கியமாக மரித்தோரில் இருந்து உயிர்த்தெழுந்தது. ஏனெனில் உடல் வேறு யாருக்கும் சொந்தமானது அல்ல, மாறாக உயிருக்கு சொந்தமானது.
22. ஆனால் அழியாமையை பாதுகாக்க அவர் ஏன் யூதர்களின் உடலை எடுக்கவில்லை? (1) அவர் தனது சொந்த மரணத்தை ஏற்படுத்துவது சரியல்ல என்றபோதிலும், அவர் அதைத் தவிர்க்கவும் இல்லை. (2) அவர் மற்றவர்களின் உரிமையான மரணத்தைப் பெற வந்தார். எனவே அது அவருக்கு வெளியிலிருந்து வந்திருக்க வேண்டும். (3) அவர் மீண்டும் உயிர்த்தெழுவார் என்பதை நிரூபிக்க அவரது மரணம் உறுதியான ஒன்றாக இருக்க வேண்டும். மேலும், அவர் பலவீனமாக இருந்து இறக்க நேரிட்டால், மக்கள் மற்றவர்களை குணப்படுத்தியமைக்காக அவரை கேலி செய்வார்கள்
யூதர்கள் கர்த்தரது உடலை மரணத்திலிருந்து பாதுகாக்கத் திட்டமிட்ட போது அவர்களிடமிருந்து ஒளிந்து கொள்வது நல்லது என்று நினைத்திருக்கலாம். இருப்பினும், இது கர்த்தருக்குச் சரியாக இருக்காது. ஜீவனாகிய தேவனுடைய வார்த்தை, தனது சொந்த உடலுக்கு மரணத்தை ஏற்படுத்துவது பொருத்தமற்றதாக இருப்பது போலவே, மற்றவர்கள் கொண்டு வர விரும்பும் மரணத்திலிருந்து அவர் ஓடிப்போவதும் சரியானதல்ல. அதற்கு பதிலாக, அவர் மரணத்தை எதிர்கொள்ளத் துணிந்தே இருந்தார். அதனால்தான் யூதர்கள் அவருக்கு எதிராக சதி செய்தபோது அவர் இயல்பாகவே தனது உடலைத் தானாக ஒதுக்கி வைக்கவில்லை, அத்தோடு, யூதர்கள் அவருக்கு எதிராக இரகசிய ஆலோசனை செய்தபோது அவர்களை விட்டு ஓடவுமில்லை. 2. இது வார்த்தையில் எந்த பலவீனத்தையும் காட்டவில்லை; மாறாக, அது அவரை இரட்சகராகவும் ஜீவனின் ஆதாரமாகவும் காட்டியது. அவர் மரணத்தைத் தோற்கடிக்க மரணம் வரும்வரை காத்திருந்தார். மேலும் அனைவரையும் இரட்சிக்க மரணத்தை ஏற்றுக்கொள்ளத் தயாரானார். 3. மேலும், இரட்சகர் தமக்காக மரிக்க வரவில்லை, மக்களுக்காக மரிக்கவே வந்தார். அதனால்தான் அவர் தமக்காக மரிக்க தனது சரீரத்தைக் கைவிடவில்லை. யோவான் 10:17-18 இதுகுறித்து பின்வருமாறு கூறுகிறது, “என் பிதா என்னை நேசிக்கிறார். ஏனென்றால் நான் என் ஜீவனைக் கொடுக்கிறேன். நான் என் ஜீவனைக் கொடுப்பதால் அதனை மீண்டும் பெறுவேன். என்னிடமிருந்து என் ஜீவனை எவரும் பறிக்க முடியாது. நானே என் ஜீவனைத் தாராளமாகக் கொடுக்கிறேன். அதற்கான உரிமை எனக்குண்டு. அதுபோல் அதனைத் திரும்பப் பெறுகிற உரிமையும் எனக்குண்டு. இதைத்தான் பிதா எனக்குக் கட்டளையிட்டார்.” ஏனென்றால் அவர் ஜீவனாக இருக்கிறார் ஆகவே இறக்க வேண்டியதில்லை – ஆனால் அவர் மக்களிடமிருந்து வந்த மரணத்தை ஏற்றுக்கொண்டார், எனவே தம்முடைய சொந்த சரீரத்தில் மரணம் அவரை எதிர்கொண்டபோது அதை முழுமையாக நீக்க முடிந்தது. 4. மீண்டும் இதுபற்றிக் கூறுவதானால், கர்த்தருடைய சரீரம் தம்முடைய உயிர்த்தெழுதலின் நியாயத்தன்மையைக் காண்பிப்பதில் ஒரு முக்கிய நோக்கத்தை ஆற்றுகிறது. மரணத்தின் மீதான வெற்றியைக் காட்ட தம்முடைய சரீரத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதில் அவர் அதிக அக்கறை செலுத்தினார். இந்தச் செயல், அவர் கெடாமையை நீக்கிவிட்டார் என்பதையும், எதிர்காலத்தில் மக்களின் சரீரங்கள் கெடாமல் இருக்கும் என்பதையும் நிரூபிக்கும் சான்றுகளாகும். இந்த வாக்குறுதியை நிரூபிக்கவும், அனைவருக்கும் காத்திருக்கும் உயிர்த்தெழுதலின் சான்றாகவும், அவர் தம்முடைய சரீரத்தை அழியாமல் பாதுகாத்தார். 5. 5. அவரது உடல் நோய்வாய்ப்பட்டு, எல்லோரும் அதைப் பார்த்திருந்தால், மற்றவர்களின் நோய்களைக் குணப்படுத்திய அவர் தனது சொந்த உடலை துன்பப்படுத்த அனுமதிப்பது சரியாக இருக்காது என்று நினைத்திருக்கக்கூடும். இயல்பாக, ஒரு மனிதர் தனது சொந்த உடல் நோயுற்று இருக்கும் சமயத்தில், அவரால் பிறரை எவ்வாறு குணப்படுத்த முடியும் என்று மக்கள் கேட்கக்கூடும் அல்லவா? அதாவது, மத்தேயு 27:42 கூறுவதுபோல, “இவன் மற்றவர்களைக் காப்பாற்றினான்! ஆனால் தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை! இவனை (இஸ்ரவேலின்) யூதர்களின் அரசன் என்று மக்கள் கூறுகிறார்கள். இவன் அரசனானால் இப்பொழுது சிலுவையிலிருந்து கீழே இறங்கி வரவேண்டும். அப்பொழுது நாங்கள் இவனை நம்புவோம்” என்று கிறீஸ்துவின் சிலுவை மரணத்தைப் பற்றியும், தன்னையே விடுவித்துக் கொள்ள முடியாதவர், பிறரை எப்படி விடுவிக்க முடியும் என்று கூறுவது இயல்பான சந்தேகமே. அல்லது அவரால் அதைச் செய்ய முடியாவிட்டால், அவர் மற்றவர்களின் துன்பத்தைப் பற்றி கவலைப்படவில்லை என்று அதே மக்கள் புலம்புவார்கள்.
23 உயிர்த்தெழுதலில் உள்ள கோட்பாட்டை ஆதரிக்க மரணம் என்ற பொதுக் காரணி அவசியமாகிறது
அப்போஸ்தலர் 26:26-ல் கூறப்பட்டுள்ளபடி, எந்த நோய்நொடியும் இல்லாமல், எவ்வித வலியும் இல்லாமல், ஒரு மூலையிலோ, ஒரு பாலைவனத்திலோ, ஒரு வீட்டிலோ, அல்லது எங்காவது அவர் தனது உடலை ரகசியமாகவும் தனியாகவும் மறைத்து வைத்திருந்து, பின்னர் திடீரென்று தோன்றி, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததாகக் கூறினால், லூக்கா 24:11-இல் கூறப்பட்டுள்ளபடி, அவர் குறித்து எல்லா இடங்களிலும் வீண் கதைகளைச் சொல்வது போல் தோன்றியிருக்கும். மேலும் உயிர்த்தெழுதல் பற்றி அவர் சொன்னது மிகவும் அவமதிப்புக்கு உள்ளாகியிருக்கும். ஏனெனில் அவரது மரணத்திற்கு சாட்சியாக யாரும் இல்லாமலிருந்திருப்பார்கள். 2. அல்லது, அவர் உயிர்த்தெழுந்தபோது, உயிர்த்தெழுதலை அறிவித்தபோது, தம்முடைய மரணத்தை இரகசியமாக நடக்கச் செய்ய வேண்டிய அவசியம் என்ன? அப்படியென்றால், அவர் எல்லோருக்கும் முன்பாக அசுத்த ஆவிகளைத் துரத்தியபோதும், பிறவியிலேயே குருடனாக இருந்த ஒருவனைக் குணப்படுத்தியபோதும், தாம் தேவனுடைய வார்த்தை என்பதைக் காட்ட தண்ணீரைத் திராட்சை ரசமாக மாற்றியபோதும், தானே வாழ்வின் ஊற்று என்று மக்கள் நம்பும்படி தம்முடைய மனித இயல்பை எல்லோருக்கும் முன்பாகப் பரிபூரணமாகக் காட்டியிருக்கவேண்டிய தேவை என்ன? 3. இயேசுவின் சீடர்கள் முதலில் அவர் மரித்தார் என்று சொல்ல முடியாவிட்டால், அவருடைய உயிர்த்தெழுதலைப் பற்றி எப்படி நம்பிக்கையுடன் பேச முடியும்? அவருடைய உயிர்த்தெழுதலைப் பற்றிப் பேசும்போது அவருடைய மரணத்தின் சாட்சிகளை நம்ப வேண்டும். பலர் அவருடைய மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் பார்த்தபோதும், பரிசேயர்கள் அந்நேரம் வரை நம்பவில்லை, அவர்கள் கண்டதை மறுக்கும்படி சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்தனர். இந்த நிகழ்வுகள் ரகசியமாக நடந்திருந்தால், அவர்கள் சந்தேகிக்க இன்னும் அதிகமான காரணங்களைக் கண்டறிந்தும் உருவாக்கியும் இருப்பார்கள். 4. அது உண்மையிலேயே இறந்துவிட்டது என்றும், அவருடைய உடலின் நித்திய ஜீவனால் எதிர்காலத்திற்கு சக்தியற்றதாக மாற்றப்பட்டது என்றும் அனைவருக்கும் காட்டப்படாவிட்டால், மரணம் முடிவுக்கு வந்துவிட்டது என்றும், அதை நாம் வென்றோம் என்றும் எப்படி நிரூபிக்க முடியும்?
24. மேலும் ஆட்சேபனைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. அவர் எப்படி இறக்கவேண்டும் என்பதை அவர் தீர்மானிக்கவில்லை; அதற்கு பதிலாக, அவர் மரணத்தை எல்லா வழிகளிலும் வெல்ல முடியும் என்பதைக் காட்டுவதையே நோக்கமாகக் கொண்டிருந்தார்: (ஒரு திறமையான மல்யுத்த வீரரைப் போல) அவரை அவமானப்படுத்துவதற்காக அவர் இறந்த விதம், உண்மையில் மரணத்தின் மீதான வெற்றியின் அடையாளமாக மாறியது மற்றும் அவரது உடலை முழுமையாக வைத்திருந்தது
மற்றவர்கள் எவ்வாறு பதிலளிப்பார்கள் என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். ஏனென்றால், அவருடைய மரணம் அனைவருக்கும் முன்பாகவும், சாட்சிகளுடன் நிகழ்ந்திருக்க வேண்டும், அவருடைய உயிர்த்தெழுதலின் கதையும் நம்பப்படக்கூடியதாக இருக்க வேண்டும் என்றால், சிலுவை மரணத்தின் அவமானத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அவர் தனக்கென ஒரு மகிமையான மரணத்தை ஏற்படுத்தியிருந்தால் எல்லாவிதத்திலும் நன்றாக இருந்திருக்கும். 2. அவர் இதைச் செய்திருந்தால், அது மக்கள் அவர்மீது சந்தேகம் கொள்ள வைத்திருக்கும். அவர் எல்லாவித மரணங்களைத் தோற்கடிக்கும் வல்லமை அற்றவர் என்றும், தனக்காக மட்டுமே திட்டமிடப்பட்ட மரணத்தைத் தோற்கடிக்க போதுமான வலிமை உடையவர் என்று நினைப்பார்கள். இது உயிர்த்தெழுதல் பற்றிய அவநம்பிக்கைக்கு வழிவகுக்கும். ஆகையால், மரணம் அவரது உடலுக்கு வந்தது அவரால் அல்ல, அவருக்கு எதிரானவர்களால். அதனால் அவர்கள் இரட்சகருக்கு எந்த வகையான மரணத்தைக் கொடுக்க முயன்றாலும், அவர் அந்த மரணத்தை முழுமையாக வெல்ல முடியும். 3. ஒரு திறமையான மற்றும் துணிச்சலான மல்யுத்த வீரர், பயந்து பார்ப்பதைத் தவிர்ப்பதற்காக தனது எதிரிகளைத் தேர்ந்தெடுக்காமல், பார்வையாளர்கள், குறிப்பாக அவர்கள் தனது எதிரிகளா என்பதைத் தீர்மானிக்க அனுமதிப்பது போல, அவர் அனைவரையும் விட தான் சிறந்தவர் என்பதை நிரூபிக்க முடியும். கிறிஸ்துவும் மற்றொரு மரணத்திற்கு பயந்து தோன்றுவதைத் தவிர்ப்பதற்காக தான் எப்படி இறப்பார் என்பதைத் தேர்ந்தெடுக்க வில்லை. மாறாக, அவர் சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டார், அது பயங்கரமானது மற்றும் அவமானகரமானது என்று நினைத்த மற்றவர்களால், குறிப்பாக அவரது எதிரிகளால் அவருக்கு வழங்கப்பட்டது. இந்த மரணத்தை எதிர்கொள்வதன் மூலம், அவர் உண்மையிலேயே வாழ்க்கையின் ஆதாரம் என்றும், மரணத்தின் சக்தி முற்றிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்றும் காட்டினார். 4. எனவே ஆச்சரியமான மற்றும் திகைப்பூட்டும் ஒன்று நடந்துள்ளது; ஏனென்றால், அவர்கள் அவமானமாக ஏற்படுத்த நினைத்த மரணம், உண்மையில் மரணத்திற்கு எதிரான வெற்றியின் நினைவுச்சின்னமாக மலர்ந்தது. தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட யோவானைப் போல அவர் இறக்கவில்லை, ஏசாயாவைப் போல பாதியாக வெட்டப்பட்டு கொல்லப்பட்டதுபோல் அவர் மரணிக்கவில்லை. அதற்கு பதிலாக, திருச்சபையைப் பிரிக்க இதை ஒரு காரணமாக எவரும் பயன்படுத்த முடியாதபடி, மரணத்திலும் அவர் தனது உடலை முழுமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருந்தார்.
25. அவர் ஏன் சிலுவையில் மரித்தார்? (1) அவர் நமக்காக சாபத்தை ஏற்றுக்கொண்டார். (2) சிலுவையில், யூதர்கள் மற்றும் யூதரல்லாத அனைவரையும் தன்னோடு ஒன்றிணைக்க அவர் தனது கரங்களை நீட்டினார். (3) அவர் தங்கள் சொந்த பிரதேசத்தில் இருந்த தீய சக்திகளை வென்று, பரலோகத்திற்கு ஒரு பாதையை உருவாக்கி நமக்கு நித்திய வாழ்வுக்கான கதவுகளைத் திறந்தார்
தங்கள் சொந்த நலனுக்காக வாதங்களை குவிக்கும் அநாகரிகமானவர்களுக்கு இது ஒரு பதிலாகும். அதாவது, எங்கள் குழுவில் யாராவது இயேசு ஏன் சிலுவையில் உயிர் நீத்தார் என்று வாதிடாமல் இருக்கக் கற்றுக்கொள்ளக் கேட்கப்பட்டால், இதுவே நமக்குச் சிறந்த வழி என்பதை நாம் விளக்க வேண்டும். கர்த்தர் இந்த வழியில் துன்பப்படுவதைத் தேர்ந்தெடுத்தது நமக்கு நல்லது. 2. நம் மீது சுமத்தப்பட்ட களங்கத்தை அவர் ஏற்றுக்கொள்ள வந்திருந்தால், அல்லது சாபத்திற்காக விதிக்கப்பட்ட மரணத்தை அவர் ஏற்றுக்கொண்டிரா விட்டால், அவர் எப்படி (கலாத்தியர் 3:13) ஒரு சாபமாக மாறியிருக்க முடியும்? அதுதான் சிலுவை. இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது: மரத்தில் தொங்கவிடப்பட்டவன் சபிக்கப்பட்டவன் என்று உபாகமம் 21:23 இல் கூறப்பட்டுள்ளது. 3. கர்த்தருடைய மரணம் அனைவரின் மீட்பாக இருந்ததால், அவருடைய மரணத்தால் பிரிவினையின் நடுச்சுவர் (எபேசியர் 2:14) உடைக்கப்பட்டு, தேசங்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்காது, அவை ஒன்றுபடாமல் இருந்திருந்தால், அவர் சிலுவையில் அறையப்படாவிட்டால், அவர் நம்மை எப்படி அவரிடம் அழைத்திருப்பார்? ஏனென்றால், சிலுவையில் மட்டுமே ஒரு மனிதன் தன் கைகளை விரித்து இறக்கிறான். எனவே, யூத மக்களையும் புறஜாதியினரையும் ஒன்றிணைக்க, அவர்களைத் தன்னில் இணைத்துக்கொள்ள, தனது கைகளை விரித்து அவர்களைத் தன்னுடன் இணைக்க இயேசு இதைச் செய்தது சரியானது தான். 4. அவர் இறக்கும் வழியில், அனைவரையும் இரட்சிப்பார் என்று அவர் கூறினார். அவர் உயர்த்தப்படும்போது, எல்லா மக்களையும் தம்மிடம் கொண்டு வருவார் என்று அவர் குறிப்பிட்டார் (யோவான் 12:32). 5. பரலோகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நமது எதிரியான பிசாசு, நம் உலகில் சுற்றித் திரிந்து, கீழ்ப்படியாத பிற ஆவிகளை வழிநடத்தி, கீழ்ப்படியாமையில் தனது சகாக்களைப் போல, தனது சக ஆவிகளை ஆட்சி செய்து, ஏமாற்றப்பட்டவர்களிடம் தங்கள் வழிமுறைகளால் மாயைகளைச் செய்வது மட்டுமல்லாமல், மேலே செல்பவர்களைத் தடுக்கவும் முயற்சிக்கிறான். இதற்கிடையில், பிசாசைத் தோற்கடித்து, நாம் பரலோகத்திற்குச் செல்வதற்கான வழியைத் தெளிவுபடுத்த கர்த்தர் வந்தார். இதை எபிரேயர் 10:20 இல் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது. “இப்போது மிகப் பரிசுத்தமான இடத்தின் வழியை மூடிக்கொண்டிருக்கிற அத்திரைக்குள் நுழைய நம்மிடம் ஒரு புதிய வழி இருக்கிறது. தன் சரீரத்தையே பலியாகத் தந்து அப்புதிய வாழ்வின் வழியை இயேசு திறந்தார்” என்று. இது அவருடைய சிலுவை மரணம் மூலம் நிகழ்ந்தது என்று அப்போஸ்தலர் கூறுகிறார், அது ஆகாயத்தில் நடந்தது. பரிபூரணமான ஒருவர் மட்டுமே சிலுவையில் மரிக்க முடியும் என்பதால், கர்த்தர் இந்த வழியில் மரிப்பதற்கு இது பொருத்தமானது. 6. அவர் உயர்த்தப்பட்டபோது, பிசாசின் தீமையையும் அவனது எல்லா வகையான தீய சக்திகளையும் அகற்றினார். “பிசாசு மின்னலைப் போல வானத்திலிருந்து விழுவதைக் கண்டேன்” என்று அவர் கூறினார். அவர் சொன்னது போல், அவர் பரலோகத்திற்குச் செல்லும் வழியையும் திறந்தார்: “ஓ பிரபுக்களே, உங்கள் வாயில்களை உயர்த்துங்கள், நித்திய கதவுகளே, உயர்த்துங்கள்.” வார்த்தைக்கு வாயில்கள் திறக்க வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் அவர் அனைவருக்கும் ஆண்டவராக இருக்கிறார், அவருக்கு எதுவும் மூடப்படவில்லை. வழி திறக்கப்பட வேண்டியிருந்தது நமக்குத்தான், அவர் நம்மைத் தம்முடைய சொந்த உடலுடன் எடுத்துக்கொண்டார். அவர் எல்லோருக்காகவும் தம்முடைய உயிரைக் கொடுத்தது போல, மீண்டும் பரலோகத்திற்குச் செல்லும் வழியையும் ஆயத்தப்படுத்தினார்.
26. மூன்றாம் நாளில் அவர் உயிர்த்தெழுந்ததற்கான காரணங்கள் பின்வருமாறு: (1) அவர் மரித்தபின் விரைவில் எழுந்திருக்க வில்லையெனில், அது அவரது உண்மையான மரணத்தை மறுக்கக்கூடும். மேலும் (2) பல காரணங்களுக்காக அவர் பின்னர் எழுந்திருக்க முடியாது: (அ) அவரது உடலின் அடையாளத்தைப் பாதுகாக்க, (ஆ) அவரது சீடர்களை அதிக நேரம் சந்தேகத்தில் வைத்திருப்பதைத் தவிர்க்க, மற்றும் (இ) அவரது மரணத்தின் சாட்சிகள் இன்னும் இருப்பதையும் அதன் நினைவு கரைந்துபோய்விடவில்லை என்பதையும் உறுதி செய்வைது போன்றவையே அவை
அப்படியானால், சிலுவை மரணம் நமக்குத் தெளிவாகவும் பொருத்தமான ஒன்று என்று நிரூபிக்கப்பட்டுள்ளதோடு, அதற்கான காரணம் எல்லா வகையிலும் நியாயமானது என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலுவையைத் தவிர வேறு எந்த வழியிலும் அனைவருக்கும் இரட்சிப்பு கிடைப்பது சரியானது என்று கூறுவதும் நியாயமானதாகவே தெரிகிறது. சிலுவையில் கூட அவர் தன்னை மறைத்துக் கொள்ளவில்லை. பதிலாக அவர் தனது சரீரப்பிரகாரமான பிரசன்னத்தையே வெளிப்படுத்தி இருந்தார். அவர் தனது உடல் மரணத்தை ஏற்றுக்கொள்ள அனுமதித்தார், ஆனால் அந்த இறப்பு நீண்ட காலம் நீடித்திருக்க விடவில்லை. மூன்றாம் நாளில் அவர் அவ்வுடலுக்கு மரணத்தில் இருந்து விடுதலை கொடுத்து எழும்பச் செய்தார். இதன்மூலம், அவர் மரணத்தை வென்றார் என்றும், அவரது உடல் இப்போது அழிவு மற்றும் துன்பத்திலிருந்து விடுபட்டுள்ளது என்றும் காட்டினார். 2. இருப்பினும், அவர் இறந்த உடனேயே தனது உடலை உயிர்த்தெழச் செய்து உயிருடன் இருப்பதாகக் காட்டியிருக்க முடியும். ஆனால் இரட்சகர், ஞானம் மிக்க தொலைநோக்குப் பார்வை காரணமாக இதைச் செய்யவில்லை. அப்படி அவர் உடனடியாக உயிர்த்தெழுதலைக் காட்டியிருந்தால், அவர் ஒருபோதும் இறக்கவில்லை அல்லது மரணம் அவரை முழுமையாகப் பாதிக்கவில்லை என்று மக்கள் கூறியிருக்கலாம். 3. இயேசு இறந்து இரண்டு நாட்கள் மட்டுமே கல்லறையில் இருந்து மீண்டும் உயிர்த்தெழுந்திருந்தால், அவரது அழியாத தன்மையின் மகிமை தெளிவற்றதாக இருந்திருக்கும். அவரது உடல் இறந்துவிட்டது என்பதைத் தெளிவாகக் காட்ட, வார்த்தையானவர் கல்லறையில் மேலும் ஒருநாள் தங்கி, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார், இதன்மூலம் அவரது உடல் அழியக்கூடியதல்ல என்பதை நிரூபித்தார். 4. அவர் சிலுவையில் மரித்தார் என்பதை நிரூபிக்க, அவர் தனது உடலை மூன்றாம் நாளில் உயிர்த்தெழச் செய்தார். 5 அவர் இதை உடனடியாகச் செய்ததன் காரணம், மக்கள் அது உண்மையில் அவர்தான் என்று சந்தேகிக்கக்கூடாது, குறிப்பாக நீண்ட காலம் கடந்துவிட்டால் ஒருவர் தான் கண்டதை மறக்கக் கூடும் என்பதால் அவர் இதைச் செய்தார். அவரது உயிர்த்தெழுதலைப் பற்றி அறிந்தவர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை என்பதை அவர் உறுதி செய்ய விரும்பினார். 6. ஆனால் அந்த வார்த்தை அவர்களுடைய காதுகளில் இன்னும் எதிரொலித்துக் கொண்டிருந்த போதிலும், அவர்களுடைய கண்கள் இன்னும் எதிர்பார்ப்பில் காத்திருந்தபோதிலும், அவர்களுடைய மனம் சந்தேகத்தில் அலைபாய்ந்தபோதிலும், அவரைக் கொன்றவர்கள் அப்போதும் உயிருடன் இருந்தபோதிலும், தேவனுடைய குமாரனின் மரித்த உடலைக் கண்ணுற்றபோதிலும், மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் ஒரு காலத்தில் மரித்து, ஆனால் இப்போது உயிருடன் மற்றும் பரிபூரணமாக இருந்த தனது சரீரத்தைக் காட்டியது எல்லோருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவருடைய சரீரம் எந்த பலவீனம் காரணமாகவும் இறக்கவில்லை. ஆகவே இரட்சகரின் வல்லமையால் மரணத்தைத் தோற்கடிக்க முடியும் என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்தது.
27. மனிதனுக்கும் மரணத்திற்கும் இடையிலான தொடர்பில் சிலுவை கொண்டு வந்த மாற்றம்
மரணம் சிலுவையால் தோற்கடிக்கப்பட்டுவிட்டது என்பதை சிலுவையின் வெற்றி குறிக்கிறது. அதற்கு இனி சக்தி இல்லை, அது உண்மையிலேயே இறந்துவிட்டது. கிறிஸ்துவின் சீடர்கள் அனைவரும் மரணத்தை நிராகரித்து இனி அதுகுறித்து அச்சம் கொள்ளவேண்டியதில்லை என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. அதற்கு பதிலாக, அவர்கள் தைரியமாக அதை எதிர்த்து நின்றனர். சிலுவையின் அடையாளத்தையும் கிறிஸ்துவின் மீதான தங்கள் விசுவாசத்தையும் பயன்படுத்தி அது ஏற்கனவே இறந்துவிட்டது போல் எண்ணி அதை உதாசீனம் செய்தனர். 2. நீண்ட காலத்திற்கு முன்பு இரட்சகரின் தெய்வீக யாத்திரை நிகழ்ந்தபோது புனிதர்களுக்குக் கூட மரணம் பயங்கரமாக இருந்தது, அவர்கள் அனைவரும் இறந்தவர்களுக்காக அவர்கள் சதாகாலத்துக்கும் இனிமேல் வரப்போவதில்லை என்றெண்ணி அழுது புலம்பினர். ஆனால் இப்போது இரட்சகர் உயிர்த்தெழுந்ததால் மரணம் இனி பயங்கரமானது அல்ல என்றும், கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் மரணத்தை ஒரு பூஜ்ஜியமாகக் கருதுகிறார்கள் என்றும், கிறீஸ்துவின் மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை கைவிடுவதை விட இறப்பதே மேல் என்று எண்ணினர். ஏனென்றால், அவர்கள் இறக்கும்போது அவர்கள் அழிந்து போவதில்லை என்றும், உண்மையில் வாழ்க்கையின் ஒரு புதிய அத்தியாயத்துக்குள் நுழைகிறார்கள் என்றும், உயிர்த்தெழுதலின் மூலம் அழியாதவர்களாக மாறுகிறார்கள் என்பதையும் அவர்கள் உண்மையிலேயே அறிந்துகொண்டனர். 3. ஒரு காலத்தில் மரணத்தில் மகிழ்ச்சி அடைந்த பிசாசு, இப்போது உண்மையிலேயே முடக்கப்பட்டு விட்டான். மக்கள் கிறிஸ்துவை நம்புவதற்கு முன்பு, அவர்கள் மரணத்திற்கு பயந்து கோழைத்தனமாக நடந்து கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் கிறிஸ்துவின் போதனைகளை ஏற்றுக்கொண்ட பிறகு, அவர்கள் இனி மரணத்திற்கு அஞ்சுவதில்லை என்றும், அதை தைரியமாக எதிர்கொண்டு, கிறிஸ்துவின் வெற்றிக்கு சாட்சிகளாக மாறுவதாகவும் உறுதிபூண்டிருந்தனர். ஆண்கள் மற்றும் பெண்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் மரணத்தை எதிர்கொள்ள ஆர்வம் கொண்டவர்களாக இருந்தனர். அதற்கு எதிராக தங்கள் உடல்களை வலிமையாக வைத்துக்கொள்ள பயிற்சிகளை மேற்கொண்டிருந்தனர். பிசாசு மிகவும் பலவீனமாகிவிட்டதால், ஒரு காலத்தில் அவனால் தவறாக வழிநடத்தப்பட்ட பெண்கள் கூட இப்போது அவன் சக்தியற்றவன் ஆகிவிட்டபடியால் அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தனர். 4. ஒரு கொடூர ஆட்சியாளர் ஒரு நேர்மையான மன்னனால் தோற்கடிக்கப்பட்டு சிறை பிடிக்கப்பட்டால், அவரைப் பார்க்கும் அனைவரும் அவரைக் கேலியும் கிண்டலும் செய்வர். ஏனென்றால் அவர்கள் இனி அவருடைய கோபத்திற்கு அஞ்சப்போவதில்லை. இதேபோல், சிலுவையில் இரட்சகரால் மரணம் தோற்கடிக்கப்பட்டு இப்போது சக்தியற்றதாக இருப்பதால், கிறிஸ்துவை நம்புபவர்கள் மரணத்தை நம்பிக்கையுடன் நடந்து செல்ல முடியும். மரணத்தை கேலி செய்து, “ஓ மரணமே, உன் வெற்றி எங்கே? ஓ கல்லறையே, உன் பிடி எங்கே?” என்று கேட்க முடியும்.
28. இந்த முக்கியமான கருத்தை அனுபவத்தின் மூலம் நிரூபிக்க வேண்டும். உறுதியாக தெரியாதவர்கள் கிறிஸ்தவர்களாக மாற முயற்சிக்க வேண்டும்
அப்படியானால், இது மரணத்தின் பலவீனத்திற்கு ஒரு சிறிய சான்றாகக் கொள்ளலாமா? அல்லது கிறிஸ்துவுக்குள் இருக்கும் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் இந்த வாழ்க்கையின் மீது விரக்தி அடைந்து மரணத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராவது இரட்சகர் மரணத்தின் மீது அடைந்த வெற்றியின் ஒரு சிறிய எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்ளலாமா? 2. மக்கள் இயல்பாகவே மரணத்திற்கும் தங்கள் உடல்களை அழிவடைந்து விடும் என்றும் பயப்படுகிறார்கள். இருப்பினும், சிலுவையை நம்புபவர்கள் கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையில் பலம் பெறுவதால், மரணத்திற்கு அஞ்சுவதில்லை என்பது ஆச்சரியமான ஒரு உண்மை. 3. நெருப்புக்கு இயற்கையாகவே எரிக்கும் தன்மை இருப்பது போல, நெருப்புக்கு அஞ்சாத ஒரு பொருள் இருப்பதாக யாராவது சொன்னால், அப்பொருளின் முன் நெருப்பு பலவீனமானதாக இருக்கும் என்று யாராவது கூறினால், இந்தியர்கள் தயாரிக்கும் கல்நார் என்ற தகடுகள் எவ்வாறு நெருப்புக்கு தாக்குப்பிடிக்கின்றன என்பதை சோதித்தறிய வேண்டுமானால், அதைத் தொட்டுப்பார்க்கலாம். தீயணைப்புத் துறையில் பயன்படுத்தப்படும் தீப்பிடிக்காத அங்கிகளை அணிந்து தீயைத் தொடுவதன் மூலம், தீ அந்த அங்கிகளின் முன் உண்மையில் பலவீனமானது என்பதை அவர்களே உணர்வார்கள். 4. ஒரு கொடுங்கோல் ஆட்சியாளன் பிடிபட்டதை யாராவது பார்க்க விரும்பினால், அவர்கள் அந்த கொடுங்கோலனை வென்றவரின் நாட்டிற்குச் சென்று, ஒரு காலத்தில் அஞ்சப்பட்ட இந்த மனிதன் இப்போது எப்படி பலவீனமாக இருக்கிறான் என்பதைக் காணலாம். கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களிடமிருந்து விசுவாசம் மற்றும் துணிச்சலைக் கண்ட பிறகும், எத்தனை பேர் பயமின்றி மரணத்தை எதிர்கொண்டார்கள் என்பதைக் கவனித்த பிறகும், ஒருவர் இன்னும் சந்தேகத்துடன் இருந்தால், அப்படிப்பட்டவர் அத்தகைய குறிப்பிடத்தக்க விஷயத்தில் ஆர்வமாக இருப்பது புரிந்துகொள்ளத்தக்கது. இருப்பினும், அவர்கள் தங்கள் முன் உள்ள தெளிவான ஆதாரங்களை நம்பவோ அல்லது புறக்கணிக்கவோ பிடிவாதமாக மறுக்கக்கூடாது. 5. கல்நாரினால் ஆன தகடுகளையோ பொருளையோ வைத்திருப்பவருக்கு நெருப்பினால் அவற்றுக்கு ஆபத்தை உண்டாக்க முடியாது என்பது நன்கு தெரியும், ஒரு கொடுங்கோல் ஆட்சியர் தோற்கடிக்கப்படுவதைக் காண விரும்பும் ஒருவர் வெற்றியாளரின் பக்கம் சேரலாம் என்பது போல, மரணத்தின் மீதான வெற்றியை சந்தேகிக்கும் ஒருவர் கிறிஸ்துவின் நம்பிக்கையை ஏற்றுக்கொண்டு அவரது போதனைகளிலிருந்து கற்றுக்கொள்ளும்போது, மரணம் பலவீனமானது அதை வெல்ல முடியும் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். ஒரு காலத்தில் சந்தேகித்து கேலி செய்த பலர் பின்னர் விசுவாசித்து, மரணத்தை ஏளனமாகப் பார்த்து, கிறிஸ்துவுக்காகத் தங்களை வேதசாட்சிகளாக்கிக்கொண்டனர்.
29. சூரிய உதயம் நமக்கு பகல் வெளிச்சம் இருப்பதைக் காட்டுவது போல, நாம் காணும் அற்புதமான விளைவுகளுக்கு சிலுவை ஒரு சக்திவாய்ந்த காரணமாக இருக்கிறது
சிலுவையின் அடையாளமும் கிறிஸ்துவின் மீதான விசுவாசமும் மரணத்தை வெல்லக்கூடியவை என்றால், கிறிஸ்துவே மரணத்தின் மீது வெற்றிகளைப் பெற்று அதை சக்தியற்றதாக்கியுள்ளார் என்பது தெளிவாகிறது. 2. ஆரம்பத்தில் மரணம் சக்திவாய்ந்ததாகவும் அச்சமூட்டுவதாகவும் இருந்தது, ஆனால் இரட்சகர் பூமியில் வாழ்ந்த காலத்திற்கும், அவரது மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்கும் பிறகு, அது பற்றி இனி பயம்கொள்ள வேண்டியதில்லை. சிலுவையில் மரித்த கிறிஸ்து மரணத்தை முற்றிலுமாக தோற்கடித்துவிட்டார் என்பது இதனால் தெளிவாகிறது. 3. இரவுக்குப் பிறகு சூரியன் உதிக்கும்போது, அது முழு பூமியையும் ஒளிரச் செய்கிறது. மேலும் சூரியன் ஒளியைக் கொண்டு வந்து இருளை விரட்டுகிறது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இதேபோல், இரட்சகர் மனித உருவில் தோன்றி சிலுவையில் மரித்த காலந்தொட்டு மரணம் அதன் சக்தியை இழந்துவிட்டது. மானிட உருவில் வந்த இரட்சகர் மரணத்தை வென்று அதன் மீதான தனது வெற்றியை ஒவ்வொரு நாளும் தம்மைப் பின்பற்றுபவர்கள் மூலம் வெளிப்படுத்துகிறார் என்பது இங்கே தெளிவாகிறது. 4. மனிதர்கள் இயற்கையாகவே பலவீனமானவர்கள். பின்னாளில் வரவிருக்கும் விளைவுகளுக்கு பயப்படாமல் தைரியமாக மரணத்தை எதிர்கொண்டு, பூமியில் வாழ்வதற்குப் பதிலாக கிறிஸ்துவில் தாங்கள் கொண்டுள்ள விசுவாசத்திற்காக சித்திரவதைகள் மற்றும் கடும் துன்பங்களை விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ளும் மக்களை நாம் பார்க்கும்போது, அல்லது கிறிஸ்துவில் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்காக ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மரணத்தை நோக்கி விரைவதைப் பார்க்கும்போது, அவர்கள் விசுவாசிக்கும் கிறிஸ்து, மரணத்தை வெல்லும் வலிமையை அவர்களுக்கு அளிக்கிறார் என்பதை உணர முடியாத அளவுக்கு முட்டாள்களாகவோ சந்தேகம் கொண்டவர்களாகவோ அல்லது மனதில் குழப்பமுடையவர்களாகவோ இருக்கலாம். அவர் மீது நம்பிக்கை வைத்து சிலுவையின் அடையாளத்தை சுமக்கும் அனைவரிடமிருந்தும் அதன் சக்தியை அவர் இலகுவாகச் செய்கிறார். 5. குழப்பம் மிகுதியால் அல்லது தெளிவாக சிந்திக்காமலோ இருந்தாலே தவிர, ஒரு பாம்பை மிதித்தவுடன் அது அசைவற்றுக் கிடந்தால், அது முன்பு எவ்வளவு கொடூரமானதாக இருந்திருக்கும் என்பதையும், அது இறந்துவிட்டதா அல்லது அதன் சக்தியை இழந்து விட்டதா என்பது குறித்து எவ்வித சந்தேகமும் கொள்ளத்தேவையில்லை. இதேபோல், குழந்தைகள் ஒரு சிங்கத்துடன் விளையாடுவதை யாராவது பார்க்கும்போதுதான், சிங்கம் இறந்துவிட்டதா அல்லது அதன் அனைத்து சக்தியையும் இழந்துவிட்டதா என்று அவர்களால் சொல்ல முடியும். 6. இந்த உண்மைகளை நம் கண்களால் காண முடிவது போல, கிறிஸ்துவில் விசுவாசம் கொள்பவர்களால் மரணம் ஏளனம் செய்யப்பட்டு வெறுக்கப்படுவதால், கிறிஸ்துவால் மரணம் அழிக்கப்பட்டு, மரணத்தினால் ஏற்படும் அழிவு நிறுத்தப்பட்டு, தெய்வீக வாழ்வு நிலைத்துவிட்டது என்பதில் யாரும் இனி சந்தேகம் கொள்ளவோ நம்பிக்கை இழந்தவர்களாகவோ இருக்கக்கூடாது.
30. உயிர்த்தெழுதலின் உண்மை ஆதாரங்கள் ஊடாகக் காட்டப்படுகிறது: (1) முன்னர் குறிப்பிடப்பட்ட மரணத்தின் மீதான வெற்றி: (2) கிருபையின் அற்புதமான செயல்கள் உயிருள்ள ஒருவரிடமிருந்தே வருகின்றன, அவரே கடவுள்: (3) தெய்வங்கள் (கூறப்படுவது போல்) உண்மையானவை மற்றும் உயிருள்ளவை என்றால், மேலும் அதிகமாக, அவற்றின் சக்தியை அழிப்பவர் உயிருள்ளவரான தேவனே
நாம் இதுவரை விவாதித்தவரை, மரணம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது என்பதையும், கர்த்தருடைய சிலுவை அதன் மீதான வெற்றியின் அடையாளத்தைக் குறிக்கிறது என்றும் அறிந்தோம்.குறிப்பாக தெளிவாக சிந்திப்பவர்களுக்கு, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கும் நித்திய ஜீவனின் வாக்குறுதிக்குமான ஆதாரம், வாதங்களை விட உண்மையான நிகழ்வுகள் மூலம் தெளிவாக இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. 2. எங்கள் வாதம் சரியாக இருந்தால், கிறிஸ்துவின் நிமித்தம் மரணம் தோற்கடிக்கப்பட்டிருந்தால், எல்லோராலும் அதை வெல்ல முடியும். கிறிஸ்து முதலில் தனது சொந்த சரீரத்தால் மரணத்தை தோற்கடித்து, அதை சக்தியற்றதாக மாற்றினார். அவர் மரணத்தை தோற்கடித்ததால், அடுத்து நடக்கக்கூடிய ஒரே விஷயம் யாதெனில், அவர் மரணத்தை வென்றார் என்பதை நிரூபிக்கும் விதத்தில் அவரது உடல் மீண்டும் உயிர்த்தெழும். கர்த்தருடைய சரீரம் உயிர்த்தெழவில்லை என்றால் மரணம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது என்பதை நாம் எப்படி அறிந்து கொள்ள முடியும்? உயிர்த்தெழுதலுக்கான இந்த ஆதாரம் போதாது என்று யாராவது நினைத்தால், அவர்கள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை நன்றாகக் பார்க்க வேண்டும். 3. ஒரு மனிதன் இறந்தவுடன் அவனால் எந்த சக்தியையும் வெளிப்படுத்த முடியாது. அவனுடைய செல்வாக்கு கல்லறை வரை மட்டுமே நீடிக்கும், அதன் பிறகு ஓய்ந்துவிடும். செயல்களும் மனிதர்கள் மீதான அதிகாரமும் உயிருள்ளவர்களுக்கு மட்டுமே சொந்தமானது. தாங்களாகவே பார்த்து முடிவு செய்ய விரும்பும் எவரும் அவர்களுக்குத் தெரியும் அடிப்படையில் உண்மையை ஒப்புக்கொள்ளட்டும். 4. இரட்சகர் மக்களிடையே அற்புதமான காரியங்களைச் செய்து, கிரேக்கம் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த பலரை அமைதியாக அவருடைய விசுவாசத்தையும் போதனைகளையும் பின்பற்ற ஊக்குவித்து வருவதால், இரட்சகர் உயிர்த்தெழுந்தார் என்றும், கிறிஸ்து உயிருடன் இருக்கிறார் என்றும், அவர் மக்களது வாழ்க்கைக்கு ஆதாரமாய் இருக்கிறார் என்பதையிட்டு எவரேனும் சந்தேகம் கொள்ள முடியுமா? 5. ஒரு இறந்துபோன மனிதன் பிறரைக் குற்ற உணர்ச்சியடையச் செய்வது போல, அவர்கள் தங்கள் பழைய நம்பிக்கைகளைப் புறக்கணித்து கிறிஸ்துவின் போதனைகளைப் பின்பற்றுகிறார்களா? அவர் உயிருடன் இல்லை என்றால் (இறந்தவர்களுக்கு இதுதான் நடக்கும்), உயிருடன் இருப்பவர்கள் ஏமாற்றுதல் அல்லது கொலை செய்தல் போன்ற கெட்ட காரியங்களைச் செய்வதிலிருந்து தடுத்து எவ்வாறு அவர்களை சிறப்பாகச் செயல்பட வைப்பார்? அவர் இறந்துவிட்டார் என்றால், விசுவாசிகள் அல்லாதவர்கள் உயிருடன் இருப்பதாக நினைக்கும் போலியான கடவுள்களையும், அவர்கள் வணங்கும் சாத்தானின் துர்க்கிரிகளையும் அவர் எவ்வாறு எதிர்த்து நின்று தோற்கடிப்பார்? 6. கிறிஸ்துவின் திருநாமமும் அவரது விசுவாசமும் எங்கெங்கு இருக்கிறதோ, அங்கே இருக்கும் எல்லா விக்கிரகாராதனையும் தீய ஆவிகளின் சகல வஞ்சகங்களும் வெளியேற்றப்படுகின்றன. எந்த ஆவியும் தங்கள் பெயர்களைச் சொல்வதைக் கூடத் தாங்க முடியாமல், அதைக் கேட்கத் தொடங்கியவுடன் தெறிகெட்டு ஓடி மறைந்துவிடும். ஆனால் இது இறந்த ஒருவரால் மேற்கொள்ளப்படும் செயல் அல்ல, உயிருள்ள ஒருவரால் மேற்கொள்ளப்படும் செயல் – குறிப்பாக கடவுளின் செயல். 7. அவர் விரட்டியடிக்கப்படும் அசுத்த ஆவிகளும், சக்தியற்றதாக செய்யப்பட்ட சிலைகளும் உயிருடன் இருப்பதாகக் கூறுவது அபத்தமானது. அதே நேரத்தில், அவற்றை அகற்றி, அவை தோன்றுவதைத் தடுத்து, அவர்கள் அனைவராலும் கடவுளின் மகன் என்று அங்கீகரிக்கப்பட்டவரும் மறுத்துவிட்டார் என்று கூறுவதும் அபத்தமானதாகும்.
31. வல்லமை என்பது வாழ்க்கையின் அடையாளம் என்றால், நன்மைக்கோ தீமைக்கோ சிலைகளின் இயலாமையிலிருந்தும், கிறிஸ்துவின் கட்டுப்படுத்தும் சக்தியிலிருந்தும், சிலுவை அடையாளத்திலிருந்தும் நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? இதன் மூலம் மரணமும் பிசாசுகளும் தங்கள் இறையாண்மையை இழந்துவிட்டன என்பது நிரூபணமாகிறது. மேலே குறிப்பிடப்பட்ட உண்மைகள் கிறிஸ்துவின் தன்மையுடன் வலுவாகப் பொருந்துகின்றன
ஆனால் உயிர்த்தெழுதலை நம்பாதவர்கள் தங்களுக்கு எதிராக ஒரு வலுவான சான்றைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இறந்து விட்டதாகக் கூறும் கிறிஸ்துவை நிராகரித்து வணங்கும் ஆவிகள் மற்றும் கடவுள்களுக்குப் பதிலாக, கிறிஸ்து அந்த ஆவிகள் மற்றும் போலிக் கடவுள்கள் அனைவரும் இறந்துவிட்டதாகக் காட்டுகிறார். 2. இறந்த ஒருவரால் எதையும் செய்ய முடியாது என்பது உண்மை என்றால், இரட்சகர் ஒவ்வொரு நாளும் செய்யும் பல விடயங்களை நாம் எவ்வாறு விளக்க முடியும்? அவர் மக்களை மத நம்பிக்கைக்குள் ஈர்த்து வந்து, அவர்களை நல்வழியில் வாழ வழிகாட்டுகிறார். மரணத்திற்குப் பிறகு வாழ்க்கையைப் பற்றி கற்பிப்பதோடு, பரலோகம் தொடர்பான விருப்பத்தைத் தூண்டி, கடவுளைப் பற்றிய அறிவை வெளிப்படுத்தி, மரணத்தை எதிர்கொள்ள வலிமை அளித்து, மனிதர்களுக்குத் தன்னைக் காட்டி, சிலை வழிபாட்டின் தவறான நம்பிக்கைகளை தகர்க்கிறார். போலி நம்பிக்கை கொண்டோரின் சிலைகள் மற்றும் ஆவிகள் இவை எதையும் செய்ய முடியாது; அவை கிறிஸ்துவின் முன்னிலையில் சக்தியற்றதாகத் தோன்றுகின்றன. சிலுவையின் சக்தி அனைத்து மந்திரங்களையும் சூனியங்களையும் சக்தியிழக்கச் செய்கிறது. இதன்மூலம், மக்கள் சிலைகளை விட்டு விலகி தங்கள் ஆசைகளைக் கட்டுப்படுத்தி, அதற்கு பதிலாக மோட்சத்தை நோக்கிப் பார்க்கிறார்கள். அப்படியானால், நாம் யாரை இறந்தவராகக் கருத வேண்டும்? பல நல்ல செயல்களைச் செய்யும் கிறிஸ்துவையா அல்லது சக்தியற்ற மற்றும் உயிரற்ற நிலையில் கிடக்கும் சிலைகளையா? 3. தேவனுடைய குமாரன் உயிருள்ளவராகவும், செயலாற்றல் உள்ளவராகவும் இருக்கிறார். இதுகுறித்து, எபிரெயர் 4:12 , “தேவனுடைய வார்த்தையானது எப்பொழுதும் உயிரோடு இருப்பதும், செயல்படுவதுமாகும். அது இரு புறமும் கூரான வாளைவிட மிகவும் கூர்மையானது. அது ஆன்மாவையும், ஆவியையும், எலும்புகளையும், கணுக்களையும் வெட்டிப் பிரிக்கிறது. அது நம் உள்ளான மனதின் எண்ணங்களையும், நம் இதயம் கொண்டுள்ள கருத்துக்களையும் நியாயம் தீர்க்கிறது” என்று சாட்சி பகர்கிறது. இதில் மேலும் சொல்லப்படுவது என்னவென்றால், கர்த்தர் அனைவரையும் இரட்சிக்க ஒவ்வொரு நாளும் அயராது பாடுபடுகிறார் என்பதையும், மரணத்துக்கு இனி எந்த சக்தியும் இல்லை என்பதையும் இது காட்டுகிறது. மேலும் கிறிஸ்துவைப் போலல்லாமல் சிலைகளும் ஆவிகளும் அழிந்துபோய்விட்டன. இதன் நிமித்தம், அவரது சரீரப்பிரகாரமான உயிர்த்தெழுதலை யாரும் சந்தேகிக்க முடியாது. 4. ஆனால் கர்த்தருடைய சரீரத்தின் உயிர்த்தெழுதலை நம்பாதவன், வார்த்தையின் வல்லமையையும் கடவுளின் ஞானத்தையும் அறியாதவனாகவே இருப்பான். இயேசு சரீரப்பிரகாரமான ஒரு வடிவத்தை எடுத்தால், அதை அவர் என்ன செய்ய வேண்டும்? உடல் மரணத்திற்குரியதாக இருந்ததால், உடலால் அனைவருக்காகவும் இறக்க வேண்டியிருந்தது. அதனால்தான் இரட்சகர் ஒரு சரீர வடிவினை எடுத்தார். இருப்பினும், அது உயிருள்ள உடலாக உருவாக்கப்பட்டதால் அது இறந்து போக முடியாது. எனவே, அது எந்த சாதாரண மரணத்துக்குரிய உடலையும் போல இறந்தாலும், அதற்குள் இருந்த உயிர் காரணமாக அது மீண்டும் உயிர் பெற்ற காரணத்தால், அதன் உயிர்த்தெழுதலின் அறிகுறிகள் இந்த உண்மையைக் காட்டுகின்றன.
32. ஆனால் நம்புவதற்கு அவர் உயிர்த்தெழுந்ததை எவரால் பார்க்க முடியும்? கடவுள் எப்போதும் கண்ணுக்குத் தெரியாதவர், அவருடைய செயல்கள் மூலம் மட்டுமே அவரை நாம் அறிய முடியும். அவரது கிரியைகள் தான் அவரது பிரசன்னத்தைத் தெளிவாகக் காட்டுகிறன. நீங்கள் நம்பவில்லை என்றால், நம்புபவர்களைப் பாருங்கள், அவர்கள் கிறிஸ்துவின் தெய்வீகத்தை அங்கீகரிக்கிறார்கள். மக்கள் அதைக் கண்டு காணாதவர்கள் போல் இருந்தாலும், பிசாசுகள் கூட இந்த உண்மையை ஏற்றுக்கொள்கின்றன. இது இதுவரை நடந்த விவாதத்தை இந்தப் பத்தி சுருக்கமாகக் கூறுகிறது
மக்கள் அவரைப் பார்க்க முடியாததால் அவர் உயிர்த்தெழுந்தார் என்று நம்பாத பட்சத்தில், அவர்கள் இயற்கை ஒழுங்கையும் மறுக்க வேண்டும் அல்லவா? முன்னர் குறிப்பிட்டபடி, கடவுள் கண்களுக்குப் புலப்படாதவராக இருந்தபோதிலும், அவரது படைப்புகள் மூலம் அங்கீகரிக்கப்பட்டவராக இருப்பது அவருக்கு மட்டுமே உரியது. 2. ஆதாரம் இல்லையென்றால், கண்ணுக்குப் புலப்படாததை சந்தேகிப்பது நியாயமானது. ஆனால் ஆதாரம் தெளிவாகவும் வெளிப்படையாகவும் இருக்கும்பட்சத்தில், உயிர்த்தெழுதலிலிருந்து வரும் வாழ்வை மக்கள் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்? அவர்களின் புரிதல் குறைவாக இருந்தாலும், கிறிஸ்துவின் மறுக்க முடியாத சக்தியையும் தெய்வீகத்தையும் மக்கள் தங்கள் கண்களால் இன்னும் பார்க்க முடிகிறது. 3. ஒரு பார்வையற்றவனால் கூட சூரியன் இருப்பதை அறியமுடியும், ஏனென்றால் அவனால் அதன் கதகதப்பை உணர முடியும். இதேபோல், சத்தியத்தை இன்னும் நம்பாத நம் விரோதிகள் விசுவாசிக்கிறவர்கள் மூலம் கிறிஸ்துவின் சக்தியை அறிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். கிறிஸ்து தெய்வீகமானவர் என்பதையும், அவர் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதையும் அவர்கள் மறுக்கக்கூடாது. 4. கிறிஸ்து இறந்திருந்தால், அவரால் பிசாசுகளை விரட்டவோ அல்லது சிலைகளை தோற்கடிக்கவோ முடியாது என்பது தெளிவாகிறது. ஏனென்றால் ஆவிகள் இறந்த ஒருவரின் பேச்சைக் கேட்பதில்லை. பிசாசுகள் அவரது திருநாமத்தினால் விரட்டப் படுவதால், அவர் உயிருடன் இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. மனிதர்களால் பார்க்க முடியாததை ஆவிகளால் பார்க்க முடியும். எனவே கிறிஸ்து இறந்துவிட்டாரா இல்லையா என்பதை அவை அறிந்து கொள்ளும், ஆனாலும் அவை அவருக்குக் கீழ்ப்படிய மாட்டாது. 5. ஆனால், மதநம்பிக்கையற்ற மக்கள் நம்பாததை, ஆவிகள் – அவர் கடவுள் என்பதை – விசுவசிக்கின்றன. அதனால் அவை ஓடிச் சென்று அவரது காலடியில் விழுந்து, அவர் உயிருடன் இருந்தபோது சொன்ன அதே விஷயங்களைச் சொல்கின்றன: “நீர் யார், கடவுளின் பரிசுத்தர், நீர் யார் என்பதை நாங்கள் அறிவோம்; மேலும், கடவுளின் குமாரனே, உமக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்? தயவுசெய்து எங்களை வேதனைப் படுத்தாதீர்” என்று கூறியதற்கு சான்றுகள் உள்ளன. 6. பிசாசுகள் கூட அவரை ஒப்புக்கொள்கின்றன, மேலும் அவரது தெய்வீகக் கிரியைகள் அனுதினமும் அவர் யார் என்பதை நிரூபிக்கின்றன. இரட்சகர் தனது சொந்த உடலை உயிர்பெற்றெழச் செய்தார். மேலும் அவர் கடவுளின் உண்மையான ஏக சுதனாக இருக்கிறார். அவருடைய பிதாவின் சொந்த வார்த்தையிலிருந்தும், ஞானத்திலிருந்தும், வல்லமையிலிருந்தும் கர்த்தர் அவதரித்தார் என்பது தெளிவாகிறது. பின்னர், அவர் அனைவரையும் இரட்சிக்க ஒரு மனித உடலை எடுத்து, உலகிற்கு வந்து பிதாவைப் பற்றிக் கற்பித்தது மட்டுமன்றி, மரணத்தை வென்று, உயிர்த்தெழுதல் மூலம் நித்திய வாழ்வுக்கு உறுதியளித்தார். இதற்கு முதல் உதாரணமாக அவர் தம்முடைய சொந்த உடலை உயிர்பெற்றெழச் செய்து, மரணம் மற்றும் சிதைவின் மீதான வெற்றியின் அடையாளமாக அவரது சரீரத்தை சிலுவையில் எல்லோரும் பார்க்கும்படி செய்தார்.
33. யூதர்களின் அவநம்பிக்கை மற்றும் கிரேக்கர்களிடமிருந்து வந்த ஏளனம்; கடவுளாகவும் மனிதனாகவும் அவர் வருவார் என்று முன்னறிவித்த தங்கள் சொந்த புனித நூல்களால் யூதர்கள் குழப்பமடைந்தனர்
இவையெல்லாம் இப்படியிருக்க, இரட்சகரின் சரீரம் உயிர்த்தெழுப்பப் பட்டத்தையும் அவர் மரணத்தை வென்றார் என்பதையும் நாம் தெளிவாகக் காட்டியிருப்பதால், யூதர்களின் அவநம்பிக்கையையும், புறஜாதியினரின் ஏளனத்தையும் இப்போது கண்டனத்துக்கு உள்ளாக்க முடியும். 2. சில யூதர்களுக்கு இதை நம்புவது கடினமாக இருக்கலாம். அதே நேரத்தில் யூதரல்லாதவர்கள் சிலுவை மற்றும் கடவுள் மனிதனாக அவதாரம் எடுப்பது பற்றிய கருத்தை ஏளனம் செய்யவும் விமர்சிக்கவும் கூடும். இருப்பினும் எங்கள் கருத்தை ஆதரிக்க தெளிவான ஆதாரங்கள் இருப்பதால், அவர்களுடன் வாதிடுவதில் நாங்கள் அதிக நேரம் செலவிடுவதால் அர்த்தமில்லை. 3. யூதர்கள் சந்தேகிக்கலாம், ஆனால் அவர்கள் படிக்கும் வேதவசனங்களால் அவர்களின் சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும். ஏனெனில் அவர்களும் அவற்றைப் படிக்கிறார்கள். சம்பந்தப்பட்ட வேதவசனங்கள் அனைத்தும் இந்த விஷயங்களைப் பற்றி தெளிவாகப் பேசுகின்றன. தீர்க்கதரிசிகள் அற்புதமான கன்னி மற்றும் அவளுடைய பிறப்பு பற்றி முன்பு பேசினார்கள்: த்தேயு 1:23 மற்றும் ஏசாயா 7:14 இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, “பாருங்கள், கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாள், அவரை இம்மானுவேல் என்று அழைப்பார்கள், அதாவது கடவுள் நம்மோடு” என்று பொருள்படும்படி அவரை அழைப்பார்கள். மரியாதையுடன் போற்றப்படுபவரும் உண்மையைப் பேசுவதாக நம்பப்படும் மோயீசன், இரட்சகர் ஒரு மனிதனாக மாறுவதைப் பற்றி எழுதினார். சொல்லப்பட்டவை முக்கியமானவை மற்றும் உண்மை என்று அவர் நினைத்தார், எனவே அவர் அதை எண்ணாகமம் 24:5-17 இல் பதிவு செய்தார் யாக்கோபிலிருந்து ஒரு நட்சத்திரம் உதிக்கும், இஸ்ரவேலிலிருந்து ஒரு மனிதன் வருவார், மோவாபின் தலைவர்களை அவர் தோற்கடிப்பார். மேலும் அவர் கூறும்போது, யாக்கோபே, உன் வீடுகள் எவ்வளவு அழகாக இருக்கின்றன, இஸ்ரவேலே, உன் கூடாரங்கள் ஆறுகளின் அருகே உள்ள தோட்டங்கள் மற்றும் பூங்காக்கள் போலவும், கர்த்தர் அமைத்த இடங்கள் போலவும், தண்ணீரின் அருகே உள்ள உயரமான மரங்களைப் போலவும் உள்ளன. உன் குடும்பத்திலிருந்து ஒரு மனிதன் வந்து பல ஜனங்களுக்குத் தலைவராக இருப்பான். அத்தோடு ஏசாயா 8:4 இல் இவ்வாறு கூறுகிறார். ஒரு குழந்தை தனது பெற்றோரை எப்படி அழைப்பது என்று அறியும் முன்பே, அசீரியாவின் அரசனிடம் இருந்து டமாஸ்கஸின் அதிகாரத்தையும் சமாரியாவின் கொள்ளை இடப்பட்ட பொருட்களையும் எடுத்துச் செல்வான் என்று. 5. அந்த வார்த்தைகளில் ஒரு மனிதன் தோன்றுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வருபவர் அனைவருக்கும் ஆண்டவர் என்றும் அவர்கள் கணிக்கிறார்கள். ஏசாயா 19:1 இல் கூறப்பட்டுள்ளபடி, இதோ! கர்த்தர் ஒரு பிரகாசமான மேகத்தின் மீது வீற்றிருக்கிறார், அவர் எகிப்துக்கு வருவார், எகிப்தின் சிலைகள் அவரைக்கண்டு நடுங்கும். அங்கிருந்து, பிதா அவரைத் திரும்ப அழைத்து, “இஸ்ரவேல் குழந்தையாக இருக்கும்போது நான் (கர்த்தர்) அவனை நேசித்தேன். நான் என் குமாரனை எகிப்தை விட்டு வெளியே அழைத்தேன்” என்று கூறியதாக ஓசியா 11:1 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
34. அனைத்து சூழ்நிலைகளிலும் அவரது பாடுகள் மற்றும் மரணம் பற்றிய கணிப்புகள்
அவரது மரணம் புறக்கணிக்கப்படவில்லை; உண்மையில், இது பரிசுத்த வேதாகமத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றிய தகவல் இல்லாததால் யாரும் தவறுகளைச் செய்து விடக்கூடாது என்பதற்காக இது செய்யப்படுகிறது. அவர் தனக்காக அல்ல, அனைவரின் நித்திய ஜீவனுக்காகவும் இரட்சிப்புக்காகவுமே இறந்தார் என்று வேதாகமம் விளக்குகிறது. அவருக்கு எதிரான யூதர்களின் திட்டங்கள் மற்றும் அவர்களால் அவர் எதிர்கொண்ட கொடுமைகள் பற்றியும் அவை பேசுகின்றன. 2. அவர்கள் இவ்வாறு சொல்கிறார்கள். அடிபட்ட ஒரு மனிதனுக்கு பலவீனத்தை எப்படி கையாள்வது என்று தெரியும். அவன் தனது முகத்தைத் திருப்பிக் கொள்வான், ஏனெனில் அவன் அவமானத்துக்கு உள்ளானான். அவன் மதிக்கப்படவில்லை. அவன் நம் பாவங்களைச் சுமந்து நமக்காகப் பாடுகளை அனுபவித்தான். அவன் கடினமாக நிந்திக்கப்பட்டு, மோசமாக நடத்தப்பட்டான் என்று நாங்கள் நினைத்தோம்; ஆனால் அவன் நம் பாவங்களுக்காகவே காயமடைந்தான், நம் பாவங்களால் பலவீனமானான். நமக்கு அமைதியைக் கொடுத்த தண்டனை அவன் மீது விழுந்தது. அவனுடைய காயங்கள் காரணமாக நாம் குணமடைந்தோம். அப்படியானால் வார்த்தையானவரின் தயவைப் பாருங்கள், நம்மை கௌரவிக்க அவர் அவமதிக்கப்பட்டார். செம்மறி ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழிதவறிவிட்டோம்; மக்கள் தவறுகளைச் செய்திருக்கிறார்கள்; கர்த்தர் நம் பாவங்களுக்காக அவரைப் பலியாக ஒப்புக்கொடுத்தார். அவர் மோசமாக நடத்தப்பட்ட போதிலும் அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. ஒரு செம்மறி ஆட்டைக் கொலைக் களத்துக்கு அழைத்துச் செல்வதைப் போல அவர் கொல்லப்படுவதற்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும் தன் மயிரைக் கத்தரிக்கிறவனுக்கு முன்பாகப் பேசமுடியாத ஆட்டுக்குட்டியைப் போல, அவர் வாயைத் திறக்கவே இல்லை. அவர் அவமதிக்கப்பட்டு தீர்ப்பிடப்பட்டார். 3. அவருடைய துன்பங்கள் காரணமாக, யாரும் அவரை ஒரு சாதாரண மனிதனாகக் கருதி விடக்கூடாது என்பதற்காக, பரிசுத்த வேதாகமம் அவருடைய தனித்துவமான தன்மையையும் அவரது செயல்களுக்குப் பின்னால் உள்ள சக்தியையும் விளக்குகின்றது. புனித நூலகள், “அவருடைய பாரம்பரியத்தை யார் விளக்க முடியும்?” என்று கேட்கின்றன, ஏனெனில் அவரது உயிர் பூமியிலிருந்து பறிக்கப்பட்டது. மக்களின் பாவங்கள் காரணமாக அவர் கொல்லப்பட்டார். மரணத்துக்குப் பிறகான முறையான நல்லடக்கத்திற்குப் பதிலாக, அவரது உடலை மோசமாக நடத்தினர். மேலும் அவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை, பொய் மற்றும் வஞ்சக வார்த்தைகள் பேசவில்லை என்றாலும், தேவன் அவரது காயங்கள் காரணமாகப் பெற்ற தழும்புகளைக் குணமாக்குவார்.
35. சிலுவையைப் பற்றிய கணிப்புகள்; கிறிஸ்து மட்டுமே இந்த கணிப்புகளை எவ்வாறு நிறைவேற்றுகிறார்
அவரது மரணத்தைப் பற்றிய தீர்க்கதரிசனம் மற்றும் அது சிலுவையைப் பற்றி என்ன சொல்கிறது என்பதைப் பற்றி நீங்கள் யோசிக்கலாம். இந்த தலைப்பு புனிதர்களால் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. 2. முதலில் மோயீசன் உரத்த குரலில் இதைக் கணிக்கும்போது, “உங்கள் வாழ்க்கையை உங்கள் கண்களுக்கு முன்பாகவே காண்பீர்கள், ஆனால் நீங்கள் அதை நம்பமாட்டீர்கள்” என்று கூறுகிறார். 3. அடுத்து, அவருக்குப் பின் வந்த தீர்க்கதரிசிகள் இதை உறுதிப்படுத்துகிறார்கள்: எரேமியா 11:19 இவ்வாறு கூறுகிறது: “நான் கொல்லப்படக் கொண்டு செல்லப்பட்ட ஒரு குற்றமற்ற ஆட்டுக்குட்டியைப் போல இருந்தேன், அதை நான் அறியாமல் இருந்தேன்; அவர்கள் எனக்கு எதிராகத் தீமையைத் திட்டமிட்டு, ‘வாருங்கள், அவனுடைய அப்பத்தின் மேல் ஒரு மரத்தை வைத்து, ஜீவனுள்ளோரின் தேசத்திலிருந்து அவனை அகற்றுவோம்’ என்று கூறுகிறார்கள்.” 4. அவர்கள் என் கைகளையும் கால்களையும் ஆணிகளால் துளைத்தார்கள், என் எலும்புகளை எண்ணினார்கள், என் வஸ்திரங்களைத் தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டது மட்டுமன்றி, என் அங்கிக்காகச் சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். 5. ஒரு மரத்தில் நிகழும் மரணம் என்று கூறப்பட்டுள்ளது சிலுவை மரணமாக இருக்க வேண்டும். ஏனெனில் கைகளும் கால்களும் ஆணிகளால் துளைக்கப்படும் ஒரே மரணம் சிலுவை மரணம் மட்டுமே. 6. இரட்சகர் மக்களுடன் இருந்தபோது, எல்லா தேசங்களும் கடவுளைப் பற்றி அறியத் தொடங்கின. இது பரிசுத்த வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக, ஏசாயா 11:10 இல், தேசங்களை வழிநடத்தக் கிளம்பும் ஜெஸ்ஸியின் மூலத்தைப் பற்றிப் பேசுகிறது. தேசங்கள் அவர் மீது நம்பிக்கை வைப்பார்கள். இது என்ன நடந்திருக்கும் என்பதற்கான ஒரு சிறிய சான்றாகும். 7. யூதர்களின் நம்பிக்கையீனம் தவறு என்பதை வேதவசனங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு நீதிமான், பரிசுத்த தீர்க்கதரிசி மற்றும் மூதாதையருக்கும் ஒரு தந்தை இருந்தார். உதாரணமாக, ஆபேல் ஆதாமிலிருந்து பிறந்தார், ஏனோக் யாரேதிலிருந்தும், நோவா லாமேக்கிலிருந்தும், ஆபிரகாம் தேராகிலிருந்தும் பிறந்தார். ஈசாக்கு ஆபிரகாமிலிருந்தும், யாக்கோபு ஈசாக்கிலிருந்தும், யூதா யாக்கோபிலிருந்தும், மோயீசன் மற்றும் ஆரோன் அம்ராமிலிருந்தும், எல்க்கானாவிலிருந்து சாமுவேலும், ஈசாயிலிருந்து தாவீதும், தாவீதிலிருந்து சாலமோனும், ஆகாஸிலிருந்து எசேக்கியாவும், ஆமோஸிலிருந்து யோசியாவும், ஆமோஸிலிருந்து ஏசாயாவும், ஹில்கியாவிலிருந்து எரேமியாவும், பூசியிலிருந்து எசேக்கியேலும் பிறந்ததாக சான்றளிக்கிறது. இவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் இருப்புக்கு பங்களித்த ஒரு தந்தை இருந்தார். அப்படியானால் ஒரு கன்னியிடமிருந்து மட்டுமே பிறந்தவர் யார்? தீர்க்கதரிசி இந்த அடையாளத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். 8. வானத்தில் ஒரு நட்சத்திரத்துடன் சிறப்பு வாய்ந்த ஒருவரின் பிறப்பை அறிவித்தது யார்? மோயீசன் பிறந்தபோது, அவரது பெற்றோர் அவரை மறைத்து வைத்தனர். தாவீது அவரது அண்டை வீட்டாரால் அடையாளம் காணப்படவில்லை. மேலும் மகா தீர்க்கதரிசியான சாமுவேல் கூட அவரை அடையாளம் காணவில்லை, ஜெஸ்ஸிக்கு இன்னொரு மகன் இருக்கிறாரா என்று கேட்கப்பட்டது. ஆபிரகாம் பிறந்த பிறகுதான் ஒரு உயர்ந்த மனிதராக அங்கீகரிக்கப்பட்டார். ஆனால் கிறிஸ்துவின் பிறப்பைப் பற்றிக் கூற எவ்வித மனித சாட்சிகளும் இல்லை, அவர் பூமிக்கு இறங்கி வந்தபோது வானத்திலிருந்து வந்த ஒரு நட்சத்திரம் மட்டுமே சாட்சியாய் இருந்தது.
36. கிறிஸ்துவின் இறையாண்மை, அவர் எகிப்துக்கு தப்பிச் செல்லல் மற்றும் தொடர்புடைய பிற நிகழ்வுகள் பற்றிய கணிப்புகள்
ஆனால், தந்தை அல்லது தாய் என்று அழைக்கும் வலிமை பெறுவதற்கு முன்பு எந்த அரசனும் ஆட்சி செய்ததாகவோ அல்லது தனது எதிரிகளை வென்றதாகவோ சான்றுகள் இல்லை. தாவீது முப்பது வயதில் அரியணை ஏறினார். சாலமன் ஒரு இளைஞனாக இருந்தபோதே அரச மகுடம் சூடிக்கொண்டார். யோவாஸ் ஏழு வயதில் ஆட்சி செய்யத் தொடங்கினார். யோசியா ஏழு வயது இருக்கும்போதே அரசனாக ஆனார். அதனால் தான் அவர்களின் அந்த வயதுகளில் அவர்கள் தங்கள் பெற்றோரை விளிக்கும் பாக்கியத்தைப் பெற்றிருந்தனர். 2. அப்படியானால், அவர் பிறப்பதற்கு முன்பே தனது எதிரிகளை ஆட்சி செய்து அவர்களைத் தோற்கடித்தவர் யார்? இஸ்ரேலிலும் யூதாவிலும் இதுபோன்ற எந்த அரசர் இருந்திருக்கிறார்? இதைப் பற்றி ஆராய்ந்த யூதர்கள் எல்லா தேசங்களும் எல்லாத் திசைகளும் அவர்களுடன் பகைமை கொள்ளாமல், எவரிடம் நம்பிக்கை வைத்து சமாதானத்தைக் கடைபிடித்தார்கள் என்று சொல்லட்டும்? 3. எருசலேம் இருந்த காலம் முழுவதும் அவர்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே இடைவிடாத போர் நடந்து கொண்டிருந்தது. அசீரியர்கள் அவர்களை ஒடுக்கினர், எகிப்தியர்கள் அவர்களைத் துன்புறுத்தினர், பாபிலோனியர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்; மேலும் அவர்களின் அண்டை நாட்டவர்களான சிரியர்கள் கூட அவர்களுடன் போரில் ஈடுபட்டனர். தாவீது மோவாபியர்களுக்கு எதிராகப் போரிட்டு சிரியர்களைத் தோற்கடித்தார், யோசியா தனது அண்டை நாட்டினரிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொண்டார். எசேக்கியா சனகெரிப்பின் ஆணவத்துக்குப் பயந்தார். அமலேக்கு மோயீசனுக்கு எதிராகப் போரிட்டார். எமோரியர்கள் அவரை எதிர்த்தனர், எரிகோ மக்கள் நாவேயின் மகனான இயேசுவை எதிர்த்து நின்றனர். சுருக்கமாகச் சொன்னால், இஸ்ரேலுக்கு மற்ற நாடுகளுடன் நட்பு இருந்ததில்லை. தீர்க்கதரிசி இதைப் பற்றி உண்மையைச் சொல்ல வேண்டிய அவசியம் இருப்பதனால், தேசங்கள் எவரை நம்ப வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்வது நல்லது. 4. ஆனால் பரிசுத்த தீர்க்கதரிசிகள் அல்லது ஆரம்பகால முற்பிதாக்களில் எவராவது அனைவரின் இரட்சிப்புக்காக சிலுவையில் மரித்தார்களா? அனைவரையும் குணப்படுத்தவேண்டுமென்று எண்ணி யாராவது காயமடைந்து கொல்லப்பட்டார்களா? எந்த நல்ல மனிதர்கள் அல்லது அரசர்கள் எகிப்துக்குச் சென்றபோது எகிப்தின் சிலைகள் விழுந்தன? ஆபிரகாம் அங்கு சென்றார், ஆனாலும் மக்கள் அப்போதும் சிலைகளை வணங்கினர். மோயீசன் அங்கு பிறந்தார், இருந்தும் மக்களின் தவறான வழிபாடு தொடர்ந்தவண்ணமே இருந்தது.
37. சங்கீதம் 22:16 அவரது பிறப்பு மற்றும் இறப்பின் மகத்துவத்தையும், எகிப்தில் தீர்க்கதரிசனங்கள் மற்றும் ஆவிகளின் தடுமாற்றம் குறித்தும் பேசுகிறது
மேலும், வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளவர்களில் எவர் கைகளிலும் கால்களிலும் ஆணிகளால் துளைக்கப்பட்டு, அல்லது ஒரு சிலுவையில் தொங்கவிடப்பட்டு, அனைவரின் இரட்சிப்புக்காக பலியிடப்பட்டார்? ஆபிரகாம் படுக்கையில் அமைதியாக இறந்தார்; ஈசாக்கும் யாக்கோபும் படுக்கையில் இறந்தனர்; மோயீசனும் ஆரோனும் ஒரு மலையில் இறந்தனர்; சவுல் என்பவனால் துரத்தப்பட்ட போதிலும், தாவீது யாராலும் பாதிக்கப்படாமல் தனது வீட்டில் இறந்தார். ஏசாயா இரு துண்டுகளாக வெட்டப்பட்டார், ஆனால் அவர் மரத்திலோ, சிலுவையிலோ தொங்கி உயிரை விடவில்லை. எரேமி மோசமாக நடத்தப்பட்டார், ஆனால் அவர் ஒரு குற்றவாளியாக இறக்கவில்லை; எசேக்கியோ மக்களுக்காக அல்ல, மக்களுக்கு என்ன நடக்க வேண்டும் என்பதைக் குறிக்க துன்பப்பட்டார். 2. அவர்கள் அனைவரும் துன்பப்பட்டாலும், இந்த மனிதர்கள் ஒவ்வொருவரும் அடிப்படையில் ஒருவரை ஒருவர் ஒத்திருந்தனர். இருப்பினும், வேதாகமத்தில் அறிவிக்கப்பட்டவர் வெறும் மனிதன் அல்ல, அவர் இயற்கையில் மனிதர்களைப் போலவே இருந்தாலும் கூட, அனைவரின் வாழ்க்கை என்று அழைக்கப்படுகிறார். ஆகவே உங்கள் வாழ்க்கையை உங்கள் கண்முன்னே காண்பீர்கள், அவருடைய தோற்றத்தை யாராலும் விளக்க முடியாது என்று வேதாகம உரை கூறுகிறது. அனைத்து புனிதர்களின் குடும்ப வம்சாவளிகளையும் நாம் கண்டுபிடித்தால் அவர்களின் பெற்றோர் யார் என்பதை அறியலாம். ஆனால் வாழ்க்கை என்று அழைக்கப்படும் கர்த்தரின் தோற்றத்தை எவராலும் விளக்க முடியாது. 3. அப்படியானால் பரிசுத்த வேதாகமம் யாரைப்பற்றிப் பேசுகிறது? தீர்க்கதரிசிகள் கூட அவரைப் பற்றி அற்புதமான விஷயங்களைச் சொல்லும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அவர் யார்? பதில், அவர் வேறு யாரும் அல்ல, நமது பொதுவான இரட்சகர், கடவுளின் வார்த்தையானவரான நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. அவர் ஒரு கன்னியிடமிருந்து பிறந்து பூமியில் ஒரு மனிதனாக வாழ்ந்தார். அவர் எப்படிப் பிறந்தார் என்பதை நாம் விளக்க முடியாது. அவரது பூமிக்குரிய தந்தை யார் என்றும் எவராலும் சொல்ல முடியாது. ஏனெனில் அவரது உடல் ஒரு கன்னியின் கருவிலிருந்து உதித்தது, மனிதனிடமிருந்து அல்ல. 4. தாவீது, மோயீசன் மற்றும் முற்பிதாக்களின் குடும்ப வம்சாவளிகளைக் கண்டறிய முடியும் என்பதால், இரட்சகர் ஒரு சாதாரண மனிதனைப் போல பிறந்தார் என்று யாரும் சொல்ல முடியாது. அவரது பிறப்பைக் குறிக்க நட்சத்திரத்தை தோன்றச் செய்தவர் அவரே; வானத்திலிருந்து இறங்கி வந்த வார்த்தையானவர் என்பதால் வானத்திலிருந்து ஒரு அடையாளத்தையும் அவர் கொண்டிருந்தது சரிதான். படைப்பின் அதிபதி பிறந்தபோது, அனைத்து படைப்புகளும் அவரை அடையாளம் காண வேண்டும் என்பது மிகச் சரியான ஒன்றே. 5. அவர் யூதேயாவில் பிறந்தார், அவரை வணங்க பாரசீகத்திலிருந்து மக்கள் வந்தார்கள். அவர் பிறப்பதற்கு முன்பே, அவர் தீய ஆவிகளை தோற்கடித்து, சிலை வழிபாட்டிற்கு எதிரான அவரது நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். எல்லா இடங்களிலிருந்தும் மக்கள், தங்கள் பழைய மரபுகளையும் போலியான கடவுள்களையும் கைவிட்டு, இப்போது கிறிஸ்துவில் தங்கள் நம்பிக்கையை வைத்து அவருடைய சீடர்களுடன் இணைந்துகொண்டனர், அதை நீங்களே உங்கள் கண்கூடாகப் பார்க்கலாம். 6. கர்த்தர் முகிற்கூட்டங்களின் மீது ஒரு மனித வடிவத்தில் இறங்கி வந்த அந்த நிகழ்வினைத் தவிர, எகிப்தியர்கள் ஒருபோதும் அவரை அவமரியாதை செய்வதை நிறுத்தவில்லை. அவர் சிலைகளில் உள்ள தவறான நம்பிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வந்து, அனைவரையும் தன்னிடமும் பிதாவிடமும் கொண்டு வந்தார். 7. சூரியனுக்கும் மற்றைய எல்லா படைப்புகளுக்கும் முன்பாகவும், அவரைக் கொன்றவர்களுக்கு முன்பாகவும், சாட்சியாக சிலுவையில் அறையப்பட்டவர் அவரே: அவரது மரணம் அனைவருக்கும் இரட்சிப்பைக் கொண்டு வந்ததோடு, எல்லா படைப்புகளும் இரட்சிக்கப்பட்டன. அவர் அனைவருக்கும் வாழ்வின் ஆதாரமாக இருக்கிறார். யூதர்கள் இதை நம்பவில்லை என்றாலும், ஒரு செம்மறி ஆட்டைப் போல பிறரின் இரட்சிப்புக்காகத் தன்னையே பலியாகக் கொடுக்க அவர் தம்முடைய சரீரத்தைக் கையளித்தார்.
38. கடவுள் ஒரு மனிதராக பூமிக்கு வருவது பற்றிய தெளிவான கணிப்புகள் உள்ளன. கிறிஸ்து நிகழ்த்திய அற்புதங்கள் முன்பு என்றும் இல்லாதது போல் இருந்தன
இந்த ஆதாரங்கள் போதுமானவை என்று அவர்கள் நினைப்பார்களானால், அவர்கள் வைத்திருக்கும் வேறு ஆதாரங்கள் வழியாக, அதாவது அவர்களிடம் உள்ள தீர்க்கதரிசனங்களிலிருந்து எடுக்கப்பட்ட ஆதாரங்கள் வாயிலாக அவர்கள் நம்பக்கடவார்களாக. என்னைத் தேடாதவர்களுக்கு நான் என்னைக் காண்பித்தேன், என்னைப் பற்றிக் கேளாதவர்கள் என்னை கண்டார்கள் என்று தீர்க்கதரிசிகள் கூறுகிறார்கள். என் நாமத்தை உச்சரிக்காத ஒரு தேசத்தை நோக்கி, “இதோ நான் இருக்கிறேன்” என்று சொன்னேன்; கீழ்ப்படியாதவர்கள் மற்றும் அகந்தை கொண்ட மக்களை நான் அணுகினேன், என்கிறார். 2. அப்படியானால் வெளிப்படுத்தப்பட்டவர் யார் என்று யூதர்களுக்கு நாம் சொல்ல முடியும்? அவர் ஒரு தீர்க்கதரிசி என்றால், அவர் மறைந்திருந்து மீண்டும் தோன்றியது பற்றி அவர்கள் விளக்க வேண்டும். மறைவிலிருந்து வெளியே வந்தது மட்டுமல்லாமல், சிலுவையில் கைகளை நீட்டிய இவர் என்ன வகையான தீர்க்கதரிசி? நிச்சயமாக, இயற்கையால் உடல் ரீதியானவர் அல்லாத கடவுளின் வார்த்தையைத் தவிர வேறு எவரும் மனித வடிவில் வந்து அனைவருக்காகவும் மரண வேதனையை அனுபவித்தார். 3. இந்த ஆதாரம் அவர்களுக்குப் போதவில்லை என்றால், மற்றொரு தெளிவான உதாரணத்தைப் பார்த்து அவர்கள் திருப்தி கொள்ளட்டும். வேதாகமம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்: நீங்கள் பலவீனமாக உணர்ந்தால் சக்தியுள்ளவர்களாக இருங்கள்; பயந்தவர்களை ஆறுதல்படுத்துங்கள்; தைரியமாக இருங்கள், பயப்படாதீர்கள், நம் கடவுள் நீதியைக் கொண்டுவருவார், அவர் வந்து நம்மைக் காப்பாற்றுவார், அப்போது பார்வையிழந்தோர் பார்வை பெறுவர், காது கேளாதோர் கேட்பார்கள், முடவர்கள் எழுந்து மான் போல துள்ளிக் குதிப்பார்கள், பேசத் திக்கித் திணறுபவர்கள் தெளிவாகப் பேசுவார்கள். 4. இதைப் பற்றி அவர்கள் என்ன சொல்ல முடியும், அல்லது அவர்கள் அதை எப்படி எதிர்கொள்ள முடியும்? இந்தத் தீர்க்கதரிசனம் கடவுள் இங்கே இருப்பார் என்று மட்டும் கூறாமல், அவர் வருவதற்கான அடையாளங்களையும் காலத்தையும் நமக்குச் சொல்கிறது. இது பார்வையிழந்தோர் தங்கள் பார்வையைத் திரும்பப் பெறுவதையும், முடவர்கள் நடப்பதையும், செவிடர்கள் கேட்பதையும், பேச முடியாதவர்கள் தெளிவாகப் பேசுவதையும் கடவுளின் வருகையுடன் இணைக்கிறது. எனவே, இந்த அடையாளங்கள் இஸ்ரேலில் எப்போது நடந்தன என்பதையும், அல்லது யூதர்களிடையே இதுபோன்ற ஏதாவது எப்போதாவது நடந்திருந்தால் அதைக்குறித்து அவர்கள் விளக்கட்டும். 5. தொழுநோயால் அவதிப்பட்ட நாமன் என்பவர் குணமடைந்தார், ஆனால் காது கேளாதவர் எவரும் கேட்கும் சக்தியைப் பெறவோ, முடவர் எவரும் எழுந்து நடக்கவோ இல்லை. எலியாஸ் இறந்தவரை மீண்டும் உயிர்ப்பித்தார், எலிசியஸும் அவ்வாறே செய்தார். ஆனால் குருடராகப் பிறந்த எவருக்கும் பார்வை திரும்பக் கிடைக்கவில்லை. இறந்தவரை எழுப்புவது ஒரு பெரிய விஷயம் தான் என்ற போதிலும், அது இரட்சகர் செய்த அற்புதங்களைப் போன்றது அல்ல. வேதாகமம் தொழுநோயாளி மற்றும் விதவையின் இறந்த மகனையும் பற்றி குறிப்பிட்டிருந்தால், அந்த சம்பவங்கள் நடந்திருந்தால், ஒரு முடவன் நடப்பதையும், பார்வையிழந்த ஒருவன் மீண்டும் பார்வை பெறுவதையும் பற்றிப் பேசியிருக்கும். வேதாகமம் இந்த நிகழ்வுகளைப் பற்றிக் குறிப்பிடாததால், அவை ஒருபோதும் நடக்கவில்லை என்பது தெளிவாகிறது. 6. கடவுளின் வார்த்தை மனித உருவில் இந்த உலகத்திற்கு வந்த அந்த நிகழ்வைத் தவிர, இந்த அற்புதங்கள் எப்போது நடந்தன? முடவர்கள் நடந்தபோது, பேச முடியாதவர்கள் தெளிவாகப் பேசிய போது, காது கேளாதவர்கள் செவிப்புலனைப் பெற்றபோது, பிறவியிலேயே பார்வையற்றவர்கள் பார்வை பெற்றது போன்ற இந்த அற்புதங்கள் எப்போது நடந்தன? இந்த நிகழ்வுகளைக் கண்ணுற்ற யூதர்கள் தான் இதைப் பற்றிச் சொன்னார்கள். ஏனென்றால் இதுபோல் எதுவும் நடந்ததை அவர்கள் இதற்கு முன்பு ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை: இரட்சகரைத் தவிர, உலகம் தோன்றியது முதல் குருடனாகப் பிறந்த ஒருவனின் கண்களை யாரும் திறந்ததில்லை. அப்படியாயின், இந்த மனிதன் கடவுளிடமிருந்து வரவில்லை என்றால் அவனால் இவற்றைச் செய்திருக்க முடியாது.
39. நீங்கள் வேறு எதையாவது தேடுகிறீர்களா? ஆனால் தானியேல் சரியான நேரத்தை எதிர்வுகூறுகிறார்; எனவே இதுகுறித்து எழும் ஆட்சேபனைகள் நீக்கப்பட்டன
இருப்பினும், வெளிப்படையான உண்மையை அவர்களால் தொடர்ந்து புறக்கணிக்க முடியாமல் போகலாம். தெளிவாக இருப்பதை மறுப்பதற்குப் பதிலாக, அவர்கள் இன்னும் பதில்களைத் தேடுகிறோம் என்றும் கடவுளின் வார்த்தை இன்னும் வரவில்லை என்றும் கூறுவார்கள். அவர்கள் இந்தக் கருத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள், உண்மைகளைப் புறக்கணிப்பதில் எந்த வெட்கமும் இல்லாதவர்களாகக் காணப்படுகிறார்கள். 2. ஆனால் இந்த ஒரு விஷயத்தில், அவர்கள் தவறு என்று எங்களால் அல்ல, ஞானமுள்ள தானியேலால் நிரூபிக்கப்படுவார்கள். இரட்சகர் பிரசன்னமாக இருப்பார் என்ற சரியான நேரத்தையும் காலத்தையும் அவர் குறிப்பிடுகிறார்: பாவத்தை முடிவுக்குக் கொண்டுவரவும், பாவங்களைத் தடுக்கவும், தவறுகளை அழிக்கவும், தவறுகளை சரிசெய்யவும், நிலையான நன்மையைக் கொண்டுவரவும், தரிசனங்களையும் தீர்க்கதரிசனங்களையும் உறுதிப்படுத்தவும், மகா பரிசுத்த ஸ்தலத்தை அபிஷேகம் செய்யவும் உங்கள் மக்களுக்கும் பரிசுத்த நகரத்திற்கும் எழுபது வாரங்கள் குறிக்கப்பட்டுள்ளன. எருசலேமை மீட்டெடுத்து மீண்டும் நிர்மாணிக்கும் கட்டளை கொடுக்கப்பட்டதிலிருந்து, இளவரசர் கிறிஸ்துவின் வருகை வரை நீங்கள் அறிந்து புரிந்துகொள்வீர்கள். 3. சிலர் மற்ற தீர்க்கதரிசனங்கள் குறித்து குறைகூறக் காரணங்களைக் கண்டுபிடித்து அவை பின்னர் நடக்கும் என்று கூறலாம். ஆனால் இதைப் பற்றி அவர்கள் என்ன சொல்ல முடியும்? இது கிறிஸ்துவைப் பற்றிப் பேசுகிறது, அவர் ஒரு சாதாரண மனிதர் மட்டுமல்ல, மிகவும் பரிசுத்தமானவர். அவர் வரும் வரை எருசலேம் நிலைத்திருக்கும் என்றும், அதன் பிறகு, இஸ்ரேலில் இனி தீர்க்கதரிசிகள் அல்லது தரிசனங்கள் இருக்காது என்றும் அது கூறுகிறது. 4. தாவீது, சாலமன், எசேக்கியா ஆகியோர் நீண்ட காலத்திற்கு முன்பே தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர். ஆனால் எருசலேம் வலுவாக இருந்தது, கடவுள், ஆசாப், நேதன், ஏசாயா, ஓசேயா மற்றும் ஆமோஸ் போன்ற தீர்க்கதரிசிகள் தொடர்ந்து தீர்க்கதரிசனத்தை வெளியிட்டு வந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்கள் பரிசுத்தவான்களாகக் கருதப்பட்டனர், ஆனால், பரிசுத்தவான்களுக்கெல்லாம் பரிசுத்தவான்களாக அல்ல. 5. ஆனால் அவர்கள் சிறைபிடிக்கப்பட்டவர்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொண்டு, அதனால் எருசலேம் இல்லை என்று சொன்னால், தீர்க்கதரிசிகளைப் பற்றி சொல்வதற்கு அவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? மக்கள் முதலில் பாபிலோனுக்குச் சென்றபோது, தானியேல், எரேமியா, எசேக்கியேல், ஆகாய், சகரியா ஆகிய அனைவரும் அங்கு தீர்க்கதரிசனம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
40. வாதம் மூன்று காரணிகளை அடிப்படையாகக் கொண்டது: (1) தீர்க்கதரிசனத்தின் முடிவு மற்றும் எருசலேமின் அழிவு, (2) யூதரல்லாதவர்களை மோயீசனின் கடவுளை நோக்கி மாற்றுவது. கிறிஸ்து ஏற்கனவே செய்யாததை மெசியாவால் நிறைவேற்ற என்ன இருக்கிறது?
யூதர்கள் அசட்டையாய் இருக்கிறார்கள், எதிர்காலத்தில் வர இருப்பதாக அவர்கள் நினைக்கும் நேரம் உண்மையில் வந்துவிட்டது. பரிசுத்த ஸ்தலமான கிறிஸ்து வரும்போது இஸ்ரேலில் தீர்க்கதரிசிகளும் தரிசனங்களும் நின்றுவிடும். இது வார்த்தையானவரான கடவுளின் வருகைக்கான தெளிவான அறிகுறியும் வலுவான சான்றும் ஆகும். ஏனெனில் எருசலேம் இனி இல்லை, மேலும் அவர்களுக்கு இனி தீர்க்கதரிசிகள் அல்லது தரிசனங்கள் கொடுக்கப்படப் போவதுமில்லை. ஆகவே இது மிகவும் நியாயமானதாகவே படுகிறது. 2. இறுதியாக, முன்னதாக அறிவிக்கப்பட்டவர் வந்தபோது, அவரது வருகையை யாரும் முன்னறிவிக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அசல் அங்கே இருக்கும்போது அதைக் குறிக்கும் சின்னங்களுக்கு எந்தத் தேவையும் இருக்கவில்லை. தீர்க்கதரிசனங்களின் நோக்கம், அனைவரையும் தங்கள் பாவங்களிலிருந்து காப்பாற்றும் உண்மையான நீதியின் வருகைக்குத் தயார் செய்வதேயாகும். அதனால்தான் எருசலேம் அந்தக் காலம் வரை நிலைத்து இருந்தது; மக்கள் அசலான ஒன்றின் வருகைக்குத் தங்களைத் தயார் செய்யும் வகையில் அவர்கள் சின்னங்கள் மூலம் கற்றுக்கொள்ள இது ஒரு சரியான இடமாக இருந்தது. 3. பரிசுத்தத்துக்கெல்லாம் பரிசுத்தமான ஒன்று வந்தபோது, தரிசனங்களும் தீர்க்கதரிசனங்களும் நின்றுவிட்டன. எருசலேம் இராச்சியம் முடிவுக்கு வந்தது. அந்த பரிசுத்தத்துக்கெல்லாம் பரிசுத்தம் அபிஷேகம் செய்யப்படும் வரை மட்டுமே அரசர்கள் அபிஷேகம் செய்யப்பட வேண்டும். ஆதியாகமம் 49:10 இல் கூறப்பட்டுள்ளபடி, “யூதாவின் குடும்பத்தில் வருபவர்கள் ராஜா ஆவார்கள். சமாதான கர்த்தர் வரும்வரை உன்னை விட்டு செங்கோல் நீங்குவதில்லை. ஏராளமான ஜனங்கள் அவனுக்கு அடிபணிந்து சேவை செய்வார்கள்” என்பதற்கிணங்க, இந்த ஆட்சியாளர் வரும் வரை யூத இராச்சியம் நீடிக்கும் என்று யாக்கோபு கணித்திருந்தார். யூதாவிலிருந்து ஆட்சியாளர் மறைந்துவிட மாட்டார், அல்லது அவரது குடும்பத்திலிருந்து தோன்றக்கூடிய இளவரசர், அவருக்குத் தகுதியான அதிகாரம் வரும் வரை அனைத்து தேசங்களின் அபிமானத்துக்குரியவராக இருப்பார். 4. நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகளும் யோவானின் காலம் வரை வரை தீர்க்கதரிசனம் உரைத்தார்கள் என்று இரட்சகர் உரத்துக் கூறினார். யூதர்களைப் பொறுத்தவரையில், இன்னும் ஒரு அரசர், தீர்க்கதரிசி அல்லது தரிசனம் இருந்திருந்தால், உலகுக்கு வந்த கிறிஸ்துவை அவர்கள் மறுதலித்திருப்பது சரி என்று எண்ணலாம். ஆனால், அந்தக் காலத்திலிருந்து எல்லா தீர்க்கதரிசனங்களும் நிறுத்தப்பட்டு, நகரமும் ஆலயமும் இல்லாமல் செய்யப்பட்டு, இதையெல்லாம் சாத்தியமாக்கிய கிறிஸ்துவை மறுப்பதன் மூலம் அவர்கள் ஏன் இவ்வளவு மதச்சார்பற்றவர்களாகவும், திரிபுபடுத்தப்பட்ட போக்கை உடையவர்களாகவும் இருக்கிறார்கள்? யூதரல்லாதவர்களும் கூட தங்கள் போலியான கடவுள்களை விட்டுவிட்டு கிறிஸ்து மூலம் இஸ்ரவேலின் கடவுளை நம்புகிறார்கள் என்பதை அவர்கள் ஏன் நம்ப மறுக்கிறார்கள்? கிறிஸ்து ஈசாயின் குடும்பத்திலிருந்து பிறந்தார், இப்போது அரசராக இருக்கிறார். தேசங்கள் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு மற்றும் மோயீசனின் கடவுளை வணங்காமல் வேறு கடவுளை வணங்குபவர்களாக இருந்தால், கடவுள் வரவில்லை என்று சொல்ல அவர்களுக்கு ஒரு காரணம் இருந்திருக்கும். 5. மோயீசனுக்கு நியாயப்பிரமாணத்தைக் கொடுத்து, ஆபிரகாமுக்கு வாக்குறுதிகள் அளித்த அதே கடவுளை புறஜாதியினர் மதிக்கிறார்கள் என்றால், யூதர்கள் அவருடைய வார்த்தையை அவமதிக்கிறார்கள் என்றால், வேதாகமத்தில் முன்னறிவிக்கப்பட்ட கர்த்தர் உலகிற்கு ஒரு மனித உடல் வடிவத்தில் வந்திருப்பதை அவர்கள் ஏன் அறியாமல் இருக்கிறார்கள், அல்லது ஏன் புறக்கணிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்? வேதாகமம் கூறுவதைப் பார்ப்போம்: கர்த்தராகிய தேவன் நம்மீது பிரகாசித்தார்; அவர் தம்முடைய வார்த்தையானவரை அனுப்பி நம்மைக் குணப்படுத்தினார்; அவ்வாறு நம்மைக் குணப்படுத்தியது ஒரு தூதரோ அல்லது ஒரு தேவதூதரோ அல்ல, கர்த்தர் தாமே அவர்களையும் காப்பாற்றினார். 6. அவர்களின் நிலைமை, புத்திசாலியாக இருந்தும் பூமியில் பிரகாசிக்கும் சூரியனை ஒப்புக்கொள்ள மறுக்கும் ஒருவரைப் போன்றது. அப்படிப்பட்டவர்கள் அவர் வரும்போது இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்? அவர் விசுவாசிகள் அல்லாதவர்களை அழைக்க வேண்டும் என்று நினைக்கிறார்களா? அப்படியென்றால், அவர்கள் ஏற்கனவே அழைக்கப்பட்டு விட்டனர். அவர் தீர்க்கதரிசனம், இராச்சிய ஆட்சி அதிகாரம் மற்றும் தரிசனங்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமா? அப்படியென்றால், அதுவும் ஏற்கனவே நடந்துவிட்டது. சிலை வழிபாடு தவறு என்று அவர் வெளிப்படுத்த வேண்டுமா? அதுவும் ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டு கண்டனம் செய்யப்பட்டு விட்டது. அவர் மரணத்தை ஒழிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறதா? இதற்கும் பதில், மரணம் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டுவிட்டது என்பதாகும். 7. கிறிஸ்து நடக்கும் என்று உறுதியாய்ச் சொன்ன எல்லாம் நடந்தேறி விட்டது. எதுவும் நடக்கவில்லை என்று சொல்லமுடியாது. நிறைவேறாமல் இருப்பது என்னவென்றால், யூதர்களை எந்த விளைவுகளும் இல்லாமல் நம்பாமல் இருக்கச் செய்வதுதான். ஏனென்றால், நாம் அறிந்தவரையில், அவர்களிடையே இனி ஒரு அரசரோ, தீர்க்கதரிசியோ, எருசலேமோ, பலியோ அல்லது தரிசனமோ இல்லை. மேலும் உலகம் முழுவதும் கடவுளைப் பற்றிய அறிவால் நிரம்பியிருந்தால், புறஜாதியினர் தங்கள் பழைய வழிகளிலிருந்து விலகி, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாகிய வார்த்தையானவர் மூலம் ஆபிரகாமின் கடவுளில் பாதுகாப்பைக் காண நேரிட்டால், மிகவும் பிடிவாதமாக இருப்பவர்களுக்குக் கூட கிறிஸ்து வந்திருக்கிறார் என்பது தெளிவாக இருக்க வேண்டும். அவர் தனது ஒளியை அனைவருக்கும் கொண்டு வந்து, தனது தந்தையைப் பற்றிய உண்மையான மற்றும் தெய்வீக போதனைகளைப் பகிர்ந்து கொண்டார். 8. பரிசுத்த வேதாகமத்திலிருந்து இவற்றையும் பிற குறிப்புகளையும் பயன்படுத்தி யூதர்களை நியாயமாக சவாலுக்கு உட்படுத்த முடியும்.
41. கிரேக்கர்கள் சின்னங்களைப் புரிந்துகொள்கிறார்களா? அவர் முழு பிரபஞ்சத்திற்கும் தன்னை வெளிப்படுத்தும்போது, அவர் ஏன் ஒரு மனித உடலில் தன்னைக் காட்டிக்கொள்ளாமல் இருக்கவேண்டும்? ஏனெனில் மனித உடல் அதே முழுமையின் ஒரு பகுதியாகும்
ஆனால், வேடிக்கையான, பிரயோசனமற்ற ஒன்றைப் பார்த்து சிரிக்கும் புறஜாதியினர், தாங்கள் மரங்கள் மற்றும் கற்களின் வடிவத்தில் அமைத்திருக்கும் சிலைகளைக் காணமுடியாத தங்கள் அறிவீனம் பற்றி உணர்வற்றவர்களாக இருப்பதைக் கண்டு ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. 2. இருப்பினும், நமது வாதத்திற்கு தெளிவான ஆதாரங்கள் நம்மிடம் இருப்பதால், தர்க்கரீதியான காரணங்களின் அடிப்படையில் – குறிப்பாக நாம் கவனிக்கக்கூடியவற்றிலிருந்து – அவர்களை வெட்கித் தலைகுனிய வைப்போம். நம் தரப்பில் அபத்தமாகவோ அல்லது கேலிக்கு தகுதியானதாகவோ தோன்றுவது எது? வார்த்தை உடல் வடிவத்தில் தெரியும் என்பது நமது கூற்று மட்டும்தானா? ஆனால் அவர்கள் உண்மையிலேயே உண்மையை மதிப்பார்கள் என்றால் இது அபத்தமானது அல்ல என்று ஒப்புக்கொள்வார்கள். 3. கடவுளின் வார்த்தை இல்லை என்று அவர்கள் கூறினால், அவர்கள் அதை பகுத்தறிவின்றியே சொல்லயிருக்கக்கூடும், இதன்மூலம் தங்களுக்குப் புரியாத ஒன்றைக் கேலிக்கு உள்ளாக்கின்றார்கள். 4. பிரபஞ்சத்தை ஆளும் கடவுளின் வார்த்தை என்ற ஒன்று இருப்பதாகவும், தேவன் அவர் மூலமாகவே அனைத்தையும் படைத்தார் என்றும், அனைவருக்கும் ஒளி, வாழ்க்கை மற்றும் இருப்பைக் கொடுத்து, அவருடைய படைப்புகள் அவரை வெளிப்படுத்தும் வகையில் அவர் எல்லாவற்றையும் ஆளுகிறார் என்றும் அவர்கள் ஒப்புக்கொள்ளும்பட்சத்தில், அவர்கள் அறியாமையின் காரணமாகத்தான் தங்களைத் தாங்களே கேலி செய்து கொள்கிறார்களா இல்லையா என்பது குறித்து சற்று சிந்தியுங்கள். 5. கிரேக்க தத்துவஞானிகள் பிரபஞ்சம் ஒரு பெரிய உடலைப் போன்றது என்று நம்புகிறார்கள், அது சரிதான். பிரபஞ்சத்தையும் அதன் பாகங்களையும் நம் புலன்களால் பார்க்க முடியும். கடவுளின் வார்த்தை பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக இருந்தால், அது ஒரு உடலாகவும், அதில் உள்ள அனைத்துடனும் இணைக்கப்பட்டிருந்தால், அவர் மனிதர்களுடனும் இணைந்திருக்கிறார் என்று சொல்வதில் ஆச்சரியமோ அல்லது விசித்திரமோ கிடையாது. 6. அவருக்கு ஒரு மனித உடல் இருப்பது நியாயமற்றது என்றால், அவர் எல்லாவற்றுடனும் இணைக்கப்பட்டு எல்லாவற்றுக்கும் ஒளியையும் இயக்கத்தையும் வழங்குவதும் நியாயமற்றது அல்லவா? ஏனென்றால், எல்லாவற்றையும் ஒன்றாகவும் ஒரு உடலாகவும் பார்க்க முடியும் என்பதால். 7. ஆனால் அவர் தன்னை பிரபஞ்சத்துடன் இணைத்து, முழுமையாக அறியப்பட வேண்டும் என்றால், அவர் ஒரு மனித உடலில் தோன்றியிருக்கவே வேண்டும். அதைக்கொண்டு ஒளியைப் பிரகாசிக்கவும் செயல்படவும் அதைப் பயன்படுத்துவதும் நியாயமானதே. மனிதர்களும் மற்ற அனைத்தையும் போலவே பிரபஞ்சத்தின் ஒரு பகுதியினர். அவரது தெய்வீகத்தைப் பற்றி மக்களுக்குக் கற்பிக்க ஒரு பகுதி அவரது கையால் தேர்ந்தெடுக்கப் படுவது பொருத்தமற்றதாகத் தோன்றினால், அவர் முழு பிரபஞ்சத்தின் அனைத்து மூலைகளிலும் அறியப்படுவது இன்னும் அபத்தமாக இருக்கும்.
42. உடலுடனான அவரது ஐக்கியம், ஒட்டுமொத்த படைப்புடன் அவர் கொண்டுள்ள உறவை அடிப்படையாகக் கொண்டது. மனிதனுக்கு அவர் தன்னை வெளிப்படுத்த விரும்பினார் என்பதால், அவர் ஒரு மனித உடலை ஏற்றுக்கொண்டார்
முழு உடலும் மனிதனால் சக்தியளிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது என்று ஒருவர் கூறுகிறார். இன்னுமொருவர் இல்லை, மனிதனின் சக்தி அவரது கால் விரலில் தான் உள்ளது என்று சொன்னால் அது முட்டாள்தனமாக இருக்கும். மக்கள் அந்தக் கருத்தை முட்டாள்தனம் என்று நினைப்பார்கள். ஏனென்றால், மனிதன் முழு உடலையும் கொண்டு செயல்படுகிறான் என்பது உண்மையெனினும், அவனது உடலின் ஒவ்வொரு பகுதியிலும் அவனுக்கு சக்தி இருக்கிறது என்று சிலர் நம்பத் தயங்கலாம். அதேபோல், கடவுளின் வார்த்தை முழு பிரபஞ்சத்திலும் இருப்பதாகவும், அனைத்தும் அவரால் ஒளியூட்டப்பட்டு இயக்கப்படுகின்றன என்றும் யாராவது நம்பினால், மனித உடலும் அவரிடமிருந்து இயக்கத்தையும் ஒளியையும் பெற முடியும் என்பதை அவர்கள் விசித்திரமாகக் எண்ணலாகாது. 2. வெறுமையில் இருந்து படைக்கப்பட்ட மனித இனம், இரட்சகரை மனித வடிவத்தில் பார்க்கக்கூடாது என்று நினைத்தால், அவர்கள் படைப்பிலிருந்தும் அவரை நீக்க வேண்டும், ஏனெனில் எல்லாம் வார்த்தையானவரால் வெறுமையில் இருந்தே உருவாக்கப்பட்டன. 3. படைப்பு என்பது உருவாக்கப்பட்ட ஒன்று என்பதை நாம் ஏற்றுக்கொண்டால், வார்த்தை என்பதும் அதன் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பது நியாயமானதாக இருப்பது போல், வார்த்தை ஒரு மனிதனில் இருக்க முடியும் என்று நினைப்பதும் நியாயமானதே. முழுமையைப் பற்றி மக்கள் எந்தக் கருத்தைக் கொண்டிருந்தாலும், அதே கருத்தை அதன் பகுதிகளுக்கும் பயன்படுத்த வேண்டும். ஒரு மனிதன் முழுமையின் ஒரு பகுதியாக இருப்பது போலவே வார்த்தையானது அவற்றுக்கும் பொருந்தும். 4. 4. வார்த்தை மனிதர்களுக்குள் இருக்கிறது என்று சொல்வது முற்றிலும் நியாயமானது, அதே நேரத்தில் மற்ற அனைத்தும் அதன் ஒளியையும் இயக்கத்தையும் அவரிடமிருந்து பெறுகின்றன. ஆசிரியர்கள் கூறுவது போல், “அவரில், நாம் வாழ்கிறோம், அசைந்து திரிகிறோம், இருக்கிறோம்.” 5. அப்படியானால், வார்த்தையானவர் எங்கிருந்தாலும் தன்னை வெளிப்படுத்த வார்த்தையை ஒரு கருவியாகப் பயன்படுத்தியிருந்தால், நாம் சொல்வதை விமர்சிக்க என்ன இருக்கிறது? அவர் அதில் இல்லையென்றால், அவரால் அதைப் பயன்படுத்த முடியாது. ஆனால் அவர் எல்லாவற்றிலும் அதன் பகுதிகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பதை நாம் ஒப்புக்கொண்டால், அவர் என்னவாக இருக்கிறார் எப்படி தன்னைக் காட்டுகிறார் என்பதை நம்புவதில் கஷ்டம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே. 6. கடவுள் எல்லாவற்றுடனும் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டு, எல்லாவற்றையும் முழுமையாகக் கட்டுப்படுத்துகிறார். ஆகையால், அவர் விரும்பினால், சூரியன், சந்திரன், வானம், பூமி, நீர், நிலம், நெருப்பு போன்றவற்றின் மூலம் தன்னையும் தனது தந்தையையும் வெளிப்படுத்துவது அவருக்கு பெரிய காரியமில்லை. ஏனென்றால் அவர் எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார். மேலும் அவர் வெவ்வேறு வழிகளில் தன்னைக் வெளிப்படுத்திக் காட்ட முடியும். அதேபோல், அவர் எல்லாவற்றையும் நிர்வகித்து அனைவருக்கும் உயிர் கொடுப்பதால், தந்தையைப் பற்றிய உண்மையைப் பகிர்ந்து கொள்ள ஒரு மனித உடலைப் பயன்படுத்தி மனிதர்கள் மூலம் தன்னை வெளிப்படுத்த அவர் உறுதிபூண்டார் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது எல்லாவற்றிற்கும் மேலாக, மனிதகுலம் என்பது முழு படைப்பின் ஒரு பகுதியாகும். 7. மனம் எல்லா மனிதர்களையும் கட்டுப்படுத்தி ஆட்சி செய்கிறது. இது நாக்கைப் போலவே உடலின் ஒரு பகுதி வழியாக வெளிப்படுத்தப்படுகிறது. ஆகவே இது மனதுக்கு குறைவான முக்கியத்துவம் கொடுக்கிறது என்று யாரும் கூற மாட்டார்கள். அதேபோல், எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் வார்த்தையானவர், மனிதனை ஒரு கருவியாகப் பயன்படுத்தினால், அதைத் தவறாகக் கருதக் கூடாது. நான் முன்பு குறிப்பிட்டது போல, ஏதேனும் ஒன்று உடலை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் அது எல்லாவற்றிலும் இருப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவே இருக்கும்.
43. அவர் எந்த உன்னதமான வடிவத்திலும் அல்ல, மனித உருவில் தான் வந்தார், ஏனென்றால் (1) அவர் இரட்சிக்க வந்தார், ஈர்க்க அல்ல; (2) படைக்கப்பட்டவற்றில் மனிதர்கள் மட்டுமே பாவம் செய்துள்ளனர். பிரபஞ்சத்தில் அவரது படைப்புகளை மக்கள் பார்க்க முடியாது என்பதால், அவர் உலகில் ஒரு மனிதனாக வாழ்ந்து அவர்களிடையே சேவை செய்யத் தேர்ந்தெடுத்தார்
கடவுள் ஏன் மனித வடிவத்தில் அல்லாது சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், நெருப்பு அல்லது காற்று போன்ற படைப்பின் பிரதான பகுதிகள் மூலம் தன்னைக் காட்டவில்லை என்று யாராவது கேட்டால், இறைவன் தன்னைக் காட்டிக் கொள்ள வரவில்லை, மாறாக வலியில் இருப்பவர்களுக்கு உதவவும் கற்பிக்கவுமே வந்தார் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 2. தான் எல்லோராலும் கவனிக்கப்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட ஒருவரின் நோக்கம் வெறுமனே தோன்றி, பார்ப்பவர்களைக் கவர்ந்திழுப்பதில் மட்டுமே இருக்கும். ஆனால் பிறருக்கு உதவி செய்யவும் கற்பிக்கவும் விரும்பும் ஒருவருக்கு, குறிக்கோள் என்பது ஒரு கோணத்தில் மட்டும் இருப்பதில்லை, தேவைப்படுபவர்களை உண்மையிலேயே ஆதரிப்பதிலும் இருக்கும். உதவி தேவைப்படும் மக்கள் கையாளக்கூடிய வகையில் அவர்கள் தங்களை முன்னிலைப்படுத்த வேண்டும், இதனால் அவர்கள் துன்பப்படுபவர்களை கண்டும் காணாமல் இருக்க மாட்டார்கள், இல்லாதோர் கடவுளிடமிருந்து உதவியைப் பெறுவதை இலகுவாக்கப் பாடுபடுவார்கள். 3. மனிதர்களைத் தவிர, உலகில் வேறு எதுவும் கடவுளைப் புரிந்துகொள்வதில் தவறிழைக்கவில்லை. சூரியன், சந்திரன், வானம், நட்சத்திரங்கள், நீர், நிலம், காற்று போன்ற அனைத்தும் அவற்றின் இயற்கையான ஒழுங்கைப் பின்பற்றுகின்றன, ஏனென்றால் அவை தங்கள் படைப்பாளரான வார்த்தையானவரை அறிந்திருக்கின்றன. மேலும் அவை என்று சிருஷ்டிக்கப்பட்டனவோ இன்னும் அப்படியே இருக்கின்றன. ஆனால் மனிதர்கள், நல்ல வழிகளில் இருந்து விலகி, உண்மையைத் தேடுவதற்குப் பதிலாக தவறான கருத்துக்களை உருவாக்கினர். அவர்கள் கடவுளுக்குச் சொந்தமான மரியாதையை பிசாசுகள், மனிதர்கள், மரங்கள், கற்கள் போன்ற பொருட்களுக்கும் கொடுத்தனர். 4. எல்லாவற்றையும் கட்டுப்படுத்துபவர் என்று நம்பும் மக்கள் அவரைப் பார்க்க முடியாத நிலையில் இருப்பதால், இவ்வளவு முக்கியமான பிரச்சினையைப் புறக்கணிப்பது தவறு என்பதை அறிந்த கடவுள், ஒரு மனித உடலை எடுக்கத் தீர்மானித்தார். முழு பிரபஞ்சத்திலும் உள்ள மக்கள் அவரை அடையாளம் காண முடியாததால், குறைந்தபட்சம் அவரது இந்தத் தீர்மானம் மூலமாகவாவது அவரைப் புரிந்துகொள்ள முடியும் என்பதற்காக அவர் இதைச் செய்தார். மனிதர்களால் அவரது கண்ணுக்குத் தெரியாத சக்தியைப் பார்க்க முடியாததால், அவர்கள் அவரைப் பற்றி சிந்திக்கவும், அவர்களைப் போன்ற உருவத்தில் காணப்படும் ஒன்றின் மூலம் அவரைப் புரிந்துகொள்ளவும் முடியும். 5. மனிதர்கள் தங்கள் உடலைப் போன்ற ஒரு உடலின் மூலமும், அதன் மூலம் செய்யப்படும் தெய்வீக கிரியைகள் மூலமும் பரலோக தந்தையை சிறப்பாகவும் வேகமாகவும் புரிந்து கொள்ள முடியும். இந்த செயல்கள் மனித செயல்கள் அல்ல, மாறாக கடவுளின் செயல்கள் என்பதை அவர்கள் உணரவேண்டும். 6. உடலின் கிரியைகள் மூலம் வார்த்தையானவரை அறிவது முட்டாள்தனமாகத் தோன்றினால், முழுப் பிரபஞ்சத்தின் கிரியைகள் மூலம் அவரை அறிவதும் முட்டாள்தனமாகவே இருக்கும். அவர் படைப்பின் ஒரு பகுதியாக இருந்தாலும் அதன் இயல்பைப் பகிர்ந்து கொள்ளாமல், எல்லாவற்றிற்கும் சக்தியைக் கொடுப்பது போல, அவர் உடலை அதன் இயல்புகள் பாதிக்க விடாமல் ஒரு கருவியாகப் பயன்படுத்தினார். உண்மையில் அவர் தன் உடலைப் புனிதமாக்கினார். 7. கிரேக்கர்களிடையே மிகவும் போற்றப்படும் பேரறிஞர் பிளேட்டோ கூட, படைப்பாளர் குழப்பமான பிரபஞ்சத்தைக் கண்டு, அதற்கு உதவவும், அதன் பிரச்சினைகளைச் சீர்செய்யவும் கட்டுப்பாட்டைத் தன் கையில் எடுத்துக் கொண்டார் என்று கூறுகிறார். மக்கள் பாவங்களில் தொலைந்து போனபோது, வார்த்தையானவர் இறங்கி வந்து அவர்களை வழிநடத்தவும் அவர்களின் பிரச்சனைகளிலிருந்து காப்பாற்றவும் ஒரு மனிதனாகத் தோன்றினார் என்ற எங்கள் கூற்றை நம்புவது அவ்வளவு கடினமானதா என்ன?
44. கடவுள் ஒரு வார்த்தையால் மனிதனைப் படைத்தது போல, ஒரு வார்த்தையால் ஏன் அவனை மீட்டெடுக்கக்கூடாது? இருந்தபோதும், (1) வெறுமையிலிருந்து ஒன்றை உருவாக்குவது ஏற்கனவே உள்ள ஒன்றை சரிசெய்வதற்கு சமமானதல்ல. (2) மனிதனுக்கு ஒரு குறிப்பிட்ட தீர்வுக்கான தெளிவான தேவை இருந்தது போல, மரணம் மனித இயல்பின் ஒரு பகுதியாக இருந்தது. எனவே வாழ்க்கை அதனுடன் நெருக்கமாக இணைக்கப்பட வேண்டியிருந்தது. அதனால்தான் மரணத்தை அதன் சொந்த களத்தில் எதிர்கொண்டு தோற்கடிக்க வார்த்தை மனிதனாக மாறியது (வைக்கோல் மற்றும் கல்நார் போன்ற)
சிலர் அதை ஒப்புக்கொள்ள வெட்கப்படலாம், ஆனால் கடவுள் மக்களை மனமாற்றத்துக்கு உட்படுத்தி அவர்களைக் காப்பாற்ற விரும்பினால், அவர் அதை எளிதாகச் செய்திருக்கலாம் என்றும், முன்பு வெறுமையில் இருந்து உலகைப் படைத்தபோது போல, மனித வடிவத்தை எடுக்க வேண்டிய அவசியமின்றி இதைச் செய்திருக்கலாம் என்றும் அவர்கள் வாதிடலாம். 2. அவர்களின் ஆட்சேபனைக்குக் கொடுக்கக்கூடிய ஒரு நல்ல பதில் என்னவென்றால், ஆரம்பத்தில், எதுவும் இல்லாது இருந்த போது, எல்லாவற்றையும் உருவாக்கத் தேவைப்பட்டது ஒரு கட்டளை மற்றும் அதைச் செய்வதற்கான சித்தம் மட்டுமே. ஆனால் மனிதர்கள் படைக்கப்பட்டு, ஒரு தீர்வுக்கான தேவை ஏற்பட்டவுடன், ஏற்கனவே இருந்தவற்றிற்கு உதவ ஒரு குணப்படுத்துபவரும் மீட்பரும் உலகிற்கு வருவார்கள் என்பது முக்கிய தேவையாக இருந்தது. இந்த காரணத்திற்காக, அவர் மனிதனாக அவதரித்து பிறருக்கு உதவ தனது சரீரத்தை மனமுவந்தளித்தார். 3. இது சரியான வழி இல்லையென்றால், வார்த்தை ஒரு மனிதனைப் பயன்படுத்தி எப்படித் தோன்ற நினைக்கலாம்? ஏற்கனவே இருந்தவர்களிடமிருந்தும் அவருடைய தெய்வீக உதவி தேவைப்படுவோரிடமிருந்தும் தவிர, வேறு எங்கிருந்து அவருக்கு ஒரு மனித வடிவம் கிடைக்க முடியும்? இரட்சிப்பு தேவைப்பட்டது இல்லாத விஷயங்களுக்கு அல்ல, எனவே ஒரு கட்டளை மட்டும் போதாது. அதற்கு பதிலாக, ஏற்கனவே வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்கள்தான் அழிவை எதிர்கொண்டனர். எனவே, வார்த்தை ஒரு மனித வடிவத்தை எடுத்து எல்லா இடங்களிலும் தன்னைக் காண்பிப்பது நியாயமானதும் சரியானதுமாக இருந்தது. 4. இரண்டாவதாக, நீங்கள் இதையும் அறிந்திருக்க வேண்டும். உடலைப் பாதிக்கும் அழிவு வெளியில் இருந்து வந்ததல்ல, அது உடலின் ஒரு பகுதியாகும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சிதைவுக்குப் பதிலாக உயிரை உடலுடன் இணைக்க வேண்டும். மரணம் உடலில் நுழைந்ததைப் போலவே உயிரையும் அதற்குள் கொண்டு வர முடியும். 5. மரணம் உடலுக்கு வெளிப்புறமாக இருந்தால், வாழ்க்கையும் அதற்கு வெளிப்புறமாகவே தான் இருந்திருக்க வேண்டும். இருப்பினும், மரணம் உடலுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டு உடலைக் கட்டுப்படுத்துவதால், வாழ்க்கையும் உடலுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டே இருத்தல் வேண்டும். இந்த வழியில் உடல் உயிரைப் பெறும்போது அது சிதைவிலிருந்து விடுபடலாம். வார்த்தை சரீரத்திற்கு வெளியே இருந்து வந்திருந்தாலும், மரணத்தால் ஜீவனை வெல்ல முடியாது என்பதால், மரணத்தை அவர் தோற்கடித்திருப்பார். இருப்பினும், சரீரத்தில் உள்ள சிதைவு தொடர்ந்தபடியே இருக்கும். 6. இந்தக் காரணத்திற்காக இரட்சகர் ஒரு மனித உடலை எடுத்துக்கொண்டார். இதனால் ஜீவனுடன் நெருக்கமாக இணைக்கப்பட்ட சரீரம், இனி ஒரு சாவுக்கேதுவாக மரணத்தில் நுழையாது. மாறாக, அது அழியாததாக மாறி மீண்டும் உயித்தெழும். சிதைந்துவிட்ட பிறகு, அது உயிரைப் பெறாவிட்டால் அதனால் மீண்டும் எழ முடியாது. மரணம் ஒரு உடலில் மட்டுமே இருக்க முடியும், எனவே அவர் மரணத்தை எதிர்கொண்டு அதை வெல்ல ஒரு உடலை எடுத்தார். இறைவன் மரணத்திற்குரியதற்கு உயிரைக் கொண்டு வரவில்லை என்றால், அவர் எப்படி ஒரு உயிருள்ளவராகக் காட்டப்பட்டிருக்க முடியும்? 7. வைக்கோலை நெருப்பால் அழிக்க முடியும் என்பது போல, ஒருவர் வைக்கோலை நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தி வைத்தால் அது எரியப்போவதில்லை, அது இன்னும் வைக்கோலாகவே இருக்கும். இருப்பினும் நெருப்பைப் பற்றிய கவலை அதற்கு இருக்கும். ஏனென்றால் நெருப்பு இயற்கையாகவே வைக்கோலை எரிக்கும் இயல்புடையது. இருப்பினும், ஒருவர் நெருப்பினால் அழிக்கமுடியாதது என்று அறியப்படும் கல்நார் போன்ற ஒன்றின் உள்ளே வைக்கோலை இடும்போது அது இந்த தீப்பிடிக்காத பொருளால் பாதுகாக்கப்படுவதால், வைக்கோல் இனி நெருப்பைப் பற்றி பயம்கொள்ளாது. 8. இந்த வழியில், கடவுள் உடலுக்கு மரணத்தைத் தவிர்க்கும்படி கட்டளையிட்டிருந்தால், உடல் இன்னும் அழியக்கூடியதாகவும், அழுகக்கூடியதாகவும் இருந்திருக்கும் என்று நாம் கூறலாம், ஏனெனில் அது உடல்களின் இயல்பு. இருப்பினும், இதைத் தடுக்க உடல் கடவுளின் தெய்வீகக் கட்டளையை ஏற்றுக்கொண்டது, அதாவது அது இனி மரணத்திற்கோ அல்லது சிதைந்து போகுமன்றோ அஞ்சுவதில்லை. அதற்கு பதிலாக, அது வாழ்க்கையை ஒரு போர்வையாகக் கொண்டுள்ளது. ஆகவே சிதைவு பற்றிய ஒரு கவலை இனி அதற்கு இருக்காது.
45. படைப்பின் ஒவ்வொரு பகுதியும் கடவுளின் மகத்துவத்தைக் காட்டுகிறது. அதன் படைப்பாளரின் சான்றுகளைக் காட்டும் இயற்கை, மற்றும் அற்புதங்கள் மூலம் மனித வடிவத்தில் கடவுள் இருப்பதற்கான இரண்டாவது ஆதாரத்தை அளிக்கிறது. இருப்பினும், மனித பாவத்தின் காரணமாக, இயற்கையின் உண்மை சிதைந்துவிட்டது, ஆனால் இறுதியில் மீண்டும் உண்மைக்கே திரும்புகிறது. இந்தக் காரணங்கள் போதாது என்றால், கிரேக்கர்கள் உண்மைகளைக் கருத்தில் கொண்டு ஆராயட்டும்.
வார்த்தையானவரான கடவுள் உடலுக்கு உயிரைக் கொண்டுவரவும், மக்கள் மூலம் அதைச் செயல்படுத்தவும் ஒரு மனித அவதாரத்தை எடுத்தார். படைப்பின் காரணமாக அவர் அங்கீகரிக்கப்படுவது போலவே, அவர் மனிதர்களிடமும் செயல்படுகிறார். எல்லா இடங்களிலும் தன்னை வெளிப்படுத்துகிறார். அவருடைய தெய்வீக பிரசன்னம் மற்றும் அறிவாற்றல் இல்லாமல் எதுவும் இல்லை என்பதை உறுதிசெய்கிறார். 2. இரட்சகர் இதைச் செய்தார் என்று நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன், முன்பு சொன்னதை மீண்டும் வலியுறுத்துகிறேன், அவர் எல்லாத் திசைகளில் உள்ள அனைத்தையும் தனது பிரசன்னத்தால் நிரப்புவது போல, எல்லாவற்றையும் அவரைப் பற்றிய அறிவால் நிரப்ப வேண்டும் என்பதற்காகவே என்று உறுதிபடக் கூறுகிறேன். பரிசுத்த வேதாகமம் கூறுவது போல்: “பூமி முழுவதும் கர்த்தரைப் பற்றிய அறிவால் நிறைந்திருந்தது” என்று. ஒரு மனிதன் அண்ணாந்து வானத்தை நோக்கிப் பார்த்தால், அங்கே சஞ்சரிப்பவைகளின் ஒழுங்கைப் பார்க்கிறான். அதேநேரம் அவன் தன் முகத்தை வானத்தை நோக்கி உயர்த்த முடியாவிட்டால், அவன் கண்களுக்கு சமாந்திரமாக இருக்கும் மனிதனை மட்டும் பார்க்கிறான். இதன்மூலம் கடவுளின் வல்லமையை அவருடைய செயல்கள் மூலம் பார்க்கவும், அவர்தான் உண்மையான கடவுள் என்பதை உணர்ந்துகொள்ளவும் முடியும். ஒரு மனிதன் வழிதவறிப் போய் பிசாசுகளுக்குப் பயந்து, இருக்கும் சமயத்தில், எவரேனும் ஒருவர் அவற்றை விரட்டுவதைக் கண்டால், அவர் தான் அவற்றின் எஜமானன் என்று முடிவு செய்யலாம். எகிப்தியர்களைப் போல, தண்ணீரைக் கடவுள் என்று யாராவது நினைத்தால் அவர் தண்ணீரை எவ்வாறு மாற்ற முடியும் என்பதையும், கடவுள்தான் அதைப் படைத்தவர் என்பதையும் அறிந்து கொள்ளலாம். 4. ஒரு மனிதன் பாதாளத்திற்குச் சென்று, அங்குள்ள வீரர்களை தெய்வங்களாக நினைத்து மரியாதை செலுத்தினால், கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து மரணத்தை வென்றார் என்பதை அவன் அப்போதும் காண முடியும். இதிலிருந்து, கிறிஸ்து மட்டுமே அவர்களில் உண்மையான கடவுள் மற்றும் இறைவன் என்பதை அவன் புரிந்து கொள்ள முடியும். 5. கடவுள் படைப்பில் எல்லாவற்றையும் செய்தது மட்டுமன்றி, தவறான நம்பிக்கைகளிலிருந்து அதை விடுவித்தார். கொலோசெயர் 2:15 இல் பவுல் குறிப்பிடுவது போல, ஆட்சியாளர்களையும் அதிகாரங்களையும் வென்று, அவர் சிலுவையில் மரணத்தை வென்றார். இனி யாரும் தவறாக வழிநடத்தப்படக்கூடாது என்பதற்காகவும், அனைவரும் கடவுளின் உண்மையான வார்த்தையைக் கண்டறிய முடியும் என்பதற்காகவும் இது செய்யப்பட்டது. 6. பரலோகத்தில், மறுமையில், மக்களில், பூமியில் – எல்லா இடங்களிலும் கடவுளின் பிரசன்னத்தைக் காணும் இந்த மனிதனுக்கு கடவுளைப் பற்றி இனி எந்த குழப்பமும் இல்லை. அதற்கு பதிலாக, அவன் கிறிஸ்துவை மட்டுமே வணங்க வேண்டும், அவர் மூலம், பிதாவை உண்மையிலேயே புரிந்து கொள்ள வேண்டும். 7. இந்தக் காரணங்களின் அடிப்படையில், புறஜாதியினரை வெட்கித்து தலைகுனிய வைப்பது நியாயம்தான். இருப்பினும், எம்மிடம் இருக்கும் காரணங்கள் அவர்களை வெட்கப்படுத்த போதுமானதாக இல்லை என்று அவர்கள் நினைத்தால், குறைந்தபட்சம் நாம் முன்வைக்கும் தெளிவான உண்மைகளை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
46. அவதாரம் இடம்பெற்ற காலத்திலிருந்து, சிலைகள், சிலை வழிபாடுகள், கட்டுக்கதைகள், தீய ஆவிகள், மந்திரம் மற்றும் கிறிஸ்தவமல்லாத தத்துவங்கள் மீதான நம்பிக்கை நிராகரிக்கப் பட்டுள்ளது. சுயாதீனமாக செயற்பட்ட பழைய மத நம்பிக்கைகள் இருந்தபோதிலும், கிறிஸ்துவின் வழிபாடு உலகளாவியது மற்றும் நிலையானது என்று உறுதியாகக் கூற முடியும்.
கடவுளின் வார்த்தையானவரான கர்த்தர் நம்மிடையே வாழ வந்த அந்த நிகழ்வைத் தவிர, மக்கள் எப்போது சிலைகளை வணங்குவதை நிறுத்தினார்கள்? அல்லது கிரேக்க இறைவாக்குகளும் மற்றவர்களும் எப்போது பதில்களைக் கொடுப்பதை நிறுத்தினார்கள், இரட்சகர் பூமியில் தம்மை வெளிப்படுத்திய அந்த நிகழ்வைத் தவிர? 2. கடவுள்கள் என்றும் ஹீரோக்கள் என்றும் கவிஞர்களால் அழைக்கப்படும் மக்கள் எப்போது சாதாரண மனிதர்களாகக் காணத் தொடங்கினர்? கர்த்தர் மரணத்தை வென்று, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததன் மூலம் தனது உடலை அழுகாமல் பாதுகாத்த பிறகுதான் அல்லவா? 3. வார்த்தையாகவும் எல்லா படைப்புகளுக்கும் எஜமானராகவும் இருக்கும் கடவுள், மனித பலவீனத்தால் பூமிக்கு வந்த அந்த சந்தர்ப்பத்தைத் தவிர, பிசாசுகளின் தந்திரங்களும் பைத்தியக்காரத்தனமும் எப்போது தங்கள் சக்தியை இழந்தன? வார்த்தையின் தெய்வீக பிரசன்னம் மக்களிடையே தோன்றிய அந்த சந்தர்ப்பத்தைத் தவிர, மந்திரமும் அதன் போதனைகளும் எப்போது வலுவிழக்கத் தொடங்கின? 4. கடவுளின் உண்மையான ஞானம் பூமியில் தோன்றிய காலகட்டத்தைத் தவிர, எந்தக் கட்டத்தில் கிரேக்கர்களின் ஞானம் முட்டாள்தனமாகத் தோன்றியது? கடந்த காலத்தில் எல்லா இடங்களிலும் உள்ள மக்கள் சிலை வழிபாட்டால் தவறாக வழிநடத்தப்பட்டனர், சிலைகளைத் தவிர வேறு எதையும் கடவுள்களாக நினைக்கவில்லை. இப்போது, உலகம் முழுவதும் உள்ள மக்கள் சிலை மூடநம்பிக்கையிலிருந்து விலகி கிறிஸ்துவில் அடைக்கலம் தேடுகிறார்கள். அவரைக் கடவுளாக வழிபடுவதன் மூலம், அவர்கள் முன்பு அறிந்திராத தந்தையையும் அறிந்துகொள்கிறார்கள். 5. மேலும், அற்புதமான ஒரு உண்மை என்னவென்றால், வழிபாட்டுப் பொருட்கள் பலவகையாகவும், ஏராளமான எண்ணிக்கையிலும் இருந்த போதிலும், ஒவ்வொரு இடத்திற்கும் அதே இடத்துக்கு உரித்தான சிலை இருந்தது. அவற்றில் ஒரு கடவுளாகக் கருதப்பட்ட சிலைக்கு அந்த இடத்தை விட்டு வேறொரு இடத்திற்குச் செல்ல அதிகாரம் இல்லை. இதனால் அண்டையில் வாழும் மக்கள் அந்த சிலை வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு வந்து வணங்கும்படி வற்புறுத்தப்பட்டனர். அப்படியானால், தன்னை வழிபடும் மக்களுக்கு சேவையாற்றக்கூடிய நிலையில் கூட அந்த சிலைகள் இருக்கவில்லை. அத்தோடு, ஒரு இடத்தில் இருப்பவர்கள் அயலில் உள்ளவர்களின் கடவுளை வணங்கவில்லை – ஏனெனில், ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த சிலையையே மிகவும் சக்தி வாய்ந்தது என்று நம்பி, அதைப் பற்றிக் கொண்டனர். ஆனால் கிறிஸ்து இருக்கிறார், அவரை அனைவரும் ஒரே கடவுளாக வழிபடுகின்றனர். அருகிலுள்ள மக்களைக் கூட காக்க முடியாத பலவீனமான சிலைகளைப் போலல்லாமல், கிறிஸ்து தன் அருகிலுள்ளவர்களை மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள மக்களையும் ஒரே இறைவனை வணங்கவும், அவர் மூலமாகவே அவரது தந்தையாகிய கடவுளை வணங்கவும் ஒரு வழிகாட்டியாய் இருக்கிறார்.
47. புனித இடங்களில் தரிசனங்கள் என்று நம்பப்பட்ட பல இறைவாக்குகள், சிலுவையின் அடையாளத்தால் பொய்யானவை என்று நிரூபிக்கப்பட்டன. பழைய கடவுள்கள் சாதாரண மக்களாக மாறின, மந்திரம் ஒரு தந்திரமாக வெளிப்படுத்தப்பட்டது. தத்துவம் அழியாமை மற்றும் நன்மை பற்றிய கருத்துக்களைப் பற்றி ஒரு சில புத்திசாலிகளை மட்டுமே நம்ப வைக்க முடிந்தாலும், குறைந்த கல்வியறிவு கொண்டவர்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட கொள்கை போன்றவற்றை திருச்சபையில் உள்ள பலர் மத்தியில் புகுத்தியுள்ளனர்
முன்பு எல்லா இடங்களும் இறைவாக்கினர்களின் வஞ்சகத்தால் நிறைந்திருந்தன. டெல்பி, டோடோனா, போயோடியா, லைசியா, லிபியா, எகிப்து, கபிரி, பைத்தானிஸ் ஆகிய இடங்களில் உள்ள இறைவாக்கினர்கள் மனிதர்களின் கற்பனையால் நற்பெயர் பெற்றிருந்தனர். இப்போது, கிறிஸ்து எல்லா இடங்களிலும் பிரசங்கிக்கத் தொடங்கியதிலிருந்து, அவர்களின் பைத்தியக்காரத்தனமும் நின்றுவிட்டது, மேலும் அவர்களில் இனி தெய்வீகமாகப் பேசவோ எதிர்காலத்தைக் கணிக்கவோ எவரும் இல்லை. 2. கடந்த காலத்தில், பிசாசுகள் நீரூற்றுகள், ஆறுகள், மரங்கள் அல்லது கற்குகைகள் போன்ற இடங்களில் இருப்பது போல் நடித்து, அப்பாவி மக்களை முட்டாள்களாக்கி ஏமாற்றின. இருப்பினும், தெய்வீக வார்த்தையின் வருகைக்குப் பிறகு, அவர்களின் தந்திரங்கள் ஒழிந்துபோயின. இப்போது, ஒருவர் சிலுவையின் அடையாளத்தை இடும்போது, அது அவர்களின் வஞ்சகங்களை விரட்டிவிடும். 3. கடந்த காலத்தில், சீயஸ், குரோனோஸ் மற்றும் அப்பல்லோ போன்ற கடவுள்கள் உண்மையானவர்கள் என்று மக்கள் நம்பி அவர்களை மதித்தனர். ஆனால் இப்போது இரட்சகர் வந்துவிட்டதால், இவர்கள் யாவரும் சாதாரண மனிதர்கள் என்பது தெளிவாகியது. கிறிஸ்து மட்டுமே உண்மையான கடவுளாகவும் கடவுளின் வார்த்தையாகவும் அங்கீகரிக்கப்படுகிறார். 4. வார்த்தையானவர் நம்மிடம் வருவதற்கு முன்பு, மந்திர சக்தியானது எகிப்தியர்கள், ஷல்டியன்ஸ் மற்றும் இந்தியர்கள் மத்தியில் சக்திவாய்ந்ததாகவும் மதிக்கப்பட்டதாகவும் இருந்தது, மேலும் அதைக் கண்டவர்களை அது ஆச்சரியப்படுத்தியது. இருப்பினும், சத்தியம் மற்றும் வார்த்தையின் வருகையுடன், மந்திரம் முற்றிலும் பொய் என்று நிரூபிக்கப்பட்டதோடு அதன் அனைத்து சக்தியையும் இழந்துவிட்டது. 5. பல ஞானமுள்ள கிரேக்க தத்துவஞானிகள் மரணத்திற்குப் பின் வாழ்க்கை மற்றும் நல்ல வாழ்க்கை வாழ்வது பற்றி நிறைய எழுதினர். ஆனால் அவர்களோடு இருந்த ஒரு சிலரைக் கூட அவர்களால் நம்ப வைக்க முடியவில்லை. இதற்கு நேர்மாறாக, கிறிஸ்து, தனது எளிமையான வார்த்தைகளையும் சாதாரண மக்களையும் பயன்படுத்தி உலகெங்கிலும் உள்ள பலரை மரணத்திற்கு பயப்பட வேண்டாம் என்றும் நித்திய விடயங்களில் கவனம் செலுத்தவும் அவர்களை நம்ப வைத்துள்ளார். தற்காலிக விஷயங்களைப் புறக்கணிக்கவும், அதற்கு பதிலாக பரலோக வெகுமதிகளை இலக்காகக் கொள்ளவும், பூமிக்குரிய புகழைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருக்கவும் அவர் அவர்களை ஊக்குவித்துள்ளார்.
48. கன்னிப்பெண்கள் மற்றும் துறவிகளிடையே கிறிஸ்தவத்தைத் தழுவிய சுயக்கட்டுப்பாடு, வேதசாட்சிகளுடன் சேர்ந்து, அசுத்த ஆவிகள் மற்றும் மந்திரங்களுக்கு எதிராக சிலுவையின் வலிமையைக் காட்டுகிறது. கிறிஸ்து தனது சக்தியை நிரூபிக்கிறார். தான் ஒரு மனிதன் என்றும், ஒரு மந்திரவாதி அல்லது என்றும், ஆனால் ஒரு ஆவியை விட பெரியவர் என்பதையும் நிரூபிக்கிறார். ஏனெனில் இவை அனைத்தும் முற்றிலும் அவரது அதிகாரத்தின் கீழ் உள்ளன. எனவே, அவரேதான் கடவுளின் வார்த்தையானவராக இருக்கிறார்
எங்கள் வாதங்கள் வெறும் வார்த்தைகள் அல்ல; அவை உண்மை என்பதைக் காட்டும் உண்மையான அனுபவங்களால் ஆதரிக்கப்படுகின்றன. 2. கற்பைக் கடைப்பிடிக்கும் அர்ப்பணிப்புள்ள இளம் பெண்கள் மற்றும் ஆண்களிடம் நன்மையின் சான்றையும், தங்கள் விசுவாசத்தின் நிமித்தம் உயிர் துறந்த பல வேதசாட்சிகளிடம் நித்திய வாழ்வின் நம்பிக்கையையும் எவராலும் காணக்கூடியதாக இருக்கிறது. 3. நாம் இப்போது கூறியதை அனுபவத்தால் சோதித்துப் பார்க்க விரும்புபவர் வரட்டும். சாத்தானின் தந்திரங்கள், போலித் தீர்க்கதரிசனங்கள் மற்றும் மந்திரம் மாயைகளுக்கு எதிராக அவர்கள் கேலி செய்யும் சிலுவையின் அடையாளத்தைப் பயன்படுத்தட்டும். இந்த அடையாளத்துடன், பிசாசுகள் ஓடிவிடும், பொய்யான தீர்க்கதரிசனங்கள் வலுவிழந்து மறைந்துபோய், அனைத்து மந்திரங்களும் சூனியங்களும் சக்தியற்றதாகிவிடும் என்பதை அவர்கள் காண்பார்கள். 4. இந்த கிறிஸ்து யார், அவர் எவ்வளவு வல்லமையுள்ளவர், அவருடைய பெயரும் பிரசன்னமும் எல்லாவற்றையும் பின்னே தள்ளி, அவை எதுவும் முக்கியமற்றது என்று காட்டுகின்றனவே? அவர் எல்லா சவால்களுக்கும் எதிராக வலுவாக நிற்கிறார். மேலும் உலகம் முழுவதும் தனது போதனைகளைப் பரப்பியுள்ளார். கேலி செய்வதை ரசிக்கும் கிரேக்கர்கள், வெட்கப்படாமல் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளட்டும். 5. அவர் ஒரு மனிதன் என்றால், தங்களை கடவுள்கள் என்று நினைக்கும் அனைவரையும் விட ஒரு மனிதன் எப்படி வலிமையானவனாக இருந்து அவர்கள் எல்லோரும் வெறும் வேற்று வேட்டுக்கள் என்று நிரூபிக்க முடியும்? அவர் ஒரு மந்திரவாதி என்றால், ஒரு மந்திரவாதி தனது மந்திர வலிமையை அதிகரிப்பதற்குப் பதிலாக அனைத்து மந்திரங்களையும் எவ்வாறு அழிக்க முடியும்? அவர் சில மந்திரவாதிகளை அல்லது ஒருவரை மட்டும் தோற்கடித்திருந்தால், அவர் தனது திறமையால் மற்றவர்களை விட சிறந்தவர் என்று அவர்கள் கூறுவது நியாயமாக இருக்கும். 6. அவருடைய சிலுவை அனைத்து மந்திரங்களையும் அதன் சக்திகளையும் தோற்கடித்திருந்தால், இரட்சகர் ஒரு மந்திரவாதி அல்ல என்பது தெளிவாகிறது. ஏனென்றால் மற்ற மந்திரவாதிகளால் அழைக்கப்பட்ட பிசாசுகள் கூட, கர்த்தரைத் தங்கள் எஜமானராக மதித்து அழைத்தவர்களை விட்டு ஓடிவிடுகின்றன. 7. கிரேக்கர்கள் அவரை கேலி செய்வதில் மட்டுமே அக்கறை கொண்ட ஒருவர் என்று விவரிக்கலாம். அவருடைய சக்தியின் காரணமாக அவர்கள் அவரை ஒரு பிசாசு என்று கூட அழைக்கலாம். இருப்பினும், அவர்களின் முடிவு தவறானது, ஏனெனில் அவர்கள் வெளியிட்ட கருத்துக்கு எதிரான ஆதாரங்களை நாம் ஏற்கனவே காட்டியுள்ளோம். பிசாசுகளை விரட்டுபவரே அவர்தான் என்றால், அவரை ஒரு பிசாசு என்று சொல்வது மிகவும் அபத்தமானது. 8. அவர் குறிப்பிட்ட சில பிசாசுகளை மட்டுமே விரட்டியிருந்தால், யூதர்கள் இதைச் சொல்லி அவரை அவமதித்தது, பிசாசுகளின் தலைவன் பலவீனமான அவனது ஊழியர்களையே தோற்கடிக்க உதவினார் என்று மக்கள் நினைக்கலாம். இருப்பினும், அவரது திருநாமத்தால் அனைத்து பிசாசுகளின் அராஜகங்களையும் நிர்மூலமாக்க முடியும் என்றால், அவர்களின் எண்ணம் மிகவும் தவறு என்பதைக் காட்டுகிறது. ஆகவே நமது ஆண்டவரும் இரட்சகருமான கிறிஸ்து அவர்கள் நம்புவது போல் ஒரு சாத்தானுக்கு ஈடிணையான சக்தி அல்ல. 9. இரட்சகர் ஒரு சாதாரண மனிதர், ஒரு மந்திரவாதியோ அல்லது ஒரு சாத்தானோ அல்ல. உண்மையிலேயே அவர் கடவுள், அவர் உண்மையான கடவுளின் குமாரன். இதன்மூலம் அவர் ஆரம்பத்திலிருந்தே தந்தையின் வார்த்தையானவராக, ஞானத்தின் பிறப்பிடமாக, மற்றும் வல்லமையின் வடிவமாக இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெளிவாகிறது. அதனால்தான் அவரது செயல்கள் மனிதர்களின் செயல்களைப் போல இல்லாமல் மிகவும் மகத்தானவையாகவும் உன்னதமாகவும் கருதப்படுகின்றன. மேலும் அவை என்னவாக இருக்கின்றன என்பதாலும், மற்றவர்கள் செய்வதோடு ஒப்பிடும்போதும் அவை உண்மையிலேயே கடவுளின் படைப்புகள் என்பது தெட்டத் தெளிவாகிறது.
49. அவரது பிறப்பு மற்றும் அற்புதங்கள்: நீங்கள் அஸ்க்லெபியஸ், ஹெராக்கிள்ஸ் மற்றும் டயோனிசஸை அவர்களின் படைப்புகளுக்காக கடவுள்கள் என்று அழைக்கிறீர்கள். அவர்கள் செய்ததை உண்மையான கடவுள் செய்தவற்றுடன் – அவரது மரணத்தைச் சுற்றியுள்ள அற்புதமான நிகழ்வுகள் உட்பட – இவை அனைத்தோடும் ஒப்பிட்டு நோக்குங்கள்
ஒரு கன்னியின் கருவிலிருந்து பிறந்து தனது சொந்த உடலை உருவாக்கியவர் யார்? அனைத்திற்கும் உண்மையான இறைவன் போன்ற நோய்களைக் குணப்படுத்தியவர் யார்? மனித இயல்பில் இல்லாததை சரிசெய்து, பிறப்பிலிருந்தே பார்வையற்றவனாக இருந்தவனை பார்க்கச் செய்தவனாக மாற்றியவர் யார்? 2. அஸ்க்லெபியஸ் மருத்துவ ஆராய்ச்சிகள் செய்து நோயுற்றவர்களைக் குணப்படுத்தும் மூலிகைகளைக் கண்டுபிடித்ததால் அவர் ஒரு கடவுளாகக் கருதப்பட்டார். அவர் இந்த மூலிகைகளை பூமியிலிருந்து உருவாக்கவில்லை, இயற்கையைப் பற்றிய அறிவினூடாக அவற்றைக் கண்டுபிடித்தார். இருப்பினும், இது இரட்சகர் செய்ததிலிருந்து வேறுபட்டது, ஏனெனில் அவர் ஒரு காயத்தை மட்டும் குணப்படுத்தவில்லை; அவர் ஒரு மனிதனின் அசல் இயல்பை மாற்றி அவனது உடலை மீண்டும் முழுமை பெறச் செய்தார். 3. கிரேக்கர்கள் ஹெரகல்சை ஒரு கடவுளாக எண்ணி வணங்குகிறார்கள், ஏனெனில் அவர் மற்ற மனிதர்களுடன் போரிட்டு, புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி காட்டு விலங்குகளை அழித்தார். வார்த்தையால் மனிதனிடமிருந்து நோய்கள், பிசாசுகள் மற்றும் மரணத்தை விரட்டியது இதற்கு ஒப்பாகுமா? மனிதனுக்கு குடிப்பழக்கத்தைக் கற்றுக் கொடுத்ததால் அவர்கள் டயோனிசஸ் என்பவனை வணங்குகிறார்கள். ஆனால் உண்மையான இரட்சகரும், அனைத்திற்கும் ஆண்டவருமான அவர் நிதானத்தைக் கற்பித்ததற்காக இந்த மக்களால் தூற்றப்படுகிறார். 4. ஆனால் இந்த விடயங்களை மறந்துவிட்டு, நாம் முன்னே செல்வோம். அவர் செய்த மற்ற அற்புதமான விஷயங்களைப் பற்றி அவர்கள் என்ன சொல்கிறார்கள்? ஒரு மனிதனின் மரணத்தின் போது சூரியன் இருண்டு பூமி நடுங்கியது என்றால், என்ன காரணம்? இன்றும் கூட, கடந்த காலத்தில் நிகழ்ந்தது போலவே மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் விடயத்தில் இதுபோன்ற ஒரு அதிசயம் எப்போதாவது நடந்திருக்கிறதா? 5. அவர் உயிருடன் இருந்தபோது செய்த செயல்களைப் பற்றி விவாதிப்பதைத் தவிர்த்து, அவர் மீண்டும் உயிர்த்தெழுந்த பிறகு என்ன நடந்தது என்பதில் கவனம் செலுத்துவதா அல்லது எந்தவொரு மனிதனின் போதனைகளும் எல்லா இடங்களிலும், தொடர்ந்து உலகின் ஒரு திசையில் இருந்து மறுதிசைக்குப் பரவி, அவருடைய வழிபாடு எல்லா நாடுகளையும் சென்றடைந்துள்ளதா? என்றே பார்க்க வேண்டியுள்ளது. 6. அவர்கள் சொல்வதுபோல, கிறிஸ்து வெறும் மனிதர் எனவும், கடவுள் அல்ல என்றும், அவர்கள் இருக்கும் அதே நாட்டிற்குள் செல்வதை அவர்கள் வைத்திருக்கும் தெய்வங்கள் ஏன் தடுக்கவில்லை எனவும், மறுபுறம், வார்த்தை, அவர் இங்கே இருக்கும் போது, அவர்களின் வழிபாட்டை நிறுத்தி, அவர்களின் தவறான நம்பிக்கைகளை அம்பலப்படுத்தும் விதத்தில் ஏன் கற்பிக்கிறது?
50. சோஃபிஸ்டுகளின் பலவீனங்களும் எதிர்வாதப் போக்கும் கிறிஸ்துவின் மரணத்தால் அடங்கிப்போய்விட்டன. கிரேக்க புராணக் கதைகளுடன் ஒப்பிடுகையில் அவரது உயிர்த்தெழுதல் என்பது நிகரற்றது
இந்த மனிதனுக்கு முன்பு பல அரசர்கள் மற்றும் கொடுங்கோல் ஆட்சியாளர்களும் இருந்திருக்கிறார்கள். ஷல்டியர்கள், எகிப்தியர்கள் மற்றும் இந்தியர்களிடையே ஞானிகளும் மந்திரவாதிகளும் தோன்றி வாழ்ந்துள்ளனர். அவர்களில் எவரால் உயிருடன் இருந்தபோதே தங்கள் போதனைகளைப் பரப்பவும், சிலைகளை வணங்குவதிலிருந்து விடுபட்டு நம் இரட்சகரைப் பின்பற்றுவதற்கு இத்தனை மக்களின் மனங்களை மாற்றவும் முடிந்தது என்று நான் கேட்கிறேன். 2. கிரேக்க தத்துவஞானிகள் பல நம்பகரமான மற்றும் திறமையான படைப்புகளை இயற்றி இருந்தனர். ஆனால் கிறிஸ்துவின் சிலுவையை விட மகத்தான ஒன்றை அவர்களால் சாதிக்கமுடிந்ததா? அவர்கள் உயிருடன் இருந்தபோது அவர்களின் கருத்துக்கள் நம்பத்தகுந்ததாகத் தோன்றின. இருப்பினும் அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டிபோட்டு வாதிட்டு விமர்சித்ததால், அவர்களின் செல்வாக்கு பெரும்பாலும் அவர்களாலேயே பலவீனமடைந்தது. 3. ஆச்சரியப்படும் விதமாக, கடவுளுடைய வார்த்தை எளிமையான மொழியைப் பயன்படுத்துவதன் மூலம் சிறந்த சிந்தனையாளர்களை விட பிரகாசித்துள்ளது. அவர் அனைவரையும் தன்னிடம் ஈர்த்து, அவர்களின் போதனைகளைக் குறைத்தாலும், அவர் தனது சொந்த தேவாலயங்களை நிரப்பியுள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், மனிதனாக மாறி மரணத்தை வென்றதன் மூலம், சிலை வணக்கங்களை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் ஞானம் மிக்க வார்த்தைகளை அவர் உதிர்த்துள்ளார். 4. எவருடைய மரணம் பிசாசுகளை விரட்டியடிக்கக் காரணமாயிருந்தது? கிறிஸ்துவின் மரணம் குறித்து அஞ்சியது போல பிசாசுகள் வேறு எவருடைய மரணம் குறித்து அஞ்சின? மக்கள் இரட்சகரின் பெயரைச் சொல்லும் இடமெல்லாம், பிசாசுகள் துரத்தப்படுகின்றன. முன்பு ஒழுக்கக்கேடான செயல்களைச் செய்தவர்கள் இப்போது தூய்மையானவர்களாகவும், கொலைகாரர்கள் இனி நல்லவர்களாகவும், ஒரு காலத்தில் பயந்தவர்கள் இப்போது துணிச்சலுடன் செயல்படவும், இயற்கை மனிதனின் உணர்ச்சிகளை மனிதர்களிடமிருந்து நீக்கியதும், விபச்சாரிகள் கற்புள்ளவர்களாகவும் மனம் திருந்தி வாழ யார் உதவினார்கள்? 5. சுருக்கமாகச் சொல்லப்போனால், நாகரிகமற்ற காட்டுமிராண்டித்தனம் நிறைந்த நாடுகளைச் சேர்ந்த மக்களையும், விசுவாசமற்றவர்களையும், கிறிஸ்தவ நம்பிக்கை மற்றும் சிலுவையின் சின்னம் இல்லையென்றால் தங்கள் வன்முறையை நிறுத்தி அமைதியில் கவனம் செலுத்துவதற்கு காரணமாக இருந்தவர் யார்? கிறிஸ்துவின் சிலுவை மற்றும் அவரது உயிர்த்தெழுதல் போன்ற மரணத்திற்குப் பிறகான வாழ்க்கையில் மக்களுக்கு இவ்வளவு பாரிய நம்பிக்கையை வேறு எவரால் அளித்திருக்க முடியும்? 6. கிரேக்கர்கள் பல பொய்யான கதைகளைச் சொன்னார்கள், ஆனால் மரணத்திற்குப் பிறகு ஒரு உடல் மீண்டும் இருப்பது சாத்தியம் என்று அவர்கள் ஒருபோதும் நினைத்ததில்லை என்பதால், அவர்கள் வழிபடும் சிலைகள் மீண்டும் உயிர் பெற்றதாக அவர்களால் தங்கள் போலி ஆணவத்தை வெளிக்காட்ட முடியவில்லை. இது சிலைகள் மீதான அவர்களின் நம்பிக்கை எவ்வளவு பலவீனமானது என்பதைக் காட்டுவதோடு, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் சாத்தியத்தையும் உறுதிசெய்கிறது. இது அவரை கடவுளின் ஏக குமாரனாக அனைவருக்கும் வெளிப்படுத்த உதவுகிறது.
51. சுயகட்டுப்பாடு என்ற புதிய முகமானது சமூகத்தில் ஏற்படும் மாற்றமாகும், இது கிறிஸ்தவ வழிகாட்டுதலால் சிறப்பான மற்றும் அமைதியான மாற்றத்தோடு கடைபிடிக்கப்படுகிறது
மனிதர்களில் பொதுவாக, அவர்கள் இறந்த பிறகு அல்லது அவர்கள் உயிருடன் இருக்கும்போது, கற்பு மற்றும் கன்னித்தன்மையைப் பற்றியும், இந்த குணம் பொதுவாக எல்லோருக்கும் பொதுவானது என்றும் கற்பித்தவர் யார்? ஆனால் நமது இரட்சகரும், அனைவருக்கும் அதிபதியான கிறிஸ்து, அதைப் பற்றிய தனது போதனைகளில் அவ்வளவு அதிகாரத்தைக் கொண்டிருந்தார் என்றும், இன்னும் சட்டத்திற்கு அப்பாற்பட்ட கன்னித்தன்மையைக் காத்துக்கொள்வதாகவும் உறுதியளிக்கிறார். 2. சிதியர்கள், எத்தியோப்பியர்கள், பெர்சியர்கள், ஆர்மீனியர்கள், கோத்கள், அல்லது சமுத்திரத்துக்கு அப்பால் அல்லது ஹிர்கானியாவுக்கு அப்பால் உள்ளவர்களை அடையவும், மந்திரம் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு பெயர் பெற்ற எகிப்தியர்கள் மற்றும் ஷல்தேயர்களை அடையவும், கடவுளின் சக்தியான நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் போல நல்லொழுக்கம், சுயக்கட்டுப்பாடு மற்றும் சிலை வழிபாட்டிற்கு எதிராக கற்பிக்கவும் இதுவரை எந்த மனிதனும் அவர் பயணித்தது போல் பயணிக்க முடியவில்லை. 3. அவர் தம்முடைய சீடர்கள் மூலமாகக் கற்பித்தது மட்டுமல்லாமல், மக்கள் தங்கள் கடுமையான நடத்தைகளை மாற்றிக்கொள்ளவும், தங்கள் மூதாதையர்கள் வழிபட்ட கடவுள்களை வணங்குவதை நிறுத்தவும், அவர் மூலமாக பிதாவை வணங்கும்படியும் அவரை அறிந்துகொள்ளவும் ஊக்குவித்தார். 4. கடந்த காலத்தில், கிரேக்கர்களும் காட்டுமிராண்டித்தனப் போக்குடையவர்களும் சிலைகளை வணங்கியபோது, அவர்கள் பெரும்பாலும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டது மட்டுமன்றி, தங்கள் சொந்தக் குடும்ப உறுப்பினர்களிடமும் கூட கொடூரமாக நடந்து கொண்டனர். ஆதலால், கடல் அல்லது நிலத்தில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் அவர்கள் எப்போதும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டதால், மக்கள் பாதுகாப்புக்காக வாள்களை தம்முடன் எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. 5. அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்கள் ஆயுதங்களையே நம்பியிருந்தனர். மேலும் கைத்தடி ஒரு வாளாக மாறி எல்லாச் சூழ்நிலையிலும் அவர்களுக்கு உதவியது. இதுபோன்ற நிலையிலும் அவர்கள் தொடர்ந்து போலிக் கடவுள்களை வணங்கி, அசுத்த ஆவிகளுக்கு பலி செலுத்தினர். அதே நேரத்தில் அவர்கள் வணங்கும் சக்தியால், அனைத்து உருவ வழிபாட்டுகளிலும் மூடநம்பிக்கைகளிலும் இருந்து அவர்களை மீட்டெடுக்க முடியவில்லை. 6. அவர்கள் கிறிஸ்துவின் பாசறையில் சேரும்போது, அவர்கள் ஆச்சரியப்படும் விதமாக தங்கள் கடந்த கால செயல்களைப் பற்றி குற்ற உணர்ச்சியை அனுபவித்தனர். அவர்கள் வன்முறையில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு, போரைப் பற்றி இனி கவலைகொள்ளாமல், அதற்கு பதிலாக, அவர்கள் அமைதியைக் கடைபிடித்து நட்பை வளர்க்கும் விடயங்களை ஊக்குவித்தனர்.
52. பிசாசுகளால் தூண்டப்பட்டு, நடத்தப்பட்ட போர்கள் கிறிஸ்தவத்தால் அமைதியைக் கண்டன
அப்படியானால் பிதாவின் அன்புக்குரிய குமாரனும் நமது பொதுவான இரட்சகருமான இயேசு கிறிஸ்துவைத் தவிர, இதைச் செய்தவர் வேறு எவர்? ஒருவரையொருவர் வெறுத்த மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்தியவர் யார்? அவர் நம் இரட்சிப்புக்காக எல்லாவற்றையும் கடந்து தனது அன்பைக் காட்டினார். வேதாகமம் கூறுவது போல், அவர் சமாதானத்தைக் கொண்டுவருவார் என்று நீண்ட காலத்திற்கு முன்பே கணிக்கப்பட்டது: அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைகளாகவும், தங்கள் ஈட்டிகளை விவசாயம் செய்யும் கருவிகளாகவும் மாற்றுவார்கள். மேலும் நாடுகள் இனி ஒருவருக்கொருவர் எதிராக சண்டையிடாது, அவர்கள் போர் செய்யக் கற்றுக்கொள்ள மாட்டார்கள், என்று கூறப்பட்டுள்ளது. 2. இது குறைந்தபட்சம் நம்பமுடியாதது அல்ல; இப்போதும் கூட, இயல்பிலேயே வன்முறை மற்றும் காட்டுமிராண்டித் தனத்தால் ஊறி வளர்ந்தவர்கள், இன்னும் தங்கள் நாட்டின் சிலைகளை வணங்கும் அந்த நாகரிகமற்ற மக்கள், ஒருவருக்கொருவர் வெறித்தனமாக சண்டையிடுகிறார்கள், ஒரு நிமிடம் கூட ஆயுதங்கள் இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது. 3. கிறிஸ்துவின் போதனைகளைக் கேட்டவுடன் அவர்கள் சண்டையிடுவதை நிறுத்திவிட்டு, விவசாயத்தில் கவனம் செலுத்துகிறார்கள். ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அவர்கள் தங்கள் கைகளை உயர்த்தி செபத்தில் ஈடுபடுகிறார்கள். ஒருவருக்கொருவர் சண்டையிடுவதற்குப் பதிலாக, அவர்கள் இப்போது பிசாசுகளுக்கும் அசுத்த ஆவிகளுக்கும் எதிராகப் போராடுகிறார்கள், கற்பு மற்றும் உயர் குணம் மூலம் அவர்கள் நல்லொழுக்கத்தைத் தேடுகிறார்கள். 4. இங்கு நாம் குறிப்பிடுவது இரட்சகரின் தெய்வீகத்தன்மைக்கு ஒரு சான்றாகும்; மக்கள் சிலைகளிடமிருந்து கற்றுக்கொள்ள முடியாத விஷயங்களை கர்த்தரிடம் கற்றுக்கொண்டதால், இரட்சகர் தெய்வீகமானவர் என்பதை இது காட்டுகிறது. பிசாசுகளும் சிலைகளும் எவ்வளவு பலவீனமானவை மற்றும் பிரயோசனமற்றவை என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது. பிசாசுகள் தங்கள் சொந்த பலவீனத்தை அறிந்திருப்பதால், மக்கள் அவைகளுக்கு எதிராக ஒன்றுபட்டுவிடாமல் இருக்க, அவர்கள் மத்தியில் சண்டைகளை ஊக்குவிக்கின்றன. 5. கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதில்லை; மாறாக, அவர்கள் தங்கள் நல்ல பழக்கவழக்கங்கள் மற்றும் செயல்கள் மூலம் தீமையை எதிர்த்து வலுவாக நிற்கிறார்கள். அவர்கள் தீமையைத் தோற்கடிக்கிறார்கள், பிசாசுக்கு பயப்படுவதில்லை. தங்கள் இளமைப்பருவத்தில் அவர்கள் கற்பு மற்றும் சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிக்கிறார்கள், சோதனைகளின் போது வலுவாக இருக்கிறார்கள், தொடர்ந்து கடினமாக உழைக்கிறார்கள், அவமதிப்புக்கு உள்ளாகும்போது பொறுமையாக இருக்கிறார்கள், கொள்ளையடிக்கப்படும்போது அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆச்சரியப்படும் விதமாக, அவர்கள் மரணத்தைக் கூட ஏளனமாகப் பார்க்கிறார்கள், கிறிஸ்துவின் மீதான தங்கள் விசுவாசத்திற்காக வேதசாட்சிகளாய் தங்களைத் தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறார்கள்.
53. கிறிஸ்து மக்களின் மனசாட்சியுடன் இரகசியமாகப் பேசியதன் மூலம், புறஜாதியாரின் மதக் கட்டமைப்பை அவர்கள் மனதிலிருந்து முற்றிலுமாகத் தகர்த்தார்
இரட்சகரின் தெய்வீகத்தன்மைக்கு ஒரு ஆச்சரியமான சான்று என்னவென்றால், எவ்வாறு சிலை வழிபாடு, பிசாசுகள், மந்திரம் மற்றும் கிரேக்கர்களின் வலுவான ஞானம் உள்ளிட்ட பல சக்திவாய்ந்த சக்திகளை அவர் மட்டுமே தனியாக நின்று எதிர்கொள்ள முடிந்தது என்பதுதான். அவைகளுக்கு வலிமை மற்றும் செல்வாக்கு இருந்த போதிலும், அவர் அனைவரையும் ஒரே நேரத்தில் எதிர்த்து நிற்க முடிந்தது. கடவுளின் உண்மையான வார்த்தையான நம் ஆண்டவர், ஒவ்வொரு மனிதனினதும் தவறுகளை வெளிப்படுத்தியதோடு, இந்தத் தவறான நம்பிக்கைகளிலிருந்து அனைவரும் மீண்டுவர உதவினார். ஒரு காலத்தில் சிலைகளை வணங்கியவர்கள் இப்போது அவ்வாறு செய்வதில்லை, மந்திரத்திற்குப் பெயர் பெற்றவர்கள் தங்கள் மந்திரக் கலைகள் கொண்ட நூல்களை எரிக்கிறார்கள், மேலும் ஞானிகள் இப்போது மற்ற அறிவை விட சுவிசேஷங்களைப் படிக்க விரும்புகிறார்கள். 2. மக்கள் தாங்கள் வணங்கிய போலிக் கடவுள்களிடமிருந்து விலகி, ஒரு சமயத்தில் சிலுவையில் அறையப்பட்டவராகக் கேலி செய்தவரை இப்போது கிறிஸ்துவாகவும் கடவுளாகவும் அங்கீகரித்து மதிக்கிறார்கள். அவர்களுடைய தெய்வங்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் சிலுவையின் சக்தியால் தோற்கடிக்கப்பட்டார்கள். அதே நேரத்தில் சிலுவையில் அறையப்பட்ட இரட்சகர் உலகம் முழுவதும் கடவுளாகவும் கடவுளின் குமாரனாகவும் அறிவிக்கப்படுகிறார். கிரேக்க தெய்வங்கள் மரியாதையை இழந்து வெட்கக்கேடான நிலையில் காணப்படுகின்றன. அதே நேரம் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் முன்னர் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை விட தூய்மையான வாழ்க்கையை வாழ்கிறார்கள். 3. இவை மனிதர்களால் செய்யப்பட்ட செயல்கள் என்றால், நம்மை நம்ப வைக்க எவரேனும் கடந்த காலத்திலிருந்து இதே போன்ற செயல்களைக் காட்டட்டும். அதேசமயம், அவை மனிதர்களால் ஆனதல்ல, கடவுளால் படைக்கப்பட்டவை என்றால் அவற்றைப் படைத்த படைப்பாளரை நம்பாதவர்கள் ஏன் படைப்பை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்? 4. படைப்பாளராகிய கடவுளை அடையாளம் காணாதவர்கள், உலகைக் கண்டும் அவரைக் காணாதவர்களைப் போன்றவர்கள். பிரபஞ்சத்தின் மீதான அவரது கட்டுப்பாட்டின் மூலம் அவரது தெய்வீக இயல்பை அவர்கள் புரிந்துகொண்டால், கிறிஸ்துவின் சரீரப் படைப்புகள் வெறும் மனித செயல்கள் அல்ல, மாறாக இரட்சகரின் செயல்கள், அவர் கடவுளின் வார்த்தையானவர் என்பதை அவர்கள் உணர்ந்திருப்பார்கள். இதை அவர்கள் உண்மையிலேயே புரிந்துகொண்டிருந்தால், 1 கொரிந்தியர் 2:8 இல் பவுல் குறிப்பிட்டது போல், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறைந்திருக்க மாட்டார்கள்.
54. அவதாரம் எடுத்தல் என்ற அந்த வார்த்தை கண்ணுக்குத் தெரியாத கடவுளைப் போன்றது. அது அவருடைய செயல்கள் மூலம் மட்டுமே நமக்குத் தெரியும். இந்தச் செயல்கள் அவருடைய தெய்வீக நோக்கத்தை நமக்குக் காட்டுகின்றன. அவற்றில் சிலவற்றைக் குறிப்பிடுவோம், எஞ்சியவற்றை நிறைவில் அவற்றைப் பார்ப்பவர்களுக்காக விட்டுவிடுவோம்
அப்படியானால், ஒரு மனிதன் இயற்கையாகக் கண்ணுக்குப் புலப்படாதவராகவும் தொட்டு அறிந்து கொள்ள முடியாதவராகவும் இருக்கும் கடவுளைக் காண விரும்பினால், அவரை அவருடைய படைப்புகள் வாயிலாகப் புரிந்து கொள்ள முடியும். அதேபோல், யாராவது கிறிஸ்துவைப் புரிந்து கொள்ள முடியாவிட்டால், அவர்கள் அவருடைய செயல்களைப் பார்த்து அவை மனித செயல்களா அல்லது கடவுளின் செயல்களா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். 2. அவர்கள் மனிதர்களாக இருந்தால், கேலி செய்யட்டும்; அப்படி அவர்கள் மனிதர்களால் உண்டாக்கப்பட்டிராவிட்டால், கடவுளால் உருவாக்கப் பட்டிருந்தால், அவர்கள் அதை உணர்ந்து, கேலி செய்வதையும் நகைப்பதையும் நிறுத்தட்டும். அதற்கு பதிலாக, தெய்வீக விடயங்கள் மிகவும் சாதாரணமாக நமக்குக் காட்டப்பட்டுள்ளன என்பதை உணர்ந்து அவர்கள் ஆச்சரியப்பட வேண்டும். மரணத்தின் மூலம் அழியாமை அனைவரையும் அடைந்துள்ளது என்பதையும், வார்த்தை ஒரு மனிதராக மாறுவதன் மூலம், கடவுளின் வார்த்தையான உலகளாவிய படைப்பாளரை நாம் அறிந்திருக்கிறோம் என்பதையும் இப்படிப் பட்டவர்கள் உணர வேண்டும். 3. நாம் கடவுளைப் போல ஆகவேண்டும் என்ற நோக்கத்தோடேயே அவர் மனிதரானார். கண்ணுக்குத் தெரியாத தந்தையைப் புரிந்துகொள்ள அவர் ஒரு மனித உடல் வடிவத்தில் தன்னைக் காட்டினார். நாம் நித்திய ஜீவனைப் பெறவேண்டும் என்பதற்காக அவர் மக்களின் கொடிய நிந்தனைகளையும் அக்கிரமங்களையும் பொறுத்துக்கொண்டார். அவர் மாசில்லாதவராகவும், பரிபூரணராகவும், தெய்வீகத் தம்மை வாய்ந்தவராக இருந்தபோதிலும், துன்பப்படுபவர்களுக்காக அவர் பாடுகளை அனுபவித்தார். மேலும் அவர் தனது சொந்த இயல்பை மாற்றிக்கொள்ளாமல் அவர் அவராகவே இருந்தார். 4. மனிதனாக அவதரித்த இரட்சகரின் சாதனைகள் மிகவும் பரந்தவை மற்றும் ஏராளமானவை, எண்ணிலடங்காத அவற்றை பட்டியலிட முயற்சிப்பது கடலின் அலைகளை எண்ண முயற்சிப்பது போன்றது. புதிய புதிய அலைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருப்பதால், கடலின் மேற்பரப்பில் உள்ள எல்லா அலைகளையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியாதது போல, கிறிஸ்து தனது வாழ்க்கையில் சாதித்த அனைத்தையும் முழுமையாகப் புரிந்துகொள்வது சாத்தியமில்லை. நாம் புரிந்துகொள்ளக்கூடிய அல்லது எண்ணக்கூடியதை விட கணக்கிலடங்கா அதிகமான சாதனைகள் உள்ளன. 5. ஏதேனும் ஒரு பகுதியை முழுமையாக விளக்க முடியாதபோது, எல்லாவற்றையும் பற்றிப் பேச முயற்சிக்காமல் இருப்பது சிறந்தது. அதற்கு பதிலாக, ஒரு விஷயத்தைக் குறிப்பிட்ட பிறகு அது சம்பந்தப்பட்ட முழுமையான விளக்கத்தைக் குறித்த உங்கள் செயல்களை நீங்களே பாராட்ட விடுவது நல்லது. ஏனென்றால் அனைத்தும் ஒரே மாதிரியானவை, ஒரு மனிதன் எங்கு பார்வையைத் திருப்பினாலும், அந்தத் திசையில் வார்த்தையின் மகத்துவத்தைக் காணலாம் என்பதோடு, ஆழ்ந்த ஆச்சரிய உணர்வை உணர முடியும்.
55. மேற்கூறியவற்றின் சுருக்கம் யாதெனில், புறமத தீர்க்கதரிசனங்களை நிறுத்துவதும், நம்பிக்கையைப் பரப்புவதும் ஆகும். உண்மையான அரசரின் வருகை அனைத்து பொய்யான தலைவர்களையும் வாயடைக்கச் செய்துவிட்டது
இதுவரை நாம் கூறியதை ஒரு சுருக்கமான ஆய்வாகக் கொண்டு, நன்கு உணர்ந்து, அவை உங்களை அவ்வளவு தூரம் வியப்பில் ஆழ்த்தியுள்ளது என்பதை நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள். இரட்சகர் நம்மிடம் வந்ததிலிருந்து, உருவ வழிபாடு வளரவில்லை என்பது மட்டுமல்லாமல், உண்மையில் அது படிப்படியாகக் குறைந்து முடிவுக்கு வந்துவிட்டது என்பதை நீங்கள் புரிந்துகொண்டு பெருமைப்பட வேண்டும். கிரேக்கர்களின் ஞானமும் ஒரு கட்டத்துக்குமேல் முன்னேறவில்லை; மாறாக, அதுவும் மறைந்து வருகிறது. மேலும், பிசாசுகளால் இனி மாயைகள், போலித் தீர்க்கதரிசனங்கள் அல்லது மந்திரத்தால் மக்களை ஏமாற்ற முடியாது. அதற்குமேல் சென்று அவை தம் நாசவேலைகளைச் செய்ய முயற்சித்தால், சிலுவையின் இணையில்லா மகத்துவம் அவைகளை அவமானத்துக்கு உள்ளாக்கும். 2. சுருக்கமாகச் சொல்லப்போனால், இரட்சகரின் போதனைகள் எல்லா இடங்களிலும் எவ்வாறு வளர்ந்து வருகின்றன என்பதைப் பாருங்கள். அதே நேரத்தில் விக்கிரகாராதனையும் கிறிஸ்துவின் மீதான விசுவாசத்திற்கு எதிரான அனைத்தும் மறைந்து அவற்றின் வலிமையை இழக்கின்றன. எனவே, வல்லமையுள்ளவரும் எல்லாவற்றிற்கும் மேலானவருமான இரட்சகரை அடையாளம் கண்டு துதியுங்கள், அவரால் தோற்கடிக்கப்பட்டவர்களை நிராகரித்திடுங்கள். 3. சூரியன் உதிக்கும்போது, இருள் மறைந்து விடுகிறது. அப்படியும் சிறிதளவில் இருள் எஞ்சியிருந்தாலும், அதுவும் மறைந்து போய்விடும். அதேபோல், கடவுளின் வார்த்தையானவர் தன்னை வெளிப்படுத்தியதால், சிலைவழிபாடு என்ற இருள் நீங்கிவிட்டது, அவருடைய போதனைகள் உலகின் ஒவ்வொரு பகுதியையும் ஒளிரச் செய்கின்றன. 4. நாட்டை ஆளும் ஒரு அரசன் தன்னை யார் என்று காட்டிக்கொள்ளாமல் தனது அரண்மனைக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்க நேரிட்டால், சில நேர்மையற்ற மனிதர்கள் அரசனின் இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, அரசனைப்போல நடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். மக்கள் அவரது அரண்மனைக்குள் நுழைய முடியாததால் உண்மையான அரசனை அவர்களால் பார்க்க முடியாது. என்றாலும், அவர்கள் தங்களையே உண்மையான அரசன் என்று மற்றவர்களை நம்ப வைப்பர். இருப்பினும், என்றோ ஒருநாள் உண்மையான அரசன் வெளியே வரும்போது, போலியாக அரசர்கள் என்று நாடகமாடியவர்கள் யார் என்பது வெளிப்பட்டுவிடும். அத்தோடு, மக்கள் உண்மையான அரசனைக் கண்டவுடன் அவர்கள் போலிகளை நம்புவதை நிறுத்தி விடுவர். 5. இதேபோலத்தான், அசுத்த ஆவிகள் கடவுளாக நடித்து மக்களை ஏமாற்றின. இருப்பினும், கடவுளின் வார்த்தையானவர் பூமிக்கு வந்து அவரது பிதாவை வெளிப்படுத்திய போது, இந்த அசுத்த ஆவிகளின் போலி நாடகங்கள் முடிவுக்கு வந்தன. மக்கள் சிலைகளை விட்டு விலகி, உண்மையான கடவுளைப் புரிந்துகொண்டு அவரை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினர். 6. ஆகவே, கிறிஸ்து ஒருவரே கடவுள் என்றும் அவர் பரலோக தந்தையின் வல்லமைமிக்க வார்த்தையானவர் என்றும் இது காட்டுகிறது. மனித செயற்பாடுகள் முடிவுக்கு வந்துவிடும், ஆனால் கிறிஸ்துவின் வார்த்தை என்றென்றும் நீடிக்கும். நின்றுவிடுவது தற்காலிகமானது என்பது வெளிப்படையானது. அதே நேரத்தில் நிலைத்திருப்பது கடவுளும் அவருடைய உண்மையான குமாரனும், ஒரே பேறான வார்த்தையானவரும் ஆகும்.
56. முடிந்தால் வேதவசனங்களைத் தேடிப் பார்ப்பதன் மூலம் இந்த இடைவெளிகளை நிரப்புங்கள். இரண்டாம் வருகையையும் நியாயத்தீர்ப்பையும் எதிர்பார்க்க கற்றுக்கொள்ளுங்கள்
கிறிஸ்துவை நேசிக்கும் இந்த மனிதர், கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தையும், நம்மிடையே அவரது தெய்வீக பிரசன்னத்தையும் பற்றிய அடிப்படை புரிதல் குறித்து நமக்கு முன்மாதிரியாக இருக்கட்டும். இருப்பினும், வேதவசனங்களை கவனமாகப் படிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்தினால், நாம் விவாதித்ததைப் பற்றி இன்னும் தெளிவாகவும் விரிவாகவும் கற்றுக்கொள்வீர்கள். 2. ஏனென்றால் வேதாகம வசனங்கள் கடவுளைப் பற்றிப் பேசிய மனிதர்கள் மூலமும் கடவுளால் பேசப்பட்டவை என்ற அடிப்படையிலும் எழுதப்பட்டவை. இந்தப் போதனைகளை நன்கு அறிந்திருந்தும், கிறிஸ்துவில் விசுவாசம் கொண்டதற்காகத் துன்பப்பட்டவர்கள் மற்றும் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த வேதசாட்சிகள் போன்றோரைப் பற்றி கற்றுக்கொண்டவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறோம். மேலும் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தைத் தூண்டும் நம்பிக்கையுடன் இதை சமர்ப்பிக்கிறோம். 3. மேலும், இதன்மூலம் அவரது இரண்டாவது மகிமையான மற்றும் தெய்வீக தோற்றத்தைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்வீர்கள், அப்போது அவர் மனத்தாழ்மை உள்ளவராக அல்ல, உண்மையான மாட்சிமையோடு வருவார். அவர் இனி துன்பப்படமாட்டார், ஆனால் அனைவருக்கும் அவரது தியாகத்தின் பலன்களைக் கொடுப்பார். அதாவது உயிர்த்தெழுதல் மற்றும் நித்திய போன்றவற்றை அருளுவார். அவர் இனி தீர்ப்புக்குள்ளாகமாட்டார், ஆனால் அவரவர்களின் செயல்களின் அடிப்படையில், நல்லது, கெட்டது என்பதை அடிப்படையாகக் கொண்டு அனைவரையும் தீர்ப்புக்கு உட்படுத்துவார். நல்லவர்கள் பரலோக இராச்சியத்தை அடைவார்கள், அதே நேரத்தில் தீமை செய்தவர்கள் நித்திய தண்டனையையும் இருளையும் சந்திப்பார்கள். 4. மத்தேயு 26:64-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, எதிர்காலத்தில் மனிதகுமாரன் வல்லமையுள்ள பிதாவானவரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், பிதாவின் மகிமையுடன் வானத்தின் முகிற்கூட்டங்களுக்கு ஊடாக வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்று கர்த்தர் கூறுகிறார். இதன் காரணமாக இரட்சகர் நம்மைத் தயாராகவும் விழிப்புடனும் இருக்கச் சொல்கிறார், ஏனெனில் அவர் நாம் சற்றும் எதிர்பாராத நேரத்தில் வருவார். பவுலின் கூற்றுப்படி, நாம் அனைவரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போம், அங்கு ஒவ்வொருவரும் அவரவர் செயல்களின் அடிப்படையில், அது நல்லதோ கெட்டதோ, தகுதியானதைப் பெறுவார்கள்.
57. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த அறிவு மற்றும் வாழ்வு தரும் மரத்தின் கனியைப் புசிக்கும் உரிமையைப் பெறுவதற்காக வாழுங்கள், இது உங்களை நித்திய மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்லும். (துதிப்பாடல்)
வேதாகமத்தை உண்மையிலேயே புரிந்துகொள்ள, ஒருவர் ஒரு நல்ல வாழ்க்கை வாழ வேண்டும். தூய்மையான, அப்பழுக்கற்ற இதயத்தைக் கொண்டிப்பதோடு, கிறிஸ்துவின் போதனைகளைப் பின்பற்றவும் வேண்டும். இவ்வழியைப் பின்பற்றினால், மனிதர்கள் கடவுளுடைய வார்த்தையைப் பற்றிக் கற்றுக்கொள்ள முடிந்த அளவுக்கு, அவர்களின் மனமும் அது தேடுவதைக் கண்டுபிடித்து அதைப் புரிந்துகொள்ளவும் முடியும். 2. ஏனென்றால், தூய மனமும், புனிதர்களுக்குப் பிந்தைய வாழ்க்கையை மாதிரியாகக் கொண்ட ஒருவருமாக இல்லாவிட்டால், ஒரு மனிதனால் புனிதர்களின் வார்த்தைகளைப் புரிந்துகொள்ள முடியாது. 3. ஒருவர் சூரிய ஒளியைக் காண விரும்பினால், அதைத் தெளிவாகப் பார்க்கும்படி தனது கண்களைச் சுத்தம் செய்ய வேண்டும். அதேபோல, ஒரு மனிதன் ஒரு நகரத்தையோ அல்லது நாட்டையோ பார்க்க விரும்பினால், கட்டாயம் அதைப் பார்க்க அந்த இடத்திற்கு வர வேண்டும். அதேபோல், கடவுளைப் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள விரும்பினால், அவர்கள் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்வதன் மூலமும், பரிசுத்தவான்களின் முன்மாதிரிகளைப் பின்பற்றுவதன் மூலமும் தங்கள் ஆன்மாவைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம், கடவுள் பரிசுத்தவான்களுக்கு வெளிப்படுத்தியதை அவர்கள் கற்றுக்கொள்வது, மட்டுமன்றி, பாவத்தில் விழக்கூடிய ஆபத்துகளையும் தவிர்க்கலாம். இறுதியில், 1 கொரிந்தியர் 2:9 “தேவன் தன்னை நேசிக்கும் மக்களுக்காகச் செய்த ஏற்பாட்டை எந்த கண்ணும் பார்க்கவில்லை. எந்தக் காதும் கேட்கவில்லை, எந்த மனிதனும் எண்ணிப் பார்த்ததில்லை” என்று கூறுகிறது. இந்த வேதாகம உரை கூறுவதென்னவெனில், நீதியாக வாழ்ந்து கடவுளை நேசிப்பவர்களுக்குத் தயாரிக்கப்பட்ட வெகுமதிகளை அவர்கள் பெறுவார்கள். இதற்கு முன்பு யாரும் பார்த்திராத அல்லது கேள்விப்படாத ஆசீர்வாதங்களும் இதில் அடங்கும். பிதாவாகிய கடவுள், அவரது ஏக சுதன் மற்றும் பரிசுத்த ஆவியை நாம் என்றென்றும் துதித்து வணங்குவோம். ஆமென்.
